ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

As Assange faces 170-year sentence, Trump proposes pardoning US war criminals

அசான்ஜ் 170 ஆண்டுகள் தண்டனையை எதிர்கொள்கையில், ட்ரம்ப் அமெரிக்க போர்க்குற்றவாளிகளை மன்னிக்கிறார்

Eric London
27 May 2019

ஜனாதிபதி ட்ரம்ப் போர்க்குற்றம் நிரூக்கப்பட்ட அல்லது சாட்டப்பட்ட பல அமெரிக்க படையினர்களை தான் மன்னிக்கக்கூடும் என அறிவிப்பது, அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்னும் நிறைய போர்களுக்கு தயாரித்துக்கொண்டிருக்கையில் எந்த கட்டுப்பாடுகளும் அகற்றப்படும் என்று இராணுவத்திற்கு அழைப்பு விடுப்பதும் சமிக்கை காட்டுவதும் ஆகும்.

வெள்ளிக்கிழமை அன்று, ட்ரம்ப், நிர்வாகமானது மன்னிப்பு ஆவணங்களுக்கானதுரித வேண்டுதல்களை செய்திருக்கிறது” என்ற முந்தைய நியூயோர்க் டைம்ஸின் செய்தியை உறுதிப்படுத்தினார். “இதில் சில படையினர்கள் நீண்டகாலமாகவும் கடினமாகவும் போராடுபவர்கள்” என்று ட்ரம்ப் கூறினார். “நாம் அவர்களுக்கு எப்படி புகழ்மிக்க போராளிகளாக இருப்பது என்று கற்றுக்கொடுத்தோம், மற்றும் பின்னர் சிலவேளைகளில் அவர்கள் போரிடுகையில் அவர்கள் உண்மையில் மிகவும் முறையற்ற வகையில் நடத்தப்படுகின்றனர். ஆகையால் நாம் அதை ஒருமுறை பார்க்கப் போகிறோம்” என ட்ரம்ப் கூறினார்.

“பயங்கரவாதத்தின் மீதான போரின்” சிதைக்கப்பட்ட மற்றும் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளுடைய படையினர்களை ட்ரம்ப் குறிப்பிட்டார். அவர்களுள் பின் வருவோர் உள்ளடங்குவர்:

*தலைமை சிறிய அலுவல்களுக்கான அதிகாரியான Edward Gallagher, 2017லிருந்து 2018 வரை ஈராக்கில் தனது துப்பாக்கிச்சூட்டில் ஒரு இளஞ்சிறுமியையும் வயதானவரையும் சுட்டுக்கொன்றார் மற்றும் பாதிக்கப்பட்டவரின் உடல்முன் வேட்டைக் கத்தியைக் காட்டும் முன்னர் இளம் போர்க்கைதி ஒருவரை திரும்பத்திரும்ப முதுகில் குத்திக் கொன்றார்.

* Nicholas Slatten, முன்னாள் பிளாக் வாட்டர் கூலிப்படையாள், 2007ல் 17 ஈராக்கிய குடிமக்களை படையினர்கள் கொலைசெய்த Nisour சதுக்க படுகொலையில் அவர் சம்பத்தப்பட்டிருப்பதால் அண்மையில் தண்டனை பெற்றார்.

* ஆப்கான் நிர்வாகத்தால் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட நிராயுதபானியான தலிபான் உறுப்பினர் என்று கூறப்படும் ஒருவரை தான் கொன்றதாக ஃபாக்ஸ் நியூஸ் இல் நேரே ஒப்புக் கொண்டதை அடுத்து, தற்போது வழக்கை எதிர்கொண்டுவருகிறார் Mathew Golsteyn. மார்ச் 30 அன்று ட்ரம்ப், Golsteyn ஐ ஒரு “இராணுவ கதாநாயகன்” என்று டுவீட் செய்தார்.

* Clint Lorance, 2012ல் நீண்ட தொலைவில் வைத்து மூன்று ஆப்கானியர்களைக் கொன்றதற்காக தற்போது 19 வருட தண்டனை அனுபவித்து வரும் படையினர்.

மே தொடக்கத்தில், ஒரு ஈராக்கிய சிறைக்கைதியை காவலிலிருந்து விடுவிக்கச்சொல்லி, அவரது தலையில் கையெறிகுண்டை வைத்ததன் மூலம் படுகொலை செய்ததற்காக சிறைத்தண்டனை பெற்றவரான Michael Behenna எனும் இராணுவ அதிகாரியை ட்ரம்ப் மன்னித்தார்.

போர்க்குற்றவாளிகளை மன்னித்தல் என்பதே நூரெம்பேர்க் கோட்பாடுகளின் கீழ் ஒரு போர்க்குற்றத்தைக் கொண்டிருக்கிறது. 1969ல் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ரிச்சார்ட் நிக்சன் மற்றும் அவரது அடியாட்கள் 1968ல் மை லெய் எனும் தெற்கு வியட்னாமிய கிராமத்தில் அமெரிக்கத் துருப்புக்களால் 504 குடிமக்கள் கொல்லப்பட்ட விவரங்களை மூடிமறைத்தனர். படுகொலையை தூண்டிவிட்டதற்காக Lt. William Calley ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் அடுத்தநாளே நிக்சன் அவரை வீட்டுக் காவலுக்கு மாற்றினார். 1974 அளவில் Calley பிணையில் விடுக்கப்பட்டார்.

ஆனால் ட்ரம்ப், அமெரிக்கா நிறைய போர்களுக்கு தயாரிப்புச் செய்கையில் இந்த பதிவுச்சான்றை புதிய ஆழங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளார். மத்திய கிழக்கில் ஈரானை எதிர்கொள்ள கூடுதலாக 1,500 படையினர்களை அனுப்பியதை அரசாங்கம் அறிவித்த அதேவேளை, போர்க் குற்றவாளிகளை மன்னிக்கும் சாத்தியம் பற்றிய ட்ரம்ப்பின் அறிவிப்பு வந்தது. ட்ரம்ப்பின் அறிவிப்பு வந்த சில மணிநேரங்களில், உதவி ஜனாதிபதி Michael Pence அமெரிக்க இராணுவக் கழகமான வெஸ்ட் பாயிண்ட்டில் பட்டம்பெற்றவர்களிடையே சனிக்கிழமை அன்று கூறினார், “உங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் நீங்கள் அமெரிக்காவிற்காக போர்க்களத்தில் போராட வேண்டி இருக்கும் என்பது மெய்நிகர் உறுதியானதாக ஆகிறது” என்று குறிப்பிட்டார்.

இந்த குற்றவாளிகளை மன்னிப்பதற்கான அவரது விருப்பை சமிக்கைசெய்வதன் மூலம், சட்ட விதிவிலக்காய் முழு இராணுவத்தையும் தூண்டும் “விதிவிலக்கு நிலையை” உருவாக்க மன்னிப்பை பயன்படுத்துவதற்கு ட்ரம்ப் நிறைவேற்று அதிகாரம் கொண்ட எதேச்சாதிகாரத்தை நிறுவுகிறார்.

மார்ச்சில், 40 குடியரசுக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் Gallagher-ஐ விடுதலைசெய்ய வேண்டும் என்று கடற்படை செயலருக்கு கையெழுத்திட்டு ஒரு ஒருகடிதத்தை அனுப்பினர். “அந்தக் கால அளவில் எந்த சேவை உறுப்பினருடனும் இணைத்துக் கொள்வதற்கு, அவ்வாறு செய்வதற்கு அதற்கு அதிகாரம் இருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், எமது சுதந்திரத்திற்காகப் போராடியவர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தியை அனுப்புகிறது” என அது வாசிக்கிறது. அக்கடிதமானது “கடுமை குறைந்த கட்டுப்பாட்டு வடிவத்தை” கோருவதுடன், காவலில் வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றவாளிகளுக்கு “ஒரு நியாயமான விசாரணையை வழங்க வேண்டும்” என்றும் கோருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாதுகாப்பில் குடிமக்களைக் கொலை செய்வர்களைப் பாதுகாப்பதற்கும் வலிமைப்படுத்துவதற்குமான பிரச்சாரம், ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மானிங் க்கு எதிரான இரு கட்சிப் பிரச்சாரத்தின் வர்க்கத் தன்மையை அம்பலப்படுத்துகிறது. பாலியல் தாக்குதல் அல்லது ட்ரம்ப் அல்லது ரஷ்யாவுடன் ஒத்துழைப்பு பற்றிய ஆதாரமற்ற அனைத்து பொய்களுக்கும் பின்னே, அசான்ஜ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிரியாக இருக்கிறார், ஏனெனில் அவர் உலக மக்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்திய போரின் குற்றத்தன்மையை அம்பலப்படுத்தினார்.

அசான்ஜ் மற்றும் மானிங் தரையில் நின்ற போர்க் குற்றவாளிகளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை, மாறாக, போர்களைத் தொடங்கியவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகளின் படையினர்களையும் மில்லியன் கணக்கான குடிமக்களையும் இறக்க வைத்ததற்கு பொறுப்பான வாஷிங்டனில் உள்ள போர்க் குற்றவாளிகளையும், ஊடக பிரச்சாரவாதிகளையும் அம்பலப்படுத்தினார்.

ட்ரம்ப் நிர்வாகமானது 1917 உளவறிதல் சட்டத்தின் கீழ் அசான்ஜ்க்கு எதிராக 17 குற்றச்சாட்டுக்களை இப்பொழுது அறிவித்துள்ளது, இவை அவரை 170 ஆண்டுகள் சிறையில் தள்ளும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டானது, ஒபாமா நிர்வாகத்தின் எட்டு உளவறிதல் சட்டங்களின் பொழுது ஒபாமா நிர்வாகத்தினால் அமைக்கப்பட்ட முன்னோடிகளில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்டது,  போருக்கான எதிர்ப்பை குற்றகரமானதாக ஆக்குவதற்கும் வழி அமைத்திருக்கிறது.

ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மானிங் ஐ நடத்தும் விதத்தால்   அதிகரித்த எண்ணிக்கையிலான மக்கள் வெறுப்புற்றிருக்கின்றனர்.

அசான்ஜின் ஆதரவாளர்கள், நியூ யோர்க் டைம்ஸ் அல்லது வாஷிங்டன் போஸ்ட் போன்ற பத்திரிகைகளின் ஆசிரிய தலையங்க அறைகளில் காணப்படமாட்டார்கள், அவை, பிரசுரிப்பதற்கான அவர்களது உரிமையையை அச்சுறுத்தவில்லை என்ற பாசாங்கின் மீதாக அசான்ஜை அரசாங்கம் உள்ளே தள்ளுவதற்கு அதனை வாழ்த்துகின்றன. அசான்ஜின் பாதுகாவலர்களையும் Jacobin Magazine போன்ற வெளியீடுகளிலும் அல்லது அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளிலும் காணப்பட முடியாது. அதன் தலைவர்களும் அரசியற் பிரமுகர்களும் அசான்ஜ் மீதான அடக்குமுறையில் தொடர்ந்து முரட்டுத்தனமாக மௌனமாக இருந்துள்ளனர்.

ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மானிங்கிற்கான ஆதரவிற்கான புறநிலை ஆதாரவளம் சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். இந்த சமூக சக்திதான் உலகம் முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டிற்கான பிரதான குறி இலக்காக இருக்கின்றது. அவர்களது இல்லங்கள் மற்றும் பள்ளிகள்தான் அமெரிக்க குண்டுகளால் அழிக்கப்படுகின்றன. போரால் கிழிந்த பேரழிவு மண்டலங்களில் உயிருக்கு தப்பி ஓடும்போது மத்திய தரைக்கடலில் மூழ்குவதும் அவர்களது குழந்தைகள்தான்.

அமெரிக்கா தன்னிலேயே, தொழிலாள வர்க்கம் தான் பணமாகவும் இரத்தமாகவும் இதற்கு விலை செலுத்துகின்றது. ஆளும் வர்க்கமானது இறப்புக்கும் வெளிநாடுகளில் பேரழிவுக்கும் விலை கொடுக்க டிரில்லியன் கணக்கான டாலர்களை சமூக வேலைத்திட்டங்கள், சுகாதார சேவை மற்றும் கல்வியிலிருந்து விலக்க ஆணையிடுகிறது. ஆயிரக் கணக்கான தொழிலாள வர்க்க இளைஞர்கள் வேலையின்மையிலிருந்து தப்பிக்க வாய்ப்பின்றி இறக்கின்றனர். பல பத்தாயிரக் கணக்குக்கும் அதிகமானோர் உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் காயப்பட்டுள்ளனர் மற்றும் மில்லியனுக்கும் அதிகமான படையினர் தற்கொலை, மன அழுத்தம் மற்றும் பொருள் துஷ்பிரயோகத்தால் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கட்டுள்ளனர்.

அசான்ஜ் மற்றும்  மானிங்கின் விடுதலையைக் கோரி தொழிலாளர்கள் மத்தியில் சாத்தியமான பரந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க சோசலிச சமத்துவக் கட்சி அழைக்கிறது. வர்க்கப் போர்க்கைதிகளான ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மானிங்கை பாதுகாத்திடு! இங்கே பணயம் வைக்கப்பட்டிருப்பது இரண்டு துணிவுள்ள தனிநபர்களது சுதந்திரம் மட்டுமல்ல, ஏகாதிபத்தியப் போரைத் தடுத்து நிறுத்துவதும் சமுதாயத்தை சமத்துவ, சோசலிச அடிப்படையில் மாற்றி அமைப்பதும் ஆகும்.