World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள் :ஐரோப்பா : ஜேர்மனி

Socialist Equality Party of Germany holds memorial meeting to honour Ernst Schwarz

"Ernst Schwarz was never satisfied with the world as it was"

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி ஏர்ன்ஸ்ட் சுவாட்ஸ் இன் ஞாபகார்த்தக் கூட்டத்தை நடாத்தியது.

''ஏர்ன்ஸ்ட் சுவாட்ஸ், இவ் வகையான இந்த உலகத்துடன் ஒருபோதும் திருப்திப்பட்டுக் கொள்ளவில்லை''

By our reporter
20 March 2001

Use this version to print

வாழ்க்கையின் மலரும் பருவத்தில் தூக்கி எறியப்பட்ட ஒரு மனிதனின் இறப்பைப் பற்றி பேசுவது ஒரு இலகுவான காரியமில்லை. ஏர்ன்ஸ்டின் சந்தோசம் வேறு ஒரு உலகத்தில் குடியிருக்கும் என்பதை எம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அதைத் தாங்கிக் கொள்ளவும் விரும்பவில்லை. ஏண்ஸ்ட் வேறு உலகத்தில் வாழ்க்கையை அமைக்கலாம் என்பதை ஒரு போதும் நம்பவில்லை. அவர் எங்களுடைய கட்சியில் ஏன் இணைந்து கொண்டார் என்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாகும்.

ஏர்ன்ஸ்டின் நினைவுகளை மீளவும் நினைவுறுத்துவதினூடுதான் நாம் அவரை எங்களுடன் இருத்திக் கொள்ளமுடியும். நாம் அவரை ஒரு அடையாள சின்னமாகவோ , ஒரு உத்தம மனிதப் பிறவியாகவோ மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. இவை உண்மையான ஏர்ன்ஸ்டை மறந்து போவதற்கான வேறு வழிகளாகும். நாம் ஏர்ன்ஸ்ட்டை, அவருடைய இயல்பான வழியில் நினைவு கூர விரும்புகிறோம் - முழுமையான வாழ்க்கை, முழுமையான முரண்பாடுகள், உணர்ச்சி வேகம், மற்றும் அதி சிரத்தையான தன்மை, போர்க்குணம், மேலும் சில சமயங்களில் பிடிவாதம். - நாம் எவ்வாறு ஏர்ன்ஸ்டின் வாழ்க்கையை, அவருடைய குணாம்சங்களைப் பற்றி விளங்கிக் கொள்வது?

கார்ல் மார்க்ஸ் ஒரு முறை எழுதினார் : ''மனிதன் என்பவனின் சாராம்சம் என்பது ஒரு தனி நபருக்குரிய தன்மையை மட்டும் உள்ளடக்கியிருக்கவில்லை. அதனுடைய உண்மையான தன்மை சமூக உறவுகளின் ஒட்டு மொத்தமான உள்ளடக்கமாகும்''. இதன் அர்த்தம், அவனால் கட்டுப்பட முடியாத இவ்வாறான சமூக உறவுகளின் ஒரு வெறும் பிரதிபலிப்புத்தான், என அவர் கூறவில்லை. அவர் எல்லாம் அவற்றின் தலை விதிப்படி நிகழும் எனவே தனி மனிதன் ஒரு பங்கும் வகிக்கமுடியாது என அவர் நிராகரிக்கவில்லை.

மனிதனுடைய தன்மைகளை அவன் வாழ்ந்து வரும் சூழலிலும், சமூக மற்றும் வரலாற்று போக்குகளின் நிலமைகளிலும் இருந்து மட்டுமே ஒருவர் விளங்கிக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் மிகவும் சிக்கலான சமூக பிரச்சனைகளை, அவன் அல்லது அவள் சார்ந்த காலத்தின் விசேஷமான பிளவுகளையும், விசேஷமான இணைப்புகளையும் வெளிக்காட்டுகிறான். எனினும் இவை அமைதியான வழிகளில் மட்டும் நடந்தேறுவதில்லை. ஒரு நீண்ட காலப் போக்கில் இத் தனி மனித குணாம்சம், பிரச்சனைகளை வெளிக் காட்டுவதிலும் மற்றும் இவற்றை கையாளுவதிலும் எதைத் தெரிவு செய்கிறது, இவற்றில் ஒன்றை இது வழி நடத்துகின்றது அல்லது அவற்றில் ஒன்றுக்கு இது அடிபணிந்து விடுகிறது. எனவே ஏர்ன்ஸ்டின் வாழ்க்கையையும் அவருடைய போராட்டத்தையும் ஒருவர் இந்த சமூக கட்டமைப்பு, மற்றும் அதற்கான காலத்திற்குள் வைத்துப் பார்ப்பதினூடுதான் அவரைப் புரிந்து கொள்ளமுடியும்.

ஏர்ன்ஸ்ட் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த ஜேர்மன் தொழிலாளி, அதேசமயம் அத்தனிசிறப்பு அற்ற ஒருவராகவும் அவர் இருந்தார். அவர் தானும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதி என்பதை உணர்ந்தார். அவர் அதற்குள் வாழ்ந்து அவற்றை அனுபவித்தார். அவர் அவற்றின் வெற்றிகளையிட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தார், அவற்றின் தோல்விகளை அடிக்கடி தனிப்பட்ட ரீதியில், மிகக் கூடுதலான தனிப்பட்ட ரீதியிலும் கூட எடுத்துக் கொள்வார். ஆனால் அவர் ஒரு போராளி. அவர் இவ்வாறான இந்த உலகத்துடன் ஒருபோதும் திருப்திப்பட்டுக் கொள்ளவில்லை.

அவர் வேறு ஒரு உலகத்தை, அதாவது நல்லதொரு உலகத்தை விரும்பினார்.

1970 களில் எனக்கு ஏர்ன்ஸ்டைப் பற்றி நல்ல நினைவிருக்கிறது. அவர் 1974 ல் கட்சியில் சேர்ந்தார், அதேகாலப் பகுதியில்தான் நானும் இதில் இணைந்து கொண்டேன். நாம் எவ்வாறாயினும், மிகவும் வித்தியாசமான போக்குகளைக் கொண்டிருந்தோம். நான் கட்சியை எனது சிந்தனையால் அணுகினேன், அதன் அடிப்படையான தத்துவார்த்த, வேலைத்திட்ட முன்னோக்குகளை கட்சிக்குள் அங்கத்தவனாக சேருவதற்கு முன்பே மிகவும் கவனமாக படித்திருந்தேன். ஏர்ன்ஸ்ட் கட்சிக்குள் தனது இதயத்துடன் வந்தார். இருப்பினும் இது எவ்வகையிலும், நாம் நெருக்கமாக இணைந்து வேலை செய்வதற்கும், வர்க்கப் போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னெடுக்கப்பட்ட காரசாரமான பல விவாதங்களில் ஆர்வத்துடன் கலந்துகொள்வதற்கும் அவை தடையாக இருக்கவில்லை. நாம் ஒரே குறிக்கோளுக்காகவே போராடினோம்: ட்ரொட்ஸ்கிசத்துக்காக, ஒரு சோசலிச சமுதாயத்துக்காக.

ஏர்ன்ஸ்ட் அப்பிராந்தியத்தில் உள்ள Hatting Henrichshütte எனும் ஒரு பெரிய உருக்குத் தொழிற்சாலையில் தொழிற் கல்வி பயின்றார். அந் நேரத்தில் தொழிலாளர்கள், விசேடமாக அவர்களில் உருக்குத் தொழிலாளர்கள் தாம் கொண்டுள்ள தன்நம்பிக்கையில் அபாரமான மகிழ்சி அடைந்திருந்தனர். 1972 ல் கத்தோலிக்க ஜனநாயகக் கட்சியின் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, சமூக ஜனநாயகக் கட்சி (SPD) அதனது தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை, 1949இல் ஜேர்மன் சுயாட்சி குடியரசு உருவாக்கப்பட்டதன் பின்னால் முதல் தரமாக பெற்றுக் கொண்டது. உருக்குத் தொழிலாளர்கள் ஒரு பொது வேலை நிறுத்தத்தின் மூலம் அச்சுறுத்தினர். இதன் மூலம் அவர்கள் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதை இறுதியாக கண்டு கொண்டனர். விலி பிராண்ட் (Willy Brandt) -அவர்களுடைய அதிபர் - இதற்காக அவர்கள் அவருக்கு விசேட மரியாதை கொடுக்கவில்லை.

அவர்களுக்கு அவருடைய பலவீனங்கள் பற்றித் தெரிந்திருந்தன. அவர்கள் Brandt ஜ தமது நோக்கத்துக்காக, தொழிலாளர்களை இரட்சிப்பதற்காக ஒரு அதிபராக மதித்தாரகள். இது முன்னொரு காலத்தில் மன்னரால் இரட்சிக்கப்பட்ட ஒரு அதிபரைப் போன்றது. அவர்கள் தமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதற்காக இவரை பதவிக்கு கொண்டு வந்தார்கள்.

நாம் அனைவரும் இந்த தன்னம்பிக்கையின் போக்கை பகிர்ந்து கொள்கிறோம். 1974 ல், ஒரு குளிர் காலத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஒரு வேலை நிறுத்தத்தின் ஆரம்பத்தில் இரண்டு இலக்க சம்பள உயர்வு ஒன்றை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள், நாம் இதையிட்டு பெருமைப் பட்டோம். இவ் வகையான போராட்டம் நேரடியாக ஒரு சோசலிச புரட்சிக்கு இட்டு செல்லும், இதற்காக சில காலங்கள் எடுக்கலாம், எனினும் அவை ஓரிரு சகாப்தங்களாகத்தான் இருக்கும் என நாம் நம்பினோம்.

நாம் தொழிலாள வர்க்கத்தை சமூக ஜனநாயகம், தொழிற் சங்கம், ஸ்ராலினிசம் போன்ற அதிகாரத்துவ இயந்திரங்களிலிருந்து விடுவிப்பதற்காக மிகவும் மூர்க்கமாக போராடினோம். அந் நேரத்தில் ஏர்ன்ஸ்ட், ஏனைய கட்சி அங்கத்தவர்களுடன் எஸன் நகரில் (Essen) உள்ள ஜேர்மன் உருக்கு தொழிற் சங்கத்தின்(IG Metall) இளைஞர் கூட்டங்களில் ஒவ்வொரு முறையும் பங்கு பற்றி, அங்கு ரொட்டிக்கும், வெண்ணெய்க் கட்டிக்கும் சம்பந்தமான விவாதமல்லாது, உலகப் பொருளாதார நெருக்கடியும் அதற்கான புரட்சிகரமான விளைவுகள் போன்றவற்றையும் விவாதித்தனர். இவை இறுதியில், அதிகாரத்துவத்தின் எரிச்சலுக்கு ஆளாகியதுடன் அவரும், ஏனைய கட்சி அங்கத்தவர்களும் தொழிற்சங்க கூட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன் இக் கலந்துரையாடலும் தடை செய்யப்பட்டன.

வேறு முக்கியமான ஒரு நடவடிக்கை அவ்வருடத்தில் நடைபெற்றது, சிலி நாட்டு ஸ்ராலினிஸ்டுகளின் காட்டிக் கொடுப்புக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. பினோசேயின் (Pinochet) இராணுவச் சதியும், தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் எதிரான மோசமான துன்புறுத்தல்களையிட்டு நாம் மிகவும் ஆத்திரமடைந்தோம். சிலி தொழிலாள வர்க்கத்தின் தோல்வி ஸ்ராலினிச கம்யூனிசக் கட்சியில் தங்கியிருந்தது. அது ''அமைதியான வழியில் சோசலிசம்'' என்பதினூடு போர்க்குணமிக்க தொழிலாளர்களை நிராயுதபாணியாக்கி, ''இராணுவ உடை தரித்த மக்கள்'' என்பதின் கீழ் அங்கே இராணுவத்தின் நடவடிக்கையை வலுப்படுத்தியது.

DKP (ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி) யின் பொதுக் கூட்டத்தில், நாம் ஜேர்மன் தொழிலாள வர்க்கம் இதன் அரசியல் பாடங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் எனும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து அவர்களை எச்சரிக்கை செய்தோம். ஏர்ன்ஸ்ட் இதில் எப்பொழுதும் ஈடுபடுவார். சில சமயம் நாம் இவற்றிற்காக ஸ்ராலினிசவாதிகளின் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளானோம்.

1975 மே 1 திகதி, நாம் ஓர் நிகழ்வில் இருப்பது, இது பின்னர் படமாக்கப்பட்டு Der Funke எனும் எமது பத்திரிகையில் அந்நேரத்தில் வெளியிடப்பட்டது, இது பல தோழர்களுக்கு ஞாபகமிருக்கலாம். மே தின ஊர்வலம் எப்போதும் தொழிற் சங்கத்தால் ஒழுங்கு படுத்தப்படும், இதில் சாதாரண தொழிலாளர்கள் ஒரு பத்து, ஆயிரக்கணக்கில் என ஈர்க்கப்படுகிறார்கள். எனவே இதை நாம் எமது அரசியலை முன்னெடுப்பதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக பாவிக்க வேண்டும் என எப்போதும் கருதிக்கொண்டோம்.

ஊர்வலம் நடைபெற்ற அன்றிரவே மிகவும் ஒரு கடுமையான வேட்டை ஆரம்பமாகிவிடும். மூன்று தோழர்கள் - ஒருவர் பசை வாளியுடனும், மற்றவர் சுவரொட்டிகளுடனும், அடுத்தவர் ஒரு அகலமான பிரஷ் உடனுமாக அந்த ஊர்வலம் நடைபெறும் இடத்திலுள்ள சுவர்களிலும், மதில்களிலும் மற்றும் மின்சாரப் பெட்டிகளிலும் எமது சுலோகங்களை ஒட்டுவர். காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசாரின் வாகனம் சுவரொட்டிகளை ஒட்டுபவர்களை தேடி சுற்றித்திரியும். இது எவ்வகையிலும் பொலிசாருக்கு ஒரு சிரமமாக இருக்கவில்லை. ஏனெனில் அது ஒரு இரவு பத்து மணியாகையால், Essen நகரத்தில் எவருமே நடமாட்டமில்லாமல் இருந்தனர். அனேகமான மாவோவாதிகள், அனார்க்கிஸ்டுகள் போன்ற குழுக்கள் இவ்வாறான சுவரொட்டிகளை ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். அக் குழுவினர் தம்முடைய சுவரொட்டிகளை எமது சுவரொட்டிகளுக்கு அருகே தன்னும் ஒட்டும் பழக்கம் ஒருபோதும் அவர்களுக்கு கிடையாது, அதற்கு மாறாக எம்முடைய போஸ்டர்களுக்கு மேல்தான் அவற்றை ஒட்டுவார்கள். இச் சச்சரவுகளில் ஏர்ன்ஸ்ட் எப்போதும் தலையிடுவார்.

மேதின ஊர்வலங்களில் தொழிற்சங்க அதிகாரத்துவம் எந்தவொரு விமர்சன ரீதியான கருத்துக்களை அடக்கியும், சுலோகங்களை தடை செய்தும் அவற்றின் அரசியலை வெளிவராமல் செய்தது. நாம் எவ்வகையிலும் இந்த தொழிற் சங்க ஜனநாயகத்துக்கு வற்புறுத்தப் படுவதை அனுமதிக்கவில்லை. நாம் தொழிற் சங்கத்தின் நிர்வாகத்தையும், அதனுடைய சமூக கூட்டுறவு நடவடிக்கையையும் விமர்சித்ததுடன், ஒரு சோசலிசத்துக்கான பாதையை வலியுறுத்தி எமது பாதாகையை உயர்த்தினோம்.

Essen ல் தொழிற்சங்க அதிகாரத்துவம் எப்போதும் DKP யின் அங்கத்தவர்களையே ஊர்வலங்களில் கண்காணித்தல் பதவிக்கு அமர்த்திக் கொள்ளும். DKP ஒரு ஸ்ராலினிச இயக்கம், இது ஜேர்மன் ஜனநாயக குடியரசிடமிருந்து (DDR) மில்லியன் கணக்கான பணத்தைப் பெற்றுக் கொள்கிறது. இதன் தலைமை Eeesn ல் தான் உள்ளது. தொழிற் சங்கத்திற்குள் உள்ள DKP யின் அங்கத்தவர்கள் சமூக ஜனநாயகத்தின் நபர்களாலேயே அச்சுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் இவர்களை ஒரு உயர்வான பதவியில் இருப்பதற்கு ஒரு போதும் அனுமதிக்கவில்லை. எனினும் இது அவர்களை எவ்வகையிலும், அதிகாரத்துவத்தின் காவல் நாய்களாக சேவை செய்வதையோ, அவர்களுடைய இடதுசாரி எதிப்பாளர்களை மூர்க்கமாக துன்புறுத்துவதையோ தடை செய்யவில்லை.

நாங்கள் மே 1, ல் ஊர்வலம் முடிவடைந்த அந்த Frohnhauser market எனும் திடலை அடைந்ததும், உடனேயே DKP யினரின் ஒரு கண்காணிப்பு குழுவால் சூழப்பட்டோம். அவர்கள் எம்மை ஊர்வலத்தில் இருந்து பிரிந்து போகும்படி பிடித்து தள்ளினர். ஊர்வலத்தில் அவர்கள் எம்முடைய சுலோக அட்டைகளை பலவந்தமாக பறித்து அவற்றை கிழித்தெறிய முற்பட்டனர். ஏர்ன்ஸ்ட் இந் நடவடிக்கைக்கு இடம் கொடுக்கவில்லை, மற்றும் அவர் ஒரு தாக்குதலையும் செய்யவில்லை, அவர் இவ்வாறான ஒரு கைகலப்பை அங்கே விரும்பவில்லை. DKP யின் மூன்று கண்காணிப்பாளர்களும் ஏர்ன்ஸ்ட்டை பிடித்து இழுக்கையிலும், அவர் சுலோக அட்டையை மிகவும் இறுக்கமாக உயர்த்தி பிடித்தார். சுலோகத்தை அவர்களிடம் கையளிப்பது ஸ்ராலினிசத்துக்கு அரசியல் விட்டுக் கொடுப்பு என ஏர்ன்ஸ்ட் கருதினார். இறுதியில் அவர் வெற்றி பெற்றார். சுலோகத்தின் தடி மட்டுமே அவர் கையில் இருந்தது. கண்காணிப்பாளர்கள் சுலோக அட்டைகளை கிழித்தெறிந்தனர்.

வேறு ஒரு நடவடிக்கையில், அதாவது இளைஞர்கள் சோசலிஸ்ட் அமைப்பை தோற்றுவிக்கும் போது ஏர்ன்ஸ்ட் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தை அந் நேரத்தில் வகித்தார். ஏர்ன்ஸ்ட் அதின் தேசிய கமிட்டிக்காக தெரிவு செய்யப்பட்டதுடன், பலவிதமான அமைப்பு வேலைகளுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டார் என நான் கருதுகிறேன். நாம் இவ் வேலையை அதிகாரத்துவத்துக்கு எதிரான தாக்குதலாகவும், மற்றும் இது எமது நடவடிக்கைகளில் ஒன்றெனவும் கருதிக் கொண்டோம். அதிகாரத்துவம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்துகையிலும், அவர்கள் எவ்வகையிலும் இளைஞர்களிடமிருந்து செல்வாக்கை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

இளம் சோசலிஸ்டுகளின் வேலை அதிகமாக நாளாந்த நடவடிக்கைகளில் இறங்குதல் என்பவற்றில் ஆழமான செல்வாக்கைப் பெற்றிருந்தது. எனினும் இத்துடன் அது தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. தொடர்ச்சியான அரசியல் மற்றும் தத்துவார்த்த வகுப்புகளினூடு நாம் அவர்களை ஊக்கப்படுத்தினோம், அதன் தாக்கம் அவற்றில் ஆழமாக பதிந்திருந்தது. இவற்றின் ஒரு உயர்ந்த வடிவமாக 50 இளம் சோசலிஸ்ட் பிரிவுகள், அவற்றில் Essen ல் மட்டும் 5 பிரிவுகள் இருந்தன, வாரம் தோறும் பொதுக் கூட்டங்கள் இவற்றினால் ஒழுங்கு செய்யப்படும். இக்கூட்டங்களில் நாளாந்த அரசியல் விடயங்கள் விவாதிக்கப்படும், அத்துடன் வரலாற்றுக் கேள்விகள்,1933 ல் நாசிகள் ஆட்சி அதிகாரத்தை வென்றது தொடர்பாகவும் கலந்துரையாடப்படும். ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் மற்றும் மார்க்ஸ், ஏங்கல்ஸினுடைய அடிப்படையான தத்துவார்த்த நூல்கள் மிகவும் முக்கியமான பாத்திரத்தை வகித்தது, நாம் அடிக்கடி அப் புத்தகங்களை பக்கம் பக்கமாக படித்து கலந்துரையாடுவோம். நான் திடமாக நம்புகிறேன், இவ்வாறான அரசியல் வகுப்புகள் ஏர்ன்ஸ்டின் சோசலிச நம்பிக்கைக்கு இறுக்கமான ஓர் அத்திவாரத்தை வழங்கியுள்ளது.

நான் கூறியதைப் போல, தொழிலாளர்கள் அந் நேரத்தில் தமக்குள் ஒரு திடமான, மற்றும் ஒரு சலனமில்லாத தன்னம்பிக்கையை பற்றிக் கொண்டிருந்தனர். அது அவர்களை, Brandt அரசாங்கத்தினூடாக தமது விருப்பத்தை வலுக் கட்டாயமாக அமுல்படுத்துவும் மேலும் அதை முன்னோக்கித் தள்ளவுமான திடகாத்திரத்தையும் அவர்களுக்கு வழங்கியது. எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது, நான் ஒரு உருக்குத் தொழிற்சாலையின் மறியல் போராட்டத்தில் நின்ற தொழிலாளியை, அவ் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல் பிரச்சாரத்தை செய்த Bild பத்திரிகை பற்றிக் கேட்டேன். ''Oak மரத்தின் (ஒரு வைரமுள்ள மரம்) மீது ஒரு பண்றி உராய்ந்து கொள்வதால் அதற்கு தீங்கேதும் நடைபெறும் என ஏன் கவலைப்படவேண்டும்'' எனக் கூறினார். அவருடைய இப் பதிலில் உள்ள தன்மை என் நினைவில் ஒரு முத்திரையை பதித்துவிட்டது.

எவ்வாறெனினும், இத் தன்னம்பிக்கை அடிப்படையில் மிகவும் ஒரு கலவை மிக்க அரசியல் மாயங்களைக் கொண்டுள்ளது. 1975 ல் இந்த மாயைகள் பலமான எதிர்த் தாக்கங்களை பெற்றுக் கொண்டது. Herbert Wehner, என்பவரின் ஒரு சதி ஆலோசனை சம்பவத்தைத் தொடர்ந்து SPD ஜ சேர்ந்த பாராளுமன்ற பிரதிநிதியும், SPD-LDP கூட்டரசாங்கத்தில் உள்ள வெளிநாட்டு அமைச்சர் Dietrich Genscher (லிபரல் ஜனநாயகக் கட்சி- LDP) மற்றும் Helmut Schmidt உம் சேர்ந்து Willy Brandt ஜ இடம் பெயர்த்தனர். Schmidt உடனடியாக ஒரு வலதுசாரி போக்கை கடைப் பிடித்தார். அவர் 15 தொழிற் சங்க அலுவலர்களை தனது முதலாவது மந்திரி சபையில் சேர்த்துக் கொண்டு, அவர்களுடைய ஆலோசனைகளுடன் தொழிலாளர்களின் பாதுகாப்பு சேவைகளையும், சாதாரண வசதிகளையும் இல்லாதொழிப்பதற்கான முறைகளில் இறங்கினார்.

தொழிற் சங்கத்திற்குள்ளும் அதனது நிலமை மாற்றம் அடைந்தது. இடதுசாரித் தனமான விமர்சனங்களை அதிகாரத்துவம் வெறித்தனமாக எதிர்த்ததுடன், அவ்வாறானவர்களை அங்கிருந்து திட்டவட்டமாக வெளியேற்றியது. இந் நடவடிக்கை ஏர்ன்ஸ்ட் உட்பட மேலும் எமது பல அங்கத்தவர்களையும் பாதித்தது. தொழிலாள வர்க்கம் இதை எதிர்த்து நிற்பதற்கு அதனிடம் எதுவும் இருக்கவில்லை. தீடீரென அவர்களுடைய போர்க்குணம் செயலிழந்து போய்விட்டது. அவர்கள் ஸ்ராலினிச, சமூக ஜனநாயகவாதிகள் மேல் வெறுப்புக் கொண்டனர், ஆனால் அவர்களிடம் இந்த வலதுசாரித் திருப்பத்திற்கு எதிரான அரசியல் பொறுப்புணர்வு இருக்கவில்லை. அதிகாரத்துவத்தை தொழிலாள வர்க்கம் தனது விருப்பத்திற்கு ஏற்ப பணிய வைப்பதற்கான அந்த எண்ணம் மிகவும் ஒரு மாயை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாம் இந்த அதிர்ச்சியின் பெறுபேறுகளை நேரடியாகவே உணர்ந்து கொண்டோம். 1975, 1976 களில் எமது அங்கத்தவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர், அவர்களில் பல இளம் தொழிலாளர்கள் உட்பட சோசலிசத் தொழிலாளர் கழகத்தை (Bund Sozialistischer Arbeiter -BSA-தற்போதைய Socialist Equality Party) விட்டு வெளியேறினர். ஏர்ன்ஸ்ட்டும் அவர்களில் ஒருவராக இருந்தார்.

அந் நேரத்தில் இச் சீரிய மாற்றத்தை எம்மால் விளங்கிக் கொள்ளவதென்பது எமக்கு ஒரு பெரிய கஸ்டமாக இருந்தது. எமது உலகக் கட்சியின் பிரித்தானியப் பகுதியான தொழிலாளர் புரட்சிக் கட்சி, (WRP) அதன் ஆளுமைக்குள் நாம் பெருமளவில் தங்கியிருந்தோம். அது சந்தர்ப்பவாத சக்திகளுக்கு தானாகவே அடிபணிய ஆரம்பித்தது, இது ஒரு பத்து வருடங்களுக்கு பின்னால் அனைத்துலகக் குழுவில் இருந்து தன்னை பகிரங்கமாக உடைத்துக் கொண்டது. ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க கட்சியை (நான்காம் அகிலம்) மிகவும் ஒரு திட்டவட்டமான முறையில் அமைத்துக் கொள்வதற்கு பதிலாக அதன் அரசியல் தந்திரோபாய வழிமுறைகள் அனேகமாக அதனை அதிகாரத்துவத்தின் பல பிரிவுகளினுடன் ஒட்டிக் கொள்ள வைத்தது. நாம் இந்த அபிவிருத்தியை உணர்வு பூர்வமாக அப்போது அறிந்திருக்கவில்லை. எவ்வாறெனினும், இந் நிலமைகள் கட்சியை மீள் அமைத்துக் கொள்வதற்கான பணியையும், கடந்த காலத்தின் கசப்பான பாடங்களை பற்றிக் கொள்வதற்கான வழியையும் ஏற்படுத்தியது.

ஏர்ன்ஸ்ட் 1970 களில் எமது கட்சியில் ஒரு நீண்ட காலத்தை செலவளிக்கவில்லை, எனினும் இதில் அவருடைய இருப்பானது அவருடைய முழு வாழ்க்கையையும் செப்பனிட்டது. அவர் தேடிக் கொண்ட மூலோபாயங்கள், அவரை அவருடைய மரணம் வரைக்கும் திடகாத்திரமாக வைத்திருந்தது. தொழிலாள வர்க்கத்தின் திசையில் அடித்தளம் இட்டிருந்ததினால், ஒரு சோசலிச சமூகத்தை இதன் அடிப்படையிலேயே நிர்மாணிக்க முடியும் என அவர் திடமாக நம்பினார். சமூக ஜனநாயகம், தொழிற் சங்கம் மற்றும் ஸ்ராலினிசம் போன்ற அதிகாரத்துவங்கள் தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்கு பெரிய தடையாக இருக்கிறதெனவும், மேலும் அதனுடைய தோல்விகளுக்கும் இந்த அதிகாரத்துவங்களே பெரிய பங்கை வகிக்கிறது எனவும் மிக சரியாக கணிப்பிட்டார். ஏர்ண்ஸ்ட் எப்பொழுதும் சர்வதேச அங்கத்தவர்களை சந்திக்கும் போதும், அவர்களுடன் கலந்துரையாடும் போதும் மிகவும் உணர்ச்சிகரமடைவார். அவர் அனேகமான முறை நான்காம் அகிலத்தின் பிரிவுகள் இருக்கும், பிரித்தானியா அவுஸ்திரேலியா போன்ற இடங்களுக்கு சென்று அங்கே அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார்.

இவ்வாறான மூலோபாயத்தின் மீதான அவருடை தளராத நம்பிக்கையின் பலம்தான் ஏர்ன்ஸ்ட்டின் தனித்துவம். அது ஏர்ன்ஸ்ட்டைப் பொறுத்தமட்டில் மிகவும் ஒரு பெரிய திறமை, ஏனெனில் அதே காலப் பகுதியில் இம் மூலோபாயத்தை ஏற்றுக் கொண்டு கட்சியில் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றுக் கொண்டவர்கள் பின்னால் வித்தியாசமான போக்குகளினால் வெளியேறி விட்டனர். நாம் அவரை மீண்டும் ஒருமுறை தற்செயலாக சந்திக்கும் போது, அவர் எதுவித பின்வாங்கலுமின்றி 1991 ல் மறுபடியும் கட்சியில் இணைந்து கொண்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

இக் கால இடைவெளியில், அனேகமான விடயங்கள் மாற்றமடைந்துள்ளன. நாம் WRP உடனான உடைவுகளுக்குள்ளால் முன்னேறினோம், நாம் அதன் அரசியல் போக்குகளுக்கு கீழ்படிந்து இருந்தோம், விசேடமாக அது 1970 களில் அதன் முழுமையான விமர்சனத்திற்குள்ளால் எம்மேல் செல்வாக்கு செலுத்திற்று. நாம் நான்காம் அகிலத்தின் அரசியல் பாரம்பரியத்தையும், அதன் தத்துவத்தையும் மீளப் பெற்றுக் கொண்டோம், இது தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புதிய தலைமையை கட்டி வளர்க்கையில் முகம் கொடுக்கும் மிகவும் சிக்கலான பணிகளுக்கான ஒர் பாரிய விளக்கத்தை பூர்த்தியாக்கிற்று.

1980 கள் சிறப்பாக தொழிலாள வர்க்கத்தின், ஒரு தொடர்ச்சியான மற்றும் மோசமான தோல்விகளுக்கான ஒரு கால கட்டமாகும். அமெரிக்காவில் றேகன் ஆட்சியிலும், பிரித்தானியாவில் தாட்ச்சரும் இருந்தனர். ஜேர்மனியில் ஹெல்மூட் கோல், இவரை பலர் ஓர் இடைக்கால பேர்வழி என எண்ணினர், ஆனால் இவருடைய ஆட்சி ஒரு 16 வருடங்களுக்கு நீடித்தது. 1984-1985 ல் ஒரு வருடமாக பிரித்தானியாவில் இடம் பெற்ற சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், 1970 களின் தன்மையுடன் இதை ஒப்பிடுகையில், இது தொழிற் சங்க போர்க் குணாம்சத்தின் கடைசியான மூச்சுத் திணறலைக் காட்டிற்று. சுரங்கத் தொழிலாளர்கள் மிகவும் ஒரு அழிவுகரமான தோல்வியைத் தழுவிக் கொண்டனர்.

1989 ல் பேர்லின் சுவர் உடைவும், 1990-91 ல் சோவியத் யூனியனின் உடைவும் நடைபெற்றன. அனேகமானவர்கள் இதை ''சோசலிசத்தின் முடிவு'' என பிரகடனப்படுத்தினர், அல்லது தொழிலாள வர்க்கத்தின் தோல்வியின் ஒரு வெளிப்பாடு இது எனவும் கூறிக் கொண்டனர், ஆனால் ஏர்ன்ஸ்ட், இவ்வாறான தோல்விகளுக்கு அதிகாரத்துவமே பொறுப்பு என்பதை மிகவும் ஆணித்தரமாக விளங்கிக் கொண்டார். அவர் இவ்வாறான நடவடிக்கைகள் எதிர் புரட்சித் தன்மையுள்ள ஸ்ராலினிசத்தை, -இவற்றில் சிலவற்றை அவர் 1970 களிலேயே தெளிவாகக் கண்டிருந்தார்- ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாக கண்டு கொண்டார்.

அனைத்துலகக் குழு இந்த அரசியலுக்கான ஐந்தொகையை 1992 ல் தயாரிக்கையில், அது தொழிலாள வர்க்கத்துக்குள் இருக்கும் தலைமை நெருக்கடிக்காக மட்டும் அல்ல, ஒரு வேலைத் திட்ட முன்னோக்கின் நெருக்கடியை வென்று கொள்வதற்காகவும் போராட வேண்டியதின் அவசியத்தை ஒரு தீர்மானமாக எடுத்தது. அதாவது தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச கலாச்சாரத்தை மீளக் கட்டி வளர்ப்பதற்கான எமது பொறுப்பை அது வலியுறுத்தியது. ஏர்ன்ஸ்ட் இதை மிகுந்த புத்திஜீவித்தனத்துடன் எதுவித பின்வாங்கலுமின்றி ஏற்றுக் கொண்டார். ஆனால் அவரால், 1970 களில் தொழிலாள வர்க்கத்திற்குள் காணப்பட்ட அந்த திடகாத்திரமான போர்க் குணமும், அசைக்க முடியாத அதன் தன்னம்பிக்கையும் மறைந்து விட்டதிற்கான அவற்றின் உணர்ச்சிகளை அவரால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை. அது அவருக்கு மிகுந்த கவலையைக் கொடுத்ததுடன், சில காலத்திற்கு அவரை அது பாதிக்கவும் செய்தது.

இது எவ்வகையிலும் ஒரு தனிப்பட்ட பிரச்சனையில்லை. ஏர்ன்ஸ்ட் வேலை செய்த பிராந்தியம், வேலைத்தல தொழிற் சங்கத்திற்குள் அது ஓர் சுரங்கத் தொழிலாளர்களின் புரட்சிகரமான அரசியல் களம் என அழைக்கப்பட்டது. அங்கே அவர் தினமும் அதிகாரத்துவத்திற்கு எதிரான முட்டி மோதல்களில் ஈடுபட்டார், அவர்களும் சளைக்காமல் புதிய பொறிக் கிடங்குகளை உருவாக்கிய படியே இருந்தனர். ஏர்ன்ஸ்ட் மிகவும் ஒரு வலுவான போராட்டத்தை செய்தார். நான் அவருடைய பணிகளிலிருந்து நாம் பெறுமதியான பல பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.

இறுதியாக, என்னைக் ஒன்று கூற அனுமதியுங்கள், ஏர்ன்ஸ்ட் அவருடைய இறுதி வாழ்க்கை வரையிலும் ஒரு உறுதியான சோசலிஸ்டாகவும், சர்வதேசியவாதியாகவும் இருந்தார். அவர் அனைத்துலகக் குழுவினால் வழி நடாத்தப்படும் நான்காவது அகிலத்தால் முன்னெடுக்கப்பட்ட அதன் அனைத்து புதிய அரசியல் நடைமுறைகளையும் - சோசலிச தொழிலாளர் கழகத்தில் (BSA) இருந்து சோசலிச சமத்துவக் கட்சியாக (Socialist Equality Party) மாற்றம் பெற்றதும், உலக சோசலிச வலைத் தளத்தின் தோற்றம் இடம் பெற்றதையும் (World Socialist Web) - ஆதரித்ததுடன் அவைகளில் மிகுந்த உற்சாகத்துடன் தன்னையும் இணைத்துக் கொண்டார். அவர் தொழிற் சாலைக்குள் அனுபவித்த அழுத்ததினால் சிலசமயம் அவருடைய அரசியல் வேலையில் கஸ்டம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவருடைய அடிப்படையான திட நம்பிக்கை ஒருபோதும் ஆட்டம் காணவில்லை. இவ் விடயத்தில் அவர் ஓர் விதிவிலக்கானவர். அவர் அவருடைய எஞ்சிய கூட்டாளிகளுக்குள் மத்தியில் மிகவும் உயர்ந்து காணப்படுகிறார். எனவேதான் நாம் அவருடைய நினைவுகளை அழியாமல் பாதுகாப்பதற்காக அவரை நினைவு கூருகிறோம்.