World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Fisherman killed incollision with Sri Lankan naval boat

இலங்கை மீனவர் கிராமத்திலிருந்து ஒரு அறிக்கை- பகுதி-1

இலங்கை கடற்படைரோந்துப் படகு மோதி உடப்பு மீனவர்கொலை

By R. M. Dayaratna
14 March 2000

Use this version to print

ஜனவரி 24ம் திகதி கடற்படை ரோந்து படகுமோதியதால் ஒரு தமிழ் மீனவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலக சோசலிச வலைத்தள நிருபர்கள் மீனவ கிராமமான உடப்புக்குவிஜயம் செய்தனர். கிராமவாசிகள் இக்கொலைச் சம்பவத்தின் சூழ்நிலைகளைப் பற்றியும்வாழ்க்கை நிலைமைகள் பற்றியும் கலந்துரையாடினர். கிராமவாசிகள் பொலிஸ்- இராணுவ ஒடுக்குமுறைகள் காரணமாக தாம் எவ்வளவு மோசமான நிலைக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளது என்பதைவிளக்கினர்.

இலங்கை கடற்படைப்படகு மீன்பிடிப் படகுடன் மோதியதால்நான்கு பிள்ளைகளின் தந்தையான சிவகூத்தர்(54 வயது) கொல்லப்பட்டார். இந்தமரணம் பல மீனவக் கிராமங்கள் முகம்கொடுத்துள்ள பயங்கரமான நிலைமையைகாட்டிக் கொண்டுள்ளது. மீனவர்கள்கஷ்டமானதும் சில வேளைகளில் பெரிதும்ஆபத்தானதுமான நிலைமைகளின் கீழ் மீன்பிடிதொழிலில் ஈடுபடுவதன் மூலம் வாழ்க்கைநடாத்த வேண்டியுள்ளது. பிரிவினைவாததமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்டயுத்தத்தில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப்படையினரின் திட்டமிட்ட தொல்லைகளுக்கும்சங்கடங்களுக்கும் இவர்கள் முகம் கொடுக்கநேரிட்டுள்ளது. 39 வயதான செல்வராசாபடகின் சொந்தக்காரர். சிவகூத்தர்அவரின் உதவியாளர்.

கந்தையா சிவகூத்தர்கொல்லப்பட்ட சமயம் அவருடன் படகில்இருந்த அரிவீரன் செல்வராசா இத்தாக்குதலைப் பற்றி குறிப்பிட்டதாவது: "ஜனவரி 24ம் திகதிநானும் சிவகூத்தரும் ஆழ்கடல் மீன்பிடியில்ஈடுபட்டு இருந்தோம். இது உடப்புகிராமத்துக்கு சமீபமாக உள்ளது. திடீரெனஒரு பெரிய அதிவேக கடற்படைப் படகுஇருட்டில் எமது "பைபர் கிளாஸ்" மீன்பிடி படகுடன்மோதியது. இதனால் எமது படகு தவிடுபொடியானதோடு நாம் இருவரும்கடலில் தூக்கி வீசப்பட்டோம்.

"நானும்சிவகூத்தரும் நொருங்கிப் போன படகின்மிச்ச சொச்சங்களில் பிடித்துக் கொண்டுஉதவிக்காக குரல் கொடுத்தோம்.கடற்படை படையாட்கள் எம்மை ஒருசில நிமிடங்கள் நோட்டம் விட்டுவிட்டு அங்கிருந்துவெளியேறினர்." ஒரு மணித்தியாலம் நீச்சல்அடித்ததன் மூலம் செல்வராஜாவால்மற்றொரு படகை அண்மிக்க முடிந்தது.ஆனால் சிவகூத்தரால் நீந்த முடியாதுபோனதால் அவர் நீரில் மூழ்க நேரிட்டது.அவர் நான்கு குழந்தைகளின் தந்தை.அத்தோடு முழுக் குடும்பத்தின் வாழ்க்கையோட்டத்துக்கான வருமானத்தை உழைப்பவராகவும் விளங்கினார்.

ஜனவரி 25ம் திகதி செல்வராசாவேறு சில மீனவர்களுடன் சேர்ந்து இச்சம்பவம்பற்றி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்தார். ஆனால் பொலிசார் இதைக்கணக்கில் எடுக்காததோடு கடலில் காணாமல்போன மீனவரைத் தேடும் பணியிலும் ஈடுபடத்தவறினர். இதனால் இக்கிராமத்தைச்சேர்ந்த மீனவர்கள் சுமார் 40 மீன்பிடிப்படகுகளின் உதவியோடு சிவகூத்தரின் உடலைத்தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களின்பின்னர் அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுபொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.மரண விசாரணை இடம் பெற்ற போதிலும்மரணத்துக்கான காரணத்தை வெளிக்கொணரும் எந்தவிதமான உத்தியோகபூர்வதீர்ப்பும் வழங்கப்படவில்லை.

ஜனவரி26ம் திகதி உடப்பு கிராமத்துக்கு விஜயம் செய்தமூன்று கடற்படை அதிகாரிகள் இச்சம்பவம்பற்றி விசாரணை நடாத்த வந்ததாகக்கூறினர். அவர்கள் செல்வராசாவைகுறுக்கு விசாரணை செய்தனர். மறுநாள்வேறு இரண்டு கடற்படை அதிகாரிகள்செல்வராசாவை சந்தித்து, படகில் வெளிச்சம்இருந்ததா எனக் கேட்டனர். ஏனையமீனவர்களைப் போலவே செல்வராசாவும்சிவகூத்தரும் ஒரு மண்ணெண்ணை லாம்பைவைத்திருந்தனர். மீன்பிடி படகில் ஒழுங்குமுறையானவெளிச்சம் இல்லாததன் காரணமாகஏற்பட்ட ஒரு விபத்தாக இச்சம்பவத்தைசித்தரித்துக் காட்டும் நடவடிக்கையில்கடற்படையினர் ஈடுபட்டனர். கடற்படைப்படகு "கண்காணிப்பு" தேடுதல் நடவடிக்கையில்ஈடுபட்டிருந்ததால் அது வெளிச்சத்தைக்கொண்டிருக்கவில்லை எனக் கடற்படைதெரிவித்தது. ஆனால் உடப்புக் கிராமமீனவர்கள் இந்தக் கடற்படை படகின்மோதுதல் "நடவடிக்கை திட்டமிடப்பட்டதுஎனவும் மீனவரை கடலுக்குள் செல்லாமல்தடுக்கும் விதத்தில் இடம் பெற்ற தாக்குதல்எனவும் தெரிவித்தனர். கடற்படையினர்இது தவறானது எனவும் இதனை ஆய்வுசெய்வதாகவும் தெரிவித்தனர். கடற்படைஒரு படகையும் இயந்திரத்தையும் அத்தோடுசிவகூத்தர் குடும்பத்துக்கு நஷ்டஈடும்வழங்குவது குறித்து ஆலோசிப்பதாகவாக்குறுதி வழங்கினர். பிரதி மீன்பிடி அமைச்சர்ஸ்தலத்துக்கு விஜயம் செய்ததோடு ஒருதீர்வு வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தார்.எவ்வாறெனினும் இன்னமும் எதுவும் இடம்பெறவில்லை" என கிராம மக்கள் தெரிவித்தனர்."நாம் மீன்பிடிப் படகையிட்டு கவலைப்படவில்லை.இழந்துவிட்ட எஞ்சினைப் பற்றியும் கவலைப்படவில்லை.

ஏன் கடற்படையினர் உதவி கேட்டுவிடுக்கப்பட்ட கூக்குரலை கணக்கில் எடுக்கவில்லை? மீனவர்களைக் கண்டதும் அவர்கள் சும்மாவிலகிச் சென்றது ஏன்?"

வேறு சிலர் கூறியதாவது:"நாம் மீன் பிடிக்கச் செல்ல அஞ்சுகின்றோம்.கடற்படைப் படகுகள் தினமும் ரோந்துநடவடிக்கையில் ஈடுபடுகின்றன. நாம்ஒரு கடற்படைப் படகைக் கண்டால்எமது படகுகளை நிறுத்த வேண்டியுள்ளது.அவர்கள் எம்மை வயர்களால் அடிக்காமல்விட்டாலும் நாம் இதைச் செய்ய வேண்டியுள்ளது. ஒரு மீனவரான செல்வநாயகம் கூறியதாவது:"இந்தச் சம்பவத்தின் பின்னர் மக்கள் கிலியடைந்துள்ளனர். ஒரு தடவை அவர்கள் தமது சொந்தப்படகின் சத்தத்தைக் கேட்டதுதான்தாமதம் அவர்கள் மீன்பிடி வலைகளையும்கைவிட்டுவிட்டு கரைக்குத் திரும்பினர்".

இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான யுத்தத்தின்பெறுபேறாக வடக்கு- கிழக்கில் உள்ளமீனவர்கள் கடும் நிபந்தனைகளுக்கும்கட்டுப்பாடுகளுக்கும் முகம் கொடுக்கநேரிட்டது. விடுதலைப் புலிகள் நாட்டினுள்ஆயுதங்களை கடத்தி வருவதை தடைசெய்வதாகக் கூறி கடற்படையினர் வடக்கிலும்கிழக்கிலும் பாதுகாப்பு விதிகளை இறுக்கமாக்கியுள்ளனர். சில பகுதிகளில் மீன்பிடி அடியோடு தடைசெய்யப்பட்டுள்ளது அல்லது அரை குறையாகதடை செய்யப்பட்டுள்ளது. இதனால்ஏற்கனவே வறுமைக் கோட்டின் கீழ்வாழும் ஏழை மீனவர்களை அவஸ்த்தைநிலைமைக்குள் தள்ளியுள்ளது.