ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US-British relations hit bottom following ambassador’s leaked Trump criticism

ட்ரம்ப் மீதான தூதரின் விமர்சனம் கசியவிடப்பட்டத்தைத் தொடர்ந்து அமெரிக்க-பிரிட்டன் உறவுகள் அடிமட்டத்தை அடைந்தன

By Chris Marsden
10 July 2019

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதரின் கடுமையான விமர்சனங்கள் கசியவிடப்பட்ட பின்னர், ஆளும் வட்டாரங்களின் அவரின் தலையை உருட்டுவதற்கான உள்மோதல்கள் ஆரம்பித்துள்ளன.

சேர் கிம் டார்ரோச்சின் இரகசிய இராஜாங்க ஆவணங்களும் மற்றும் பிரதம மந்திரி தெரெசா மே இக்கு அவர் அனுப்பிய குறிப்புரைகளும், Mail on Sunday இன் மிகவும் வெறித்தனமாக பிரெக்ஸிட்டை ஆதரிக்கும் பத்திரிகையாளர் Isabel Oakeshott இக்கு வழங்கப்பட்டன.

டார்ரோச், ட்ரம்பை "'பொருத்தமற்றவர்,' 'ஸ்திரத்தன்மையற்றவர்,' 'செயல் திறமையற்றவர்'” என்று குறிப்பிட்டிருந்ததுடன், “... வெள்ளை மாளிகை 'உதாரணம் காட்டக்கூடியவகையில் செயல்படாததாக’ உள்ளது என்றும், ஜனாதிபதியின் தொழில்வாழ்வு 'வெட்கக்கேடாக' நிறைவடையும் என்றும் இலண்டனை எச்சரித்து" எழுதியிருந்தார்.

ட்ரம்பின் வெள்ளை மாளிகைக்குள் நடக்கும் மோதல்களை அவர் "கத்திச்சண்டை" என்று வர்ணித்ததுடன், ட்ரம்ப் "நேர்மையற்ற ரஷ்யர்களுக்கு" கடன்பட்டிருக்கலாம் என்றும், அவரின் "பொருளாதார கொள்கைகள் உலக வர்த்தக அமைப்புமுறையை அழித்துவிடும்,” என்றும், அவரின் ஜனாதிபதி பதவிக்காலம் "முறிந்து எரிந்து" போகும் என்றும், “வெட்கக்கேடான மற்றும் கீழ் நிலைக்கு இட்டுச் செல்லும் ... ஒரு கீழிறக்க சுழற்சியின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம்" என்றும் எச்சரித்தார்.

“ட்ரம்ப் இப்போதும் ஈரானைத் தாக்கக்கூடும் என்ற அச்சங்களை" வெளியிட்ட டார்ரோச், “இந்த நிர்வாகம் அடிப்படையில் வழமையானதாக ஆகிவிடும்; செயற்படாததன்மை குறைந்தளவிலானதாகிவிடும்; கணிக்கவியலாத தன்மை குறைந்துவிடும்; கன்னைப் பிளவுகள் குறைந்துவிடும்; இராஜாங்கரீதியில் அலங்கோலமாக இருப்பதும், பொருத்தமற்றத்தன்மையும் குறைந்துவிடும் என்று உண்மையில் நாங்கள் நம்பவில்லை" என்று எச்சரித்தார். இது ஒருபுறம் இருந்தாலும், அவர் எழுதுகையில், ட்ரம்ப் "The Terminator படத்தின் இறுதி காட்சிகளில் ஸ்வார்ஸனேக்கர் (Schwarzenegger) போல, தாக்கப்பட்டாலும் பாதிப்பேதுமின்றி நெருப்பில் இருந்து மீண்டெழக்கூடும்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஜூன் மாதம் பிரிட்டனுக்கான அவரின் அரசு விஜயத்தின் போது அரச உபச்சாரம் மற்றும் பகட்டாரவாரங்களால் ட்ரம்ப் "கண்கூசவைக்கப்பட்டிருந்தாலும்", வெள்ளை மாளிகையில் "இன்னமும் அமெரிக்கா முதலில் என்பதுதான்" குறிக்கோளாக இருக்கிறது என்று டார்ரோச் நிறைவு செய்திருந்தார்.

ஏறத்தாழ ஜூன் 2017 இல் இருந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர் மார்க் செட்வில்லுக்கு "கடும் கட்டுப்பாட்டுடன் மட்டுப்படுத்தப்பட்டு" அனுப்பப்பட்ட ஒரு கடிதம் உட்பட இரகசிய இராஜாங்க கடிதங்களில் இந்த கூற்றுகள் இடம் பெற்றுள்ளன. ஈரானை நோக்கிய அமெரிக்க கொள்கை "பொருத்தமற்றது, குழப்பமானது" மற்றும் "வரவிருக்கும் எந்த நாட்களிலும் அதிக பொருத்தமானதாக ஆக" முடியாதது. இதுவொரு பிளவுபட்ட நிர்வாகம்,” என்ற இந்தாண்டு ஜூன் 22 இன் டார்ரோச் மதிப்பீடும் மேற்கோளிடப்பட்டது.

மற்றொரு கசிவு, பிரெக்ஸிட் மீதான எதிர்கால "அணுகுமுறை விரிசல்களை" எச்சரிக்கிறது. Oakeshott கருத்துரைக்கிறார், “பிரெக்ஸிட் பல உயர் அதிகாரிகளை அரசியல்மயப்படுத்தி இருப்பதற்கான ஆதாரம் அதிகரித்து வருகிறது, அத்துடன் பிரெக்ஸிட்டை தனிப்பட்டரீதியில் ஆதரிக்கும் அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை, உள்துறை நிர்வாக சேவை தடுக்க முயன்று வருவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.” டார்ரோச் "பரந்தளவில் யூரோ-சார்பானவராக கருதப்படுகிறார்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொள்கிறார்.

ட்ரம்பின் விடையிறுப்பு அனுமானிக்கத்தக்கதாகவே இருந்தது, டார்ரோச்சுக்கு எதிராக விளாசியதைப் போலவே அந்த ஜனாதிபதி அதேயளவுக்கு மேயையும் விளாசினார். “பிரிட்டனை அமெரிக்காவின் கீழ் திணித்த அந்த நிலைகுழம்பிய தூதர் எங்களைத் திகிலடைய செய்த ஒருவரல்ல, அவர் மிகவும் முட்டாள்தனமானவர்,” என்று ட்வீட் செய்தார். “அவர், அவர்களின் தோல்வியடைந்த பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைக் குறித்து, அவர் நாட்டுடனும், பிரதம மந்திரி மே உடனும் பேசட்டும். அது எந்தளவு மோசமாக கையாளப்பட்டது என்று என் மீது விமர்சிப்பதன் மூலமாக நிலைகுலைய வேண்டியதில்லை.

“அந்த உடன்படிக்கையை எவ்வாறு செய்வதென அப்பெண்மணிக்கு நான் கூறினேன், ஆனால் அவர் அவரின் சொந்த முட்டாள்தனமான வழியில் சென்றார்—அதை செய்து முடிக்க முடியாமல் போனது. ஒரு தோல்வி!”

இந்த எதிர்விளைவை முகங்கொடுத்து, “அந்த தூதர் பதவியில் நீடிப்பார், அவர் பிரதம மந்தரியின் முழு ஆதரவுடன் அவர் கடமைகளைத் தொடர்ந்து செய்வார்,” என்று குறிப்பிட்டு நம்பர் 10 இல் இருந்து வரும் உத்தியோகப்பூர்வ அறிக்கைகள், நம்பிக்கையளிப்பனவாக இல்லை.

டார்ரோச்சுக்கு மே இன் "முழு ஆதரவு" குறுகிய கால காலாவதி தேதியைக் கொண்டுள்ளது, இருவருமே ஓய்வூ பெறும் விளிம்பில் உள்ளனர்—மேயைப் பொறுத்த வரையில் ஏறத்தாழ ஜூலை 23 இக்கு முன்னதாக இருக்கும். ஆனால் டார்ரோச் அதற்கு முன்னரே தியாகம் செய்ய வேண்டியிருக்கலாம், அதுவும் அவரின் பார்வைகளை ஆமோதித்து, அரசுக்கு நேர்மையாக ஆலோசனை வழங்குவதில் அவர் வேலையை செய்ததற்காக அவரை பாதுகாக்கின்ற உயர்மட்ட உள்துறை நிர்வாக அதிகாரிகள் மற்றும் இராஜாங்க அதிகாரிகளின் கோபத்திற்கு உள்ளாகும் அபாயத்துடனே கூட இது நடக்கலாம்.

டார்ரோச் பதவிகாலம் இந்தாண்டு இறுதியுடன் முடிய உள்ளது. ஆனால் ட்ரம்ப் ஏற்கனவே கட்டார் அரசருக்கான அரசு இரவு விருந்தில் அவருக்கான அழைப்பைத் திரும்ப பெற்றுள்ளார். நேற்றைய போது, டார்ரோச் "மூத்த வெள்ளை மாளிகை ஆலோசகர்" இவான்கா ட்ரம்ப் உடனான ஒரு திட்டமிட்ட சந்திப்பைத் தவிர்த்திருந்தார். சர்வதேச வர்த்தகத்திற்கான பிரிட்டனின் அரசு செயலர் மட்டுமே ட்ரம்ப் மகளின் முன்னால் பரிதாபகரமாக நின்றிருந்தார், “எமது அல்லது அமெரிக்காவினது அணுகுமுறைகள் குறித்த எதிர்பார்ப்புகளை சரியாக எங்களின் உள்துறை நிர்வாக சேவை அல்லது எங்களின் அரசியல் தரப்பு கூறுபாடுகள் அணுகவில்லை என்பதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.” இந்த குறிப்பிட்ட விடயத்தில் மிகவும் அசாதாரணரீதியில் மற்றும் ஏற்றுக்கொள்ளவியலாத விதத்தில் அவர்கள் தவறாக நடந்திருக்கின்றார்கள், என்றவர் பிபிசி க்கு தெரிவித்தார்.

பிரெக்ஸிட் சம்பந்தமாக மே மீதான ட்ரம்பின் தாக்குதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவுக்கு சமீபத்திய பரந்த ஆதரவாகவும் மற்றும் அவரை அடுத்து வரக்கூடியவராக உள்ள போரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக அரசியல்ரீதியில் தலையிடுவதாகவும் உள்ளது. நேற்று, ஜோன்சன் அவரின் "வெள்ளை மாளிகை" மற்றும் "நமது மிக முக்கிய கூட்டாளி உடனான நல்லுறவை" பெருமைப்பீற்றினார். அமெரிக்கா, நமது முதல்தர அரசியல் இராணுவ நண்பராக இருந்துள்ளது, இருக்கும், காணக்கூடிய எதிர்காலத்திலும் இருக்கும்" என்றார்.

பிரெக்ஸிட் சம்பந்தமாக மே மீதான ட்ரம்பின் விமர்சனம் குறித்து வினவிய போது, அவர் இதையும் சேர்த்துக் கொண்டார், “நானே கூட, இதுவரையில் பிரெக்ஸிட் பேரம்பேசல்கள் மீது சற்று விமர்சனப்பூர்வமாக சில விடயங்களைக் கூறியுள்ளேன், அந்த காரணங்களில் ஒன்றின் காரணமாக தான் இன்றிரவு இங்கே நின்று கொண்டிருக்கிறேன், அந்த காரணங்களில் ஒன்றின் காரணமாக தான் என்னை நானே முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறேன்.” "ஐரோப்பிய ஒன்றிய பேரம்பேசல்களை நோக்கிய நமது அணுகுமுறையில் இந்தளவுக்கு தோல்வியடைவதை நிறுத்தி, அதை கொண்டு என்ன செய்ய முடியுமோ நமது நாட்டிற்கு இன்னும் அதிக நேர்மறையானதை" அவரால் செய்ய முடியுமாம்.

எதிர்கால அமெரிக்க தூதராக ஆகக்கூடியவராக ட்ரம்பால் விவாதிக்கப்பட்ட பிரெக்ஸிட் கட்சி தலைவரும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கையை எவ்வாறு கையாள்வது என்பதன் மீது எதிர்கால பழமைவாத தலைவருக்கான ஒரு ஆலோசகருமான நைஜல் ஃபாராஜ் இன்னமும் தெளிவாக இருந்தார். அவர் பிபிசி இக்குத் தெரிவித்தார், “நமது உள்நாட்டு நிர்வாக சேவை, நமது வெளியுறவுத்துறை அலுவலகம்" இவற்றில் ட்ரம்ப்-விரோத ஆட்களைச் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது மற்றும் ஒரு புதிய அமெரிக்க தூதர் "ஓய்வூபெற்ற வணிக பிரமுகராக, அல்லது அதுபோன்ற ஒருவராக" இருக்க வேண்டும்,” என்றார்.

“அவரின் வார்த்தைகளைக் கொண்டு போரிஸை எடுத்துக் கொண்டால், கிம் டார்ரோச் போன்றவர்கள் சுற்றி இருக்கவே முடியாது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஜோன்சனின் டோரி தலைமை போட்டியாளர், வெளியுறவுத்துறை செயலர் ஜெர்மி ஹன்ட் டார்ரோச்சின் கருத்துக்களுடன் அவரின் உடன்பாடின்மையை வெளிப்படுத்த விடப்பட்டார், அதேவேளையில் இராஜாங்க அதிகாரிகள் "தங்களின் ... வெளிப்படையான கண்ணோட்டங்களை வெளியிட முடியும் என்று உணர்கிறார்கள்" என்பது மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தினார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருக்கலாம் என்பதை ஆதரிக்கும் கார்டியன் பத்திரிகை இந்த பிரெக்ஸிட்-ஆதரவு சூழ்ச்சியால் நம்பிக்கை இழந்துள்ளது. இராஜாங்கத்துறை ஆசிரியர் பாட்ரிக் விண்ட்டோர் தேசியவாத துருப்புச்சீட்டைக் கொண்டு விளையாடும் அளவுக்குச் சுருங்கி போனார், “ஜோன்சனின் மேலுயர்வை ட்ரம்ப் மிகவும் புகழ்பாடுகிறார் என்றால், அவர் பிரதம மந்திரியாக அல்ல, மாறாக 51 ஆம் மாநில ஆளுநராக சித்தரிக்கப்படுவதைக் காண்கிறார் என்பது தான் ஜோன்சனில் நிலவும் அபாயம். ட்ரம்புக்குப் பணிவது தான் பிரெக்ஸிட் இன் விளைவு என்றால், அதுவொரு நல்ல பார்வை அல்ல, இதில் தேசப்பற்றுமிக்க வர்க்கங்கள் அடிமை ஊழியத்தைப் புரூசெல்ஸிற்குப் பதிலாக வாஷிங்டனுக்கு மாற்றுவதை தேசிய சுதந்திரமாக பார்க்காது என்பதும் உள்ளடங்கும்,” என்றவர் எச்சரித்தார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய வீழ்ச்சி நிஜமானது என்பதோடு, சாத்தியமான எஜமானர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு வாய்ப்பு என்று Wintour சித்தரிக்கும் பிரெக்ஸிட் இக்குப் பிந்தைய நெருக்கடியில் அது கூர்மையாக வெளிப்படுகிறது. ஆனால் இன்னும் அதிக அபாயகரமான அபிவிருத்தி பிரிட்டன் நெருக்கடியின் இதயதானத்தில் உள்ளது—அதாவது அது ஒட்டுமொத்த உலகையும் வர்த்தகப் போர் மற்றும் இராணுவ மோதலில் மூழ்கடிக்க அச்சுறுத்தும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான விரோதங்களின் வளர்ச்சியாகும்.

தற்போது தொழிலாள வர்க்கம் இந்த அதிகரித்து வரும் அபாயத்திற்கு ஓர் அரசியல் விடையிறுப்பு வழங்குவதில் இருந்து தொழிற்கட்சியால் தடுக்கப்பட்டுள்ளது, இது பிரெக்ஸிட் விவகாரத்தில் டோரி கட்சியின் அதே தொனியை ஒட்டி பிளவுபட்டுள்ளது.

அமெரிக்க-பிரிட்டன் நெருக்கடிகள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் மேலோங்கி இருந்தாலும், அடுத்த டோரி தலைவர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை வெளியே எடுக்கும் முன்னதாக இரண்டாவது கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரி, தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் மீண்டும் அவரின் பிளேயரிச பிரிவையும் தொழிற்சங்க நிர்வாகிகளையும் சமாதானப்படுத்த முயன்றார். “உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட் அல்லது சேதாரமான டோரி பிரெக்ஸிட்” என்பது வேலைகள் மற்றும் சேவைகளைப் பாதுகாக்காது என்பதால் அதை தடுக்க இதிலேயே தங்கியிருக்கலாம் என்பதை தொழிற் கட்சி பிரச்சாரம் செய்யும் என்றவர் சூளுரைத்தார்.

எவ்வாறிருப்பினும் தொழிற் கட்சி ஒரு பொதுத் தேர்தலை வென்றால் அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதையோ, பிரெக்ஸிட் பேரம்பேசல்களுக்குப் பொறுப்பேற்குமா என்பதையோ குறித்து கோர்பின் ஒன்றும் கூறவில்லை. பிளேயரிசவாதிகள் ஐயத்திற்கிடமின்றி தொடர்ந்தும் தங்கியிருக்கலாம் என்ற நிலைப்பாட்டை விரும்புகிறார்கள் என்பதோடு கட்சியின் இடதுகள் எனப்படுவோரினை சுத்தப்படுத்தி கட்சியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர விரும்புகிறார்கள் என்பதால் இந்த நிலைப்பாடு அங்கே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.

முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியைச் சாதகமாக கைப்பற்றி பிளவுபட்ட மற்றும் வெறுக்கப்படும் டோரி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்க தொழிலாள வர்க்கத்திற்கு எந்தவொரு அழைப்பும் விடுப்பதற்கு கோர்பின் முற்றிலும் விரோதமாக இருக்கிறார் என்பதே மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டப்படுகிறது.

இதை மாற்றுவது என்பது தொழிலாளர்களும் இளைஞர்களும் தொழிற்கட்சியிலிருந்து முறித்து கொண்டு, வாஷிங்டன் மற்றும் பென்டகனுடன் ஒரு கூட்டணி, அல்லது சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாதம் மீது கட்டமைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக அணியிலேயே தங்கியிருக்கும் பொய்யான மாற்றீடு என இவ்விரு பிரெக்ஸிட் தேசியவாத திட்டநிரலையும் நிராகரிப்பதை அர்த்தப்படுத்துகிறது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தங்களின் வர்க்க சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து பிரிட்டனில் தொழிலாளர்களது சோசலிசத்திற்கான ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தை இது கோருகிறது.