ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

“Yellow vest” protesters pay tribute at the Communards’ Wall in Paris

"மஞ்சள் சீருடையாளர்கள்" பாரிஸில் கம்யூனார்ட்டுகளுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்

By Will Morrow 
27 May 2019

சிக்கனக் கொள்கை மற்றும் வறுமை, வேலையின்மை மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு எதிரான ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் தொடர்ச்சியான 28 ஆவது வார "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டங்களில், சனிக்கிழமையன்று பிரான்சில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

சிறிய ஆர்ப்பாட்டங்களையும் கணக்கில் எடுத்து அரசாங்கத்தை விட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கையை மிகவும் துல்லியமாகக் கணக்கிட்டு கூறும் “Yellow Number” எனும் பேஸ்புக் பக்கம், ஒவ்வொரு பிரதான நகரத்திலும், முந்தைய வாரத்தைப் போன்று கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையான சுமார் 40,000 மக்கள் கலந்து கொண்டதாக தெரிவித்தது. உள்துறை அமைச்சகம் மிகவும் குறைவாக 12,000 பங்கேற்பாளர்களை மட்டுமே அறிக்கை செய்தது.

பல ஆயிரம் எதிர்ப்பாளர்கள் துலூஸ், அமியான் மற்றும் பாரிசில் ஆர்ப்பாட்டம் செய்ததுடன் மீண்டும் ஒரு வன்முறை பொலிஸ் அடக்குமுறையை எதிர்கொண்டனர். துலூஸில், மதியம் முழுவதும் நடக்கும் அமைதியான ஆர்ப்பாட்டங்களை கலைக்க போலிஸ் தண்ணீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர்ப்புகை வாயுக்களை பயன்படுத்தினர். பாரிஸ் நகரில் மட்டும், 64 கைதுகள், மற்றும் 5,000 க்கும் அதிகமானவர்கள் தடுத்து வைக்கப்பட்தோடு, தேடலும் நடந்ததாக போலிஸ் அலுவலகம் தெரிவித்தது.

பாரிஸில் மிக முக்கியமான ஒரு அரசியல் நிகழ்வு இடம்பெற்றது. பேர்-லாசேஸ் (Père Lachaise) கல்லறைக்கு வெளியே சுமார் ஆயிரம் ஆர்ப்பாட்க்காரர்கள் ஒன்றுதிரண்டதோடு, கல்லறையினூடாக கம்யூனார்ட்டுக்களின் நினைவு சின்னம் இருக்கும் சுவருக்கு அணிவகுத்துச் சென்றனர். 148 ஆண்டுகளுக்கு முன்னர் 1871 இல் பாரிஸ் கம்யூனை இரத்தக்களரியால் ஒடுக்கியபோது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் படுகொலை செய்யப்பட்டதை இந்த இடம் நினைவுகூருகின்றது. மே 28 ம் திகதி, இராணுவம் 147 கிளர்ச்சிப் போராளிகளை (fédérés) அந்த சுவரில் வரிசையாக நிறுத்தி சுட்டு கொன்றதுடன், சுவரின் கீழேயிருந்த பெரும் சவக்குழிக்குள் வீசியெறிந்தனர்.

மஞ்சள் சீருடை எதிர்ப்பாளர்கள் கம்யூனார்ட்டுக்களின் சுவரை நோக்கி கல்லறை வழியாக அணிவகுத்து செல்கின்றனர்

மஞ்சள் சீருடை எதிர்ப்பாளர்கள் சர்வதேச கீதம் இசைக்கின்றனர்

அந்த சுவரின் முன்னே, 100 க்கும் மேற்பட்டோர் சுற்றிநின்று, தொழிலாளர்களின் சர்வதேச ஒற்றுமை கீதத்தை இசைத்தனர். "இவை கம்யூனின் அதே கோரிக்கைகள்தான்" என உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் ஒரு சமூகசேவை தொழிலாளி மார்ட்டின் கூறினார். "ஒரு புரட்சி, அதுதான் நிலைமை, நாம் அதற்குள் தள்ளப்படுகிறோம். இறுதியில், எமது சத்தம் கேட்கப்படவில்லை, மற்றும் சம்பவங்கள் சரியாக நடக்கவில்லை என்று நாம் சொல்லத்தொடங்கியதும்,​அவர்கள் எங்களை கட்டங்கட்டி தாக்கி, கண்ணீர்புகை குண்டுகளை வீசுகிறார்கள். கம்யூனில் அவர்கள் சுட்டுக் கொன்றனர். நாங்கள் இன்னமும் அந்த நிலையை அடையவில்லை. ஆனால் இரப்பர் தோட்டாக்கள் எங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே அவர்கள் நம்மை ஒரு புரட்சியை நோக்கி தள்ளுகிறார்கள்”.

முதலாளிகளுடன் ஒத்துழைத்து, பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடக்குவதுடன் செல்வந்தர்களுக்கு செல்வத்தை மறுவிநியோகம் செய்வதற்கும் மக்களின் பெரும் பகுதியினரின் வறுமைக்கு காரணமுமான CGT இன் பிலிப் மார்டினேஸ் போன்ற தொழிற்சங்க தலைவர்கள் "மஞ்சள் சீருடை" எதிர்ப்புக்களின் ஆரம்பத்தில் இருந்தே, எதிர்ப்பாளர்களை வலதுசாரிகளாகவும் பாசிசவாதிகளாகவும் அவதூறு செய்தனர். ஆனால் இந்த நிகழ்வு, “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான இடதுசாரி எதிர்ப்பால் தூண்டப்பட்டு, தொழிலாள வர்க்கத்தில் ஆழமாக வேரூன்றிய சோசலிச மரபுகளை விளக்குகிறது என்பதைக் காட்டுகிறது.

கம்யூனார்ட் சுவரில் நினைவுச்சின்னம்

பாரிசின் வட புறநகர் பகுதியான நாந்தேர் இலிருந்து வருகை தந்த ஒரு சமூக தொழிலாளி மேரி, WSWS நிருபர்களிடம் "பல ஆண்டுகளாக நமது சம்பளத்தை மாற்ற முடியவில்லை என்பதால் அவர் "மஞ்சள் சீருடை " எதிர்ப்புக்களில் கலந்துகொள்ள ஆரம்பித்து விட்டதாக தெரிவித்தார். அதனால் தான் விஷயங்களை மாற்ற முயற்சிசெய்ய இங்கே வந்தேன். ஊனமுற்றவர்கள் அல்லது முதியவர்கள் மதிக்கப்படுவதில்லை. அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வரமுடியாதென்பதால் அவர்களுக்காக நான் இங்கே இருக்கிறேன்."

"அவர்கள் தங்கள் கௌரவத்தை இழந்துள்ளனர். குப்பை கொட்டும் இடங்களில் எடுத்து உண்ணும் வயதானவர்களை நான் இன்னும் பார்க்கிறேன். நான் அவர்களின் வாழ்நாள் முழுவதும் பணிபுரிந்த மக்களையும், இப்போது பெறும் ஓய்வூதியத்துடன் வாழ முடியாதவர்களையும் பார்க்கிறேன். இது முற்றிலும் விபரீதமானது. அரசாங்கத்தில் யார் இருந்தாலும், ஜனாதிபதியாக யார் இருந்தாலும் எந்த மாற்றமும் இல்லை. ஜனாதிபதி மற்றும் பிற அதிகாரிகள் ஒய்வு பெற்றால், அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவர். இந்த நிதி, சமூக சேவைகளுக்கு நிதியளிக்க பயன்படும் பணமாகும். அதனால்தான் நான் ஒரு மஞ்சள் சீருடை ஆனேன்."

மேரி

மேரி 20 ஆண்டுகளாக ஒரு பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார். "இந்த நேரத்தில் நாங்கள் ஒரு நோயாளிக்கு செலவழிக்கக்கூடிய நேரம் குறைந்து வருகிறது, மேலும் அதிகமான மக்களை நாங்கள் கவனிக்க வேணடியுள்ளது. இன்று, எங்களில் மூன்று பேர் பராமரிப்பதற்காக ஒரு அறையில் 13 நோயாளிகள் உள்ளனர்; எங்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டாலும் பிரதியீடு செய்யப்படுவதில்லை.” அவர் மாதத்திற்கு 1,300 யூரோக்கள் சம்பாதிக்கிறார், "பாரிசில் இது கடினமானது, இரவு 10 மணி வரையும் வார இறுதி நாட்களிலும் வேலை செய்தும் ஒன்றும் இல்லை" என கூறினார்.

CGT, FO உட்பட “எங்களுக்கு வழமையான தொழிற்சங்கங்கள் உள்ளன," "ஆனால் நான் அவர்களை நம்பவில்லை. அவர்கள் எங்களுடன் இல்லை. அவர்கள் எங்களின் பிரதிநிதிகளும் இல்லை, எங்களுக்காக போராடுவதுமில்லை." எதிர்ப்புக்களுக்கு மக்ரோன் அரசாங்கத்தின் பதிலானது "ஏற்கெனவே இன்று நாம் ஒரு சர்வாதிகாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்பதையே காட்டுகிறது. மஞ்சள் சீருடை போராட்டங்கள் போல் கொடூரமாக அடக்கப்பட்ட ஆர்ப்பாட்ட எதிர்ப்பு இயக்கத்தை காணமுடியாது. கண்ணீர் புகை, இரப்பர் தோட்டாக்கள், கிரனேட் குண்டுகள், நீர் பீரங்கிகள். நாங்கள் இங்கே இருப்பது அரசாங்கத்தை திணறவைக்கிறது, முற்றிலும் நியாயமான சமூக அதிருப்தியை ஒரு அமைதியான முறையில் வெளிப்படுத்தியுள்ளோம்."

"நாங்கள்தான் பணியிடங்களை இயங்க வைப்பவர்கள்” என்று மேரி கூறினார், "மார்க்ஸ் கூறியதும் இதுதான்."


ந்துவான்

மையனே (Mayenne) ஐ சேர்ந்த ஒரு இளம் தொழிலாளி அந்துவான், "மஞ்சள் சீருடையாளர்கள்" எதிர்த்துப் போராடும் பிரச்சினைகள் "ஐரோப்பாவையும், உலகம் முழுவதையும் பாதிக்கும். எல்லா இடங்களிலும் வறுமை உள்ளது, அது முதலாளித்துவத்தின் விளைவாகும். அது இருக்கும் வரை, ஒதுக்கப்பட்ட மக்களே அங்கு இருப்பார்கள். நாங்கள் அனைவருக்காகவும் போராடுகிறோம்” என எமது செய்தியாளர்களிடம் கூறினார்.

விக்கிலீக்ஸ் பத்திரிகையாளரான ஜூலியன் அசான்ஜ் துன்புறுத்தப்படுவதை அந்துவான் அறிந்திருந்தார், அவரை ஒரு கதாநாயகனாக நினைத்தார். "என்னை பொறுத்தவரை, அது ஒரு பெரிய சொல். ஆனால் அவர் ஒரு வீரர், ஏனென்றால் அமெரிக்க அரசாங்கத்தால் ஈராக்கில் செய்யப்பட்ட அட்டூழியங்களை அவர் வெளிப்படுத்தினார். அவருக்கு என்ன ஆனது? அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தூதரக அறைக்குள் ஏழு ஆண்டுகள் பூட்டி வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்படவில்லை. அவருக்கு மற்றொரு நாட்டில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவர் சிறைக்கு தகுதியானவர் அல்ல. அவர் ஒரு குடிமகனாக தனது கடமையையே செய்துள்ளார்."

அசான்ஜ் அம்பலப்படுத்திய போர்கள் "வீணாக நடத்தப்படவில்லை” என்று அந்துவான் கூறினார். அவற்றின் பின்னணியில் எண்ணெய் நலன்கள் இருப்பதாக நினைக்கிறேன். போர்கள், பஞ்சங்கள் மற்றும் எல்லாம் இருக்கும் என்று அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் தங்கள் நலன்களை மட்டுமே கருதுகின்றனர். மேலும், அவர்கள் எல்லாவற்றையும் எங்களுக்கு சொல்லவில்லை. உதாரணத்திற்கு, பத்திரிகையாளர்கள் சவுதி அரேபியாவிற்கு பிரான்ஸ் ஆயுதங்களை விற்பனை செய்துள்ளனர் என்பதை நிரூபித்துள்ளனர். இப்போது என்ன நடக்கிறது? என்ன நடக்கிறது என்பதை வெளிப்படுத்திய அவர்கள் அபராதம் மற்றும் சிறைவாசத்தை எதிர்கொள்ள நேரிடும் என அச்சுறுத்தப்படுகின்றனர்."