World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா :ஸ்பெயின்

Basque separatists step up terrorist activities

பாஸ்க் பிரிவினைவாதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை அதிகரிக்கின்றனர்

By Peter Norden
25 August 2000

Use this version to print

பாஸ்க் பிரினைவாத அமைப்பான ETA (Euskadi Ta Askatasuna (சுதந்திரமும் பாஸ்க் நாடும்) ஸ்பெயின் முழுவதும் தனது பயங்கரவாத நடவடிக்கைகளை பாரியளவில் அதிகப்படுத்தியுள்ளது.

ஒன்பது மாதத்திற்கு முன்பாக யுத்த நிறுத்தம் முடிவடைந்தில் இருந்து,தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களினால் பதினொரு பேரை கொன்றதுடன் மேலும் பலரை காயமடையவும் செய்தது. இராணுவம் மற்றும் Guardia Civil உறுப்பினர்கள் உள்ளடங்கலாக, பழமைவாத El Mundo தினசரியினது பத்திரிகை நிருபர் ஆட்ச்சியிலுள்ள Popular Party (PP) உள்ளூர் அரசியல்வாதி, Basque இன் Guipuzcoa பிராந்தியத்தின் சோசலிசக்கட்ச்சியைச் சேர்ந்த பழைய ஆழுனர் ஸிணீனீரஸீ யிணீuக்ஷீமீரீuவீ, குய்ப்ஸ்கொவா தொழிலதிபர்கள் சங்கத் தலைவர்( Guipuzcoa Employers Federation) KordaUranga ஆகியோர் இதில் பலியாகினர்.

ஆகஸ்ட்7 இல், ETA அங்கத்தினர் எனக்கருதப்படும் நால்வர் காரில் சென்று கொண்டிருத்தபோது அது வெடித்துச் சிதறியதில் கொல்லப்பட்டனர்.அவர்களுள் ஒருவர் "விஸ்க்கயா கமாண்டோ(Vizcaya Commando)" என அழைக்கப்படுவதன் தலைவர் Francisco Rementeria ஆவார்.

கடந்த வருட முடிவில் 14 மாத கால யுத்த நிறுத்தத்தின் முடிவு அறிவிக்கப்பட்டதன் பின்பு ETA தனது பயங்கரவாத வேலைகளுக்குத் திரும்பியுள்ளது. யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த காலத்தில் இவ் அமைப்பு Aznar அரசாங்கத்துடன் Basque நாட்டிற்கு சுயஆட்சியை அதிகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்துவந்ததுடன், அதேபோது Basque பூர்சுவா வட்டத்தினுள் அதனது அரசியல் நிலைப்பாடுகளை ஸ்த்திரப்படுத்துவதிலும் முயன்றது.

பேச்சுவார்த்தைகள் சில உண்மையில் இரகசியமாகவே நடந்தேறின. ETA இனது கைதிகளை Basque சிறைச்சாலைக்கு மாற்றுவது மற்றும் இவ் இயக்கம் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவது என்பவற்றை மட்டுமே Aznar கலந்துரையாடுவதற்கு சம்மதித்தார். இக்குழுவினது அதிகப்படியான கோரிக்கை பிரான்ஸ் நாட்டினது மூன்று பிராந்தியங்கள் உள்ளடங்கலாக Basque பிராந்தியங்கள் இணைந்த சுதந்திர அரசு என்பதாய் இருந்தபோதிலும்-எந்தவொரு நிலமையின் கீழும் ETA விற்கு அரசாங்கம் Basque அரசியலில் அதிக செல்வாக்கு வழங்குவதற்கான தயாரிப்பபுக்களை செய்வில்லை.

இதற்கு மாறாக, Aznar பஸ்க் பிரச்சனைகளுக்கு பொலீஸ் வழிமுறையில் தீர்வுகாண்பது என்பதையிட்டு எந்தவொரு ஈடாட்டத்தையும் விெட்டடுவிடவில்லை, அத்துடன் இந்தக்காலகட்டத்தில் அவர் ETA வின் அங்கத்தவர்களை வேட்டையாடும்நடவடிக்கையை மேற்க்கொண்டார். ETA இந்த யுத்தநிறுத்தக் காலத்தை தன்னை ஸ்த்திரப்படுத்திக்கொள்வதற்கும் வெடிமருந்துகளையும் ஆயுதங்களையும் மேலும் இட்டு நிரப்புவதற்கும் பயன்படுத்தியதாகவே காணப்பட்டது, இது மீண்டும் வன்முறை வெடித்தெழுவதற்கு முன்னரான தயார்நிலைக் காலகட்டமாக மட்டுமே இருந்திருக்கும்.

Bilbao இல் ETA இன் நான்கு காரியாளர்கள் தாமாகவே இறந்துபோனது எப்படியான ஒரு அரசியல் முடிவுக்கட்டத்துக்குள் ETA தானாகவே சென்றுகொண்டிருக்கின்றது என்பதை தெளிவாக வரைந்து காட்யுள்ளது.

ETA 1959 யூலை 31 இல் Basque இன் ஒரு சில மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளினால் கட்டப்பட்டது. இதனது ஆரம்பக் கூறுகள் EKN ("Act") என்னும் மாணவர் இயக்கத்திற்குள்ளேயே இருந்தது. ETA வினது ஸ்தாபிதம் Basque இன் பாரம்பரிய தேசியவாத PNV கட்சியின் அரசியலுக்கு ஓர் பதிலாக அமைந்திருந்தது; இக்கட்சி பாசிஸ Franco இன் சர்வாதிகார ஆட்சியுடன் உடன்பாட்டை செய்துகொள்வதில் Basque இன் செல்வந்த முதலாளிகளது நலன்களை அதிகப்படுத்துவதற்காக முயன்று வந்தது. Franco இன் கட்டுப்பாட்டின் கீழ் Basque எல்லாவகையிலும் அரசியல், பொருளாதார, கலாச்சார அடக்குமுறையில் இருந்தபோதிலும், Basque முதலாளிகளது சமூகநலன் ஸ்பானிய முதலாளிகளது சமூக நலன்களுடன் நெருக்கமாய் பிணைந்திருந்தது. 1950 களில் Bilbao மற்றும் San Sebastian ஐ சுற்றிலும் பூத்துக் குலுங்கிய பெரும் தொழிற்துறையினது பாரம்பரிய வியாபார சந்தை1960 காலப்பகுதிகளில் ஸ்பெயின் இல் இடம் பிடித்துக்கொண்டது. அத்துடன், Castile, Extram adura மற்றும் Andalusia பகுதிகளிலிருந்து பெருக்கெடுத்து வந்த பெருமளவிலான தொழிலாளர்கள் Basque தொழிற்துறைமையங்களில் மலிவுக் கூலித் தொழில் செய்பவர்களாயாயினர்.

ETA 1960 èOTM Basque சமூகத்தில் மத்திய மற்றும் கீழ்த்தட்டினரது பெரும் ஆதரவைக் கவர்ந்துகொண்டது. Basque இல், பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள், சிறு பண்ணைக்காரர்கள், மீனவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளது சொந்த சமூக நலன்களுடன் PNV கட்சியினது நிதி மற்றும் பொருளாதார துறைகளில் இருந்த ஆழுமை மேலும் பொருந்துதாது போனதால் அவர்கள் ETA விற்கு ஆதரவாளர்களாக மாறினர். அத்துடன் Franco இனது சர்வாதிகாரத்தினால் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த அரசியல், கலாச்சார அடக்குமுறையும் ETA விற்கு பொதுமக்களிடமிருந்து பரந்தளவிலான ஆதரவை ஈட்டித்தந்தது, இது குறிப்பாக Vizcaya மற்றும் Guipuzcoa வின் விவசாயப் பிராந்தியங்களிலிருந்து கிடைத்தது.

மாற்றத்தின்( tக்ஷீணீஸீsவீநீவீரஸீ) பகுதியாக, யூலை 19, 1979 இல் "குர்நெக்கா யாப்பு" என அழைக்கப்படுவதன் அமுலாக்கத்துடன், "ஜனநாயகத்திற்கு மாறுதல்" என்பது Franco இன் மரணத்தைத் தொடர்ந்து வந்தது. இந்த யாப்பு ஒப்பீட்டளவில் பஸ்க் பிராந்தியத்திற்கு அதிகப்படியான சுயாட்சி உரிமைகளை வழங்கியது. Flipe Gonzalez இனால் தலமைதாங்கப்பட்ட ஸ்பெயினின் அப்போதய சோசலிசகட்சி(PSOE) அரசாங்கம் பஸ்க் மக்களுக்கு அவர்களது சொந்தப் பாராழுமன்றம், ஒரு பிராந்தியப் பொலிஸ் மற்றும் நீதித்துறை, அதிகமான நிதி ஆழுமைச் சுதந்திரம் என்பவற்றை வழங்கியிருந்தது. அத்துடன், Franco இன் கீழ் தடுக்கப்பட்டிருந்த பஸ்க் மொழி(Euskera) க்கு ஸ்பானிய மொழிக்கு சமனான நிலை வழங்கப்பட்டது. "பஸ்க் மக்கள்" ஸ்பானிய அரசமைப்புச் சட்ட விதிகளுக்குள் மீண்டும் வேறேதும் "வரலாற்று உரிமைகளை"கோரமுடியும் என்னும் ஒரு விடையமும் மேலதிகமாய் வழங்கப்பட்டது.

எப்படியிருந்தபோதும் 1978 இன் ஸ்பானிய அரசியலமைப்பு பஸ்க் பிராந்தியத்திற்கு சுதந்திரத்தை வழங்கிவிடவில்லை என்பது தெளிவானது, இதன் உள்ளடக்கம் , அதி உயர்ந்த அரசியல் வடிவம் என்பது இதில் முற்றுமுழுதான பஸ்க் நாட்டின் சுதந்ததிரம் என்பதாகவே இருக்கமுடியும் என கருத்துப் படும்படியாக - PNV உள்ளடங்கலாக-தேசியவாதிகளினால் எடுத்துக் கூறப்பட்டது. மாற்றத்தின்( tக்ஷீணீஸீsவீநீவீரஸீ) காலப் பகுதியிலும் கூட ETA இந்தப் பின்னணியை எதிர்த்தே அதனது தனிநபர் பயங்கரவாத நடவடிகக்கைகளை தொடர்ந்தது.

திமீறீவீஜீமீ நிஷீஸீக்ஷ்ஊறீமீக்ஷ் இன் தலமையிலிருந்த சோசலிச அரசாங்கம் அதிக அதிகாரங்களையும் ஆயுதங்களையும் பொலிசாருக்கு வழங்கி அடக்கு முறையை உக்கிரப் படுத்தியதன் மூலம் இதற்குப் பதிலளித்தது. இது நடந்த காலப்பகுதியிலேயே GAL என்றழைக்கப்படும் அவதூறுகள் மேலெழுந்தன. நிஷீஸீக்ஷ்ஊறீமீக்ஷ் இன் நேரடியான பொறுப்பின் கீழ், 1983-1987 காலப்பகுதியில் விடுதலைப் பயங்கரவாதிகள் எதிர்ப்புக்குழு (நிக்ஷீuஜீஷீs கிஸீtவீtமீக்ஷீக்ஷீஷீக்ஷீவீstணீs பீமீ லிவீதீமீக்ஷீணீநீவீரஸீ -GAL) என அழைக்கப்படும் விசேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டது, இது அடிப்படையில் பரா-இராணுவ மரணப் படை என்பதாகவே இருந்தது. இக் GAL ஆனது ETA இனது அங்கத்தினரை வேட்டையாடியது, இதன்போது படுகொலைகளையும் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டவர்கள் மேல் பயங்கரமான சித்திரவதைகளையும் நடாத்தியது. இதில் அவர்கள் குறைந்தது 28 ETA அங்கத்தினரை கொன்று தள்ளினர்.

இந்த அவதூறு எழுந்தபோது இது 1996 தேர்தலில் PSOE கட்சியின் "வரலாற்று" தோல்விக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகியது. Franco இன் சர்வாதிகார ஆட்சியின் பின்னர், José Maria Aznar இனால் தலமைதாங்கப்படுவதும் Franco ஆட்சியின் எண்ணுக்கணக்கான உயர்மட்ட சேவகர்களை உள்ளடக்கியதுமான PP கட்சி முதல்முறையாக ஆட்சியதிகாரத்தைப் கைப்பற்றியது. Aznar முன்பிருந்த அதே ETA எதிர்ப்பு கொள்கைகளைத் தொடர்வதுடன் பொலிஸ் அடக்கு முறையினூடாக பஸ்க் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முனைகின்றார்.

1990 களின் பிற்பகுதியில் ETA பரந்துபட்ட மக்களின் பெரும்பகுதியினரது ஆதரவை இழந்ததுடன், ETA வினது முக்கியகமாண்டோ படையினரும் பொலிசாரினால் சின்னாபின்னமாக்கப்பட்டனர். இதன் விளைவாய் இவ் இயக்கம் தனது தந்திரோபாயத்தை மாற்றியது. ETA இனது பாராழுமன்றபிரதிநிதித்துவ PNV உள்ளடங்கலாக மற்றும் EH ( Euskal Herritarrok கீமீ ஙிணீsஹீuமீ சிவீtவீக்ஷ்மீஸீs" -நாம்பஸ்க் குடியானவர்) போன்ற மற்றைய தேசியவாதக் கட்சியுடன் ஒன்று கூடி 1998இன் வீழ்ச்சியில்னுள் "Lizarra உடன்படிக்கை"யை ஏற்றுக்கொண்டது. இந்த அறிவிப்பபுகட்டாயாமாக வெளிப்படையானதாகஇருந்தது-This declaration contained the obligation to hold open- ஆனால் விசேடமாக பஸ்க் பேச்சுவார்த்தைபஸ்க் நாட்டினது அரசியல் எதிர்காலம்எனெபதிலேயே இருந்தது. இவ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதுடன் தொடர்புபட்டதாக ETA காலவலையறையற்றதும் நிபந்தனேயற்றதுமான ஒரு யுத்தநிறுத்தத்தை அறிவித்தது.

பஸ்கின் சுதந்திரத்தையிட்டு பேசுவதற்கு Aznar விருப்பம் காட்டாததாக தோன்றியதனால் ஸ்பானிய மத்திய அரசின் கீழ் ஒழுங்கு படுத்தலுடனான சுயாட்சி எனும் பிரமை மறைந்து போனதுடன் தேசியவாத கட்சிகள் கர்னிக்கா யாப்பு (Statute of Guernica) மீறப்பட்டு விட்டதென அறிவித்தன. இதைத் தொடர்ந்து நவமபர் 1999ல் ETA யயுத்த நிறுத்தத்தின் முடிவை அறிவித்தது.

''தெருச்சண்டை'' ( "street struggle" -kale borroka) எனஅழைக்கப்படும் சம்பவத்தில் பதினொருபேர் இறந்துபோனதும் பல எண்ணிக்கையானோர் காயமடைந்ததும் எல்லாவற்றிற்கும் மேலாக பஸ்க்கின் சிறிய மற்றும் பெரியநகரங்களில் இரண்டு பெரும் தாக்கங்களைக் கொடுத்தன: இது போலீஸ் அமைப்பினை உறுதிபெறச்செய்ததுடன் ஏறாத்தாள எல்லா அரசியல் கட்சிகளது கூட்டான சக்திகளின் இணைவினை பூர்த்தியாக்கின, இவற்றுடன் தொழிற் சங்கங்களும் மற்றைய சமூகக் குழுக்களும் ''பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தம்' 'என்னும் முதுகில் குத்தும்தனமான பதாகையின் கீழ் அணிதிரண்டன.

போலீசார் நாடு முழுவதும் அதிகரித்துக் காணப்பட்டனர், குறிப்பாய் பஸ்க் நாட்டினுள்ளும், மட்றிட் (Madrid) இலும், விடுமுறையை கழிக்கும் மெடிற்றெயினிய கடற்கரை பிராந்தியங்களிலும் மற்றும் அன்டலூசியா(Andalusia) விலும் பெருமளவில் காணப்பட்டனர். கார்கள் மற்றும் போக்குவரத்துகளில் அடையாள அட்டை சோதனைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பெரும் பொலீஸ் கூட்டமைப்பானது Guardia Civil என்னும் தேசியப் பொலீசுடனும் பஸ்க் பிராந்திய போலீசான Ertzaintza உடனும் மற்றும் உளவுப் பிரிவுடனும் சேர்ந்து அவர்களது கைதேர்ந்த தலமை காரியாளர்களுக்கிடையிலான கூட்டிணைவுடன் பயங்கரவாதத்துடன் போராடுவதற்கென ''ஒருங்கிணைந்த திட்டம்'' ஒன்றிற்கு அழைப்புவிட்டது.

ஒவ்வொரு தாக்குதல்களின் பின்னரும் ஆயிரக்கணக்கான மக்கள் தெருவுக்குவந்து ETA வுக்கு எதிராய் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் (PP கட்சியினது உள்ளுர்அரசியல்வாதி Carpena கொலைசெய்யப்பட்டதன் பின்னர் 500,000 மக்கள் தொகையைக் கொண்ட Malaga வில் 300,000 மக்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர்), அரசாங்கமும் எதிர்க்கட்சியும் பஸ்க் பிரச்சனைகளை அணுகுவது சம்பந்தமாகவும் அதுசார்ந்தவேறு பல விடையங்கள் சம்பந்தமாகவும் உடன்பட்டுள்ளன.

PA மற்றும் PSOE க்கு இடையில் சிறியளவிலான சிலவித்தியாசங்கள் இருப்பதென்பது உண்மையாகும், உதாரணமாக ETA வினால் தொடரப்பட்டுக் கொண்டிருக்கும் பயங்கரவாதம் சம்பந்தமான பிரச்சனையை பாராழுமன்றத்தில் PNV உடனான விவாதத்திற்கு விடப்படவேண்டும் என்பதை கொள்ளலாம். PNV சம்பிரதாய முறையில் முதல் முறையாக லிசாரா உடன்படிக்கையை (Treaty of Lizarra) மீறியதிலிருந்து PSOE கட்சி அதனைத் தவிர்த்து மற்ற தேசியவாதக் கட்சிகளுடன் விவாதத்திற்கு தயார் செய்தது. ஆனால் இங்கு ETA பிரச்சனை சம்பந்தமான மதிப்பீட்டில் மாற்றமெதுவும் இல்லை.

PSOE இன் புதிய பொதுச் செயலாளர் José LuisRodriguez Zapatero ணிறீ றிணீணs என்னும் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தான் ஒரு பயனுள்ள எதிர்ப்பை நடாத்தப் போவதாகவும் அத்துடன் அரசாங்கத்துடனான உடன்பாட்டில் தொடர்த்து இருப்பதில் பிரச்சனை எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டார். மேலும் அவர் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம், குடிவரவுக் கட்டுப்பாடு மற்றும் யாப்பில் மாற்றம் கொண்டுவராது பேணுதல் போன்ற முக்கிய விடையங்களை குறிப்பாக வலியுறுத்தல் என கூறிப்பிட்டார். யூலை31 இல் Juan Maria Jauregui இனது ஞாபகார்த்தக் கூட்டத்தில் Zapatero "எல்லா ஜனநாயகத்தினதும் கூட்டு"என அழைக்கப்படுவதை வலியுறுத்தியதுடன் தனது கட்சி அதனது கூட்டுறவின் நெருக்கத்தை அதிகரிப்பதுடன் அரசாங்கத்துடன் விசுவாசமான உறவை வைத்திருக்கும் எனவும் வலியுறுத்தினார்.

Aznar அரசாங்கத்தினது கைகளில் ETA எதிரான வேலைத் திட்டம் என்பது சமூக நலன்புரி சேவைகளை அழித்தொழிப்பதற்காகவும் கையாளப்பட்டது. PP கட்சி பாராளுமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் பெரும் வெற்றியீட்டியிருந்த போதிலும் கூட அதனது திட்டங்களான பொருளாதார தாராளமயமாக்கல், உழைப்புச் சந்தையை ஒழுங்கமைத்தல்,ஸ்பெயின் நாட்டு பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் திறந்துவிடுதல், தேசியக் கடனைக் கட்டுப்படுத்தல், "சமூக நலன்புரி அரசை மறுசீரமைத்தல்"மற்றும் இராணுவ செலவீனத்தை அதிகப்படுத்தல் என்பவற்றிற்கு எதிர்கட்சினதும் தொழிற்சங்கத்தினதும் ஆதரவினை வேண்டிநின்றது.

ஸ்பானிய தொழிலாள வர்க்கம் முழுவதுமே இம்மாற்றங்களினால் தாக்கப்பட்டது, அத்துடன் கடந்த மாதங்களில் இவ் அபிவிருத்திகளுக்கு எதிரான போராட்டங்களுக்குக் குறைவேதுமில்லை. அங்கு பார்ஸ்லோனாவில் பல்கலைக்கழக மாணவர்களினாலும் பேராசிரியர்களினாலும் பொதுக் கல்வி முறையை (public education system) பாதுகாக்கவும் முன்னேற்றம் கோரி ஒரு பெரும் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது; ஸ்பெயின் நாடு முளுவதும் கட்டிட நிர்மாணத்துறை தொழிலாளர்கள் மோசமாகிவரும் வேலை நிலமைகளுக்கு எதிராய், தொழிலதிபர்களின் பெரும் அழுத்தங்கள்களுக்கு, கட்டிட இடிபாட்டுப் பகுதிகளில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு எதிராயும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மார்ச் இலிருந்து ஜூன் வரை RENFE எனப்படும் இரயில்ப் பாதை அமைக்கும் கம்பனித் தொழிலாளர்கள் சம்பள உயர்வு மற்றும் நல்ல வேலை நிலைமைகள் கோரி ஒரு தொடர் வெளிநடப்புகளில் ஈடுபட்டனர்; துறைமுகத் தொழிலாளர்கள், போக்குவரத்து வினியோகத் தொழிலாளர்கள்,பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அவர்களின் உயிர் வாழ்வுக்கான கொடுப்பனவுகளிலும் செலவுப் பண வழங்கலிலும் கொண்டு வரப்பட்ட வெட்டுகளுக்கு எதிராக கடந்த மாதங்கள் முழுவதும் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர்; Tenerifa விமானநிலையத்தின் தரை வேலையாட்கள் ஊதிய உயர்வு கோரி 7நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர்; இத்தியாதி.

நடப்பிலுள்ள ETA எதிர்ப்பு பிரச்சார மூடு திரையின் கீழ் Aznar அரசாங்கம் ஸ்பானிய பொருளாதார மற்றும் சமூக"நவீனமயப்படுத்தலை" முன் உந்தித் தள்ளுவதுடன்,அது எதிர்கட்சியினரதும் தொழிற்சங்கங்களினதும் ஆதரவை பயனபடுத்தி அதனது அடக்கு முறைக்கு எதிராக எழும் பாரிய எதிர்ப்புகளை கட்டுப்டுத்துகின்றது. கடந்த வருடம் ஏப்பிரல் மாதத்தில் Aznar மீழவும் தேர்வு செய்யப்பட்டு மூன்று வாரத்திற்குள்ளேயே தொழிற்சங்கதலைவர்களான ஸ்ராலினிஸ்ட் CCOO (ComisionesObreras) இன் Gutierrez ஜயும் PSOE கட்சியுடன்தொடர்புடைய UGT இன் CandidoMendez ஐயும் சந்தித்ததுடன் தொழிலதிபர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகள் நடாத்தினார். இந்த சந்திப்புகளின் வெளித்தோற்றம் எவ்வாறு நிறைவான வேலை வாய்ப்பை பெறுவது மற்றும் இருக்கும் வேலைகளை பாதுகாப்பது என்பதாக தோன்றிய போதிலும் அதனது உண்மையான உள்ளடக்கம் வேலையில் இருந்து அகற்றுவதற்கு கொடுக்க வேண்டிய விலையை குறைப்பது, வேலையற்றோர்களுக்கான கொடுப்பனவுகளை குறைத்தல், பொதும்சம்பளத்தினை விடுத்து பேரம் போசும் கூலி முறையை உருவாக்கல் என்பனவாக இருந்தது.

ETA ஸ்பானிய தொழிலாள வர்க்கத்தின் சமூக, அரசியல் போராட்டங்களை மோசமான வழியில் திசைதிருப்புகின்றது, அத்துடன் அது தனது சொந்த ஆதரவாளர்களுக்கும் அனுதாபிக்களுக்கும் அதனது பயனற்ற அரசியல் உரைகளினால் ஒரு அரசியல் குருட்டுத்தனமான பாதைக்கு வழிதிறந்துவிடுவதை விடுவதற்கு மேலக வேறேதும் செய்யவில்லை. ஆகஸ்டு 7 இல் ETA இயக்கத்தின் அங்கத்தினர் கொல்லப்பட்டதற்காக ஆகஸ்ட்டு 12 இல் நடந்த நினைவுதின கூட்டத்தில் 5,000 மக்கள் ஒன்றுதிரண்டிருந்தனர்; அங்கு ETA இனது அரசியல் பிரிவு பேச்சாளரான Herri Batasuna , Otegi கார் வெடித்த விபத்தில் கொல்லப்பட்ட ETA இனது நான்கு போராளிகளையும் நீதிக்காக உயிர்கொடுத்த ''தேசபக்தர்கள்'' என அழைத்ததுடன், ETA இன் போராட்டத்தை இஸ்ரேலிய ஆக்கிமிப்பக்கு எதிரான பாலஸ்தீனிய இன்ரிபாடா வுடன் ஒப்பிட்டு பேசினார்.