World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள் : உலகப் பொருளாதாரம்

World Economic Forum summit discussions: an expression of deep-going political shifts

உலகப் பொருளாதார சம்மேளன உச்சிமாநாட்டு கலந்துரையாடல்கள்: ஆழமான அரசியல் மாற்றங்களுக்கான வெளிப்பாடு

By Nick Beams
16 September 2000

Use this version to print

மார்க்ஸ் தமது புகழ் பெற்ற அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கான (The criticue of Political Economy) முன்னுரையில் சமூக புரட்சியின் தன்மையை ஆளும் விதிகளை பின்வருமாறு விளக்கியுள்ளார்:

"அபிவிருத்தியின் ஒரு சில கட்டத்தில் "சமுதாயத்தின் சடரீதியான உற்பத்தி சக்திகள் அக்காலகட்டத்தில்இருக்கும் உற்பத்தி உறவுகளுடன் முரண்பாட்டிற்கு வருகின்றன... உற்பத்தி சக்திகளின் அபிவிருத்திவடிவங்களாகிய இந்த உறவுகள் அவற்றின்கால் விலங்குகளாக மாறி விடுகின்றன. அப்போதுசமூகப் புரட்சியின் ஒரு சகாப்தம் ஆரம்பமாகின்றது."

இந்தப் போக்கினது புறநிலைஅடிப்படைகளை அமைக்கும் போதுமார்க்ஸ் பழைய அமைப்பு முறை தூக்கிவீசப்படுவது சுயாதீனமாக அல்லது தன்னியக்கமாக நடைபெறும் என ஒரு போதும் கருதவில்லை.

அதற்கு மாறாக அவர் இதை மேலும்தெளிவுபடுத்தும் போது "இயற்கை விஞ்ஞானத்தின்நுட்பத்தினால் நிர்ணயம் செய்யப்படகூடிய உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளின்சடரீதியான மாற்றத்துக்கும், சட்ட, அரசியல்,சமய, கலை அல்லது தத்துவம் சம்பந்தமானவற்றினையும் வித்தியாசப்படுத்திக்கொள்வதுஅவசியமானது. சுருங்கச் சொன்னால்மனிதன் இந்த முரண்பாடுகள் பற்றி சித்தாந்தவடிவங்கள் மூலம் நனவு பெற்று போராடுவதையும் இனங்கண்டு கொள்வதையும்" அவசியமாக்கிவிடுகிறது.

வேறு வார்த்தைகளில் சொன்னால்ஒரு புரட்சிகர சகாப்தம் தனது வருகையைமாபெரும் அரசியல் போராட்டங்களின்வெடிப்புடன் அறிவிப்பது இல்லை- இது அடுத்து குறிப்பிடப்படும் இந்தப் போக்கின் பிந்திய கட்டத்தில் இடம்பெறுகின்றது.

சமூகப் புரட்சியின் புதிய சகாப்தத்தின்தொடக்கம் ஆரம்பத்தில் உற்பத்திப்முறைகளிலும் பொருளாதார அமைப்புவடிவங்களினதும் ஏற்படும் பரந்த அளவிலானமாற்றங்கள் மூலமும் புலப்படுகின்றது.அவை பின்னர் முழுமையாக சமுதாயத்தின்அபிவிருத்திபற்றிய புதியதும் சிக்கலானதுமான பிரச்சினைகளைஎழுப்பத் தொடங்குகின்றன.

மக்களின்பெரும் பகுதியினர் இந்தப் பொருளாதாரமாற்றங்கள் தமது வாழ்க்கைகளுக்குகொணரும் குழப்ப நிலையில் இருந்து அன்னியப்பட்டுப் போவதோடு ஆத்திரமும் அடைகின்றனர்.இதே சமயம் ஆளும் தட்டினர் அவர்கள்அடித்தளமாக கொண்டுள்ள சமூக,அரசியல் அடிப்படைகள் அவர்களின் காலுக்குகீழே நகர்ச்சி பெறும் நிலை கண்டு பிரமித்துப்போகின்றனர்.

இந்தப் போக்குகளை செப்டம்பர் 11-13 வரை மெல்போர்ன் கிறவுன் கசினோவில் நடைபெற்ற உலகப் பொருளாதார சம்மேளனத்தின் (World Economic Forum) ஆசிய-பசுபிக் உச்சி மாநாட்டு மண்டபத்தின் உள்ளேயும் வெளியேயும் பெரிதும் காணக்கூடியதாக இருந்தது.

மண்டபத்துக்கு வெளியே இடம் பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரியவை அல்ல. ஆகக் கூடுதலாக சுமார் 15000 பேர் கலந்துகொண்டனர். ஆனால் அவர்கள் சமுதாயத்தின் சகல துறைகளிலும் நாடுகடந்த கூட்டுத்தாபனங்களின் பரந்த அளவிலான அதிகரித்த மேலாதிக்கம், உலகம் பூராவும் கோடிக்கணக்கான மக்களின் வறுமை, பூகோளரீதியான பொருளாதாரத்தின் மூலம் பொருளாதார, சமூகநிலைமைகளில் ஏற்படுத்தப்பட்ட பிரமாண்டமான மாற்றங்கள் குறித்து சனத்தொகையின் பரந்த அளவிலான பகுதியினரின் கவலையை பிரதிபலித்தனர்.

இந்தசம்மேளனத்தின் (Forum) இம்மாநாட்டில் கலந்துகொண்டோர் பெரும் நாடுகடந்த கூட்டுத்தாபனங்களில் இருந்தும் பொருளாதார சிந்தனா பீடங்களில் இருந்தும் அரசாங்கங்களில் இருந்தும் வந்திருந்தனர். இவர்கள் பூகோள ரீதியான பொருளாதார மாற்றங்கள் பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை முன்வைப்பதையிட்டும் அதற்கு தம்மிடம் நிஜ பதில் கிடையாது என்பதையிட்டும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

அனைத்துலகப் பொருளாதாரத்தின்மிகவும் நுட்பமான அவதானிகளில் ஒருவரான கோல்ட்மன் சச்ஸ் ஏசியாவின் (Goldman Sachs Asia) உப -தலைவர் கெனத் கோர்ட்டீஸ் (Kenneth Courtis) எதைக் கடைப்படிக்கவேண்டும் என்பதை தொனிக்கும் விதத்தில்பேசினார்.

பூகோளமயமாக்கம் பெரிதும் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் தொழில் நுட்ப மாற்றங்களால் வழிநடாத்தப்பட்டு வரும் ஒரு "எதிர்க்க முடியாத சக்தி" ஆகும் என கோர்ட்டீஸ் கூட்டத்தில் தெரிவித்தார்.

"இந்தப் புரட்சி 1890 தொடக்கம் 1920 வரைஉலகை ஆட்டிப்படைத்த ஒரு மாபெரும் புரட்சி போன்றதாகும்".

கோர்ட்டிஸ் சிலவேளைகளில் பொருளாதாரப் பூகோளமயமாக்கத்தின் முதல் கட்டம் எனப்பட்ட இந்த முன்னைய காலப்பகுதி பற்றி, அதாவது தொழிலாளர் வர்க்க சோசலிச இயக்கத்தின் வளர்ச்சி, முதலாம் உலக யுத்தம், 1917ம் ஆண்டின் ரஷ்யப் புரட்சி, 1920களின் முற்பகுதியில் ஐரோப்பாவில் இடம்பெற்ற புரட்சிகரப் போராட்டங்கள் உட்பட்ட பெரும் எழுச்சிகள் பற்றி தனது கருத்துக்களை விரித்துக் கூறவில்லை. ஆனால் அவர் இன்று இடம்பெற்று வரும் போக்கானது பிரமாண்டமான நீண்டகால சமூக, அரசியல் விளைவுகளைக் கொண்டது என்பதை தெளிவுபடுத்தினார்.

"கடந்த 10 தொடக்கம் 12 வருட காலமாக ஏற்பட்டுள்ள கைத்தொழில் வாத சித்தாந்தங்கள் இந்த மாபெரும் மாற்றங்களின் மூலம் சமூக அடையாளங்களை உடைத்து எறிவதோடு பலரை ஆச்சரியமும், பாதுகாப்பின்மையும், தடுமாற்றமும் அடையச் செய்ததோடு அதுவே இக்கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும் இடம்பெறும் விவாதத்தின் மையமாகவும் விளங்குகின்றது.

"1990களில் "இது சந்தை முட்டாள்தனம்" எனக் குறிக்கப்படுவது பெரிதும் இலகுவாக இருந்தது. அதுபோதுமானது அல்ல. சந்தையை விட கூடுதலான பிரச்சனைகள் உள்ளன. இந்தப் பரந்த பிரச்சினைகளும் விவாதத்தினுள் கொணரப்பட வேண்டியவை".

அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் லேட்லைன் (Lateline) தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு அளித்த பேட்டியில் தொழில்நுட்ப மாற்றங்கள், பூகோளரீதியான பொருளாதார ஒன்றிணைப்பு, இப்போது இடம் பெறும் மாபெரும் புரட்சி" பற்றி பெரும் பதட்டம் நிலவுவதாக கோர்ட்டீஸ் குறிப்பிட்டார். தலைமையின் பணி, "நிஜமாக எதிர்காலம் முதல் நிகழ்காலம்வரை பிரதிநித்துவம் செய்வதோடு இது தொடர்பாக கவலை அடைந்துள்ள மக்கள் தொடர்ந்து முன்நோக்கிச்செல்வது எப்படி என்பதை புரிய வைப்பதும் நல்ல எதிர்காலத்தை அடைய மக்களுக்கு உதவுவதுமேயாகும்".

கோர்ட்டீஸ் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான ஜப்பானின் வளர்ச்சி கண்டுவரும் பிரச்சினைகளை தெளிவுபடுத்தியதோடு அதனால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகளையும் விளக்கினார்.

ஜப்பான் ஒரு "கடன் இமயத்தினால்" நசுங்குண்டு வருகின்றது என அவர் சொன்னார். ஒரு தசாப்தத்துக்கு முன்னர் அரசாங்க கடன்கள் மொத்த தேசிய உற்பத்தியின் 50 சதவீதமாக விளங்கியது.

"இரண்டு ஆண்டுகளின்பின்னர் இது மொத்த தேசிய உற்பத்தியின் (GNP) 150 சதவீதமாக இருப்பதோடு ஐந்தொகையில் அது மட்டுமே இருக்கும். அரசாங்கம் செய்து கொண்டுள்ள ஏனையபொறுப்புக்கள் நிச்சயமாக இதைவிட இரட்டிப்பானது. ஆதலால் நீங்கள் அரசாங்கக் கடன் சுமைகளை மொத்த தேசிய உற்பத்தியில் 280-290-300 வீதமாக அருக்கும் ஒரு நாட்டை காண்கின்றீர்கள். அத்தோடு ஜப்பானிய கம்பனிகளும் வங்கிகளும் மிகவும் பலவீனமான நிதி நிலைமையில் இருக்கின்றன..."

கடந்த இரண்டு வருடங்களாக பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியாக ஜப்பானிய அரசாங்கம் 1.4 ரில்லியன் டொலர்களை [-இது அவுஸ்திரேலியப் பொருளாதாரத்தின் ஐந்து மடங்குக்கு சமமானது-] செலவளித்துள்ளது. ஆனால் இதன் மூலம் 2 வீத வளர்ச்சியே ஏற்பட்டுள்ளது.

இந்தக் கடன் மலையின் தாக்கம் சராசரியான ஜப்பானிய குடும்பத்தில் -திரு/திருமதி. சுசுகி [-இது சாதாரண ஜப்பானிய குடுபம்பத்தை குறிக்க பயன்படுத்தப்படும் பெயர்] ஏற்பட்டுள்ள விளைவுகளைப் பற்றிக் கேட்டபோது கோர்ட்டீஸ் எதிர்காலம் "ஏதோ பெரிதும் இருண்டதாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

"திரு/திருமதி. சுசுகி தமது ஓய்வூதியம் பெருமளவில் வெட்டப்படுவதை காண்பார்கள் என நினைக்கின்றேன். அவர்கள் தமது காப்புறுதி உரிமைகளும் சுகாதாரவசதிகளும் பெருமளவில் வெட்டப்படுவதை காணப்போகின்றார்கள். கடந்த ஒரு தசாப்தமாக வீடுகளின் பெறுமதிகள் 60-70சத வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. இவை விரைவாக முன்னேற்றம் காணும் சாத்தியம் இல்லை. தமது பிள்ளைகள் நல்ல கல்வியைப்பெறவும் பல்கலைக் கழகங்களுள் நுழையவும் கடுமையாக உழைத்தவர்கள், பிள்ளைகள் தாம் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேறியதும் பெற்றுக் கொள்ளலாம் என நினைத்த தொழில்களைப் பெறப்போவதில்லை.

"திரு/திருமதி. சுசுகி தாம் மூன்று தொடக்கம் நான்கு தசாப்தங்களை தியாகம் செய்தது எதற்காக எனக் கேட்கத் தொடங்குவார்கள். இதற்காகத் தானா? ஒரு விதத்தில் கடந்த தசாப்தத்தில் ஒரு சிலரின் முறைகேடான பொருளாதார முகாமைத்துவம் காரணமாக இவ்வளவு மக்களின் பணம் ஒரு போதுமே வீணடிக்கப்பட்டது கிடையாது".

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்த உலக வங்கியின் உப- தலைவர் ஜோசப் ஸ்ரிக்கலிட்ஸ் [Joseph Stiglitz], ஆசிய நிதி நெருக்கடியின்போது சர்வதேச நாணய சபையின் கொள்கைகள் தொடர்பாக தாக்கமான தீர்ப்பை வெளியிட்டு இருந்தார். அவர் இந்த ஆய்வரங்குக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்களின் அக்கறைக்குரிய விடயங்களாக இருந்தவற்றுடன் இணைந்து கொண்டிருந்தார்.

"நாம் சந்தைகள், தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம் என்ற முக்கிய வார்த்தைகளை நினைவில் கொண்டால் இவை தம்முள்ளே முடிவினை கொண்டிருக்கவில்லை. முடிவிற்குவேறு வழிகள் உள்ளன; இந்த முடிவுகள் ஒரு சிலரது வாழ்க்கைகளை மட்டுமல்ல பலருடைய வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுகின்றன." என அவர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

"பூகோளமயமாக்கத்தின் நலன்கள் பரந்த அளவில் விஸ்தரிக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக பரந்த கருத்து இல்லாது போனால் சுற்றாடல், ஜனநாயகப்போக்கு என்பவை ஆபத்திற்குள்ளாகும். இவை திருப்பித் தாக்கும் ஆபத்தினை கொண்டுள்ளன."

அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹவார்ட் "உலகப் பொருளாதாரத்தின் அபிவிருத்தியின்மையக் கட்டத்தில்" பூகோளமயமாக்கத்தின் நலன்களை தமது பிரஜைகளுக்கு கொண்டு செல்வதே அரசாங்கங்கள் முகம் கொடுக்கும் "மாபெரும் சவால்" எனத் தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்தில் அல்லது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள எவரும் இன்றைய கஷ்டங்கள் சமூகத்தின் நீண்டகால நலன்களின் பேரிலானவை எனச் சும்மாவிளக்கப் பார்ப்பது போதுமானது அல்ல என அவர் குறிப்பிட்டார்.

"பொருளாதார சீர்திருத்தத்தின் இலக்கு மனித திருப்தியும், மனித சாதனையும், மன மகிழ்ச்சியுமேயாகும். பொருளாதார சீர்திருத்தம் மக்களுக்கு நலன்களை வழங்காது போகுமாயின் அதைத் தழுவிக் கொள்வது நல்லது அல்ல."

அரசாங்கங்களும் அத்தோடு வர்த்தக நிறுவனங்களும் அந்த நடவடிக்கைகள் "சரிப்படுத்தல்களின் கஷ்டங்களை குறைக்க" அந்தநடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை அங்கீகரிப்பதோடு அத்தகைய நடவடிக்கைகள் இல்லாமல் "நாம்அறிந்து கொண்டுள்ளவாறும், நாம் அதைவிரும்புவதை போலவும் பூகோளமயமாக்கத்தின் எதிர்காலம் பெரிதும் சந்தேகத்துக்கிடமானதாகி விடும்."

ஆனால் ஹொபார்ட் இதைப்பற்றிப் பேசுகையில் பூகோள ரீதியானநிதி சந்தைகள் அரசாங்கத் தலையீடுகளின் பேரில் தமது பிரதிபலிப்பை காட்டி, வரலாற்றில் இல்லாதது போல் அவுஸ்திரேலிய டொலரை வீழ்ச்சி காணச் செய்துள்ளது. உள்ளூர் வெகுஜனத்தொடர்புச் சாதன ஏகபோகத்தைக் காக்க அனைத்துலக முதலீட்டு மூலதனத்தை தடுத்து வைத்திருந்த அவுஸ்திரேலிய தொடர்பு அரசாங்க விதிகள் தலைமூழ்கிப் போயுள்ளன.

ஹொவார்ட் அரசாங்க நிதியமைச்சரான பீட்டர் கொஸ்டெல்லா [Peter Costello] ஆசியாவில் பொருளாதார மீட்சி பற்றி தம்பட்டம் அடிப்பதையிட்டு எச்சரிக்கை செய்துள்ளார்.

"நாம் பெரிதும் சுபீட்சத்தை எட்டிவிட்டதாக எண்ணாது இருப்போம். 1997ல் இருந்து எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. 1997ல் இருந்ததில் இருந்து அனைத்துலக நிதி கட்டுமானத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு உள்ளதா? நாம் எம்மிடம் இக்கேள்வியை கேட்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

வெளிப்படையான நிதிக்கொள்கையையும், கூட்டான ஆட்சியையும், கடன் குறைப்பையும் காணக்கூடியதாக இல்லை.

அனைத்துலக கொள்கை வகுப்பாளர்கள் பூகோள மயமாக்கத்தின் தாக்கம் மீதான பொதுஜன அபிப்பிராயத்தை புறக்கணிக்க முடியும் என நினைப்பார்களேயாயின் "அவர்கள் ஒரு பெரும் தவறை இழைக்கிறார்கள்" என கொஸ்டெல்லா கூறினார். "ஒரு திறந்த வர்த்தக அமைப்பின் நலன்கள்" பற்றி கலந்துரையாடும் அதே வேளையில் "சியாடிலில் இடம்பெற்றதை பற்றிய சிலவிபரங்களை முன்வைப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் (கடந்த நவம்பரில் உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில்) அது பிழைத்துப் போனதையும் நனவில் கொள்ளவேண்டும்" என மாநாட்டில் தெரிவித்தார்.

மாநாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கும் மாநாட்டின் வெளியே இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கும் இடையேயான உறவுகள் செப்டம்பர் 12ம் திகதி சிட்னி மோர்னிங் ஹெரால்ட் (Sydney Morning Herald) பத்திரிகையில் ஆசிரியத் தலையங்கமாக தீட்டப்பட்டு இருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களின் கருத்துக்களை "எதிர்த்து தள்ளுபடி" செய்து விட முடியாது என அது ஆரம்பித்தது.

மெல்போர்ன் மோதல்களில் முக்கிய விடயம் -மிகவும் முக்கியமான விடயம்- தேசிய பரிமாணத்துக்கு மேற்படலாம். கசினோக்களுக்கு வெளியே அடிக்கடி ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்பவர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு உள்ளடக்கம் இதுவாகும். அத்தோடு இந்த விடயம் நியாயமான காரணத்தினால் ஒரு பரந்த அளவிலானோரின் ஆதரவையும் ஈர்த்துக் கொள்கின்றது.

உலகில் மூன்று செல்வந்தர்களின் சொத்துக்கள் 48 நாடுகளில் உள்ள 600 மில்லியன் மக்களின் வருமானத்துக்கு சமமானது எனவும் 500 கூட்டுத்தாபனங்கள் உலகின் வர்த்தகத்தின் 70 வீதத்தையும் அதனது வெளிநாட்டு முதலீட்டில் 80 வீதத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருப்பதாகவும் ஆசிரியத் தலையங்கம் குறிப்பிடுகிறது. அதுதொடர்ந்து கூறுவதாவது;

"இந்த அதிகார மையப்படுத்தல் சித்திரம் சாதாரணமானதும், தவறானதும் என விமர்சிக்கப்படமுடியும். ஆனால் பலமானதும் நன்கு ஒழுங்கானதுமான ஜனநாயகங்களில், உள்ள மக்களின் உணர்வுகளை தாக்குகின்றது. அதிகாரம் மக்கள் எட்டிப் பிடிக்க முடியாத இடத்தில் இருந்து கொண்டுள்ளது. அவற்றை அரசாங்கங்கள் அவசியமான போதுகட்டுப்படுத்தவோ, தடை செய்யவோமுடியும். ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தற்சமயம் அவுஸ்திரேலியாவிலும் ஆர்ப்பாட்டங்களுக்கும் முக்கியமான காரணம் இதுவாகும்".

ஆசிரியத் தலையங்கம் எழுதுபவர்களுக்கு நேரிட்டது போல் பெருமளவிலான மக்கள் உண்மையில் தாம் தமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சக்திகாளால் மேலாதிக்கம் செய்யப்படும்போது எப்படி ஒரு சமுதாயத்தை ஒரு "பலமான" ஜனநாயகமாகக் கணிக்க முடியும் என்பதே கேள்வியாகும்.

சாத்தியமான அரசியல் அபிவிருத்திகளைப் பற்றிய ஒரு ஆழமான எச்சரிக்கை அண்டர்சன் கொன்சல்டிங் இன்டர்நஷனல் (Anderson Consulting's International) தலைவர் வேர்ணன் எலீசிடம் இருந்து தோன்றியதும் இவர் உச்சிமகாநாட்டின் கலந்துரையாடல்களை "டிஜிற்றல் டிவைட்" (Digital Divide) அடிப்படையில் வழிநடாத்தினார். யுத்தங்கள் உட்பட்ட ஆழமான பிரச்சினைகள் பூகோளமயமாக்கத்தின் ஒரு தாக்கம் காரணமாக வெடிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

"சில திருத்தங்கள் கையாளப்படாது போனால் ஒரு பெரும் வெடிப்பு ஏற்படும்" ஏனெனில் சுதந்திர வர்த்தகம், பங்குதாரர் பெறுமானத்தை அடிப்படையாகக் கொண்ட "தாராள சந்தை பொருளாதார" சக்திகள் "நினைத்தும் பார்க்காத அளவில் வருமான அசமத்துவத்தின் விரிசல்களை சுகாதாரத்திலும், கல்வியிலும் கொண்டுள்ளது."

"நாடுகளுக்கு இடையே அதிகரித்த அளவிலான பிளவுகள் உள்ளன. அவை நிச்சயம் யுத்தத்துக்கும் ஆழமான பிரச்சினைகளுக்கும் இட்டுச் செல்லும்.

"ஒரு உண்மையானதும் நிஜமானதுமான விழிப்புணர்வு உள்ளதாக நான் எண்ணுகின்றேன்.சமூக தாக்கங்கள் திருப்தியான முறையில்கையாளப்படாது போனாலும் பாதுகாப்பு வலைகளுக்கு கவனம் செலுத்தப்படாது போனாலும் பூகோளமயமாக்கத்தின் விரும்பத்தகாத பக்கவிளைவுகள் பிரச்சினைகளை எதிர்காலத்துக்கு தேக்கி வைக்கும்".

இந்தக் கருத்துக்கள் எவ்வாறெனினும்ஒரு தீர்வை வழங்குவதற்கு மாறாக பூகோளரீதியான முதலாளித்துவத்தின் கம்பனி, அரசியல் தலைவர்கள் எதிர்கொள்ளும் சீர்செய்ய முடியாத முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றது.

"சுதந்திர வர்த்தகத்தையும் பங்குதாரர் பெறுமதியையும் "அடிப்படையாகக் கொண்ட ஒரு பூகோளரீதியான பொருளாதார அமைப்பினை சமூக தேவைகளுடன் இணக்கம் காணச்செய்வது என்பது வட்டத்தைச் சுற்றிவலம் வருவது போன்றது.

பங்குதாரர் பெறுமானத்திலான அதிகரிப்பு- அனைத்துலகச் சந்தைகளில் போட்டா போட்டியினால் தள்ளப்படும் மூலதனத்தின் திரட்சி- அனைத்துலக தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பில் இருந்து உபரி பெறுமானத்தை கறந்துகொள்வதையும் தனியார் இலாப வடிவில் பங்கிட்டு கொள்வதையும் அடிப்படையாகக் கொண்டது. எவ்வாறெனினும் "பாதுகாப்பு வலைகளுக்காக" ஏற்பாடுகள் இறுதி ஆய்வுகளில் கிடைக்கக் கூடியதாக உள்ள உபரிப் பெறுமானத்தில் இருந்து குறைப்பை ஏற்படுத்திவிடும்.

அரசாங்கங்கள் சமூக விடயங்கள் தொடர்பாக என்னதான் வாயளவில் கூறிக் கொண்டாலும் அவை அனைத்துலகச் சந்தைகளின் நெருக்குவாரங்களுக்கு உள்ளாகின்றதுடன், இலாபத்துக்கான பூகோளரீதியான மூலதனத்தின் போராட்டத்தை பிரதிபலிக்க வேண்டியுள்ளதுடன், மூலதனத் திரட்சிக்கான போட்டி நிறைந்த நிலைமைகளை ஏற்படுத்துவதுடன் அல்லது தமது நாடு அனைத்துலக மூலதன பெருக்கெடுப்பில் இருந்து தனிமைப்படும் ஆபத்துக்கு உள்ளாகின்றன.

எனவேதான் WEF உச்சிமாநாட்டில் பங்கு கொண்டவர்கள் எவரும் பொருளாதார பூகோள மயமாக்கத்தினால் எழுச்சிபெறும் அதிகரித்த அளவிலான குமுறும் அரசியல் நிலையை நன்கு அறிந்திருந்த போதிலும் சந்தையின் கட்டளைகளை சமூக தேவைகளுடன் ஒன்றிணைக்கும் எந்த ஒரு சாதனத்தையும் வழங்க இயலாதவர்களாக விளங்கினர்.

மார்க்ஸ் விளக்கியது போல் அவை இந்த முட்டுக்கட்டை நிலையை அடைந்துள்ளன. பரந்த அளவிலான தொழில்நுட்ப மாற்றங்களினால் முன்நோக்கித் தள்ளப்பட்டுள்ள பூகோளரீதியான உற்பத்திச் சக்திகள், இலாப திரட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக உறவு முறையை கொண்ட அமைப்புடன் மோதிக் கொண்டுள்ளன.