ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UN Special Rapporteur on Torture warns Julian Assange could die in prison

சித்திரவதை தொடர்பான ஐ.நா. அமைப்பின் சிறப்பு அறிக்கையாளர், சிறையில் அசான்ஜ் இறக்க நேரிடும் என எச்சரிக்கிறார்

By Kevin Reed 
6 June 2019

ஜூன் 1 அன்று ஆஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலிக்கு அளித்த பேட்டியின்போது, சித்திரவதை தொடர்பான ஐ.நா. அமைப்பின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்ஸர், அசான்ஜ் மீதான துன்புறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்படவில்லை என்றால் அவர் சிறையிலேயே இறக்க நேரிடும் என எச்சரித்தார்.

சென்ற வாரம், அசான்ஜ் துன்புறுத்தப்படுவது குறித்து கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன், இதை “உளவியல் சித்திரவதை” என்று குறிப்பிட்டார்.


ஜூலியன் அசான்ஜ்

செய்தியாளர் பிலிப் வில்லியம்ஸ் மெல்ஸரிடம், “உங்களுடைய தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலளிக்கப்படவில்லை என்பதால், உண்மையில் சிறையிலேயே அவர் இறந்துவிட நேரிடலாம் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா?” என்று கேட்டபோது, மெல்ஸர் அதற்கு, “"நிச்சயமாக, ஆம். இது என் கருத்துப்படி, மிகவும் உண்மையானது இது மிகவும் யதார்த்தமானது என்பதால் எனக்கு அச்சமாக உள்ளது… அந்த நிலையான அழுத்தத்தின் ஒட்டுமொத்த விளைவாக, இதன் முடிவு என்னவாகும் என்பது முன்கணிக்க முடியாததாக இருக்கும். நீதிமன்ற விசாரணைக்குக் கூட அவர் ஆஜராக முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அளவிற்கு தற்போது அவரது உடல்நலம் மிகவும் சீர்குலைந்து வருவதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். இது வழக்காடல் பற்றியது அல்ல; இது துன்புறுத்தல் பற்றியது ஆகும் என்ற நிலையில், இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று பதிலிறுத்தார்.

மெல்ஸர் உடனான முழு வானோலி நேர்காணல் பதிவை இங்கே கேட்கலாம். விக்கிலீக்ஸ் வெளியீட்டாளரும் பத்திரிகையாளருமான ஜூலியன் அசான்ஜ், “பிணை மீறல்” குறித்த இட்டுக்கட்டப்பட்ட பழிவாங்கல் குற்றச்சாட்டுக்களின் பெயரிலான தோற்ற விசாரணையில் பிரிட்டிஷ் நீதிமன்றம் மே 1 அன்று விதித்ததான 50 வாரகால சிறை தண்டனைக்கு ஆளாகியுள்ளார். அசான்ஜ் தஞ்சம் புகுந்திருந்த, மேலும் ஏழு ஆண்டுகளாக கடுமையாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஈக்வடோரிய தூதரகத்தில் இருந்து ஏப்ரல் 11 அன்று அவர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரை கைது செய்து, தற்போது தென்கிழக்கு இலண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அவரை காவலில் வைத்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் “கூட்டு துன்புறுத்தலை” உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரும் படி மே 31 அன்று மெல்ஸர் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து தற்போதைய அசான்ஜின் மோசமான நிலைமை பற்றிய அவரின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

சித்திரவதை தொடர்பான ஐ.நா. அமைப்பின் சிறப்பு நிபுணர் மே 9 அன்று, அந்த வீரமிக்க பத்திரிகையாளரின் நிலைமையை மதிப்பிடுவதற்காக ஒரு மருத்துவரையும் உளவியலாளரையும் உடனழைத்துச் சென்று பெல்மார்ஷ் சிறையில் அசான்ஜை பார்வையிட்டார். உளவுத்துறைச் சட்டத்தை மீறியதாக அமெரிக்க நீதித்துறை விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் மீது 17 குற்றச்சாட்டுக்களை சுமத்தியதுடன் —தண்டனை விதிக்கப்பட்டால் அது 170 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனைக்கு உட்பட்டது— விசாரணைக்காக அவர் அமெரிக்காவிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கையையும் புதுப்பித்ததன் பின்னர் வெறும் ஒரு வாரத்தில் மெல்ஸர் அவரது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டிஷ் மற்றும் ஈக்வடோரிய அதிகாரிகள் அசான்ஜை ஒன்பது ஆண்டுகளாக “தொடர்ச்சியாகவும் படிப்படியாகவும் கடுமையாக துன்புறுத்தி வருவது” குறித்தும், அமெரிக்காவிற்கு அவர் கையளிக்கப்படுவார் என்ற அச்சுறுத்தல், “அவரது கருத்து சுதந்திரம், நியாயமான விசாரணை குறித்த அவரது உரிமை, அவருக்கு இழைக்கப்படும் சித்திரவதை மற்றும் ஏனைய கொடுமைகளை தடுப்பது, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான வகையில் அவரை நடத்துவது அல்லது தண்டைக்குள்ளாக்குவது ஆகியவை உள்ளிட்ட அவரது மனித உரிமைகளை கடுமையாக மீறப்படுவதான உண்மையான அபாயத்தை” முன்வைக்கும் என்பது குறித்தும் மெல்ஸர் எச்சரித்தார்.

ஏபிசி வானொலிக்கு அளித்த பேட்டியின்போது ஜெனிவாவில் இருந்து பேசுகையில், மெல்ஸர், “அவருக்கு எதிராக இருக்கும் வழமையான தவறான அபிப்பிராயத்தினாலும், மேலும் ஒரு பொது எதிரியாக பெரிதும் அவர் சித்தரிக்கப்பட்டுள்ள காரணத்தினாலும்” அமெரிக்காவில் அசான்ஜ் நியாயமான விசாரணையை எதிர்கொள்ள முடியாது.

அசான்ஜ் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள தாக்குதல்களில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பங்கு தொடர்பான வில்லியம்ஸின்  வினாவிற்கு பதிலிறுக்கையில் மெல்ஸர், “எனது பார்வையில், இந்த வழக்கில் ஆஸ்திரேலிய அரசாங்கம் வெளிப்படையாக இல்லை. அவர்களது தேசியத்தை பாதுகாக்கவும்…, தற்போது அசான்ஜ் அனுபவித்துக் கொண்டிருப்பதான அதிகப்படியான துன்புறுத்தல்களில் இருந்து அவரை பாதுகாக்கவும் ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுக்குமென நான் எதிர்பார்த்திருந்தேன்” என்று கூறினார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் போர் குற்றங்களை உலக மக்களுக்கு விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியதன் காரணமாக, அதனை திட்டமிட்டு இழிவுபடுத்தவும், துன்புறுத்தவும் மேலும் மௌனமாக்கவும் என முன்னெடுக்கப்பட்ட சர்வதேச பிரச்சாரத்தின் இலக்காக அசான்ஜ் இருக்கிறார்.

அசான்ஜை பாதுகாப்பதற்கான ஒரு போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கான அவசரத் தேவைகளை மெல்ஸரின் எச்சரிக்கை சுட்டிக்காட்டுகிறது. எங்களது வாசகர்கள் அனைவரையும் இந்த போராட்டத்தில் பங்கெடுக்க முன்வருமாறு நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.