ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

No to concentration camps in America!

அமெரிக்காவில் கொடூர தடுப்பு முகாம்கள் வேண்டாம்!

Eric London
26 June 2019

அமெரிக்க-மெக்சிகோ எல்லையை ஒட்டியும் மற்றும் அமெரிக்காவினுள் உள்ள புலம்பெயர்ந்தோருக்கான கொடூர தடுப்பு முகாம்களிலும், ட்ரம்ப் நிர்வாகம் மிகவும் இழிவார்ந்த மற்றும் வக்கிரமான குற்றங்களை நடத்தி வருகிறது, இவை அரசின் ஒவ்வொரு துறையையும், இரண்டு கட்சிகளையும் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தையும் அவமானகரமான அடையாளத்துடன் கறைபடுத்தி உள்ளன. உலகெங்கிலுமான மில்லியன் கணக்கானவர்கள் அமெரிக்க முதலாளித்துவத்தின் உள்மையமே அழுகிப் போயிருப்பதால் வெறுப்படைந்துள்ளனர்.

புலம்பெயர்ந்தவர்களின் ஆயிரக்கணக்கான குழந்தைகள் அடைக்கப்பட்டிருக்கும் தடுப்புக்காவல் மையங்களின் நிலைமைகள் குறித்த சமீபத்திய செய்திகள், பெற்றோர்கள் மற்றும் உறவினரின் கரங்களில் இருந்து பறித்து செல்லப்பட்ட அந்த குழுந்தைகளுக்கு எதிராக திட்டமிட்ட மனிதாபிமானமற்ற வன்முறையை அம்பலப்படுத்துகின்றன.

கடந்த வாரம் டெக்சாஸ் கொடூர தடுப்பு முகாம்களுக்கு விஜயம் செய்த ஒரு சிறுவர்மருத்துவ நிபுணர் டாக்டர் டொலி லூசியா சேவியர் ABC நியூஸ் இக்குக் கூறுகையில், அந்த சிறைச்சாலைகள் "சித்திரவதை கூடங்களை" ஒத்திருக்கின்றன என்றும், அந்த குழந்தைகள் "மிகக் கடுமையான குளிரையும், விளக்குகள் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருப்பதையும், போதுமானளவுக்ககு மருத்துவக் கவனிப்பு, அடிப்படை சுகாதாரம், நீர் அல்லது போதிய உணவு கிடைக்காததையும்" சகித்துக் கொண்டிருக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்றார்.

கடந்த வாரம் டெக்சாஸின் தடுப்புக்காவல் மையங்களுக்கு விஜயம் செய்த வழக்குரைஞர்களின் ஒரு குழு, அறை முழுவதும் அந்த குழந்தைகள் பல் துலப்பான்கள், சுத்திகரிப்பு துணிகள், தலையணைகள் அல்லது போதுமான நீரோ அல்லது உணவோ இல்லாமல் இருப்பதைக் கண்டார்கள்.

மழலைக் குழந்தைகளை வயது மூத்த குழந்தைகளே பார்த்துக் கொள்ள வேண்டுமென நிர்பந்தித்த பாதுகாவலர்கள், அந்த குழந்தைகள் அவர்களின் கைகளைக் கழுவவோ அல்லது குழந்தைகளின் போத்தில்களைக் கழுவவோ அனுமதிக்க மறுத்தனர். குழந்தைகள் அவர்கள் உணவருந்தும் இடத்திலேயே மலம் கழிக்கின்றனர், சவர்க்காரம் பெறுவதற்கும் அனுமதி இல்லை. இந்த நிலைமைகள் "வேண்டுமென்ற தெரிந்தே நோயைப் பரப்புவதற்கு ஒப்பானது,” என்று டாக்டர் சேவியர் தெரிவித்தார்.

குழந்தைகள் மீது பாதுகாவலர்கள் எரிந்து விழுவதையும், குழந்தைகள் ஒரு பேன் சீப்பைத் தொலைத்து விட்டார்கள் என்பதற்காக அவர்களின் படுக்கை விரிப்புகளை எடுத்துச் செல்வதையும் ஒரு வழக்கறிஞர் கண்டார். பாதுகாவலர்கள் புலம்பெயர்ந்தோர் தலையில் ஒரு கனமான உலோக டார்ச்லைட் கொண்டு அடிக்கையில் எழும் ஒலியின் காரணமாக, பாதுகாவலர்கள் புலம்பெயர்ந்தோரை "டாங்" (tonks) என்று குறிப்பிடுவதாக ஒரு சமீபத்திய சட்டவழக்கு வெளிப்படுத்தியது. தெற்கு டெக்சாஸில் வசிக்கும் குடியிருப்போர் அக்கறையோடு சுத்திகரிப்பு துணிகள், சவர்க்காரம் மற்றும் பொம்மைகளாக வழங்கும் நன்கொடைகளையும் தெற்கு டெக்சாஸ் ஏஜென்ட்டுகள் திருப்பி அனுப்பி விடுகின்றனர். சமீபத்திய மாதங்களில் காவலில் ஆறு குழந்தைகள் இறந்துள்ளன.

புலம்பெயர்ந்தவர்கள் மீதான அரசாங்கத்தினது போரால் சமீபத்தில் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் 25 வயதான தந்தை ஒஸ்கார் ஆல்பேர்ட்டோ மார்ட்டினேஸ் ரமிரேஸ் உம் மற்றும் அவர் மகள் வலேரியா உம் ஆவார்கள், இவர் பிறந்து 23 மாதங்களே ஆகியிருந்த நிலையில் அவ்விருவரும் ரியோ கிராண்டே நதியில் மூழ்கி இறந்தனர், அந்த கொடூரத்தை அக்குழந்தையின் தாய் தானியா வனேசா கரையிலிருந்து உதவ வழியின்றி பார்க்க நேர்ந்தது.

அக்குடும்பத்தின் சொந்த ஊரான எல் சால்வடோரில் இருந்து தஞ்சம் கோரி விண்ணப்பிப்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் அவர்களுக்கு தடை விதித்ததும், அவர்கள் டெக்சாஸ் பிரௌன்ஸ்வில் இக்கும் மெக்சிகோவின் Tamaulipas இல் மத்தாமோரொஸிற்கும் இடையே நுழைவு துறைமுகத்தில் அந்த ஆற்றைக் கடக்க முடிவெடுத்தனர்.

ஆஸ்கார் மற்றும் வலெரியாவின் சடலங்களைக் காட்டும் புகைப்படங்கள் Harriet Beecher Stowe இன் 1852 நாவலான Uncle Tom’s Cabin இல் வரும் வரிகளை நினைவூட்டுகின்றன, அதில் அடிமைகளைப் பிடிப்பவர்களிடம் இருந்து தப்பியோடி வரும் ஓர் அடிமையான எலிசா அவர் உடம்போடு தன் குழந்தையைக் கட்டிப்பிடித்தவாறு ஓஹியோ ஆற்றைக் கடந்து, சுதந்திரமடைவதற்காகவும் மிதந்து கொண்டிருக்கும் ஐஸ் கட்டிகளுக்கு இடையே தாவி தாவி வருகிறார்:

பெரும் அழுகையோடு பிரயத்தனப்பட்ட சக்தியோடு அவள் ஒரு மிதவை கட்டியிலிருந்து மற்றொன்று மற்றொன்றுக்கு என்று தாவினாள்; தடுமாறுவதும்—தாவுவதும்—தவறி விழுவதும்—வளைந்தும் நெளிந்தும் முன்னோக்கி சென்றாள்! அவள் காலணிகள் கழன்று விழுந்து விட்டன—அவளின் காலணி உறைகளும் பாதத்திலிருந்து கிழிந்திருந்தது—அதனால் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும் இரத்தக் கறையைக் காட்டியது...

19 ஆம் நூற்றாண்டில் வேறெந்த நாவலைக் காட்டிலும் Uncle Tom’s Cabin இன் பிரதிகள் அதிகமாக விற்பனையாயின, அந்நாடு அடிமைத்தனத்தின் கொடூரங்களைப் பற்றி என்ன படித்ததோ அதைக் கொண்டு அது மாற்றிக் கொண்டது. அந்த “விசித்திர அமைப்பைத்" தாங்கிப் பிடிக்க பொறுப்பேற்றிருந்த குற்றங்களுக்கு எதிரான எதிர்ப்பு சமூக சக்தியை உருவாக்கியது. இது உள்நாட்டு போரில் அடிமை அமைப்புமுறை மீது இராணுவ வெற்றி மூலமாக அடிமைத்தனத்தை புரட்சிகரமானரீதியில் தூக்கியெறிய எரியூட்டியது. ஆப்ரகாம் லிங்கன் வார்த்தைகளில் கூறுவதானால், “சவுக்கிலிருந்து சிந்தப்பட்ட இரத்தத்திற்கு மற்றவரால் வாள் வீச்சினால் விலை செலுத்த வேண்டியிருக்கும்.

அமெரிக்கர்கள் அவர்கள் நாட்டில் உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்த போது எந்தளவுக்கு அதிர்ந்தார்களோ, அதேயளவுக்கு எல்லையில் நடக்கும் மரண செய்திகளும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் குழந்தைகள் மீதான காட்டுமிராண்டித்தனமும் அவர்களை அதிர்ச்சிக்குட்படுத்தியது. அந்த செய்திகள் மீதான மக்கள் கோபத்தினால், நேற்று சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத்துறைக்கான (CBP) தற்காலி ஆணையர் ஜோன் சாண்டர்ஸ் எதிர்பாராத விதமாக பதவி விலக நிர்பந்திக்கப்பட்டார். இவ்வாறிருப்பினும் CBP நேற்று சற்றும் வளைந்து கொடுக்காமல் நூற்றுக் கணக்கான குழந்தைகளை டெக்சாஸ் க்ளிண்டில் உள்ள மிகவும் இழிவார்ந்த மையங்களுக்குத் திரும்ப அனுப்பியது.


ஆஸ்கார் அல்பர்டோ மார்டினேஸ் ரமிரெஸ் மற்றும் வலெரியா, ரியோ கிராண்டில் உயிரிழந்து கிடக்கின்றனர் [படம்: ஜூலியா லு டுக்]

இதுபோன்ற குற்றங்களுக்கு வழிவகுப்பதில் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகமும் உடந்தையாய் இருப்பதைச் சம்பவங்களே எடுத்துக்காட்டுவதுடன், புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதலை நியாயப்படுத்த இருகட்சிகளும் பயன்படுத்தும் பொய்களின் வலைப்பின்னலையும் அம்பலப்படுத்துகின்றன. அமெரிக்காவில் அங்கே "குழந்தைகளுக்கான கொடூர தடுப்பு முகாம்கள்" எதுவும் இல்லை, “சட்டவிரோதமான ஆதரவற்ற பருவ வயதடையாதவர்களுக்கான" “மறுவாழ்வு மையங்கள்" மட்டுமே உள்ளன என்று கூறுவதில், NBC இன் Chuck Todd குடியரசு கட்சியின் காங்கிரஸ் சபை பெண்மணி Liz Cheney போன்ற அதிதீவிர பிற்போக்குவாதிகளுடன் இணைந்தார்.

குடியேற்றம் மற்றும் சுங்க அமுலாக்கத்துறை (ICE) மற்றும் CBP க்கு போதுமானளவுக்கு விரைவாக பணத்தை ஒப்படைக்காததற்காக நியூ யோர்க் டைம்ஸூம் வாஷிங்டன் போஸ்டும் ஜனநாயக கட்சியினரை தாக்கி தலையங்கங்கள் பிரசுரித்தன. பிரதிநிதிகள் சபையின் சில ஜனநாயக கட்சியினர் “#NotOneDollar மற்றும் #CloseTheCamps குறிப்பு வாசகங்களைப் பயன்படுத்தியதற்காகவும்" மற்றும் அந்த சட்டமசோதா "நிர்வாகத்தின் புலம்பெயர்வு மற்றும் தடுப்புக்காவல் கொள்கைகளை முன்னெடுக்க உதவும்" என்று நினைப்பதற்காகவும், “அதுபோன்ற சிந்தனை பொறுப்பற்றது,” என்றும் போஸ்ட் அவர்களைத் திங்களன்று குறிப்பிட்டு கண்டித்தது.

அமெரிக்க கெஸ்டாபோவுக்கு நிதி வழங்குவதிலும் மற்றும் ஒடுக்குமுறைக்கு உதவுவதிலும் ஜனநாயக கட்சி ட்ரம்ப் நிர்வாகத்துடன் ஒத்துழைத்து வருகிறது. வேறெதையும் விட அதிகமாக, ஜனநாயக கட்சியினர் புலம்பெயர்ந்தவர்கள் மீதான பாசிசவாத மூர்க்கத்தனத்திற்கு மக்களிடையே அதிகரித்து வரும் அதிகரிப்பு பாரிய போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் பள்ளிக்கூட வெளிநடப்புகளின் வடிவில் வெடிக்குமோ என்று அஞ்சுகின்றனர்.

அடிமட்டத்திலிருந்து இந்த எதிர்ப்பு பற்றிய அச்சம் தான், ஆயிரக் கணக்கான புலம்பெயர்ந்தவர்களைச் சுற்றி வளைக்க 10 நகரங்களில் பாரிய இராணுவ-பாணியிலான வேட்டையாடல்களுக்கான திட்டங்களைத் தள்ளிப்போட செய்வதற்காக ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள் சபை அவைத்தலைவர் நான்சி பெலோசியை ட்ரம்பிடம் கடந்த வாரம் மன்றாட செய்தது. சனிக்கிழமை, திட்டமிட்ட அந்த சுத்திகரிப்புக்கு சில மணி நேரங்களுக்குள், ட்ரம்ப் அந்த சோதனை நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைத்ததார், மேலும் தஞ்சம் கோருவதற்கான உரிமையை மட்டுப்படுத்தும் மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத எந்திரத்திற்கு நிதி வழங்கும் சட்டமசோதாவை ஜனநாயக கட்சியினர் நிறைவேற்ற வேண்டுமென கோரினார்.

உடனடியாக அலெக்சாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் போன்ற "முற்போக்கு" ஜனநாயக கட்சியினர் ICE மற்றும் CBP இக்கு கூடுதல் நிதி வழங்குவதற்கு எந்தவிதமான நிஜமான எதிர்ப்பையும் கைவிட்டனர். பெலோசி உடனான மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின்னர், “பெலோசியின் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த ஒக்காசியோ-கோர்டெஸ் அந்த விவாதங்களை 'நிஜமாகவே சிக்கலான சூழ்நிலை... அது கடுமையான இரண்டும்கெட்டான் நிலை' என்பதாக விவரித்தார்,” என்று The Hill குறிப்பிட்டது.

The Hill விவரித்தது, “பிரதிநிதிகள் சபையின் நிதி ஒதுக்கீட்டுக் குழு வெள்ளியன்று வெளியிட்ட எல்லையோர உதவி தொகையை அவர் எதிர்ப்பதாக கூறியவாறு ஒக்காசியோ-கோர்டெஸ் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் ஜனநாயக கட்சி தலைவர்களுடன் அக்கூட்டத்திலிருந்து வெளியே வந்த போது, அது சாத்தியம் தான் செய்யப்படும் மாற்றங்களைச் சார்ந்து அதற்கு அவர் வாக்களிக்க இருப்பதாக தெரிவித்தார்.”

இறுதியில், அவரும் அவருடன் இருந்த “முற்போக்காளர்களான” Ilhan Omar, Ayanna Pressley மற்றும் Rashida Tlaib அனைவரும் எரிச்சலூட்டும் விதமாக அந்த சட்டமசோதாவை கொண்டுவருவது மீது “வேண்டாம்” என்ற அடையாள வாக்களிப்பதற்கு முன்னதாக, அந்த வெறுக்கத்தக்க நடவடிக்கையை சபையில் ஒரு வாக்கெடுப்புக்குக் கொண்டு வர வாக்களித்து, அது நிறைவேறுவதை உறுதி செய்தனர்.

மனிதாபிமானத்துடனோ அல்லது நிதி இல்லாததால் தான் அவர்கள் புலம்பெயர்ந்தவர்களை முறையின்றி கையாள்கிறார்கள் என்பதுடனோ ட்ரம்ப் மற்றும் அமெரிக்க கெஸ்டாபோவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று யாரொருவரும் நம்புகின்ற நிலையில், பெலோசியும் ஏனைய ஜனநாயக கட்சியினரும் "மனிதாபிமான" காரணங்களுக்காக நிதி அவசியமென்று வாதிடுகின்றனர். ட்ரம்ப் கோரிய 4.5 பில்லியன் டாலரை அவர் கரங்களில் ஒப்படைக்க வாக்களித்ததன் மூலமாக, ஜனநாயக கட்சியினர் இன்னும் ஆயிரக் கணக்கானவர்களைக் கைது செய்வதற்கான வழங்களை ட்ரம்ப் நிர்வாகத்திற்கு வழங்கி உள்ளனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான அவசர போராட்டத்தை, ஒக்காசியோ-கோர்டெஸ் மற்றும் அவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவரோ அந்த DSA அமைப்பையும் (அமெரிக்காவின் ஜனநாயக சோசலிசவாதிகள் அமைப்பு) போன்ற பரிதாபகரமான போலி சக்திகளிடம் ஒப்படைக்க முடியாது. DSA அமைப்பினர் எதை மெக்சிக்கன் ஜனாதிபதி ஆன்ட்ரே மானுவெல் லோப்பேஸ் ஒபரடோர் இன் "முற்போக்குத் திட்டநிரல்" என்று அழைக்கிறார்களோ அதற்கு ஆதரவாக, மே 26 இல், அவர் மீது அவர்கள் பாராட்டு மழை பொழிந்தனர்.

யதார்த்தத்தில், AMLO அமெரிக்காவுக்குள் நுழைவதில் இருந்து புலம்பெயர்வோரைத் தடுக்க பயிற்சி அளிக்கப்பட்ட 15,000 தேசிய பாதுகாவலர்களை மெக்சிகோவின் வடக்கு எல்லையில் நிலைநிறுத்தியும் மற்றும் 6,000 நபர்களை தெற்கு எல்லையில் நிலைநிறுத்ததியும், மத்திய அமெரிக்க புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதலில் AMLO ட்ரம்பின் எடுபிடியாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். வாரயிறுதி வாக்கில், AMLO இன் தேசிய பாதுகாப்புப்படை 19 வயதான சால்வடோரிய புலம்பெயர்ந்த ஒருவரை மெக்சிக்கோவின் வெராக்ரூஸ் மாநிலத்தில் தலையில் சுட்டுக் கொன்றது. அமெரிக்க எல்லைக்கு அருகே Ciudad Juarez இல் ஒரு தாயிடம் இருந்து குழந்தையைப் பறிப்பதை பாதுகாவலர்கள் புகைப்படமும் எடுத்திருந்தனர்.

புலம்பெயர்ந்தவர்கள் மீதான ஆளும் வர்க்க தாக்குதலின் அதிகரித்துவரும் வன்முறை தன்மை எல்லா தொழிலாளர்களுக்கும் ஓர் எச்சரிக்கையாகும். ட்ரம்ப், பாரியளவிலும் கூட, இன்னும் பெரியளவில் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய, குறிப்பாக ICE மற்றும் CBP இக்குள், பாசிசவாத கூறுபாடுகளுக்கு முறையிட்டு வருகிறார். ஜனநாயக கட்சியின் மவுன ஒப்புதலுடன், ட்ரம்ப் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் அவலநிலையின் மட்டங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பலிக்கடா ஆக்குவதன் மூலமாக அவர் நிர்வாகத்தின் நாசகரமான பெருநிறுவன-சார்பு கொள்கைகளில் இருந்து தொழிலாளர்களைத் திசைத்திருப்ப கருதுகிறார்.

புலம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பு மீதான உடனடியான இந்த அச்சுறுத்தலுக்கு தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவது அவசியமாகும். புலம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பிற்காகவும் மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் தொழிலாளர்களும் மாணவர்களும் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டுமென சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

புலம்பெயர்ந்தோரைப் பாதுகாக்க தொழிலாள வர்க்க குடியிருப்பு பகுதிகளிலும், பள்ளிகள் மற்றும் வேலையிடங்களிலும் பாதுகாப்பு குழுக்களை உருவாக்குமாறும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இருகட்சி தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுமாறும் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அழைப்பு விடுக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் நடந்த மிக மோசமான குற்றங்கள் மீண்டுமொருமுறை நடக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. நடவடிக்கை எடுக்க தவறுபவர்களுக்கு வரலாறு தண்டனையை வழங்கும்.