World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பால்கன்

How the West organised Milosevic's downfall

மேற்கு நாடுகள் மிலோசிவிக்கின் வீழ்ச்சியை எவ்வாறு ஒழுங்குசெய்தன

By Chris Marsden
13 October 2000

Use this version to print

யூகோசிலாவிய ஜனாதிபதி சுலோபோடான் மிலோசிவிக் தூக்கிவிசப்பட்டதை மேற்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் சுயாதீனமான மக்கள் ஜனநாயக புரட்சியின் விளைவு என ஒரேமாதிரி வர்ணித்தன. பெரும்பான்மையான சாட்சியங்கள் பெல்கிராட்டின் நிகழ்வுகளை "மக்கள்சக்தி" என வர்ணிப்பது மக்களை ஏமாற்றவேண்டும் என தீர்மானித்து செய்தது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

தொலைத்தொடர்பு சாதனங்களின் நோக்கம் அவர்கள் அறிந்திருந்த, அமெரிக்காவாலும் ஐரோப்பாவாலும் ஒழுங்கு செய்யப்பட்ட அரசியல் சதியை நியாயப்படுத்துவதாகும். இச்சதியானது மிலோசிவிக் அரசியலுடன் அடிப்படையில் எவ்வித வேறுபாடுமற்ற சேர்பிய ஆழும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவினருடன் இணைந்து பால்க்கன் குடாநாட்டின் மீதான எவராலும் மறுக்கமுடியாத தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதாகும்.

இதற்கு உதாரணமாக ஒக்ரோபர் 8ம் திகதி Observer பத்திரிகையில் Niel Ascherson இன் கட்டுரையை காட்டலாம். அவர் வெட்கம்கெட்டவகையில் "தலைவர்கள் எவரும் இல்லை, விவேகமான கட்டுப்படுத்துபவர்கள் இல்லை, எந்தவொரு வீரர்களும் இல்லாமல்கூட..... ஒரு புரட்சி, எப்போதையும் போல் உண்மையான நிகழ்வை உலகம் பெல்கிராட்டில் பார்த்தது" என எழுதினார். உண்மையில் அங்கு தலைவர்களும், விவேகமான கட்டுப்படுத்துபவர்களும் தாராளமாக இருந்தனர் என்பது Observer பத்திரிகைக்கு நன்றாகத் தெரியும். சேர்பிய ஜனநாயக எதிர்ப்பியக்கத்திற்கு [DOS] மில்லியன் கணக்கான டொலர்களும், உயர்மட்ட ஆலோசகர்களும், நூற்றுக்கணக்கான ஆளுதவியும் அமெரிக்காவாலும் ஐரோப்பாவாலும் வழங்கப்பட்டதென்பது வெளிப்படையான விடயமாகும். முன்னாள் அமெரிக்க இராஜதந்திரியான William Montgomery New York Times பெயர்குறிப்பிட்டபடி புடாபெஸ்டில் "யூகோசிலாவியாவின் வெளிநாட்டு தூதுவராலயத்தை" நடாத்தி பிரசாரத்தை ஒழுங்கமைத்தார்.

நிதியுதவியும், ஆலோசனைகளும் நேரடியாக அரசாங்க நிறுவனங்களாலோ அல்லது எதிர்க்கட்சியினருக்கு தொலைத்தொடர்பு வலைப்பின்னலுக்கான முக்கிய நிதிவழங்குனரான ஜேர்மனியின் Friedrich Ebert Foundation ஆல் அல்லது அமெரிக்க US Freedom House இனால் வழங்கப்பட்டது.

Friedrich Ebert Foundation ஜேர்மன் ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் தன் நலன்களை முன்னெடுப்பதற்கான முக்கிய ஊடகமாகும். US Freedom House ஜனநாயக, குடியரசு கட்சியினர், முதலாளிகள், தொழிற்சங்க தலைமைகளுடன் உள்ளடங்கலாக அமெரிக்காவிற்கு நட்புறவான முதலாளித்துவ இயக்கங்களை ஊக்குவிக்கும் அமைப்பாகும். இதன் பின்னணியில் அமெரிக்க அரசாங்க அமைப்புகளிலிருந்தும், சர்வதேச தனியார் நிறுவனங்களுக்கான மத்திய நிலையத்திலிருந்தும் நிதியுதவி பெறும் பகுதி உத்தியோகபூர்வ அமைப்பான ஜனநாயகத்திற்கான தேசியநன்கொடையும் [National Endowment for Democracy] இருக்கின்றது. இது தான் சுயாதீனமான "அமெரிக்க மேதாவிகளுக்கும்" உதவியளிப்பதுடன், "சேர்பிய அரசியல் கட்சி அங்கத்தவர்களுக்கு" பயிற்சியளிப்பதாகவும் பெருமைப்பட்டுக்கொள்கின்றது.

மேற்கு சக்திகள் மிலோசிவிக்கின் அரசாங்கத்திற்கு எதிரான சமூக, அரசியல் அதிருப்தியை ஒன்றிணைத்து சேர்பிய ஜனநாயக எதிர்ப்பியக்கத்தினுள் தாம் பொறுக்கி எடுத்த பிரதிநிதிகளின் பின்னே திசைதிருப்புவதை தமது கடமையாக கொண்டுள்ளன. இதற்கு இறுதியில் ஒரு உண்மையை திரிக்கும், நன்கு நிறுவமைக்கப்பட்ட தேர்தல் பிரச்சார வலைப்பின்னல் மட்டும் போதாது, சேர்பிய ஜனநாயக எதிர்ப்பியக்கம் பெல்கிராட்டின்மீது அண்மையில் குண்டுவீசிய நேட்டோவினது கைக்கூலியா என ஆழ்ந்த ஐயுறவுடன் பார்க்க வேண்டியுள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் இவ் எதிர்ப்பு சக்திகளால் ஏற்கெனவே கட்டுப்பாட்டினுள் இருந்த பகுதிகளில் சமூக ஆதரவை கட்டுவதும், தமது திட்டங்கள் மூலம் அரச பாதுகாப்பு பிரிவினரான பொலிஸ், இராணுவத்தினுள் இருக்கும் தலைமை பிரிவுகளிடம் கூட்டுழைப்பை உத்தரவாதப்படுத்திக் கொள்வதுமான இரு நீண்டநோக்கங்களை அபிவிருத்தி செய்திருந்தன.

ஜேர்மன் சஞ்சிகையான Der Spiegel இவ்முன்னைய மூலோபாயம் தொடர்பான விபரகணக்கீடொன்றை இவ்வாரம் வெளியிட்டிருந்தது. இச்சஞ்சிகை மிலோசிவிக்கை பதவி இறக்குவதற்கான சேர்பிய ஜனநாயக எதிர்ப்பியக்கத்தின் பிரச்சாரத்திற்கு அமெரிக்கா எவ்வாறு முக்கியபங்கு வகித்துள்ளது என்பதை எடுத்துக்காட்டியுள்ளதுடன் தனது சொந்த அரசாங்கத்தின் முக்கிய பங்கினையும் எடுத்துக்காட்டியுள்ளது.

அது "பல மாதங்களாக ஜேர்மன் அரசாங்கம் நேரடியாகவும், தேவையை ஒட்டியும் மிலோசிவிக்குக்கு எதிராக சேர்பிய எதிர்க்கட்சியினருக்கு ஆதரவளித்தது" என தனது கட்டுரையை ஆரம்பிக்கின்றது. அது மேலும் "பேர்லினில் இருந்தும் ஏனைய மேற்கு தலைநகரங்களில் இருந்தும் முக்கிய அரசியல், பொருளாதார உதவிகள் எதிர்க்குழுக்களுக்கும் கட்சிகளுக்கும் மிலோசிவிகை கைவிடச்செய்து அரசாங்கத்தைகைப் பற்றிக்கொள்வதற்கான பலத்தை அதிகரித்துக்கொள்வதற்காக உதவியளித்தன" என குறிப்பிடுகின்றது.

சேர்பிய ஜனநாயக எதிர்ப்பியக்கத்தின் தேர்தல் போட்டியின் ஆரம்பத்தில் கடந்த வருடம் டிசெம்பர் 17ம் திகதி G-8 கூட்டத்தின் போது ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் பிஷ்ஸரும், அமெரிக்க அரசு செயலாளரான மடலீன் அல்பிரைட்டும் பேர்லின் நகரிலுள்ள புடாபெஸ்ட் வீதியிலுள்ள Interconti Hotel இன் யன்னல்களற்ற அறை ஒன்றில் யூகோசிலாவிய முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்ததாகவும், இதில் நீண்டகாலமாக ஒன்றிணைய முடியாதிருந்த மிலோசிவிக்கின் எதிராளிகளான Zoran Djindjic உம் Vuk Draskovic உம் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் 'அந்நேரம் எதிர்க்கட்சியினருக்கு உடைகளையப்பட்டது' என குறிப்பிட்டதாக அச்சஞ்சிகை மேலும் எழுதியுள்ளது.

"மிலோசிவிக்கின் எதிராளிகள், அதுவரை இவர்தான் ஜனாதிபதி வேட்பாளர் என பரந்தளவில் தெரியாதிருந்த கொஸ்ருனிகா உடன் இணைந்து இயங்க தமது உண்மையான விருப்பத்தை ஒத்துக்கொண்டனர். இக்கலந்துரையாடல் முன்கூட்டியே பிரபல்யமான டர்ஸ்கோவிக் [Draskovic] இற்கான சகலவித ஆதரவையும் வாபஸ்பெற்றுக்கொள்ள முடிவெடுத்தது".

"கிட்டத்தட்ட 30 மில்லியன்$ [இதில் கூடுதலாக அமெரிக்காவினது] புடாபெஸ்ட்டில் இருந்த காரியாலயத்தின் ஊடாக நாட்டினுள் அனுப்பப்பட்டது. இது கணனி, தொலைபேசி, அலுவலக காதியாதிகள் போன்றவற்றால் எதிர்க்கட்சியினர் தேர்தல் பிரசாரத்திற்கு தயார்செய்யப்பட்டனர். வெளிநாடுகளில் இதற்காக நூற்றுக்கணக்கான தேர்தல் உதவியாளர்கள் தயார்செய்யப்பட்டனர்" எனவும், "தேர்தல் தினத்தன்று எதிர்க்கட்சியினர் தேர்தல் முடிவுகளை கட்டுப்படுத்த மிலோசிவிக்கை விட ஆயத்தநிலையிலும், ஒழுங்கமைக்கப்பட்டும் இருந்தனர். 9200 வாக்களிப்பு நிலையங்களில் 180 இடங்களில் வாக்களிப்பு எண்ணுதலை அவதானித்த இவ் உதவியாளர்கள் முடிபுகளை தமது வானொலி வலைப்பின்னலூடாக எதிர்க்கட்சியினரின் தலைமையகத்திற்கு அனுப்பிவைத்தனர்" என இச்சஞ்சிகை மேலும்குறிப்பிட்டது.

ஜேர்மன் அரசாங்கம் எதிர்க்கட்சியினரின் பத்திரிகை,வானொலி,தொலைக்காட்சி நிலையங்களை நடாத்துவதற்கான 4மில்லியன் மார்க் அளவிலான நிதி, தளபாடவசதிகளை வழங்கியது. ஜேர்மன் வெளிநாட்டு வானொலி சேவையானது 1999 இல் மட்டும் கிட்டத்தட்ட 10மில்லியன் மார்க்கை முதலீடுசெய்துள்ளது.

எதிர்க்கட்சியினருக்கான சமூக அடித்தளத்தை பாதிகாப்பதற்கான பிரசாரம் யூகோசிலாவிய மாநிலங்களில் மிலோசிவிக் இற்கு எதிரான மனநிலையை உருவாக்குவதற்கான கவனத்தை செலுத்துவது ஒரு புதிய திசையை எடுத்தது.1996-97 தேர்தல்களில் மிலோசிவிக்கை எதிர்த்த அரசியல்வாதிகள், நகரங்களிலும் நகரசபைகளிலும் உள்ள அமைப்புகள், கட்சிகள் போன்றவற்றிற்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டன. ஜேர்மனி இதனை தமது நகரங்களுக்கு கூட்டிணையாக சகோதரத்துவ நகரங்களை யூகோசிலாவியாவில் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு உதவி வழங்கியது. "இதனூடாக எதிர்க்கட்சியினர் ஆட்சி புரிந்த 40 நகரங்களுக்கு கிட்டத்தட்ட 45 மில்லியன் மார்க் நேரடியாக கிடைத்தது. மேற்கினால் வழங்கப்பட்ட பெரிய உதவிகள் 'சமாதானத்திற்கான சக்தி','சமாதானத்திற்கான கல்வியூட்டல்', 'சமாதானத்திற்கான வீதிகளை அமைத்தல்' போன்ற போலிப்பெயரிடப்பட்டது.

இந்நடவடிக்கை முன்னாள் சமூகஜனநாயக பாராளுமன்ற உறுப்பினரான Josef Vose ஆல் தலைமை தாங்கப்பட்டு 16 ஜேர்மன் நகரங்கள், 41 ஐரோப்பிய நகரசபைகள், 4 அமெரிக்காவின் ஒகியோவை சேர்ந்த நகரசபைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. "இவ் நகரங்களின் கூட்டிணைவானது ஏனைய அரசுகளைப்போல் யூகோசிலாவியாவின் எதிர்க்கட்சியினை தமது கைகளில் நேரடியாக எடுத்துக்கொள்வதை மறைப்பதற்கான ஒரு தந்திரமாகும்" எனவும் "இதுவரை 16,951,800 மார்க் ஜேர்மன் பணம் உண்மையாக வெளிநாட்டு அமைச்சால் நகரங்களின் கூட்டிணைவின் கீழ் உறுதிப்பாட்டு உடன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு வெற்றிகொள்ளப்பட்ட நகரசபைகள் தமது சொந்த நகர நிதியிலிருந்து மேலதிகமாகவழங்கியுள்ளதாக" Spiegel பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் நிலை கரட்டும் தடியும் இணைந்தது போன்றதால் திணிக்கப்பட்டுள்ளது. சேர்பிய மக்களுக்கு முன்னுள்ள தேர்வு, ஒன்று கொஸ்ருனிக்காவின் எதிர்ப்பிற்கு ஆதரவளிப்பதன் மூலம் மேற்குலகம் பகட்டான பெண்ணாக அங்கு வருவதா அல்லது மிலோசிவிற்கிற்கு ஆதரவளித்து தொடர்ந்த பொருளாதாரதடையையும் மீண்டும் புதிய யுத்தத்தையும் ஏற்றுக்கொள்வதா என்பதாகும்.

மேற்கின் பிரசாரத்தின் இரண்டாவது முனை மிலோசிவிக் பிரதியீடு சாத்தியப்படுகையில் இரகசியபொலிசாரினதும், ஆயுதப்படையினரதும் ஒரு பகுதியை வென்றுகொள்வதாகும். ஒக்ரோபர் 5ம் திகதியின் நிகழ்வுகள் தொடர்பான அறிக்கைகள் இது எந்தளவிற்கு வெற்றியளித்துள்ளது என்பதை காட்டுகின்றது.

ஒக்ரோபர் 9ம் திகதி Guardian பத்திரிகை முன்னாள் 63ம்பாரசூட் படைப்பிரிவின் விசேட படைவீரரான ஸிவான் மார்க்கோவிச் [Zivan Markovic] இன்பேட்டியை அடித்தளமாக கொண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. மார்க்கோவிச் பாராளுமன்றமும், தொலைக்காட்சி நிலையமான RTS மீதானதாக்குதல் உண்மையில் 100 இற்கு மேலான தற்போதய அல்லது முன்னாள் படைவீரர்களால் இக்கட்டிடங்களை காவல் காத்த பொலிசாரின் ஆதரவுடனும் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

யூகோசிலாவிய பத்திரிகைகள் 10,000 ஆயுதம் தரித்தவர்கள் இதில் ஈடுபட்டிருந்தனர் என்பதை மறுத்து அவர் மேலும் "பொலிஸையும்,பொலிஸ் தலையீட்டு படையை சேர்ந்தவிசேட பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு ஈடுபட்டிருந்ததாக தெரிவித்தார்.

மிலோசிவிக்கின் கருத்திற்கு பலமளிப்பது போல் New York Times இடதும், பிரித்தானியாவின் Channel 4 தொலைக்காட்சியினது அறிக்கைகள் பெல்கிராட்டிற்கு 60 மைல் தூரத்தில் உள்ள ககாக் நகரத்தின் மாநில பாராளுமன்றத்தினை தாக்கியதில் பங்குபற்றியவர்கள் தொடர்பாக தெரிவித்திருந்தது.

டர்ஸ்கோவிக்[Draskovic] இன் சேர்பிய மறுசீரமைப்பு இயக்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான இந்நகரத்தின் நகரபிதாவான VeligIlic தற்போது புதிய சேர்பிய கட்சியை நடாத்துகின்றார். அவர் மாநில பாராளுமன்றத்தினை தாக்கியதை தான் சேர்பிய அமைச்சின் பொலிஸ் படையின் 4 முக்கிய அங்கத்தவர்களுடன் இணைந்து திட்டமிட்டு, ஒழுங்கமைத்ததாக செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். அவர்களின் உதவியுடன் Velig Ilic, ஒக்ரோபர் 5ம்திகதிக்கு ஒருமாதத்திற்கு முன்னரே தலைநகரை கைப்பற்ற ஒரு முக்கிய குழுவை உருவாக்கஆரம்பித்திருந்தார்.

New York Times இற்கு அவர் "இளம் மேதாவிகளுடனும், யூகோசிலாவிய இராணுவத்தின் துணைப்படையுடனும், இளம் பொலிசாருடனும் இணைந்து ஒரு குழுவை உருவாக்கியதுடன், பெல்கிராட்டின் உள்நாட்டு பொலிஸின் சிறந்த பிரிவுகளுடனும் இணைந்து இயங்கியதாக தெரிவித்தார். நாங்கள் இராணுவத்துறை வல்லுனர்களையும், உத்தியோகரீதியான குத்துச்சண்டை வீரர்களையும் இணைத்துக்கொண்டோம். அண்மை நகரங்களில் எமக்காக சாதாரண உடையணிந்த பொலிசாரினையும் இணைத்து வேலைசெய்து கொண்டிருந்தோம்"எனவும் தெரிவித்தார்.

ஒக்ரோபர் 5ம் திகதி அதிகாலை ககாக் நகரத்திலிருந்து10,000பேர் ஊர்வலமாக புறப்பட்டதை Channel 4 தொலைக்காட்சி குழுவால் படமெடுக்கப்பட்டது. இவர்கள் பெல்கிராட்டின் நிகழ்வுகளில் முக்கிய பங்குவகிக்க சென்றன. பாராளுமன்ற பொலிஸ் பாதுகாப்பு பற்றாக்குறையாக இருக்கும் பிற்பகல்3.00-3.30 இடையில் பாராளுமன்றம் மீதான உண்மையான தாக்குதல் இடம்பெறகூடியதாக ஒழுங்குபடுத்திய தமது இரகசிய பொலிஸ் தொடர்புகளுடன் இணைந்து இதனை ஒழுங்கமைத்திருந்ததாக Velig Ilic கூறியிருந்தார்.

இந்த ஒரு தனி நிகழ்வு மிலோசிவிக்கிற்கு எதிரான இயக்கம் எவ்வாறு ஏகாதிபத்திய சக்திகளாலும், சேர்பிய இரகசிய பொலிஸாராலும் திட்டமிட்டு, ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது என்பதை பாரியளவில் எடுத்துக்காட்டுகின்றது. "மக்கள்சக்தியின்" எடுத்துக்காட்டு என்பதற்கு மாறாக மிலோசிவிக்கின் வீழ்ச்சியானது தற்காலகோட்டை சதிக்கு சமமாக மேற்கின்அரசியலின் சதியாலோசனையின் விளைவேதவிர, அடிக்கடி கூறப்படும் ஜனநாயகப் புரட்சியல்ல.

New York Times இன் ஒக்ரோபர் 6ம் திகதி வெளியீட்டில் Robert D.Kaplan ஆல் எழுதப்பட்டதில் மேற்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் ஏன் ஒக்ரோபர் 5ம் திகதியின் பெல்கிராட்டின் நிகழ்வுகள் அமெரிக்காவின் பலத்தை எடுத்துக்காட்டுகின்றன என விபரித்தது என்பதற்கு தெளிவானவிளக்கமாகும்.

அவர் "ருஷ்யாவின் வரலாற்றுபலம் பால்க்கனில் பலவீனமடைந்தது நேட்டோ முன்னைய யூகோசிலாவியாவின் உண்மையான ஆழுமையான அதிகாரியாக வந்துள்ளதுடன், ஐனாதிபதி கிளின்டனும் அரச செயலாளரான மடலீன் அல்பிரைட்டும் ஒன்றின் பெறுமதியை பரப்புவதற்கான முன்நிபந்தனையான பலத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உண்மையான கொள்கையை பிரயோகிப்பதற்கான தகுதியான கடனைப் பெற்றுக்கொண்டனர். 1930 களில் நாசிகள் இராணுவபலத்தை பிரயோகித்தும், பால்க்கனில் இருந்த உள்ளூர் கட்சிகளுக்கு நிதி, ஆலோசனை, அச்சு இயந்திரங்களையும் ஏனைய உதவிகளையும் வழங்கினர். பாசிசவாதிகளின் கருத்துகள் மிகவும் ஆதிக்கமுடையதாக இருந்தமை ஆச்சரியப்படுவதற்கில்லை" என எழுதியுள்ளார்.

அவர் மேலும் "பால்க்கனில் பகிரங்க அமைப்புக்கள் பரவுவது தொடர்பாக நாம் ஏமாற்றமடைய கூடாததுடன், இது எங்கும் ஒரு தேவையானதும் இயற்கையானதுமான அபிவிருத்தியல்ல. சுலபமானதாகவும் வெளிப்படாதது மானபோதிலும், அப்பிரதேச மக்கள் தமது நலன்களுடன் இணைந்ததாக பார்க்கும் இவ் அபிவிருத்தி அமெரிக்க ஆழுமையின் பரவலின் நேரடிவெளிப்பாடாகும்" என குறிப்பிடுகின்றார்.

மேற்குலகு யூகோசிலாவியாவின் அரசியல் நிகழ்வுகளை இந்தளவிற்கு திரிபுபடுத்துவதற்கான காரணம் மிலோசிவிக்கின் அரசாங்கத்தின் ஆழமான பிற்போக்கான தன்மையாகும்.1980களின் பின்னர் முன்வந்த ஏனைய இனவாத-தேசியவாத தலைவர்களைப் போல், பாரிய சேர்பிய தேசியவாதமும் யூகோசிலாவியாவை இனவாத அடித்தளத்தில் பிளவடைவதற்கான வழியை உருவாக்கியதுடன், மேற்கு மூலதனத்தின் பொருளாதார உட்புகுதலுக்கும் பால்க்கன் பிரதேசத்தில் வித்தியாசமான இனக்குழுக்களுக்கிடையேயான தொடர்ந்த இரத்தம் தோய்ந்த மோதுதலுக்கும் காரணமாகியது.

ஆனால் எவ்வளவிற்கு மிலோசிவிக்கின் அரசாங்கம் மறைவதற்கு தகுதியானதாக இருந்தபோதிலும், அதன் அழிவின் தன்மை தற்செயலானதல்ல. பால்க்கனில் உண்மையான ஜனநாயக, சமூக புனருத்தானம் மேற்கு சக்திகளின் அரசியல் பாதுகாப்பிலோ அல்லது அதன் உள்ளூர் தேசத்துரோகிகளாலோ நிகழப்போவதில்லை. இதற்கு இப்பிரதேத்தில் தொழிலாளவர்க்கத்தின் ஐக்கியப்பட்ட, சுயாதீனமான அரசியல் ஒழுங்கமைப்பு தேவை. இப்படியான ஒரு உண்மையான ஜனநாயக மக்கள்அமைப்பு அபிவிருத்தி ஒக்ரோபர் 5 ம் திகதியின் நிகழ்வுகளுக்கு ஆதரவளித்த தொலைத்தொடர்பு சாதனங்களின் எதிர்ப்பை தவிர வேறொன்றையும் சந்திக்காது.