World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா :மலேசியா

An uncertain future for Malaysia's prime minister

மலேசியப் பிரதமரின் உறுதியற்ற எதிர்காலம்

By John Roberts and Peter Symonds
26 March 2001

Use this version to print

மலேசியாவின் 75 வயது பிரதமர் மகாதிர் முகமதின் (Mahathir Mohamad) 20 ஆண்டுகால ஆட்சியானது வரவர நிச்சயமில்லாத நிலைக்கு ஆளாகி வருவதுபோல் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதிகளில் இனக் கலவரம் வெடித்தது தொடர்பாக கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன் தனது சொந்தக் கட்சியான ஐக்கிய மலேசிய தேசிய கழகத்துக்குள்ளேயே [United Malays National Organisation (UMNO)] கார்ப்பொரேட்டுகளுக்கு பிணை அளித்து விடுவித்ததற்காக விமரிசிக்கப்பட்டார். அவர் எதிர்க் கட்சிகளை நசுக்க முயற்சிப்பதுடன் அவர்களை பேச்சு வார்த்தைக்கும் அழைக்கின்றார். இந்த பின்புலத்தில் நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்துவருகிறது.

மகாதிர் முகமது ஆட்சியில் இருப்பதைக் கேள்விக்குள்ளாக்கும் கட்டுரைகள் சர்வதேச பத்திரிகைகளில் இடம் பெறத் தொடங்கிவிட்டன. பெப்ரவரி 28 ம் தேதி பைனான்சியல் டைம்சில் ''பிடி நழுவுகிறது'' என்று தலைப்பிடப்பட்ட குறிப்புரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டது; கோலாலம்பூரில் உள்ள அரசியல் விரகர் (இராஜதந்திரி) மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் உலகில் நீண்ட காலம் பணியாற்றிய தலைவர்களுள் ஒருவரான மகாதிர் முகரது ராஜினாமா செய்ய தயாராகலாம் என நம்புகின்ற அத்தகைய உணர்வின் மாற்றம் இருக்கிறது. அவரது உடனடியான புறப்பாடு லபற்றி வதந்திகள் உலவுகின்றனதான், டாக்டர் மகாதிர் தொடர்ந்து இருப்பார் என்பது வாசிக்கக் கிடைப்பது அரிதாக உள்ளது.ஆனால் சர்ச்சைக்குப் பின் என்ன இருக்கிறது என்றால்அவர் 1981ல் பதவி ஏற்ற நாளில் இருந்து வேறு எந்த நேரமும் இருந்ததைவிட மிக அழுத்தத்தில் இருக்கிறார்.

மகாதிரின் துணை பிரதமர் அப்துல்லா அகமது பதாவி கூறியதாக பைனான்சியல் டைம்ஸ் குளிப்பிட்டதாவது: "அரசாங்கம் இன்னொரு சுற்று மீட்சிக்கு பங்களிப்பு செய்ய முடியாது." தங்களின் கார்ப்பொரேட் பேரரசுகளை ஆரவாரத்துடன் தவறாக நிர்வகித்து மற்றும் உதவி கேட்டு திரும்பத்திரும்ப வந்து கொண்டிருப்பவர்களை அரசாங்கம் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க முடியாது என்பது பற்றி தேர்ச்சி பெற்ற வர்த்தக சமூகத்தினர் மத்தியில் குமுறலும் அதிருப்தியும் இருப்பதை நன்கு அறிவேன். இந்த விமர்சனங்கள் மலேசியர்களால் செய்யப்பட்டது என்பதையும் இவ்விமர்சனத்தில் பல மதிப்புமிக்கவை என்பதையும் நான் அறிவேன்."

புளூம்பேர்க் டொட் கொம் (Bloomberg.com)-ல் "மலேசியாவில் அரசியல் மாற்றத்தின் காற்று வீசுகிறது" என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட கட்டுரை, மகாதிரின் முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் நீக்கத்தாலும் சிறையிடப்படலாலும் உண்டு பண்ணப்பட்ட புரையோடிப்போன அரசியல் புண்மேல் குவி மையப் படுத்தப்பட்டிருந்தது. "மகாதிர் நிலைமை மோசமாகி இருக்கிறது ஏனெனில் அவரது பொருளாதாரம் மோசமடைந்து கொண்டிருக்கிறது, அவரது முன்னாள் பொறுக்கி எடுக்கப்பட்ட வாரிசினை அடக்கு முறை அட்டூழியத்துக்கு ஆளாக்கிய அவரின் தீடீர் உணர்வு நிலை காரணமாக" என டேவிட் டி ரோசா எழுதினார். "மகாதிர் பதவி இறக்கப்பட்டால், சில பார்வையாளர்கள் விரைவில் நிகழலாம் என நம்புவது போல், சரியாகச் சொன்னால் 1997 தென் கிழக்கு ஆசிய பண சீர்குலைவின் பலியாக ஆகிய இந்தோனேஷியாவின் ஜெனரல் சுகர்த்தோ போல் அவர் பலி ஆகலாம். வித்தியாசம் என்னவெனில் 1997ல் தாய்லாந்தில் வெடித்த நெருக்கடியானது கிட்டத்தட்ட உடனடியாக சுகர்த்தோவுக்கு ஏற்பட்டது. ஆனால் மகாதிரோ அநேக வருஷமாய் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்."

1998 செப்டம்பரில் அன்வர் நீக்கமானது ஆளும் பாரிசான் தேசிய [Barisan Nasional (BN)] கூட்டமைப்பினுள்ளேயான கடும் வேறுபாடுகளின் விளைவாகும். அது ஆசிய நிதி நெருக்கடியின் விழிப்பில் பொருளாதாரக் கொள்கையின் மீது UMNO ஆல் தலைமை தாங்கப்பட்டது. மலேசிய வர்த்தகப் பிரிவினரை ஊக்கப்படுத்தும் முகமாக, குறிப்பாக UMNO நெருங்கிய தொடர்புடையவர்களை ஊக்கப்படுத்தும் இலக்குடன் சர்வதேச நாணய நிதியத்தின் மறு சீரமைப்புக் கொள்கைகளை அமல்படுத்தியதுடன், வரிசையான மூலதன மற்றும் பணக் கட்டுப்பாடுகளை திணித்த அன்வரை மகாதிர் பதவி நீக்கம் செய்தார். அன்வர் நாட்டின் கோரமான உளநாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜோடிக்கப்பட்ட ஊழல் மற்றும் தவறான பாலியல் நடத்தை குற்றச்சாட்டுகளின் பேரில் தண்டனை வழக்கப்பட்டது.

அன்வரை அரசியல் ரீதியாக அழிப்பதற்கும் அப்பால், அவரது நடத்தை அரசாங்க ஆதரவை குறிப்பாக நாட்டின் பெரும்பான்மை மலாய் மக்களின் மத்தியில் ஆதரவை கீழறுத்திருக்கிறது. 1999 நவம்பரில் தேசிய அளவிலான தேர்தலில், மலேசிய சீனர் கழகம் (MCA) மற்றும் மலேசிய இந்திய காங்கிரஸ் (MIC) ஆகிய சீனர் மற்றும் இந்தியர்களைக் கொண்ட பழமைவாத கட்சிகளை உள்ளடக்கிய-- BN கூட்டணி கட்சி நலன் நோக்கி செய்யப்படும் தேர்தல் திருகுதாளத்தின் விளைவாக அதன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தக்கவைத்துக் கொண்டது. ஆனால் UMNO தனது 30 வருட தேர்தல் முடிவுகளில் மிக மோசமானதாக ஐம்பது சதவீதம் மலாய் வாக்குகளுக்கும் குறைவாகவே பெற்றது.

கடந்த நவம்பரில் ஆளும் கூட்டணி கெடா மாநிலத் தொகுதியான லுனாஸூக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் தோல்வியுற்றது. இதனை BN 1957-ல் இருந்து தக்கவைத்துக் கொண்டு வந்தது. 1999ல் அன்வரின் மணைவி வான் அஜிஜா, வான் இஸ்மாயிலால் தொடங்கப்பட்ட தேசிய நீதிக்கட்சி (Parti Kedilan) வெற்றி பெற்றது. அது 60 சதவீத மலாய் வாக்குகளையும் முதல் தடவையாக வாக்களித்தோருள் 80 சதவீதத்தினரின் வாக்குகளையும் கொண்டிருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, தொகுதி முழுவதும் அன்வரின் உருவப்படம் காணப்பட்டது, அவர் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு ஆகியும் அவர் இன்னும் முக்கிய அரசியல் பிரமுகர் ஆக இருப்பதைக் காட்டுகிறது.

லுனாஸில் ஏற்பட்ட தோல்வி UMNO க்குள் அதிர்ச்சி அலைகளை அனுப்பியது. UMNO ன் உயர் அவையின் உறுப்பினரான ஷஹ்ரிர் சமது அந்நேரம் குறிப்பிட்டார்: "இது கிழவன் சிணுங்கும் 'கிழத்தின்' நோய்க்குறி. வாக்காளர்கள் அரசாங்கத்தில் எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை. அது ஊழல் நிறைந்ததாக, சுயநலமிக்கதாக மற்றும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டதாக உணரப்படுகிறது." அந்தக் "கிழம்" --மகாதிர்-- தனது பலவீனமான நிலைப்பாட்டை முண்டுகொடுத்து நிறுத்துவதற்கு பல வழிகளில் முயல்கிறார்.

மலாய் ஆதரவு அடுக்குமொழிப் பேச்சு

தனது மலாய் எதிர்ப்பினை முறியடிக்கும் முகமாக --குறிப்பாக இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியான மலாய் சே கட்சியை (PAS) முறியடிக்கும் விதமாக-- மகாதிர் தனது மலாய் அடுக்கு மொழிப் பேச்சுத் தொனியைக் கூர்மைப்படுத்தினார். நாட்டின் மக்கள் தொகையில் 55 சதவீதம் உள்ள மலாய் இனத்தவர்கள் (மக்கள் தொகையில் 30 சதவீதமாக உள்ள) சீன வம்சாவளியினரை விடவும் (மக்கள் தொகையில் எட்டு சதவீதமாக உள்ள) இந்திய வம்சாவளியினரை விடவும் பொருளாதார மற்றும் கல்வி சலுகைகளை அனுபவிக்கின்றனர். மலாய் இனத்தவருக்கு ஒரு பக்க சார்பாக இருப்பதை முடிவக்குக் கொண்டுவரக் கோரும் சீனர்களைத் தாக்கும் முகமாக பிரதமர் ஒரு குழுவை நெருக்கடிக் காலத்து "கம்யூனிஸ்டுகள் போன்ற தீவிரவாதிகள்" என்று முத்திரை குத்தினார். இந்தக் கருத்து வெறுமனே சொல்லலங்காரம் அல்ல மாறாக அந்த அமைப்புக்கு எதிராக திட்டவட்டமான போலீஸ் அச்சுறுத்தலை மறைமுகமாகக் குறிப்பிடுகிறது.

மகாதிர் PAS உடனும் தேசிய நீதிக்கட்சியுடனும் "மலாய் ஒற்றுமை" பேச்சுக்களை நடத்த வழக்கத்திற்கு மாறாகமுன் வந்தார். இந்த முன்மொழிவு மகாதிரைப் பொருத்த மட்டில் பலவீனத்தின் அறிகுறியாய் அர்த்தப்படுத்தப்படுகிறது. அவரது நீண்ட அரசியல் வாழ்வில் உண்மையில் சமரசம் செய்வதைக் காட்டிலும் போலீஸை வைத்து நசுக்குவதில்தான் சவால்களுக்குப் பதிலளித்து இருக்கிறார். அன்வரின் மணைவி இதனை நிராகரித்தார். மாதத்திற்கு 45,000 புது உறுப்பினர்களை சேர்ப்பதாகவும் அவர்களுள் பெரும்பான்மையினர் UMNO ஐ விட்டு விலகியவர்கள் என்று கூறிக் கொள்ளும் PAS தலைவர்கள் வரிசைக்கிரமமான கடும் நிபந்தனைகளை முன் வைத்தனர்.

PAS உடனான பேச்சுவார்த்தை பிப்ரவரி 19ம் தேதிக்கு குறிக்கப்பட்டிருந்தது, எதிர்க்கட்சியினர் ஊர்வலத்தை போலீசார் தாக்கியதால் அது PAS தலைவர்களால் நிறுத்தப்பட்டது. நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் அன்வரின் வழக்கை விசாரிப்பதற்கு தலைமை அரசு வழக்குரைஞரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 17 அன்று PAS மற்றும் கேடிலானால் ஏற்பாடு செய்யப்பட்ட கோலாலம்பூர் ஊர்வலத்தை கலைப்பதற்காக போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தார்கள். அட்டர்னி ஜெனரல் மொஹ்டார் அப்துல்லா "அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தவர்" மற்றும் "எந்த நீதி மன்றத்திலும் நடுவராக இருக்க தகுதி அற்றவர்" என்று PAS ன் இளைஞரணித் தலைவர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

PAS தலைவர் பாட்ஜில் நூர் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அனைவருடைய கதி தொடர்பாக ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும் என இப்பொழுது வலியுறுத்தி வருகிறார். PAS அரசாங்கத்தின் தவறான பொருளாதார நிர்வாகம், PAS கட்டுப்பாட்டில் உள்ள தொரங்கானு மாநிலத்திற்கு எண்ணெய் உரிமத் தொகையை மீளக் கொண்டுவரல், எதிர்க்கட்சியினர் மீதான போலீஸ் தாக்குதலுக்கு முடிவு கட்டல் மற்றும் PAS பத்திரிகையான ஹரக்கா வாரம் இருமுறை பிரசுரிப்பதற்கு அனுமதி உள்ளிட்ட வரிசையான விஷயங்களை அஜெண்டாவில் இடம் பெற விரும்பம் விஷயங்களை வைத்திருக்கிறது. PAS ன் எந்தக் கோரிக்கையையும் ஏற்கும் நிலையில் மகாதிர் இல்லை.

பேச்சுவார்த்தை நிராகரிக்கப்பட்ட பின்னர், PAS தலைவரும் கெலாண்டான் மாநில சட்டமன்ற அவைத் தலைவருமான வான் அப்துல்லா ரஹீம் வான் அப்துல்லா, மகாதிர் போக வேண்டும் மற்றும் அன்வரின் கதி நீர்க்கப்பட வேண்டும் என ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கூறினார். "இப் பொழுது முக்கியமான காரணி...அன்வர் இப்ராஹிம். அவர் வெளியே வருவாரா? அவர் மன்னிக்கப் படுவாரா? அவர் UMNO வுக்கு தலைமை தாங்க முடியுமா? அவர் முக்கியமானவர் என நான் நிலைக்கின்றேன்."

இதற்கிடையில், UNMO க்குள்ளே புதிதாக அமைக்கப்பட்ட மலாய் நடவடிக்கைக் குழுவினால் பிப்ரவரி 4ம் தேதி ஏற்பாடு செய்யப்பெற்ற பொது ஊர்வலம் அரசாங்கத்தில் அதன் சொந்த அணிகளுக்குள்ளே உள்ள எதிர்ப்பின் அளவை காட்சிக்குப் புலனாக்கியிருக்கிறது. துணை நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுலைமான் முகமது மற்றும் துணை செய்தித்துறை அமைச்சர் காலித் யூனுஸ் ஆகிய இரு இளம் அமைச்சர்கள் உட்பட-- பெரும்பாலும் UMNO உறுப்பினர்கள் 3000 பேரைக் கொண்ட கூட்டம் -- மலாய் உரிமைகளை முதன்மைப் படுத்தும் பொருட்டு மகாதிர் ஆலேயே முன்னுக்குப் போகுமாறு விடப் பட்டிருந்திருக்கிறது.

இருப்பினும், பெரும்பாலும் ஊர்வலமானது இனவாத பிரச்சினைகள் மீது குவிமையப் படுத்தவில்லை மாறாக அரசாங்கத்தின் ஊழலைப் பற்றி தாக்குவதில்தான் குவிமையப் படுத்தப் பட்டிருந்தது. PAS ன் செய்தித்தாள் ஹராக்கா ஊர்வலம் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டது: "எந்த எதிர்க்கட்சி கூட்டத்திலாவது இப்பேச்சுக்கள் பேசப்பட்டிருந்தால், பேச்சாளர்கள் ராஜத்துரோக அல்லது மோசமான குற்றம் சுமத்தப்படுவதை கண்டிருப்பர்... அது டாக்டர் மகாதிர் பதவியில் இருக்கும் சட்டபூர்வ தன்மையை வெளிப்படையாக சவால் செய்திருக்கும்.

முன்னாள் UMNO ன் இளைஞர் தலைவர் மஜ்லான் ஹாரும் UMNO தலைமையை பின்வரும் காரணத்திற்காக விமர்சித்தார். அது மலாய் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இல்லாமல் போகையில், மலேசியன் ஏர்லைன்ஸ் தலைவர் தாஜூதின் ராம்லியின் வானூர்தி நிறுவன 21 சதவீத பணயப் பங்கை சந்தை விலையைக் காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதல் விலையில் வாங்கி பிணை எடுத்ததற்காக விமர்சிக்கப்பட்டார்.

மலேசிய நடவடிக்கை முன்னணியின் அமைப்பாளர் தாஜூதின் ரஹ்மான், கிராமப்புற மலாய்கள் பாதிக்கப்படுகையில் ஒரு சில செல்வந்த மலாய்களுக்கு சாதகமாக உறுதி கூறல் நடவடிக்கையைப் பயன்படுத்தியதற்காக அரசாங்கத்தை தாக்கினார். "DRB-HICOM, பெர்ஜெயாகுழு, ரினாங், YTL மற்றும் MRCB ஆகியன எல்லா பெரிய திட்டங்களையும் வாங்கிவருவதாக கேள்விப்பட்டு வருகிறோம். பேராசைப்படாதீர்கள். மற்றவர்களுக்கும் கொஞ்சம் விட்டு வையுங்கள்." மலேசிய மந்திரிசபையை "தூய்மைப் படுத்தி" அதன் மீதான மலாய் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க மகாதிரை தாஜூதின் வற்புறுத்தும் அளவுக்கு சென்றார்.

மகாதிரும் UMNO தலைமையும் மலேசிய நடவடிக்கை முன்னணியையும் ஊர்வலத்தையும் தமதல்ல என்று உடனடியாக கைவிட்டனர். ஆனால் பாதிப்பு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. இரண்டாண்டுகளுக்கும் முன்னர் இருந்து அன்வரும் அவரது ஆதரவாளர்களும் UMNO வில் களையெடுப்பு இருப்பினும், அதன் அணிகளில் ஊழலும் உறவினர்களுக்கு சலுகையும் மீண்டும் தோன்றி இருப்பது, பொருளாதாரக் கொள்கையின் திசைவழி பற்றி ஆளும் வர்க்கத்துக்குள் உள்ள கடும் பிளவுகளை சுட்டிக் காட்டுகிறது. மலேசியாவில் பொருளாதார தளர்வின் அச்சம் வளர்ந்து வருகையில் இந்தப் பதட்டங்கள் கூர்மை அடைந்து வருகின்றன.

பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை

1998ல் மகாதிர் ஆல் கொண்டுவரப்பட்ட மூலதனம் மற்றும் பணக்கட்டுப்பாடு, ஆரம்பத்தில் குறைந்த பட்சம், ஆசிய நிதி நெருக்கடியிலிருந்து மலேசியாவைத் தடுத்துக்காப்பாற்றி இருக்கலாம். 1998ல் பொருளாதாரம் 7.8 சதவீதம் சுருங்கியது, ஆனால் 1999ல் 5.8 சதவீதமாகவும் 2000ன் முதல் ஒன்பது மாதங்களில் 9.3 சதவீதமாகவும் வளர்ச்சி அடைந்தது. இருப்பினும், வளர்ச்சிக்கான பிரதான மூலம் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதியாக இருந்தது. 2000ன் மூன்றாவது கால் பகுதியில், எடுத்துக் காட்டாக, 32சதவீத ஏற்றுமதி வளர்ச்சியானது 7.7 சதவீதம் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் 5.5 சதவீதத்தை பங்களிப்பு செய்தது. இருந்தும், ஏற்றுமதித் துறையானது அமெரிக்காவினுள் எந்த இறக்கத்தையும் பாதிக்கலாம். அது குறிப்பிடத்தக்க அளவு வீதம் மலேசிய வர்த்தகத்தைக் கொண்டிருக்கிறது, குறிப்பாக மின்னணுப் பொருட்களில் கொண்டிருக்கிறது.

பொருளாதாரக் கட்டுப்பாடுகள் நேரடி வெளிநாட்டு முதலீட்டைக் கூட பாதித்துள்ளன. 2000ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 13 சதவீதம் வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு என அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இதில் பெரும்பாலானவை 7.4 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தனித்த ஒரு இயற்கை எரிவாயு திட்டத்தோடு இணைந்தது. கிம் எங் பங்குரிமை பத்திரங்கள் நிறுவனத்தில் உள்ள மூத்த பொருளாதாரவாதி கோஸ்டாஸ் பனாஜியாட்டோ, 1999ல் 7.9பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 2000ல் 10.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள நிகர மூலதன வெளியேற்றம் இருந்ததாக பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையிடம் குறிப்பிட்டார். 1997 பொருளாதார பின்னடைவுக்கு பின்னர் மிகப் பெரிய பொதுத்துறை பங்கு வழங்கப்பட்டது அண்மையில் டைம் டொட் கொம் (Time Dot Com) க்கு வழங்கப்பட்டதாகும். அது அரசியல் ரீதியில் நன்கு தொடர்புடைய ரீனோங் குழுவின் (Renong Group) பகுதியாகும், அப்பொழுது நான்கில் ஒருபகுதி பங்குகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டன.

மகாதிர் உயர் தொழில்நுட்ப தொழில் துறைகளில் காப்புறுதி ஆதாரம் கொடுத்தார். அரசாங்கம் பல் ஊடக உயர் இணைப்பு வழி (Multimedia Super Corridor) திட்டத்திற்காக பத்து பில்லியன் டாலர்களை ஒதுக்கியது. ஆனால் அது குறைந்த அளவே வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தது. சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் அண்மைய கட்டுரை குறிப்பிட்டது: "கடந்த 1997ல் தென்கிழக்கு ஆசியா முழுவதும் அடித்துச் சென்ற பொருளாதார நெருக்கடியால் தெளிவற்றதாக, நிறுத்தப்பட்டிருந்த காட்சி, இப்பொழுது அமெரிக்காவில் பொருளாதார இறக்கத்தின் அடையாளங்களில் இருந்து ஆபத்தான அச்சுறுத்தலையும் கூட கொண்டிருக்கிறது. அது தொழில் நுட்பத்துறைகளில் புதிய முதலீடுகளை உலரச் செய்யும் என்பது மட்டும் அல்லாமல், மலேசியாவின் விரிவாக்கத்திற்கு முதுகெலும்பான மின்னணுவியல் உற்பத்தித் தொழில்துறைகள் மீது சூறையாடலை கட்டற்று வெளிவிடவும் செய்யலாம்...".

"தசாப்தங்களுக்கு முன்னர் மலேசியா எழுச்சிமிக்க வளர்ச்சி வீதத்தை பதிவு செய்திருந்தது. ஆனால் எஞ்சிய பிராந்தியங்களைப் போன்று 1997ன் பொறிவால் தாக்கப் பட்டிருந்தது. 1999ல் ஏற்றுமதிகளில் அலை ஏற்ற இறக்கத்தின் பின்னே அணிதிரண்ட பின்னே பொருளாதாரம் மீண்டும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. பெரும்பாலான பங்குப் பத்திர நிறுவனங்கள் இந்த ஆண்டு நான்கு சதவீதம் வளர்ச்சி வீதத்தை அடைவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என மதிப்பிடுகையில், இன்னும் அரசாங்கம் அதனது ஏழு சதவீதக் கணிப்பீட்டை குறைப்பதற்கு மறுக்கிறது... அவர் (மகாதிர்) பலரால் UMNO பிரச்சினைகள் ஒருங்கே நோயுற்ற தன்மையின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறார். அவற்றைத் தீர்க்கக்கூடிய தன்மை கொண்ட ஒரு மனிதராக மற்றும் குறைந்த பட்சம் தன்னை அரசியல் ரீதியாக மறுகண்டுபிடிப்பு செய்து இன்றைய நாளைக் காப்பவராக பார்க்கப்படுகிறார். சிறப்பாக அடுத்த சில ஆண்டுகளில் பொருளாதாரம் கடும் புயலை வீசினால், கட்சி இறுதி தோல்விக்கான பாதையில் அடைக்கப்பட்டிருப்பது புதிராக இருக்கிறது".

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் சமூகப் பதட்டங்களை தூண்டி விடுகின்றது. மார்ச் 8 அன்று பெடாலிங் ஜெயா நகரைச் சுற்றிலும் இனக்கலவரம் வெடித்தது. இப்பகுதி கோலாலம்பூரின் புறநகர்ப்பகுதிகளில் வேலையில்லாமல் இருக்கும் மற்றும் குறைந்த கூலி பெறும் தொழிலாளர்களின் வீடுகள் நிறைந்த ஒடுக்கப்பட்ட பகுதியாகும். போலீஸ் தகவலின்படி, மலாய்க்காரர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஆறு பேர்கள் --ஐந்து இந்திய வம்சாவளியினர் ஒரு புலம் பெயர்ந்த இந்தோனேஷியர்-- கொல்லப்பட்டதாக தெரிகிறது. குறைந்த பட்சம் 50 பேர்கள் காயமடைந்தனர், 75 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 800 கலவர போலீசார் அப்பகுதியில் போடப்பட்டுள்ளனர்.

இது 1969ல் நூற்றுக்கணக்கான சீன வம்சாவளியினரைப் பலியாக்கிய இனக் கலவரங்களுக்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான கலவரம் ஆகும். அரசாங்கம் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தும் கடந்த முப்பது ஆண்டுகளாக இருந்து வரும் இனப் பாகுபாட்டை மேலும் பலப்படுத்தும் வகையில் பெரும்பான்மை மலாய்க்காரர்களின் பொருளாதார நிலையை மேலும் முண்டு கொடுக்கும் நடவடிக்கைகளை அமல்படுத்தியது. அரசியல் விஞ்ஞான பேராசிரியர் பழனிச்சாமி ராமசாமி நியூஸ் வீக் இதழிடம்: "இந்த நாட்டில் இன சமத்துவம் இல்லை என்றால் இனங்களுக்கு இடையில் நல்லுறவை எவ்வாறு உங்களால் ஏற்படுத்த முடியும். இந்தியர்களும் சீனர்களும் இரண்டாம்தர குடிமக்களாக உணர்கிறவரை (அது) சாத்தியமில்லை" எனக் குறிப்பிட்டார்.

மார்ச் 20 அன்று, அரசுசார அமைப்புக்கள் பலவற்றால் பாராளுமன்றத்திற்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 இந்திய வம்சாவளியினர், "எங்களுக்கு நீதி வேண்டும் முன்னேற்றம் வேண்டும்" போன்ற பதாகைகளை ஏந்திக் கொண்டு பங்கேற்றனர். அரசாங்கத்துக்கு முகவரியிடப் பெற்ற கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: "மலேசியக் குடிமக்கள் இறப்பைக் குறைப்பதற்கான தீர்க்கமான செயலுக்கான பொறுப்பும் அதிகாரமும் (மகாதிர்) கொண்டிருந்தார் என நாங்கள் நம்புகிறோம். நடந்ததற்கு மலேசியப் பிரதமரும் அரசாங்கமும் பொறுப்ப எனக் கருதுகிறோம்." பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களால் இறப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பெரும்பான்மையான இந்திய வம்சாவளியினர், மலேசிய சமூகத்தின் மிக ஏழ்மையான தட்டினர் மத்தியில் உள்ளோர் ஆவர்.

இச்சண்டைகளுக்கு அரசாங்கத்தின் பதிலானது எதிர்க்கட்சியினரையும் வெளிநாட்டு பத்திரிகைகளையும் மேலும் ஒடுக்குவதாக இருக்கிறது. அன்வர் மணைவி, PAS பொதுச்செயலாளர் நஸருதின் மத் இஸா மற்றும் ஜனநாயக நடவடிக்கை கட்சியின் செயலதிபர் கேர்க் கிம் ஹாக் ஆகியோர் உட்பட முக்கிய எதிர்க் கட்சித் தலைவர்கள், அரசாங்கப் புள்ளிவிவரமான ஆறு பேர் இறப்பை கேள்விக்கு உள்ளாக்கும் எதிர் அறிக்கையை வெளியிட்டது தொடர்பாக விசாரணைக்க உளளாக்கப் பட்டிருக்கின்றனர். அவர்கள் ராஜத்துரோகம் மற்றும் நீண்ட சிறைத் தண்டனையை எதிர் நோக்க முடியும்.

UMNO ன் இளைஞர் பிரிவு போலீசாரிடம் South China Morning Post, International Herald Tribune மற்றும் Agence France-Presse ஆகிய பத்திரிக்கைகள் இனக் கலவரத்தில் இறந்தோர் பற்றிய தகவலை கெடு நோக்கத்துடன் மிகைப்படுத்தி வெளியிட்டதாகப் புகார் செய்துள்ளனர். இந்தநகர்வு இப்பத்திரிக்ககைகள் மீது ராஜத்துரோக குற்றத்தை சுமத்தக் கூடும்.அரசாங்கம் Far Eastern Economic Review மற்றும் Asia Week பத்திரிகைகளின் அண்மைய இதழ்களின் விநியோகத்தையும் கூட தாமதப்படுத்தி இருக்கிறது -- இந்த நடவடிக்கை அரசியல் காரணங்களுக்கு அல்ல என்று அது கூறுகின்றது.

அதன் பலத்தைக் குறிகாட்டுவதற்கும் அப்பால், சாதாரண விமர்சனத்திற்கும் அரசாங்கத்தின் சகிக்க முடியாத சிடுசிடுப்பானது, ஆளும் கூட்டணி முறுகலால் கிழிபடுகிறது மற்றும் மகாதிரின் எதிர்காலம் கேள்விக்குரியதாகிவிட்டது எனபதையே மேலும் அடையாளம் காட்டுகிறது.