ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In legal victory for Assange, Swedish court rules against extradition

அசான்ஜிற்கான சட்டபூர்வ வெற்றியாக, கையளிக்கப்படுவதற்கு எதிராக சுவீடன் நீதிமன்றத் தீர்ப்பு

By Oscar Grenfell 
4 June 2019

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை முறையாக கைது செய்ய, சுவீடிஷ் அரசதரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த முயற்சியை உப்சாலா மாவட்ட நீதிமன்றம் நேற்று எதிர்த்து தீர்ப்பளித்தது. நீதிமன்றம் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டிருந்தால், அது பிரிட்டனில் இருந்து சுவீடனுக்கு அவர் கையளிக்கப்படுவதற்கான வேண்டுகோளை தூண்டிவிட்டிருக்கும்.

அசான்ஜின் வழக்கறிஞர்கள் இந்த தீர்ப்பை ஒரு சட்டபூர்வமான “வெற்றி” என்பதாக விவரித்துள்ளனர். அந்நாட்டில் எந்தவொரு குற்றத்திற்காகவும் ஒருபோதும் அவர் குற்றம்சாட்டப்படாதவர் என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும், ஐரோப்பிய கைது உத்தரவாணையை வழங்குவதன் மூலமாக அசான்ஜ் கையளிக்கப்படுவதை பாதுகாப்பதற்கான சுவீடன் வழக்கறிஞர்களின் முயற்சிகளுக்கு விழுந்த ஒரு அடியாக இது உள்ளது.


ஜூலியன் அசான்ஜ்

அசான்ஜூக்கு எதிரான சுவீடனின் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் குறித்த “பூர்வாங்க விசாரணையை” கடந்த மாதம் மீண்டும் நடத்தியது. இந்த குற்றச்சாட்டுக்கள் கடந்த எட்டு ஆண்டுகளில் இரண்டு முறை கைவிடப்பட்டவை. ஏப்ரல் 11 அன்று, ஈக்வடோரின் இலண்டன் தூதரகத்தில் இருந்து அசான்ஜ் வெளியே இழுத்துவரப்பட்டு பிரிட்டிஷ் பொலிசார் அவரை கைது செய்த பின்னர் இந்த விசாரணையை வழக்கறிஞர்கள் மீட்டுயிர்ப்பித்துள்ளனர்.

சுவீடன் விசாரணையின் நோக்கம், அசான்ஜின் பெயரை களங்கப்படுத்துவதும், ஒரு அமெரிக்க சிறைக்கு அவரை அனுப்புவதற்கான ஒரு மாற்று வழியை வழங்குவதுமாகும். அசான்ஜ் சுவீடனில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாராயின், அதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கு கையளிக்கப்படுவதை அவர் முகம்கொடுக்க மாட்டார் என்பதற்கு உத்தரவாதமளிக்கும் படி 2010 முதல் அவரது வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கைகளை சுவீடன் அதிகாரிகள் பலமுறை நிராகரித்துள்ளனர்.

விசாரணையில், சுவீடன் வழக்கறிஞர் ஈவா-மேரி பெர்சன், அசான்ஜூக்கு ஒரு தடுப்புக் காவல் ஆணை வழங்கப்பட வேண்டும், ஏனென்றால் “விசாரணை முடிவதற்கு முன்னரே நாட்டைவிட்டு வெளியேறும்” அபாயம் உள்ளதென நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். மேலும் “குற்றத்தை விசாரிக்கும் பொது ஆர்வத்தின்” காரணமாக இது தேவைப்படுவதாக இருந்தது என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.    

அசான்ஜின் சுவீடன் வழக்கறிஞர் பெர் சாமுவெல்சன், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் “விசாரணை முடிவதற்கு முன்னரே நாட்டைவிட்டு வெளியேறும்” அபாயம் இருப்பதாக கருதப்பட முடியாது, ஏனென்றால் மிகச்சிறிய பிணை மீறல் குற்றங்களுக்காக 50 வார கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பிரிட்டனின் பெல்மார்ஷ் சிறையில் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று இதற்கு பதிலடி கொடுத்தார்.

அசான்ஜ் தானாக முன்வந்து விசாரணையில் பங்கேற்க வேண்டுமென கேட்கப்படவும் இல்லை என்பதையும் சாமுவெல்சன் குறிப்பிட்டார். “எனவே, விசாரணையை காரணம் காட்டி அவரை கைது செய்ய முடியாது,” என்று அவர் தெரிவித்தார். இதற்கு, பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர், சுவீடன் வழக்கறிஞர்கள் விரும்பினால், பெல்மார்ஷ் சிறையில் அல்லது காணொளி இணைப்பின் ஊடாக அசான்ஜை விசாரணை செய்வதற்கு அவர்கள் முயற்சிக்க முடியும் என்று தெரிவித்தார்.

அசான்ஜ் கையளிக்கப்படுவது குறித்த அமெரிக்க முயற்சிகளுடன் “போட்டியிடுவதற்கு” அவர்களும் முயற்சிக்கின்றனர் என்று சாமுவெல்சன் குற்றம்சாட்டினார். அமெரிக்க போர் குற்றங்கள் மற்றும் இராஜதந்திர சதிகளை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியதற்காக, அமெரிக்க உளவுத்துறை சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் அதிகபட்ச தண்டனையான 170 ஆண்டுகால கடும் சிறை தண்டனைக்கு அவர் முகம்கொடுக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவிடம் கையளிக்கப்படுவதற்கான விண்ணப்பத்தில் இருந்து தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள அசான்ஜ் அனுமதிக்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

விசாரணையைத் தொடர்வதற்கு, "ஜூலியன் அசான்ஜை தடுப்புக் காவலில் வைக்கவேண்டும் என அவசியமில்லை” என்று நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது எனவே, ஜூலியன் அசான்ஜை அதன் பங்கிற்கு தடுத்து வைப்பதற்கு இந்த நீதிமன்றம் தீர்மானிக்கவில்லை” என்று நீதிமன்ற தீர்ப்பு தெரிவித்தது.

தீர்ப்பிற்குப் பின்னர், பெர்சன் இவ்வாறு கூறினார்: “நீதிமன்றத்தின் முடிவை நான் முழுமையாக மதிக்கிறேன்.” மேலும், குறிப்பிடப்படாத தேதியில் அசான்ஜை விசாரணை செய்வதற்கு ஒரு ஐரோப்பிய விசாரணை ஆணையை சுவீடன் வழக்கறிஞர்கள் வழங்குவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

SVT Nyheter செய்தி ஊடகத்திற்கு பேட்டியளிக்கையில், சாமுவெல்சன், “அசான்ஜின் பாதுகாப்பிற்கான ஒரு மாபெரும் வெற்றியாக இந்த தீர்ப்பு உள்ளது… வழக்கறிஞர்கள் நிராகரிக்கப்பட்டனர்” என்று விவரித்தார். விசாரணை “மோசமாக” இருந்தது என்றும், “இந்த கட்டத்தில் விசாரணை குறித்த நேர்மைத்தன்மை பற்றிய கூற்றுக்களால் விடயங்களை சரிப்படுத்துவது இயலாத காரியம்” என்றும் சேர்த்துக் கூறினார்.

மேலும் தொடர்ந்து இவ்வாறு தெரிவித்தார்: “விசாரணையின் விளைவு என்பது பூர்வாங்க விசாரணை மீண்டும் ஒருமுறை கைவிடப்படுவதாக இருக்கும் பட்சத்தில், சுவீடனுக்கு அவரைக் கொண்டுவருவதில் அர்த்தமில்லை. வழக்கறிஞர்கள் இந்த வழக்கை ஏற்கனவே இரண்டு முறை கைவிட்டுள்ளனர் என்ற நிலையில், தற்போது அசான்ஜை விசாரித்த பின்னர் மூன்றாவது முறையாக அவர்கள் அவ்வழக்கை கைவிடக்கூடும்.”

சுவீடன் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் பென்ட் இவார்சன், பின்வருமாறு குறிப்பிட்டார்: “அசான்ஜை தடுத்து வைக்கக் கூடாது என்று மாவட்ட நீதிமன்றம் எடுத்த முடிவு சரியானது என்ற எனது கருத்தை பகிர்ந்து கொள்கிறேன். மேலும், இந்த வழக்கை முற்றிலும் நிரந்தரமாக கைவிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது ஒன்றுதான் நியாயமானது.”

சுவீடன் அரசதரப்பு வழக்கறிஞர்கள், அவர்களது விசாரணையை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் என்ற உண்மை ஒருபுறமிருப்பினும், அசான்ஜை முறையாக தடுத்து வைப்பதற்கு முனைந்தனர்.

இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்படுதல் 2003 சட்டத்தின் கீழ், ஒரு தனி மனிதரோ, மற்றொரு ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பப்படமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஒரு ஐரோப்பிய கைது உத்தரவாணையின் கீழ்,  நாட்டின் நீதித்துறை அதிகாரிகள் அவரை "அவரை குற்றஞ்சாட்ட அல்லது முயற்சி செய்ய” முடிவு செய்யவில்லை.

இந்த நிபந்தனை பிரிட்டிஷ் நீதிமன்றத்தால் நசுக்கப்பட்டது, இது, எந்தவித குற்றச்சாட்டும் அசான்ஜ் மீது இல்லை என்றாலும், சுவீடனிடம் அவர் கையளிக்கப்படுவதற்கு பலமுறை தீர்ப்பளித்தது. ஈக்வடோரின் இலண்டன் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் புகுவதற்கு அசான்ஜ் நிர்ப்பந்திக்கப்பட்டதற்குப் பின்னர், குற்றச்சாட்டு ஏதுமின்றி கையளிக்கப்படுவதற்கு வலியுறுத்தும் வகையில், பிரிட்டிஷ் சட்டங்கள் 2014 இல் திருத்தம் செய்யப்பட்டன.

சுவீடனின் “விசாரணை” எப்போதும் ஒரு அரசியல் இட்டுக்கட்டுதலாகத்தான் இருந்து வருகிறது. ஆகஸ்ட் 2010 இல், அசான்ஜ் உடன் விரும்பி உடலுறவு வைத்துக் கொண்ட இரண்டு சுவீடன் பெண்மணிகள், அவருக்கு எச்.ஐ.வி. சோதனை செய்யப்பட வேண்டும் என்று முறையிட்டு பொலிஸூக்கு சென்றனர். அது குறித்த விசாரணையின் போது, அவர் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் போலியாக ஜோடிக்கப்பட்டிருந்தன.

2010 இல் “பாதிக்கப்பட்டவர்களாக” கூறப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து வந்த உரை செய்தி, “ஜூலியன் அசான்ஜிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க நான் விரும்பவில்லை” என்றும் “இது பொலிசாரால் இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள்” என்றும் தெரிவித்தது.

2010 இல் நடந்த ஆரம்பகட்ட “பூர்வாங்க விசாரணை” “ஆதாரங்கள், கற்பழிப்பு தொடர்பான எந்தவித ஆதாரத்தையும் வெளியிடவில்லை” என்பதுடன் “எந்தவித குற்றமும்” அங்கு நிகழவில்லை என்றும் கண்டறிந்தது.

அசான்ஜ் சுவீடனில் ஐந்து வாரங்கள் தங்கியிருந்தார் என்பதுடன், மேலதிக விசாரணைக்கு அவர் தேவைப்படமாட்டார் என்று வழக்கறிஞர்கள் கூறிய பின்னரே அந்நாட்டை விட்டு அவர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வழக்கறிஞரான கிளாஸ் போர்க்ஸ்ட்ரோம் என்பவர் சுவீடன் மற்றும் அமெரிக்காவின் அரசியல் ஸ்தாபகங்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளார் என்று கூறப்பட்டதால் அதன் தூண்டுதலில், செப்டம்பர் 2010 இல் ஒரு புதிய வழக்கறிஞரான மரியான் நை மூலம் “ஆரம்பகட்ட விசாரணை” மீட்டுயிர்ப்பிக்கப்பட்டது. விக்கிலீக்ஸ், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர் குற்றங்களை அம்பலப்படுத்திய காணொளிகள் மற்றும் போர் பதிவுகளை பிரசுரித்ததற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட பெரும் பிரச்சாரத்திற்கு மத்தியில் இது நிகழ்ந்தது.

அசான்ஜை கைது செய்வதற்கு, பயங்கரவாதிகளுக்கும் கொலைகாரர்களுக்கும் வழமையாக விடுக்கப்படுவதான அனைத்து நாட்டுக் குற்ற ஒழிப்புக் காவல் துறைக்குழுவின் (Interpol) சிவப்பு அறிக்கையை விடுப்பதற்கு நை நோக்கம் கொண்டிருந்தார். அசான்ஜை கைது செய்வதற்கான உத்தரவாணையை நீதிமன்றம் அல்லாமல் ஒரு வழக்கறிஞரான நை தான் அதை வழங்கியிருந்தார் என்றாலும், பிரிட்டிஷ் அதை மீண்டும் மீண்டும் பிடித்துத் தொங்கியது. தொடர்ந்து அசான்ஜ் அமெரிக்காவிற்கு கையளிக்கப்படுவார் என்பதற்கு எதிராக எந்தவித உத்தரவாதத்தையும் சுவீடன் அதிகாரிகள் வழங்க மாட்டார்கள் என்ற நிலைமைகளின் கீழ் தான், 2012 இல் ஈக்வடோரின் இலண்டன் தூதரகத்தில் அவர் அரசியல் தஞ்சம் நாடினார்.

தொர்ந்து ஆறு ஆண்டுகளாக, தூதரகத்தில் அசான்ஜை விசாரணை செய்வதற்கு அவரளித்த வாய்ப்புக்களை சுவீடன் வழக்கறிஞர்கள் நிராகரித்தனர். அதே காலகட்டத்தில், சுவீடனுக்கு வெளியே குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்ட 44 தனிப்பட்ட நபர்களை அவர்கள் விசாரணை செய்தனர். 2016 இல், சுவீடன் நீதிமன்ற மேல்முறையீடு, நை கடமை தவறிவிட்டார், ஏனென்றால் ஒரு குற்றச்சாட்டை சுமத்துவதற்கு அல்லது முடிப்பதற்கு, ஆரம்பகட்ட விசாரணை திறந்து வைக்கப்பட்டும் நடைமுறையிலும் இருக்க வேண்டும்.

நவம்பர் 2016 இல், சுவீடன் வழக்கறிஞர்கள் தூதரக கட்டிடத்தில் வைத்து அசான்ஜை விசாரித்தனர். அடுத்த ஆண்டு, விசாரணையை அவர்கள் தொடரக்கூடும் என்ற நிலை இருந்தாலும், விசாரணையை அவர்கள் முடித்துக் கொண்டனர். கடந்த எட்டு ஆண்டுகளாக, அந்நாட்டின் வழக்கறிஞர்கள் கடுமையான குற்றம் புரிந்த தனிநபர்களை நீதிமன்றத்திற்கு ஆஜராகவில்லை என்று மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டி வந்துள்ளனர்.

அசான்ஜூக்கு எதிரான சதித்திட்டத்தின் நோக்கம், 2017 மற்றும் 2018 இல் தகவல் அறியும் உரிமைகளின் கீழ், இத்தாலிய பத்திரிகையாளர் மொரிஷி பெற்றிருந்த ஆவணங்களில் வெளிப்பட்டது.

சுவீடன் அதிகாரிகள், அசான்ஜ் கையளிக்கப்படுவதற்கான கைது உத்தரவாணையை பெற முனைவதற்கு மாறாக, பிரிட்டனில் அல்லது காணொளி ஊடாக அவரை விசாரிப்பதற்கான அசான்ஜின் வாய்ப்பை நிராகரித்தனர் என்பதை 2010 மற்றும் 2011 இல் பிரிட்டிஷ் அரசின் வழக்குத் தொடர்தல் சேவை (Crown Prosecution Service-CPS) வலியுறுத்தியது என்று அவர்கள் எடுத்துக் காட்டினர்.

இந்த ஆவணங்கள், 2013 ம் ஆண்டு ஆரம்பத்திலேயே அந்த விசாரணையை கைவிடுவதற்கு சுவீடன் கருதி வந்ததை கூட நிரூபித்தது. அசான்ஜின் வழக்கை கையாளும் பிரிட்டிஷ் CPS வழக்கறிஞர்களுக்கு, “நீங்கள் உங்களையே அழிப்பதற்கு தைரியம் கொள்ள வேண்டாம்!!!” என்று CPS மூத்த ஆலோசகர் எச்சரித்தார்.

புலானாய்வுகள் குறித்த FBI இடமிருந்து சுவீடன் வழக்கறிஞர் மரியான் நை க்கு வந்த ஒரு மின்னஞ்சல் உட்பட, ஏனைய மின்னஞ்சல்கள் தவிரக்கமுடியாமல் அழிக்கப்பட்டன. நை, அந்த மின்னஞ்சலின் சாரம்சத்தை நினைவுபடுத்த முடியவில்லை என்று பின்னர் தெரிவித்தார். விக்கிலீக்ஸையும் அதன் நற்பெயரையும் அழிப்பதற்கான அமெரிக்க பிரச்சாரத்தில் FBI ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.