World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: உலகப் பொருளாதாரம்

WSWS speaks with demonstrators outside the World Economic Forum in Melbourne

மெல்போர்னில் உலக பொருளாதர ஆய்வுப்பீட சம்மேளனத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடாத்தியவர்கள் உலக சோசலிச வலைத் தளத்துக்கு வழங்கிய பேட்டி

By Linda Tenenbaum
16 September 2000

Use this version to print

கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் புதன் கிழமை வரை மூன்று நாட்களாக மெல்போர்னில் உலக பொருளாதார சம்மேளனம் கூடியபோது அதற்கு எதிராக வெளியே பலத்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. பூகோளமயமாக்கத்துக்கு எதிரான தீவிரவாத அமைப்புகள் இதனை ஒழுங்கு செய்திருந்தன. இங்கு இடம் பெற்ற சம்பவங்கள் பெருமளவிலான மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தன. இதில் கலந்து கொண்டவர்களில் அரசியல் ரீதியில் இத்துடன் இணைந்த அரசியல் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாட விரும்பியவர்கள் உலக சோசலிச வலைத் தளத்துக்கு வழங்கிய பேட்டிகளில் குறிப்பிடத் தக்கவற்றை இங்கே தருகிறோம்.

செப்டம்பர் 11ம் திகதி உலக பொருளாதார ஆய்வுப்பீட சம்மேளனம் கூடியபோது இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சாதாரண பொது மக்கள் தற்போதைய சமுதாய நிலைமைகளையிட்டு பெரும்பாலும் அதிருப்தி கொண்டிருந்தது ஓர் குறிப்பிடத் தக்க அம்சமாக விளங்கியது.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் பலர் பூகோளமயமாக்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்ட அடிப்படையிலான முன்நோக்கையிட்டு பெரும் குழப்பநிலை அடைந்திருந்தனர். அத்துடன் ஆர்ப்பாட்டத்தின் பெறுபேறு என்ன என்பதையிட்டும் அவர்களிடையே ஐயப்பாடு காணப்பட்டது. நாம் பேட்டி கண்டவர்கள் தாங்கள் பூகோளமயமாக்கத்தை எதிரக்கவேண்டியது அவசியம் என்ற நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. மாறாக பாரிய பன்னாட்டு கூட்டுத்தாபனங்களின் ஆதிக்கம் அவற்றின் நடவடிக்கைகளின் தாக்கங்களையிட்டும் ஆழ்ந்த வெறுப்பைக் கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. தொழிலாளர்கள் சுரண்டப்படுவது தொடர்பாகவும் 'மூன்றாம் உலக நாடுகளின்' கையாலாகாத்தனம் பற்றியும் அவர்கள் கேள்வியெழுப்பினர்.

இவை சாதாரண விடயமன்றி மிகத் தீர்க்கமானவை எனும் வளர்ச்சியடைந்த மனப்பாங்கு உருவாகி வருவது வெளிப்பாடாகியது. உலக பொருளாதார அமைப்பு பற்றிய பிரச்சினை அவுஸ்திரேலியாவில் மட்டுமல்லாமல் உலகரீதியில் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்று எனும் உணர்வு அவர்களிடையே காணப்பட்டது.

எனினும் தற்போதைய நிலைமைக்கு வழிவகுத்த அரசியல் போக்குகளை தர்க்க ரீதியாக ஆராய்ந்து பார்ப்பதில் குறைவான கவனமே செலுத்தப்பட்டது.

பதினையாயிரத்துக்கும் அதிகமான பலம் வாய்ந்த இந்த ஆர்ப்பாட்டம் இளைஞர் -பாடசாலை பல்கலைக்கழக மாணவர்களையும்- 15-25 வயதுக்கிடைப்பட்ட வேலையற்றோர் இளம் தொழிலாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியிருந்தது. சிலர் தீவிரவாத குழுக்களிலிருந்து சுயவிருப்புடன் வந்த அங்கத்தவர்கள் அவர்களின் சினேகிதர்களுடன் வந்த சிலரும் காணப்பட்டனர். சேவையில் உள்ள நூற்றுக்கணக்கான வயோதிப தொழிலாளர்களும் வந்திருந்தனர்.

செப்டம்பர் 11ம் திகதி உலக பொருளாதார சம்மேளனத்தின் கூட்டத்தை நிறுத்துவது இந்த ஆர்ப்பாட்டத்தின் அடிப்படை இலக்காக விளங்கியதால், கூட்டம் இடம்பெறவிருந்த மண்டபத்தின் ஏழு நுழைவாயில்களிலும் வழித்தடை அமைப்பதே அமைப்பாளர்களின் வேலையாக காணப்பட்டது. ஆயிரக்கணக்கான பொலிசார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் அமைக்கப்பட்டிருந்த கொங்கிரீட் தடைகளுக்கு அப்பால் "கூட்ட அரங்கை மூடிவிடு", உலக பொருளாதார சம்மேளனத்தின் கூட்டத்தை உடன் நிறுத்து" போன்ற சுலோகங்களை கோஷித்தவண்ணம் இருந்தனர். துப்பாக்கி ஏந்தி குறிபார்த்தவண்ணமிருந்த பொலிஸ் மோதல் படைகளுக்கு எதிராக நடனமாடியபடியும், வாத்தியங்கள் இசைத்தபடியும், கூட்டத்துக்கு வருகை தந்தவர்களை தரையில் அமர்ந்தும் வழிமறித்தும், கூட்டத்துக்கு சமூகமளிக்கவிருந்த 900 பேரில் 200 பேரை உட்புகமுடியாதபடி தடுத்து விட்டனர்.

எனினும் பெரும்பான்மையானவர்கள் இந்த வழிமறிப்பில் பங்குபற்றவில்லை. அவர்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த குவிக்ஸ்பிரீட்ஜ் வீதியில் நடனமாடி, குழுக்களாக கூடி கதைத்தபடி, அல்லது காசினோ வாயிலினுள் நடப்பதை தூரத்தில் நின்று அவதானித்தபடி நின்றனர்.

நாம் பேட்டி கண்ட பலர் தாம் வெறும் "பார்வையாளர்களாகவே" வந்துள்ளதாக தெரிவித்தனர். பலவாரங்களாக ஊடகங்களில் ஆர்ப்பாட்டத்தை கண்டிக்கும் செய்தி அறிக்கைகள் வெளிவந்ததால் பொலிஸ் வன்முறை இடம்பெறலாம் என்ற கவலையுடன் தம்மைக் காத்துக்கொள்ளும் முகமாக அவ்வாறு இருந்ததாக விளக்கினர்.

ரிகாடோ என்ற தொழில்நுட்பவியலாளரும் தானியா, டானியல், என்ற மாணவர்கள் உட்பட்ட மூன்றுபேரும் தாம் ஏற்கனவே இங்கு வரத் தீர்மானித்திருந்ததாக குறிப்பிட்டனர். "நான் வராதிருந்தால் இது பற்றிய தொழிலாளர் சிந்தனையை பெறமுடியாமல் போயிருக்கும்" என தானியா தெரிவித்தார். ஏன் என நான் கேட்டபோது: "பெரும் கூட்டுத்தாபனங்கள், தொழிலாளர்களை சுரண்டுவது பற்றி தாம் கேள்விப்பட்டிருந்த சகலதும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டதால்" என கூறினார்.

"இந்த ஆர்ப்பாட்டம் எதனை அடையப்போகிறது? இது ஜனநாய ரீதியில் தெரிவுசெய்யப்படாத ஒரு அமைப்பு. நாம் அப்படிப்பட்ட ஒரு அமைப்பை எம்மைச் சுற்றி இயங்க அமைத்துக்கொண்டுள்ளதாக" டானியல் தெரிவித்தார்.

"இது ஒரு வித மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை. இது ஒரு விதமான விழிப்புணர்வு மட்டுமே. நாம் அவர்களை சிறு அசெளகரியத்துக்கு உள்ளாக்குகின்றோம் என்பது மட்டுமேயாகும்" என தானியா மேலும் தெரிவித்தார்.

கவின் என்ற 19வயது சாரதி ஒருவர் கண்டத்திற்கு தொலைதூரமுள்ள (Perth) பேர்த்திலிருந்து பிரயாணம் செய்து பங்குபற்றியுள்ளார். மேற்கு அவுஸ்திரேலிய காடுகள் அழிப்பு சூறையாடலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் முன்பு கலந்துகொண்டு பொலிஸ் வன்செயல்கள் பற்றிய பூரண அனுபவங்கண்ட ஒருவர். "வனக்குழு" என்ற 40 பேர் கொண்ட ஒரு குழுவில் 18 பேர் யுரேனிய அகழ்வுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தவாறு மெல்போர்னிற்கு துவிச்சக்கர வண்டிகளில் வந்துள்ளனர். கெவின் ஏன் இதில் கலந்து கொண்டார் எனக் கேட்டபோது: "அழகான பொருட்கள் அழிக்கப்படுவதை நான் விரும்பாததாலும், உலகில் இன்று பற்று இல்லாமல் போயிருப்பதாலும் நான் இதில் கலந்து கொண்டேன்" எனக் குறிப்பிட்டார். ஆனால் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக ஒன்று விளங்காதுள்ளது போல் உணர்வதாக அவர் தெரிவித்தார். தாம் என்ன செய்யப்போகின்றார்கள் என அறியாமலும், நடப்பதை விரும்பாமலுமே தாம் கலந்துகொண்டுள்ளதாக உணர்வதாக தெரிவித்தபடியே அனேகர் பங்குபற்றுவதாக அவர் கூறினார்.

ஓர் பழங்குடி தொழிலாளி (Adelaide) அடிலெய்ட்டிலிருந்து வந்தவர், "டாலர்களை வைத்துள்ள மக்களுக்கு எதிராகவே தான் வந்துள்ளதாகவும், அவர்களே பூர்வீகப் பழங்குடிகளுக்கு நிகழ்ந்துள்ள இன்னல்களுக்கு பொறுப்பாக உள்ளனர் என்பதால் அவர்களுக்கு எதிர்ப்பு காட்டவே வந்துள்ளதாக" கூறினார்.

ஒரு பஸ் வழிமறிப்புக்குள்ளாவதை பாதுகாக்கத் தவறிய பொலிசாரை கண்காணித்தவாறு இருந்த ஓர் இளம் நகர்ப்பற தொழிலாளி "இதை எனது வாழ்க்கையில் நான்கண்ட பெரிய சிவில் கலவரமாக நான் காணுவதால் இதனை பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என தெரிவித்தர்.

26 வயதுடைய கிரிஸ் என்ற சமையல் உதவியாளர் "நான் உலக பொருளாதார சம்மேளனத்துடன் இணங்கிப் போகவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தையும் விரும்பவில்லை. நான் இச் செயல் ஜனநாயக ரீதியிலானதல்ல என்பதையிட்டும் தெளிவாக இல்லை. என்ன இடம்பெறப் போகின்றது என்பதையிட்டும் எனக்குத் தெளிவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். உள்ளே இருப்பவர்கள் மக்கள் சந்தோஷமாயில்லை என்பதை நன்றாக அறிந்து கொள்ளவேண்டும் என்பதில் நான் அக்கறையாய் உள்ளேன் என்பதே அது" என்றார்.

" சிறிய மனிதன் பலமின்றி வெளியே தள்ளப்பட்டுள்ளான் என்பதை நான் காண்கிறேன். வியாபாரிகளுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி பாரியது. இது சரியல்ல எல்லா மனிதரும் சமமானவர்கள் என்பதே சரி" என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர்களாக தொழில்புரியும் இரண்டு முதிர்ந்த பெண்கள் பெரும் கூட்டுத்தாபனங்களின் நடவடிக்கைகளை தாம் விரும்பவில்லை என தெரிவித்தனர். இந்த கூட்டம் நடப்பதை நாம் அவதானித்துக்கொண்டுள்ளோம். உள்ளே என்ன பேசுகின்றார்கள் என்பதை நாம் அறிவோம். நாம் அறிவில்லாதவர்கள் அல்ல. எமது கண்கள் நன்றாகத் தெரிகின்றன. நாம் கவனம் செலுத்துகின்றோம் என்பதை அவர்களுக்கு காட்டிக் கொள்ளவே இங்கு வந்துள்ளோம்" என அவர்கள் கூறினார்கள்.

அட்ரியன் என்ற டிரக் சாரதி, மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள விரும்புவதால் இங்கு வந்தேன் எனக் கூறியதுடன் சில கேள்விகளுக்குப் பதில் தேடுவதாகவும் இங்கு நடப்பதையிட்டும் மக்கள் அதிருப்தியுற்றுள்ளதாகவும் அவர்கள் கேள்விக்குறியுடன் நிற்பதை காணுவதாகவும் தெரிவித்தார். மக்கள் இதனை எப்போதும் ஏற்றுக்கொள்ளப் போவதாயில்லை என்ற செய்தியை இது தெரிவிப்பதாக அவர் மேலும் கூறினார்.

முக்கியமாக குறிப்பிடப்படுவது எது எனக் கேட்டபோது: "எந்த பூகோளமயமான நிறுவனமுமே இதனை செய்யாது என்றார். நுகர்வோர் உற்பத்தியை பகிஷ்கரிப்பதே அவரது தீர்வாக உள்ளது. குறைந்த பட்ஷம் அவர் எதனையாவது செய்கிறார்" என்று அவர் எமக்குத் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் பற்றிய விடயங்கள் தொடர்பாக கேட்டபோது அட்ரின் கடந்த காலங்களில் அவைகள் என்ன செய்துவிட்டன என கேட்டார். ஏன் அவர்கள் அப்படி நடந்துகொள்கின்றார்கள்? அவர்களது அரசியல் வேலைத் திட்டம் பற்றி பேசுவதில்லையா என நாம் கேட்டோம்.

மதிய போசன இடைவேளையில் உணர்ச்சி வசப்பட்ட 20 வெஸ்லி கல்லூரி மாணவர்கள், குவீன்ஸ்பிரிட்ஜ் வீதியில் ஊர்வலமாக வந்து கலந்துகொண்டனர்.

பிப்கெல்லி என்பவர் "எமது எதிர்காலத்துக்கு இந்த விடயங்கள் பெரிதும் முக்கியமானவை என மாணவராகிய நான் கருதுவதால் இதில் கலந்து கொள்கின்றேன். நாம் கதைப்பது இந்த உலகில் நடந்துகொண்டிருப்பதை பற்றியல்ல. நாம் மாற்றம் ஒன்று வேண்டும் என விரும்புகின்றோம். இது மிகப் பெரிய விடயமாகையால் எனது பாடசாலை சீருடையுடனேயே வந்துள்ளேன்" என்றார்.

இந்தப் பிரச்சினைக்கு பூகோளமயமாக்கலே காரணம் என்ற தீவிரவாத குழுக்களின் கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா என நான் கேட்டபோது: பல்வேறு வகையான பூகோளமயமாக்கல் உண்டு. சில நல்லவையாகவும் சில தீயவையாகவும் விளங்கும். பூகோளமயமான வறுமையையே என்னால் அங்கீகரிக்க முடியாதுள்ளது" என குறிப்பிட்டார்.

சர்வதேச ரீதியில் கணனித் தொழில்நுட்ப வசதிகளுக்கான வாய்ப்புகள் பெருகியுள்ளமை, ஓர் பாரிய வளமாகும். இதனால் மக்கள் தொடர்பு நெருக்கமாகி உலகம் குறுகியுள்ளது. ஆனால் பூகோளமயமான உற்பத்தி பாரிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.

"கூட்டுத்தாபனங்கள் தமது இலாபத்தை உயர்த்தவே உற்பத்தியை மாற்றுகின்றன. அவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் குறைந்த கூலியில் தொழிலாளரை வேலைக்கமர்த்தும் பிரச்சினை காணப்படுகின்றது. பன்னாட்டுக் கூட்டுத்தாபனங்கள் தொழில் நிலைமைகளை வெட்டித் தள்ளுவதை தடுக்குமாறு தேசிய அரசாங்கங்களை நெருக்குவதன் மூலம் தீர்வுகாணலாம் என தான் கருதுவதாக பிப் தெரிவித்தார். "வேலையில்லாப் பிரச்சினை போன்றவற்றை தீர்ப்பதிலும் சலுகை சேவை நலன்புரிகளை வழங்கவல்ல ஒரே அமைப்பு தேசிய அரசாங்கமே என அவர் மேலும் கூறினார்.

நாம் அந்த அபிப்பிராயத்தில் எதிர்மாறான போக்கு தென்படுவதை சுட்டிக் காட்டினோம். பூகோளரீதியில் தாவிச் செல்லும் மூலதனத்தை எதிரிக்கு எதிராக கவர்ந்து கொள்வதற்காக, உலக ரீதியில் அனைத்து தேசிய அரசாங்கங்களும் இதுவரை தாம் செய்த அரச நலன்புரி சேவைகளை வெட்டி வேலையற்றோரை மலிவு உழைப்புக்கு தள்ளிவிடுவதை நாம் மேலும் சுட்டிக் காட்டினோம்.

பூகோள ரீதியில் உற்பத்தியின் தோற்றத்திற்கான சமூக பொருளாதார கட்டமைப்பின் மீதே இந்த பிரச்சினை தங்கியுள்ளதை நாம் விளக்கினோம்.

அவர் சுட்டிக்காட்டிய "மக்கள் அறிந்து கொள்பவராக, தம்மை சுற்றி நடப்பதையிட்டு அக்கறையுள்ளவராக விளங்குவது அவசியம்" என்பதை அமுல் படுத்தல் அவசியம் என்பதை நாம் அவருக்கு வலியுறுத்தினோம். ஏனென்றால் ஓர் பூகோளரீதியான மறுமலர்ச்சியை நாம் உருவாக்கவே வேண்டும் என்பதால்" என்று பதில் கிடைக்கும்.

எப்படி அது உருவாகும் அதற்காக செய்யவேண்டிய பணிகள் என்ன? என்பது பற்றி அவர் தெரிந்திருக்கவில்லை. "இதுவரை நாம் அந்தளவுக்கு சிந்திக்கவில்லை" என பிப் ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர் இந்த விடயங்களை பாரதூரமானதும் முக்கியமானதும் என உணர்ந்ததோடு கலந்துரையாடலையும் பாராட்டினார்.