World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Record US trade deficit a symptom of deeper economic problems

அமெரிக்க வர்த்தக நிலுவையின் உயர்ந்த மட்டம் ஆழமான பொருளாதார பிரச்சனைக்கான அறிகுறியாகும்

By NickBeems
28 August 2000

Use thsi version to print

இம்மாத ஆரம்பத்தில் அமெரிக்க வர்த்தக திணைக்களம் அமெரிக்க வர்த்தக நிலுவை (Trade deficit) மாதத்திற்கான அதியுயர்நிலையை அடைந்துள்ளதாக அறிவித்தது. இது யூன் மாதத்தில் 30.62 பில்லியனை அடைந்தது.

இவ் அறிவிப்பானது பாரிய தொலைத்தொடர்பு சாதனங்களின் மிகச்சிறியளவு அல்லது எந்தவொரு கவனத்தையும் கவரவில்லை. இது கிளின்டனின் ஜனாதிபதிக் காலத்தின் எதிர்பார்த்திராத பொருளாதார வளர்ச்சி தொடர்பான கருத்துக்களாலும், ஒரு தொடர் வட்டி அதிகரிப்புக்களால் அலன் கிறீன்ஸ்பானின் தலைமையின் கீழ் அமெரிக்க நிதித்திணைக்களம் அமெரிக்க பொருளாதாரத்தை சுமுகமாக தரையிறக்கியுள்ளது என்ற நம்பிக்கைக்குரிய வலியுறுத்தல்களாலும் மூழ்கடிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இவ் அதியுயர் நிலுவையானது வழக்கமான பிரகாசமான காலகட்டத்தின் வெறுமனே கருமேகம் சூழ்ந்துள்ள நிலமையல்ல. இது ஒரு நீண்ட காலப்போக்கில் வெகுவிரைவாக அமெரிக்க பொருளாதாரத்தில் மட்டுமல்ல உலகப் பொருளதாரத்தின் மீதும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தகூடியதற்கான அறிகுறிகளாகும். சர்வதேச நிதி உட்பாய்ச்சலில் அமெரிக்க பொருளாதாரம் அதிகரித்தவகையில் தங்கியிருப்பதும், பங்குசந்தை பெறுமதிகளின் வீக்கமும், தனியாரினதும் நிறுவனங்களின் அதிகரித்துவரும் கடனுக்குள்ளாகும் நிலைமையுமான போக்குகள் அதிகரித்துவரும் அமெரிக்க பொருளாதாரம் பலமற்ற அடித்தளத்தில் இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.

அண்மைக்கால வர்த்தக புள்ளிவிபரங்கள் குறைந்தளவிலான பொது விமர்சனத்தை கொண்டிருப்பது திரைமறைவில் இது தொடர்பான கவனம் செலுத்தப்படுவதற்கான அறிகுறிகளும் உள்ளன. ஆகஸ்ட் 14ம் திகதி Wall Street Journal ''வர்த்தக இடைவெளியானது வளர்ச்சியை குறைக்குமா?'' என்ற தலையங்கத்துடனான கட்டுரையில் வர்த்தக நிலுவை ஆகக்கூடுதலாக அதிகரித்து, அமெரிக்க டொலரில் நம்பிக்கையிழந்து, நிதியை மீளப்பெற்று இவ்வளர்ச்சியை முடிவிற்கு கொண்டுவரும் புள்ளி எது என முதலீட்டாளர்கள் கருதுவது என்ற கேள்வியை முன்வைத்தது.

அது மேலும் இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் "தற்போதய நிதி நிலுவையானது வர்த்தக நிலுவையின் பரந்த அளவில் முதல்தடைவையாக மொத்த உள்ளூர் உற்பத்தியை விட 4%ஆல் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Merrill Lynch இன் மதிப்பீட்டுத் திட்டங்கள் "இவ் இடைவெளியானது வருடத்திற்கு 411 பில்லியன் டொலராகும் எனவும், 1999 இனை விட 24% அதிகமானதெனவும், மொத்த பொருளாதாரத்தை விட எதிர்பாராத அளவில் 4.2% ஆக உள்ளதாக" குறிப்பிட்டுள்ளது.

கூடுதலான மற்றைய நாடுகளில் இப்படியான வர்த்தக இடைவெளியானது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திவிடும். ஆனால் அமெரிக்கா ஒரு அபூர்வமான நிலையிலுள்ளது. ஏனெனில் டொலர் உலக நாணயமாக இருப்பதால் இவ் இடைவெளியை வெளிநாட்டு முதலீடுகளின் உட்பாய்ச்சலினால் நிதியுதவி செய்யக்கூடியதாக உள்ளது. அதாவது வர்த்தக இடைவெளியானது அதிகரிக்கும் போதும் வெளிநாட்டு நிதி அமெரிக்காவினுள் உட்பாய்வதும் டொலரை மற்றைய நாணயங்களுக்கு எதிராக மேலே உயர்த்தவும், மேலும் வெளிநாட்டு முதலீடுகள் பாரியளவு உள்ளிழுக்கவும் கூடியதாக உள்ளது. ஆனால் இப்போக்கானது காலவரையறையற்று நீடிக்கமுடியாததுடன் ஒரு குறிப்பிட்ட நிலைமையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது நாணயத்தை மீளப்பெற தீர்மானிப்பர்.

Wall Street Journal, டொச் வங்கி [Deutsche Bank] ஆய்வுத் தலைவரான Nobert Walters இன் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது. வங்கி வாடிக்கையாளருக்கு "அமெரிக்க வங்கிகள் மீதான நம்பிக்கை, உலகம் தனது கால்களில் உறுதியாக நிற்கமுன் திடீரென உடைந்து போகலாம். அமெரிக்காவினுள்ளான மூலதன உட்பாய்ச்சல் குறைந்துபோகும் என்பதும், டொலர் வீழ்ச்சியடையும் என்பதும் கேள்விக்குரிய விடயமல்ல. இது அமெரிக்க வட்டி விகிதத்தை வீழ்ச்சியடைய தூண்டுவதுடன் பங்குசந்தை நெருக்கடியையும் உருவாக்கும்" என எச்சரித்துள்ளார்.

இப்படியான நெருக்கடியின் தன்மை பின்வரும் வடிவங்களை எடுக்கலாம். சிலவேளைகளில் எதிர்பாராத வட்டி விகித அதிகரிப்பினால் சந்தையின் அறிந்து கொள்ளும் தன்மைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். இது டொலரிலிருந்து யூரோ அல்லது வேறு நாணயங்களுக்கு பாரிய முதலீட்டாளர்களை மாற்றச் செய்ய முடிவெடுக்கச் செய்யலாம். இது டொலரின் பெறுமதியில் வீழ்ச்சியை ஏற்படுத்துவதுடன், இப்பெறுமதி வீழ்ச்சியடைவதால் தமது சொத்துக்களை டொலரில் வைத்திருக்க விரும்பாது அமெரிக்க சந்தையிலிருந்து விரைவாக வெளியேறச் செய்யலாம். இதற்கு மாறாக அமெரிக்க நிதி திணைக்களம் வட்டி விகிதத்தை அதிகரிக்க முயலலாம். இது சாதாரண பங்குகளினதும், சொத்து சந்தைகளினதும் கூடிய வீழ்ச்சியை ஏற்படுத்தலாம். சந்தையில் உயர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் தனியாரும், நிறுவனங்களும் கடன் அடிப்படையில் கொள்முதல் செய்தவர்களை கடனாளிகளாக்கும் நெருக்கடியை தூண்டிவிடலாம்.

Wall Street Journal, இப்படியான நெருக்கடியான நிலைமை அண்மையில் சாத்தியமில்லை என கருதுகையிலும், வர்த்தகநிலுவை அதிகரிப்பு சாத்தியமாகும் தன்மையை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், கடந்த மாதம் அலன் கிறீன்ஸ்பான் வழங்கிய வாக்குமூலத்தையும் குறிப்பிட்டுள்ளது.

கிறீன்ஸ்பான் அமெரிக்க பிரதிநிதிகளின் அலுவலகத்தில் "சிலவேளைகளில் சிலவற்றை கொடுக்கவேண்டியுள்ளது. ஆனால் அது என்னவாக இருக்கப்போகின்றது என்பது தான் எமக்கு தெரியவில்லை. நீண்ட காலத்திற்கு அதை பாதுகாக்கமுடியுமா என எமக்கு தெரியவில்லை, இப்படியான சந்தர்ப்பங்களில் செய்யப்படும் மாற்றங்கள் சாதாரண தன்மையில் எந்தவொரு முக்கியத்துவமும் இருக்காது அல்லது அவை மிக திடீரென நிகழும்" என தெரிவித்துள்ளார்.

கிறீன்ஸ்பான் அமெரிக்க வர்த்தக பதட்டநிலை படிப்படியாக தீர்க்கப்படுமென நம்பிக்கையை கொண்டிருக்கையில் வேறுஆய்வுகள் பாரிய பின்னடைவு ஏற்படலாம் என எச்சரித்துள்ளன. James Levy Institute யூன் மாதம் பொருளியலாளரான Wynn Goldey இன் ஆய்வினை வெளியிட்டது. இது "புதிய பொருளாதாரம்" என அழைக்கப்பட்டது தொடர்ந்து முடிவற்று வளர்ச்சியடையும் என்ற கருத்தின் மேல் குளிர்நீரை ஊற்றுகின்றது. "கடனை குறைத்தல்" என்ற தலையங்கமிடப்பட்ட Goldey இன் ஆய்வுகளின் அடித்தளம் என்னவெனில் முன்னெதிர்பாராத தனியார், நிறுவனங்களின் மட்டங்களிலான கடன்களின் அளவு அமெரிக்கப் பொருளாதாரத்தின் செலவின் வளர்ச்சியை நிலையாக வைத்துள்ளது.

அவர் மேலும் பலவருடங்களாக வருமானம் செலவைவிட தொடர்ச்சியாக அதிகமாக இருந்தது எனவும், நிகர சேமிப்பு விகிதம் தேசிய வருமானத்தில் 3% ஆக இருந்தது. எவ்வாறிருந்தபோதும் இந்நிலைமை 1992 இன் பின்னர், வருமானத்திலும் பார்க்க செலவு அதிகரிக்க ஆரம்பித்து அண்மைக் காலங்களில் பாரிய மாற்றத்திற்குள்ளாகியுள்ளது. நிகர சேமிப்பு 1997 இல் 0 ஐ அடைந்துள்ளதுடன், முன்னொருபோதும் இல்லாதவாறு இது மேலும் மேலும் எதிர்மறையான பகுதிக்குள் செல்கின்றது. என Goldey எழுதுகின்றார். இவ்வருடத்தின் முன் கால்வாசிப் பகுதியில் நிகர சேமிப்பு வருமானத்தில் 7.0% இனை அடைந்துள்ளதுடன் இது வழமையான அளவை விட 9-10% குறைவானதாகும். இத் தனியார் பற்றாக்குறை எதிர்காலத்தினை முற்கூட்டி தெரிவித்தாலும் அமெரிக்காவிற்கு மட்டுமாவது உறுதியாக இது முன்னொருபோதும் நிகழ்ந்திராத, எல்லாவற்றிலும் பார்க்க முற்றிலும் வித்தியாசமானதாகும்.

மூலதன இலாபத்தினால் தனியார் செலவு அதிகரிக்கலாம் என்ற பொது அபிப்பிராயம் இருக்கையில் நிதித் திணைக்களம் மேலதிக செலவினங்களை சமாளிப்பதற்கான ஊற்று மேலதிக கடன் வாங்கலினூடாகவே செய்துள்ளதை Goldey எடுத்துக்காட்டுகின்றார். இப்படியான கடன்வாங்குதல் சொத்துக்களை விக்காமல் மூலதன இலாபத்தை அனுபவிப்பதுடன் இதனால் மூலதன இலாபம் வரிவிதிப்புக்கு உள்ளாகின்றது.

1991இல் தனியாருக்கான நிதி தவிர்ந்த கடன்களின் நிகர அளவு குறிப்பிடத்தக்க அளவாக இருக்கவில்லை. இது 1999இல் ஒரு ரில்லியன் டொலரை விட அதிகரித்ததுடன் இதேவேளை கடன்வாங்குதல் 15% மான வருமானத்தை செலவு செய்யும் அளவிற்கு அதிகரித்தது.

Goldey மேலும் "இவ் உயர் அளவான கடன் தற்போது ஒரு அபயமான நிலைக்கு வந்துள்ளது என முடிவு எடுப்பது சரியானது போல் தோன்றுகின்றது எனவும், சொத்துக்களின் விலைகளில் பாரிய வீழ்ச்சியோ அல்லது வட்டி வீதத்தில் முக்கியமான மேலும் வீழ்ச்சியோ பலவீனமான நிலைமையை எடுத்துக்காட்டுவதுடன் இது கீழ்நோக்கி செல்லும் பலவந்தமான விற்பனையை செய்வதை உருவாக்கி விடும்" எனக்குறிப்பிட்டார்.

அவர் அரசாங்க பேச்சாளர்களின் நிதித்திட்டங்கள் தொடர்பாக குறிப்பிடுகையில் அவை அதிகரித்துவரும் பொருளாதார வளர்ச்சியிலும், உயரளவிலான செலவிலும் தங்கியிருப்பதை எடுத்துக்காட்டி "தனியார் சேமிப்பு பாதகமான பிரதேசத்திற்குள் அதிகரித்துவரும் வகையில் வீழ்ச்சியடைவதை" இயற்கையாகவே நிறுத்த முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாக கூறுகின்றார்.
மறுபக்கத்தில் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துவரும் செலவில் கூடுதலாக தங்கியிருப்பது நிகர சேமிப்பு சாதாரணமான அளவு எனக்கருதப்படும் மட்டத்திற்கு திரும்பாவிடில் "இதன் விளைவு அபாயகரமானதாக இருக்கும்".

Goldey " வருமானதுடன் ஒப்பிடுகையில் தனியார் செலவீனம் 5-10% வீழ்ச்சியடைந்தால் இன்னும் சிலவருடங்களுக்கு எந்தவித வளர்ச்சியும் இருக்கப்போவதில்லை எனவும், இப் பின்நோக்கிய தன்மை விரைவாக நிகழுமானால் மிகுதி உலகம் முழுவதற்கும் பாரதூரமான விளைவுகளை கொண்ட பாரிய மந்த நிலை ஒன்று உருவாகும். வரவுசெலவுத் திட்டத்தின் மேலதிக நிதி இல்லாதுபோவதுடன் ஒரு மந்தநிலை அல்லது நீடித்த தேக்கநிலை பங்குச்சந்தைகளின் பாரிய வீழ்ச்சியையும் இது நிலைமைகளை முடிவற்ற அளவிற்கு மோசமடைய செய்யும்" என எழுதியுள்ளார்.
அமெரிக்கப் பொருளாதாரம் அதிகரித்துவரும் வகையில் கடன்களில் மட்டுமல்லாது தனது நிதிவளர்ச்சிக்கு மிகக்கூடிய அளவில் சர்வதேச முதலீடுகளிலும் தங்கியுள்ளது.

அதிகரித்துவரும் பங்குசந்தைகளின் பெறுமதியாலும், ஒரு பலமான டொலர் முதலீட்டினாலும் ஈர்க்கப்பட்டு அமெரிக்காவினுள் மூலதனம் ஊற்றெடுக்கையிலும் சென்மதிநிலுவையின் (Balance of payments) இடைவெளி அதிகரித்துவருகின்றது. உட்பாயும் மூலதனம் பங்குச்சந்தையை பெருக்கசெய்வதுடன், செலவினை அதிகரிப்பதுடன் டொலரினை வளர்ச்சியடையவும் பலமடையவும் செய்வதன் மூலம் மேலும் அந்நிய மூலதனத்தின் உட்பாய்ச்சலுக்கு வழிவகுக்கின்றது. ஆனால் இப்படியான புகழ்ச்சியான வட்டம் வெகுவிரைவில் ஒரு விசச்சுழலாக மாற்றமடையலாம். இது Wall Street Journal இன் ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டது போன்ற சீரழிவான நிலைமைகளை உருவாக்க வழிவகுக்கலாம்.

அமெரிக்கா சர்வதேச நிதிவளங்களில் தங்கியிருப்பதை கடந்த டிசம்பரில் மத்திய நிதிச்சந்தைகளுக்கு Jane D' Arista தயாரித்த "சர்வதேச மூலதனப் பாய்ச்சலும் அமெரிக்க மூலதனக் கணக்கீடும்" என்ற அறிக்கையில் வரைபட ரீதியாக எடுத்துக்காட்டியுள்ளார். அவரின் ஆய்வுகளின்படி சர்வதேச நிதிகளின் உட்பாய்ச்சல் "அமெரிக்காவின் செழிப்புக்கான முக்கிய ஆதரவாகியுள்ளது".

அவர் மேலும் "உண்மையாகவும் உறுதியாகவும் மூலதன உட்பாய்ச்சல் மிகப்பாரிய அளவாக உள்ளது. உலகத்தின் ஏனைய பகுதிக்கான அமெரிக்காவின் நிகர கடன் பாரியளவில் வளர்ச்சியடைந்திருப்பதுடன் வெளிநாடுகளிலுள்ள அமெரிக்க நிதிச்சொத்துக்களினது வட்டிகளும் ஏனைய செலுத்துமதிகளும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துக்களின் வருமானத்தைவிட தாண்டிசென்றுள்ளது [1998 இன் முடிவில்12 பில்லியன் டொலர்]" எனக்குறிப்பிட்டுள்ளார்.

இவ்வறிக்கை 1987 பங்குச் சந்தையின் உடைவுகளின்போது அமெரிக்காவின் சர்வதே நிதி நிலைமையானது முதலாம் உலக யுத்தத்திற்கு பின்னர் இருந்ததுபோல் சாதகமாக இருந்தது எனவும் ஆனால் அதன் பின்னர் ஒரு பாரிய பின்னடைவிற்குச் சென்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

"1989 களில் அமெரிக்கா ஒரு நிகர கடனாளி நாடாக மாறியதுடன் அதனது வெளிநாட்டுக் கடன்கள் 1990 களில் பாரியளவு வளர்சியடைந்தது. 1996 முடிவில் அதன் கடன்கள் 548 பில்லியன் டொலர் அதியுயர் நிலைமையை அடைந்தது. [சந்தை பெறுமதிகளின் சொத்துக்களுடன் சேர்த்து] ஒரு வருடத்தின் பின்னர் இது ஒரு ரில்லியன் டொலரை தாண்டியதுடன் இது மொத்த உள்ளூர் உற்பத்தியின் 13% ஆகும். 1998 இன் முடிவில் இது 1.5 ரில்லியன் டொலராக அதிகரித்தது. அடுத்த 24 மாதங்களில் இது 3 மடங்கானதுடன் மொத்த உள்ளூர் உற்பத்தியின் 18% ற்கு சமனானது" என இவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

இவ் ஆய்வுகளின்படி அமெரிக்க பொருளாதாரம் வெளி, உள்ளூர் தாக்கங்களால் பாதிப்படையக் கூடியதாக இருப்பதுடன் இது டொலர் மீதான நம்பிக்கையையும் இழக்கச்செய்யும். "நம்பிக்கை இழக்கப்படுமானால் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அமெரிக்க நிதிச்சொத்துக்களின் விற்பனையால் உள்ளூர் வட்டி வீதத்தில் மேல் நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன் டொலர் பரிமாற்று வீதத்தின் மட்டத்தினை வீழ்ச்சியடைய செய்வதுடன் 1980 களின் போன்ற நிலைமைகளில் ஏற்பட்ட பாரிய மந்தநிலை மீண்டும் நிகழ தூண்டப்படலாம்" என இவ் ஆய்வு தெரிவிக்கின்றது.

அமெரிக்கப் பொருளாதாரத்தின் அதிகரித்துவரும் ஸ்திரமற்ற தன்மையானது அதிகரித்துவரும் கடனாலும், வெளிநாட்டு மூலதனம் உட்பாய்வதிலும் கூடியளவில் தங்கியிருப்பதன் விளைவை கிளின்டனின் நிர்வாகத்தினை அதற்கு முந்திய நிர்வாகத்துடன் ஒப்பிடும்போது காணக்கூடியதாக உள்ளது.

பிரித்தானிய பத்திரிகையான New Left Review இன் மே - ஜூன் இதழில், Robert Pollin எழுதிய கட்டுரையில் "உண்மையில் கிளின்டனின் காலத்தில் அடைந்த பொருளாதார பலன்கள் அனைத்தும் வழமைக்கு மாறான பங்குச் சந்தைகளின் நடவடிக்கைகளுடன் இணைந்துள்ளதுடன், இது ஒரேநேரத்தில் விரைவாக உடைந்துவிடக்கூடிய நிதியியல் கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

1993-1999 க்கும் இடையிலான மொத்த உள்ளூர் உற்பத்தி வருடாந்தம் சராசரி 3.7% ஆக இருந்தது. இது நிக்சன் - போர்ட், ரேகன் - புஷ் காலகட்டங்களில் 2.7, 2.9 % ஆகவும், காட்டர் நிர்வாகத்தினது அதிகூடிய அளவான 3.4% இலும் விட சிறிதளவு அதிகமாக இருப்பதுடன் கெனடி - ஜோன்சன் இனது நிர்வாகத்தின் போது அடைந்த 4.8% இலும் விட குறைவாக உள்ளது.
இதேமாதிரியான போக்கினை உற்பத்தியின் வளர்ச்சியுடனும் காணக்கூடியதாக உள்ளது. 1993-1999 வரை சராரியாக 1.8% ஆக இருந்த உற்பத்தியின் வளர்ச்சி கெனடி - ஜோன்சன் காலகட்டத்தினது 3.4% இனை விட மிகவும் குறைவாக உள்ளதுடன், றேகன் - புஷ் நிர்வாகத்தின் 1.7% ஐ விட சிறிது கூடிய அளவாக உள்ளது.

ஆனால் பங்குச் சந்தைகளினதும் அதிகரித்துவரும் கடன்களினதும் புள்ளிவிபரங்கள் கிளின்டன் நிர்வாகம் மற்றைய எல்லோரையும் தோற்கடித்து விட்டது. 1993-1999 வரை S&P 500 இன் புள்ளி வருடாந்தம் சராசரி 17.6% ஆக உண்மையான அளவில் அதிகரித்துள்ளது. இது றேகன் - புஷ் காலகட்டத்தில் அதிகரித்த வீதத்துடன் பார்க்கையில் 2.5 மடங்கால் அதிகமானது. இதேவேளையில் றேகன்- புஷ் காலகட்டத்தில் 77.8% இனை அடைந்த மொத்த சனத்தொகையினதும் செலவு செய்யக்கூடிய வருமானத்தின் இயலுமான விகிதம் [இது முன்னைய காலகட்டங்களை விட முன்னொருபோதும் எதிர்பாராத மட்டமாக இருந்தது] கிளின்டன் கீழ் 94.2% ஆக அதிகரித்தது.

கிளின்டன் தனது பொருளாதார சாதனையாக பொருளாதார வளர்ச்சியின் முன்னைய காலகட்டங்களில் அடைந்த சம்பள உயர்வுடன் ஒப்பிடுகையில் தனது நிர்வாகத்தில் இது குறைவாகவே அதிகரித்தது எனக்குறிப்பிடுகின்றார். இது தொடர்பாக Robert Pollin, 1999 முடிவில் Business Week பத்திரிகை மேற்கொண்ட ஆய்வின் புள்ளிவிபரங்களை எடுத்துக்காட்டுகின்றார். அதில் 51 வீதமான அமெரிக்க தொழிலாளர்கள் "தமது முதலாளிகளால் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறுகையில்", "உற்பத்தி அதிகரிப்பு" எனக்கூறப்படுவது தொடர்பாக அவர்களின் கருத்தைக் கேட்டபோது 63 வீதமானோர் தமது சம்பளத்தை இது அதிகரிக்கவில்லை எனவும், 62 வீதமானோர் தமது வேலைக்கான பாதுகாப்பை இது அதிகரிக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

கடந்த வர்த்தக புள்ளி விபரங்கள் தொடர்பாகவும் அதனது தாக்கங்கள் தொடர்பாகவும் பரந்த பூரணமான அமைதியானது, எதிர்வரும் இரண்டு மாதங்களில் ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கையில் அமெரிக்க பொருளாதாரத்தின் உண்மையான நிலைமை தொடர்பாக விவாதத்தையோ ஆய்வையோ அவர்கள் செய்ய விரும்பாததாலாகும். ஏனெனில் இப்படியான ஆய்வு காலம்கடக்காது வெகுவிரைவில் உருவாகும் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் போக்குகளை தெளிவாக எடுத்துக்காட்டும் என்பதாலாகும்.