ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Many unanswered questions as Tories exploit London terror attack

டோரிக்கள் இலண்டன் பயங்கரவாத தாக்குதலை தமக்கு சாதகமான பற்றிக் கொள்கையில் பல கேள்விகள் பதிலளிக்கப்படாமல் விடப்படுகின்றன

By Robert Stevens
2 December 2019

இலண்டனில் வெள்ளிக்கிழமை பயங்கரவாத தாக்குதலினால் ஞாயிறன்று  23 வயதான சாஸ்கியா ஜோன்ஸ் இரண்டாவதாக உயிரிழந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பட்டாரியான இவர் அவரின் சக மாணவ பட்டதாரி ஜாக் மெரிட் உடன் சேர்ந்து 28 வயதான உஸ்மான் கானால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

கானால் தாக்கப்பட்ட இன்னும் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் படுமோசமான நிலைமையிலிருந்து ஸ்திரமான உடல்நிலைக்குத் தேறி வருகிறார். அவர்கள் தப்பிவிடுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொருவர் முன்னதாக மருத்துவமனையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கைதிகளையும் உயர்க்கல்வி பயிலகங்களையும் ஒருங்கிணைக்கும் விதத்தில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை மையப்படுத்திய "ஒருங்கிணைந்து கற்போம்" என்று ஒழுங்கமைக்கப்பட்ட கைதிகள் மறுவாழ்வு கலந்துரையாடல் கூட்டம் ஒன்றில் மெரிட் மற்றும் ஜோன்ஸ் கலந்து கொண்டிருந்தனர். அந்நிகழ்வில் மெரிட் ஒருங்கிணைப்பாளராகவும், ஜோன்ஸ் தன்னார்வ சேவகராகவும் இருந்தனர்.

பயங்கரவாத-தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கான் சமீபத்தில் தான் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். அவர் மெரிட் உட்பட ஒருங்கிணைந்து கற்போம் குழு சம்பந்தப்பட்டிருந்த "தீவிரமயப்படலைக் குறைப்பதற்கான பயிற்சி வகுப்பில்" கலந்து கொண்டார்.

இலண்டன் பாலம் அருகில் ஃபிஷ்மாங்கர்ஸ் அரங்கில் நடந்த ஒருங்கிணைந்து கற்போம் நிகழ்வில் கொலைவெறித் தாக்குதல் நடந்திருப்பதாக அதிகாரிகளுக்கு 1:58 இக்கு அழைப்பு வந்ததாக மகாநகர பொலிஸ் ஆணையர் க்ரிஸ்சிடா டிக் தெரிவித்தார். பணியாளர்களையும், கலந்துரையாடலில் பங்கெடுக்க வந்திருந்தவர்களையும் அங்கு சந்தித்த பின்னர் மீண்டும் அவர்களையும் மற்றும் இலண்டன் பாலத்தில் அவ்வழியே சென்று கொண்டிருந்தவர்களையும் நாற்காலிகள், தீயணைப்பு சாதனங்கள் மற்றும் கூர்மையான கழி ஆகியவற்றைக் ஆயுதமாக பயன்படுத்தி கான் தாக்கினார். வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் இலண்டன் நகர பொலிஸ் படையின் ஆயுதமேந்திய அதிகாரிகள் இலண்டன் பாலம் வந்தடைந்து, கானை எதிர்கொண்டு, அவரை சுட்டுக் கொன்றனர்.

எல்லா பயங்கரவாத தாக்குதல்களிலும் போலவே, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள எதையும் நம்பக்கூடியதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய கேள்விகள் பதிலளிக்கப்பட வேண்டியுள்ளன.

பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் சமீபத்திய பயங்கரவாத தாக்குதலில் குற்றவாளியாக இருந்த ஒவ்வொருவரையும் போலவே, கானும், பொலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகளுக்குப் பரிச்சயமானவராக இருந்தார். இன்னும் மோசமாக, அந்த தாக்குதல் நடத்திய நேரத்தில் அவர் நன்னடத்தைக் காவலில் இருந்ததால் அவர் நகர்வுகள் மும்முரமாக கண்காணிப்பில் வைக்கப்பட்டு, வாரத்திற்கு இரண்டு முறை நன்னடத்தைக் கண்காணிப்பு சேவையால் கண்காணிக்கப்பட்டு வந்தார். அவர் டிசம்பர் 2018 இல் தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, வெளியில் நடமாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அவர் மின்னணு அடையாள வில்லை அணிந்திருக்க வேண்டும் என்பது அவரது விடுதலை நிபந்தனைகளில் ஒன்றாக இருந்தது. Stafford இல் வசித்து வந்த அவர், இலண்டன் பயணிக்க அனுமதி பெற்றிருக்க வேண்டும். அத்தாக்குதல் நடத்திய அந்நாள் வரையில் கான் அவர் விடுதலை நிபந்தனைகள் அனைத்தையும் பின்பற்றி இருந்ததாக பொலிஸ் குறிப்பிட்டுள்ளது. பொலிஸ் மற்றும் நன்னடத்தைக் கண்காணிப்பு சேவையால் வெள்ளிக்கிழமை அவர் மத்திய இலண்டனுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக ஸ்கை நியூஸ் அறிவித்தது.

ஒருங்கிணைந்து கற்போம் நிகழ்வில் கான் கலந்து கொண்டதும், அந்நிகழ்வுக்கு சென்ற போது அவர் கத்தி வைத்திருந்ததும் மற்றும் போலியான தற்கொலை வெடிகுண்டு பட்டை அணிந்திருந்ததும் உளவுத்துறை முகமைகளுக்குத் தெரிந்திருந்ததையே இவை அனைத்தும் அறிவுறுத்துகின்றன.

இந்தாண்டு தொடக்கத்தில் Whitehall க்கு பயணிக்கவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. Whitehall என்பது Trafalgar சதுக்கத்திலிருந்து நாடாளுமன்றம் வரையிலான பிரதான வழிப்பாதையாகும். மேலும் பிரதம மந்திரி வசிக்கும் 10 Downing வீதியும் அங்கே அமைந்திருக்கின்ற நிலையில், அது பல அரசு கட்டிடங்களின் அமைவிடமாகும்.

கான், இன்னும் எட்டு நபர்களுடன் சேர்ந்து, 2010 இல் கைது செய்யப்பட்டார் மற்றும் 2012 இல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்கள் அனைவரும் உளவுத்துறை முகமைகளினது நெருக்கமான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இலண்டன் பங்குச்சந்தையை வெடி வைத்து தகர்க்க திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் ஒன்பது பேரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர், கான் காஷ்மீரில் அவர் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தில் "பயங்கரவாத இராணுவப் பயிற்சி மையம்" ஒன்றை கட்டமைக்க திட்டமிட்டார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

2012 இல், குற்றத்தை ஒப்புக் கொண்ட பின்னர், பொது மக்கள் பாதுகாப்பிற்கான வரையறையற்ற சிறையடைப்பின் கீழ் (IPP) தண்டனை வழங்கப்பட்டது. இது குறைந்தபட்சம் எட்டாண்டுகால சிறை தண்டனையாக இருந்தது. IPP தண்டனையில் இருப்பவர்களால் பொதுமக்களுக்கும் மற்றும் அவர்களால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் எந்தளவுக்கு ஆபத்து உள்ளது, மற்றும் இதை குற்றவியல் நீதி அதிகாரிகளால் சமூகத்தில் கையாள முடியுமா என்பதும் ஆராயப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் மட்டுந்தான் உறுதிமொழி விடுவிப்பு ஆணையத்தால் அவர்கள் விடுக்கப்பட முடியும்.

அதற்கடுத்த ஆண்டு, மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த தண்டனையை நீக்கிவிட்டு, 16 ஆண்டுகள் நிலையான தண்டனை காலத்தால் அது பிரதியீடு செய்யப்பட்டது. இதில் கான் பாதி காலத்திற்கு சிறை கம்பிகளுக்குப் பின்னால் இருக்க வேண்டும். அதன்படி அவர் திட்டமிட்டவாறு விடுவிக்கப்பட்டார்.

இலண்டன் பாலம் மீது நடந்த சம்பவங்களைச் சுற்றியும் பல கேள்விகள் உள்ளன. ஒருவர் கானின் கையை டேப் கொண்டு கட்டியது உட்பட, அவரிடம் இருந்து கத்திகளைப் பறிக்கும் முயற்சியில் பொதுமக்கள் அவரை எதிர்த்து சமாளித்த பின்னர் அவர் தரையில் கிடந்தார். சூட் அணிந்த ஒருவர், கானிடம் இருந்து கத்தியைப் பிடுங்கி, கத்தியுடன் அவ்விடத்தை விட்டு அகன்று செல்வதை காணொளி காட்டுகிறது. ஒரு பொலிஸ் அதிகாரி வேறொருவரை கானிடம் இருந்து விலக்கி அகற்றுவதைப் பார்க்க முடிகிறது, ஒரு சில நொடிகளுக்குப் பின்னர் மற்றொரு அதிகாரி கானைக் கொல்லத் துப்பாக்கியால் சுடுகிறார்.

கத்தியுடன் நடந்து செல்லும் நபர் BTP (British Transport Police) இல் சேவையாற்றும் சீருடை அணியாத அதிகாரி என்பதை பிரிட்டிஷ் போக்குவரத்து பொலிஸ் உறுதிப்படுத்தி உள்ளது. அங்கே BTP அதிகாரி ஏன் வந்தார் மற்றும் அவ்விடத்தில் இருந்து ஏன் அவர் விலகிச் சென்றார் என்பது எதுவும் தெளிவாக இல்லை.

இதற்கும் மேல், இந்த பயங்கரவாத தாக்குதல் நடந்த நேரம் தற்செயலாக  அரசியல்ரீதியான நிகழ்வுடன் பொருந்தி நிற்கிறது.

இந்த தலைநகரில் நடந்த மிகவும் சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்கள், 2017 இல் நடந்த மான்செஸ்டர் அரங்கு தாக்குதல் ஆகிய இவை அனைத்துமே பொது தேர்தல் பிரச்சாரங்களின் போதோ அல்லது அதற்கு முன்னரோ நடந்திருந்தன.

2016 ஐரோப்பிய ஒன்றிய கருத்து வாக்கெடுப்பு பிரச்சாரத்தின் கடைசி வாரத்தில் ஒரு பாசிசவாதியால் தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ கொக்ஸ் கொல்லப்பட்டார்.

மார்ச் 2017 இல், முன்கூட்டிய பொது தேர்தலுக்கு முன்னதாக, வெஸ்ட்மின்ஸ்டரில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். காலிட் மசூத் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்திற்கு குறுக்கே ஒரு பழுப்புநிற ஹூண்டாய் காரை ஓட்டிச் சென்று பாதசாரிகளை மோதியவாறு அவர் தாக்குதலைத் தொடங்கினார்.

மே மாதம் மான்செஸ்டர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் சல்மான் அபேதி 22 பேரைப் படுகொலை செய்தார். இதைத் தொடர்ந்து ஜூன் 3, 2017 இல் —தேர்தலுக்கு வெறும் ஐந்து நாட்களுக்கு முன்னர்— இலண்டன் பாலம் மற்றும் தன்னாட்சிப் பெருநகர சந்தை (Borough Market) தாக்குதல்கள் நடந்தன. இவற்றின் போது மூன்று பயங்கரவாதிகள் எட்டு பேரைக் கொன்றனர்.

அப்போதைய டோரி பிரதம மந்திரி தெரேசா மே, தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் பயங்கரவாதம் தொடர்பாக மென்மையாக இருப்பதாக கண்டிப்பதற்கு அந்த தாக்குதல்களைப் பயன்படுத்த முயன்றார், அது படுமோசமாக அவருக்குப் பின்னடைவைக் கொண்டு வந்தது.

இந்த வரலாறுக்கு மத்தியில் மற்றும் தற்போதைய தேர்தல் பிரச்சாரக் காய்ச்சல் சூழலுக்கு மத்தியில், பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டம் "கடுமையாக" இருக்கிறது என்ற மட்டத்திலிருந்து "கணிசமாக" உள்ளது என்ற மட்டத்திற்கு நவம்பர் 4 இல் கீழிறக்கப்பட்டது. இந்த நகர்வு குறிப்பிடத்தக்கதாக இருந்தது ஏனென்றால் வெறும் ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான், அக்டோபர் 30 இல், பழமைவாத பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் டிசம்பர் 12 பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

முன்அனுமானிக்கத்தக்கவாறு, இரண்டு இளம் மாணவர்களின் மூர்க்கமான படுகொலை ஜோன்சனால் மற்றும் டோரி-ஆதரவு ஊடகங்களால் பற்றிக் கொள்ளப்பட்டது. சண்டே டைம்ஸ் தலைப்பு செய்தி “பயங்கரவாதிகளைச் சிறையில் அடைத்து, சாவி தூக்கியெறியப்படும்" என்ற பிரதம மந்திரியின் ஒரு வாக்குறுதி பற்றி குறிப்பிட்டது.

கானின் குற்றத்திற்கு தொழிற் கட்சி வரைந்த முன்கூட்டியே விடுவிக்கும் சட்டதிருத்தம் மீது பழிசுமத்தி ஜோன்சன் கூறுகையில், பயங்கரவாத தாக்குதல்களுக்காக தண்டனை வழங்கப்பட்டுள்ள 74 நபர்களின் உரிம நிபந்தனைகள் மீளாய்வு செய்யப்படும் என்றார். “கடந்த காலத்தில் தோல்வியடைந்த அணுகுமுறைகளை நாம் தாங்கிவாறு முன்னெடுத்து செல்ல முடியாது என்பது முற்றிலும் தெளிவாகிறது. ஒரு தீவிர பயங்கரவாத தாக்குதலுக்காக நீங்கள் தண்டிக்கப்பட்டீர்கள் என்றால், அங்கே கட்டாயம் குறைந்தபட்சம் 14 ஆண்டுகால தண்டனையாவது இருக்க வேண்டும், ஒரு சிலரை ஒரு போதும் விடுவிக்கவே கூடாது. சொல்லப்போனால் எல்லா விதமான பயங்கரவாத மற்றும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் நீதிபதி அறிவித்த தண்டனை காலம்முழுவதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும். இந்த குற்றவாளிகள் அவர்களின் தண்டனை காலத்தின் ஒவ்வொரு நாளும், விதிவிலக்கின்றி, சிறையில் கழிக்க வேண்டும்,” என்றார்.

“நமது உளவுத்துறை சேவைகள் மீது ஏற்கவியலா கட்டுப்பாடுகள்" வைத்துள்ளதாக தொழிற் கட்சியின் தேர்தல் அறிக்கையைக் குற்றஞ்சாட்டிய ஜோன்சன், “ஜெர்மி கோர்பின் நமது அமைப்புமுறையைப் பலவீனப்படுத்துவதற்கும் மற்றும் நமக்குத் தீங்கு விளைவிக்க விரும்புபவர்களை தடுப்பதற்கான நமது பாதுகாப்பு சேவைகளை இன்னும் அதிகமாக சிரமப்படுத்துவதற்கும் திட்டங்களை அமைத்து வருகிறார்,” என்றார்.

பிபிசி இன் Andrew Marr நிகழ்ச்சியில், அவர் "இடது அரசாங்கத்தின்" முன்கூட்டியே விடுவிக்கும் விதிகள் மீது பழிசுமத்தினார்.

இப்போது கோர்பின் தான் செய்திகளில் கூடுதலாக காட்டப்படுவதை மிகவும் விரும்புவதாக தெரிகிறது. ஸ்கை நியூசில் Sophy Ridge உடன் உரையாற்றுகையில், கடந்த காலத்தில் அவர் சுட்டுக் கொல்லும் கொள்கைகளை விமர்சித்ததாகவும், ஆனால் இலண்டன் பாலத்தில் கானை கொல்வதைத் தவிர அதிகாரிகளுக்கு "வேறு தேர்வு இருக்கவில்லை" என்றார்.

“நம்பத்தகுந்த விதத்தில் அவர் உடலில் வெடிகுண்டு பட்டை இருப்பதற்கான அச்சுறுத்தல் இருந்த ஒரு சிரமமான சூழலில் அவர்கள் மாட்டி இருந்தார்கள்... கடந்த காலத்தில் நான் குறிப்பிட்ட புள்ளி, குறிப்பாக வடக்கு அயர்லாந்து சம்பந்தமாக கூறியது —இது நீண்ட தூரம் பின்னோக்கி செல்கிறது— அவர்களைச் சுட்டு கொல்வதற்குப் பதிலாக அவர்களைக் கைது செய்ய சாத்தியமிருந்தாலும் பொலிஸ் சுட்டுக் கொல்லும் கொள்கையை கொண்டிருந்தது என்பது வடக்கு அயர்லாந்தில் கவலைக்குரியதாக உள்ளது என்றேன். நபர்களைச் சுடுவது முதல் மாற்றீடாக இருக்க கூடாது. ஆனால் ஒரு மாற்றீடு இல்லாத போது வேறு என்ன செய்வது.”

ஜாக் மெரிட்டின் தந்தை ஞாயிறன்று வெளியிட்ட அறிக்கை சரமாரியான சட்ட ஒழுங்கு வாய்சவடால்களுக்கு ஒரு பலமான கண்டனமாக உள்ளது. அவர் மகன் ஒரு "புத்திசாலியான, சிந்தனாபூர்வமான, கனிவான நபர், அவர் தனது பெண் தோழி லியான் உடன் சேர்ந்து எதிர்காலத்தை அமைக்க எதிர்நோக்கி இருந்தார்.

“ஜாக் அவரின் கொள்கைகளின்படி வாழ்ந்தார்; அவர் பழி தீர்ப்பதில் அல்ல, மீண்டு வருவதிலும் மறுவாழ்விலும் நம்பிக்கை கொண்டிருந்தார், அவர் எப்போதுமே சவாலானதையே ஏற்று செய்வார்.

“இந்த கொடூரமான, தனியொரு சம்பவம் சிறைக்கைதிகளுக்கு இன்னும் அதிக கொடூரமான தண்டனைகளை வழங்குவதற்கும், அல்லது நபர்களை அவசியமான காலத்தை விட அதிகமாக சிறையில் அடைத்து வைப்பதற்கும் ஒரு சாக்குபோக்காக அரசாங்கம் பயன்படுத்தப்படுவதை ஜாக் விரும்ப மாட்டார் என்பது நமக்கு தெரியும்,” என்றார்.