World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS : செய்திகள் & ஆய்வுகள் :ஐரோப்பா: ஜேர்மனி

Is xenophobia a legacy of Stalinist-ruled East Germany?

ஜேர்மனியின் கிழக்கு பகுதியின் வெளிநாட்டவருக்கு எதிரான தன்மை ஸ்ராலினிசம் ஆட்சியிலிருந்த ஜேர்மன் ஜனநாயக குடியரசின் பாரம்பரியமா?

By Peter Schwarz
13 September 2000

Use this version to print

ஜேர்மனியின் கிழக்கு பகுதியில் அதிகரித்துவரும் வெளிநாட்டவருக்கு எதிரான பயங்கரத் தாக்குதல்களும், கருத்துக்களும் இவ்விவாதத்திற்கு புதிய வடிவத்தை கொடுத்துள்ளது. அதாவது இத்தாக்குதல்கள் ஜேர்மன் மறு இணைப்பின் விளைவா அல்லது இதற்கான வேர்கள் ஜேர்மன் ஜனநாயக குடியரசு வரை செல்கின்றதா என்பதாகும்.

அண்மையில் Potsdam நகரத்தை சேர்ந்த தற்கால வரலாற்று ஆய்வு நிலையம் "புதிய மாநிலங்களில் வெளிநாட்டருக்கு எதிரான தன்மையின் வரலாற்று காரணங்கள்" என்ற தலையங்கத்தில் ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளிவிட்டிருந்தது. இது இரண்டாம் வகையை சேர்ந்த நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது. அதாவது இதற்கான வேர்கள் ஜேர்மன் ஜனநாயக குடியரசு வரை செல்கின்றதா என்பதாகும். இதன் ஆசிரியர்களான Jan C.Behrends, Dennis Kuck, Patrice G.Poutrus வெளிநாட்டருக்கு எதிரான தன்மைக்கு இரண்டு நிலைமைகள் காரணங்கள் என்கின்றனர். அவையாவன ஜேர்மன் ஜனநாயக குடியரசில் வெளிநாட்டவர் தொடர்பான அணுகுமுறையும் கவனிப்பும், முன்னைய Socialist Unity Party- [ஸ்ராலினிசக் கட்சி] அரசாங்கம் தேசியவாத உலகப் பார்வையினை இறுகப்பிடித்திருந்ததாகும்.

அவர்களின் கருத்துக்களில் "ஜேர்மன் குடியரசுக்கு மாறாக ஜேர்மன் ஜனநாயக குடியரசில் தேசியவாத உலகப்பார்வை தொடர்பான வெளிப்படையான மதிப்பீடு இருக்கவில்லை எனவும், ஜேர்மன் தேசம் [German Nation] என்பது அரசினதும் மக்களினதும் மத்திய சிந்தனைக்குரிய புள்ளியாக இருந்தது என்பதும், இதனூடாக சோசலிச அரசு தன்னை ஒரு மூடிய சமூகமாக உருவகப்படுத்திக் கொண்டதுடன் தனது வழங்களை "வெளியாட்களுக்கு [வர்க்க எதிரிகள் அல்லது வெளிநாட்டவர்] அணுகமுடியாது வைத்திருந்தது" என்பது மத்திய புள்ளியாகும்.

இப்பத்திரங்கள் முக்கியமாக ஜேர்மன் சோசலிச கட்சியினை [PDS] சூழ தீவிர எதிர்ப்பை உருவாக்கிவிட்டது. Thomas Ahbe ஆல் Freitag என்ற பத்திரிகையில் எழுதியது இதில் மிகபொதுவானதாகும். அவர் "வலது தீவிரவாதத்திற்கான கிழக்கு ஜேர்மனிதான் என்பதற்கு கடந்த பத்து வருடங்களில் போதுமானளவு காரணம் காணக்கூடியதாக இருந்தது" எனக் குறிப்பிடுகின்றார். Thomas Ahbe, Potsdam ஆய்வுகள் தொடர்பாக விவாதத்திற்குள்ளாக்குகின்றார். ஆனால் இதிலும் 1953 ஜூன் 17ம் திகதி எழுச்சியை "பாசிச சதி" எனக் குறிப்பிடும் Socialist Unity Party இன் பிரசாரத்தை ஒத்த இன்றைய வலதுசாரி தீவிரவாதத்திற்கு காரணங்களை ஜேர்மன் ஜனநாயக குடியரசில் காணக்கூடியதாக இருக்கின்றது என்பதை காணக்கூடியதாகவுள்ளது. இரண்டு விவாதங்களிலும் "இது 'எங்களது' பிழையல்ல, இது சிக்கலான நிலைமைகளுக்குள் அபிவிருத்தியடைந்த 'எமது சிறந்த அமைப்பின்' பிழையல்ல மாறாக கடந்த காலத்தின் மோசமான பலம்வாயந்தவர்களின் பிழையாகும்" என்பதை காணக்கூடியதாகவுள்ளது.

வரலாற்று ரீதியானதும், உண்மையான காரணத்திற்கு எதிரான இந்நிலைப்பாடு வெளிப்படையாகவே மேற்கொண்டு செல்லமுடியாததாகும். Potsdam வரலாற்று ஆசிரியர்களால் எடுத்துக்காட்டாத, கண்களுக்கு தெளிவானதும் என்னவெனில் ஜேர்மன் மறு இணைப்பின் பின்னர் பரந்துபட்ட மக்கள் மத்தியில் சமூக வர்க்க சீரளிவும் முன்னோக்கற்ற தன்மையும் வலது தீவிரவாதிகளின் வளர்ச்சிக்கு சாதகமான விளைநிலத்தை உருவாக்கி கொடுத்துள்ளதாகும். மேலும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வெளிநாட்டவருக்கு எதிரான தன்மைகளான, மறு இணைப்பின் பின்னான வியட்நாம் தொழிலாளர் மீதான நடவடிக்கை, அகதி உரிமை கோருவதைக் கட்டுப்படுத்தல் போன்றவை 1992 இல் Rostoc என்னும் இடத்தில் இடம்பெற்ற வியட்நாம் மக்கள் குடியிருப்பு மீதான தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தது என்பதை நினைவுபடுத்தாமல் விடமுடியாது. குறைந்தளவில் என்றாலும் கூட மேற்கு ஜேர்மன் பகுதிகளிலும் இப்படியான தன்மைகள் இருக்கின்றது என்பதில் ஐயுறவேதுமில்லை.

ஆனால் இவை அனைத்தும் வெளிநாட்டவருக்கு எதிரான தன்மைகளும், தேசியவாத கருத்துக்களும் ஓரளவு பரந்தளவிலான கிழக்கு ஜேர்மன் மக்களிடையே இலகுவாக ஆதரவைப் பெறுகின்றன என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை. இது 40 வருடகாலம் கிழக்கு ஜேர்மனியின் உத்தியோகபூர்வ தத்துவார்த்தத்தினை கட்டுவதற்கான முக்கிய ஊண்டுகோலாக இருந்த "பாசிச எதிர்ப்பு", "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்பன பல பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டும், பல உத்தியோகபூர்வ விழாக்களுக்கு காரணமாக இருந்து என்பதையும் சிந்திப்பது முக்கிய கேள்வியாக உள்ளது. இது குறைந்தளவு தாக்கத்தைவிட்டு சென்றுள்ளது என்றால் இவ்வகை உத்தியோகபூர்வ "பாசிச எதிர்ப்பும்", "சர்வதேச வாதமும்" அடிப்படையில் பிழையானது என்ற முடிவினையே கிட்டத்தட்ட அடையவேண்டியுள்ளது.

வெளிநாட்டவருக்கு எதிரான தன்மைகளுக்கான காரணத்தை Thomas Ahbe செய்வது போல் பழைய சமூக அமைப்பின் மீது திருப்புவதும் இன்றைய காரணங்களை மறுப்பதும் போன்றவை இக்கேள்விகளுக்கு பதிலளிக்கப்போவதில்லை. இன்றைய சமூக அமைப்பிற்கு மாற்றீடாக ஒரு சோசலிச மாற்றீட்டினை முன்வைக்கையில் ஜேர்மன் ஜனநாயக குடியரசின் அனுபவங்களை விமர்சன ரீதியாக மறுபரிசீலனை செய்வதும், பாடங்களை பெற்றுக்கொள்வதும் தவிர்க்கமுடியாது.

ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் தேசியவாதம்

"கிழக்கு ஜேர்மனியில் தேசியவாத கருத்துக்கள் மதிப்பீடு எதுவும் இருக்கவில்லை. 50 வருடங்களாக அதிகாரத்துவம் செய்த பிரசாரத்தை நியாயப்படுத்துவதானால், அது பழைய தேசியவாத நியாயப்படுத்தும் வடிவத்தை, நியாயப்படுத்துகின்றது. அவர்களின் பல்லவியின்படி தீர்ப்பளித்தால் கிழக்கு ஜேர்மனி தன்னை ஜேர்மன் தேசியத்தின் உண்மையான பிரதிநிதியாக விளங்கிக்கொண்டது. சோசலிச உள்ளடக்கத்தை தேசிய வடிவத்தில் கண்டுகொண்டது". என Potsdam ஆய்வுகளின் ஆசிரியர்கள் பிரச்சனையின் மத்தியை சுட்டிக்காட்டுகின்றனர்.

நடைமுறையில் வெளிப்படையான தேசியவாதத்தை கிழக்கு ஜேர்மனியின் வரலாறு முழுவதும் ஒரு சிவப்பு கோடாக காணக்கூடியதாக இருக்கின்றது. இது அதன் ஆரம்ப வருடங்களில் மிக தெளிவாக காணக்கூடியதாக இருந்தது.

1943 இல் Walter Ulbrichts இன் தலைமையின் கீழ் ஜேர்மனியில் சோவியத் பிரசாரத்திற்கு பொறுப்பான "சுதந்திர ஜேர்மனியின் தேசியக்குழு" நிறுவப்பட்டபோதே அது தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசியவாதத்தை நோக்கி கோரிக்கைவிடுக்காது, அதன் பெயர் குறிப்பிடுவதுபோல் ஜேர்மன் தேசிய வாதத்தை நோக்கி கோரிக்கை விட்டது. இது மேலும் மோசமாக சென்று குடியரசின் கறுப்பு - சிவப்பு - பொன் நிற கொடியின் கீழ் அல்லாது அரசரின் கறுப்பு - சிவப்பு -வெள்ளை நிறத்தை எடுத்துக்கொண்டது.

ஸ்ராலின் மேற்கு நாடுகளின் நேரடிகட்டுப்பாட்டினுள் நடுநிலையான ஜேர்மனியில் நம்பிக்கையை கொண்டிருக்கும் வரையில், ஜேர்மன் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் ஒரு ஐக்கியப்பட்ட ஜேர்மன் தேசத்தின் தீவிரபாதுகாவலராக இருந்தனர். குளிர்யுத்தகாலம் எவ்வளவிற்கு தெளிவாக எடுத்துக்காட்டியதோ அந்தளவிற்கு அவர்களது தேசியவாதம் விசர்த்தனமானதாக மாறியது. இது அரசியல் கேள்விகளுடன் மட்டும் கட்டுப்பட்டிருக்கவில்லை. கலாச்சாரத்துறையிலும் அநேகமாக வெட்கப்படுமளவிற்கு நாசிகளின் கலாச்சார அரசியலை ஞாபகப்படுத்துமளவிற்கு தேசியவாதத்தை உரத்த குரலில் பாடினர்.

ஒரு உதாரணமாக இங்கு கலாச்சாரத்திற்கான ஜேர்மன் நிறுவனத்தில் 1950ம் ஆண்டு கிழக்கு ஜேர்மனியின் பிரதமரான Otto Grotewohl இன் உரை எடுத்துக்காட்டப்படுகின்றது. அதில் அவர் "உண்மையில் ஓர் பாரிய, உயர்ந்த தேசிய கலை அபிவிருத்தியடைய வேண்டுமானால் எமது தேசத்தின் ஒருமைப்பாடு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். இது உலகத்திற்கு எதிரானதல்ல. மாறாக கலையின் பெறுமதி முழு உலகத்திற்கும், முழு மனிதசமுதாயத்திற்கும் எவ்வளவிற்கு பெறுமதியானதோ அந்தளவிற்கு அதனது வேர்கள் தேசத்தின் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளது, எவ்வளவிற்கு அதன் அர்த்தம் சர்வதேச முக்கியத்துவத்தை கொண்டுள்ளதோ அந்தளவிற்கு அதனது தனித்தன்மையும், மூலமும், வடிவமும் தேசியவடிவானது" எனக்குறிப்பிட்டார்.

இன்னும் இதை விளங்கிக்கொள்ளாதவர்களுக்காக அவர் மேலும் "ஜேர்மன் கலைஞர்களின் அவநம்பிக்கை மிக்க பரந்த நோக்குடைய சிந்தனையை நோக்கிச் செல்வதும், உலகமக்கள் தொடர்பான தவறான விளக்கமும், தேசிய சிறப்பியல் பின்கடமைப்பாடு மாற்றுவழியல்ல மாறாக இது சொந்த மக்களை உயிர்வாழும் விருப்பை பலவீனமாக்குவதுடன், தமது தேசிய கடமையை பூர்த்திசெய்வதை இயலாமல் செய்கின்றது" என குறிப்பிட்டார்.

இத்தேசியவாத பிரசாரத்துடன் கையுடன் கை சேர்ந்தவாறு Socialist Unity Party முன்னாள் நாசிகளின் இளைஞர் அமைப்பிற்கு கதவு திறக்கப்பட்டது. Socialist Unity Party இன் கட்டுப்பாட்டின் கீழ் 1949 இல் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது. இதில் சகல கட்சிகளும் பாரிய அமைப்புக்களும் இணைந்து கொண்டன. அவர்கள் "கிட்லர் பாசிசத்தின் பாரம்பரியத்தில் உலக ஆதிக்கத்திற்கான சண்டையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈடுபட்டுள்ளதாகவும்", ஒரே எதிரிக்கு எதிராக இவ்அடித்தளத்தில் போராட "முன்னாள் அதிகாரிகள், இராணுவத்தினர், ஜேர்மன் வெயர்மாக்ட்டின் [கிட்லர் கால இராணுவம்] அதிகாரிகள், தளபதிகள், முன்னாள் நாசிகள் "உட்பட இணைந்து" பாரிய ஜேர்மன் விடுதலைப்போராட்டத்தில் ஒவ்வொரு ஜேர்மன் மக்களின் நிலைப்பாட்டில் ஜேர்மன் மக்கள் என்பது தான் அளவீடே தவிர அவர்கள் சேர்ந்திருந்த முன்னைய அமைப்புக்கள் தீர்மானகரமான அளவீடல்ல" என குறிப்பிட்டனர்.

முன்னாள் நாசிகளை இணைத்துக் கொள்வதற்காக ஜேர்மன் தேசிய ஜனநாயக கட்சி [NDPD] உருவாக்கப்பட்டது. ஆனால் இது Socialist Unity Party இல் பிரச்சனையை கொடுத்தது. ஏனெனில் இதற்கு கூடியளவு "முன்னைய நாசிகள்" விண்ணப்பித்திருந்தனர். 50ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் Socialist UnityParty இல் 100.000 முன்னாள் NSDAP அங்கத்தவர் இருந்தனர். குறிப்பிட்டளவு சிறிய கட்சியான ஜேர்மன் தேசிய ஜனநாயகக் கட்சி இல் கிட்டத்தட்ட 4,000 பேரே இருந்தனர். Socialist Unity Party இன் அண்ணளவான 4% இனர் நாசி தொடர்புகளை கொண்டவர்கள். கிட்லர் இளைஞர் அமைப்பில் 25% ஆனோர் முன்னாள் நாசிகளாகும். களையெடுப்பின் காரணமாக முன்னாள் சமூக ஜனநாயகவாதிகளினதும், கம்யூனிஸ்ட்டுக்களினதும் விகிதம் இதற்கு மாறாக 16% இற்கு வீழ்ச்சியடைந்தது.

இவ் அங்கத்தவர் தன்மையின் மாற்றம் முட்டாள் தனமான தேசியவாத பிரச்சாரத்திலும் பொதுவான சூழ்நிலையிலும் எவ்வாறான விளைவை ஏற்படுத்தியிருக்கும் என்பது சுலபமாக விளங்கக்கூடியது.

60ம், 70ம் ஆண்டுகளில் Socialist Unity Party தனது பிரசாரங்களில் "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை" பலமாக மத்திய புள்ளியாக வைத்தது. ஆனால் இதுவும் Potsdam ஆய்வுகளில் சரியாக கூறியுள்ளதை போல் உத்தியோகபூர்வ பிரசாரமான "சோசலிச தேசியவாதத்துடன்" தவிர்க்க முடியாதவாறு இணைந்திருந்தது." பயணங்களும், வெளிநாடுகளுடனும் அவற்றின் கலாச்சாரத்துடனான உண்மையான தொடர்புகளும் கட்சிக்கு விசுவாசமான சிறிய தட்டினருக்கு மட்டும்" இருக்கையில் இச் "சர்வதேசிய வாதம்" போலியான சடங்காக மட்டுப்படுத்தப்பட்டதுடன், அவர்களின் உதவியுடன் அரசின் வெளிநாட்டுக் கொள்கைக்கு ஆதரவளிப்பதற்காக இருந்தது.

கிழக்கு ஜேர்மனியின் வரலாறு தொடர்ந்தும் தேசிய அடித்தளத்தில் அர்த்தப்படுத்தப்பட்டு வந்தது. முரண்பாடான அரசியலை கருத்திற்கு எடுக்கையில் மட்டும் இது சோசலிச ஜேர்மனிக்கும் முதலாளித்துவ ஜேர்மனிக்கும் இடையிலானதாக கூறப்பட்டது. கிழக்கு ஜேர்மனி நிறுவப்பட்ட ஆண்டுவிழா தொடர்பாக 1979 ம் ஆண்டு Einheit [ஐக்கியம்] என்ற பத்திரிகையில் கிழக்கு ஜேர்மனி

"ஒரு உண்மையான தேசிய கூட்டாக" நாடு வளர்ச்சியடைவதை காணக்கூடியதாக உள்ளது. அதில் "சோசலிச ஜேர்மன் தேசிய உணர்மை" உறுதிப்படுவதும் "ஜேர்மன்" என்ற பதம் மக்களிடையே கரைவதனூடாக சோசலிசத்துடன் ஒரு "வளம்மிக்க உள்ளடக்கத்தை" கொண்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

கிழக்கு ஜேர்மனி தனது கடந்த பத்து வருட இருப்பில் ஜேர்மன் தொழிலாள வர்க்க இயக்கம் தனது ஆரம்ப காலத்தில் கசப்பான மோதல்களை கொண்டிருந்த பிரஷ்சிய பாரம்பரியத்துடனும் ஒழுக்கங்களுடனும் ஒரு மறுமலர்ச்சியை கொண்டிருந்ததை காணகூடியதாக இருந்தது. சீர்திருத்தவாதியான மாட்டின் லூதர், பிரஷ்சிய அரசரான பிரடரிக், "இரும்பு ஜனாதிபதியான" பிஸ்மார்க் ஆகியோர் தேசிய சின்னங்களாக கண்டுபிடிக்கப்படுவதும், பிற்போக்கான தத்துவ வாதிகளான பிரடரிக் நிற்ஷ்க, மார்ட்டின் கைடிகர் போன்றோர் புதிய நம்பிக்கையை பெறுகின்றதை காணக்கூடியதாக இருந்தது.

ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் வெளியாட்கள்

இப்படியான கருத்தியல் நிலைமையின் கீழ் வெளிநாட்டர் அல்லது மாற்றுக்கருத்து உடையவர்களுக்கு- "வெளியாட்களுக்கு" எதிரான தாக்குதல்கள் வளர்ச்சியடைவது இயல்பானதே. Potsdam இன் ஆசிரியர்கள் கிழக்கு ஜேர்மனியில் "சாதாரண" வெளிநாட்டவர்கள் இல்லை என சுட்டிக்காட்டுகின்றனர். பிரயாண அனுமதிப்பத்திரம் அல்லது அழைப்பிதழ் இல்லாமல் அங்கு உட்புகமுடியாது. அந்நாட்டு மக்களுக்கு ஏனைய நாட்டவரின் தொடர்போ அல்லது கலாச்சாரங்களுடனோ கிட்டத்தட்ட தொடர்பு எதுவுமிருக்கவில்லை.

கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்த வெளிநாட்டவரின் எண்ணிக்கை 190.000 இற்கு குறைவானதே. இதிலும் மக்களுடன் கட்டுப்பாடான தொடர்பு வைத்திருக்கலாம் என கடுமையான விதிமுறைகளுக்குள் முகாம்களுக்குள் வாழ்ந்த சோவியத் ஒப்பந்த அடிப்படையில் வந்த தொழிலாளர்களும் அடங்குவர். வியட்நாமிய ஒப்பந்த தொழிலாளிகள் தாய்மையடையும் சந்தர்ப்பத்தில் உடனடியாக நாட்டிற்கு திருப்பியனுப்பப்படுவர்.

Potsdam இன் ஆய்வுகள் "அவர்களின் சட்டரீதியன நிலைமை மேலும் நிலையற்றது. அவர்கள் தங்கியிருக்கும் அனுமதியை நீடிக்க சட்டஉரிமைகள் எதுவுமில்லை. மேலும் அலுவலகர்கள் வெளிநாட்டவர் மீது "கருணை காட்டுபவர்" மனப்பான்மையுடனேயே நடந்து கொள்வர். அரசியல் காரணங்களுக்காக நாட்டினுள் வந்தவர்களுக்கு அரசியல் தஞ்சம் கோரும் உரிமையில்லை. அவர்களின் தங்கும் உரிமை Socialist Unity Party இற்கு காட்டும் பணிவிலேயே தங்கியுள்ளது. அரசியல் அமைதிப்படுத்துவதற்காக அவர்கள் நாடு முழுக்க பரவலாக தங்கியிருக்க செய்யப்படுவர்" என குறிப்பிடுகின்றது.

Potsdam இன் ஆய்வுகளின் படி "50ம் ஆண்டுகளிலும் பின்னரும் மக்கள் 'வெளிநாட்டவரை' தொடர்ச்சியாக கண்காணிக்க எச்சரிக்கப்பட்டனர். Socialist Unity Party இன் வரைவிலக்கணத்தின் படி 'வெளிநாட்டவர்கள்' எதிரிகளின் உளவாளிகளாகவோ, ஆத்திரமூட்டுவோராகவோ, சதியாளர்களாகவோ இருக்கலாம், ஒருவரையும் நம்பமுடியாது" எனவும் கூறுகின்றது.

80 ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் போலந்தை தொழிலாளர் எழுச்சிகள் ஆக்கிரமிக்கையில் Socialist Unity Party போலந்து எதிர்ப்பு பிரசாரத்தை கட்டவிழ்த்துவிட்டது. Neue Deutschland என்ற பத்திரிகை போலாக்கன் என்ற போலந்து மக்களை இழிவுபடுத்தும் வாசகத்தை பயன்படுத்தியது. தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்தும் 1988 களில் பாடல் ஒன்றில் "கடைகளில் இருந்து நான் வருகின்றேன். உங்களுக்கு நான் ஒன்று கூற வேண்டும் --கடைகள் எல்லாம் வெறுமையாகிப் போயுள்ளன. படிகள், குந்துகள் எல்லாம் போலந்துகாரர் தனது சொந்தங்களுடன் நிரம்பியிருக்கின்றனர்" என பாடப்பட்டிருந்தது.

பத்திரிகை செய்திகளின்படி 80 ஆம் ஆண்டுகளில் கிழக்கு ஜேர்மனியில் வலதுசாரி இசைக்குழுவினரின் தோற்றத்தை காணக்கூடியதாகவுள்ளது. ஆனால் இது உத்தியோகபூர்வமாக "Rowdys" என்ற பெயரில் குறிப்பிடப்பட்டது. Junge Welt என்ற பத்திரிகை 1987 ஆம் ஆண்டு நடந்த வழக்கு ஒன்று தொடர்பாக "கிழக்கு ஜேர்மனியில் பாசிசம் அடிவரை அழிக்கப்பட்டுள்ள போதும், தண்டனைக்குரியதாயுள்ளபோதும் "Rowdys" இன் பாடல்களில் நாசிகளின் கால கருத்துக்கள் மீண்டும் ஒலித்ததை காணக்கூடியதாயுள்ளது" என குறிப்பிடுகின்றது.

நாசிகளின் தாக்குதல்கள் யூதர்களின் நினைவாலயங்கள் மீதும், கல்லறைகள் மீதுமட்டுமல்லாது தமது எதிராளிகள் கூட்டங்கள் மீதும் நடக்கின்றது.1987 இல் கிழக்கு பேர்லின் நகரிலுள்ள Zion தேவாலயத்தின் மீது இத்தாக்குதல் நிகழ்ந்தது. இத்தாக்குதலுக்காக முன்னாள் Stasi [ஸ்டாசி-கிழக்கு ஜேர்மன் இரகசியபடை] இன் "வலது தீவிரவாதத்திற்கு" பொறுப்பான அதிகாரியின் மகனான Andre Riechert மீதுகுற்றம் சாட்டப்பட்டது. இவர் தற்போது கலைக்கப்பட்டுவிட்ட தேசிய மாற்றீடு என்ற குழுவின் நிறுவனரும், பேச்சாளருமாக 1990இல் இருந்தவர். Andre Riechert கிழக்கு ஜேர்மனியில் தேசியவாதம் முன்னைய அதிகாரத்துவ தட்டிடமிருந்து வருவதற்கான காரணத்திற்கான ஒரு உருவாக்கம் ஆவார். ஆனால் இவர் ஒரு தனியான நிகழ்வல்ல.

கூட்டுக் குற்றக் கருத்து

Potsdam ஆய்வுகளின் ஆசிரியர்கள் இன்று நிலவும் வெளிநாட்டவருக்கு எதிரான தன்மைக்கான காரணமாக முன்னைய கிழக்கு ஜேர்மனியின் உத்தியோகபூர்வ தேசியவாதத்தை சரியாக காரணமாகக் காண்கின்றனர். ஆனால் கிழக்கு ஜேர்மனியின் தலைமை இந்த வழிக்கு சென்றதற்கான அரசியல் நோக்கத்தை பிழையாக விளங்கிக்கொண்டு முற்றிலும் தவறான முடிவிற்கு வருகின்றனர்.

அவர்கள் நாசி அரசின் தோல்வியின் பின்னர் "இனவாத, தேசியவாத, போல்சுவிக் எதிர்ப்பினை கொண்ட நாசிகளின் பிரசாரம் "ஜேர்மன் மக்களிடையே கூடியளவு பரப்பப்பட்டிருந்ததாகவும் Socialist Unity Party தமது பிரசாரத்தில் போதிய கவனம் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். "தேசிய சோசலிசம் தொடர்பாக வெளிப்படையாக பேசுவதற்கு பதிலாக 40 வருடகாலமாக கிழக்கு ஜேர்மன் மக்களுக்கு ஒரு சிறுபான்மையான முன்நோக்கினால் தேசிய சோசலிசத்திற்கெதிராக தீவிரமாக எதிர்த்த கம்யூனிச போராளிகளைப் பற்றி கூறிவந்தது. பெரும்பான்மையான ஜேர்மன் மக்கள் நாசி சரவாதிகாரத்தை ஆதரித்தோ அல்லது ஏற்றுக்கொண்டோ இருந்தனர். எனவே மக்களின் அனுபவங்களுக்கும், கருத்துக்களுக்கும் Socialist Unity Party பிரசாரத்திற்கும் இடையே முன்னரேயே ஓர் இடைவெளி தோன்றிவிட்டது" என அவர்கள் மேலும் எழுதியுள்ளனர்.

சிலவேளை இவர்கள் நனவில்லாமல் சோவியத் அதிகாரிகளினதும் Socialist Unity Party இனது அரசியலை நியாயப்படுத்திய "கூட்டுக் குற்றம்" என்ற கருத்து ஜேர்மன் மக்கள் அனைவரும் கிட்லரையும் அவரது அரசியலையும் ஆதரவளித்தனர் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். இக்கருத்து ஒரு பக்கத்தில் ஹிட்லரின் எழுச்சிக்கான தமது சொந்தப் பொறுப்பை திசைதிருப்பி ஸ்ராலினிசத்திற்கு எதிரான சகல விமர்சனங்களை ஒடுக்குவதுடன் மற்றப்பக்கத்தில் சோவியத்தினது ஆக்கிரமிப்புக் கொள்கையையும், அவர்களால் இயந்திரங்களும் தொழிற்சாலைகளும் கழற்றிக் கொண்டு செல்லப்பட்டதை நியாயப்படுத்துவதுமாகும்.

வரலாறு கூட்டுக் குற்றக்கருத்தை நிராகரிக்கின்றது. தங்களது சுதந்திரமான கருத்தை கூறக் கூடியவரையும் "பெரும்பான்மை ஜேர்மன் மக்கள் தேசிய சோசலிசத்தை நிராகரித்தனர். இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சமூக ஜனநாயகக் கட்சிக்கும் ஆதரவாக வாக்களித்தது மட்டுமல்லாது பாசிச அபாயத்திற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடவும் தயாரக இருந்தனர். ஹிட்லர் தனது வெற்றிக்கு முதலாளித்துவ அரசிற்கும் அதன் அமைப்புகளுக்கும் பின்னால் நின்ற சமூகஜனநாயகக்கட்சிக்கும், ஸ்ராலினின் ஆழுமையின் கீழ் நாசிகளுக்கெதிரான ஐக்கிய முன்னணியை சீரழித்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தனது நன்றியை கூறிக்கொண்டார்.

இத் தொழிலாள வர்க்க கட்சிகளினது இயலாமையும், உடனடியாக அதனை தொடர்ந்த நாசிகளின் பயங்கரவாதமும் சகலவிதமான எதிர்ப்புகளையும் கருவிலேயே அழித்ததுடன் 1933ம் ஆண்டிற்கு பின்னர் எந்தவித திட்டமிட்ட எதிர்ப்பையும் காட்டமுடியாமல் செய்தது. இதனால் பல தொழிலாளர்கள் அமைதியாக இருந்தனர் அல்லது ஒரு சிறிய வட்டத்திற்குள் தம்மால் இயன்றதை செய்தனர். இதனால் நாசிகள் 12 வருடம் பெரும்பான்மையான மக்களை தமது ஆட்சியின் பக்கம் வெற்றி கொண்டுவிட்டனர் எனக் கூறுவது முட்டாள்த் தனமானதாகும். நாசிகளின் தோல்விகளை தொடர்ந்து சகல இடங்களிலும் சாதாரண ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்களால் அல்லது சமூக ஜனநாயகக் கட்சியால் வழிநடத்தப்பட்ட பாசிச எதிர்ப்புக் குழுக்கள் தோன்றியதுடன் நாட்டை மீளக்கட்டும் பணியை தமது கைகளில் எடுத்துக்கொண்டனர்.

இந்த சுயாதீனமான பாசிச எதிர்ப்பிற்கு எதிரானதே Socialist Unity Party இன் தேசிய வாதக் கொள்கை எண்ணுக்கணக்கற்ற வரலாற்று ஆவணங்களும், தனியார் நினைவுகளும் இவ்வாறு தோன்றிய சுயாதீன குழுக்களும், தொழிற்சாலைக் குழுக்களும் திட்டமிட்டபடி கலைக்கப்பட்டு அதிகாரிகளால் பிரதியீடு செய்யப்பட்டதை எடுத்துக்காட்டும். இவ் அதிகாரிகளில் முதலாளித்துவ அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களும் அடங்குவர்.

இதுதொடர்பான தெளிவான விபரத்தை இக்கலைப்பில் நேரடியாக பங்குபற்றிய Ulbricht குழுவின் அங்கத்தவரான Wolfgang Leonhard எழுதிய "புரட்சி தனது பிள்ளைகளை விடுதலை செய்கின்றது" என்ற புத்தகத்தில் காணக்கூடியதாக உள்ளது. இந்நடவடிக்கைகளுக்கான நோக்கம் என்னவென்பதை எந்த ஒரு ஐயுறவுமில்லாமல் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "ஸ்ராலினிசம் தனக்கு அபாயத்தை உருவாக்கக்கூடியதும் அதனது கட்டுப்பாட்டை தனது கையிலெடுத்து தம்மை அதிகாரத்தில் இருத்தக்கூடிய கீழிருந்து தோன்றும் சுயாதீனமான பாசிச எதிர்ப்பு, சோசலிச, கம்யூனிச இயக்கமோ அமைப்போ தோன்றுவதை அனுமதிக்கப் போவதில்லை. இது ஜேர்மனியின் பாசிச எதிர்ப்பு, இடதுசாரித் தன்மையான பிரிவுகளின் சுயாதீனமான இயக்கத்தின் மேல் அதிகாரத்துவத்தின் முதலாவது வெற்றியாகும்".

ஸ்ராலினிசமும் தேசியவாதமும்

Socialist Unity Party யின் தேசியவாதப் போக்கின் முழு அர்த்தத்தினை விளங்கிக் கொள்வதற்கு 20ம் ஆண்டுகளில் சோவியத் யூனியனில் ஸ்ராலினிசத்தின் தோற்றத்தினை விளங்கிக்கொள்ள வேண்டும். சோசலிச புரட்சியின் சர்வதேச தன்மையே, அன்று ஸ்ராலின் பிரிவிற்கும் ட்ரொட்ஸ்கிச இடது எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான விவாதத்தின் மத்திய புள்ளியாக இருந்தது. தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை உருவாக்கலாம் என்ற ஸ்ராலினினது கருத்து மாக்சிசத்தின் முன்னைய கருத்திற்கு முற்றுமுழுதாக எதிரானதாகும்.

இது தனியே தத்துவார்த்த கேள்விகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை ஸ்ராலினது தேசியவாதப் போக்கு அரசாங்கத்தினுள்ளும் கட்சியினுள்ளும் இருந்த அதிகாரத்துவத்தினது நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. இவ் அதிகாரத்துவத்தட்டு தன்னை ஒரு வசதி படைத்த பிரிவினராக மாற்றிக்கொண்டு உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தோன்றிய புரட்சிகர எழுச்சிகளை தமக்கு அபாயகரமானதாக கண்டுகொண்டது. இது பாரிய ரஷ்ய இனவாதத்தின் பாரம்பரியத்தால் ஆழுமை செலுத்தப்பட்டதும் இவ்வதிகாரத்துவத்தை மாக்சிசத்திற்கெதிரான போராட்டத்திற்கான சமூக அடித்தளமாக கொண்ட பின்தங்கிய தட்டினரிடமும் ஆதரவை பெற்றுக்கொண்டது. சுருக்கமாக சொன்னால் இத்தேசியவாதம் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச முயற்சிகளுக்கு எதிரான அதிகாரத்துவத்தின் தத்துவார்த்த, அரசியல் ஆயுதமாக சேவை புரிந்தது.

ஸ்ராலினது எழுச்சியானது அதிகாரத்துவம் தனது பலத்தை உறுதிப்படுத்திக்கொண்டதுடனும், 1937ம் ஆண்டு ஒரு முழுத்தலைமுறை புரட்சிகர மாக்சிஸ்டுக்களை உடலியல் ரீதியாக அழித்ததில் உச்சகட்டத்துடனும் ஒரேதன்மை உடையது. சர்வதேச மட்டத்திலும் ஸ்ராலினிசம் மீண்டும் மீண்டும் வெளிப்படையாக எதிர்ப்புரட்சிப் பங்கை வகித்தது. ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் ஸ்ராலினிச இரகசிய பொலிசார் புரட்சிகரமான பிரிவுகளின் அழிவுகரமான பங்குகளை வகித்ததன் மூலம் பாசிச பிரங்கோவின் வெற்றிக்கு சாதகமானது.

இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கு பின்னர் கிரெம்ளினின் வெளிநாட்டுக் கொள்கை இவ் அதிகாரத்துவத்தின் சமூக நலன்களையே பிரதிபலித்தது. அவர்களுக்கு தமது பாதுகாப்பும் அமைதியான நிலைமையுமே தேவையாக இருந்தது. பாதுகாப்பு நலன்களுக்காக கிழக்கு ஐரோப்பாவில் மொஸ்கோவின் நேரடி ஆதரவில் தங்கியிருந்த தாங்கி அரசுக்களை [Buffer States] உருவாக்கி கொண்டதுடன், அமைதிக்காக முதலாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் எழுச்சிகளால் பயமுறுத்தியதை போன்ற கீழ்மட்டத்திலிருந்து வந்த சகல முயற்சிகளையும் இல்லாது ஒழித்தது.

இத்தாலியிலும் பிரான்சிலும் பாரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசாங்கங்களுடன் இணைந்து முதலாளித்துவ அமைப்பை உறுதிப்படுத்த துணைபுரிந்தனர். ஸ்ராலினிஸ்ட்டுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கிழக்கு ஐரோப்பாவில் மக்களின் சகல சுயாதீனமான முயற்சிகளும் பலாத்காரமாக ஒடுக்கப்பட்டன. மக்களுக்கும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் இடையேயான முரண்பாடுகள் அதிகரிக்கையில் அந்தளவிற்கு அவர்கள் தேசியவாத பிரிவுகளிடம் தமது நேரடியாக தங்கியிருந்தனர். கிழக்கு ஜேர்மனியில் முன்னாள் நாசி கட்சி [NSDAP] அங்கத்தவர்களை புனரமைப்பு செய்ததும் 1953 ஜூன் 17 தொழிலாள எழுச்சியை ஒடுக்கியதும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவாறு நிகழ்ந்தது.

ஆரம்பத்தில் சோவியத் சமூக வடிவத்தை கிழக்கு ஐரோப்பாவிற்கு கொண்டு வருவதும் பரந்தளவிலான பறிமுதலாக்கலை முன்னெடுக்க ஸ்ராலின் திட்டமிட்டிருக்கவில்லை இது குளிர்யுத்த காலத்தின் பின்னர் அதிகரித்த அழுத்தங்களை ஸ்ராலிஸ்டுக்கள் கண்ட பின்னரேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. யுத்தத்தை தொடர்ந்து சோவியத்தின் ஆழுமைக்கு உட்பட்டிருந்த ஜேர்மன் பகுதிகளில் பாரிய நிலங்களும் அரசுக்கு, தேசிய சோசலிச அமைப்புக்களுக்கு, யுத்தக் குற்றவாளிகளுக்கு சொந்தமான பெரிய, கனரக தொழிற்சாலைகள் பறிமுதல்செய்யப்பட்டன. ஹிட்லரின் எழுச்சிக்கு இவ் ஜேர்மன் பொருளாதார அமைப்புக்கள் முக்கிய பங்கு வகித்தன என்பதை பெரும்பாலானோர் தெரிந்து கொண்ட இக்காலகட்டத்தில் இந்நடவடிக்கை பாரிய ஆதரவைப்பெற்றது. 1946 ம் ஆண்டு Sachsen என்ற இடத்தில் நடந்த சர்வசன வாக்கெடுப்பில் 77% ஆனோர் யுத்தக் குற்றவாளிகளின் சொத்துக்களை நஷ்டஈடு இன்றி பறிமுதல் செய்வதற்கு ஆதரவளித்தனர்.

கிழக்கு ஜேர்மனி "பாசிச எதிர்ப்பு அரசு" என்ற புகழைப் பெறுவதற்கு இவ் பறிமுதலாக்கலில் தங்கியிருந்தது. கிட்லரின் ஆதரவாளர்களின் சொத்துக்கள்மீது கைவைக்கப்படாதிருந்த மேற்கு ஜேர்மனியை போல் அல்லாது நாசி அரசாங்கத்திற்கான முக்கிய சமூக ஆதரவைக் கொடுத்த அடித்தளங்கள் அனைத்தும் கிழக்கு ஜேர்மனியில் இல்லாது போனது. கிழக்கு ஜேர்மன் பகுதிகளிலும் இன்றைய போலந்திலும் ரஷ்யாவிலும் சொத்துக்களை கொண்டிருந்த பாரிய நிலச்சொந்தக்காரர்களும், அதிகாரிகள் தட்டினரும் 1848 புரட்சி தோற்கடிக்கப்பட்டதிலிருந்து பிஸ்மாக், வில்லியம், வைமார் குடியரசுவரையும் பின்னர் கிட்லரின் எழுச்சிக்கு முக்கியபங்கு வகித்ததுடன் 100 வருடங்களுக்கு மேலாக ஜேர்மனியின் பிற்போக்கு அரசியலுக்கு முதுகெலும்பாக இருந்தனர்.

இன்று சொத்துக்கள் பறிமுதல் செய்ததும், தேசியமயமாக்கியதுமான அல்லது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான எழுச்சிகளை ஒடுக்கியதா வரலாற்று ரீதியில் முக்கியமானது எனக் கேட்டால் பதில் மிகத்தெளிவானது. ஒரு சோசலிச சமுதாயம் மக்களின் தியாகம் மிக்க முயற்சியினாலேயே கட்டப்படமுடியும் Socialist Unity Party ஆல் சகல சுயாதீன அரசியல் முயற்ச்சிகளும் ஒடுக்கப்பட்டதானது தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் நிராயுதபாணியாக்கியது. இது தனிய கிழக்கு ஜேர்மனித் தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியை மாற்றி ஜேர்மனியின் கிழக்கு பகுதிகளில் மூலதனத்திற்கான பாதையை திறந்து விட்டதுமல்லாது, வேலைத்தலங்கள் மீதும், வருமானத்தின் மீதும், சமூக நலன்களின் மீதும் நடாத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு தொழிலாள வர்க்கம் இன்று ஏன் எதிர்க்க முடியாதுள்ளது என்பதற்கான காரணமுமாகும்.

இங்குதான் பாசிச போக்குகள் தோன்றுவதற்கான ஆழமான காரணங்களுள்ளன. தொழிலாள வர்க்கம் சமூக சீரளிவிலிருந்து வெளியேறுவதற்கான பாதையைக் காட்ட இயலாது போகையில் பாசிசம் சீரளிந்த தட்டினரிடையே ஆதரவை பெறுவதை வரலாற்று அனுபவங்கள் காட்டுகின்றன. வெளிநாட்டவருக்கு எதிரான தன்மையும் நவபாசிசமும் கிழக்கு ஜேர்மனி விட்டுச்சென்ற சமூக, தத்துவார்த்த விளைநிலத்தில் செழித்து வளர்வதற்கான காரணம் சமூக நெருக்கடிக்கான தீர்வு தொழிலாள வர்க்கத்திடம் இல்லாததால் ஆகும்.

எனவே தான் பாசித்திற்கு எதிரான போராட்டம் பாரியதட்டு மக்கள் வேலையின்மைக்குள்ளும், ஏழ்மையினுள்ளும், வாழ வசதியற்ற நிலைமைக்குள்ளும் தள்ளப்படுவதுமான சமூக அபிவிருத்திக்கு எதிரான போராட்டத்துடன் ஒன்றிணைந்தது. இதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய அரசியல் அணிதிரளல் அவசியமாகும். ஸ்ராலினிசத்தால் அழிக்கப்பட்ட சோசலிச பாரம்பரியமான சர்வதேச ஒன்றிணைவும், சமூகசமத்துவமும் மீள உயிர்ப்பிக்கப்படவேண்டும்.

Potsdam இன் ஆசிரியர்கள் முற்றிலும் மாறான முடிவிற்கு வந்துள்ளனர். அவர்கள் "வெளிநாட்டவர்களின் மனித உரிமைக்காகவும், உள்ளூர் மக்களுடனான முரண்பாட்டிற்கு எதிராக அரசு தெளிவான தலையீடு செய்யப்பட வேண்டும்" என அழைப்பு விடுகின்றனர். அதாவது அரசு மக்களுக்கு எதிராக "ஜனநாயகத்தை" பாதுகாக்க வேண்டும் என்கின்றனர். இது மறைமுகமாக கிழக்கு ஜேர்மனியை ஞாபகப்படுத்தவில்லையா?. இவர்கள் சமூக சமத்துவத்திற்காக போராடுவதை நிராகரிக்கின்றனர். "சகல வகையினரையும் இணைத்து சமாதானமாக கொண்டு செல்லும் முயற்சி சமுதாயத்தின் உந்து சக்தியை கிழக்கு ஜேர்மனி இட்டுச் சென்றமுட்டுச்சந்திக்கே இட்டுச்செல்லும்".