World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா: இலங்கை

Extreme right make significant gains in Sri Lankan elections

இலங்கை பொதுத் தேர்தலில் தீவிர வலதுசாரிகளின் கை ஓங்கியுள்ளது.

By K. Ratnayake
14 October 2000

Use this version to print

அக்டோபர் 10ல் இலங்கையில் இடம் பெற்றபொதுத் தேர்தல் முடிவுகள் நீண்ட உள்நாட்டுயுத்தம், வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சி,வேலையின்மையினதும் வறுமையினதும் வளர்ச்சிகாரணமாக பெரும் கட்சிகள் பரந்தஅளவில் செல்வாக்கு இழந்து போயுள்ளதைஎடுத்துக் காட்டியுள்ளது. ஆனால் இதனால்சிங்கள தீவிரவாதக் கட்சிகளான ஜனதாவிமுக்தி பெரமுனவும் (JVP) சிங்களஉறுமய கட்சியுமே (SUP) பெரிதும்ஆதாயம் கண்டுள்ளன.

ஆளும் பொதுஜனமுன்னணி அரசாங்கம் பெற்ற வாக்குகள்(1994ல்) 48 வீதத்தில் இருந்து 45 வீதமாக வீழ்ச்சிகண்டுள்ளது. முக்கியமாக அதன் கோட்டைகளாக விளங்கிய பொலனறுவை, ஹம்பாந்தோட்டைதொகுதிகளை அது இழந்துள்ளது. இப்பகுதிகளில்உள்ள வறிய விவசாயிகள் தமது உற்பத்திப்பொருட்களுக்கு உயர்ந்த விலையும்மற்றும் உதவியும் கோரி பிரச்சாரத்தில்இறங்கியுள்ளனர். வர்த்தக அமைச்சர்கிங்ஸ்லி விக்கிரமரத்ன உட்பட நான்கு பொதுஜனமுன்னணி அமைச்சர்கள் தமது தொகுதிகளைஇழந்துள்ளனர்.

பொதுஜன முன்னணிகூட்டரசாங்கத்தினுள் பழமை வாய்ந்ததொழிலாளர் வர்க்க கட்சிகளான லங்காசமசமாஜக் கட்சியும்(LSSP) இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும்(CPSL) அடியோடு குடை சாய்ந்து போயுள்ளன.இலங்கை 1948ல் சுதந்திரம் அடைந்ததன்பின்னர் லங்கா சமசமாஜக் கட்சி தனக்கெனஒரு தொகுதியைத் தன்னும் இம்முறைவெற்றி கொள்ளத் தவறியுள்ளது. அதனதுதலைவரான பற்றி வீரக்கோன் தேசியப்பட்டியல் எம்.பி.யாக தெரிவு செய்யப்படும் வாய்ப்புஇருந்து கொண்டுள்ளது. இலங்கை கம்யூனிஸ்டுக்கட்சி இரண்டு ஆசனங்களை இழந்துள்ளது.இக்கட்சி ஒரு ஆசனத்தையும் அத்தோடுபேரளவில் மட்டும் இலங்கை கம்யூனிஸ்ட்கட்சி அங்கத்தவாரக இருந்து கொண்டுமுழு அளவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்அங்கத்தவராக பிரச்சாரத்தில் ஈடுபட்டஇந்திக குணவர்தனவும் ஒரு ஆசனத்தைகைப்பற்றியுள்ளார்.

எதிர்க்கட்சியானயூ.என்.பி. பொதுஜன முன்னணிக்கு இருந்துவந்த எதிர்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ள முடியாது போய்விட்டது. அரசாங்கஊழியர்களது சம்பளங்களையும் சமூகசெலவீனங்களையும் அதிகரிப்பதாகக்கூறும் ஒரு தொகை வாக்குறுதிகளைஅது அள்ளி வீசியிருந்த போதிலும் அதனது வாக்குகள்(1994ல்) 44 சதவீதத்தில் இருந்து 41 சதவீதமாகவீழ்ச்சி கண்டுள்ளது. இக்கட்சி 89 ஆசனங்களைமட்டுமே வெற்றி கொண்டுள்ளது. இது1994ல் யூ.என்.பி. பெற்றதை விட 5 ஆசனங்கள்குறைவானதாகும். மாஜி.அமைச்சர்ரேணுகா ஹேரத் போன்ற முக்கிய யூ.என்.பி.அரசியல் புள்ளிகள் தோல்வி கண்டுள்ளனர்.

இந்த தேர்தலில் பெரிதும் ஆதாயம் சுருட்டிக்கொண்ட கட்சி ஜே.வி.பி.யே. கடந்த பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினரை மட்டும் கொண்டிருந்தஇக்கட்சி இம்முறை 10 பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி கொண்டுள்ளது. இது தனது பாரம்பரியமான சமூகத் தளங்களான கிராமப்புறங்களில்உள்ள நம்பிக்கை இழந்துபோன இளைஞர்களிடையே மட்டுமன்றி தலைநகர் கொழும்பிலும்அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆசனங்களைவெற்றி கொண்டுள்ளது. இதனது மொத்தவாக்குகளின் எண்ணிக்கை கடந்த டிசம்பரில்நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அதுபெற்ற 344173 வாக்குகளில் இருந்து 518774 வாக்குகளாக அதிகரித்துள்ளது. இக்கட்சி அனைத்துலகவெகுஜனத் தொடர்புச் சாதனங்களில்இடைக்கிடையே "மார்க்சிஸ்ட்" கட்சி எனக்குறிப்பிடப்பட்டு வருகின்ற போதிலும் இதுபாசிச பண்பு கொண்ட அரசியல் முன்நோக்கைஅடிப்படையாகக் கொண்டுள்ளது. இதனதுபிரச்சாரங்கள் பெரும் நிறுவனங்களுக்குஎதிரான போலியான முதலாளித்துவ எதிர்ப்புவாயடிப்புக்களையும் வாழ்க்கைத்தரத்தின் வீழ்ச்சிக்கு எதிரான ஆட்சேபனைகளையும் கொண்டிருந்தது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு (LTTE) எதிரான யுத்தத்தில்"தாயகத்தை" காக்கும் தேசாபிமானஅழைப்புக்கள் மூலம் சிங்கள சோவினிசத்துடன்இது கலக்கப்பட்டிருந்தது.

1980 களின்கடைப்பகுதியில் ஜே.வி.பி. தொழிலாளர் வர்க்கத்துக்கும் அதனது அமைப்புகளுக்கும் எதிராகபாசிச தாக்குதல்களைத் தொடுத்தது.இதன் மூலம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களையும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்களையும்கொன்று தள்ளியது. 1994ல் பொதுஜன முன்னணிஅரசாங்கம் இதற்கு உத்தியோகபூர்வமானஅங்கீகாரம் வழங்கியதைத் தொடர்ந்தேஇது அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்வது சாத்தியமாகியது. ஆனால்ஜே.வி.பி.க்கு புத்துயிர் அளித்தும் அதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் "சோசலிச" நற்சான்றிதழைவழங்கியதற்கான முக்கிய பொறுப்பும்சந்தர்ப்பவாத நவ சமசமாஜக் கட்சியையே (NSSP) சாரும். அது 1990 களின் கடைப்பகுதிபூராவும் ஜே.வி.பி.யுடன் கூட்டுச்சேர்ந்துகொண்டிருந்தது. நவ சமசமாஜக்கட்சி தமது சொந்த புதிய இடதுசாரிமுன்னணி (NLF) பதாகையின் கீழ்தேர்தலில் போட்டியிட்ட போதிலும் 1994ஐக்காட்டிலும் படு மோசமாக வீழ்ச்சி கண்டதோடு பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைத்தன்னும் வெற்றி பெறவும் முடியாது போயிற்று.

தேர்தலின் பின்னர் பெரும் வர்த்தக நிறுவனங்கள்ஏனைய பெரும் கட்சிகளுடன் சேர்ந்துஜே.வி.பி.யையும் கொள்கை நிர்ணய கலந்துரையாடல்களில் பங்கு கொள்ளும்படி அழைப்புவிடுத்தன. தேர்தல் பிரச்சார இயக்ககாலத்தில் ஜே.வி.பி.க்கு கணிசமான பிரச்சாரவசதிகளை வழங்கிய வெகுஜனத் தொடர்புசாதனங்கள் இப்போது அதனை நாட்டின்"மூன்றாவது சக்தி" என வருணித்து கொள்கின்றன.ஜே.வி.பி. தொடக்கத்தில் யூ.என்.பி. க்கோஅல்லது பொதுஜன முன்னணிக்கோ ஆதரவளிக்கப் போவதில்லை எனக் கூறிக்கொண்ட போதிலும்இப்போது தனது நிலைப்பாட்டை மீளாய்வுசெய்யும் தலைமைப்பீட கூட்டங்களைகூட்டி வருகின்றது.

ஏனைய சிங்கள தீவிரவாதஅமைப்புக்களும் கூட தேர்தலில் செல்வாக்குப்பெற்றுள்ளன. இவ்வாண்டுத் தொடக்கத்தில்அமைக்கப்பட்டதும் கொழும்பு பத்திரிகைகளில்பரந்த அளவிலான ஆதரவு பெற்ற பாசிசஅமைப்புமான சிங்கள உறுமய கட்சி (SUP) மொத்தத்தில் 116574 வாக்குகளைப்பெற்றதோடு தேசியப் பட்டியல் மூலம்ஒரு எம்.பி. பதவியையும் பெற்றுள்ளது.பொதுஜன முன்னணியினுள் வெளிவெளியானசோவினிச குழுக்களின் வேட்பாளர்கள்பக்கம் ஒரு பெயர்ச்சி இடம் பெற்றது.இறுதி நிமிடத்தில் மக்கள் ஐக்கிய முன்னணி (MEP) ஆளும் கூட்டரசாங்கத்தில் சேர்ந்துகொண்டதோடு, பொதுஜன முன்னணிபதாகையின் கீழ் இது இரண்டு ஆசனங்களைப்பெற்றது. இக்கட்சி 1994 தேர்தலில் எந்தஒரு ஆசனத்தையும் கைப்பற்றவில்லைஎன்பது குறிப்பிடத் தக்கது.

கொழும்புமாவட்டத்தில் 23 வேட்பாளர்களை நிறுத்தியசோசலிச சமத்துவக் கட்சி(SEP) வடக்கு-கிழக்கில் இருந்து ஆயுதப் படைகளைவாபஸ் பெறும்படியும் சோசலிச கொள்கைகளை அமுல் செய்யுமாறும் கோரும் உக்கிரமானபிரச்சாரத்தில் ஈடுபட்டது. இதன் பெறுபேறாக அதற்கு 389 வாக்குகள் கிடைத்தன. உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல்கட்சி என்ற முறையில் இது அதனது முதலாவதுதேர்தலாக விளங்கியது. அது இச்சந்தர்ப்பத்தை தொழிலாளர் முகம் கொடுத்துள்ளஇன்றைய சமூக பேரழிவின் சிக்கலான வரலாற்று,அரசியல் விவகாரங்களை தெளிவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டுள்ளது.

ஒரு நிஜமான சோசலிச மாற்றீட்டுக்குகிடைத்த சிறிய எண்ணிக்கையிலான வாக்குகள்,தொழிலாளர் வர்க்கத்தின் பழைய தலைமையினால் தொழிலாளர்களிடையே சிருஷ்டிக்கப்பட்டுள்ளகணிசமான அளவிலான அரசியல் தகவமைவீனத்தையும் தடுமாற்றத்தையும் பிரதிபலிக்கின்றது.தொழிலாளர் வர்க்கம் லங்கா சமசமாஜக்கட்சியையும்(LSSP) இலங்கைக்கம்யூனிஸ்ட் கட்சியையும்(CPSL) "சோசலிஸ்ட்" ஆக தொடர்ந்து இனங்காணும்வரையிலும் அவர்களின் நீண்டகால சீரழிவுகளில்இருந்து அவசியமான முடிவுகளைப் பெற்றுக்கொள்ளத் தவறுமிடத்தும் அது ஜே.வி.பி.-சிங்களஉறுமய கட்சி போன்ற தீவிர வலதுசாரிஅரசியல் குழுக்களின் ஆபத்தின் எதிரில் அரசியல்ரீதியில் நிராயுதபாணியாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பொதுஜனமுன்னணியை அடுத்த அரசாங்கத்தைஅமைக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.இருபெரும் கட்சிகளும் சிறிய கட்சிகளுடன்திரைமறைவான பேச்சுவார்த்தைகளில்ஈடுபட்டுள்ள அதேவேளையில், பொதுஜனமுன்னணி ஈழம் மக்கள் ஜனநாயக கட்சியினதும் (EPDP) இலங்கை முஸ்லீம் காங்கிரசினதும் (SLMC) ஆதரவுடன் பாராளுமன்றபெரும்பான்மையை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறிக்கொள்கிறது.

இராணுவத்துடன்மிக நெருங்கிய உறவுகள் கொண்ட ஈழம்மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) மொத்தத்தில் ஐந்து ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. (யாழ் மாவட்டம் 04, அம்பாறைமாவட்டம் 01 (சுயேட்சை வேட்பாளர்)யாழ்ப்பாணக் குடாநாட்டில் மிக குறைந்தஅளவிலான வாக்காளர் -பதிவு செய்யப்பட்டவாக்காளர்களில் 22 சதவீதத்தினர்- வாக்களிக்கச்சென்றதாலேயே இது சாத்தியமாகியது.தமிழ் பேசும் முஸ்லீம்களை அடிப்படையாகக்கொண்ட ஒரு இனவாதக் கட்சியானஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்(SLMC) பொதுஜன முன்னணி பதாகையின் கீழ் 6 ஆசணங்களையும் தனது சொந்த தேசிய ஐக்கிய முன்னணியின்கீழ் 4 ஆசனங்களையும் தேசியப் பட்டியல்மூலம் இரண்டு இடங்களையும் தட்டிக்கொண்டுள்ளது. ஸ்ரீ.ல.மு.கா. தலைவர்கள்தேர்தல் அமைப்பு முறை மாற்றி அமைக்கப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயேபொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்க உடன்பட்டனர்.

யூ.என்.பி. தலைவர்கள் "ஒரு பல கட்சிஜனநாயக அரசாங்கத்தை" அமைக்கஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைநடாத்தி வருகின்றனர். எவ்வாறெனினும்எதிர்க்கட்சி ஒரு பாராளுமன்றப் பெரும்பான்மையை பெறுவதற்கு அவசியமான 24 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கானவாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை.ஏனைய இரண்டு தமிழ் அரசியல் கட்சிகளானதமிழர் விடுதலைக் கூட்டணியும் (5 ஆசனங்கள்)தமிழீழ விடுதலை அமைப்பும் (TELO- 3 ஆசனங்கள்) தாம் பொதுஜனமுன்னணியையோ அல்லது யூ.என்.பி.யையோஆதரிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளன.

அரசியல் நிலைமை பெரிதும் ஆட்டங்கண்டதாகஇருந்து கொண்டுள்ளது. ஜே.வி.பி.யும் சிங்களஉறுமய கட்சியும் அரசாங்கத்தின் பங்காளிகள்அல்லாத போதும் அதன் கொள்கைகளைதீர்மானம் செய்வதில் பெரும் பாத்திரத்தைகொண்டிருக்கும். கடந்த ஏப்பிரலில் வடக்கில்அரசாங்கப் படைகள் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் ஒரு தொகை தோல்விக்கு முகம்கொடுத்ததில் இருந்து தீவிர வலதுசாரிகுழுக்கள் சிங்கள சோவினிச வெறியை தூண்டும்நடவடிக்கையில் ஈடுபட்டன. நோர்வேயின்உதவியுடன் இடம் பெற்ற "சமாதானவழி" களுக்கு முற்றப்புள்ளி வைத்து யுத்தத்தைஉக்கிரமாக்க வேண்டும் எனவும் நாட்டின்தமிழ் சிறுபான்மையினருக்கு எந்தவிதமானசலுகைகளும் வழங்கப்படக் கூடாதுஎனவும் இவை கோரி வந்தன.

கடந்தஆகஸ்ட் மாத தொடக்கத்தில் குமாரதுங்கயுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலம்முடிவு கட்டுவதற்கான ஒரு அடிப்படையைஏற்படுத்தும் விதத்தில் அரசியலமைப்புசீர்திருத்தத்துக்கு அவசியமான மூன்றில் இரண்டுபங்கு பாராளுமன்ற பெரும்பான்மையைவெற்றி கொள்வதில் தோல்வி கண்டார்.அத்தோடு தீவிர வலதுசாரி பிரச்சாரஇயக்கங்கள் பக்கமும் வேகமாக சாய்ந்தார். உரிய காலத்துக்கு முன்னதாக பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்த பொதுஜனமுன்னணி அரசாங்கம், யாழ்ப்பாணக்குடாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குஎதிரான ஒரு தொகை இராணுவத் தாக்குதல்களையும் நடாத்தியது. கடந்த வாரம்ஜனாதிபதி, அரசாங்கம் நோர்வே இராஜதந்திர ஆரம்பிப்புக்களை அப்புறப்படுத்தும்எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளையும்அதன் தலைமையையும் "ஒழித்துக் கட்டும்"யுத்தத்தை நடாத்தும் எனவும் அறிவித்தார்.

ஆரம்பம் தொட்டு முடிவு வரையிலானதேர்தல் பிரச்சாரங்கள், சிங்கள சோவினிசத்துக்கு அழைப்பு விடுப்பதாகவும் சேறடிப்பும்காடைத்தனமும் நிறைந்ததாகவும் விளங்கியது.தேர்தல் தினத்தன்று கட்சிகளுக்கு இடையேயான வன்முறை மோதுதல்களில் ஏழுபேர்கொல்லப்பட்டனர். இது மொத்ததேர்தல் கொலைகளின் எண்ணிக்கையை71 ஆக்கியது. தேர்தல் ஆணையாளர் கண்டியில்23 தேர்தல் நிலையங்களின் பெறுபேறுகளைஇரத்துச் செய்தார். வாக்குப் பெட்டிகள்முறைகேடான விதத்தில் கையாடப்பட்டமை,வாக்குகளை கறக்க வன்முறை பிரயோகம்என்பன இதற்கு காரணமாக இருந்தன.அத்தோடு தேர்தல் ஆணையாளர் யுத்தத்தில்ஆழ்ந்து போயுள்ள முழு கிளிநொச்சி மாவட்டத்தினதும் தேர்தல் பெறுபேறுகளை செல்லுபடியற்றது என பிரகடனம் செய்தார்.

இத்தகையஒரு பெரிதும் ஈடாட்டம் கண்ட அரசியல்நிலைமையில் பெரும் வர்த்தக நிறுவனங்களின்ஒரு பகுதியினரும் வெகுஜனத் தொடர்புசாதனங்களும் பொதுஜன முன்னணியையும்யூ.என்.பி.யையும் ஒரு அரசாங்கத்தைஅமைக்க முன்வரும்படி கோரும் தமதுஅழைப்பை புதுப்பித்தனர். கடந்த இரண்டுஆண்டுகளாக கம்பனிகளின் முதலாளிகள்இரண்டு பெரும் கட்சிகளையும் அரசியலமைப்புதீர்வு பொதி தொடர்பாக ஒரு உடன்பாட்டுக்கு வரும்படி நெருக்கி வந்தன. அதன் மூலம்அவர்களின் பொருளாதார நலன்களுக்குஒரு தடையாக அவர்கள் கணிக்கும் யுத்தத்தைமுடிவுக்கு கொணரும் வழிவகைகளைதேடுவதில் ஈடுபட்டனர்.

இந்த வாரம்இலங்கை வணிக கழகம் (Chamber of Commerce) ஒரு அறிக்கையை வெளியிட்டது. அது இரண்டுகட்சிகளையும் "விட்டுக்கொடுக்கும் அணுகுமுறைமூலம் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தையும்புனரமைப்பையும் ஏற்படுத்தும்படியும்நாட்டை அதனது படுமோசமான அபிவிருத்திகட்டத்தில் இருந்து மீட்கும்படியும்" வேண்டியது.ஒரு பிரபல தினசரியான 'டெயிலி மிறர்' பத்திரிகையின்ஆசிரியத் தலையங்கம் "நாட்டை அரசியல்,பொருளாதார குழப்ப நிலையில் இருந்துவெளியேற்றும்" படி பொதுஜன முன்னணிக்கும்யூ.என்.பி.க்கும் அழைப்பு விடுத்தது.

அரசியலமைப்பு தீர்வுப் பொதியை பாராளுமன்றத்தில்நிறைவேற்றுவதற்கு பொதுஜன முன்னணிக்குஇன்னமும் யூ.என்.பி.யின் ஆதரவு அவசியமாகஉள்ளது. எவ்வாறெனினும் இரண்டு கட்சிகளும்தீவிர வலதுசாரி கட்சிகளுக்கு கடமைப்பட்டவையாக உள்ளன. இக்கட்சிகள் தேர்தல் காலத்தில்இந்த சோவினிசத்தை தூண்டியதோடுபுதிய பாராளுமன்றத்திலும் அதையேசெய்வர். 17 வருடகால யுத்தம் 60,000 உயிர்களைப்பலிகொண்டுள்ளதோடு தொழிலாளர்வர்க்கம் இன்னுமொரு தொகை உடன்பிறப்பைக் கொல்லும் இரத்தக் களரிக்குள் மூழ்கடிக்கப்படும் ஆபத்து இருந்து கொண்டுள்ளது;அத்தோடு அதன் பொருளாதார,சமூக சுமைகளையும் தாங்கிக் கொள்ளும்படிநெருக்கப்படுகின்றது.