ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Betraying my principles is “a much worse prison than the government can construct”
After nearly two months in jail, Chelsea Manning submits powerful appeal for release

எனது கோட்பாடுகளை காட்டிக் கொடுப்பதென்பது "அரசாங்கம் நிர்மாணிக்க முடிந்ததை விட மோசமான சிறைச்சாலை" ஆகும்

கிட்டத்தட்ட இரண்டு மாத சிறை வாசத்திற்குப் பிறகு, செல்சீ மானிங் தனது விடுதலைக்காக சக்திவாய்ந்த முறையீடு ஒன்றை சமர்ப்பித்தார்

By Niles Niemuth 
7 May 2019

திங்களன்று, வெளியீட்டாளரும் அரசியல் கைதியுமான செல்சீ மானிங், தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவதற்கு வேர்ஜீனியாவின் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அரசாங்க நீதிமன்றத்துக்கு ஒரு முறையீட்டை சமர்ப்பித்தார்.

மார்ச் 8 முதல் மானிங் அலெக்ஸாண்ட்ரியா நகர சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விக்கிலீக்ஸ் வெளியீட்டாளரும் பத்திரிகையாளருமான ஜூலியன் அசான்ஜிற்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதற்கு ஒரு பெரும் நீதிபதி முன் அவர் சாட்சியமளிக்க மறுத்த நீதிமன்ற அவமதிப்புக்காக கைது செய்யப்பட்டார்.

"இந்த பெரிய நீதிபதியுடன் ஒத்துழைத்தல் குறிப்பாக பெரும் ஜூரி செயல்முறை மீதான தனது கோட்பாடுகளை காட்டிக்கொடுப்பதாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்" என மானிங்கின் வழக்கறிஞர்கள் திங்களன்று எழுதியுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். "அவருடைய நம்பிக்கைக்கான விளைவுகளை தாங்கிக்கொள்ள அவர் தயாராக உள்ளார், அவருடைய நம்பிக்கைகளில் அவருக்குள்ள பற்றுறுதியை கண்டு யாரும் ஆச்சரியப்பட தேவையில்லை."


செல்சீ மானிங் [படம்: Sparrow Media]

மானிங்கின் எட்டு பக்க அறிக்கை, அரசியல் கோட்பாடுகளின் ஒரு சக்திவாய்ந்த பிரகடனமாகும். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அரசாங்கத்தின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய அசான்ஜ் மற்றும் அவருடனான கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால வஞ்சத்தின் ஒரு பகுதியாக ட்ரம்ப் நிர்வாகத்தால் இலக்கு வைக்கப்பட்டார்.

"இரண்டு மாத சிறைத்தண்டனைக்குப் பின்னர், இதுவரை கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு வழிமுறைகளையும் பயன்படுத்தி, எந்தவொரு தயக்கமும் இன்றி, என்னால் இந்த அல்லது வேறு எந்த பெரிய நீதிபதிக்கும் சாட்சியமளிப்பதை எதுவும் மாற்ற முடியாது" என்று மானிங் அறிவித்தார். "ஒவ்வொரு கடந்நு செல்லும் நாளிலும் எனது ஏமாற்றம் மற்றும் விரக்தி அதிகரிக்கிறது, ஆனால் மிகச் சரியானதைச் செய்வதற்கும் தொடர்ந்து மறுத்து வருவதற்கும் எனது கடமைகளைச் செய்வேன்."

"என்னை விடுவிப்பதற்கான சாவி என்னிடம் தான் உள்ளது என்ற யோசனை அபத்தமானது, இந்த தேவையற்ற மற்றும் அடக்குமுறை கட்டாயத்தின் காரணமாக நான் துன்பத்தை எதிர்நோக்குகிறேன்: ஒன்று நான் சிறைக்குச் செல்ல வேண்டும், அல்லது என் கொள்கைகளை நானே காட்டிக் கொடுக்க வேண்டும். “இந்த இறுதி சாத்தியம் அரசாங்கம் நிர்மாணிக்க முடிந்ததை விட மோசமான சிறைச்சாலை" என்று மானிங் கூறினார்.

2010 இல் விக்கிலீக்ஸிற்கு அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய மற்றும் முக்கிய ஆவணங்களை கசியவிட்ட குற்றச்சாட்டுக்காக மானிங் ஒரு இராணுவ சிறையில் 35 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்காக ஏழு ஆண்டுகள் தண்டனையை அனுபவித்திருந்தார். மிக முக்கியமாக, 2007 ஆம் ஆண்டு, பாக்தாத்தில் அமெரிக்க Apache ஹெலிகாப்டர் குண்டுவீச்சுகளால் நடத்தப்பட்ட தாக்குதலால் இரண்டு ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்களை மற்றும் குறைந்த பட்சம் ஒரு டஜன் ஈராக்கியர்களைக் கொன்றதைக் காட்டுகின்ற "மாற்றுவழிக் கொலை" என்ற ஒளிப்பதிவை அவர் வெளியிட்டார்.

மானிங் குற்றம் சாட்டப்படவில்லை அல்லது எந்தவொரு புதிய குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படவில்லை என்றாலும், அவர் தண்டனைக்குரிய நபராக கருதப்பட்டு முதல் 28 நாட்களுக்கு சிறையில் தனிமைப்படுத்தப்பட்டார். காலவரையற்ற அல்லது நபர் ஏற்கனவே ஒரு மனநல குறைபாடு இருந்து அவதியுறும்போது முன் விசாரணைக் காவலில், தண்டனைக்காக நீண்டகாலமாக தனிமைப்படுத்தப்படல் என்பது சித்திரவதைக்கு ஒப்பாகும் என்று சித்திரவதை மீதான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி, ஜுவான் ஈ. மென்டஸ் தெரிவித்தார்.

மானிங், 2013 விசாரணையின் போது விக்கிலீக்ஸ் மற்றும் அசான்ஜ் ஆகியோருடன் அவரது தொடர்பு பற்றிய அனைத்து தகவல்களையும் ஏற்கனவே அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாகவும் தற்போது பெரிய நீதிபதிக்கு முன் எந்த சாட்சியமும் போலித்தனமாக இருக்கும் என்றும் மானிங்கை விடுவிப்பதற்கான முந்தைய முறையீட்டில் அவரது வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அசான்ஜிற்கு பாதுகாப்பு சாட்சியாக தனது சாட்சியத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே, பெரும் நீதிபதிக்கு முன் சாட்சியளிக்க கட்டாயப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளின் உண்மையான நோக்கம் ஆகும்.

ஒபாமா நிர்வாகத்தால் சிறை வைக்கப்பட்ட காலத்தில் அவரது தனிமைப்படுத்தப்பட்ட சிறைச்சாலையில் அவரது மன ஆரோக்கியத்தின் மீது நடைமுறைப்படுத்தப்பட்ட கொடூரமான விளைவை மானிங்கின் அறிக்கை விபரிக்கிறது.

"சில சமயங்களில் கவனத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் சிரமங்களை அனுபவித்தேன். சிந்தித்து கவனம் செலுத்துவது கடினமாக உள்ளது. மிகச் சிறிய விஷயங்களைப் பற்றி கவலை, ஏமாற்றம், எரிச்சல், ஒவ்வொரு அறிகுறியையும் சகித்துக் கொள்வதற்கு இயலாத தன்மை," என்று அவர் விளக்குகிறார். "ஒரு கட்டத்தில் குறுகிய நேர வருகைதரும் பார்வையாளர்களை சந்திக்கும் அறைக்குச் சென்று ஒரு சாதாரண உரையாடலைக் மேற்கொள்வதற்கு கூட சிரமப்பட்டதுடன் நோயை நான் உணர தொடங்கினேன். நோய் நிலைமையால் சில வாரங்களுக்கு பின்னர், தலைச் சுற்றுடன் குமட்டலினால் தரையில் வாந்தி எடுத்தேன், இதனால் என் சந்திப்பை முடிவுக்கு கொண்டுவர வேண்டியிருந்தது."

இன்னும் மோசமாக, நிரந்தர காயம் அல்லது ஒரு ஆபத்தான நோய்த்தாக்குதல் ஆகியவற்றுக்கான ஆபத்தை விளைவிக்கும் அண்மைக்கால பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு அவசியமான மருத்துவ உதவிகள் அணுகுவதற்கு அவர் மறுக்கப்பட்டார் என்று மானிங் குறிப்பிட்டார். சூரிய ஒளிக்கு வழக்கமான அணுகல் மறுக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு புத்தகம் அல்லது நண்பர்களுடன் எந்தவிதமான அணுகலும் இல்லை என்பதால் அவர் மனதை குழப்பமான நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். மார்ச் மாதம் முதல் போசாக்கு குறைபாடு காரணமாக 20 பவுண்டுகள் நிறை அதிகரிப்பையும் பெற்றுள்ளார்.

லெனின் மொரனோ அரசாங்கத்தால் அவரது புகலிடம் சட்டவிரோதமாக இரத்து செய்யப்பட்டமையால், லண்டனில் உள்ள ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து ஏப்ரல் 11 ம் திகதி பிரிட்டிஷ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அசான்ஜை பாதுகாப்பதற்கு மானிங் ஒரு துணிச்சலான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டார்.

போலியான கற்பழிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக பிணைக் கட்டுப்பாடுகளை மீறியதற்காக அசான்ஜிற்கு 50 வார சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் இப்போது அவர் அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்படுவதை எதிர்கொள்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு தண்டனை வழங்கப்படும் கணினி ஊடுருவல் முயற்சிக்கான முதல் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார். இராணுவ கணினி வலையமைப்புக்களைப் பயன்படுத்தும் போது அவரின் அடையாளத்தை மறைக்க கூடியவாறு ஒரு கடவுச்சொல்லை உடைப்பதற்கு மானிங்கிற்கு உதவ முயன்றார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டால், உளவு சட்டத்தின் கீழ் மரண தண்டனையை சாத்தியமாக்குவது உட்பட நீதித் துறையானது அசான்ஜிற்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில் உறுதியாக உள்ளது.

“இந்த அரசாங்கத்தின் அனைத்துவிதமான தொடர்ச்சியான, முறைகேடான துஷ்பிரயோகங்களை அம்பலப்படுத்துபவர்களை தண்டிப்பதற்கான நோக்கத்துடன், பொது கலந்துரையாடல்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு இந்த பெரும் நீதிபதி முயல்கிறார் என நான் நம்புகிறேன்” என மானிங் விளக்கினார்.

"ஆகவே, இந்த தகவல் சேகரிக்கும் விசாரணையில் பங்கெடுத்துக் கொள்ளுதல், ஒரு நியாயமற்ற மற்றும் அநீதியான செயலாகும், அது பெரும் நீதிபதி அப்பாவி மக்களை விசாரணை செய்வதற்கு அம்பலப்படுத்த சாத்தியமுள்ளது. இப்போது, எனது சிறை வாழ்க்கையில் இருந்து கடுமையான உளவியல் ரீதியான காயம் ஏற்பட்ட பின்னர், வேறு எந்தவொரு நபரையும் சித்திரவதை மற்றும் சோர்வு அல்லது வேறு எந்த வடிவிலான சிறை அல்லது சோதனைக்கு உட்படுத்துவதற்கு நான் விரும்பவில்லை."

சக ஊழியர்கள், கல்வியியலாளர்கள், வழக்கறிஞர்கள், இராஜதந்திரிகள், சமூக ஆர்வலர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள், முன்னாள் படையினர், பத்திரிகையாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள், களஞ்சிய எழுதுநர்கள், தோட்டக்காரர்கள், சமையல்காரர்கள், விமானிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரிடமிருந்து பெறப்படும் "அன்பும் பலமும்" அளிக்கின்ற நூற்றுக்கணக்கான தினசரி ஆதரவளிப்பு கடிதங்களுக்கு” அவர் நன்றி தெரிவித்தார்.

உண்மையை அம்பலப்படுத்திய தங்கள் முயற்சிகளுக்காக அமெரிக்க அரசாங்கத்தால் மானிங் மற்றும் அசான்ஜ் கொடூரமாக துன்புறுத்தப்பட்டாலும், அவர்களின் விடுதலைக்காக போராடும் உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் மற்றறையவர்களின் ஆதரவு மற்றும் பாராட்டை வென்றிருக்கின்றனர்.