World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Election turbulence adds to US economic worries

தேர்தல் குழப்பம் பொருளாதரக் கவலைகளைக் கூட்டுகின்றன

By Nick Beams
16 November 2000

Use this version to print

சந்தைப் பூரிப்பினால் தக்கவைக்கப்பட்டிருந்த நிதி நிகழ்ச்சிப்போக்குகள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன என்ற அச்சத்திற்கு மத்தியில் குடியரசுத் தலைவர் தேர்தலில் தொடர்ந்து நிலவும் உறுதியிலாத்தன்மை அமெரிக்கப் பங்குச் சந்தையின் ஓயாது மாறுகிற தன்மையைக் கூட்டிவிட்டுள்ளது.

தேர்தல் வாரத்திலேயே தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நாஸ்டாக் (Nasdaq) குறியீட்டு எண் 12.2 வீதம் இழந்தது, அதேவேளை டோவ் (Dow) 2 சதவீதம் வீழ்ந்தது. இது கடந்த ஆண்டு மார்ச்சில் அதன் உயர்வுக்குப் பிறகு, இப்பொழுது நாஸ்டாக் 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக கடந்த வாரம் 3000க்குக் கீழ் சரிவுற்றது.

சந்தையின் வலுவற்ற தன்மையானது, டெல் கணனியின் பங்குகளின் நெருக்கடியில் கோடிட்டுக்காட்டப்படுகிறது. அடுத்த ஆண்டு 20 சதவீதம் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டது தொடர்பான அறிவிப்பின் பின்னர், அதுவும் அதனது முந்தைய மதிப்பீட்டிற்கும் குறைவானதுதான், பங்குவிலையானது 19 சதவீதம் அளவில் உடனடியாக வீழ்ச்சியடைந்தது. இது ஏனைய உயர்தொழில் நுட்ப பங்குமுதல்களையும் அதனுடன் இழுத்துச்சென்றது. டெல் இப்பொழுது அதன் உச்சியிலிருந்து 62 சதவீதம் வீழ்ச்சியடைந்தது, வோல்ட்கொம் ( WorldCom) 75 சதவீதமும் வயர்லெஸ் லீடர் குவால்கொம் (wireless leader Qualcomm) 63 சதவீதமும் சிஸ்கோ சிஸ்டம் (Cisco Systems) 39 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளன.

தேர்தலின் பின்விளைவாய் அதிகரித்த அரசியல் குழப்பங்களின் காட்சிகளுடன், அதன் முடிவான விளைபொருள் எதுவாயினும், பங்குமுதல் சந்தையானது வரிசையான காரணிகளால் ஆட்டம் கண்டுள்ளது. அது பிரதான பொருளாதார மற்றும் நிதிப்பிரச்சனைகள் உடனடியாக முன்னுக்கு வந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.

ஒட்டுமொத்த அமெரிக்கப் பொருளாதாரமானது உயர் வட்டி வீதங்களின் பாதிப்பு, எண்ணெய்விலை உயர்வு மற்றும் நுகர்வோர் தேவையில் தளர்ச்சி ஆகியவற்றின் கீழ் மெதுவாக வீழ்ச்சியடைந்து வருகிறது. உயர் தொழில் நுட்ப தொழில்துறைகளின் வருவாய் எதிர்பார்ப்புக்களில் குறைவை அறிவித்திருக்கும் நிலையில், அமெரிக்கப் பொருளாதரத்தின் அதிகமாகிவரும் கடன்சுமை பெரிதும் கவலை கொள்ளச் செய்துடன், நஷ்டமடைந்த டொட்-கம்பெனிகளின் (Dot-com companies) பட்டியல் நீண்டு வருகிறது.

நவம்பர் 13ல் வெளியிடப்பட்ட கட்டுரையில் பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டவாறு, செமிகண்டெக்டர்ஸ் உற்பத்தியில் ஏற்பட்ட தேக்கம் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்துறைகளில் முன்னேற்றங்கள் பற்றிய நம்பிக்கையின்மை ஆகிய வற்றால் தொழில்துறை பங்குமுதல்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கின்றன. வயர்லஸ், நல்்ல ஒலி அலைத் தொகுதி (broadband) மற்றும் ஏனைய உட்கட்டமைப்புக்களில் மூலதனச் செலவுக்கான பொறுப்புக்களின் சுமைகளின் கீழ் தொழிலாளரை வேலைக்கு அமர்த்தல் ஆகியன இவ் அச்சமாகும்.

மெதுவான வீழ்ச்சியின் தெளிவான அடையாளங்களுடன் பொருளாதார மந்தம் இன்னும் இல்லாத நிலையில், அமெரிக்கப் பொருளாதாரம் அதிகமாய் சார்ந்திருக்கும் சர்வதேச மூலதன வருகையின்மீது கவனம் குவிமையப்படுத்தப்பட்டிருக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

சரக்குகள் மற்றும் பணிகள் மீதான வர்த்தகப் பற்றாக்குறை 1999 ஜனவரி 15.9 பில்லியன் டாலர்களில் இருந்து 2000 மார்ச் அளவில் நேராக 30.4 மில்லியன் டாலர்கள் தாவியுள்ளது. இந்த மட்டத்தில் அது ஏறக்குறைய நிலையாக உள்ளது. அதிகரிக்கும் எண்ணெய் விலைகளாலும் அமெரிக்க டாலர் மதிப்பிறக்கத்தாலும் (அது அமெரிக்க ஏற்றுமதிகளில் போட்டி அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்கிறது) அடுத்த சில மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கலாம்.

ஒட்டுமொத்த செலுத்துகை சமநிலையின் (Balance of Payment) பற்றாக்குறை இப்போது ஆண்டுக்கு 400 பில்லியன் டாலர்கள் ஆகும் மற்றும் இது அடுத்த ஆண்டு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 5 சதவீதத்தை அடையும் அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் தனது கடன்களுக்காக நாளொன்றுக்கு 1 பில்லியன் டாலர்களுக்கு மேல் மூலதன வருகையை நம்பி உள்ளது.

இது ஏற்கனவே உலகப் பொருளாதாரத்தில் சமநிலையற்ற தன்மைக்கு கடும் வழிவகுத்துள்ளது. இந்த ஆண்டு அமெரிக்காவின் தற்போதைய கணக்குப்பற்றாக்குறை ஜப்பானின், ஐரோப்பிய மண்டலத்தின் மற்றும் கிழக்கு ஆசியப் பொருளாதாரங்களின் இணைந்த உபரிகளையும் விட தாண்டிச் செல்லும் என பன்னாட்டு நிதியத்தால் முன் கூட்டி உரைக்கப்படுகிறது. மூலதன வருகை அந்த அளவு முக்கியமானதாக இருக்கிறது. சர்வதேச முதலீட்டுக்கான ஒவ்வொரு மூன்று டாலர்களிலும் இரண்டு டாலர்கள் அமெரிக்காவுக்குள் செல்கிறது என மதிப்பிடப்படுகிறது.

பெரும்பாலான மூலதன வருகை கம்பெனிகளை இணைத்தல், கைப்பற்றல் இவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பெடரல் ரிசர்வின் புள்ளிவிரவரங்களின்படி, அமெரிக்க கம்பெனிகள் வெளிநாட்டுக் கம்பெனிகளுடன் இணைப்பினைச் செய்த மற்றும் கம்பனிகளைக் கைப்பற்றி வாங்கியதன் நிகரமதிப்பு 1997ல் 13 பில்லியன் டாலர்களில் இருந்து 1999ல் 152 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. அது இந்த ஆண்டு 86 பில்லியன் டாலர்களாக போய்க் கொண்டிருக்கிறது.

மற்றய எண் விபரங்கள் பங்குமுதல் சந்தை தொடர்ச்சியான அந்நிய மூலதன வருகையைச் சார்ந்துள்ளமையின் வளர்ச்சியைக் காட்டுகிறது. நவம்பர் 12 நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வந்த கட்டுரையின்படி: ''அந்நிய முதலீட்டாளர்கள் வாங்கிய அமெரிக்கப் பங்குகளின் நிகரமதிப்பு கடந்த ஆண்டு மதிப்பான 107.5 பில்லியன் டாலர்களில் இருந்து இந்த ஆண்டு 194 பில்லியன் டாலர்களைவிட தாண்டிவிடும் என்று செக்யூரிட்டிஸ் இண்டஸ்ரிஸ் அசோசியேசன் மதிப்பிட்டுள்ளது. இப்படிப்பட்ட வாங்குதல் இருந்தபோதும் ஒட்டு மொத்தச் சந்தையும் வீழ்ச்சியடைவது, அந்நிய தேவைக்கு பங்குமுதல்களின் விலைகள் எப்படி பாதிப்பை கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.''

பங்குமுதல் சந்தைகள் தொடர்ச்சியாக அந்நிய மூலதன வருகையினைச் சார்ந்திருத்தல் ``திகில் காட்சி`` என்று கூறப்படும் விவாதத்தை தூண்டிவிட்டுள்ளது. அந்தத் திகில் - பணத்தை வாபஸ் வாங்குகையில், டாலரின் மதிப்பில் கடும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும், வட்டிவீதங்களில் உயர்வை அழுத்திவிடும், சந்தைகளில் மேலும் வீழ்ச்சிக்கும் விலை மந்தத்திற்கும் வழிவகுக்கும்.

அமெரிக்காவுக்குள் பங்குமுதல் சந்தையைத் தக்க வைக்கவும் செலுத்துகைச் சமநிலை நெருக்கடியைத் தடுக்கவும் உதவுகின்ற அதேவேளை, அது உலகின் ஏனைய பகுதிகளில் அழுத்தத்தை விளைவிக்கும். கடந்தவாரம் பன்னாட்டுநிதியம் ஆர்ஜெண்டினாவுக்கு 7 பில்லியன் டாலர்கள் கடனை சிறப்பாக சேர்த்திருப்பதாக அறிவித்த பொழுது, அப்படிப்பட்ட அழுத்தங்களுள் சில வெளிப்படையாகத் தெரிந்தன. இது ஆர்ஜெண்டினா அடுத்த ஆண்டு அடைக்கப்படவேண்டிய வெளிநாட்டுக்கடன் 20 பில்லியன் டாலர்களை மீண்டும் செலுத்துதற்கு முதலீட்டாளர்களை நம்பச்செய்யும் நோக்கம் கொண்டு, வரிசையான அரசாங்க வெட்டுக்கள் பற்றிய குடியரசுத்தலைவர் டு லா ருவாவின் (De la Rua ) அறிவிப்பைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டது.

பண வாரியத்தின்கீழ் பெசோ (Peso) அமெரிக்க டாலருடன் தொடர்பு இணைக்கப்பட்ட நிலையில், உலகச் சந்தையில் அமெரிக்கப் பணத்தின் உயர்வானது ஆர்ஜெண்டினிய ஏற்றுமதியை வெகுவாய் பாதித்திருக்கிறது. அதனை மிஞ்சும் வகையில் நிதிச்சந்தைகளில் பொதுவான இறுக்கம், அமெரிக்காவிற்குள் பாயும் நிதிகளில் இருந்து பகுதியளவு எழுவது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

நவம்பர் 14, பைனான்சியல் டைம்ஸில், பூகோளப் பொருளாதார விமர்சகர் மார்ட்டின் வொல்ப் (Martin Wolf), ஆர்ஜெண்டினிய பணம் செலுத்தத்தவறுதல், பணமதிப்பிறக்கம் அல்லது இரண்டும் 1998ல் ரஷ்யாவின் பணம்கட்டத்தவறுதல் (Default) மற்றும் பணமதிப்பிறக்கத்தைத் தொடர்ந்து வந்த நெருக்கடியைப்போல, உலக அளவில் நிதிநெருக்கடியைத் தூண்டுமா என்ற கேள்வியை முன்வைத்தார்.`` `இல்லை,` என்பதாக விடை இருக்க வேண்டும்`` என்று எழுதினார். ''ஆனால் இப்பொழுது உலகப் பொருளாதார கட்டமைப்புக்குள்ளே தோன்றுகின்ற வலியுறுத்தல்கள் எளிதில் பாதிக்கக்கூடிய சந்தைப் பொருளாதாரங்களது உயிர்வாழ்வைக் கடினமானதாக ஆக்கியிருக்கிறது.''

ஆர்ஜெண்டீனிய பணம்கட்டத்தவறுதல், தற்போதைய குமுறல்களை கடுமையான நெருக்கடியாக மாற்றக்கூடும். அமெரிக்கப் பொருளாதாரம் ``கடினமான பகுதிக்கு செல்ல அஞ்சுதலைத்`` தவிர்க்கும் வரை இது நிகழ்வதற்கு வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டார். அமெரிக்காவில் தோ்தலால் உண்டுபண்ணப்பட்ட அரசியல் குழப்பம் பொருளாதார மற்றும் நிதிக்கவலைகளை மேலும் சோ்த்துள்ள போது, அத்தகைய நிகழ்ச்சியைச் சுட்டிக்கட்டும்் அறிகுறிகள் வளா்ந்து வருகின்றன.