ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Socialist Equality Party to stand in UK general election: No to austerity, militarism and war! Free Julian Assange! For class struggle and socialist internationalism!

சோசலிச சமத்துவக் கட்சி பிரிட்டிஷ் பொது தேர்தலில் போட்டியிடுகின்றது: சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் போர் வேண்டாம்! ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்! வர்க்க போராட்டத்திற்காக மற்றும் சோசலிச சர்வதேசியவாதத்திற்காக!

Socialist Equality Party (UK)
6 November 2019

சோசலிச சமத்துவக் கட்சி (SEP), சிக்கன நடவடிக்கைகள், எதேச்சதிகார ஆட்சி, இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தைத் தொடுக்க பிரிட்டன் பொது தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.

இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய பிரிட்டன் வரலாற்றிலேயே, இந்த டிசம்பர் 12 தேர்தல் தான் சமூகரீதியிலும் அரசியல்ரீதியிலும் மிகவும் துருவமுனைப்பட்ட தேர்தலாக அமைந்துள்ளது.

பிரெக்ஸிட்டால் உருவாகிய முதலாளித்துவ ஆட்சியின் ஆழ்ந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைத்தான் ஆளும் வர்க்கத்தின் போட்டியிடும் கன்னைகள் பணயத்தில் வைத்துள்ளன. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் பொறுத்த வரையில், பிரெக்ஸிட் மீது பிளவுபட்ட சதிக்கூட்டங்கள் வளர்க்கப்பட்டு வருவதற்கு மத்தியில், தீர்க்கமான சமூகப்பிரச்சினைகளோ, வீழ்ச்சி அடைந்து வரும் கூலிகள், கடுமையான சுரண்டல், அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் அத்தியாவசிய சமூக சேவைகளின் அழிப்பு ஆகியவையாகும்.

இதனுடன் ஒப்பிடத்தக்க ஒரே நெருக்கடித் தேர்தல் 1974 இல் நடத்தப்பட்டது, அப்போது எட்வார்ட் ஹீத்தின் டோரி அரசாங்கம், “யார் பிரிட்டனை ஆள்கிறார்?” என்ற கேள்விக்குப் பதில் கோரியதும் அது தோல்வி அடைந்தது. கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், 1972 மற்றும் 1974 இல் சுரங்கத் தொழிலாளர்களின் தேசியளவிலான நடவடிக்கை ஆகியவற்றுக்கு முன்னால் அவர் இந்த சவாலை வெளியிட்டிருந்தார். சர்வதேச அளவில், பாதுகாப்புவாதமும் வர்த்தகப் போர் நடவடிக்கைகளும் உலக பொருளாதாரத்தை 2008 பொறிவை விட மோசமான ஒரு பொறிவுக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்துகின்றன. அணுஆயுதமேந்திய சக்திகளான சீனா மற்றும் ரஷ்யா உள்ளடங்கலாக நாடுகளுக்கு எதிரான போர் மற்றும் இராணுவவாதத்தின் அபாயம் இந்தளவு கூர்மையாக ஒருபோதும் இருந்ததில்லை.

உலக முதலாளித்துவத்தின் முறிவு தீவிரமடைந்து வரும் நிலைமைகளின் கீழ், தொழிற் கட்சி, பொரிஸ் ஜோன்சனின் பழமைவாத அரசாங்கத்திற்கு எந்தவொரு மாற்றீட்டையும் வழங்கவில்லை. ஜெர்மி கோர்பின் "நம் நாட்டின் நிலையை மாற்றவும்" மற்றும் "வரி ஏய்ப்பாளர்கள்,” “நேர்மையற்ற நிலப்பிரபுக்கள்" மற்றும் "மோசமான முதலாளிமார்களை" தண்டிக்கவிருப்பதாக சூளுரைத்துள்ளார். ஆனால் தொழிற் கட்சியின் தலைவராக அவரின் நான்காண்டு காலம், அவரின் வாய்சவடால்களைப் பொய்யாக்குகின்றன.

தொழிலாளர்கள் தொடுத்த ஒவ்வொரு போராட்டத்தையும் நசுக்குவதற்கோ அல்லது காட்டிக்கொடுப்பதற்கோ கோர்பின் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் இணைந்து செயல்பட்டுள்ளதுடன், மூன்று பிரதம மந்திரிகளின் கீழ் அதிகாரத்தை டோரிக்களிடமே விட்டுவைத்துள்ளார். தொழிற் கட்சியில் பிளேயரிச சூழ்ச்சியாளர்கள் "கட்சி ஒற்றுமை" என்ற பெயரில் பாதுகாக்கப்பட வலியுறுத்தி உள்ள அவர், அவர்களின் வேலைத்திட்டத்தின் பெரும்பகுதிகளை அவரின் சொந்த வேலைத்திட்டத்தில் ஏற்றுள்ளார். அவர், பிரெக்ஸிட் சம்பந்தமாக "தேசிய ஐக்கியத்திற்கான" ஒரு முயற்சியில் வாரக்கணக்கில் தெரேசா மே உடன் பேச்சுவார்த்தைகளும் பின்னர் ஜோன்சன் உடனும் விவாதங்களை நடத்தினார்.

கோர்பினின் முயற்சிகள் தோல்வியடைந்து, இறுதியில் ஜோன்சனின் தேர்தல் சவாலை அவர் ஏற்றுக் கொண்ட பின்னர், தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏறக்குறைய பாதி பேரும் எதிர்த்து வாக்களித்தனர். சிலர் அதிலிருந்து வெளியேறினர், போர் குற்றவாளி டோரி பிளேயரினால் வழிநடாத்தப்படும் ஏனையவர்களும் தாராளவாத ஜனநாயகவாதிகளுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இதுவுமே கூட கோர்பினைச் செயல்பட வைக்கப் போவதில்லை. “கட்சியை, இயக்கத்தை, தேசத்தைக் காப்பாற்றி வைக்க முயல்வதே என்னுடைய ஒட்டுமொத்த மூலோபாயமாகும்,” என்று கூறி, இரண்டாவது கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் உடன்படிக்கையைப் பேரம்பேசி முடிப்பதன் மூலமாக அடுத்த கோடைக்குள் "பிரெக்ஸிட் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு" அவர் சூளுரைத்துள்ளார்.

டிசம்பர் 12 இல் கோர்பின் ஜெயித்தாலும் கூட, நடைமுறையில் ஏற்புடைய தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒன்றில் ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும் ஐரோப்பியத்திலேயே தங்கியிருப்பதை ஆதரிக்கும் மற்ற சக்திகளுடன் சேர்ந்து அவர் செயல்படுவார் என்பதையும், அதேவேளையில் சமூகச்செலவுகள் பற்றிய அவரின் அற்ப வாக்குறுதிகளும் வீணாக அழுகிப் போகும் என்பதையும் இந்த மூலோபாய நோக்கு உறுதிப்படுத்தும்.

மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் அனுபவித்து வரும் அவலங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்குக் கோர்பின் தலைமையிலான தொழிற் கட்சி அரசாங்கம் எதுவுமே செய்யப்போவதில்லை, ஏனென்றால் இதற்கு பிரதான வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் மீது ஒரு நேரடியான அரசியல் தாக்குதல் அவசியப்படுகிறது. இதற்கிடையே, தொழிற் கட்சியின் நிழலமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொன்னெல் திரைமறைவில் "தேனீர், பிஸ்கட்" போலி நயவுரை பேச்சுக்களுடன் இலண்டன் நகர மக்களின் ஆதரவை திரட்டுவதில் சுறுசுறுப்பாக உள்ளார்.

இந்த அரசாங்கம் தொழிற் கட்சியின் வலதுசாரிகள் ஒரு புதுப்பிக்கப்பட்ட தாக்குதல்களை செய்ய துணிவைக்கொடுக்கும். “ஜனரஞ்சவாதத்தைக் கொட்டாத, தகுதியான பகுத்தறிவார்ந்த அரசியல்வாதிகளை நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு" தந்திரோபாயரீதியான வாக்களிப்பு முறை அவசியம் என்று பிளேயர் ஏற்கனவே பைனான்சியல் டைம்ஸிற்குக் கூறி வருகிறார்.

“ஒரு உறுதியான நல்ல தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள், இவர்களுக்கு நம்பிக்கை இல்லாத கொள்கையை ஆதரிக்குமாறு அவர்களை விரட்ட முடியாது,” “இந்த தேர்தலுக்குப் பின்னர் தான், எதிர்கால பிரிட்டிஷ் கொள்கைகள் சம்பந்தமான நிஜமான மோதல் தொடங்கும்.” என்பதையும் பிளேயர் சேர்த்துக் கொண்டார்.

சோசலிச சமத்துவக் கட்சி, பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தை ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் அவர்களின் சகோதர மற்றும் சகோதரிகளின் கூட்டணியில், அரசியல்ரீதியில் சுயாதீனமாக அணித்திரட்டும் முன்னோக்கை அடித்தளமாக கொண்டுள்ளது. தபால்துறை தொழிலாளர்கள் பாரியளவில் தேசிய வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்துள்ளனர், 60 பல்கலைக்கழகங்களின் பணியாளர்கள் நவம்பர் 25 இல் இருந்து ஒன்பது நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், 25 சிக்ஸ்த் ஃபார்ம் கல்லூரிகளின் (Sixth Form Colleges) தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், தென்மேற்கு இரயில் ஓட்டுனர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் டிசம்பரில் இருந்து 27 நாட்கள் வேலைநிறுத்தங்களுக்கு வாக்களித்துள்ளனர் — இவை உள்ளடங்கலாக வர்க்க போராட்டத்திற்கு மீண்டும் திரும்புவதன் மூலமாக தொழிலாளர்கள் இப்போது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இடுக்கிப் பிடியை உடைத்து வர முயன்று வருகிறார்கள் என்பதற்கு அங்கே பலமான அறிகுறிகள் உள்ளன.

ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதற்கு, சோசலிச சமத்துவக் கட்சி (SEP) பின்வரும் இன்றியமையா கோரிக்கைகளை முன்னெடுக்கிறது:

பிரெக்ஸிட் வேண்டாம்! ஐரோப்பிய ஒன்றியம் வேண்டாம்! ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக!

ஐரோப்பிய ஒன்றியத்திலே தங்கியிருக்கலாம் மற்றும் அதிலிருந்து வெளியேறலாம் என்பதன் மீதான மோதலானது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலன்களை எவ்விதத்தில் சிறப்பாக பாதுகாப்பது என்பதன் மீது ஆளும் வர்க்கத்தின் எதிர்விரோத வலதுசாரி கன்னைகளுக்கு இடையேயான மோதலாகும். ஜோன்சனும் பிரெக்ஸிட் கட்சி தலைவர் நைஜல் ஃபாராஜும் தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதன் மீதிருக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் கிழித்தெறிந்து, ஐரோப்பாவுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகத்துடன் அணி சேர்வதன் மூலமாக "தாட்சரின் புரட்சியைப் பூர்த்தி செய்ய" விரும்புகிறார்கள். அதிலேயே தங்கியிருக்கலாம் எனும் கன்னை, அத்தியாவசியமாக ஐரோப்பாவின் ஒற்றைச் சந்தையை அணுகுவதை பேணுவதற்கும் மற்றும் இப்போது ட்ரம்ப் மீதான பதவிநீக்க குற்றவிசாரணைக்கு முயன்று வருகின்ற ஜனநாயகக் கட்சியினரின் தரப்பில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அணிசேர்வதற்கும் விரும்புகின்றனர்.

எந்த கன்னை ஆதிக்கம்செலுத்தினாலும், தொழிலாள வர்க்கம் மீதான தாக்குதல் ஆழப்படுத்தப்படும். உலகளவில் போட்டித்தன்மையுடன் இருப்பது என்பது வேலைகள், சம்பளங்கள் மற்றும் தொழிலாள வர்க்க நிலைமைகள் மீதான முடிவில்லா தாக்குதலைக் குறிக்கிறது. ஏற்கனவே 2010 இல் இருந்து 876,000 பொதுத்துறை வேலைகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு 85,000 சில்லறை விற்பனை அங்காடி வேலைகள் அழிக்கப்பட்டுள்ளன, அத்துடன் HSBC இல் மற்றொரு 10,000 வேலைகள், Vauxhall இல் 3,000, ஹோண்டாவில் 3,500 மற்றும் ஜாகுவார் லாண்ட் ரோவரில் 4,500 வேலைகள் அழிக்கப்பட உள்ளன.

பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் அனைத்து கன்னைகளுக்கு எதிராக, ஐரோப்பா மற்றும் அதன் அரசியலமைப்பு அரசாங்கங்கள் அனைத்திற்கும் எதிரான ஒரு போராட்டத்தில் பிரிட்டனிலும் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதில் மட்டுந்தான் முன்னோக்கிய பாதை உள்ளது. பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஐரோப்பிய பகுதிகளில் நமது சகோதரத்துவக் கட்சிகளான பிரான்சின் Parti de l’égalité socialiste (PES) மற்றும் ஜேர்மனியில் Sozialistische Gleichheitspartei (SGP) உம், ஐரோப்பாவின் பாரிய வளங்களைக் கொண்டு அதன் அனைத்து மக்களினது தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்காக அதை அணித்திரட்டுவதற்காக போராடும்.

இதற்காக அனைத்து தொழிலாளர்களின் போராட்டங்களும் தொழிற்சங்க எந்திரத்திலிருந்து சுயாதீனப்பட்ட சாமானிய தொழிலாளர் குழுக்கள் தலைமையில் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும். அவை, துனிசியா, அல்ஜீரியா, சூடான், ஈராக், லெபனான், ஈக்வடோர் மற்றும் சிலியில் பாரிய வெகுஜன போராட்டங்களிலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வெடித்துள்ள வேலைநிறுத்தங்களிலும் வெளிப்பட்டு, சர்வதேச அளவில் இப்போது அபிவிருத்தி அடைந்து கொண்டிருக்கும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக இயக்கத்தை நோக்கி நனவுபூர்வமாக திரும்புவதை அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும்.

போர் வேண்டாம்! ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம்! ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்!

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையானது, ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலையில் வைக்கப்பட வேண்டும்.

அசான்ஜை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு முன்னதாக, அங்கே அவர் தேசத்துரோக குற்றச்சாட்டுகளின் பேரில் 175 ஆண்டுகால சிறை தண்டனை மற்றும் சாத்தியமான மரண தண்டனையை முகங்கொடுக்கின்ற நிலையில், பிரிட்டிஷ் அரசாங்கமும் அதன் ஊழல்மிகு சட்ட அமைப்புமுறையும் அடுத்த பெப்ரவரியில் ஒரு கண்துடைப்பு வழக்கை நடத்த உத்தேசித்துள்ளன. சித்திரவதைத் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு புலனாய்வாளர் நீல்ஸ் மெல்ஸர் (Nils Melzer), அசான்ஜ் சிறையிலிருந்து விரைவில் விடுவிக்கப்பட்டு, மருத்துவச் சிகிச்சை வழங்கப்படாவிட்டால், அவர் இறந்தும் போகலாம் என்று கூறுமளவுக்கு அவர் மூர்க்கமாக அங்கே கையாளப்படுகிறார்.

மற்றவர்கள் வாய்மூடி இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் எச்சரிக்கையாக, அசான்ஜ் போர் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக தண்டிக்கப்பட்டு வருகிறார். கோர்பினின் தொழிற் கட்சியும் சரி அல்லது ஒரே வர்த்தக ஒன்றியமும் சரி அவர் பாதுகாப்புக்காக சுண்டுவிரலைக் கூட உயர்த்தவில்லை. பிரிட்டனின் போலி-இடது குழுக்களும் இதேபோல்தான்.

இந்த இரகசிய சதியைத் தோற்கடிப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அணித்திரட்டுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அதன் சக்திக்கு உட்பட்டு தொடர்ந்து அனைத்து செய்யும்.

போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கம், போருக்கு மூலாதாரமாக விளங்கும் இந்த முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தை அடித்தளமாகக் கொள்ள வேண்டும். எதிர்விரோத சக்திகள் உலகச் சந்தைகளை கட்டுப்படுத்துவதற்காக முட்டிமோதுகின்ற போது, ஏகாதிபத்தியத்திற்கு இடையிலான எதிர்விரோதங்கள் உலகளவில் வெடிப்பதில் இந்த பிரெக்ஸிட் நெருக்கடி ஒரேயொரு வெளிப்பாடு மட்டுந்தான்.

வர்த்தகப் போருக்குத் திரும்புதல் என்பது தவிர்க்கவியலாமல் இராணுவவாதத்திற்குத் திரும்புவதையும், உலகின் அனைத்து ஏகாதிபத்திய அரசாங்கங்களும் இன்னும் வலதுசாரி பக்கம் நோக்கி திரும்புவதையும் அர்த்தப்படுத்துகிறது. பிரெக்ஸிட்டுக்குப் பின்னர் Yellowhammer நடவடிக்கை மூலமாக ஆயுதப்படைகளையும் கலகம் ஒடுக்கும் பொலிஸையும் வீதிகளில் இறக்குவதற்கான திட்டங்கள், ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) போன்ற அதிவலது இயக்கங்களைத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக குண்டாந்தடி படைகளாக வளர்த்தெடுப்பது உள்ளடங்கலாக கடுமையான பலாத்காரத்தின் மூலமாக மட்டுமே அவசியப்படும் காட்டுமிராண்டித்தனமான சமூக தாக்குதல்களை நடத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

நேட்டோவுக்கும், அணுஆயுதங்களைப் பிரயோகிப்பதற்கும் கோர்பின் காட்டிய பாசாங்குத்தனமான எதிர்ப்பு ஒரு "கலகத்தை" தூண்டிவிட்டதோடு, “இந்நாட்டின் பாதுகாப்பு" மீது இதுபோன்றவொரு அச்சுறுத்தலுக்கு எதிராக "நியாயமானதோ அல்லது நியாயமற்றதோ, சாத்தியமான எந்தவொரு வழிவகைகளும்” பயன்படுத்தப்படும் என்று ஒரு முன்னணி பிரிட்டிஷ் தளபதியிடமிருந்து அச்சுறுத்தல் வந்ததன் மூலமாக உள்நோக்கங்கள் எடுத்துக்காட்டப்பட்டன.

இந்த அச்சுறுத்தலுக்கு எதிராகவோ அல்லது போர் அபாயத்திற்கு எதிராகவோ கோர்பின் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டப்போவதில்லை, மாறாக அதற்குப் பதிலாக தன்மீது நம்பிக்கை வைக்கமுடியும் என ஆளும் வர்க்கத்தைச் சமாதானப்படுத்த முனைகிறார். பிரிட்டன் உடனடி அச்சுறுத்தலின் கீழ் உள்ளது என்ற "காலை 3 மணி அழைப்பு" அச்சுறுத்தலுக்கு அவர் தயாராக உள்ளாரா என்று கார்டியன் வினவிய போது, “முற்றிலும் நிச்சயமாக. அதுபோன்ற நேரங்களில் முடிவுகள் எடுத்தே ஆக வேண்டும்,” என்று பதிலளித்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டமைப்போம்!

பிரிட்டனின் போலி-இடது குழுக்கள், கோர்பினுக்கான ஒரு வாக்கு "அனைத்தையும் மாற்றிவிடும்" என்ற சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியை போன்று வலியுறுத்தியவாறு, மீண்டுமொருமுறை தொழிற் கட்சிக்குப் பின்னால் அணிதிரண்டு அவற்றின் விசுவாசத்தைக் காட்டியுள்ளன. ஆனால் கோர்பின் தலைமையிலான நான்கு ஆண்டுகள், தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு நிஜமான விசுவாசம் காட்டும் ஒரு பெயரளவிலான "இடது" தலைவரை நியமிப்பதன் மூலமாக, பிரிட்டிஷ் முதலாளித்துவத்தை சீர்திருத்துவது ஒருபுறம் இருக்கட்டும், தொழிற் கட்சியைக் கூட சீர்திருத்த முடியாது என்பதை ஊர்ஜிதப்படுத்தி உள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் எதிர்காலம் ஒரு புதிய மற்றும் உண்மையான சோசலிச தலைமையை கட்டமைப்பதைச் சார்ந்துள்ளது. அதற்கு, தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்காக அர்பணித்து கொண்டுள்ள, போராடுவதற்கான புதிய அமைப்புகளை உருவாக்குவது அவசியமாகும்: ஒரு தொழிலாளர்களின் அரசாங்கமானது, ஆலைகள், அலுவலகங்கள், வேலையிடங்கள் மற்றும் தொழிலாள வர்க்க குடியிருப்பு பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, உற்பத்தியை இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவைக்காக திட்டமிடும் அடிப்படையில் சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், அனைவருக்கும் கண்ணியமான வேலைகள், கல்வி, மருத்துவச் சிகிச்சை, வீட்டுவசதி மற்றும் ஓய்வூதியங்கள் வழங்குவதற்காக பில்லியனர்கள், வங்கிகள் மற்றும் பிரதான பெருநிறுவனங்களினது செல்வங்களைப் பறிமுதல் செய்வதற்காகவும் பணிக்கப்பட்டிருக்கும்.

புரட்சிகர தலைமையின்றி சோசலிசம் சாத்தியமில்லை என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. ஒரு சோசலிச எதிர்காலத்திற்காக போராட விரும்பும் இளைஞர்களும் தொழிலாளர்களும் 20 ஆம் நூற்றாண்டின் அனைத்து மூலோபாய அரசியல் அனுபவங்களையும், அனைத்துக்கும் மேலாக அக்டோபர் 1917 ரஷ்ய புரட்சியை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியானது (SEP), நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிட்டிஷ் பகுதியாகும். நமது கட்சி, ஸ்ராலினிசத்துக்கு எதிரான போராட்டத்தில் மற்றும் அக்டோபர் புரட்சியைச் சாத்தியமாக்கிய உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கைப் பாதுகாப்பதில் லியோன் ட்ரொட்ஸ்கியால் உருவாக்கப்பட்ட இடது எதிர்ப்பின் போராட்டத்தைத் தொடர்கிறது.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமைக்கான நெருக்கடியைத் தீர்ப்பதற்காக 1938 இல் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை நிறுவினார். ஸ்ராலினிசம், சமூகஜனநாயகம் (Labourism), பப்லோவாதம் மற்றும் தேசிய சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கு எதிரான போராட்டத்தை ICFI தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த கொள்கைரீதியான போராட்ட வரலாற்றின் போது பெறப்பட்ட அரசியல் மூலதனம், சோசலிசத்திற்கான ஒரு புதிய சர்வதேச இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான அடித்தளமாக, வர்க்க நனவுள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் இப்போது அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

எங்கள் பிரச்சாரத்தை ஆதரிக்க விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் SEP ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.