World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Israeli provocation against Palestinians ignites a social powder keg

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலியஆத்திரமூட்டல் சமூக வெடிமருந்தை தீப்பற்றவைக்கிறது.

By Jean Shaoul
4 October 2000

Use this version to print

இஸ்ரேலியபாதுகாப்பு படைகள் பாலஸ்தீன கட்டுப்பாட்டில்உள்ள மேற்கு கரை மற்றும் காசாபகுதிகளில்குறைந்த பட்சம் 60பது பாலஸ்தீனியர்களை(12 சிறுவர்கள் உட்பட கொன்றனர் மற்றும்(350 சிறுவர்கள் உட்பட)1500 க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்தினர். மன உலைவு கொண்டபோர் நிறுத்தம் பல பகுதிகளில் சொவ்வாய்க்கிழமையன்று கட்டுப்பாடாக இல்லை. ஜந்து நாட்கள்கோபமான ஆர்ப்பாட்டங்கள் மற்றும்வேலை நிறுத்தங்களை தொடர்ந்துபழைய ஜெருசலேம் நகரிலுள்ள அல்அக்சாபள்ளி வாசலுக்கு இஸ்ரேலின் எதிர்க்கட்சியானலிக்குட் கட்சியிலிருந்து(Likud party) ஏரியல் ஸரொன்விஜயம் சொய்தார்.

பாலஸ்தீனியர்கள்ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்ததை அடுத்து மேற்குக் கரை மற்றும்காசா முழுவதும் கடைகளும், பள்ளிகளும்மூடப்பட்டன. கடந்த நாலு வருடங்களில்மிகவும் பரந்தளவில் இஸ்ரேலுக்கு உள்ளேயேஅரபு நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குபரவிய வேலை நிறுத்தங்கள், கலவரங்களைஎதிர்கொள்ள டாங்கிகள் அனுப்பப்பட்டன.

தன்னியல்பாக வெடித்த கோபத்தில்,கற்களை தூக்கி வீசும் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியஇராணுவத்தின் பலமான ஆயுதப்படைகளைஎதிர் கொண்டனர். அப்படையினர் எழுச்சியைநசுக்கும் முயற்சியில் உயிர்த்துடிப்புள்ளஆயுதங்களை பயன்படுத்தியது மற்றும்ஹெலிகப்டர்களை தாக்கின. ஒரு பிரெஞ்சுதொலைக்காட்சி குழுவை சேர்ந்தஒருவர் ஒரு கெட்டியான தண்ணீர் தொட்டிக்குப் பின்னால் பதுங்கிய நிராயுதபாணியானஒரு பாலஸ்தீனியர் அவருடைய12 வயது மகனுடன்நின்ற வண்ணம் தம்மைவிட்டுவிடும்படி இஸ்ரேலியர்களிடம் மன்றாடும் துயரமான சைகைகளைபடம் பிடித்தார். சில கணங்களில் நாலுகுண்டுகள் அந்தபையன் மேல் தாக்கியது.அவனது தந்தையின் கரங்களில் அவன் சாய்ந்தான். எட்டுகுண்டுகள் அவனது தந்தையைதாக்கின அவர்களது உதவிக்கு வந்த ஆமபுலனஸ்ஓட்டுனரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இஸ்ரேலிய ஆயுதப்படையினர் டாங்கிகளைஅனுப்பி மேற்கு கரை மற்றும் காசாபகுதிகளை மூடின. ஆனால் நபுலஸ் ஹெப்ரொன்மற்றும் ரமல்லா ஆகிய பிரதான மையங்களிலும்காசா பகுதியிலுள்ள இஸ்ரேலிய குடியேற்றமானநெட்சரிம் ஐ பாதுகாக்கும் இராணுவக்காவலிடதிலும் சண்டை வெடித்தது. இந்த மோதலின் ஒரு முக்கியமான காட்சி என்னஎன்றால் பாலஸ்தீனிய நிர்வாக பாதுகாப்புஅதிகாரிகள் பலர் உள்ளூர் மக்களுடன்சேர்ந்து எதிர்ப்பில் ஈடுபட்டனர். பாலஸ்தீனதலைவர் யசீர் அரபாத் தலையிட்டு ஆர்பாட்டங்களை நிறுத்தும்படி இஸ்ரேலிய பிரதமர்எகுட்பரக் அழைப்பு விடுத்தார்.

ஆனால்அப்படியான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது இலகுவானதல்ல என்பதை அரபாத்தெளிவாக உணர்ந்து கொண்டார். அவர்அதற்கு பதிலளிக்கும் வகையில் கோரிக்கைவிடுத்தார். அதாவது இஸ்ரேல் அதன் படைகளைபாலஸ்தீனிய நகரங்கள் மற்றும் கிராமங்களில்இருந்து திரும்ப பெறவேண்டும் என்றும்அவரது மக்கள் மீது சுடுவதை நிறுத்த வேண்டும்என்றும் கோரினார். அமெரிக்க ஜனாதிபதிபில் கிளின்டன் மற்றும் ராஜங்க செயலாளர்மடெலயின் அல்பிரைட்டின் தலையீடுதான்இறுதியில் ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தியது.அது இன்று அரபாத் மற்றும் பரக்கிற்குஇடையில் பேச்சு வார்த்தை முடிவிற்காககாத்திருக்கிறது.

அரபு லீக்கின் அவசரக்கூட்டம் ஒன்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.அது இஸ்ரேலின் செயலை விசாரணை செய்யும்படிஜக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையைகேட்டுக்கொண்டது. வன்முறை அமைதிக்கானநிகழ்வு போக்குகளை நாசப்படுத்துவதாகஜோர்டான் மன்னர் அப்துல்லாவும்எகிப்திய வெளிநாட்டு அமைச்சர் அமர்மவுசாவும் அவர்களது அச்சத்தை வெளிப்படுத்தினார்கள். ஈரான் மற்றும் சிரியாவின் ஆதரவுடன்போர் குணம் கொண்ட முஸ்லீம் குழுவானஹெச்பொல்லா இஸ்ரேலுடன் தொடர்ந்துபோராடுமாறு பாலஸ்தீனியர்களை ஊக்கப்படுத்தியது. ஆனால் அதில் நேரடியாக தலையிடுவதுபற்றிய அதன் விபரம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கைகளைஎடுப்பதற்காக ஜக்கிய நாடுகள் பாதுகாப்புசபை கூட்டத்தை கூட்டும்படியான அழைப்புகளை ஹெச்பொல்லா எதிரொலித்தது.

மேற்குக்கரை மற்றும் காசாவில் இஸ்ரேலின்படுகொலையை கண்டனம் செய்வதற்காகஇரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமைலெபனானிலுள்ள பாலஸ்தீனிய அகதிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோபம் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் டயர்களையும் அமெரிக்கமற்றும் இஸ்ரேலிய கொடிகளையும் எரித்தனர்.இஸ்ரேலுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைநிறுத்தும்படி பாலஸ்தீனிய நிர்வாகத்துக்குஅழைப்பு விடுத்தனர். மற்றும் சுதந்திரபாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான பிரகடனம்செய்யும்படி கேட்டனர். லெபனானில்வாழும் 3 இலட்சத்து அறுபதாயிரம் பாலஸ்தீனியஅகதிகள் குறிப்பாக அக்கறை கொண்டுள்ளனர்.அதாவது இஸ்ரேலுடனான எந்தவொருஒப்பந்தமும் அவர்களை நாடு அற்றவர்ளாக்கிசிதறடிக்கச் செய்யும் என்று கவலைகொண்டுள்ளனர்.

இந்த எழுச்சியானதுஇரண்டாவது 'இன்ரிபாடா' என்று வருணிக்கப்படுகிறது. 1967ல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்குப் பிறகுமோசமான சமூக, பொருளாதாரமற்றும் அரசியல் நிலைமைகளுக்கு எதிராக1987-88 களில் தோன்றிய கிளர்ச்சி. 52 வருட அரபு-இஸ்ரேலிய மோதலை தணிப்பதற்காக ஒரு அரசியல்நுட்பத்தை காணும் குறிக்கோளுடன்1991ல் மட்ரிட்டில் தொடங்கிய மற்றும் இப்போதுதடுமாறியுள்ள அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான இயைபியக்க ஊக்கியாக 'இன்ரிபாடா'மாறியுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களின்நிகழ்ச்சிகள், இஸ்ரேலினால் வழங்கப்பட்டவரம்புக்கு உட்பட்ட சுய ஆட்சி தொடர்பாகபாலஸ்தீனிய மக்கள் மத்தியில் இருக்கும் பரந்தளவிலான அதிருப்தியை எடுத்துக்காட்டியுள்ளன.அந்த சுய ஆட்சி முக்கியமாக அரபாத்தைசுற்றியுள்ள ஒரு சிறு குழுவினரான புகழ்மிக்கவர்களுக்குத்தான் நன்மை அளித்துள்ளது.

இஸ்ரேலுக்குள்இருக்கும் அரசியல் சக்திகளின் நடவடிக்கைகள்பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்பட்ட வரம்புக்குஉட்பட்ட சலுகைகளை கூட எதிர்க்கின்றனமற்றும் நீடித்த ஒரு அமைதி தீர்வுக்கு பங்கம்ஏற்படுத்தும் எண்ணத்துடன் இருப்பதாகதெரிகிறது. இவர்கள் ஆர்ப்பாட்டங்கள்தூண்டிவிடப்படுவதற்கு பொறுப்பானவர்கள்.இஸ்ரேலிய அரசு மற்றும் பழைய நகரமானஜெருசலமின் எதிர்காலம் இவற்றின் தன்மைபற்றி இஸ்ரேலிய அரசியல் நிறுவனத்திற்குள்ஆழமான வேர் கொண்ட பிரிவுகள் இருக்கின்றன.இவை இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும்இடையில் ஒரு தீர்வு காண்பதற்கு பிரதானமுட்டுக்கட்டையாக மாறியுள்ளது. முட்டுக்கட்டையை அகற்ற அமெரிக்காவிடம் இருந்துவந்த பலமான அழுத்தத்துக்கு பதிலளிக்கும்வகையில் 'ஜெருசலம் போஸ்ட்' என்றபத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், ஜெருசலமில்ஒன்றுக்கு ஒன்று எதிராக உள்ள இரட்டைத்தலை நகரங்களை கொண்ட ஒரு திட்டத்தைபரக் முன்வைத்தார். அந்த நகரத்துக்கானஅராபிய பெயரைக் கொண்ட அல் குவுட்ஸ்பாலஸ்தீனியர்களுக்கு உரியதாக இருக்கும்.அதேசமயம் ஜெருசலம் இஸ்ரேலின் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தலைநகரமாகஇருக்கும். மவுண்ட் கோயில் அல்லது ஹரம்அல் சரிப் மீது பாலஸ்தீனிய இறையாண்மையைஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றுபரக் வலியுறுத்தினார். அவை யூத மற்றும்முஸ்லீம் நம்பிக்கைகள் இரண்டுக்குமே மதமற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇடமாகும். ஆனால் 'பகுதி உடன்பாடு'சாத்தியமானது என்று வாதிட்டார். ஜெருசலத்தை பிரிப்பது நிச்சயமாக இஸ்ரேலை பலப்படுதும்என்று அவர் வாதிட்டார். பரக் ஏற்கனவேஜோர்டானுடன் அதன் எல்லையை அமைத்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தஜோர்டான் பள்ளத்தாக்கை பாலஸ்தீனியநிர்வாகத்திடம் விட்டுவிட்டார். பாலஸ்த்தீனியஅதிகாரிகள் பரக் இன் அறிக்கைகளை வரவேற்றனர் அவை கடந்த வாரத்தில் அவருக்கும்அரபாத்திற்கும் இடையில் நடந்த கூட்டத்தில்எட்டிய உடன்பாட்டைப் பிரதிபலிப்பதாகஇருந்தன.

ஜெருசலமின் அந்தஸ்த்து பற்றியவரம்புக்குட்பட்ட சலுகைகள் இஸ்ரேலியஅரசை மதச்சார்பற்றதாக்கும் மற்றும்அதன் பொருளாதார, சமூக வாழ்க்கையைஅதிகமாகக் கட்டுப்படுத்தும் மதநிர்வாகிகள்மற்றும் கட்சிகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு தொடரான நடவடிக்கைகளைப்பரக் அறிவித்ததைத் தொடர்ந்து வழங்கப்பட்டவையாகும். இப்படியாக மதசார்பின்மைபக்கம் திரும்பியது அவரது பழமைவாதஎதிர்ப்பாளர்களுக்கு எதிராக சரித்துவரும்மக்கள் ஆதரவை அணிதிரட்டுவதற்க்கானஒரு நம்பிக்கையிழந்த முயற்சியாகும். மற்றும்அவரது சிறுபான்மை "ஒரு இஸ்ரேல்" கூட்டணிஅரசாங்கத்தின் உடனடி வீழ்ச்சியைத்தடுக்கும்முயற்சியாகும். பரக் கணிப்பிட்டது என்னவெனில்அவரது அரசாங்கம் வீழ்ச்சிகாணுமாயின்,எனசெட்டில் (பாராளுமன்றத்தில்) எந்தக்கட்சிக்கும் 20 சதவீதத்துக்கும் அதிகமானஓட்டு இல்லாத நிலையில், அது அக்டோபர்இறுதியில் மீண்டும் கூடும்போது அரபாத்துடன்ஒரு தீர்வைக் காண்பதற்கான வாய்ப்புக்களும்கூட வீழ்ச்சியடையும். பிரதான எதிர்க்கட்சியானலிக் கட்சியும் சிறிய மதக்கட்சிகளின் ஆதரவைஅதிகமாகக்கொண்டுள்ளதுடன் அது பாலஸ்தீனியநிர்வாகத்துக்கு எந்தவொரு சலுகைவழங்கலையும் எதிர்க்கிறது.

அல் அக்ஷாபள்ளிவாசல் மற்றும் மவுண்ட் கோயில்மேலுள்ள பாறையின் குவிமாடத்திற்கு விஜயம்செய்ய ஹரொன் எடுத்த முடிவானது,முன்னய பிரதமர் பெனயமின் நெட்டன்யாகுவுக்கு எதிராக லிக்குட் கட்சியில் அவரதுதலைமையைக் காப்பாற்றவும் ஐக்கியயூத ஜெருசலமின் பாதுகாவலனாகஅவர் தன்னைக் காண்பிக்கவும் எடுத்தமுயற்சியாகும். சமீபத்தில் ஏமாற்று லஞ்சம்குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டபின்நெட்டன்யாகு இப்போது சுதந்திரமாகஅரசியல் வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.1970களில் பாலஸ்தீனியர்களுக்கு எரிரான ஷரொனின்இராணுவ சாதனை மற்றும் 1982 இல் சப்ரா,ஷட்டிலா அகதி முகாம்களில் படுகொலைகளுக்கு அவருடைய பொறுப்பு போன்றவைஇருக்கும் நிலையில் மஷண்ட் கோயிலுக்குஅவருடைய விஜயத்தை ஒரு திட்டமிட்ட ஆத்திரமூட்டலாகவே கருதமுடியும். அவர் ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்ட போது, கலவரபோலீஸ்அல் அஷா பள்ளிவாசலுக்குள் மூர்க்கத்தனமாகதாக்குதல் நடத்தியது மற்றும் கல் வீசியவழிபாட்டாளர்கள் மீது துப்பாக்கிச்சூடுநடாத்தி ஆறுபேரைக் கொன்றது.

ஷரொன் பயணத்தின் மூலமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட மோதலின் அளவு மற்றும் இஸ்ரேலின்குரூரமான நடவடிக்கைகள் பாலஸ்தீனியநிர்வாகத்தினுள் நிலவும் சமூக மற்றும் அரசியல்பதட்டங்களின் அளவீட்டை தருகின்றது. சியோனிசஅரசாங்கம் தொடர்பான அரபாத்தின்சமரச நிலைப்பாட்டுக்கு அங்கே பெரும்எதிர்ப்பு உள்ளது. மற்றும் 5 வருடங்களுக்குள்ஒரு பாலஸ்தீனிய அரசை உருவாக்குவதாகக்கருதப்பட்ட 1993 ஒஸ்லோ உடன்படிக்கைகளைஏழாவது ஆண்டு நிறைவான செப்டம்பர்13இல் ஒரு சுதந்திரமான பாலஸ்தீன அரசுபிரகடனம் செய்யப்படும் என்ற அவரதுவாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதுதொடர்பாகவும் அவர்மீது குறிப்பிட்டஅளவு கோபம் உள்ளது. மே மாதம்லெபனானில் இருந்து இஸ்ரேல் துருப்புக்களைதிரும்பப் பெற்றுக்கொண்டதும் கூடபாலஸ்த்தீனியர்கள் மத்தியில் போர்குணஉணர்வுகளை ஊக்கப்படுத்தியதில் ஒருபாத்திரம் வகித்தது. ஆனால் ஐந்துநாட்க்களாக நடக்கும் எழுச்சியின் வேர்களை பாலஸதீனியநிர்வாகத்தில் நிலவும் மோசமான குப்பைகூழமான நிலை மற்றும் வறுமையில்தான்கண்டுகொள்ளமுடியும்.

அமைதியைஏற்படுத்துவதற்கும் வாழ்க்கைத்தரங்களைமேம்படுத்துவதற்க்கும் வெகுதூரத்துக்குஅப்பால் ஒஸ்லோ உடன்படிக்கைகள்மற்றும் அதை அடுத்த "அமைதிக்கானநிலம்" என்ற இஸ்ரேலுடனான ஒப்பந்தங்கள்பெரும்பானமை பாலஸ்தீனிய மக்களின் துன்பத்தைஅதிகப்படுத்தின. பாலஸ்த்தீனிய நிர்வாகத்தின்பொருளாதாரம் இன்னும் இஸ்ரேலின்கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலையில், வாழ்க்கைத்தரங்கள் கடும் சுமையாக மாறின மற்றும்வேலையின்மை மிகுதியானதாகியது, காசாப்பகுதியில் 50 சதவீதத்திற்கும் அதிகமானது, நீர்ப்பாசனத்துக்குப் போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தினால் விவசாய உற்ப்பத்தி வீழ்ச்சியடைந்தது.

"நாளைக்கு பழப்பாகு" என்ற வாக்குறுதிகளுடன்தான் வளர்சியடையும் அதிருத்தி மேல் அரபாத்மூடியைப் போட்டுவைத்து வருகிறார்.மற்றும் அமரிக்கா, ஐரோப்பாவிலிருந்துகிடைக்கும் கடன்கள், அத்துடன் அவரதுஅரசியல் அவரது அதிருப்தியாளர்களுக்குஎதிரான அடக்குமுறையும் கையாளப்படுகிறது.பாலஸ்த்தீனிய நிர்வாகத்தின் கீழுள்ள மக்கள்தொகையுடன் போலீஸ்க்காரர்களின்விகிதாசாரம் 1.50 ஆக வியப்பாக உள்ளது.இது உலகிலேயே மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.அமெரிக்கா மற்றும் சர்வதேச வங்கிகளினால்நிதியளிக்கப்படுகையில் பாலஸ்தீனிய நிர்வாகத்தின்வரம்புக்குட்பட்ட பட்ஜெட்டின் மிகப்பெரும்பகுதியை பாதுகாப்புப்படைகள் உட்கொள்கின்றன. மேலும் அரபாத்தின் ஆட்சியை நடுஇரவு கைதுகள், இராணுவ நீதிமன்றங்கள்,சித்திரவதை மற்றும் அடக்குமுறை மூலம்ஏற்கும்படி செய்கின்றன. ஷரொனின் யுத்தத்திற்குகிட்டுமான நிலைமைகள் எடுத்துக்காட்டுவதுஎன்னவென்றால் இது காலவரையறையின்றிநீடிக்கமுடியாது. சமூக மற்றும் அரசியல்பதட்டங்கள் இப்போது உடையும் கட்டத்தைஅடைந்துள்ளன. இந்நிலையில் அரபாத்மற்றும் பரக்கின் செல்வாக்கு கடுமையாகப்பலவீனம் அடைந்துள்ளது.