ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US to jail 1,400 immigrant children at WWII Japanese internment site

இரண்டாம் உலகப் போர் சகாப்த ஜப்பானிய தடுப்புக் காவல் முகாமிற்குள் 1,400 புலம்பெயர்ந்த சிறார்களை அமெரிக்கா சிறைப்படுத்தவுள்ளது

By Eric London 
13 June 2019

ஓக்லஹோமா மாகாணத்தின், லாட்டன் நகரிலுள்ள ஸில் கோட்டை (Fort Sill) இராணுவத் தளத்தில், இரண்டாம் உலகப் போர் சகாப்த ஜப்பானிய தடுப்புக் காவல் முகாமில் 1,400 புலம்பெயர்ந்த சிறார்களை ட்ரம்ப் நிர்வாகம் தடுப்புக் காவலில் வைக்கவுள்ளது என்று பென்டகன் நேற்று அறிவித்தது.

அயோவா மாகாணத்தில் நடந்த ஒரு பேரணியில் புலம்பெயர்பவர்களையும் சோசலிசத்தையும் ட்ரம்ப் கண்டனம் செய்துள்ள நிலையில், செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட இந்த முடிவு ஒரு திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியாக உள்ளது.  

பென்டகன் அறிவிப்புக்குப் பின்னர் உடனடியாக, “புலம்பெயர்வு உண்மையில் 2020 இன் தீர்மானிக்கும் பிரச்சினை.” என்று Des Moines நகரில் ட்ரம்ப் தெரிவித்தார். “புலம்பெயர்வு என்று வரும்போது, ஜனநாயகக் கட்சியினர் ஒருபோதும் அமெரிக்க குடிமக்களுக்கு பிரதிநிதித்துவம் செய்வதில்லை… ஜனநாயகக் கட்சி உண்மையில் தற்போது சோசலிசக் கட்சியாக செயல்படுகிறது” என்றும் கூறினார்.


ஸில் கோட்டை, ஓக்லஹோமா

ஸில் கோட்டையில் தடுப்புக் காவல் முகாமை மீளத்திறப்பதற்கான இந்த முடிவு, ஜனநாயக ஆட்சி முறைகளை முறிப்பதில் கூடுதலான ஒரு மைல்கல்லாக இருப்பதுடன், உத்தியோகபூர்வ அரசாங்கக் கொள்கை என்பதன் பேரில் அமெரிக்க வரலாற்றில் போர் குற்றங்களை அரசாங்கம் மீட்டுயிர்ப்பித்து வருகிறது என்பதன் ஒரு அடையாளமாகவும் இது உள்ளது. மேலும், அரசாங்கம் மிக வெளிப்படையாக சர்வாதிகார ஆட்சி முறைகளை இயற்றுவதற்கு தயாராகவுள்ளது என்பதை ட்ரம்பின் தீவிர அதிவலது ஆதரவாளர்களுக்கு சமிக்ஞை செய்வதாகவும் இது உள்ளது.

“இதுபோன்ற வரலாற்றை திரும்ப நிகழச் செய்வது நமது வயிற்றில் குத்துவது போல் உள்ளது,” என்று ஜப்பானிய அமெரிக்க குடிமக்கள் குழுவின் (Japanese American Citizens League) நிர்வாக இயக்குநரான டேவிட் இனோ (David Inoue) உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தார்.

“ஜப்பானிய முகாம்களில் சிறையிலடைக்கப்பட்டிருந்தவர்கள், அத்தகைய இடங்களில் பயங்கரமான தவறுகள் நடந்துள்ளது என்பதை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விட்டு, புனித யாத்திரையாக அடிக்கடி அம்முகாம்களுக்கு திரும்பி வருகின்றனர். தற்போது, அதே இடங்களில் மேலதிக அநீதிகள் நிகழவுள்ளன. இந்த புலம்பெயர்ந்த குழந்தைகள் மீது திணிக்கப்படும் அதிர்ச்சி பல தலைமுறைகளுக்கு நீடிக்கும்.”

இந்த ஸில் கோட்டை, அமெரிக்க குடிமக்களும் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது issei என்றறியப்பட்ட முதல் தலைமுறை புலம்பெயர்ந்தவர்களும் உட்பட, சுமார் 700 ஜப்பானிய அமெரிக்கர்களை காவலில் வைத்துள்ளது. ஜப்பானிய தடுப்புமுகாமாக இருந்தபோது, ஸில் கோட்டை அங்கு கடுமையாக வீசும் காற்று மற்றும் அங்கு நிலவும் தாங்க முடியாத சூடான வெப்பநிலை ஆகியவற்றுக்கு பேர்போனது. ஜூலையில் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வரையிலான சராசரி வெப்பநிலை உயர்வுகள் அங்கு நிகழும்.

1942 மற்றும் 1946 ஆண்டுகளுக்கு இடையில், அமெரிக்க அரசாங்கம், நாடெங்கிலுமான தடுப்பு முகாம்களில் 120,000 பேரை விசாரணையின்றி காவலில் வைத்திருந்தது. தடுப்புக் காவல் என்பது ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் இன் பிப்ரவரி 12, 1942 நிறைவேற்று ஆணை 9066 இன் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


1943 இல் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறார்கள்

பாரிய தடுப்புக் காவல் என்பது Smith Act என்றும் அறியப்படுவதான Alien Registration Act 1940 இன் மூலம் சட்டரீதியாக “சட்டபூர்வமாக்க”ப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் ஜப்பானிய அமெரிக்கர்களை உள்ளடக்கிய வெகுஜன தடுப்புக் காவல் நடவடிக்கை தொடங்கப்பட்டது, இந்த சட்டம், 1941 மின்னியாபொலிஸ் தேசத்துரோக வழக்கு விசாரணையின் போது சோசலிச தொழிலாளர்கள் கட்சியின் 29 உறுப்பினர்கள் மீது வழக்கு தொடுப்பதற்கு முதலில் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க தலையீட்டை எதிர்த்த 18 ட்ரொட்ஸ்கிஸ்டுகளை மத்திய சிறையிலிடுவதற்கு தண்டனை விதிக்கப்பட்ட சமயத்தில் வெளியான நிறைவேற்று ஆணை 9066 க்கு முன்னர் எட்டு வாரங்களுக்கு குறைவான காலத்திற்குள் முடிந்துவிட்டது.

தடுப்புக் காவலின் போது அமெரிக்க இராணுவ சிறைக் காவலர்கள் பல கொலைகளை நடத்திய இடங்களில் ஸில் கோட்டையும் ஒன்றாகும். ஜப்பானிய அமெரிக்க தடுப்புக் காவல் குறித்த கலைக்களஞ்சியம் இவ்வாறு விவரிக்கிறது:

“மே 12, 1942 அன்று, ஹவாய் தீவைச் சேர்ந்த ஒரு முடிதிருத்துனரான கனேசபோரோ ஓஷிமா, பட்டப்பகல் நேரத்தில் வெளிப்புற முட்கம்பி வேலி மீது ஏறி, ‘நான் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்!’ என்று கத்தியபோது, ஒரு காவலர் எச்சரிக்கையொலி எழுப்பியவுடனே, மற்றொரு காவலர் ஒருவர், வேலியில் இருந்து இறங்குவதற்கு ஓஷிமாவுக்கு உதவுவதற்கு அவர்களை அனுமதிப்பதற்கும் முகாமிற்குள் அவரை திருப்பியனுப்புவதற்கும் வலியுறுத்திய அவரது நண்பர்களின் முன்னிலையில் அவரை சுட்டுக் கொன்றார். ஓஷிமா மனஉழைச்சலுக்கு உள்ளாகியிருந்தார் என்று அவரது நண்பர்கள் தெரிவித்தனர். குறைந்தபட்ச ஆதரவைக் கொண்டிருந்த அவரது மனைவி மற்றும் 12 குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு வருவதற்கு அவர் நிர்பந்திக்கப்பட்டிருந்தார்.

ஓஷிமாவின் இறுதிச் சடங்கில் “ஸில் கோட்டையின் அனைத்து ஜப்பானிய அமெரிக்கர்களும் கலந்து கொண்டனர். மேலும் அங்கு ஒரு எழுச்சி உருவாகலாம் என்று அஞ்சி, துக்கங்கொண்டவர்களை குறிவைக்கும் வகையில் இயந்திரத் துப்பாக்கிகளுடன் இராணுவ காவலர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.”

Life Behind Barbed Wird நூலில், ஒரு தடுப்புக் காவல் கைதி நினைவுகூரப்பட்டார், “அந்த இரவில் திரு ஓஷிமாவின் மரணம் விளைவித்த அதிர்ச்சியினால் அந்நாட்டையே சேர்ந்த உளவியல் பாதிப்புக்குள்ளான ஒரு கைதியும் இறந்துபோனார். அதனால் முகாம் இன்னும் கூடுதலான துக்கத்திற்கு ஆட்பட்டது.”


மான்ஸனார் தடுப்புக் காவல் முகாம், கலிபோர்னியா

ஜப்பானிய தடுப்புக் காவல் முகாம்களை “இடமாற்ற மையங்கள்” என்று முத்திரைகுத்திய அமெரிக்க இராணுவ போர் இடமாற்ற அதிகாரத்துவத்தின் முடிவு குறித்த ஒரு முரட்டுத்தனமான எதிரொலியாக, புதிய தடுப்புக் காவல் முகாம்களை “தற்காலிக அவசர உள்வருகைக்கான தங்குமிடம்,” என்று இராணுவம் அழைக்கிறது.

இரண்டாம் உலகப் போர் சமயத்திலான தடுப்புக் காவல் கைதிகளைப் போலல்லாமல், புதிய தடுப்புக் காவல் கைதிகள் அவர்களது பெற்றோர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதுடன் அடிப்படை பார்வையிடல் உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்படும். மேலும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அவர்களுக்கு கல்வி அல்லது பொழுதுபோக்கிற்கான வாய்ப்புக்களும் வழங்கப்பட மாட்டாது. ஜப்பானிய தடுப்புக் காவல் கைதிகள், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்ட அவர்களது நிலை குறித்த சலிப்பை குறைக்கும் விதமாக அவர்களது சொந்த பேஸ்பால் குழுக்களை பிரபலமாக ஒழுங்கமைத்தார்கள் என்றாலும், தற்போதைய தடுப்புக் காவல் முகாம்களில் புலம்பெயர்ந்த சிறார்கள் திறந்த வெளியில் கால்பந்து விளையாடுவதற்கு அனுமதியளிக்க ட்ரம்ப் நிர்வாகம் மறுத்துள்ளது.

இந்த முடிவு, ஜனநாயக உரிமைகள் அது எவ்வளவு அடிப்படையானதாக இருந்தாலும் அதனை ஜனநாயகக் கட்சியால் பாதுகாக்க முடியாது என்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 1993 இல், அப்போதைய ஜனாதிபதி பில் கிளின்டன் வெளியிட்ட ஒரு அறிக்கை, “இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய அமெரிக்கர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நியாயமற்ற வகையில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உங்களிடம் ஒரு நேர்மையான மன்னிப்பு கோரப்படுகிறது. கடந்த காலங்களில், தேசத்தின் நடவடிக்கைகள் இன முரண்பாடு, போர் வெறி, மற்றும் அரசியல் தலைமையின்மை ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றியிருந்தன என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.”

இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னர், இந்த அறிக்கைகளை வெளிப்படுத்தியமை அர்த்தமற்றது. பென்டகனின் அறிவிப்புக்கு ஜனநாயகக் கட்சி மவுனமாக பதிலிறுத்துள்ளது. ஜனநாயகக் கட்சியினர், முக்கியமாக ரஷ்யாவிற்கு எதிராக இயக்கப்படும், அவர்களது சொந்த போர் சார்பு வெறித்தனத்தால் இயக்கப்பட்டு வருகின்றனர். “தேசிய அவசரநிலை” குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த அறிவிப்பின் கீழ் புலம்பெயர்ந்த சிறார்களை தடுத்து வைப்பது, “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற இருகட்சி கொள்கையில் ஸ்திரமான தேசிய பாதுகாப்பு நிலை உருவாக்கப்பட்டதன் தர்க்கரீதியான விளைவாக உள்ளது.

அது, ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி பராக் ஒபாமா 2014 இல் ஸில் கோட்டையில் புலம்பெயர்ந்த சிறார்களை தற்காலிகமாக தடுத்து வைத்ததும், மேலும் முந்தைய அனைத்து ஜனாதிபதிகளும் நாடுகடத்திய புலம்பெயர்ந்தோர்களின் கூட்டு எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகளவிலான புலம்பெயர்ந்தோரை அவர் நாடுகடத்தினார் என்பதுமாகும். செய்தியாளர் நேரத்தில், ஜனநாயகக் கட்சி “சோசலிஸ்டுக்களான” அலெக்சாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸூம் மற்றும் பேர்னி சாண்டர்ஸூம் ஸில் கோட்டையில் புலம்பெயர்ந்த சிறார்களை தடுப்புக் காவலில் வைப்பது பற்றி எதையும் பேசவோ அல்லது ட்வீட் செய்யவோ இல்லை.

* * *

ஸில் கோட்டை தடுப்புக் காவல் முகாம்

தூங்கிக்கொண்டிருக்கும் எனது குழந்தைகளின் முகங்களை பார்த்துக் கொண்டே, என்னால் விடைபெற முடியவில்லை, அதை மறக்கவும் முடியவில்லை…, நிற்காமல் மழை பெய்து கொண்டிருந்த அந்த இரவில், இருண்ட சீற்றமிக்க சூழலில் நான் கைது செய்யப்பட்டேன்.

-   முய்ன் ஒஸாகி, ஸில் கோட்டை தடுப்புக் காவல் கைதி