World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Fisherman killed in collision with Sri Lankan naval boat

இலங்கை மீனவர் கிராமத்திலிருந்து ஒரு அறிக்கை பகுதி-3

அரச பலாத்காரத்தினதும் ஒடுக்குமுறையினதும் ஒரு நீண்ட வரலாறு

By R. M. Dayaratna
15 March 2000

Use this version to print

ஜனவரி 24ம் திகதி இலங்கை கடற்படை படகுடன் இடம்பெற்ற மோதுதலில் ஒரு மீனவர் கொல்லப்பட்டது தொடர்பான ஒரு அறிக்கை இங்கு வெளியாகின்றது. உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள் மீனவ கிராமமான உடப்புக்குச் சென்று, இச் சம்பவம் தொடர்பாகவும் அவர்கள் முகம் கொடுத்துள்ள வாழ்க்கை நிலைமைகள், மற்றும் பிரதேசத்தில் பொலிஸ், இராணுவ ஒடுக்குமுறையின் வரலாறு தொடர்பாகவும் கிராமவாசிகளிடம் உரையாடினர். இந்த அறிக்கையின் இறுதிப் பகுதியில் பொலிஸ், இராணுவத்தினரது ஒடுக்குமுறைகள்- குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை அவர்கள் விபரித்தனர்.

உடப்பு பொதுவாக மூன்று பக்கங்களாலும் கடலால் சூழப்பட்ட ஒரு பின்தங்கிய கிராமமாகும். இந்தக் கிராமம் விடுதலைப் புலிகளையும் அவர்களது ஆயுதங்களையும் தென் பகுதிக்கு பரிமாற்றும் ஒரு மத்திய நிலையமாகவே தொடர்ந்தும் கணிக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப் புலிகளையும், ஆயுதங்களையும் தேடும் போர்வையில் மீண்டும் மீண்டும் இந்தக் கிராமத்தவர்கள் கடுமையான ஒடுக்குமுறைகளையும் வேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர்.

உடப்பு கிராமத்தவர்கள் முக்கியமாக நாட்டின் வடக்குக்-கிழக்குத் தமிழர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். யுத்தத்திலிருந்து தப்பும் பொருட்டு இடம் பெயர்ந்து வரும் அகதிகள் இந்தக் கிராமத்தில் உள்ள தங்கள் உறவினர்களின் உதவியை நாடுகிறார்கள். இந்த அகதிகளின் வருகையை இந்தக் கிராமத்தை அலசுவதற்கான சந்தர்ப்பமாக இலங்கை பாதுகாப்புப் படையினர் அடிக்கடி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்குள் மீனவர்கள், இளைஞர்கள், பெண்களுமாக பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். சிலர் விடுதலைப் புலி சந்தேக நபர்கள் எனும் பேரில் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
1996 ஜூலையில் இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவரான செல்லையா இராஜ்குமார் விடுதலைப் புலி சந்தேகநபர் என குற்றம் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவராக அவர் இருந்த போதிலும், சித்திரவதை செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் இலங்கை அரசாங்கத்தின் யுத்தத்தை மட்டும் அல்ல விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத வேலைத் திட்டத்தையும் எதிர்த்தார். அவர் தொடர்ந்தும் சிறை வைக்கப்பட்டிருப்பதை சவால் செய்வதற்காக, சோ.ச.க. அனைத்துலகக் குழுவின் ஏனைய பகுதிகளோடு இணைந்து தொடுத்த அனைத்துலகப் பிரச்சாரத்தின் பயனாகவே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

செல்லையா இராஜ்குமார் தடுத்து வைக்கப்பட்டமை, உடப்பில் ஏனைய இளைஞர்களுக்கு இடம்பெற்றது போல், இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள யுத்தத்தின் பெறுபேறாக நாடு முழுவதிலும் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான பரந்த ஒடுக்குமுறையின் ஒரு பாகமாகும். இலங்கையில் தமிழராக வாழ்வது பொதுவாகவே அவர்களை விடுதலைப் புலி உறுப்பினராக சந்தேகிக்கவும் சட்டரீதியான கைதுகளுக்கும், சித்திரவதைகளுக்கும் விசாரணையற்ற நீண்ட தடுத்துவைப்புகளுக்கும் காரணமாகிறது. இராஜ்குமார் முகம் கொடுத்ததைப் போன்ற தலைவிதிக்கு முகம் கொடுத்த சில கிராமத்தவர்களிடம் உலக சோசலிச வலைத்தள நிறுபர்கள் உரையாடினார்கள்.

ஆர்.சாந்திவேல்: அரச ஒடுக்குமுறையின் ஒரு புதிய வேட்டையாகும். செப்டெம்பர் 13ம் திகதி அவர் உடப்பில் தனது வீட்டில் இருந்த போது நுவரெலியா பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவரது தம்பியான மயில்வாகனம் நுவரெலியா சென்றிருந்த போது விடுதலைப் புலி சந்தேக நபராக கைது செய்யப்பட்டிருந்தார். பொலிஸ் சித்திரவதையின் போது, அவர் உடப்பில் தனக்கு ஒரு சகோதரன் இருப்பதாக குறிப்பிட்டது சாந்திவேலின் கைதுக்கு காரணமாகியது. விடுதலைப் புலி சந்தேக நபர் என்ற பேரில் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதற்கு முன்னதாக 21 நாட்கள் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தாக சாந்திவேல் குறிப்பிட்டார். குற்றம் சாட்டுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பொலிசார் எட்டு நாட்களாக என்னை கடுமையாக சித்திரவதை செய்து, விடுதலைப் புலிகளுக்கும் எனக்கும் தொடர்பு உண்டா என விசாரித்தனர். நான் இல்லை என்றேன். பின்னர் எனக்கு விலங்கிட்டு என் குதிக் காலில் பாதத்தில் தாக்கினார்கள். என் சகோதரனை என்முன் கொண்டுவந்து நிறுத்தி மீண்டும் கேள்வி எழுப்பினார்கள். அன்று ஒரு கான்ஸ்டபிள் என் சகோதரனை அரையச் சொன்னார். நான் கான்ஸ்டபிளின் கால்களைத் தொட்டு என்னால் முடியாது என்று கெஞ்சினேன். அப்போது அவர் என்னை உதைத்தார். ஒரு இரும்பு அலுமாரியில் என் தலை மோத வைக்கப்பட்டதால் மூக்கிலும் வாயிலும் ரத்தம் வடிந்தது. அதன் பின் என்னை தூரத்துக்கு இழுத்துச் சென்று தலையில் குளிர்ந்த நீரை ஊற்றினார்கள்" என சாந்திவேல் குறிப்பிட்டார்.

நீதிமன்ற விசாரணையின் போது சித்திரவதைகளைப் பற்றி எதுவும் சொல்லக் கூடாது என பொலிசார் சாந்திவேலை எச்சரித்தனர். "நான் தாக்கப்பட்டதாக நீதி மன்றத்தில் சொல்லக்கூடாது என அவர்கள் கேட்டுக் கொண்டனர். நீ உண்மையை சொன்னால் உன்னை வீட்டுக்கு அனுப்பமாட்டேன் என ஒரு பொலிஸ் என்னிடம் சொன்னார். என்னுடைய அண்ணன் குற்றம் செய்ததாக சந்தேகித்த பொலிசார், என்னைக் கைது செய்து சித்திரவதை செய்தது எவ்வளவு அநியாயமானது" என அவர் கேட்டார்.

சாந்திவேல் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் வாரா வாரம் வைத்திய சிகிச்சைக்காக செல்லவேண்டும். அவரது சகோதரன் இதே போன்ற கடும் சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்துள்ளதோடு இன்று வரை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தனது அண்ணன் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபட்டிருக்கமாட்டார் என தான் நம்புவதாக சாந்திவேல் தெரிவித்தார்.

1998ல் மூன்று குழந்தைகளுக்கு தாயான மனோ ரஞ்சனியும், உதயநாதன், கே.கனகலிங்கம் ஆகிய ஏனைய இரண்டு இளைஞர்களும், கொழும்புக்கு அருகில் உள்ள பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டனர். ஒரு மாதத்துக்கு பின்னர் கனகலிங்கம் விடுதலை செய்யப்பட்ட போதிலும், உதயநாதன் விடுதலைப் புலி சந்தேகநபராக இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஒரு வருடமாக சிறையில் இருந்த பின்னர் மனோரஞ்சனி விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதை நியாயப்படுத்துவதற்காக பொலிசார் அவரை கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கினர்.

ஏழு வருடங்களுக்கு முன்னர் மீன்பிடிப்பதற்காக முல்லைத்தீவு சென்றிருந்ததே -விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம்- மனோரஞ்சனி செய்த குற்றம். "நான் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவள்" என வாக்குமூலம் பெறுவதற்காக பொலிசார் என்னைத் தாக்கினர். எந்தத் தொடர்பும் இன்றி நான் எப்படி வாக்குமூலம் வழங்க முடியும்? நான் ஏன் முல்லைத்தீவுக்குச் சென்றேன் எனத் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்கள். ஆறு மாதங்களாக பொலிசார் என்னை எந்தக் குற்றச்சாட்டும் இன்றி பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர். நான் சும்மா முல்லைத்தீவுக்கு சென்றதற்காக என்னைக் கைது செய்ய அவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது".

மனோரஞ்சனி ஆறு மாதங்கள் பொலிசில் தடுத்து வைக்கப்படுவதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். ஆனால் நீதிபதி விசாரணைக்கு திகதி இல்லை என்று கூறி அவரின் வழக்கை ஒத்தி வைத்தார். அவர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். மஜிஸ்திரேட் விசாரணைக்கு திகதி குறிக்காததால் ஒரு வருட காலத்திற்கு மேலாக அவர் சிறைவாசம் அனுபவிக்கத் தள்ளப்பட்டார். இறுதியாக, இந்த நீண்டகாலத் தடுத்து வைப்பின் பின்னர், குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாததால் மஜிஸ்திரேட் அவரை விடுதலை செய்யத் தள்ளப்பட்டார்.

மனோரஞ்சனியின் கூற்றுப்படி, சிறைச்சாலையில் 1500 கைதிகள் உள்ளனர். வடக்குக் கிழக்கில் இருந்து யுத்தத்தில் தப்பும் பொருட்டு கொழும்புக்கு இடம்பெயர்ந்த குறிப்பிடத்தக்க அளவு பெண்களும் இதில் அடங்குவர். பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின் எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி எட்டு வருடம் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20-25 வயது மதிக்கத் தக்க ஒரு யுவதியும் இதில் அடங்குவார்.

பெருமாள் ராஜி, முத்துராமு வைரவமூர்த்தி, செல்வநாயகம், முத்து வைரன் மற்றும் ஐயங்குமார் ஆகிய ஐந்து மீனவர்களை 1997 ஜனவரியில், உடப்பில் வைத்து பொலிசார் கைது செய்தனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான முத்துராமு வைரவமூர்த்தி, ஜனவரி 10ம் திகதி கைதுசெய்யப்பட்டார். அரசாங்க படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமாகாணத்தில் வவுனியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவரது நண்பன், தான் வைரவமூர்த்தியை சந்திக்கப் போவதாக பொலிஸ் விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார். இதுவே அவரின் கைதுக்கு உடனடிக் காரணமாகியது. அவர்கள் மூன்று வருடத்திற்கு முன்னர் ஒன்றாக மீன்பிடியில் ஈடுபட்டவர்கள். இதனடிப்படையில் வைரவமூர்த்தி ஒரு வருட காலத்திற்கு மேலாக கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு, அவரது உறவினர்கள் மேற்கொண்ட சட்டநடவடிக்கையால் விடுதலை செய்யப்பட்டார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்வநாயகம் ஜனவரி 31ம் திகதி கைதுசெய்யப்பட்டார். அகதிகளான தனது சகோதரியின் பிள்ளைகளை முல்லைத்தீவுக்கு திருப்பி அனுப்பியதே அவர் செய்த குற்றமாகும். அவர் மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு கடும் சித்திரவதைகளுக்கும் உள்ளானார். சட்டநடவடிக்கையின் பின்னர் அவர் எதுவித குற்றச்சாட்டும் இன்றி விடுதலை செய்யப்பட்டார்.

ஜனவரி 27ம் திகதி கைது செய்யப்பட்ட பெருமாள் ராஜா, விடுதலைப் புலி உறுப்பினர் எனக் கூறும், சிங்களத்தில் எழுதப்பட்ட ஒரு அறிக்கையில் பலாத்காரமாக கையொப்பம் இடும்படி சித்திரவதை செய்யப்பட்டார். சித்திரவதை மூலம் குற்றத்தை ஏற்ற்க செய்து ஒரு வருடத்திற்கும் மேலாக மகசீன் மற்றும் களுத்துறைச் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் 7 வருடகால ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையின் கீழ் விடுதலை செய்யப்பட்டார். இலங்கைச் சட்டத்தின்படி, ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு குறிப்பிட்ட நபருக்கு எதிராக வேறு ஒரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தப்படலாம்.

சிறைவாழ்க்கையின் மோசமான நிலைமையை பெருமாள் விபரித்தார். "எங்களை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலை மிருகங்களைக் கூட வைத்திருக்கப் பொருத்தமானது அல்ல. எங்களுக்கு சோறும் அவித்த இறைச்சியுமே உணவாக வழங்கப்பட்டது. எங்களுக்கு காலை உணவாக வழங்கப்பட்ட பாண் நாய்கள் படுத்திருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். 1997 நவம்பர் 28ல், சுத்தமான உணவு கேட்டு எல்லாக் கைதிகளும் உண்ணாவிரதம் செய்ததாக" அவர் குறிப்பிட்டார்.

ஆறு நாட்களுக்குப் பின்னர் பிரச்சனையைத் தீர்ப்பதாக கூறி ஒரு போலிப் பேச்சுவார்த்தைக்காக உண்ணாவிரதம் இருந்த கைதிகளை (சிறைச்சாலை) ஆணையாளரிடம் கொண்டு சென்றனர். அவர்களுக்கு விலங்கிட்டு குண்டாந்தடியால் தாக்கி கொழும்பிலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள களுத்துறைச் சிறைச்சாலைக்கு மாற்றினர். களுத்துறைச் சிறைச்சாலையில் அவரது அனுபவங்கள் ஆபத்தானதும் கொடூரமானதுமாகவும் இருந்தது. சிறைச்சாலை அதிகாரிகள் உண்ணாவிரதம் இருந்த தமிழ் கைதிகளுக்கு எதிராக சிங்களக் கைதிகளைத் தாக்குமாறு தூண்டிவிட்டதன் மூலம் பல கொலைகள் இடம்பெற்றுள்ளன.

ஐந்தாவது கைதியான ஐயங்கர் குமார் சிறைச்சாலையில் ஒரு வருடத்திற்கு மேலாக இருந்தவர். அவர் உடப்பு கடற்கரையில் மீன்பிடி வலையை பின்னிக்கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டார். அவரும் ஏனைய இளம் தமிழ் கைதிகளைப் போலவே மோசமான அனுபவங்களை அனுபவிக்கத் தள்ளப்பட்டார். சித்திரவதைகளின் பின்னர் பொலிசார் அவரை ஒரு தலையாட்டி புள்ளியாக பயன்படுத்த முயற்சித்தனர். குமாரின் உடலின் மேற்பாகத்தை சாக்கு ஒன்றினால் மூடிவிட்டு விடுதலைப் புலி உறுப்பினர்களை காட்டுமாறு கேட்டனர்.

அவர் குறிப்பிட்டதாவது: "விடுதலைப் புலி உறுப்பினர்களைப் பற்றி நான் ஒன்றும் அறியேன். என்னால் எப்படி கிராமத்து இளைஞர்களை விடுதலைப் புலி உறுப்பினர்களாக அடையாளம் காட்ட முடியும்"? தகவல் தருபவராக அவரை முடியாது போனதைத் தொடர்ந்து, தான் ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் என்பதை ஏற்றுக்கொள்ளுமாறு பொலிசார் அவரை சித்திரவதை செய்தனர். 1998 ஆகஸ்ட் 31ம் திகதி அவரது வழக்கு இடம்பெற்ற வேளையில் அவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றத்தை ஒப்புக்கொண்டால் விடுதலை கிடைக்கும் என அறிவுரை கூறினார். சட்டரீதியான அறிவுரைகளின் பின்னர் அவர் விருப்பமின்றி தான் ஒரு விடுதலைப் புலி ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார். 1998 டிசம்பர் 16ம் திகதி விடுதலை செய்யப்பட இருந்தபோதிலும் இறுதியாக 1999 ஜனவரி 17ம் திகதியே இவர் விடுதலை செய்யப்பட்டார்.

1996 ஜனவரி 6ம் திகதி உடப்பு ஆண்டிமுனை பகுதியில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொலிசார் 11 மீனவர்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்து, சித்திரவதை செய்து சுமார் இரண்டு வருடங்களாக மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்தனர். ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக பொலிசுக்கு "தகவல் கொடுக்கத் தவறிய" குற்றத்தை ஏற்றுக் கொண்டதன் பேரில் 5 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். எந்தவித குற்றத்தையும் இழைக்காத வேளை அவர்கள் குற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த போதிலும் இவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் அறிவுரையின் பேரில் இது இடம்பெற்றது.

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் தொடர்ச்சியான ஒடுக்குமுறையும் ஜனவரி 24ம் திகதி கந்தையா சிவகுமாரின் மரணம் சம்பந்தமாக கிராமத்தவர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அவருடைய மரணம் விபத்து அல்ல. ஏனைய மீனவர்கள் கடலுக்கு செல்வதை தடுப்பதற்காக அவருடைய படகு கடற்படையினால் திட்டமிட்டு மூழ்கடிக்கப்பட்டது. கடற்படை படகு, இரண்டு மீனவர்களை காப்பாற்ற முயற்சிக்காததும் அவர்களை தேடுவதற்கு பொலிசார் நடவடிக்கை எடுக்காததும் ஏழைகளின் உயிர் வாழ்க்கை சம்பந்தமாக, -குறிப்பாக தமிழ் மக்கள் சம்பந்தமாக அரசாங்கம் எவ்வாறு பாரபட்சம் காட்டுகின்றது என்பது தெளிவாகியுள்ளது.