World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

From impeachment to a tainted election: The conspiracy against democratic rights continues

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்:

அரசியல் குற்றச்சாட்டு தொடக்கம் கறைபடிந்த தேர்தல் வரை: ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான சதி தொடர்கிறது

By the Editorial Board
10 November 2000

Use this version to print

புளோரிடா (Florida) மாநிலத்தில் பிரமாண்டமான அளவு தேர்தல் மோசடிகள் பற்றிய சாட்சியங்கள் குவிந்துவரும் வேளையில் ஜனாதிபதி தேர்தல் இயக்கத்தில் தாம் வெற்றி பெற்றதாக பிரகடனம் செய்யும் புஷ்சின் வெட்கக் கேடான முயற்சிகள், அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளை அடியோடு அவமானம் செய்வதை அம்பலப்படுத்தியுள்ளது. 1998-99ல் தீவிர வலதுசாரிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருந்த குடியரசுக் கட்சி இரு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அரசியல் குற்றச்சாட்டு (Impeachment) மூலமும் பில் கிளின்டன் வழக்கு மூலமும் தலைகீழாக மாற்ற முயன்றனர். குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரின் சகோதரர் தலமையிலான புளோரிடா மாநில அரசாங்கத்தில் தாம் கொண்டுள்ள பதவியை பாவித்து இப்போது அது முழுமனே ஜனநாயக எதிர்ப்பு விதிமுறைகளின் மூலம் 2000ம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல்களை கடத்தி திசை திருப்ப முயற்சிக்கின்றது.

இந்த விடயம் கோர் (Gore) பெருமளவிலான வாக்குகளை வெற்றிகொண்டார் என்ற உண்மைக்கு வெகு அப்பால் செல்கின்றது. ஆனால் இன்னமும் அமெரிக்காவில் உள்ள பண்டைய, ஜனநாயகமல்லாத தேர்தல் குழு (Electoral College) விதிமுறை ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதை மறுக்க இடமுள்ளது. உண்மையில் தற்சமயம் புஷ் பெரும்பான்மை வாக்கு, தேர்தல் குழு இரண்டிலும் பின்னால் இழுபட்டு செல்கின்றார். இறுதியில் அவர் தேர்தல் குழு அடிப்படையில் 271-267 வாக்கு வித்தியாசத்தில் -வெற்றிபெறுவது கறைபடிந்து போன புளோரிடா வாக்களிப்பு முடிவுகளிலேயே தங்கியுள்ளது.

ஆபத்தான புளோரிடா எல்லையில் ஆயிரக்கணக்கான கோர் ஆதரவு வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 19,000 வாக்குகள் பாம் பீச் கவுன்டியில் (Palm Beach County) செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளன. ஏனெனில் குறைபாடான வாக்குச் சீட்டு மக்களை ஜனாதிபதிக்கு ஒரு கோடு அல்லது இரு கோடுகளை துளை போட வைத்துள்ளது. அந்த மாகாணத்தில் பல்லாயிரக் கணக்கான வாக்குகள் தவறான விதத்தில் அதிதீவிர வலதுசாரியான பட்ரிக் புக்கானனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தவறான அதே வாக்குச்சீட்டே இதற்கும் காரணம். கணனிகளின் "செயலிழப்பு" வொலுசியா மாகாணத்தில் கோரின் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையில் ஒரு திடீர் வீழ்ச்சி ஏற்படச் செய்தது. மியாமி மெட்ரோ (Miami Metro) பகுதியிலும் கிராமப்புற பன்ஹன்டில் (Panhandle) மாநிலத்திலும் வாக்களிப்பு நிலையங்களில் கறுப்பு இன வாக்காளர்கள் தள்ளிவைக்கப்பட்டதோடு பயமுறுத்தவும் பட்டனர்.

தேர்தல் நடைபெற்ற இரண்டு நாட்களின் பின்னர் வாக்குச் சீட்டு கையாடல் முயற்சிகளுக்கு எதிரான கிளர்ச்சிகள் பொதுமக்களின் எதிர்ப்பை உருவாக்கியது. பல நூற்றுக்கணக்கான புளோரிடா கிவி கல்லூரி மாணவர்கள் -முக்கியமாக கறுப்பு இனத்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு டல்லாஹாசியில் உள்ள மாநில தலைநகரிலும் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் மறியலையும் நடாத்தினர். பாம் பீச் கவுன்டியில் நூற்றுக்கணக்கான முதிய யூத வாக்காளர்கள் தேர்தல் தினத்தன்று இடம்பெற்ற முறை கேடுகளை கண்டிக்க அங்கு கூடினர். பலர் தமது வாக்குகள் யூதர் எதிர்ப்பு புக்கானனுக்கு (Patrick Buchanan) சார்பாக கணக்கிடப்பட்டுள்ளதையிட்டு அதிர்ச்சி தெரிவித்ததோடு தமக்கு மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரினர்.

பாம் பீச் தேர்தல் முடிவுகளே பெரிதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளன. இந்த கவுண்டியில் வாக்குகளை கைகளால் தனித்தனியாக எண்ணும்படி ஒரு உள்ளூர் நீதியரசர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து 67 கவுண்டிகளிலும் மாநில அரசாங்கம் உத்தரவிட்ட கணனிகளுக்கும் வாக்களிப்பு இயந்திரங்களுக்கும் இது பெரும் அவமானமாகியுள்ளது. அளிக்கப்பட்ட 6 பில்லியன் வாக்குகளில் புஷ் 225 வாக்குகளால் மட்டும் முன்னணியில் நின்று கொண்டுள்ளார்.

இந்த முறைகேடுகள் பொதுமக்களின் எதிர்ப்புக்களுடன் சேர்ந்து கோரின் பிரச்சாரத்தை வேறு திசையில் திரும்பச் செய்தது. புளோரிடா வாக்களிப்பு தொடர்பாக முழு அளவிலான சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க மாஜி. இராஜாங்க செயலாளர் வாரன் கிறிஸ்தோபர் புளோரிடாவில் கோரின் வாக்குகள் மீளக்கணக்கெடுப்புக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாம்பீச் வாக்களிப்பினை "சட்டவிரோதமானது" என வருணித்தார்.

கோரின் தேர்தல் பிரச்சார தலைவரான வில்லியம் டாலி ஒரு நாளுக்கு முன்னர் இந்த மாநிலத்தில் வெற்றி பெற்றதாக கூற மறுப்புத் தெரிவித்தார். அவர் கோர் புளோரிடாவில் மட்டுமன்றி நாடு முழுவதிலும் பெரும்பான்மை வாக்குகளை வெற்றி கொண்டுள்ளதாக பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்தார். "மக்களின் நம்பிக்கை நீடிக்க வேண்டுமானால் அல்கோர் புளோரிடாவில் வெற்றிபெற்றதாகவும் எமது அடுத்த ஜனாதிபதியாகவும் அறிவிக்கப்பட வேண்டும் என் டாலி தெரிவித்தார். "ஆயிரக்கணக்கான புளோரிடாவாசிகளின் வாக்குரிமையை பறிப்பது எமது வரலாற்றில் முன்னர் ஒரு போதிலும் இடம் பெறாத அநீதியாகும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

புஷ்சின் பிரச்சாரமும் குடியரசுக் கட்சியும் ஆரம்பத்தில் தமது கட்சி வாதத்தை நீடிப்பதிலும் பார்க்க சர்ச்சைக்கிடமான தேர்தல் என்பதை நிராகரித்து விடுவதிலேயே அக்கறை காட்டினர். வியாழக்கிழமை மாலை புஷ்சின் உதவியாளர்கள் ஒஸ்டினில் ஒரு வெற்றிவிழா கூட்டத்தை நடாத்த ஏற்பாடு செய்தனர். புளோரிடா வாக்குகள் மீள எண்ணப்பட்ட பெறுபேறுகள் இன்னமும் அறிவிக்கப்படாத நிலையிலேயே இதைச் செய்தனர். டெக்சாஸ் மாநில ஆளுனர் (புஷ்) இடைமருவு ஆட்சிக் குழுவை திரட்டிவருவதாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டவர் என்ற கோதாவில் நியமனங்களை திட்டமிட்டு வருவதாகவும் அவர்கள் அறிவித்தனர். புஷ்சின் தேர்தல் பிரச்சார அதிகாரிகளாக விளங்கிய டொன் இவான்ஸ் காள் றோவ், கரேன் ஹியூக்ஸ் ஆகியோர் பாம்பீச் கவுன்டியில் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றது என்ற செய்திகளை அடியோடு நிராகரித்தனர். இது ஜனநாயக உரிமைகளின் பேரிலான அவர்களின் குரோதத்தை காட்டிக் கொண்டது.

வியாழன் மாலையில் மீளக்கணக்கெடுப்பின்படி புஷ்சின் பெரும்பான்மை சூனியத்தை நெருக்கிக் கொண்டிருந்ததால் ஒரு அரைகுறை பின்னடிப்பு தென்பட்டது. வெற்றிவிழா கூட்டம் இரத்துச் செய்யப்பட்டது. மாஜி. இராஜாங்கச் செயலாளரான ஜேம்ஸ் பேக்கர் -புளோரிடா மாநிலத்தில் மீளக்கணக்கெடுப்புக்கு புஷ்சினால் நியமனம் செய்யப்பட்டவர்- நவம்பர் 17ம் திகதி வரை தேர்தல் முடிவுகள் வெளிவராது என அறிவித்தார். இது டல்லாசில் வெளிநாட்டு வாக்குச் சீட்டுக்கள் கிடைப்பதற்கான இறுதிக் காலக் கெடுவாகும். "ஜனாதிபதி தேர்தல்... ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

ஜனநாயக உரிமைகள் பற்றிய விவகாரம்

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி அல்கோரின் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆதரவு வழங்கவில்லை. நாம் ஜனநாயகக் கட்சியுடன் இணைக்க முடியாத அரசியல் வேறுபாடுகளைக் கொண்டுள்ளோம். இருந்தாலும் 2000ம் ஆண்டின் தேர்தல் முடிவுகளுக்கான போராட்டத்தில் ஜனநாயக உரிமைகள் தொடர்பான அடிப்படை விவகாரங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. தொழிலாள வர்க்கம் கரை ஓரத்தில் நின்று கொண்டு புஷ்சின் முகாமில் உள்ள தீவிர வலதுசாரி மூலகங்கள் தேர்தலைக் கொள்ளையடிப்பதற்கு விட்டுக் கொடுக்க முடியாது.

இதில் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் கிளின்டனுக்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு (Impeachment) நடவடிக்கைகளில் தலையெடுத்தவற்றுக்கு இணையானவை. சதிகார விதிமுறைகள் மூலம் அமெரிக்க மக்களின் ஜனநாயக தீர்ப்பை தூக்கி வீசும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

அரசியல் குற்றச்சாட்டின் போது தீவிர வலதுசாரிகளின் போலியான சட்ட நடவடிக்கைகளையும் சுயாதீனமான விசாரணை கமிட்டிகளையும் பயன்படுத்தி ஒரு தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக புனையப்பட்ட குற்றச்சாட்டுக்களை கொணர முயன்றனர். குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலான மக்கள் பிரதிநிதிகள் சபை, (House of Representatives) கிளின்டனுக்கு எதிரான பிரச்சார இயக்கத்துக்கு பரந்த அளவிலான பொதுமக்கள் எதிர்ப்பு இருந்து வருவதை 1998ம் ஆண்டின் காங்கிரசுக்கான தேர்தல்கள் அம்பலமாகிய சில நாட்களுக்குள் அரசியல் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தது. பொதுஜன அபிப்பிராயம் தொடர்பாக வலதுசாரிகள் தமது மூக்குகளில் அறைந்து கொண்டனர். அத்தோடு வெள்ளை மாளிகை மீதான தமது அரசியல் ரீதியில் ஊக்குவிக்கப்பட்ட தாக்குதலுக்கு முன் சென்றனர்.

புஷ்சும் காங்கிரசில் உள்ள குடியரசுக் கட்சி சகாக்களும் ஜனநாயக உரிமைகளுக்கு அடியோடு வன்மம் காட்டும் வகையில் வளர்ச்சி கண்டுள்ள ஆளும் பிரமுகர்களின் முழுத் தட்டின் சார்பிலும் பேசிக் கொள்கின்றனர். அவர்கள் ஜனநாயக உரிமைகள் மீது குதிரை ஓடவும் படுபயங்கரமான பிற்போக்கு சமூக கொள்கைகளை திணிக்கவும் அரச அதிகாரத்தின் சகல ஏஜன்சிகளும் தமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதில் செல்வம், வருமானம் மீதான வரிவிதிப்புக்களை அடியோடு ஒழித்தல், வர்த்தகங்கள் மீதான சமஷ்டி ஒழுங்கமைப்பு அதிகாரத்தை ஒழித்தல், சமூக பாதுகாப்பு திட்டம் (Social Security) வைத்திய (Medicine) உதவி, சமூக நலன்புரி திட்டத்தில் எஞ்சியுள்ள சகலதையும் ஒழிப்பதும் அடங்கும்.

பொதுஜன எதிர்ப்பு காரணமாக அரசியல் குற்றச்சாட்டு கிளின்டனை பதவியில் இருந்து அகற்றுவதில் தோல்வி கண்டது. ஆனால் இந்த வலதுசாரி பிரச்சாரத்தின் அரசியல் முக்கியத்துவம் தொடர்பாக பரந்தளவிலான குழப்பம் இருந்து வந்தது. ஜனநாயகக் கட்சிக்காரர்களின் கோழைத்தனமும் வெள்ளை மாளிகையிலான "பாலுறவு அவதூறு" (Sex-scandal) பற்றி வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் கிண்டிவிட்ட உணர்ச்சி பிரவாகமுமே இதற்குக் காரணம். ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தொடர்பாக இப்போது வளர்ச்சி கண்டுவரும் போராட்டத்தில் அரசியல் அணிதிரள்வு தெளிவாகியுள்ளது; பொதுஜன அபிப்பிராயத்துக்கு பெரிதும் தெளிவாக தெரிய வந்துள்ளது.

புளோரிடா வாக்களிப்பு மோசடி தொடர்பாக புஷ் நடாத்திவரும் நச்சுத்தனமான பிரச்சாரம் அவரது முழு வாயடிப்பு பிரச்சாரத்தினதும் -"வாஷிங்டனில் பிதற்றலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது"- பொய்யை எடுத்துக் காட்டுகின்றது. கட்சி சார்பு மோதல்களை முடித்து வைப்பதற்கு பதிலாக புஷ் பல்லாயிரக்கணக்கான ஜனநாயகக் கட்சி வாக்காளர்களை வாக்குரிமை அற்றவர்கள் ஆக்குவதன் அடிப்படையில் வெற்றி கண்டவராக கூறிக் கொள்வது அதை பிரமாண்டமான முறையில் மோசமடையச் செய்வதாகும்.

அத்தகைய ஒரு மோசடி வாக்குகளின் அடிப்படையில் புஷ்சை வெள்ளை மாளிகையில் இருத்துவதானது அமெரிக்க மக்களின் விருப்புக்கு மாறாக ஒரு அரசாங்கத்தை அவர்கள் மீது திணிப்பதைக் குறிக்கும். புளோரிடா கேவலங்களுக்கான ஒரே நிஜமான ஜனநாயகத் தீர்வு, சர்ச்சைக்கிடமான பிராந்தியங்களில் மீண்டும் ஒரு பூரணமான வாக்கெடுப்பை நடாத்தும்படி கோருவதேயாகும்.

ஜனநாயக உரிமைகள் மீதான இத்தாக்குதலை எதிர்த்து போராட ஜனநாயக கட்சிக்காரர்களைப் போலவே வேறு எவரும் அல்கோர் அன்ட் கம்பனி மீது நம்பிக்கை வைக்க முடியாது. ஜனநாயகக் கட்சிக் காரர்கள் அரசியல் குற்றச்சாட்டை சப்பாணி கட்டி நின்றே போராடினர். அத்தோடு தேர்தல் காலத்தில் அந்த விவகாரத்தை வேண்டும் என்றே குழி தோண்டிப் புதைத்தனர். இறுதி பெறுபேறுகளுக்கு நெருக்கமாக பங்களிப்பு செய்ததோடு வலதுசாரிகளுக்கு மற்றுமோர் வாய்ப்பை வழங்கினர். இறுதியில் மக்களுக்கு தெரியாத விதத்தில் கிளின்டனும் கோரும் ஜனநாயகக் கட்சி அமைப்பும் குடியரசுக் கட்சிக்காரர்களுடன் ஒரு நாற்றம் கண்ட சமரசத்தை உருவாக்கும் திசையில் இறங்கி செயற்பட்டனர். இந்தக் தேர்தல் இறுதியில் கோரை ஜனாதிபதி பதவியில் இருத்துவதுடன் நிறைவு பெற்றாலும் கூட திரைமறைவிலான கொடுக்கல் வாங்கல்கள் ஜனநாயக உரிமைகளுக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் சமூக நலன்களுக்கும் பெரிதும் கெடுதி விளைவிப்பதை உள்ளடக்கிக் கொள்வது நிச்சயம்.

இறுதி ஆய்வுகளில் எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய நெருக்கடி, அமெரிக்க ஜனநாயகத்தின் உடைவு கண்டு போன நிலைமையை எடுத்துக்காட்டியுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாரம்பரியமான ஜனநாயக வடிவங்களின் வெடிப்புக்கள் முதலில் அரசியல் குற்றச்சாட்டு நெருக்கடியின் போது வெளிப்பட்டது. இப்போது இந்த கறைபடிந்த தேர்தல் அமெரிக்க சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள பிரமாண்டமான பிளவுகளையும் பதட்டங்களையும் பிரதிபலிக்கின்றது. தேர்தலை களவாடும் குடியரசுக் கட்சிக்காரர்களின் இன்றைய முயற்சிகளை தொழிலாளர்கள் எதிர்ப்பது முக்கியமானதாக இருந்து கொண்டுள்ள அதே வேளையில் ஜனநாயக உரிமைகளுக்கான ஆபத்து முதலாளித்துவ சமுதாயத்தின் நெருக்கடியில் இருந்து தோன்றுகின்றது என்பதை அவர்கள் இனங்கண்டு கொண்டாக வேண்டும். நாட்டின் சமூக அடிப்படையானது ஒரு ஈடாட்டங்கண்டதும் வரலாற்று ரீதியில் முன்னொருபோதும் இல்லாத விதத்திலான சமூக சமத்துவமின்மையாலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையிலும் நாட்டின் செல்வத்தில் சுமார் அரைப்பங்கு சனத்தொகையின் இரண்டு சதவீதத்தினரின் கரங்களில் இருந்து கொண்டுள்ள நிலையிலும் ஜனநாயக வடிவங்களைக் கொண்ட ஆட்சி நீண்ட நாட்கள் நின்று பிடிக்க முடியாது.

வளர்ச்சி கண்டுவரும் நிகழ்வுகள் ஒரு ஜனநாயக, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு நிஜமான சுயாதீன அரசியல் இயக்கத்தின் உடனடி அவசியத்தை சுட்டிக்காட்டுகின்றது.