World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

One year after the Musharraf coup

A beleaguered Pakistan military regime faces mounting criticism

முஷாரப் சதிப் புரட்சியின் ஓராண்டு நிறைவு

முற்றுகையிடப்பட்ட பாகிஸ்தான் இராணுவ ஆட்சி பெரும் விமர்சனங்களுக்கு முகம் கொடுத்துள்ளது

By Vilani Peiris
21 November 2000

Use this version to print

ஜெனரால் பேர்வேஸ் முஷாரப் தெரிவு செய்யப்பட்ட பாகிஸ்தானிய அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து வெளியேற்றி, பிரதமர் நவாஸ் ஷெரீபை கைது செய்து, தனது சொந்த இராணுவ ஆட்சியை பதவியில் இருத்தி கடந்த மாதத்துடன் ஓராண்டு நிறைவு பெறுகின்றது. ஊழலில் ஈடுபட்டுள்ளதாயும் பொருளாதாரத்தை நாசமாக்கி விட்டதாயும் முன்னைய அரசாங்கத்தை குற்றம் சாட்டிய முஷாரப் பொருளாதார முன்னேற்றத்தையும் அரசியல் ஸ்திரப்பாட்டையும் உருவாக்கவும் வறுமையைப் போக்கவும் முடிந்த மட்டும் விரைவில் ஜனநாயத்தை புனருத்தாரணம் செய்யவும் வாக்குறுதியளித்தார்.

12 மாதங்கள் கழிந்து சென்ற போதிலும் இந்த வாக்குறுதிகளில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. பொருளாதாரம் இன்னமும் கத்தி முனையில் நின்று கொண்டுள்ளதோடு வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சி அடிப்படை ஜனநாயக உரிமைகள் இன்மை காரணமாக பொதுமக்களிடையே அதிருப்தி வளர்ச்சி கண்டு வருகின்றது. முஷாரப் ஆட்சி கண்டனத்துக்கு உள்ளாகி இருப்பது அரசியல் எதிர்ப்புக் காரணமாக மட்டும் அல்ல. உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் உட்பட்ட ஆளும் பிரமுகர்களிடையேயான ஆதரவாளர்களிடம் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

கடந்த அக்டோபர் இறுதியில் இடம்பெற்ற முஷாரப்பின் ஆட்சியின் சாதனை பற்றிய முக்கிய இராணுவ தளபதிகளின் ஒரு கூட்டம் முஷாரபை அதிர்ச்சி காண வைத்தது. ஏ.எப்.பி. (AFP) செய்தியின்படி: "நிலைமை மேலும் மோசமடையுமானால் பொதுமக்களின் கோபத்தை தணியச் செய்ய ஒரு சிவிலியன் பிரதமரை நியமனம் செய்வதை பற்றி இராணுவத் தளபதிகள் கலந்துரையாடியதாக அரசியல், இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன".

இதற்கு பதிலளித்துப் பேசிய முஷாரப் கூறியதாவது: "நாம் செயற்படாது போனால் நாட்டைக் கொண்டு செல்லக் கூடிய ஒருவரைக் கொண்டுவருவதையிட்டு சிந்திக்கும் முதலாவது பேர்வழியாக நான் இருப்பேன்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து வரும் நெருக்கடியைத் தொகுத்துக் கூறுகையில் முஷாரப் கூறியதாவது: "பாகிஸ்தான் கடும் சுகவீனம் கண்டுள்ளது. சிறப்பாக உள்நாட்டு, வெளிநாட்டு நிலைமை காரணமாக பாகிஸ்தானை ஆளுவது கஷ்டமாக இருக்கலாம். தீவிரவாதம், அணுவாயுத விவகாரம், போதை வஸ்துகள், காஷ்மீர், ஆப்கானிஸ்தான் பற்றிப் பேசும்போது இது இன்னும் மோசமடைகிறது".

இராணுவத்திலான பிளவு, ஆட்சி உள்நாட்டு, வெளிநாட்டு நெருக்குவாரங்களுக்கு உள்ளாகியுள்ளதை பிரதிபலிக்கின்றது. அமெரிக்காவும் ஏனைய பெரும் வல்லரசுகளும் முஷாரபின் சதிப்புரட்சியை மறைமுகமாக அங்கீகரித்த போதிலும் அவை முஷாரப் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார நடவடிக்கைகளை அமுல் செய்ய தவறியமை, இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக தாக்குதல் நடாத்த தவறியமை, காஷ்மீர் விவகாரம் தொடர்பான இந்தியாவுடனான மோதுதலைத் தணிக்க தவறியமை என்பவற்றை அதிகரித்த அளவில் விமர்சனம் செய்தன. 1998ம் ஆண்டின் அணுவாயுத சோதனைகளைத் தொடர்ந்து அமெரிக்கா, சர்வதேச நாணய நிதியம் கடன்களை பெருமளவில் தடுத்ததோடு திணிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை இன்னமும் தளர்த்தவில்லை.

பிரித்தானிய எக்கோனமிஸ்ட் (Economist) சஞ்சிகையில் வெளியான "பாகிஸ்தானின் ஒரு உதவாக்கரையான சர்வாதிகாரி" என்ற தலைப்பிலான ஒரு ஆசிரியத் தலையங்கம் முஷாரபின் ஒரு வருடகால ஆட்சியை புண்படுத்தும் விதத்திலான ஒரு மதிப்பீட்டை வெளியிட்டது. "பாகிஸ்தானின் பொருளாதார எதிரிகள் பெரிதும் முன்னேற்றம் கண்டதாக இல்லை. கடந்த ஏப்பிரலில் இருந்து ஏதும் புதிய நிதியை சர்வதேச நாணய நிதியம் வழங்கச் செய்ய பாகிஸ்தான் தவறிவிட்டது. அரசாங்கம் பரந்த அளவிலான ஒரு வரி வலை முறையை அமுல் செய்யும் வரையும் இவ்விதம் செய்வது சாத்தியம் இல்லை. தற்போதைக்கு நாட்டின் 150 மில்லியன் சனத் தொகையில் 1 வீதத்துக்கு சமமானோர் எந்த ஒரு வரியும் செலுத்துவதில்லை".

'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் "மற்றொரு சர்வாதிகாரி சரியான மொட்டை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. நல்ல அறுவடைகள் வளர்ச்சியை தற்செயலாக உயர்த்திக் காட்டினாலும் ஜெனரால் முஷாரப் பொருளாதார சீர்திருத்தச் சவாலை பெருமளவுக்கு தலைமூழ்கச் செய்துள்ளார். அவர் இராணுவத்தின் உள்ளேயான ஊழலைப் புறக்கணித்தார். அவர் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக கண்டிப்பான போக்கைக் கடைப்பிடிக்கத் தவறினார். இந்தியாவுடனான யுத்தத்தினால் தனது நாட்டுக்கு ஏற்படக்கூடிய பெரும் ஆபத்தைக் குறைக்க எதுவும் செய்யாது விட்டார்".

முஷாரப்புக்கு எதிராக வளர்ச்சி கண்டுவரும் அமைதியீனம் நாட்டின் ஜனநாயகத்திலான குறைபாட்டையிட்டு அக்கறைப்பட்டுக் கொள்ளவில்லை. ஆனால் மாறாக இந்தியத் துணைக்கண்டத்திலான மூலோபாய உறவுகளிலான மாற்றங்களைப் பிரதிபலிக்கின்றது. குளிர்யுத்த காலத்தில் அமெரிக்கா ஒரு கண்டிப்பான இராணுவ சர்வாதிகாரத்தை பாகிஸ்தானில் ஆதரித்தது. முன்னைய சோவியத் யூனியனுடனான இந்தியாவின் இராஜதந்திர உறவுகளுக்கு எதிராகவும் ஆப்கானிஸ்தானத்தில் இருந்த சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிரான இஸ்லாமிய அடிப்படைவாத கொரில்லாக்களுக்கு ஆதரவு வழங்கும் செயற்பாட்டுத் தளமாகவும் இதைக் கையாண்டது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கிளின்டன் நிர்வாகம் இப்பிராந்தியத்திலான அதனது முதலாவது பொருளாதார, மூலோபாய பங்காளியாக இந்தியா பக்கம் குறிப்பிடத் தக்க விதத்தில் நகர்ந்தது. இதன் பெறுபேறாக பாகிஸ்தானுடனான உறவுகள் குறிப்பிடத்தக்க விதத்தில் பாதிக்கப்பட்டன.

கடந்த வருடம் அமெரிக்கா தான் இந்தியா பக்கம் சாய்ந்து கொண்டுள்ளதை சமிக்கை செய்தது. பாகிஸ்தான் இராணுவத்தின் மறைமுக ஆதரவு பெற்ற ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய கெரில்லாக்கள் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் கார்ள் பிராந்தியத்துக்குள் கைப்பற்றப்பட்ட விரகி முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இருந்து வாபஸ்பெறப்பட வேண்டும் என அமெரிக்கா கோரியது. அமெரிக்காவுக்கு தலைவணங்கிப் போக மாஜி.பிரதமர் ஷெரிப் எடுத்த தீர்மானம் பாகிஸ்தான் இராணுவத் தளபதிகளிடையேயும் கணிசமான அளவு ஆத்திரத்தை தூண்டியதோடு, முஷாரபை சதிப் புரட்சியிலும் ஈடுபடத் தூண்டியது. முஷாரப், ஷெரிபினால் அமுல் செய்யப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பையும் -பொதுமக்களின் வெறுப்புக்கு இடமான விற்பனை வரி திணிப்பு உட்பட- சுரண்டிக் கொள்ள முடிந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிளின்டனின் இந்திய விஜயம், பாகிஸ்தான் எந்தளவுக்கு தனிமைக்குள் தள்ளப்பட்டுவிட்டது என்பதை வெளிப்படுத்தியது. அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் இந்திய அரசாங்கத்துடனும் வர்த்தகப் பிரமுகர்களுடனும் பரந்த அளவிலான பேச்சுவர்த்தைகளை நான்கு நாட்கள் நடாத்தினார். முஷாரபுக்கு கட்டளைகளை விதிக்க ஒரு சில மணித்தியாலங்களை கிளின்டன் பாகிஸ்தானில் செலவிட்டார். கென்யாவிலும் தன்சானியாவிலும் உள்ள தனது தூதரகங்கள் மீதான பயங்கரவாதக் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பாளி என அமெரிக்கா கூறும் சவூதி அரேபிய கோடீஸ்வரர் ஓசாமா பின் லேடனை தன்னிடம் ஒப்படைக்கும்படி ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்களுக்கு முஷாரப் நெருக்குவாரம் கொடுக்க வேண்டும் என அமெரிக்கா கோருகின்றது.

பொருளாதார தேக்கநிலை

முஷாரப் இராணுவ ஆட்சியாளர்கள், சர்வதேச நாணய நிதியம் 1.56 பில்லியன் டாலர் கடன்களை வழங்கக் காட்டும் தொடர்ச்சியான தாமதத்தின் பெறுபேறாக பெரும் கடன் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இல்லாமல் பாகிஸ்தானால் வெளிநாட்டுக் கடன்களான 38 பில்லியன் டாலர்களை மீள ஒழுங்குபடுத்தவும் கடன் செலுத்தாமல் போகும் ஆபத்தைத் தவிர்க்கவும் முடியாது போயுள்ளது. பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன் அதனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) அரைவாசிக்கு சமமானது. இவ்வாண்டு இறுதியில் 5 பில்லியன் டாலர்கள் திருப்பிச் செலுத்தவேண்டி உள்ளது. உத்தியோகபூர்வமான தரவுகளின்படி பாகிஸ்தானின் வெளிநாட்டு நாணய கையிருப்புகள் 1 பில்லியன் டாலர்களாக உள்ளன. ஆனால் சில வெளிநாட்டு ஆய்வாளர்களின்படி இது அந்த புள்ளிவிபரங்களின் மூன்றில் ஒரு பங்காகும்.

பாகிஸ்தானிய நிதி வட்டாரங்களில் பெரும் பதட்டம் நிலவுகின்றது. சர்வதேச நாணய நிதியம் மீண்டும் நாட்டுக்கு எதையும் வழங்கப் போவதில்லை என்ற வதந்தி அக்டோபர் இறுதியில் பரவத் தொடங்கியதும் கராச்சி பங்குமுதல் சந்தை புள்ளிகள் திடீரென 1545ல் இருந்து 1502 ஆக 43 புள்ளிகளால் வீழ்ச்சி கண்டது. முஷாரப் சந்தைகளை சாந்தப்படுத்தும் பொருட்டு "எவரிடம் இருந்தும் கிடைக்கும் கடன்களில் தங்கியிராத ஒரு சுயசார்பு (Self-Reliance) பொருளாதாரத்தை அடைய முயற்சிக்கின்றோம்". எவ்வாறெனினும் அதே சமயம் அவர் பெரிதும் அவசியமாகியுள்ள நிதிகளை பெற்றுக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை திருப்தி செய்ய அவஸ்தைப்பட்டு வருகின்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கோரிக்கைகளாவன, ஜீ.எஸ்.ரீ.யை (GST) உள்ளடக்கிய விதத்திலான வரிச் சீர்திருத்தம், தனியார்மயத்தை துரிதப்படுத்தல், பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு நிலத்தை கொடுப்பதை இலக்காகக் கொண்ட நிலச் சீர்திருத்தம் என்பவையாகும். முஷாரப் ஒரு ஜீ.எஸ்.ரி.யை அமுல் செய்ய முயற்சித்தார். ஆனால் ஷெரிப் அரசாங்கத்தைப் போலவே இதுவும் சிறிய கடைச் சொந்தக்காரர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகியது. இதனால் இத்திட்டத்தை நிறுத்திக் கொள்ளத் தள்ளப்பட்டார்.

ஜெனரால் முஷாரப் தாம் ஒரு மாதத்துக்கு ஒரு சொத்தை தனியார்மயமாக்க நினைத்துள்ளதாகவும் அதன் விற்பனை மூலம் 4 பில்லியன் டாலர்களை திரட்டிக் கொள்ளலாம் என எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்தார். ஒரு தொகை பாரிய அரச நிறுவனங்கள் -பாகிஸ்தான் தொலைத் தொடர்பு (Pakistani Telecommunication) அரசுடமை வங்கிகள், கைத்தொழில் துறைகள் ஆகியன இவ்வாண்டு இறுதிக்குள் விற்றுத் தள்ளுவதற்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.

பணவீக்கம், அரச செலவீனங்கள் வெட்டு, வேலையின்மையின் பெரும் அதிகரிப்பு காரணமாக தொழிலாளர்களதும் ஏழைகளதும் வாழ்க்கைத் தரம் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சி கண்டுள்ளது. ஆகஸ்டில் அரச கட்டுப்பாட்டிலான எண்ணெய் விலைகள் 23 வீதத்தினால் அதிகரித்ததோடு ஜூலையில் இருந்து பாகிஸ்தான் ரூபாவின் பெறுமதி 9.5 சதவீதத்தினால் தேய்ந்து போயிற்று. கடந்த ஒரு ஆண்டாக சீனி, கோதுமை மாவு, தேயிலை விலைகள் மும்மடங்காகியதோடு ஏனைய அடிப்படை வீட்டு நுகர்வுப் பொருட்களின் விலைகள் 30 சத வீதத்தினால் உயர்ந்தது.

ஒரு பொருளாதார அறிக்கையின்படி "பொருளாதாரத்தை இரத்தச் சோகை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறுமனே 2.7 வீதத்தினால் வளர்ச்சி கண்டது. சனத்தொகை வளர்ச்சியில் ஏற்பட்ட 2.6 வீத வளர்ச்சியை தாண்டவே சரியாக போயிற்று. மக்களின் எண்ணிக்கையின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தி 450 டாலர்கள் மட்டுமே. பாகிஸ்தானியர்களில் 85 சதவீதத்தினர் ஒரு நாளைக்கு 2 டாலருக்கும் குறைவாகவே வருமானம் பெறுகின்றனர். 15 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையினரில் அரைவாசிக்கும் அதிகமானோர் படிப்பறிவற்றவர்கள். குழந்தை பிறப்பு மரணம் 1000 உயிர்ப் பிரசவங்களுக்கு 91 ஆக உள்ளது".

பாகிஸ்தான் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 வீதத்தை மட்டும் கல்விக்கும் 1 சதவீதத்துக்கும் குறைவானதை சுகாதாரத்துக்கும் செலவிடுகின்றது. மொத்தத்தில் இவை பாகிஸ்தானின் இராணுவச் செலவீனங்களின் 4 சதவீதத்துக்கும் குறைவானது. பொருளாதார மறுசீரமைப்பும் தனியார்மயமாக்கமும் கணிசமான அளவு வேலை வாய்ப்புக்களை வெட்டித் தள்ளியுள்ளது. அரச வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டு மறுசீரமைக்கப்படுவதற்கு முன்னதாக அரசுடமை பாகிஸ்தான் உருக்கு கைத்தொழிலில் 5600க்கும் அதிகமான வேலைகள் வெட்டித் தள்ளப்படும். வங்கி மறுசீரமைப்பு வங்கி ஊழியர் எண்ணிக்கையை 20534ல் இருந்து 14900 ஆக வெட்டிக் குறைக்கும்.

வேலைவாய்ப்பு இழப்பு, நலன்புரி சேவை வெட்டு, வரி அமைப்பு மாற்றங்கள், விலைவாசி உயர்வு என்பவற்றை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் தொழிலாளர் சம்மேளனம் (Pakistan workers Federation) எண்ணெய், எரிவாயு, மின்சாரம் விலை உயர்வை எதிர்த்தும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கோரியும் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டது. சிறிய வர்த்தகர்கள் வரி அமைப்பு மாற்றத்தை எதிர்த்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் அரசாங்கம் தனது வருமானத்தை 43.8 சதவீதத்தினால் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இராணுவ ஆட்சியாளர்கள் 2002ம் ஆண்டுகளில் பாகிஸ்தானை ஜனநாயகத்துக்கு திருப்பும் தமது கோரிக்கைகளை அவமானம் செய்யும் முறையில் தனது கொள்கைகளை திணிக்க அப்பட்டமான அடக்குமுறைகளில் ஈடுபட்டுள்ளது. இராணுவ ஆட்சியாளர்கள் தேசிய பொறுப்பு சட்டத்தின் கீழ் (National Accountability Ordinance) அரசியல் எதிர்ப்பாளர்களை குற்றப்பத்திரம் இல்லாமலே 90 நாட்களுக்கு தடுத்து வைக்கலாம். இரண்டு மாஜி. அமைச்சர்களான முஸாஹீட் ஹுசைனும் செளத்ரி நிஸார் அலிகானும் சதிப்புரட்சி இடம்பெற்றதில் இருந்து குற்றப்பத்திரிகை இல்லாமலே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஷெரிப் ஆட்கடத்தல், பயங்கரவாதம் முதலான பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் ஒரு விசேட பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதோடு குற்றவாளியாகக் காணப்பட்டு ஆயுட்காலச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளார். முஷாரப் இலங்கையில் இருந்து திரும்பிய தமது விமானத்தை தரையிறங்க விடாது தடுத்து கொலை செய்ய முயன்றதாக ஷெரீப் மீது குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சிந்து (மாகாண) உயர்நீதிமன்றம் ஷெரீபின் தண்டனைக்கு எதிரான அவரது மேன்முறையீட்டை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்றம் செல்ல உள்ளது. இராணுவ ஆட்சியாளர்கள் சதிப்புரட்சியின் சட்டரீதியான தன்மையை அங்கிகரிக்க மறுத்த நீதிபதிகளை மாற்றி அமைத்துள்ளனர்.

மாஜி. பிரதமரின் மனைவியான குல்சொம் ஷெரீப் முஷாரப்புக்கு எதிரான ஒரு எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட முயற்சித்த வேளையில் அவர் பயமுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளார். அவளது குடும்பத்தில் உள்ள சகல ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரது தொலைபேசி தொடுவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. மாஜி.பிரதமரும் ஷெரீப் ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கியவருமான பெனாசீர் பூட்டோ தொடர்ந்தும் நாடு கடந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் (PPP) ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கும் (PML) பாகிஸ்தானில் ஜனநாயகத்தை புனருத்தாரணம் செய்வது தொடர்பான ஒரு பொது வேலைத்திட்டம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இந்தக் கசப்பான போட்டியாளர்களிடையேயான உறவுகள் பெரிதும் வரையறுக்கப்பட்டதாகவே உள்ளன. இவ்விரு கட்சிகளும் அக்டோபர் 12ம் திகதியை 'கரிநாளாக' (Black Day) பிரகடனம் செய்ததோடு, இராணுவத்தினால் நசுக்கப்பட்ட எதிர்ப்புகளையிட்டும் அறிவித்தனர். ஏற்கனவே 100 மக்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவைத் தளமாக கொண்ட மனித உரிமைகள் அவதானிகள் (Human Rights Watch) சமீபத்தில் அடாவடித்தனமான இராணுவத் தடுப்புக்காவல்கள், அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான சித்திரவதைகள் பற்றிய விபரங்களைக் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஒன்று பைசலாபாத் மாகாண சபை உறுப்பினரான ரண சனாலனின் தடுப்புக் காவல், சித்திரவதை பற்றியதாகும். "அவர்கள் எனது கைவிலங்குக்கு ஊடாக கயிற்றைப் போட்டு என்னை மேலே கட்டித் தூக்கினர். இதனால் எனது தலை நிலத்தில் முட்டும் விதத்தில் தொங்கியது" என அவர் தெரிவித்தார். எனக்கு முன்னால் ஒருவர் வந்து நிற்பதை என்னால் உணர முடிந்ததோடு சடுதியாக ஒரு சாட்டை முதுகில் அடித்தது... ஒரு டாக்டர் எனது நாடி ஓட்டத்தையும் இதயத் துடிப்பையும் பரிசோதித்தார். சாட்டை அடி போடும் பேர்வழி மீண்டும் வந்து மேலும் நான்கு தடவை அடிபோட்டார்".

அக்டோபர் 31ம் திகதி வெளியான 'டோன்' (Dawn) பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கம், சிறைச்சாலைகள் 'பிரஷர் குக்கர்கள்' போலாகிவிட்டதாகவும் கைதிகளால் நிறைந்து வழிவதாகவும் மிருகத்தனமான கலாச்சாரத்துக்கு பேர்போனதாகவும் விளக்கியிருந்தது. டீரா கேசி கான் (Dera Ghesi Khans Central Jail) மத்திய சிறையில் ஆகஸ்ட் மாதத்திலும், ஹைதராபாத் சிறையில் செப்டம்பரிலும், பெஷாவார் மத்திய சிறையில் கடந்த மாதத்திலும் ஒரு தொகை சிறைக் கலவரங்களும் கிளர்ச்சிகளும் இடம்பெற்றன.

இராணுவ ஆட்சியாளர்கள் ஆட்சியில் பிடியைக் கொண்டிருப்பது ஆட்டங்கண்டு போனதும் முஷாரப் நாட்டின் இராணுவ புலனாய்வு ஏஜன்சியான கடைகெட்ட ஐ.எஸ்.ஐ. (ISI) மீது பெரிதும் தங்கியுள்ளார். ஐ.எஸ்.ஐ.யின் ஒரு மாஜி.தலைவர் ஓய்வு பெற்றதன் பின்னர் சேவைக்கு மீண்டும் அழைக்கப்பட்டு பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார். மற்றொரு மாஜி.உளவுச் சேவை தளபதி தகவல் தொடர்பு அமைச்சராக சேவையாற்றுகிறார்.

இந்தச் சகல சாட்சியங்களும் முஷாரப் ஆட்சி வெகு வேகமாக ஆதரவை இழந்து வருவதை எடுத்துக்காட்டுகின்றது. எதிர்ப்புக்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்குமான இதனது ஒரே பதில் அதிகரித்த அளவிலான அடக்குமுறையேயாகும். முஷாரப் ஒரு ஆண்டைப் பூர்த்தி செய்திருக்கலாம்; ஆனால் இந்த ஆட்சி இன்னொரு ஆண்டுக்கு நின்று பிடிக்குமா என்பது சர்ச்சைக்குரியது.