World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

The US election: the conspiracy begins to unravel

அமெரிக்கத் தேர்தல் : சதி அம்பலமாகிறது

By Barry Grey
14 November 2000

Use this version to print

செய்தித்தாள்களில் வெளியான புதுச் செய்தி நவம்பர் 7-8 தேர்தல் இரவு நடந்த அசாதாரண திகழ்ச்சிகள் மீது மேலும் வெளிச்சம் போட்டுக்காட்டியது. அது George w. Bush ன் குடியரசுக்கட்சி பிரச்சாரம் தொலைக்காட்சி ஒளிபரப்பு கூட்டுத்தாபனங்களை மிதித்துக் தள்ளிக்கொண்டு குடியரசுத் தலைமையை களவான முறையில் அபகரிக்கும் அப்பட்டமான முயற்சியை சுட்டிக்காட்டியது.

திங்கட்கிழமையின் போது வாஷிங்டன் போஸ்ட், நியூயோர்க் டைம்ஸ் இரண்டும் புஷ் புளோரிடாவை எடுத்துக் கொண்டு தேர்தலில் வென்றார் என Fox செய்தி அலைவரிசையில் கடந்தவாரம் நள்ளிரவு அறிவிப்பை வெளியிட்ட அதிகாரி, George w. Bush மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளரது சகோதரன் புளோாிடா கவா்னா் ஜெப் புஷ் ஆகியோரது மைத்துனர் (John Ellis) ஆவாா்.

பிரச்சனைக்குரியவரான ஜோன் எல்லிஸ் (john ellis) fox ல் தேர்தல் முடிவுகளுக்கு பொறுப்பாக உள்ளார். ''புளோரிடாவில் தவறான தகவல்'' என்று தலையிடப்பட்ட , வாஷிங்டன் போஸ்ட்டின் தேர்தல் இயக்குனர் ரிச்சர்ட் மோரின் கட்டுரையின் படி , எல்லிஸ் தொலைக்காட்சிக்காக மாநில வாரியாக திட்ட ஏற்பாட்டைச் செய்கின்றதாகச் சொல்லப்படுகின்ற வாக்குக்கணிப்பு இணைத்திட்ட ஒளிபரப்புக் கோவை அமைப்பான, (voter news service) வாக்களிப்போர் செய்திச்சேவையிலிருந்து எத்தகைய அழைப்பும் இல்லாமல், எல்லிஸ் தனது மைத்துனர் வெற்றியாளர் என்று ஒருதலைப்பட்சமாக அறிவித்தார்.

FOX ன் பிரகடனத்தின் பின்னர் உடனடியாக, CNN, ABC, NBC மற்றும் CBS லிருந்து அதேமாதிரியான அறிக்கைகள் வரத்தொடங்கின. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல்கோர் அதன்பின் விரைவில் அவரது குடியரசுக் கட்சி எதிரணி ஆளுக்கு ஒப்புதல் தொலைபேசி அழைப்பைச் செய்தார். FOX ல் புஷ்க்கும் அவரது மைத்துனருக்கும் இடையில் உருவாக்கப்பட்ட சதியானது, திட்டமிட்ட உடனே வெளிப்பட்டது. கோர் தோல்வியை ஒப்புக்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட இருந்த வேளையில், புளோரிடாவில் ஜனநாயகக் கட்சி அலுவலர்களிடமிருந்து தொலைபேசிச் செய்தியை அவர் பெற்றபோது (புஷ்ஷின் வாக்கு வித்தியாசம் அறிவிக்கப்படிருந்ததைவிட மிகக்குறைவு மற்றும் வேகமாய் குறைந்துகொண்டிருக்கிறது என்று அறிந்த பொழுது) கோர், புஷ்ஷுடன் திரும்ப தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது ஒப்புதல் செய்தியை மாற்றிக் கொண்டார்.

மோர் எழுதுகிறார்; VNS புஷ்க்கு புளோரிடா என்று ஒருபோதும் கூறவில்லை. VNS ஆல் அளிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையை புஷ் கணிசமான அளவு முன்னணியில் இருப்பதாய் தொடர்ந்து காட்டிய நிலையில், புளோரிடா குடியரசுக் கட்சியினருக்கு என்று அறிவித்தது FOX செய்திதான். FOX இதனை அதிகாலை 2.16 க்கு அறிவித்தது. புஷ் வெற்றியாளர் என்று அறிவிக்கும் வஞ்சக புகழ்ச்சியான இம்முடிவு FOX ன் அழைப்பு மேசைக்கு பொறுப்பு வகித்த ஜோன் எல்லிஸ் ஆல் செய்யப்பட்டது. அத்துடன் அவர் புஷ்ஷின் கஸினாகவும் இருக்கின்றார்.

கடந்த புதன்கிழமை காலை 3 மணிக்கு அனைத்து ஒளிபரப்பு நிலையங்களும் புளோரிடாவில் புஷ் வெற்றி பற்றிய தங்களின் வெளிப்படுத்தல்களில் பின்வாங்கி இருந்ததுடன் குடியரசுத்தலைவர் பதவிக்கான போட்டி, முடிவை நெருங்கிக் கொண்டிருப்பதாகக் கூறின.

மோரின் வஞ்சகப் புகழ்ச்சிப்பகுதி குடியரசக் கட்சி வேட்பாளர் மற்றும் புளோரிடா கவர்னர் ஆகியோருடனான எல்லிஸ்ஸின் இரத்த உறவுகள் பத்திரிகை நிறுவனங்களுள் பொதுவாகத் தெரிந்த விஷயம் என்பதை தெளிவுபடுத்தியது. ஆனால் இதுவரை அவை பகிரங்கப் படுத்தப்படவில்லை.

திங்களில் வெளிவந்த நியூயோர்க் டைம்ஸ் முன்பக்கக் கட்டுரை, எல்லிஸ், புஷ் ஆதரவாளர் என்பதுடன் குடியரசக்கட்சி பிரச்சாரத்தின் உள் வட்டாரங்களுடன் நெருக்கமாகத் தொடர்புடையவர் என்றும் தெளிவுபடுத்தியது. டைம்ஸ் அரசியல் செய்தித் தொடர்பாளர் Richard.L.Berke னால் எழுதப்பட்ட கட்டுரை, புஷ் முகாமுக்குள் நடந்த தேர்தலுக்கு முந்தைய மூலோபாயம் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கலந்துரையாடல்கள் பற்றிக் குறிப்பிடுகையில், எல்லிசை (Ellis) அதிகம் மேற்கோள் காட்டுகின்றார் மற்றும் எல்லிஸ் "திரு புஷ்ஷுடன் எந்நேரமும் தொடர்பு கொள்ள கூடியவராக இருந்தார்" என்று குறிப்பிடுகின்றார்.

Post ம் சரி Times உம் சரி, குடியரசுக் கட்சியினர் பக்கம் தேர்தல் ஊசலாடும் முயற்சியில் பங்கேற்ற ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் அலுவலருக்கும் (Network official) புஷ் பிரச்சாரத்துக்கும் இடையிலான அரசியல் ரீதியான தகாத உறவினைப் பற்றி எந்தவித எச்சரிக்கையும் செய்யவில்லை. இந்தத் தீய நிகழ்வுகளுக்கான அவர்களின் அரசியல் பொறுப்பானது பத்திரிகை செய்திச் சாதனங்களுக்கும் குடியரசுக்கட்சி வலதுசாரி அணிக்கும் இடையிலான கள்ள உறவைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

எல்லிசின் (Ellis) பாத்திரத்தை அம்பலப் படுத்தல் கடந்த வாரம் செவ்வாய் மாலைக்கும் புதன் அதிகாலைக்கும் இடையில் படிப்படியாக வெளிப்பட்ட வியப்பூட்டும் சங்கிலித் தொடரான நிகழ்ச்சிகளை தணிப்படையச்செய்தது. அது பொதுவாக அமெரிக்கத் தேர்தலை சாதாரணமாக பொதுமக்களிடமிருந்து மறைக்கும் கோணத்தை ---பொதுவகாக செய்தி வெளிவருதலை கட்டுப்படுத்தும் பல் கூட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் பத்திரிக்கை சாதனங்களுக்கும் வலதுசாரி அரசியல் சக்திகளுக்கும் இடையிலான கூட்டுச் சதியை--- வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இரு கட்சிகளிலும் உள்ள அரசியல் இயக்கிகள் நன்கு அறிந்தவாறு, ஒளிபரப்பு கூட்டுத்தாபனங்கள் அமெரிக்க தேர்தல் நிகழ்ச்சிப்போக்கில் மந்தமான போக்கிற்கும் அதிகமாக செயல்படுவன, மற்றும் தேர்தல் இரவு மீதான அவற்றின் திட்டவெளிப்பாடுகள் இயக்கவிசையின் மீதும் மற்றும் கடும் போட்டியின் விளைவின் மீதும் கடும்பாதிப்பை கொண்டிருக்கு முடியும்.

ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் வாக்காளர் செய்திச்சேவையிலிருந்து தங்களின் மாதிரியை எடுத்து செவ்வாய் மாலை 7:50 மணியளவில் புளோரிடாவில் கோர் வெற்றியாளர் என்று அறிவித்த பொழுது, புஷ் வெற்றிக்கான முன்னேற்றங்கள் பாழ்பட்டுவிட்டதை உணர்ந்தனர். புஷ்ஷும் அவரது உயர்மட்ட உதவியாளர்களும் தங்களது விடுதி அறைகளில் இருந்து வெளியேறி கவர்னர் மாளிகைக்கு சென்றனர் மற்றம் ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்துடன் தொடர்புகொண்டு புளோரிடா போட்டியில் அவர்களது கருத்தை திரும்ப பெறுவதற்கு பதட்டமிக்க கொல்லைப்புற வழியை நாடினர்.

புளேரிடாவில் இலட்சக்கண்க்கான கோர் ஆதரவாளர்களின் வாக்குகள் ஒன்றில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது தவறுதலாக வலதுசாரி பற்றிக் புக்கானுக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது இப்போது தெளிவாகும். புளோரிடாவில் ஜனநாயக்கட்சியின் வெற்றி பற்றிய ஆரம்ப வெளிப்படுத்தல் தேர்தல் தொகுதியின் உணர்வுகளை துல்லியமாய் பிரதிபலித்த வாக்கு கணிப்பினை அடிப்படையாக கொண்டிருந்தது.

புஷ் பத்திரிக்கையாளர்களை கவர்னர் மாளிகைக்கு அழைக்கையில் முன்திட்டமிட்டிராத நடவடிக்கையை எடுத்தார். அங்கு அவர் பென்ஷில்வனியா (Pennsylvania) மற்றும் புளோரிடா மாநிலத்தின் ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வெளிப்படுத்தல்களை கண்டனம் செய்ததுடன் புளோரிடா தனக்கு சாதகமாகப் போகும் என கணித்தார். வேட்பாளர்கள் தாங்கள் வெற்றியை பிரகடனம் செய்யும் வரையிலோ அல்லது தோல்வியை ஒப்புக்கொள்ளும் வரையிலோ எந்த பகிரங்க அறிக்கையையும் வெளியிடக் கூடாது என்று எதிர்பார்க்கபடும் நிலைமையில், இந்த மூடிமறைக்கும் பத்திரிக்கை செய்திச்சாதன நிகழ்ச்சியானது தேர்தல் இரவின் வழக்கத்துடன் ஆழமாய் துண்டித்துக் கொள்வதாகும்.

புஷ் தலையீட்டின் சில நிமிடங்களுக்குள் ஒளிபரப்பு கூட்டுத்தாபனங்கள் திடீரென்று தங்களை பின் இழுத்துக்கொண்டன, கோர் பத்தியில் (column) இருந்து புளோரிடாவை எடுத்துவிட்டதுடன் அது இன்னமும் செய்யப்படவில்லை என அறிவித்தன. ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (network) செய்தி அறிவிப்பாளர் ''தவறான புள்ளி விபரம்'' என்ற தெளிவற்ற குறிப்பைத்தவிர உடனடியாக மீளப் பெற்றுக்கொண்டதற்கு வேறு விளக்கத்தை கூறவில்லை. புதன் அதிகாலை அளவில் தேசிய ரீதியிலான வெளிப்பாடு புளோரிடாவில் முடிவுகளை பாதிக்கும் என்பதில் தெளிவாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் Fox இல் அதிவலதுசாரி செய்திசாதனமான Mogul Rupert Murdoch, புளோரிடாவின் வெற்றியாளரும் அடுத்த அமெரிக்க குடியரசு தலைவரும் புஷ் என்று அசாதாரணமாக அறிவித்தது.

ஒளிபரப்பு கூட்டுத்தாபனங்களினால் செய்யப்பட்ட எல்லை மீறிய குட்டிக்கரணங்கள், புஷ் சகோதரர் அரச எந்திரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் மற்றும் புஷ்ஷின் மைத்துனர் இந்த மூன்று காரணிகளின் பாத்திரங்களும் --அதுவும் அதுவாகவே புஷ் பிரச்சாரம் மற்றும் ஒளிபரப்பு கூட்டுத்தாபனங்களின் சதி பற்றிய முழு அளவு விசாரணைக்கு செயல் இசைவு ஆணை வழங்க போதுமானது. இந்த உண்மைகள் அண்மைய அரசியல் நிகழ்வுகளின் உள்ளடக்கத்தில் வைக்கப்படும்பொழுது-- எல்லாவற்றுக்கும் மேலாக, இருமுறை தேர்ந்தேடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரை போலியான அரசியல் சட்ட ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் அகற்றும் குடியரசுக் கட்சியினரின் சதித்திட்டத்தை வைத்தால் --குற்றச்சதியின் வெளிப்படும் குறிப்புகள் துல்லியமற்ற மற்றும் கள்ளவாக்குகளின் அடிப்படையில் தேர்தலை மட்டு மீறி முந்தித்தள்ளும். தேர்தல் நாளின் பின்னர் புஷ் பிரச்சாரத்தால் எடுக்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையும் இந்நிகழ்ச்சிகளால் உண்டுபண்ணப்பட்ட பொருள்விளக்கத்திற்கு முட்டுக்கொடுக்கிறது. அதன் ஆத்திர மூட்டும் முயற்சியிலிருந்து தனது குடியரசு தலைமை மாற்றக் குழுவை அறிவித்ததன் மூலம் பொதுக்கருத்தை மிதித்துத்தள்ளியது மற்றும் புளோரிடாவின் துல்லியமான வாக்கு எண்ணிக்கையை தடுப்பதற்கான அதன் முயற்சிகள் வரை, வாக்காளர்களின் முடிவினை முன்னதாகக் கைப்பற்றுவதற்கு அது தீர்மானித்தது மற்றும் தேர்தலை தனக்கு சாதகமாக களவாடியது என்று எடுத்துக்காட்டியது.

புஷ் பிரச்சாரத்திற்கும் மற்றும் CNN, ABC, CBS, NBC மற்றும் புளோரிடாவில் கோரினது (Gore இனது) வாக்குகளையிட்டு முன்னர் கூறியதை ஒளிபரப்பு கூட்டுத்தாபனங்கள் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுத்த Fox இற்கும் இடையிலான கலந்துரையாடல்களின் தன்மை என்ன?

George w. Bush க்கும் அவரது சகோதரர் Jeb க்கும் புளோரிடாவில் வாக்காளரை மிரட்டி நடக்கச் செய்தல் மற்றும் வாக்கில் முறைகேடுகள் பற்றி என்ன தெரிந்திருந்தது? புளோரிடா தங்கள் முகாமில் முடியும் என்று அந்தளவுக்கு ஏன் உறுதியாய் இருந்தார்கள்?

புஷ் பிரச்சார இயக்கிகளுக்கும் Fox செய்தி பிரிவின் ஜோன் எல்லிசுக்கும் (John Ellis) இடையில் நடந்த கலந்துரையாடல்கள்தான் என்ன?

இவை புஷ் பிரச்சார மற்றும் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனங்களுக்கு விடுக்கப்பட வேண்டிய வினாக்களுள் சிலமட்டுமே ஆகும். கடந்தவார நிகழ்ச்சிகள் புஷ் வெள்ளை மாளிகையை கைப்பற்றினால், குடியரசு கட்சி வலதுசாரியினர் அரசு எந்திரத்தைத் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு ஜனநாயக உரிமைகளை நசுக்கி கீழே தள்ளுவர் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மேல் முன்திட்டமிடா தாக்குதலை தொடர்வார் என்பது தெளிவாகிறது. தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும்: புஷ்ஷைச் சுற்றியுள்ள சதிக் கூட்டம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கிரிமினல் வழிகளைப் பயன்படுத்த தயாராக இருக்குமேயானால், அடிமட்டத்தில் இருந்து வரும் தடைகளுக்கும் சமூக எதிர்ப்புக்களுக்கும் எதிராக தமது ஆட்சியை பாதுகாக்க என்ன வழிமுறைகளை கையாளும்?