World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா: துருக்கி

Twenty years since the military coup in Turkey

20 வருட இராணுவச் சதியின் பின்னர் துருக்கி

By Justus Leicht
27 September 2000

Use this version to print

20 வருடங்களுக்கு முன்னர் 12 செப்டம்பர் 1980 ல் ஒரு வலதுசாரி இராணுவக் குழு ஜெனரல் கெனான் எவ்றென் (Kenan Evren) தலைமையின் கீழ் அரசு அதிகாரத்தை கைப்பற்றி நாடு பூராவும் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு அனைத்து சுயாதீனமான கட்சிகளும், இயக்கங்களும் மற்றும் அவற்றின் ஜனநாயக உரிமைகளும் அழித்தொழிக்கப்பட்டன. கடந்த பத்து வருடங்களாக நீடித்த சமுதாய, அரசியல் கொந்தளிப்புகளினால் நாடு உள்நாட்டு யுத்தத்த நிலைமையின் அளவிற்கு சென்றிருந்தது. துருக்கி அராங்கத்திற்கு எதிரான தொழிலாளவர்க்கத்தின் மீதும் இடதுசாரி அமைப்புக்கள் மீதும் இச்சதியினரால் அடக்கியொடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விளைவுகளை இன்றும் காணக்கூடியதாகவுள்ளது.

சர்வதேச பத்திரிகை நிறுவனங்கள் இந்த இராணுவச் சதியின் வருடாந்த தினத்தைப் பற்றி மிகவும் குறைவான முக்கியத்துவத்தையே கொடுத்தது. இது ஆச்சரியமானதல்ல. அதன் இராணுவத் தலைமைகளை முக்கிய அரசியல்வாதிகளும், பேச்சாளர்களும் துருக்கியை பாதுகாத்ததாகவும், ஒரு ''சுதந்திர உலகத்தின்'' ஒரு பாகமாக வைத்திருந்ததற்கும் புகழ்ந்தனர். ஆனால் இது உண்மையில், துருக்கியினதும், அதேபோன்று மேற்கத்தைய வங்கிகள், நிறுவனங்கள் போன்றவற்றின் ''சந்தைப் பொருளாதாரத்தின் சீர்திருத்தம்'' ஒரு ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தலுடன் சரிப்பட்டுவராது என்பதை கடந்த இருபது வருட நிகழ்வுகள் காட்டின. அதற்கு மாறாக இது ஒரு அப்பட்டமான பயங்கரவாதத்தினூடு மட்டுமே சாத்தியமாகும் என்பதையும் நிரூபித்தது.

துருக்கியின் முதலாளித்துவத்தின் பிரதிநிதியான மிகப்பெரிய ஒரு நிறுவன உரிமையாளரான றாக்மி கோக் (Rahmi Koc ) கின் நிர்வாகிகள் 1982 ல் மேற்கூறப்பட்டவற்றை இவ்வாறு வகைப்படுத்தினர். ''இப்போது ஏற்பட்டிருக்கும் வித்தியாசங்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன. செப்டம்பர் 12 க்கு முன்னால் நாம் அனைத்தையும் ஒரு ஜனநாயக அமைப்புக்குள் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டோம். அதாவது ஏதாவது செய்வதானால் அது மிகவும் கஸ்டமானதுடன் காலவிரயமானதாகவும் இருந்தது. மற்றும் இவை அனைத்தும் அரசியலை நோக்கி பார்க்கப்பட்டது. இராணுவ அரசாங்கத்திற்கு கீழ் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், பாராளுமன்றத்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றப்படுத்த வேண்டும் எனும் சிரமம் அதற்கு இல்லாததுவே.''

இத் தீர்மானங்களின் உள்ளடக்கம் தொழிலாளவர்க்கத்தின் மீதான தாக்குதலாகும். இராணுவம் பதவி ஏற்ற பின் ஊதியங்களில் வெட்டும், உறைவும், நாணய மதிப்பு 130 வீதமுமாக வீழ்ச்சியடைந்தது. மற்றும் அரசு நிறுவனங்கள், சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டு, நாணய மதிப்பிறக்கம் செய்யப்பட்டதோடு சமூக மற்றும் சுகாதார வசதிகளும், கல்வித்திட்டங்களுக்கான அரசாங்கத்தின் செலவீனங்கள் குறைக்கப்பட்டன. புதிய இராணுவ அரசாங்கம் வேலை நிறுத்தம், மற்றும் கூட்டாக போராடுவது போன்ற உரிமைகளை தடைசெய்தது. இது சர்வதேச நாணய நிதியம் (IMF), பொருளாதார கூட்டிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் [OECD] மற்றும் உலக வங்கி போன்றவற்றின் கோரிக்கைகளாகும். இது 1980ன் மத்திவரை துருக்கி பெற்றிருந்த கடனை திருப்பிக் கொடுப்பதனை உறுதிப்படுத்துவதற்காகும்.

செப்டம்பர் 12 க்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தொழிலாளர்களின் எழுச்சிகளினால் தோற்கடிக்கப்பட்டன. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசீர்வாதத்துடன் வைத்த திட்டங்களினால் ஏற்பட்ட வேலையின்மையின் அதிகளிப்பிற்கும், பணவீக்க அதிகரிப்பிற்கும் எதிரான வேலை நிறுத்தங்களிலும், பெரிய ஊர்வலங்களிலும் நூறு, ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றினர்.

இராணுவத்திற்கு கீழ் உதவி மந்திரியாகவும், நிதி பொருளாதார அரசியலுக்கு பொறுப்பாகவும் றூகூட் ஓஷால் (Turgut Özal) இருந்தார். இவர் அறுபதுகளில் அமெரிக்காவினதும், சர்வதேச நாணய நிதியத்தினதும் பொருளாதார நிபுணர்களுடனும், மேலும் பலதரப்பட்ட உயர்ந்த அரசாங்க உத்தியோகர்களுடனும் இறுக்கமாக இணைந்து வேலைசெய்தார். எழுபதுகளில் இரும்புத் தொழிற்சாலைகளின் முதலாளிகளின் கூட்டுறவு நிலயத்தில் ஒரு நீண்ட காலத்திற்கு பதவி வகித்தார். அந்நேரத்தில் முதலாளிகளுக்கு இவருடைய புகழ்பெற்ற - இழிவான ஒரு கோரிக்கையாக, ''எப்படியாவது பணத்தைப் பெருக்கு'' ஒரு உத்தியோகபூர்வமான பொருளாதார அரசியலாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது துருக்கித் தொழிலாள வர்க்கத்தின் சம்பளத்தை அரைவாசியாக குறைத்ததுடன் ஒரு உத்தியோகபூர்வமற்ற அறிக்கையின்படி வேலையில்லாத் திண்டாட்டத்தை அதன் மக்கள் சனத்தொகையில் 1/3 எனும் நிலைக்கு உயர்த்தியது.

இவ் இராணுவச் சதி அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின், பூரண ஆதரவுடனும், அதன் நலனுக்காகவே நடைபெற்றது. இது செப்டம்பர் 11 ல் 3.000 நேட்டோவின் இராணுவத்தினர் இஸ்தான்புல்லுக்கு சில மைல் தூரத்திலுள்ள Thraceல் திட்டமிட்ட வகையில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட அன்றே ஆரம்பிக்கப்பட்டது. கொரிய யுத்தத்தில் துருக்கி இராணுவத்திற்கு தலைமை தாங்கிய கெனான் எவ்றென் ஆட்சியை கைப்பற்றிக்கொண்டவுடன் துருக்கி தொடர்ந்தும் நேட்டோவுடன் தனது பூரண அங்கத்துவ விசுவாசத்தையும், மற்றும் உரிமைகளையும், அவற்றிற்கான கடமைகளையும் பேணிக்கொள்ளும் எனத் தெரிவித்தார். மேற்கத்தைய இராணுவக்கூட்டானது, இந்த ஜெனரலுக்கு ஒரு அரசியல் முகமூடியை வழங்கியது. மேலும் இக்கூட்டு முன்பு செய்த நடவடிக்கைகளை ஒருபோதும் நிறுத்தவில்லை. ''இவர்கள் அங்கே எவரும் தூக்கிலிடப்படமாட்டார்கள்.'' என Der Spiegel பத்திரிகையை (38 / 1980) சுட்டிக்காட்டி புரூசலில் இருக்கும் நேட்டோவின் உயர் இராணுவ தலைமைக் காரியாலயத்தில் தெரிவிக்கப்பட்டது. காட்டர் தலைமையிலான வாஷிங்டனின் நிர்வாகமும், CIA யும் இச்சதிக்கு ஆதரவளித்தனர். துருக்கிக்கு பொறுப்பான அமெரிக்க வெளிநாட்டு அமைச்சின் காரியாளரான ஜே.வில்லியம், அந்நேரத்தில் அங்காராவில் இருந்த அமெரிக்கத் தூதுவராலயத்தில் இருந்து இதை சரியான நேரத்தில் நடந்தவொரு செயல் எனக் கூறியதுடன், மேலும் இது அவர்களுடைய ஒரு ''தலைவிதி'' என சிடுமூஞ்சித்தனமாகக் குறிப்பிட்டதுடன், அவர் கிறீசில் இருந்த போது இதே போன்றதொரு இராணுவச்சதி நடைபெற்றதெனவும் தெரிவித்தார். சதியின் பின்னர் Washington Post, New York Times, Wall Street Journal போன்றவை துருக்கியின் நவீனமான இராணுவம் என இதை விபரித்து கட்டுரைகளை வெளிவிட்டன.

ஜேர்மனி அவ்வருடத்தின் மார்ச் மாத ஆரம்பத்தில் ஒரு பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவை துருக்கிக்கு அனுப்பிவைத்தது. அதில் காஸ்ரான் வொய்க்ற் (Karste Voigt) என்பவர் சமூக ஜனநாயக கட்சி (SPD) யின் முன்னாள் அரசாங்க வெளிவிவகாரப் பிரிவின் பேச்சாளராவார். அப்பிரதிநிதிகுழு இராணுவ கொடுமைகளுக்கு பலியானவர்களை கவனிக்காது ''சர்வாதிகார இராணுவம்'' இருக்கக்கவில்லை எனவும், "திட்டமிட்ட சித்திரவகைகள் நடைபெறவில்லை.'' என்றும் கூறினர். இதைத் தொடர்ந்து உடனடியாக ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சு 30 ஏப்ரல் 1981 ல் அதிகமான துருக்கி அகதிகளின் அரசியல் விண்ணப்பங்களை இதன் அடிப்படையில் நிராகரித்தது.

அந்நேரத்தின் கணக்குப்படி, இராணுவ குழுவால் முதல் ஒரு ஆறு மாதத்திற்குள் அரசியல் கைதிகளாக 123.000 பேர் பிடிக்கப்பட்டு, அவர்களில் அனேகமானோருக்கு தூக்குத் தண்டனையும், 460 பேருக்கு ''இராணுவ நடவடிக்கையினூடு'' ''மரணதண்டனை'' விதிக்கப்பட்டும், மேலும் அவர்களில் 50 பேர் வரையில் சித்திரவதை மூலம் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் அரசாங்க சிறைச் சாலைக்குள்ளேயே சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். நீண்ட பிரதேசமான குருடிஸ்தானுடைய தென்- கிழக்கு அனற்ரோலியாவில், அந்நேரத்தில் இருந்த சமூக ஜனநாயக பிரதம மந்திரியான புலென்ற் எஸ்ஸேவிற் (Bülent Ecevit) என்பவரால் இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஏற்படுத்தப்பட்ட இராணுவ சட்டத்தின் கீழ் இம் மக்களை பயமுறுத்தி பணிய வைப்பதற்காக பலவாறான காட்டுமிராண்டித்தனங்கள், சித்திரவதைகள், படுகொலைகள் போன்றவற்றை நடைமுறைப் படுத்தினார். சில சமயங்களில் இவை மிகவும் பகிரங்கமான இடங்களிலும் பிரயோகிக்கப்பட்டன. குர்திஷ் மொழியை அவர்கள் பேசுவது இராணுவத்தால் தடைசெய்யப்பட்டது, குர்திஷ் பெயர்கள் தடை செய்யப்பட்டன, ஆயிரக்கணக்கில் குர்திஸ்தான் கிராமங்களின் பெயர்கள், மற்றும் அங்கு வாழும் பிள்ளைகளின் பெயர்களும் கூட சில சந்தர்ப்பங்களில் பலவந்தமாக மாற்றியமைக்கப்பட்டன.

மேற்கத்தைய சக்திகள் இவ்வாறான இராணுவ உடைதரித்த கொலையாளிகளையும், சித்திரவதை செய்பவர்களையும், குளிர் யுத்தகாலத்துடன் இணைந்த தமது பூகோள-மூலோபாய நலனை கருத்தில் கொண்டு ஆதரவளித்தன. துருக்கியின் கவுக்காசுஸ் பிராந்தியத்திற்கும், மத்திய ஆசியாவிற்குமான நுழைவாயிலாக அமைந்துள்ளதுடன், சோவியத் யூனியனின் தென்பக்கம் முதல் மத்திய கிழக்கு வரைக்கும் எல்லைகளை கொண்டுள்ளது இவை நேட்டோவின் முக்கியமான கொல்லைப் புறங்களாகும். மேற்கத்தைய செல்வாக்குக்கு உட்பட்ட பொம்மை அரசாங்கங்களான ஷாவின் ஆட்சி ஈரானில் 1979 ல் மக்கள் எழுச்சியால் தூக்கியெறியப்பட்டதும், சோவியத் இராணுவத்தால் ஆப்கானிஸ்தான் பிடிக்கப்பட்டதையும் தொடர்ந்து இப் பிராந்தியங்களின் முக்கியத்துவம் மேலும் அதிகமாகியது.

1974ல் துருக்கி வடக்கு சைப்பிரசை (North cyprues) கைப்பற்றியதைத் தொடர்ந்து அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதத் தடையை 1979 இன் இறுதியில் நீக்கியது. இது துருக்கி அமெரிக்காவின் இராணுவத் தளங்களை அங்கே நிலை கொள்வதற்கான நிலமைகளை வழங்கியது. ஜேர்மன் அரசாங்கம் 1979 டிசம்பரில் பல மில்லியன் கணக்கான மார்க்குகளுக்கு இராணுவ உடன்பாடுகளை அங்காராவுடன் ஏற்படுத்திக்கொண்டது. அத்துடன் அது துருக்கிக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மில்லியாடன் கடன் உதவிகளை 1980 ஜனவரியில் பெற்றுக் கொடுத்தது.

1980 மார்ச்சில் அமெரிக்கா துருக்கியுடன் ஒரு புதிய ''பாதுகாப்பு பொருளாதார கூட்டு நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தம்'' ஒன்றை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் அதிரடிப்படைகள் துருக்கி அரசாங்கத்தின் மேற்பார்வையின்றியே மறுபடியும் அதன் முக்கிய இராணுவத் தளங்களை பிரயோகிப்பதையும், அவற்றில் குறிப்பாக, வடக்கு துருக்கியைச் சேர்ந்த இன்சீர்லிக் ( Incirlik )கில் உள்ள ஆகாயப்படை தளத்தை உபயோகிப்பதையும் சாத்தியமாக்கியது. அத்துடன் துருக்கி இராணுவம் மேலும் அமெரிக்காவிடமிருந்து 9 மில்லியாடன் டொலருக்கு ஆயுதத் கொள்வனவும், அதைத்தொடர்ந்து மற்றுமொரு 6,5 மில்லியாடன் டொலருக்கு அமெரிக்காவின் இராணுவ தளபாடங்களை வேண்டுவதற்கான நிதி வசதிகளையும் பெற்றுக்கொண்டது.

துருக்கியினதும், அதேபோன்று மற்றும் மேற்கத்தைய நாடுகளின் வரலாற்று நூல்களிலும் இந்த இராணுவ யுந்தா அங்கு அரச அதிகாரத்தை கைப்பற்றிய முக்கியமான விடயங்களைப் பற்றிய நியாயப்படுத்தல்களை எழுதியும், மீண்டும் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டும் இருக்கின்றன. எனவே, பொருளாதரத்தை அதன் வங்குரோத்திலிருந்து மீளமைக்கவும், விசேடமாக பாராளுமன்றமும், அரசாங்கமும் இவற்றுக்கு எதிராக எதுவும் செய்யக்கூடிய நிலையில் இருக்காத பல்கலைக் கழகங்களில் குடிகொண்டிருந்த ''குழப்பத்தையும், அழிவையும்'' ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டியிருந்ததாலும் இச் சதி ஒரு அத்தியாவசியமாக இருந்ததாகவும் குறிப்பிட்டது.

70ஆம் ஆண்டுகளில் துருக்கி பாரிய அரசியல், பொருளாதார, சமூக ஸ்திரமற்ற நிலையில் இருந்தது. உண்மையில் இருபதாம் ஆண்டுகளில் துருக்கி அரசியலில், அதன் அரசின் ஸ்தாபகரான கேமால் அற்றாரூக் (Kemal Atatürk ) உலகச் சந்தையில் இருந்து உடைத்துக்கொண்டு ஒரு ''சுயாதீனமான'' தேசியப் பொருளாதாரத்தை கட்டிவளர்த்ததானது, 70 பதுகளில் மிகவும் பகிரங்கமாக தோல்வியடைந்தது.

ஆரம்பத்தில் வெற்றிகரமான அரசாங்கங்கள் வெளிநாட்டிலிருந்து அடிக்கடி பெற்றுக்கொள்ளும் புதிய கடனுதவிகளினூடு இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வை வைத்தன. மேலும் இதனூடு மேற்கத்தைய கடன் கொடுப்பவர்கள் ''பொருளாதார மறுசீரமைப்புக்கு'' அழுத்தத்தை கொடுக்க வழியமைத்ததுடன், தேசியப் பொருளாதாரத்திற்கு குழிபறிப்பதாகவும் இருந்தது. ஏனெனில் இரண்டாவது உலக யுத்தத்தை தொடர்ந்து ஏற்பட்ட தொழிற்துறை மயமாக்கலினினூடு நாட்டில் பிரமாண்டமான மற்றும் போர்க்குணம் மிக்க தொழிலாள வர்க்கம் வெடித்துக் கிளம்பியிருந்தது. இது ஆளும்வர்க்கத்துடன் தொடர்ச்சியான மோதலுக்கு உள்ளானது. இதுமட்டுமல்லாது மத்தியதர வர்க்கத்தினரும், விவசாயிகளும் இந்நெருக்கடியின் விளைவாக தீவிரமயமாக்கப்பட்டதுடன் ஸ்ராலினிச, மாவோவாத குழுக்களின் ஆழுமையையும், போர்க்குணமிக்க ஒரு தொழிற்சங்க இயக்கத்தையும் தோற்றுவித்தது.

இவ்வாறான நிலமைகளுக்கு கீழ் இராணுவத்தின் ஒரு தீர்மானகரமான பகுதியினர் ஒரு உளவாளிப் பிரிவான MIT உடனும், சுலைமான் டெமீரெல் (Süleyman Demirel) எனும் ஒரு பழமைவாத அரசியல் வாதியுடனும் சேர்ந்துகொண்டு, இடதுசாரி இயக்கங்களை பலவீனப் படுத்துவதற்காக ஒரு திட்டவட்டமான பயங்கரவாதத்தையும் இறுதியில் ஒரு சதியையும் ஏற்பாடு செய்தனர். இதைச் செய்வதற்காக அவர்கள் எப்பொழுது முடிவெடுத்தார்கள் என்பது ஒரு தெளிவில்லாமலே இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறலாம், டெமிரால் என்பவர் 1975-1977 களிலும், அதற்குப் பின்னர் 1979 ன் முடிவிலும் இச் சதிக்காக அவருடைய பழமைவாத AP (சம உரிமைக்கட்சி) யுடனும் ''தேசியவாத முன்னணி'' என்று சொல்லப்படுவதுடனும் ஒரு அரசாங்கம் அமைத்துக்கொண்டு, இஸ்லாமிய MSP (தேசிய இரட்சணியக் கட்சி) யுடனும், பாசிசக் கட்சியான MHP (தேசியவாத அமைப்புகளின் இயக்கம்) யுடனும் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார்.

MSP, இது நெக்மெற்றின் எயபாக்கான் (Necmettin Erbakan) என்பவருக்கு கீழ் மிகக் கடுமையாக தமது இஸ்லாமிய அரசை உருவாக்குவதை மறைக்கவேண்டியிருந்தது. MHP, இது தனது வேலைத்திட்டத்தில் ஜனநாயகம் என்பது ஓர் ''யூதரின் கண்டுபிடிப்பு'' எனவும், மேலும் இது ஓர் ''அழிவுக்கான ஆரம்பம்'', ஏனெனில் இது கம்யூனிசம் உருவாகுவதற்கான ஒரு அடித்தளத்தை இடுகிறது என எழுதியிருந்தது. இக் கட்சியின் அதிரடிப் படையினரால் இடது சாரிகள், தொழிற் சங்கவாத தீவரவாதிகள், தாராளவாத பத்திரிகை ஆசிரியர்கள், மற்றும் புத்திஜீவிகள் என பலர் கொல்லப்பட்டனர், மேலும் பல எண்ணிடங்காத சிறுபான்மை இனங்களான அலிவேற்றன் (Alewiten), குர்திஷ் மக்கள் போன்றோருக்கு மேலான அரசின் படுகொலைகளுக்கும் மற்றும் வேலைநிறுத்தங்கள், ஊர்வலங்களில் பங்குகொள்ளும் தொழிலாளர்களின் படுகொலைகளுக்கும் இது உடந்தையாக இருந்தது.

டெமீரெல், இவர்கள் செய்த இக் கொலைகளை ''தேசபக்தியின் செயல்'' என விளக்கம் கொடுத்தார். மாறாக வலதுசாரி மதவாதிகள் அரசமைப்பினுள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து மில்லியன் கணக்கான செலவில் புதிய பள்ளிவாசல்களும், குரானை படிப்பதற்கான பள்ளிகளும் அமைக்கப்பட்டன. 1978 ல் புலென்ற் எஸ்ஸேவிற் ( Bülent Ecevit) என்பவர் பிரதம மந்திரியாக இருக்கையில், இதற்கான ஆவணம் வெளிச்சத்துக்கு வந்தது. இது, எவ்வாறு அமெரிக்காவின் CIA ஏனைய MIT யுடனும், MHP யின் துருக்கியின் இராணுவ தலமையுடனும் சேர்ந்து ஒரு நீண்ட காலமாக ''எதிர்புரட்சி கொரில்லா'' இயக்கத்தை அமைத்தது, இது விசேடமாக இடதுசாரிகளை அழிப்பதற்காகவும், பொதுமக்களை பயப்படுத்துவதற்காகவும் இயங்கியது போன்றவற்றை தெளிவுபடுத்தியது. இதை எஸ்ஸேவிற் இராணுவ அழுத்தத்தினால் எதிர்புரட்சி கொரில்லா இயக்கத்தின் இருப்பையும், மேலும் அது முன்னர் சில இயக்கங்களை எச்சரிக்கை செய்தது போன்ற எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டார்.

அவருடைய இரண்டுவருட அரசாங்க ஆட்சிக் காலத்தில் வலதுசாரிப் பயங்கரவாதம் பெருமளவில் கட்டவிழ்த்து விடப்பட்டது, இதில் 2.000 அரசியல் கொலைகளும், அவற்றில் பெரும் பகுதி வலதுசாரிகளால் இடதுசாரிகளுக்கு மேல் மேற்கொள்ளப்பட்டதுமாக இருந்தது. எஸ்ஸேவிற் தொழிலாளர்களை பாசிசவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை செய்தார். ஆனால் அவர்கள் இவரை ஓர் நம்பிக்கைக்கு உரியவராக கருதினர், ஆனால் அதற்கு மாறாக இராணுவத்தின் கோரிக்கைக்கு இணங்கி குர்திஸ்தான் பிராந்தியத்தில் யுத்தச் சட்டங்களை பிரகடனப் படுத்தியதைப் போன்று அங்காரா, இஸ்ராம்புல் போன்ற தலை நகரங்களிலும் இச்சட்டங்களை அமுல்ப்படுத்தினார். இராணுவம் உண்மையில் தனது காரியத்தில் மிகவும் கண்ணாயிருந்தது. இது பின்னால், 1977 ல் நடைபெற்ற சதித் திட்டத்திற்காக ஓர் முன்கூட்டிய தயாரிப்பாக இருந்தது என்பதை சுட்டிக் காட்ட தேவையில்லை.

இவ்வாறு மதிப்பிழக்கப்பட்ட எஸ்ஸேவிற் 1979ன் இறுதியில் மீண்டும் டெமீரெலால் தோற்கடிக்கப்பட்டார், இதைத் தொடர்ந்து பயங்கரவாதம் மீண்டும் ஒரு முறை தலையெடுத்தது. இவருடைய ஆட்சிக் காலத்தில் ஒரு வருடத்திற்கு 2.500 பேர்கள் வரையில் அரசியல் வன்முறைகளினால் பலியாகினர். மேற்கத்தைய அவதானிகளின் கணிப்பின்படி ஒட்டு மொத்தமாக 5.000 பேர் 1975 - 1980 காலப் பகுதிகளில் பலியாகினர், இவற்றில் நாலில் மூன்று பகுதியினரை பாசிஸ்டுகள் கொலை செய்திருந்தனர் என Neue Züricher Zeitung அதனது 5./6. ஆகஸ்ட் 1981 இதழில் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறான நிலமைகளிற்கு கீழ் எஸ்ஸேவிற்ரும், அவருடைய சமூக ஜனநாயகமும், ஸ்ராலினிஸ்டுகளைப் போன்று தொழிற் சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவோடு தொழிலாளர்களை பாரிய விரக்திக்குள் தள்ளியும், அரசியல் ரீதியாக அவர்களை வலதுசாரி பயங்கரவாதத்துக்குள் விழுத்தி அவர்களுடைய கைகளையும், கால்களையும் கட்டிப்போட்டது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் செய்தனர். அறுபதுகளில் தோற்றம் பெற்ற மாவோவாத, சேகுவாரா போன்ற போக்குகளில் ஒட்டிக்கொண்டு இருந்த பலவிதமான குழுக்கள் அனைத்தும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதை நிராகரித்தனர்.

இவர்களுடைய அரசியல் வேலைத்திட்டமும், வெளியே இவ் இளம் அங்கத்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத நடவடிக்கைகளும், சமுக ஜனநாயகவாதிகளிடமிருந்து சிறியளவில்தான் வித்தியாசப்பட்டிருந்தது. இவர்கள் எஸ்ஸேவிற்ரின் இயக்கத்தைப் போன்று துருக்கி தேசியவாதத்தை பிரதி நிதித்துவப்படுத்தி, அதற்கு ஒரு இடது சாயத்தையும் பூசிக்கொண்டனர். ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், அமெரிக்காவின் உலக சந்தையின் கொள்கைக்கு எதிராகவும் ஒரு ''தேசிய விடுதலை'' யை முன்னெடுப்பது முக்கியம் என்ற ஸ்ராலினிச இரண்டுகட்ட புரட்சியை முன்வைத்து அனைத்து அபிவிருத்திகளும், சமூக ஜனநாயகத்துடன் அல்லது துருக்கியின் முதலாளிகளுடன் இணைக்கப்பட்டாக வேண்டும் என கூறி தேசிய முதலாளித்துவத்தின் ஒரு முன்னேறிய பிரிவின் மீதும், இராணுவத்தினிலும் தொழிலாளர்களை நம்பிக்கைவைக்கச் செய்தது.

இராணுவச் சதிக்கு எதிரான ஒரு உறுதியான மக்கள் எழுச்சி அங்கு இருக்கவில்லை, அத்தோடு மக்களின் ஒரு பகுதியினர் ஆரம்பத்தில் இதையிட்டு மிகவும் அசட்டையீனமாக இருந்தனர், இவை ஏன் என்பதற்கான விளக்கம் இங்குதான் உள்ளது. எனவே, இராணுவம் உலக வங்கியினதும், நேட்டோவினதும் நலன்களுக்காக அதனது ஆட்சி அதிகாரத்தை பாசிச குழுக்களின் சேவையுடன் பூரணமாக்கி துருக்கியில் வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு ஒரு பெரிய இராணுவ சிறைச் சாலையையும், அத்துடன் சகிக்க முடியாதவாறு ஒரு பரந்த வறுமையை உள்நாட்டில் ஏற்படுத்தினாலும் கூட இவ்வாறான யதார்த்த நிலமைகள் மாற்றமடையாது.