ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian Trotskyists hold Kolkata public meeting to celebrate 80th anniversary of the Fourth International

இந்திய ட்ரொட்ஸ்கிசவாதிகள் நான்காம் அகிலத்தின் 80வது ஆண்டு விழாவை சிறப்பிக்க கொல்கத்தாவில் பொதுக்கூட்டத்தினை நடத்தினர்

By our correspondents
13 March 2019

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள் நான்காம் அகிலத்தின் 80வது ஆண்டுவிழாவை சிறப்பிக்க மார்ச் 10 அன்று மேற்கு வங்காளத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். பார்வையாளர்களில் ஜாதவ்பூர் பல்கலைக் கழக மாணவர்களும் வந்திருந்தார்கள். தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் கடந்த நவம்பர் மாதம் 80வது ஆண்டு நிறைவு விழாவைத் தொடர்ந்து இது நடத்தப்பட்டுள்ளது.  இந்தக் கூட்டம் முகநூல் வலைப்பக்கத்தில் நேரடியாக ஒலி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை கூட்டத்திற்கான பிரச்சாரத்தின்போது இந்திய ட்ரொட்ஸ்கிசவாதிகள் கொல்கத்தாவில் இரயில்வே தொழிலாளர்கள் உட்பட முக்கிய தொழிலாளர்கள் தட்டுகள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசி அவர்களின் ஆதரவைப் வென்றனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களில் ஒருவரும் நீண்டகால உறுப்பினருமான பலாஷ் ரோய் இந்த நிகழ்விற்கு தலைமையேற்றதுடன் மேலும் சிறப்புரை வழங்குவதற்காக வந்திருந்த இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் துணைச் செயலாளர் தீபல் ஜெயசேகராவை அன்புடன் வரவேற்றார். சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட உலக சோசலிச புரட்சியின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொடர்ச்சியாக போராடுகின்ற கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் கட்சி மட்டுமே என்று ரோய் கூட்டத்தில் கூறினார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களின் குழுவைச் சேர்ந்த அருண்குமார்  பேசுகையில் பிராந்தியத்தில் மில்லியன் கணக்கான மக்களுக்கு கொடிய விளைவுகளை எற்படுத்தும் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் இந்தியாவிற்கும் மற்றும் பாகிஸ்தானுக்குமிடையில் உருவாகியிருக்கும் கடுமையான அரசியல் நெருக்கடிகள் மற்றும் இராணுவ பதட்டங்களின் நிலமைகளின் கீழ் கொல்கத்தாவில் இந்தக் கூட்டமானது நடந்துகொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்திய மற்றும் பாகிஸ்தானிய ஆளும் உயரடுக்குகள் ஒரு முழு யுத்ததிலிருந்து தற்போது பின்வாங்கியிருக்கின்றன, இருந்த போதிலும் ஆபத்து தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது என்றார் அவர். “இந்தியாவின் மோடி அரசாங்கமும் அவ்வாறே, பாகிஸ்தானிய பிரதமர் கான் இருவர்களின் போர்வெறியை தூண்டக்கூடிய பதிலிறுப்புக்கள், இந்த பதட்டங்கள் விரைவாக பேரழிவுகளைத் தரக்கூடிய அணுசக்தி மோதலுக்கு இட்டுச் செல்லும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.”

வெளியேறும் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள், காலனித்துவ இந்தியாவை முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் இந்து ஆதிக்கம் நிறைந்த இந்தியா என்று பிரித்ததில் தான்  இரண்டு நாடுகளுக்குமிடையிலான பல தசாப்த கால பகையானது வேரூன்றியிருக்கிறது என்று குமார் பார்வையாளர்களுக்கு கூறினார்.

தேசிய முதலாளித்துவத்தின் இரண்டு கட்சிகளான - காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் – மற்றும் ஸ்ராலினிச இந்திய கம்யூனிசட் கட்சி (சிபிஐ) ஆகியவற்றின் உதவியுடன் வகுப்புவாத பிரிவு திணிக்கப்பட்டது என அவர் விளக்கினார்.  அந்த பிரிவினையினால் தெற்கு ஆசியாவில் உருவாக்கப்பட்ட புவிசார்- அரசியல் பதட்டங்கள், சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ மூலோபாய ஆக்கிரமிப்பு திட்டம் மற்றும் இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் இந்தியாவை மிக நெருக்கமாக ஒருங்கிணைப்பதற்கான வாஷிங்கடனின் முயற்சிகளால், அபாயகரமான மட்டங்களுக்கு மேலும் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான நரேந்திரமோடியின் போர் வெறி பிடித்த பிரச்சாரத்தை ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம், அதைப்போலவே சிபிஐ (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) போன்ற மாவோயிச கட்சிள் உட்பட  இந்திய அரசு அமைப்பின் அனைத்து கட்சிகளும் ஆதரித்துள்ளன என்று குமார் கூறினார். போர் வெடிப்பதை தடுப்பதற்கான ஓரே வழி, தெற்கு ஆசியாவின் தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தினூடாக, 1947-48 பிரிவினையினால் உருவாக்கப்பட்ட பிற்போக்கு அரசு அமைப்புகளை தூக்கி எறிந்து அதற்கு மாற்றீடாக உலக சோசலிச புரட்சிக்கான போராட்டத்தின் பாகமாக இந்த பிராந்தியத்தில் ஐக்கிய சோசலிச குடியரசுகளை நிறுவுவது என்று கூறி பேச்சை முடித்தார்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய துணைச் செயலாளர் தீபால் ஜெயசேகரா ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கம், 1923 இல் இடது எதிர்ப்பு அமைப்பை உருவாக்கியதிலிருந்து, ஸ்ராலினின் கீழ் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்துவ சீரழிவுக்கு எதிரான போராட்டம் மற்றும் 1938இல் நான்காம் அகிலம் உருவாக்கப்பட்டது வரை ட்ரொட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைரீதியிலான போராட்டத்தின் தடத்தின் வரலாற்றினை மிகக் கவனமான முறையில் மதிப்பாய்வு செய்தார். நான்காம் அகிலத்துக்குள் தோன்றிய கலைப்புவாதமான பப்லோவாத திருத்தல்வாதத்துக்கு எதிராக ட்ரொட்ஸ்கிச கொள்கைகளைப் பாதுகாப்பதற்காக 1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும் அவர் விளக்கமளித்தார்.


தீ
பால் ஜெயசேகரா கொல்கத்தா கூட்டத்தில் பேசுகிறார்

தெற்கு ஆசியாவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட முக்கியாமான போராட்டங்களை ஜெயசேகரா வலியுறுத்தியதுடன் கீழ்கண்டதையும் சேர்த்துக் கூறினார். “1935 இல் லங்கா சம சமாஜக் கட்சியை (லசசக) ஸ்தாபித்த, ட்ரொட்ஸ்கிச முன்னோடிகள் அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டங்களை நடத்தினர், பின்னர் அவர்கள் 1942 இல் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியை (BLPI) நிறுவினர், இவ்வாறாக அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தையும் இலங்கை மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் தேசிய முகவர்களையும் எதிர்த்து நடத்திய போராட்டம், உலக முழுவதும் சோசலிசத்திற்கான போராளிகளை ஊக்கப்படுத்தியது. இப்படியான போராட்டங்கள் இன்று சோசலிசத்திற்காக போராட விரும்புபவர்களுக்கு முக்கிய படிப்பினைகளை கொண்டிருக்கின்றன.”

1947 இந்திய பிரிவினைக்கு இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் கொள்கைரீதியான எதிர்ப்பையும், தைரியத்தையும், இந்து மற்றும் முஸ்லிம் வகுப்புவாத வழிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சோசலிச ஐக்கியத்திற்கான அதன் போராட்டத்தையும் பேச்சாளர் விரிவாக கூறினார். லங்கா சம சமாஜக் கட்சியின் அடுத்தடுத்த தேசியவாத சீரழிவு, மேலும் 1950 களின் ஆரம்பத்தில் தொடங்கிய பப்லோவாதிகளால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு நிகழ்வுப்போக்கு, 1964 இல் முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்ததில் முடிவடைந்தது என்பதை அவர் விளக்கினார்.

லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான 1968 இல் புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (RCL) ஆரம்பிக்கப்பட்டது பற்றி ஜெயசேகரா குறிப்பிட்டார்.

மார்க்சிசம் மற்றும் உலக சோசலிச முன்னோக்கிற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்  நீண்ட தசாப்தகால போராட்டத்தை குறிப்பிட்டு ஜெயசேகரா கூறினார். “முதலாளித்துவ பொருளாதாரத்தின் பூகோளமயமாக்கலின் மிக மேம்பட்ட நிலமைகளின் கீழ், இலங்கையில் ல.ச.ச. கட்சி மற்றும் இந்திய ஸ்ராலினிச கட்சிகள் போன்ற தேசியவாத அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தின் மிக குறைந்தபட்ச அடிப்படை தேவைகளைக் கூட பாதுகாக்கமுடியாமல் சரிந்துவிட்டன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளும் அபிவிருத்தி செய்து பாதுகாத்து வரும் சர்வதேச சோசலிசத்திற்கான முன்னோக்கும் அதன் வேலைத் திட்டங்களும் சக்திவாய்ந்த முறையில் நிரூபணமாகியிருக்கிறது.”

 “சர்வதேச சோசலிச முன்னோக்கில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையை கட்டுவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் மற்றும் சோசலிச சமத்தவக் கட்சியின் போராட்டமானது தற்போது சர்வதேச அளவில் எழுச்சிபெற்றுவரும் வெகுஜனப் போராட்டங்களுடன் ஒருங்கிணைந்து கொண்டிருக்கிறது. இந்தியா, தெற்காசியா முழுவதும் மற்றும் சர்வதேச அளவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளாக சோசலிச சமத்துவக் கட்சிகளை கட்டுவதற்கு மிகவும் சக்திவாய்ந்த வாய்ப்புகளை புறநிலமைகள் திறந்துவிட்டிருக்கின்றன.”

நான்காம் அகிலத்தின் முன்னோக்குகளையும், வரலாற்றை கற்க ஒரு தீவிர ஆய்வையும் மேற்கொள்ளவேண்டும் மேலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய பிரிவைக் கட்டுவதற்கு எம்மோடு இணையுங்கள் என்று பார்வையாளர்களை வலியுறுத்தியதுடன் ஜெயசேகரா தனது பேச்சினை முடித்துக்கொண்டார்.