World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Fisherman killed in collision with Sri Lankan naval boat

இலங்கை மீனவர் கிராமத்திலிருந்து ஒரு அறிக்கை- பகுதி-2

சுத்தமான குடிதண்ணீர் ஒரு பெரும் பிரச்சினை

By R. M. Dayaratna
15 March 2000

Use this version to print

ஜனவரி 24ம் திகதி கடற்படை ரோந்து படகு மோதியதால் ஒரு தமிழ் மீனவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலக சோசலிச வெப் தள நிருபர்கள் மீனவ கிராமமான உடப்புக்கு விஜயம் செய்தனர். கிராமவாசிகள் இக்கொலைச் சம்பவத்தின் சூழ்நிலைகளைப் பற்றியும் வாழ்க்கை நிலைமைகள் பற்றியும் கலந்துரையாடினர். கிராமவாசிகள் பொலிஸ்- இராணுவ ஒடுக்குமுறைகள் காரணமாக தாம் எவ்வளவு மோசமான நிலைக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது என்பதை விளக்கினர். அறிக்கையின் இரண்டாவது பகுதி மீனவர்களும் அவர்களின் குடும்பமும் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை பற்றி விபரிக்கின்றது.

உடப்புக்கான வீதி கல்லும் மண்ணும் போட்ட ஒரு கிரவல் பாதையாக உள்ளது. கொழும்பு- புத்தளம் பஸ் பாதையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் நீண்டு செல்கின்றது. புத்தளமும் கூட வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஒரு ஒதுக்குப் புறமான நகரம். இதில் ஒரு குறுகிய நிலத்துண்டே உடப்பு. இது மூன்று புறத்திலும் கடலால் சூழப்பட்டுள்ளது. இந்த உடப்புவில் உடப்பு, ஆண்டிமுனை, செல்வபுரம் என்ற மூன்று கிராமங்கள் உள்ளன. இங்கு 400க்கும் அதிகமான மீனவக் குடும்பங்கள் வாழ்க்கை நடாத்துகின்றன.

இந்தக் கிராமவாசிகள் தமது அன்றாடைய வாழ்க்கையை ஓட்டிச் செல்ல நடாத்தும் போராட்டம் பெரிதும் பரிதாபமானது. அவர்கள் மீன்பிடிக்கக் கையாளும் கருவிகள் பழைய நிலமானித்துவ காலத்துக்குரியவை.

நீண்ட வலையும் பழைய பாணியிலான மீன்பிடிப் படகுமே பாவனையில் உள்ளன. ஒரு சிலர் மட்டும் இயந்திரம் பொருத்தப்பட்ட 'பைபர் கிளாஸ்' படகுகளைக் கொண்டுள்ளனர். அவ்வாறே இந்த உடப்பு கிராமத்தில் உள்ள வீடுகளில் ஒரு சிலவற்றைத் தவிர ஏனையவை யாவும் தென்னோலை கிடுகினால் வேயப்பட்டவை. இவை இந்த மக்களுக்கு மழை, வெய்யிலில் இருந்து போதிய பாதுகாப்பு வழங்குவதாக இல்லை. பொதுவில் இந்தக் கிராமம் மழைக் காலங்களில் வெள்ளக் காடாகி விடுகின்றது. 45 சதவீதமான வீடுகளுக்கு மலசல கூட வசதி கிடையாது.

இக்கிராமத்தில் உள்ள ஒரு பெரும் பிரச்சினை சுத்தமான குடிநீரைத் தேடிக்கொள்வதாகும். இந்தக் கிராமத்தில் இரண்டே இரண்டு கிணறுகள் உள்ளன. இதனால் பெரும்பான்மையான குடும்பப் பெண்கள் தண்ணீரைத் தேடி மைல் கணக்கில் நடக்க வேண்டியுள்ளது. இந்த இரண்டு கிணறுகளும் ஆஸ்பத்திரி பகுதியிலும் பொலிஸ் நிலைய வளவிலும் இருந்து கொண்டுள்ளன.

இந்தப் பிரச்சினை பற்றி உடப்பு கிராமவாசிகள் கூறியதாவது: "1984ல் குடி நீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி ஒரு இஸ்ரேலியக் கம்பனி ஒரு 4.3 மில்லியன் ரூபா திட்டத்தை வரைந்தது. 1993ல் மீன்பிடி அமைச்சு ஒரு 9.3 மில்லியன் ரூபா தண்ணீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக பெரிதாகப் பேசிக் கொண்டது. அதுவும் கூடக் கைவிடப்பட்டு விட்டது. இன்றைய பொதுஜன முன்னணி அரசாங்கம் குழாய் நீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பித்த போதிலும் அதுவும் மக்களை ஏமாற்றும் ஒரு கண்கட்டு வித்தையாகியுள்ளது. அந்தத் தண்ணீர் குடிப்பதற்கு இலாயக்கானதாக இல்லை இந்த இலட்சணத்தில் தான் எமது தண்ணீர் பிரச்சினை அரசாங்கங்களால் தீர்த்து வைக்கப்பட்டன.

இன்னமும் கிராமவாசிகள் தண்ணீர் அள்ள மைல் கணக்காக நடக்க வேண்டியுள்ளதோடு தண்ணீர் விநியோகம் ஒரு சின்ன வியாபாரமாகவும் மாறியுள்ளது. தண்ணீரை பவுசர்களில் (ஙிஷீஷ்sஷீக்ஷீs) கொணரும் ஒரு வர்த்தகர் ஒரு பானை தண்ணீரை இரண்டு ரூபாவுக்கு விற்பனை செய்கின்றார். இதனால் கிராமவாசிகள் ஒரு கணிசமான அளவு பணத்தை பச்சைத் தண்ணீருக்காக செலவிட நேரிட்டுள்ளது. மக்கள் நீராடுவதற்கு தண்ணீர் தேடுவது ஒரு பெரும் சங்கடமான பிரச்சினை. பள்ளங்களிலும் குழிகளிலும் பிடித்து வைக்கப்பட்ட நீரையே -அவை காய்ந்து போகும் வரை- மக்கள் குளிக்க பாவிக்க நேரிட்டுள்ளது. ஆனால் இது பெரிதும் அசுத்தமானது. கொலரா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்துகின்றது.

உடப்பு கிராமவாசிகளில் (முதியோர்) பெரும்பாண்மையினரால் எழுதவோ வாசிக்கவோ முடியாது. மக்களில் பெரும்பாண்மையினர் பெரிதும் ஏழைகளாக இருப்பதால் அவர்களின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாது உள்ளது. அத்தோடு அங்கு தரமான பாடசாலைகளும் கிடையாது. 1960பதுகளில் அங்கு இரண்டு பாடசாலைகள் அமைக்கப்பட்டன. ஒன்று ஆண்டிமுனையிலும் மற்றையது உடப்புவிலும் அமைக்கப்பட்டன. இந்தப் பாடசாலைகளைக் கட்டியெழுப்பத் தாமே ஒரு கணிசமான அளவு தொகை பணத்தைத் திரட்டியதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

ஆனால் ஆண்டிமுனை பாடசாலை அதிபர் விளக்கியது போல்: "இன்று இந்த இரண்டு பாடசாலைகளும் சரிந்து கொட்டும் நிலையில் உள்ளன. இங்கு ஆசிரியர் பற்றாகுறை நிலவுகிறது. இங்கு ஆய்வுக் கூடங்கள் கிடையாது. போதிய மேசை கதிரை இல்லை. விளையாட்டு உபகரணங்கள் எதுவுமே கிடையாது. இந்த இரண்டு பாடசாலைகளிலும் சுமார் 4200 மாணவர்கள் படிக்கின்றார்கள். இங்குள்ள ஆசிரியர்களில் அரைப் பங்கினர் தொண்டர் ஆசிரியர்கள். மாணவர்களிடம் இருந்து கிடைக்கும் பணத்தில் இவர்களுக்கு மாதாந்தம் ரூபா. 1200 சம்பளமாக வழங்கப்படுகின்றது. இந்தத் தொண்டர் ஆசிரியர்களுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்குவது கிடையாது. இத்தகைய ஒரு நிலையின் கீழ் உயர் கல்வியைப் பெறுவதற்கு எந்தவிதமான வாய்ப்புமே கிடையாது" என்றார்.

பெரும் கஷ்டத்துடன் பாடசாலையில் ஏழாம் எட்டாம் வகுப்புவரை படிப்பதுடன் மாணவர்கள் பாடசாலை செல்வதை நிறுத்திக் கொள்ளத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்க்கை ஒட்டத்திற்காக கடல் நீரோட்டத்துடன் போராடி மீன்பிடிக்கத் தள்ளப்படுகின்றனர். இளம் சிறுவர்கள் தமது தந்தையார்களுடனோ அல்லது வாடிகளில் உள்ள அயலவர்களுடனோ சேர்ந்து தொழில் செய்ய வேண்டியுள்ளது. கடற்கரைகளில் மீன்களை விற்பனை செய்யும் கொட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முழுப் பகுதிக்குமென ஆண்டிமுனையில் ஒரு சிறிய ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு ஒரு வாட்டும், ஒரு பிரசவ விடுதியும் உள்ளன. இங்கு ஒரு டாக்டரும் இரண்டு அட்டென்டன்களும் உள்ளனர். இந்த ஆஸ்பத்திரி பற்றி விபரிக்கையில் டாக்டர் கூறியதாவது: "நான் இங்கு கடந்த 12 வருடங்களாக தொழில் செய்கின்றேன். அப்போது இங்கு ஒரு கட்டிடம் மட்டுமே இருந்தது. பல வேண்டுகோள்களின் பின்னர் நாம் மற்றொரு கட்டிடத்தையும், அலுவலர் வசிப்பிடங்களையும், ஒரு அம்புலன்சையும் பெற்றோம். இங்கு இரண்டு 'அட்டென்டன்கள்' மட்டுமே உள்ளனர். இத்தகைய கிராமப்புற ஆஸ்பத்திரிக்கு அரசாங்கம் தாதிமார்களை நியமிப்பது கிடையாது".

பொதுவாக இந்த ஆஸ்பத்திரிக்கு சுமார் 40 நோயாளர்கள் தினசரி வருகின்றனர். மூடி மறைக்கப்பட்ட குடிசைகளாலும் கழிவறை வசதிகள் இன்மையாலும் தண்ணீர் பிரச்சினையாலும் இக்கிராமத்தில் தொற்று நோய் பரவுவது ஒரு சாதாரண நிகழ்வாக உள்ளது. கடந்த சில வாரங்களில் இங்கு சின்னமுத்து நோய் பெருமளவில் பரவியது. 1985ல் இங்கு 89 கொலரா நோயாளிகள் இருந்தனர். ஆனால் 1999ல் இந்த எண்ணிக்கை 389 ஆக அதிகரித்தது. கடந்த ஆண்டில் இரண்டு கொலரா நோயாளிகள் இறந்தனர்.

இந்த ஆஸ்பத்திரியில் இருந்து நோயாளிகளில் பலர் 24 கி.மீ. அப்பால் உள்ள சிலாபம் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்படுவது வழமை. ஆனால் சிலாபம் செல்ல இரண்டு பஸ்களே சேவையில் ஈடுபட்டுள்ளன. இவை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவைகளே சேவையில் ஈடுபடுகின்றன. அவையும் ஒரு கால நேரத்தின்படி இயங்குவது கிடையாது. மாலை 6 மணிக்கு பிறகு இங்கு பஸ் போக்குவரத்து கிடையாது. இதனால் அவசர சிகிச்சைக்காகத் தன்னும் நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வழியில்லை.

பெரும் மீன்பிடி வலைச் சொந்தக்காரர்கள் மீனவர்களின் உயிர் வாழ்க்கையை தீர்மானம் செய்பவர்களாக உள்ளனர். உடப்பு, மீன்பிடிக் கைத்தொழிலில் பழைய நிலமானித்துவ அமைப்பின் மிச்ச சொச்சங்கள் புதிய முதலாளித்துவ உறவுகளுடன் பின்னிப் பிணைந்து கொண்டுள்ளதைக் காணலாம். இந்த வலைச் சொந்தக்காரர்கள் 60 அல்லது 70 தொழிலாளர்களை இப்பகுதியில் மீன்பிடி பருவ காலத்தின் போது- 6 மாதத்துக்கு- சேவைக்கு அமர்த்துகின்றனர். ஒவ்வொரு தொழிலாளியும் அவரின் தொழிலுக்கு இணங்க ரூபா. 20000 தொடக்கம் 40000 வரை சம்பளம் பெறுகின்றனர். இந்த ஆறு மாத காலத்தில் இந்த தொழிலாளர்கள் வேறு முதலாளிகளின் கீழ் வேலை செய்ய முடியாது. உண்மையில் அவர் மீன்பிடி முதலாளிக்கே சொந்தமானவர். அவர் வேலைக்கு செல்லாவிடில் மீன் முதலாளி அவரை தொழில் செய்யும்படி நெருக்குவார். இதை மீன் முதலாளி தனித்தோ அல்லது பொலிசாருடன் சேர்ந்தோ செய்கின்றார்.

பிடித்த மீனில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு (தினசரி) மீன்பிடிப் படகு சொந்தக்காரருக்கு போகிறது. மூன்றில் ஒரு பங்கு நாளாந்த செலவீனங்களுக்கு- சாப்பாடு- போகிறது. எஞ்சிய மூன்றில் ஒரு பங்கு மாத்திரமே தொழிலாளர்களுக்கு கிட்டுகிறது. தொழிலாளர்களின் இந்த வருமானப் பங்கில் இருந்தும் சம்பள முற்பணம் போன்றவை கழிக்கப்பட்டு விடுகின்றது. உடப்புவில் 28 மீன்பிடி வலை சொந்தக்காரர்களும் 60 மீன்பிடி படகுச் சொந்தக்காரர்களும் உள்ளனர். இவர்கள் தமக்கு உதவியாளர்களாக ஒன்று அல்லது இரண்டு தொழிலாளர்களை சேவைக்கு அமர்த்துகின்றனர். உடப்பு, வலை மீன்பிடியின் மேலாதிக்கத்துக்கு ஆட்பட்டது. இது பெரிதும் கஷ்டமான வேலை. தொழிலாளர்கள் தெப்பங்களையோ அல்லது கட்டுமரங்களையோ வலைகளை கடலுக்கு கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டி உள்ளது. பின்னர் மீன்பிடி வலைகளை கரைக்கு வலித்து இழுத்துவர வேண்டும்.

வலைச் சொந்தக்காரரிடம் வேலை செய்யும் ஐ. குமார் கூறியதாவது: "நான் இந்தத் தொழிலை எனது இளமைக் காலத்திலிருந்தே செய்து வருகிறேன். நாம் கடற்கரைக்கு விடியற் காலையில் சென்று மாலையில் 6 மணிக்கு அல்லது 7 மணிக்கே வீடு திரும்புகின்றோம். எமது தினசரி வருமானம் எவ்வளவு என்று திட்டவட்டமாக கூற முடியாது. மீன்பிடி காலத்தில் கடல் பெருக்கெடுக்குமானால் நாம் கடலுக்கு செல்ல முடியாது. எமக்கு செலவுக்கு போதிய வருமானம் கிட்டாது" என்றார்.

இதனால் மீனவர்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயரத் தள்ளப்படுகின்றனர். கடல் பெருக்கெடுக்கும் ஆறு மாத காலத்தில் அவர்கள் மன்னார், கொக்கிளாய், நாயாறு, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, போன்ற வடக்கு- கிழக்கு மாகாணப் பகுதிகளுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று இடம்பெறும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் யுத்தத்தினால் அந்த இடங்களில் மீன்பிடியில் ஈடுபடுவது சாத்தியமின்றி போய்விட்டது. மீனவர்கள் இப்போது பொலிசாரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். வர்த்தகர்கள் மீன்பிடி படகுகளை வாடகைக்கு அமர்த்தத் தயங்குகின்றார்கள். பிரேக்குகள் உடையுமோ அல்லது மீன்பிடிக் கருவிகளை இழக்க நேரிடுமோ என அவர்கள் அஞ்சுகின்றனர்.