ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

#MeToo launches fascistic attack on Polanski’s film J’accuse

#MeToo இயக்கம் போலன்ஸ்கியின் J’accuse திரைப்படத்தின் மீது பாசிச வகைப்பட்ட தாக்குதலை தொடங்குகிறது

By Alex Lantier
23 November 2019

ட்ரேஃபுஸ் விவகாரம் மீதான ரோமான் போலன்ஸ்கியின் தலைசிறந்த திரைப்படம் J’accuse (ஆங்கில தலைப்பு: An Officer and a Spy) மீது #MeToo பிரச்சாரம் ஒரு வெறித்தனமான தாக்குதலைத் தொடங்கி உள்ளது. அதன் ஆதரவாளர்கள், பிரான்சின் வங்கியாளராக இருந்து ஜனாதிபதி ஆன இமானுவல் மக்ரோனின் முழு ஆதரவுடன், J’accuse படத்தைப் பார்ப்பவர்கள் அல்லது ஆதரிப்பவர்களை கற்பழிப்பை ஆதரிப்பவர்களாக கண்டித்தும் மற்றும் போலன்ஸ்கியை கற்பழிப்பாளனாக முத்திரை குத்தவும் மற்றும் அப்படத்தை முடக்கவும் செயலாற்றி வருகின்றனர்.

இந்த பிற்போக்கு முயற்சியின் குறிப்பிடத்தக்க பண்பானது, வரலாறு  மற்றும் அரசியல் விடயங்களை அவமதிப்பதாக உள்ளதுடன், ஒருவர் இவற்றுடன் சேர்ந்து, ஜேர்மனிக்காக உளவுபார்த்ததாக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு பிரெஞ்சு-யூத அதிகாரியும் தளபதியுமான ஆல்பிரட் ட்ரேஃபுஸ் ஐ விடுவிப்பதற்காக சிறப்பார்ந்த 1894-1906 சட்டப் போராட்டத்துடன் பிணைந்த தார்மீக பிரச்சினைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். J’accuse தற்போது பிரெஞ்சு மாலைநேர வசூல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, அது திரையிடப்பட்டு முதல் வாரத்திலேயே அரை மில்லியன் டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டிருந்தன. இருப்பினும் கூட, #MeToo க்கு வக்காலத்து வாங்குபவர்கள் இந்த சிறந்த கலைப்படைப்புக்கு எதிராக ஆக்ரோஷமாக பிரச்சாரம் செய்து வருவதுடன், தங்களை அதிவலதுசாரிகளின் நிலைப்பாடுகளுடன் ஒன்றாக நிறுத்திக் கொண்டுள்ளார்கள்.


J'Accuse (An Officer and a Spy)

“கற்பழிப்பாளன் போலன்ஸ்கியை நான் குற்றஞ்சாட்டுகிறேன் [J’accuse - I accuse],” என்று குறிப்பிடும் பதாகைகளை ஏந்தி #MeToo ஆதரவாளர்கள் நவம்பர் 12 இல் பாரீஸ் திரையரங்கம் ஒன்றின் முன் ஆர்ப்பாட்டம் செய்ததுடன் படத்தின் முன்னோட்ட காட்சியையும் நிறுத்தச் செய்தனர். பிரான்சில் நவம்பர் 13 இல் அப்படம் வெளியானதில் இருந்து, ரென், செயின்ட் நசேர், போர்தோ, கோன் மற்றும் பிற நகரங்களிலும், பாரீஸ் பகுதிகளிலும் அப்படம் திரையிடப்படுவதை மறித்தனர். “போலன்ஸ்கி கற்பழிப்பாளன், திரையரங்குகள் குற்றவாளிகள், பார்வையாளர்கள் உடந்தையாளர்கள்!” என்பதே J’accuse க்கு எதிராக #MeToo ஆர்ப்பாட்டக்காரர்கள் பரவலாக வெளியிடும் கோஷமாக உள்ளது.

அப்படத்தை விளம்பரப்படுத்த வரும் முன்னணி நடிகர்களின் முயற்சிகளை #MeToo ஆதரவாளர்கள் முடக்க முயன்றதால், அவர்கள் அம்முயற்சிகளை இரத்து செய்ய நிர்பந்திக்கப்பட்டார்கள். TF1 தொலைக்காட்சியில் J’accuse படத்தை விளம்பரப்படுத்துவதில் இருந்து ஜோன் டுஜார்டான் தடுக்கப்பட்டார் மற்றும் இமானுவல் சென்னியே France Inter இல் தோன்றுவதைக் கைவிட நிர்பந்திக்கப்பட்டார்.

#MeToo இயக்க ஆதரவாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும் அத்திரைப்படத்தை உள்ளூரில் திரையிடுவதில் தடைகளைத் திணிக்க முயன்று வருகின்றனர். ஆரம்பத்தில், சோசலிஸ்ட் கட்சி அதிகாரி ஜெரால்ட் கொம் (Gérald Cosme), வடக்கு பாரீஸின் சென் செயின்ட் டெனிஸ் பிராந்தியத்தில் அப்படத்துக்குத் தடை விதித்தார். ஆனால் திரைப்பட இயக்குனர்கள் மற்றும் திரையரங்குகாரர்களும் அத்தடையை அவர்கள் மீறப் போவதாக அறிவித்த நிலையில், அவர்களின் ஆவேச எதிர்ப்புக்குப் பின்னர் கொம் அத்தடையைத் திரும்ப பெற நிர்பந்திக்கப்பட்டார்.

சென் செயின்ட்-டெனிஸ் இல் லு மெல்லியேஸ் (Le Meliès) நாடகக்குழு இயக்குனர் ஸ்ரெபான் கூடே (Stéphane Goudet) பேஸ்புக் இல் ஜெரால்ட் கொம் (Gérald Cosme) இற்கான பதிவில், “திரைப்பட இயக்குனர்கள் தங்களின் திறமைகளை வரையறுக்கவோ மற்றும் எடுத்துக்காட்டவோ அவர்களுக்கு உரிமை இல்லை என்று திரைப்பட இயக்குனர்களுக்கு அதிகாரிகள் உடனடியாக ஒரு கடிதம் எழுதட்டும் என்று நாங்கள் கோருகிறோம். திரைப்பட பார்வையாளர்களுக்கு இனியும் போதுமான ஜனநாயக சுதந்திரம் இல்லை என்பதைப் பற்றி கலைத்துறையின் தார்மீக பொறுப்புக்களைப் பரிசீலிக்கும் ஒரு குழு திட்டமிடப்பட்டுள்ளதா?” என்று ஜெரால்ட் கொம் க்கு கேள்வி எழுப்பினார். நாவலாசிரியர் Louis-Ferdinand Céline மற்றும் ஓவியர் Caravaggio மற்றும் Paul Gauguin உட்பட பிரபல கலைஞர்களுக்கு இதுவரையில் தடை விதிக்கப்பட்டிருந்ததா என்றும் கூடே கேள்வி எழுப்பினார்.


Roman Polanski en 2013 [Credit: Georges Biard]

எவ்வாறிருப்பினும், “தண்டிக்கப்படாத சிறுவர்பாலியல்-குற்றவாளி" என்று தலைப்பிட்டு போலன்ஸ்கியின் படங்களுடன் சுவரொட்டிகளை ஒட்டி, #MeToo இயக்கம் அப்படம் மீதான அதன் விஷமத்தனமான தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது. போலன்ஸ்கியின் தசாப்த கால தொழில் வாழ்வில் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பென வாதிடக் கூடிய ஒன்றை அவர் இயக்கியதற்காக, பிரான்சின் எழுத்தாளர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கலைத்துறை சங்கம் (L’association des auteurs, réalisateurs et producteurs - ARP), வெட்கக்கேடாக, போலன்ஸ்கியை இடைநீக்கம் செய்யும் திட்டங்களை அறிவித்துள்ளது.

மக்ரோன் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இந்த வெறுக்கத்தக்க பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டும் ஆதரித்தும் வருகின்றனர். பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான சமத்துவத்திற்கான அமைச்சர் மார்லின் ஷியாப்பா (Marlène Schiappa) நவம்பர் 13 இலும், அதன் அரசு செய்தி தொடர்பாளர் சிபெத் என்டியாய் (Sibeth Ndiaye) அதற்கடுத்த நாளும், அவர்கள் J’accuse பார்க்கப் போவதில்லை என்று அறிவித்தனர். என்டியாய் கூறுகையில், அவருக்கு “இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை முகங்கொடுக்கும் ஒரு மனிதருடன் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை" என்பதால், அவர் போலன்ஸ்கியின் படத்தைப் பார்க்கப் போவதில்லை என்றார்.

குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் உரிமைகளுக்கான முன்னாள் அமைச்சர் லோரோன்ஸ் ரோஸ்ஸின்னோல் (Laurence Rossignol), அதை பார்ப்பது என்பது "[போலன்ஸ்கியின்] சுயதிருப்தி குற்றத்திற்கு ஒத்துப்போவதாக" இருக்கும் என்று வாதிட்டு, வெளிப்படையாகவே அப்படத்துக்கு தடை விதிக்க அழைப்பு விடுத்தார். J’accuse ஐ சட்டவிரோதமாக்க அழைப்பு விடுக்கப் போவதில்லை என்று கூறிய அவர் அதேவேளையில், போலன்ஸ்கிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதால், “அப்படத்தைச் சென்று பார்ப்பது அவரிடம் தோல்வியடைந்ததாகிவிடும்” என்றார்.

J’accuse படத்தைத் திரையிடுவதோ, பார்ப்பதோ அல்லது ஆதரிப்பதோ கற்பழிப்பை மன்னிப்பதாக அல்லது ஆமோதிப்பதாக ஆகிவிடும் என்ற வாதம் காலத்திற்கும் அழிக்க முடியாத பயங்கரமான அவதூறாகும். J’accuse படம் கற்பழிப்பு, பாலியல் அல்லது போலன்ஸ்கி சம்பந்தப்பட்ட ஒரு படம் கிடையாது. அது அப்பாவி ட்ரேஃபுஸ் ஐ சிறையில் வைப்பதை நோக்கமாக கொண்ட அரசின் ஒரு மூடிமறைப்புக்கு எதிராக, கர்னல் ஜோர்ஜ் பிக்காரும், இறுதியில் உலக புகழ்பெற்ற நாவலாசிரியர் எமில் ஸோலா மற்றும் இடதுசாரி அரசியல் பிரமுகர்களும் பல ஆண்டுகள் நடத்திய போராட்டத்தை நேர்மையாக நினைவுகூரும் ஒரு படமாகும்.

ட்ரேஃபுஸ் விவகாரம் முடிவில் ஒட்டுமொத்த பிரெஞ்சு அரசு எந்திரத்தையும் மற்றும் இராணுவ தளபதிகளையும் சுற்றி வளைத்திருந்ததுடன், தேசிய அரசாங்கத்தையே பதவியிறக்கும் நிலைக்கு கொண்டு வந்திருந்தது. நாடே உள்நாட்டு போரின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருந்தது. அந்த விவகாரம் பிரான்ஸை, ட்ரேஃபுஸ் ஆதரவாளர்கள் (pro-dreyfusards) மற்றும் ட்ரேஃபுஸ் எதிர்ப்பாளர்கள் (antidreyfusards) என்று இரண்டு பெரும் முகாம்களாக பிரித்திருந்தது, ட்ரேஃபுஸ் ஆதரவாளர்கள் முகாமில் ஜோன் ஜோர்ரெஸ் (Jean Jaurès) தலைமையில் தொழிலாள வர்க்க சோசலிச இயக்கம் தீர்க்கமான சக்தியாக இருந்தது, ட்ரேஃபுஸ் எதிர்ப்பாளர்கள் முகாமின் முன்னணி சார்பாளராக சார்ல் மோராஸின் யூத-எதிர்ப்புவாத அக்ஸியோன் பிரான்ஸேஸ் (Action française) இருந்தது. அந்த போராட்டம், பின்னர் இரண்டாம் உலக போரின் போது ஐரோப்பிய யூத இனப்படுகொலை நடத்திய பாசிசவாத சக்திகளுக்கு எதிராக தொழிலாளர்கள் இயக்கத்தின் 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பகால வெற்றிகளில் முக்கிய ஒன்றாக இருந்தது.

இதுபோன்றவொரு சக்தி வாய்ந்த படத்தினால் ஆகர்சிக்கப்படுவதை கற்பழிப்பின் அனுதாபி என்று வாதிடுவது அருவருப்பாகவும் பிற்போக்குத்தனமாகவும் உள்ளது. இந்த பிரச்சினைகள் மீது மிகப் பெரும் வரலாற்று அரசியல் முக்கியத்துவம் ஒருபுறம் இருக்க, இது இனவாதத்திற்கும், யூத-எதிர்ப்புவாதம் மற்றும் தொழிலாள வர்க்க விரோத வெறுப்புக்கும் நவ-பாசிசவாத முறையீடு செய்ய வழிவகுக்கும்.

J’accuse படத்துக்கு எதிராக #MeToo இயக்கத்தைப் பிரெஞ்சு அரசு ஊகப்படுத்துவதும் தூண்டிவிடுவதும் அதன் இராணுவ-பொலிஸ் ஒடுக்குமுறை, சமூக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தீவிர-வலது உணர்வுக்கான முறையீடுகளின் திட்டநிரல்களுடன் பிணைந்துள்ளன. கடந்தாண்டு மக்ரோன் நாஜி ஒத்துழைப்புவாத சர்வாதிகாரி பெத்தானை "மாவீரராக" புகழ்ந்ததுடன், அதிவலது கலகம் ஒடுக்கும் பொலிஸ் படைப்பிரிவுகள் "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களுக்கு எதிராக நாஜி ஆக்கிரமிப்புக்குப் பிந்தைய பிரான்சில் பாரிய கைது நடவடிக்கைகளைத் தொடங்கிய நிலையில் அவற்றுக்கு முறையிட்டார்.

பெத்தானுக்கு ஆதரவளித்துள்ள மக்ரோன் அரசாங்கம் இப்போது ட்ரேஃபுஸ் விவகாரம் மீதான நேர்மையான விவாதத்தைத் தடுக்க முயன்று வருவதுடன், ட்ரேஃபுஸ் க்கு ஆதரவான போலன்ஸ்கியின் திரைப்படத்தை நோக்கி ஒரு விரோத போக்கை எடுத்து வருகிறது. இது ஏனென்றால் பெத்தானின் விச்சி ஆட்சி ட்ரேஃபுஸ் எதிர்பாளர்களால் (antidreyfusards) நிறுவப்பட்ட அதிவலது குழுக்கள், அக்ஸியோன் பிரான்ஸேஸ் மற்றும் அவர்களின் தலைவர் மோராஸ் ஆகியோரின் ஆதரவையே அதன் பிரதான அடித்தளமாக கொண்டிருந்தது. மக்ரோனின் கலாச்சார அமைச்சகத்தின் பலமான சக்திகள் கடந்தாண்டு மோராஸ் இன் முழு படைப்புகளையும் வெளிக் கொண்டு வர முயன்றது, என்றாலும் இறுதியில் வெற்றியடையவில்லை.

ட்ரேஃபுஸ் க்கு எதிராக தயாரிக்கப்பட்ட பொய் ஆவணங்களை "முற்றுமுதலான உண்மை" என்று புகழ்ந்துரைத்தே யூத-எதிர்ப்புவாத மோராஸ் அவரின் தொழில் வாழ்வைத் தொடங்கினார். இந்த ஆவணங்கள் 1899 ட்ரேஃபுஸ் மறுவிசாரணையில் மதிப்பிழந்த பின்னரும், “துயரகரமான யதார்த்தத்திற்காக விரும்பத்தக்க மாற்றீட்டை" அவர் விரும்புவதாக அறிவித்து, அவற்றை ஏதோவொரு விதத்தில் பாதுகாத்தார். அதாவது, அவரும், இராணுவத் தளபதிகளும் மற்றும் தேவாலயமும் ட்ரேஃபுஸ் ஐ சிறையில் அடைத்து வைக்க விரும்பியதில் இருந்து, அந்த யூத அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், பொய்கள் என்பதை மோராஸ் அறிந்திருந்த போதினும் கூட, தொடர்ந்து அவற்றைப் பாதுகாக்க இருந்தார்.

அவரின் தொழில்வாழ்வின் இறுதியில், மோராஸ் 1940 இல் நாஜிக்களிடம் பிரெஞ்சு தளபதிகள் திடீரென சரணடைந்ததையும், பெத்தான் அதிகாரத்திற்கு வந்ததை "தெய்வீக ஆச்சரியம்" என்றும் புகழ்ந்தார். அப்போது Action française உறுப்பினர்கள் தான் விச்சியின் யூத கொள்கையை மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர், அது பிரான்சில் இருந்து 70,000 க்கும் அதிகமான யூதர்களை ஜேர்மனி மற்றும் போலாந்தின் மரண முகாம்களுக்கு நாடு கடத்துவதற்கு இட்டுச் சென்றது. இரண்டாம் உலக போருக்குப் பின்னரும் மற்றும் விச்சியின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மிகப்பெரும் தேசதுரோகத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட போது, மோராஸ், “இது ட்ரேஃபுஸ் இன் பழிவாங்கல்!” என்று ஓலமிட்டார்.


J'Accuse (An Officer and a Spy)

வரலாறை மட்டுமல்ல நமது சகாப்தத்தின் அரசியலையும் கூட புரிந்து கொள்வதற்கு, இத்தகைய பிரச்சினைகள் மீது ஒரு நேர்மையான, வெளிப்படையான மற்றும் தணிக்கை செய்யப்படாத பகிரங்க விவாதம் அத்தியாவசியமாகிறது.

ஆனால் #MeToo பிரச்சாரத்தின் தலையீடோ முற்றிலும் எதிர் திசையில் செல்கிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தணிக்கையை நோக்கியும் மற்றும் இறுதி பகுப்பாய்வில் நிதியியல் பிரபுத்துவத்தின் நலன்களுக்கு ஒத்த விதத்தில் பொது விவாதத்தைத் தரங்குறைப்பதை நோக்கியும் செல்கிறது.

1975 இல் புகைப்படக் கலைஞரும் முன்னாள் நடிகையுமான வலன்ரின் மோன்னியே (Valentine Monnier) ஐ 18 வயதில் சுவிட்சர்லாந்தின் Gstaad  நகரில் போலன்ஸ்கி கற்பழித்தார் என்ற குற்றச்சாட்டுக்கள் Le Parisien பத்திரிகையில் நவம்பர் 9 இல் வெளியானதே J’accuse இக்கு எதிரான பிரச்சாரத்திற்கான சாக்குபோக்காக இருந்தது. அந்த குறிப்பிட்ட சம்பவம் குறித்து மோன்னியே 44 ஆண்டுகளாக எந்த பொது அறிவிப்பும் வெளியிடவில்லை, அது சட்ட சாசன வரையறைகளிலேயே காலாவதி ஆகிவிட்டது. அவர் குற்றச்சாட்டுக்களை ஆதரித்து அப்பெண்மணி எந்த ஆதாரமும் முன்வைக்கவில்லை என்பதுடன், போலன்ஸ்கி அவரின் வழக்கறிஞர் மூலமாக அக்குற்றச்சாட்டைக் கடுமையாக மறுத்திருந்தார்.

கற்பழிக்கப்பட்டதைக் குறித்து அவர் மறந்து விட்டதாகவும் ஆனால் J’accuse வெளியாவது குறித்து அவர் கேள்விப்பட்டபோது தான் அந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்ததாகவும் கூறி மோன்னியே தனது மவுனத்துக்கான காரணத்தை விவரித்தார். “வயதோ அல்லது ஒரு சம்பவமோ துயரகரமான நினைவை மீண்டும் கொண்டு வரும் போதுதான், பெரும்பாலும் மனம் மறந்துவிட்டதைக் கூட உடல் வெளிப்படுத்துகிறது,” என்றார். போலன்ஸ்கியின் திரைப்படம் தான் தூண்டுசக்தி என்று கூறிய அவர், “உங்களை கொதிக்கும் இரும்பைக் கொண்டு காயப்படுத்திய ஒருவர், அதேவேளையில் பாதிக்கப்பட்ட நீங்கள் அவரை குற்றஞ்சாட்ட முடியாத நிலையில், ஒரு திரைப்படத்தை காரணமாக காட்டி, வரலாற்று மூடிமறைப்பின் கீழ், J’accuse (நான் குற்றஞ்சாட்டுகிறேன்) என்று ஒருவரைக் கூறுவதைச் சகித்துக் கொள்ள முடியுமா?” என்றார்.

J’accuse படத்திற்கு எதிரான #MeToo பிரச்சாரம் பொய்யான மூலக்கூற்றுக்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடித்தளத்திலேயே உள்ளது. மோன்னியே, அவரே மறைமுகமாக ஒத்துக் கொள்வதைப் போல, அவர் கற்பழிக்கப்பட்டது அவருக்கு இம்மாதம் நினைவுக்கு வந்து, J’accuse வெளியாக இருப்பது குறித்த முன்னோட்டங்களால் அதிர்ச்சி அடைந்து, திடீரென அவர் பத்திரிகைகளின் முன்னால் வந்துவிடவில்லை. உண்மையில் அவரது அறிக்கையும் #MeToo பிரச்சாரமும் மிக கவனமாக பிரெஞ்சு மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டிருந்தன.

போலன்ஸ்கி 1977 இல் வயதுக்குவராத சமந்தா கைமர் (Samantha Geimer) உடன் லாஸ் ஏஞ்சல்ஸில் சட்டவிரோதமாக பாலுறவு கொண்ட குற்றத்திற்காக அலைக்கழிக்கப்பட்டு, 42 நாட்கள் சிறையில் இருந்து பின்னர் ஓர் விடுதலை உடன்படிக்கையின் கீழ் உளவியல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். ஆனால் அவர் மதிப்பைக் கெடுப்பதற்காக குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்குபவர் என்ற தனது பெயரை மேம்படுத்திக்கொள்ள ஆர்வமுடன் இருந்த ஒரு நீதிபதி, அந்த விடுதலை உடன்படிக்கையை இரத்துச்செய்து போலன்ஸ்கிக்கு 50 ஆண்டுகால சிறை தண்டனை வழங்க இருப்பதாக அறிவித்ததன் மூலம் மொத்த ஒழுக்கக்கேட்டிற்கும் அவரை மட்டுமே குற்றவாளி ஆக்கியபோது போலன்ஸ்கி அமெரிக்காவில் இருந்து தப்பி வெளியேறினார். கைமர் அதற்குப் பின்னர் அவர் போலன்ஸ்கியை மன்னித்து விட்டதாக கூறி, ஊடகங்கள் அதன் இடைவிடாத பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ளுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்ட போதினும், அமெரிக்க அதிகாரிகள் இன்னமும் அரசியல் காரணங்களுக்காக நாடுகடத்திக் கொண்டு வருவதற்காக பழி உணர்ச்சியுடன் அவரை விரட்டிக் கொண்டிருக்கின்றனர்.

மோன்னியே, 1975 கற்பழிப்பு மீதான அவரது குற்றச்சாட்டுக்கள் எதையும் 1977 சம்பவங்களின் போது கூறவில்லை. 2018 இல் #MeToo இயக்கம் ஹார்வி வைன்ஸ்டீனை (Harvey Weinstein) இலக்கில் வைத்திருந்ததில் ஈர்க்கப்பட்டு, அந்த குறிப்பிட்ட 1975 சம்பவம் குறித்து மோன்னியே ஜனவரி 2018 இல் தான் அறியப்பட்ட வகையில் குறிப்பிட்டிருந்தார், அவர் ஷியாப்பாவுக்கும் (Schiappa), பிரெஞ்சு முதன்மை பெண்மணி பிறிஜிட் மக்ரோனுக்கும் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் துறைக்கும் கடிதங்கள் அனுப்பினார். மோன்னியே “2019 இல் ரோமன் போலன்ஸ்கியின் படத்திற்கு கலாச்சாரத்துறை அமைச்சகம் நிதியுதவி வழங்குவது குறித்து மீண்டும் எழுதினார்,” என்று முதன்மை பெண்மணியின் அலுவலகம் குறிப்பிட்டது.

இதுபோன்றவொரு நடவடிக்கை கலைத்துறையின் ஒரு மிகப்பெரும் படைப்பைத் தணிக்கை செய்வதற்கான முயற்சியின் அடித்தளமாக ஆகி உள்ளது என்பது மக்ரோன் அரசாங்கம் மற்றும் அதன் அரசியல் கூட்டாளிகளின் ஆழ்ந்த ஜனநாயக விரோத தன்மையை எடுத்துக்காட்டுகிறது. #MeToo பிரச்சாரத்தைப் பொறுத்த வரையில், பாசிச பாரம்பரியத்தை ஊக்குவிக்க முயன்று வரும் அரசாங்கத்துடன் அதே அணியில் தணிக்கைக்கு ஆதரவாக அது ஈடுபட்டிருப்பது அம்பலப்படுத்தப்படுகின்றது.