World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

US stock market slide: a turning point in American and world politics

அமெரிக்க பங்குமுதல் சந்தை சறுக்கி வீழ்ந்துள்ளது: அமெரிக்க, உலக அரசியலில் ஒரு திருப்பு முனை

By the Editorial Board
21 March 2001

Use this version to print

அமெரிக்க பங்குமுதல் சந்தை முதலீட்டாளர்கள் மார்ச் 12-16 கிழமைக் காலத்தில் முன்னொரு போதும் இல்லாத அளவிலான பிரமாண்டமான ஒருவார கால நஷ்டம் கண்டுள்ளனர். ஐந்து நாட்களில் டோ ஜோன்ஸ் இன்டஸ்ட்ரியல் அவரேஜ் (Dow Jones Industrial Average) ஆழமான மூன்று வீழ்ச்சிகளைக் கண்டுள்ளது. திங்கட்கிழமை 400 புள்ளிகளுக்கு மேலாகவும், வெள்ளிக் கிழமை 227 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டுள்ளதோடு இதனது அவ்வார மொத்தப் பின்னடைவு 821 புள்ளிகள். இது 7.70 வீத நஷ்டமாகும். அமெரிக்க வோல் ஸ்ரீட் பங்குமுதல் சந்தையின் ஒரு பரந்த அளவிலான சராசரியான S&P 500 ஒரு 7 சதவீத வீழ்ச்சியைக் காட்டியது. இதே சமயம் உயர் தொழில்நுட்ப மேலாதிக்கம் கொண்ட நஷ்டாக் (NASDAQ) சுட்டெண் சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டது.

டோ ஜோன்ஸ் (Dow Jones) சுட்டெண் (அமெரிக்க கடன்பத்திர விலைச் சுட்டெண்) ஆறு மாத காலங்களில் முதல் தடவையாக 10000 இலக்குக்கு கீழாக வீழ்ச்சி கண்டது. இதே சமயம் நஷ்டாக் சுட்டெண் மூன்று வருட காலங்களில் முதல் தடவையாக 2000க்கு குறைவாக வீழ்ச்சி கண்டது. மார்ச் மாதத்தில் 2000 உச்சக் புள்ளியை எட்டியதில் இருந்து நஷ்டாக் 63 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டது. 1929ம் ஆண்டின் மாபெரும் வீழ்ச்சியின் பின்னர் அமெரிக்க பங்கு முதல் சுட்டெண்ணில் இடம்பெற்ற ஒரு பெரிய வீதாசாரமான வீழ்ச்சி இதுவாகும். இதே காலப்பகுதியில் டோ ஜோன்ஸ் 16 சதவீதமும் S&P 500 25 சதவீதத்தினாலும் வீழ்ச்சி கண்டுள்ளது.

துடைத்துக் கட்டப்பட்ட தாள் (நாணய) பெறுமானத்தின் தொகையினால் அளவிடும்போது அமெரிக்க பங்குமுதல் சந்தையின் திடீர் நிதி மாற்றங்கள் வரலாற்றில் படுமோசமானவையாகும். இது ஒரு அத்திவாரத்தை எட்டிக் கொண்டுவிட்டதற்கான அறிகுறி தென்படவில்லை. பிஸ்னஸ்வீக் (Business Week) சஞ்சிகை அதனது சந்தை பற்றிய ஆய்வு பகுதியில் எழுதும்போது 1350 புள்ளி அளவில் நஸ்டாக்குக்கு ஒரு ஆதரவு மட்டம் கிடைக்குமென வோல்ஸ்ரீட்டில் நம்பிக்கைகள் இருந்து வருவதாகக் குறிப்பிட்டது. இது உயர் தொழில்நுட்ப சுட்டெண்களில் மேலும் 500 புள்ளி வீழ்ச்சி ஏற்படும் என்பதை சுட்டிக் காட்டியுள்ளதோடு இது மொத்த வீழ்ச்சியை 73 சதவீதத்துக்கு கொணரும் எனவும் பரந்த அளவில் எதிர்பார்க்கப்படுகின்றது.

வார இறுதியில் நஸ்டாக்கினதும் (NASDAQ) நியூயோர்க் பங்குமுதல் சந்தையினதும் மொத்த நஷ்டம் 4.6 ரில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. இது 1987 அக்டோபரில் வோல் ஸ்ரீட் வீழ்ச்சியின் நஷ்டங்களைக் காட்டிலும் ஏறக்குறைய 5 மடங்குகள் அதிகமானது. நஸ்டாக் மட்டும் மார்ச் 2000ல் 6.7 ரில்லியன் டொலர்களில் இருந்து 2.7 ரில்லியன் டொலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வீழ்ச்சியின் சுத்தமான பரிமாணம் ஆட்டம் கண்டுள்ளது. 4.6 ரில்லியன் டொலர்கள் நஷ்டமானது:

*சமஷ்டி அரசாங்கத்தின் முழுப் பகிரங்கமான கடனைக் காட்டிலும் அதிகம்.

*சமூகப் பாதுகாப்பு (Social Security) வைத்திய வசதி (Medicare) நம்பிக்கை நிதியம் இரண்டினதும் கூட்டுத் தொகையைக் காட்டிலும் அதிகம்.

*உலகம் ஜப்பானிய, தென் கொரிய பொருளாதாரங்களை இழப்பதற்கு சமமானது

*அமெரிக்க ஐக்கிய அரசுகள் (USA) அதனது மோட்டார், உருக்கு, மின்சார இயந்திர, எண்ணெய் கைத்தொழில்களை தள்ளிவிடுவதற்குச் சமன்.

அமெரிக்க அரசுகளில் முழு வீடமைப்பு பங்குமுதல்களின் இழப்புகளானது-

*புஷ்சின் உத்தேச 10 வருடகால வரிவெட்டின் மொத்தப் பெறுமானத்தின் இரண்டு அல்லது மூன்று மடங்கு

*பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளிக்கும் பேரிலும் பொருளாதார பின்னடைவு ஆபத்தை தவிர்க்கும் பேரிலும் இந்த ஆண்டு புஷ் வரியில் வெட்டும் தொகையின் 1000 மடங்கு.

2000 ஆண்டுகளில் பங்குப் பெறுமானங்களின் வீழ்ச்சி அந்தளவுக்கு வேகமாக இடம்பெற்றது. 1945ல் சமஷ்டி அரசாங்கம் அத்தகைய புள்ளி விபரங்களைக் கொண்டிருக்க ஆரம்பத்தில் இருந்து அமெரிக்க குடும்ப செல்வம் முதலாவது தேறிய வீழ்ச்சியைக் கண்டது. யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட ஒவ்வொரு பொருளாதாரப் பின்னடைவும் குடும்ப செல்வ அதிகரிப்பு வீதத்தை தாமதம் அடையச் செய்தன. ஆனால் அமெரிக்க குடும்பச் சொத்துக்களில் 60 வீதத்துக்கும் அதிகமானது பங்கு முதல் சந்தையின் பேரில் கணக்கிடப்படுகின்றது. நஸ்டாக்கினால் ஏற்பட்ட வீழ்ச்சி 2000ம் ஆண்டில் 2 சதவீத வீழ்ச்சியை உண்டுபண்ணியது.

உயர் தொழில்நுட்ப குமிழி (bubble)

நிதி நெருக்கடிக்கான உந்துசக்தி, உயர் தொழில்நுட்ப பங்குகளின் ஊகச் செழிப்பின் வீழ்ச்சியாகும். முக்கியமாக இவை இன்டநெட், கணனி, தொலைத் தொடர்புகளுடன் தொடர்புபட்டவை. ஒரு ஆய்வின்படி 11 கைத்தொழில் துறைகளில் 9 துறைகள் S&P 500ஐ ஈடுசெய்கின்றன. கடந்த ஆண்டு இது பங்கு விலைகளில் ஒரு மிதமான அதிகரிப்பைக் கண்டது. ஆனால் செல்வாக்கு இழந்துபோன இரண்டு துறைகள் -உயர் தொழில்நுட்பமும், தொலைத் தொடர்பும்- 25 சதவீதத்தினால் முழு சுட்டெண்களையும் வீழ்ச்சி காணச் செய்ய உதவின.

மார்ச் 18ம் திகதி நியூயோர்க் டைம்சில் வெளியான மற்றொரு ஆய்வு தெரிவு செய்யப்பட்ட பங்குகள் 15 சதவீத வருடாந்த அதிகரிப்பைக் கொண்டிருப்பின் அவை உச்ச விலையை திரும்பவும் அடைய எவ்வளவு காலம் செல்லும் என்பதை உயர் தொழில்நுட்ப வீழ்ச்சியைக் கொண்டு மதிப்பீடு செய்தது. இந்த அளவீட்டின்படி இன்டெல் (Intel) அதனது உச்ச விலையை எட்டிப் பிடிக்க 7 ஆண்டுகள் செல்லும். சிஸ்கோ சிஸ்டம்ஸ் (Cisco Systems) 10 ஆண்டுகள் பிடிக்கும். மைக்ரோ சொப்ட் (Microsoft) 6 ஆண்டுகள். ஒரகிளும் சன் மைக்ரோ சிஸ்டம் (Oracle and Sun Micro Systems) 9 ஆண்டுகள். யாகூ (Yahoo) குறைந்த பட்சம் 20 ஆண்டுகள்.

யாகூவின் நிதி தேய்மானம் -ஒரு பிரமாண்டமான இணையம் (Internet) பார்வையாளர்களைக் கொண்ட புகழ்பெற்ற கம்பனி- 1.7 பில்லியன் டொலர்களை கைக்காசாகக் கொண்டிருந்தது. இது எந்தளவுக்கு நெருக்கடி வளர்ச்சி கண்டது என்பதையும் இதன் தாக்கங்கள் எந்தளவு ஆழமானது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. கம்பனியின் சந்தை மூலதனமாக்கம் ஒரு ஆண்டுக்கு முன்னர் 150 பில்லியன் டொலர்களில் இருந்து 10 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சி கண்டது. ஒரு பங்கு விலை 250 டொலர்களில் இருந்து 17 டொலராக வீழ்ச்சி கண்டு போயிருந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் யாகூ நிர்வாகம் முதல் காலாண்டு வருமானமாக 320 மில்லியன் டொலர்களைக் காட்டியது. இப்போது அவர்கள் 170 மில்லியன் டொலர்களுக்கும் 180 மில்லியன் டொலர்களுக்கும் இடையே மதிப்பிடப்படுகின்றது. இதில் 117 மில்லியன் டொலர்கள் காலாண்டு ஆரம்பமாவதற்கு முன்னர் கிடைத்தது. இதன் மூலம் இணையம் (Internet) புதிய விற்பனைகள் மூலம் 63 மில்லியன் டாலர்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. இதே சமயம் யாகூ 2000ம் ஆண்டில் ஏனைய டொட் கொம் (Dot. coms) விற்பனை மூலம் 459 மில்லியன் டொலர்கள் பெற்றது. 2001ம் ஆண்டில் இது 111 மில்லியன் டொலர்களாக மட்டுமே வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கம்பனி தலைவரான ரிமோதி கூக்ல் (Timothy Koogle) பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) பதவியில் இருந்து -பதிலீடு இல்லாமலேயே- இராஜினாமா செய்தார். அவரது இந்த இராஜினாமா சமயத்தில் யாகூ (Yahoo) சிஸ்கோ (Cisco) இன்டெல் (Intel) நஸ்டாக் (NASDAG) போன்ற முதன்மை புள்ளிகள் "புரோ போமா" (Pro Forma) எனப்பட்ட ஒரு நடைமுறையில் ஈடுபட்டு இருந்தனர். நிதித்துறை பெறுபேறுகளை அறிக்கை செய்து வந்தனர். பொது மக்களுக்கு எதேச்சையான முறையில் வெளியிடப்பட்ட புள்ளி விபரங்கள் சில பொறுப்புக்களைத் தள்ளி வைத்தன. யாகூவையும் சிஸ்கோவையும் பொறுத்த மட்டில் இக்கம்பனிகள் தமது ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய சம்பளப்பட்டியல் வரிகளை வெளியிடவில்லை. இந்தப் பெரிய அளவிலான செலவீனம் அவர்களது ஐந்தொகைகளை இன்னும் படு மோசமானதாக்கியிருக்கும்.

இன்றும் கூட யாகூ மொத்தத்தில் கூட்டி மதிப்பிடப்பட்டதாக இருக்கும். இதனது பங்குகள் இன்னமும் அதனது வருமானத்தினைக் காட்டிலும் 140 பங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது. நஸ்டாக் சுட்டெண்ணை (NASDAG Index) சேர்ந்த சகல கம்பனிகளும் வருமானத்தைக் காட்டிலும் 172 மடங்கு கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றினது பங்குமுதல் விலைகள் அவற்றின் வரலாற்று மட்டமான வருமானத்தின் 20 மடங்குக்கு வீழ்ச்சி காணுமாயின் நஸ்டாக் சுட்டெண் 170 க்கு வீழ்ச்சி காணும். இதை 2000 மார்ச்சின் 5,048 சுட்டெண்ணுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

தொழிலாளர் வர்க்கம் மீதான தாக்கம்

இந்தப் பிரமாண்டமான நிதித்துறை கலைப்பின் தாக்கங்களை அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கத்துக்கும் மத்தியதர வர்க்கத்துக்கும் மிகைப்படுத்திக் கூறுவது கடினம். ஏற்கனவே ஆவியாகிப் போன 4.6 ரில்லியன் டொலரும் ஆபத்தில் மாட்டிக் கொண்டுள்ள இன்னும் பல ரில்லியன்களும்-இதில் பெரும்பகுதி பல மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உயிர்களை காப்பதாக இருந்து கொண்டுள்ளது. இலட்சோப இலட்சம் மக்கள் அரசின் 401(K) திட்டங்கள் -உத்தரவாதம் செய்யப்பட்ட ஓய்வூதியத்துக்கான பதிலீடு- தமக்கு ஒரு கண்ணியமான சேவை ஓய்வை வழங்காது என்பதைக் கண்டு கொண்டுள்ளனர். 401(K) திட்டங்களின் திட்டங்களின் கீழான நிதிகளில் முக்கால் பங்கு -சுமார் 1.7 ரில்லியன் டொலர்கள்- பங்குமுதல் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஏனைய மக்கள் தமது சேமிப்புக்களை ஒரு புதிய வீட்டைக் கொள்வனவு செய்யவும் குழந்தைகளின் கல்லூரிக் கல்விச் செலவுக்கு நிதியீட்டம் செய்யவும் அல்லது பெரும் நோய் ஆபத்துக்களில் இருந்து காப்பதையும் இழந்து விட்டனர்.

உழைக்கும் மக்கள் மீதான தாக்கம்

இந்தப் பிரமாண்டமான நிதி கலைப்புக்களின் தாக்கங்களை அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கத்துக்கும் மத்தியதர வர்க்கத்துக்கும் கூட்டி மதிப்பிட்டுக் கூறுவது கஷ்டம். ஏற்கனவே ஆவியாகிப் போய்விட்ட 4.6 ரில்லியன் டொலர்களும் -ஆபத்தில் மாட்டிக் கொண்டுள்ள இன்னும் பல ரில்லியன்களும்- பல கோடிக் கணக்கான தொழிலாளர்களின் ஆயுள் கால சேமிப்புக்களை கொண்டுள்ளன.

ஆசிரியர் ஓய்வூதிய நிதியம் (TIAA-CREF) பங்குமுதல் சந்தையில் பாரிய ஸ்தாபன ரீதியான முதலீட்டாளர். இது 2000 மார்ச் 31ல் நிறைவு பெற்ற நிதியாண்டுக்கு பங்குகளின் பேரில் 21 சதவீத இலாபம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆசிரியர் ஓய்வூதிய நிதியம் நடப்பு நிதியாண்டுக்கான கணக்கு ஏடுகளை நிறைவு செய்யும்போது சுமார் 250,000 ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், கல்லூரி போதனாசிரியர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள் இது எதிர்மாறான திசையில் பயணம் செய்து கொண்டுள்ள அனுபவத்தைப் பெறுவர்.

1999ல் கால்நடைச் சந்தை உச்சக் கட்டத்தை அடைந்தபோது அமெரிக்க குடியிருப்பாளர்களின் தேறிய பெறுமானம் 14.1 சதவீதத்தினால் உயர்ந்தது. ஜே.பீ.மோர்கன் சேசில் (J.P.Morgan Chase) ஒரு மூலோபாயக்காரரான டக்ளஸ் ஆர் கிளிக்கொட் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கூறியதாவது: இது நாம் வாழும் வீடுகளின் பரிமாணத்தையும் நாம் ஓட்டும் கார்களின் வகையறாக்களையும் நாம் விடுமுறையை செலவழிப்பது எப்படி என்பதையும் பற்றி செல்வாக்குச் செலுத்தியது. சராசரியான அமெரிக்கனின் தேறிய பெறுமதியின் அசாதாரணமான முன்னேற்றம் காரணமாக அசாதாரணமான கடன் தொகைகளைக் கொண்ட வரலாற்றுத் தரத்தை கொண்டு எம்மை வசதியானவர்களாக உணர முடிந்தது."

இந்தச் சுய முரண்பாடுகள் 1990களின் அரசியல் பண்பின் பெரும் பகுதியை விளக்குகின்றது. பங்கு முதல் சந்தையில் கடதாசிப் பெறுமானங்கள் வீழ்ச்சி கண்டுபோன அதே வேளையில் கம்பனிகளின் இலாப வீதங்கள் அதிகரித்ததை அருகருகே காண முடிந்தது. நுகர்வு, கம்பனி கடன்கள் இரண்டும் வானளாவ உயர்ந்தன. 1990களின் செழிப்பானது ஒரு கடன் கேளிக்கையினால் எண்ணெய் வார்க்கப்பட்டது. அது நாட்டின் முழு நிதி அமைப்பையும் செங்குத்தான விழிம்பில் கொணர்ந்து விட்டது.

நுகர்வுச் செலவீனம் 1990ல் இருந்து 7.5 ரில்லியன் டொலர்களாக -ஒவ்வொரு வீட்டுக்கும் 50,000 டொலர்களுக்கும் அதிகமாகவும் அமெரிக்காவின் ஒவ்வொரு ஆண், பெண், பிள்ளைக்கும் 25,000 டொலர்களுக்கும் அதிகமாகவும்- இரட்டித்தது. இதில் பெரும் பங்கு வீட்டுச் சொந்தக்காரர்கள் வீட்டு பங்கு கடன்களை நிதி நுகர்ச்சிக்காகவும் ஏனைய கடன்களைச் செலுத்துவதற்காகவும் அல்லது பங்குச் சந்தையில் சூதாட்டத்தில் ஈடுபடவும் எடுத்தனர். 1982ல் வீட்டுச் சொந்தக்காரர்கள் கடன்காரர்களுக்கு தமது வீட்டின் சந்தைப் பெறுமானத்தில் 30 சதவீதத்தைக் கொடுக்க வேண்டி இருந்தது. 1999ல் இந்த புள்ளி 46 சதவீதமாக உயர்ந்தது.

1990களில் வீட்டுக் கடன்காரர் விகிதாசாரம் -ஈடுவைப்பு உட்பட- பிரிக்கக் கூடிய வருமானம் ஏறக்குறைய 25 சதவீதத்தினால் அதிகரித்தது. சராசரி அமெரிக்கக் குடும்பம் இப்போது வரிமதிப்புக்குப் பிந்திய சராசரி வருமானத்தை தூண்டும் கடனைக் கொண்டுள்ளது. இக்கடன் சமத்துவம் இல்லாத விதத்தில் பகிரப்பட்டுள்ளது. செல்வப் பகிர்வுக்கு நேர் எதிரான முறையில் செய்யப்படுகின்றது. சனத்தொகையின் மேல் மட்ட 10 சதவீதத்தினர் தேசிய செல்வத்தின் 70 சதவீதத்துக்கும் மேலாகக் கொண்டுள்ளனர். இதே சமயம் அடிமட்டத்தில் உள்ள சனத்தொகையின் 90 சதவீதத்தினர் -30 சத வீதத்துக்கும் குறைவான செல்வத்துடன்- 70 சதவீத நுகர்ச்சி கடனைக் கொண்டுள்ளனர்.

அமெரிக்க கம்பனித் துறையிலும் 1990கள் கடன் வளர்ச்சி தசாப்தமாக விளங்கியது. 1999ன் முடிவில் கடன் 10.6 ரில்லியன் டொலர்களாக விளங்கியது. பெருமளவுக்கு கம்பனிகள் புதிய பங்குகளை விநியோகிப்பதன் மூலம் நிதியை விஸ்தரிக்கவும் புதிய முதலீட்டைக் கொணரவும் விரும்பாமல் இருந்தன. அல்லது முடியாது இருந்தது. பங்குதாரர்களின் சொத்துக்களை குறைத்து விலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்ற அச்சமே இதற்குக் காரணம். மாறாகக் கூட்டுத்தாபனங்கள் தமது சொந்தப் பங்குகளை வாங்கவும் அதன் விலையை அதிகரிக்கவும் பணத்தைக் கடன் வாங்கியதால் கடனில் மூழ்கிப் போயின.

ஒரு உலகளாவிய மந்தம்

அமெரிக்காவிலான நிதி நெருக்கடி உலகப் பொருளாதாரத்துக்கு அளப்பரிய தாக்கங்களைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு கால் நூற்றாண்டு காலப்பகுதியில் உலக முதலாளித்துவத்தின் முக்கிய மூன்று நிலையங்களில்- அமெரிக்கா, யப்பான், மேற்கு ஐரோப்பா- ஏக காலத்தில் ஒரு பொருளாதார மந்தம் முதல் தடவையாக இடம் பெற்றதை குறித்து நிற்கின்றது. யப்பானைப் பொறுத்த மட்டில் 1989-90ல் "குமிழிப் பொருளாதாரம்" வீழ்ச்சி கண்டதில் இருந்து 1990கள் பூராவும் பொருளாதார பின்னடைவு தொடர்ந்து வந்தது. இந்த நிதித்துறைத் திடீர் மாற்றம், வீக்கம் கண்ட மெய்ச் சொத்துப் பெறுமானங்களின் சரிவினால் தூண்டிவிடப்பட்டதாகும். இது இப்போது அமெரிக்காவிலான வீக்கம் கண்ட பங்குமுதல் பெறுமானங்களில் ஏற்பட்ட பொத்தல்களுடன் பெருமளவில் ஒப்பிடப்பட்டு வருகின்றது. கடந்த வாரம் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் வெளியான ஒரு ஆசிரியத் தலையங்கம் அமெரிக்க பொருளாதாரப் பின்னடைவு V வடிவானதா, U வடிவானதா அல்லது 'ஒரு ஜப்பானிய பாணியிலான L வடிவானதா" எனக் கேட்டிருந்தது.

ஜப்பானிய வங்கிகளும் கூட்டுத்தாபனங்களும் அமெரிக்கக் கடன் பத்திரங்கள் கடன் வாக்குறுதி பத்திரங்கள் (Bond) சந்தைகளிலும் பெருமளவு முதலீடு செய்துள்ளதாலும் தமது முன்னணி ஏற்றுமதி சந்தையாக அமெரிக்காவை கொண்டுள்ளதாலும் அமெரிக்க, யப்பானிய நெருக்கடி பினைக்கப்பட்டுள்ளது. யப்பானிய நிறுவனங்கள் அமெரிக்கத் திறைசேரி உண்டியல்களில் 350 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளன. இன்னும் அதிகமான தொகை கம்பனிகளின் தொகுதிக் கடன்களிலும் 150 பில்லியன் டொலர்கள் நேரடி முதலீடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இது பெரிய பிரித்தானியா தவிர்ந்த எந்த ஒரு நாட்டினதும் முதலீட்டை விட அதிகமானது. மார்ச் 31ம் திகதி முடிவு பெறும் யப்பானிய நிதியாண்டுக்கு முன்னதாக யப்பானிய வங்கிகள் தமது ஐந்தொகைப் பத்திரங்களை அபிவிருத்தி செய்யும் விதத்தில் பில்லியன் டொலர்களை அமெரிக்க பங்குச் சந்தையில் குவிப்பதாக அறிக்கைகள் வெளிவந்துள்ளன.

அமெரிக்கச் சொத்துக்களை விற்றுத் தள்ளும் ஒரு யப்பானிய நடவடிக்கை யப்பானினுள் அமெரிக்க பங்கு விலைகள் வீழ்ச்சி காண்பதாக அல்லது நிதி நெருக்குவாரங்களை உண்டு பண்ணுவதில் போய் முடியும். இது பங்கு விலைகளை இன்னும் மோசமாக வீழ்ச்சி காணச் செய்யும். இது டொலரின் பெறுமதியையும் கூட வீழ்ச்சி காணச் செய்யும். ஏனெனில் யப்பானியக் கம்பனிகள் டொலர் வடிவிலான தமது கம்பனிச் சொத்துக்களை நாடு கடத்தும் பொருட்டு அவற்றை யென் (Yen) ஆக மாற்றுவதால் இந்நிலை ஏற்படும். வீழ்ச்சி கண்டு செல்லும் டொலரானது அமெரிக்க வட்டி வீதங்களை வெட்டிக் குறைக்கும் அல்லது முதலீட்டாளர்கள் அமெரிக்க நாணயத்தில் இருந்து தலை தப்பி ஓடுவதைத் தடுக்க வட்டி வீதங்களை அதிகரிக்கும் வல்லமையை கூட்டும் பெடரல் றிசேவ் (Federal Reserve) வங்கியின் வல்லமையைப் பாதிக்கும்.

ஐரோப்பிய யூனியனில் பொருளாதார வளர்ச்சி தற்சமயம்- 2001க்கு 2.8 வீதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்க, யப்பானிய மந்தங்கள் பலி எடுப்பதன் காரணமாக இது முன்னைய 3.3 சதவீதத்தில் இருந்து வீழ்ச்சி கண்டுள்ளது. ஐரோப்பிய பொருளாதாரத்தின் மிக முக்கியமான பங்காளியான ஜேர்மனி பணவீக்கத்தின் உக்கிரத்தையும் மெய் வளர்ச்சி வீதத்தின் வீழ்ச்சியையும் கண்டுள்ளது. ஜேர்மனியில் மோட்டார் வாகன விற்பனைகள் 12 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒன்பது ஐரோப்பிய பெரும் பங்குமுதல் சந்தைகளில் எட்டு விலைகள் வீழ்ச்சி கண்டன. பலவற்றில் இந்த வீழ்ச்சி 10 வீதத்தினால் ஏற்பட்டது.

சமூக, அரசியல் விளைவுகள்

ஒரு பெரும் ஆழமான நிதி நெருக்கடி அமெரிக்க ஐக்கிய அரசுகளில் தோன்றியுள்ளமையும் பொதுவில் பூகோள ரீதியான பொருளாதார மந்த நிலையும் பெரும் முதலாளித்துவ நாடுகளில் சமூக, அரசியல் ஸ்திரப்பாட்டுக்கு மிகவும் ஆழமான தாக்கங்களை உண்டுபண்ணும். அமெரிக்காவில் ஒரு தொகை மாபெரும் வேலை நீக்கங்களின் அறிவித்தல் ஏற்கனவே நுகர்வோர் நம்பிக்கையை ஆட்டங்காணச் செய்துள்ளது. பெரிதும் திறமையும் அதிகரித்த ஊதியமும் கொண்ட தொழிலாளர்களுக்குக் கூட தொழில் பாதுகாப்பு என்பது கடந்த காலத்தின் ஒரு கோலம் என்பதை மீண்டும் ஒரு தடவை காட்டிக் கொண்டுள்ளது.

அமெரிக்க வேலையின்மையின் வீதத்திலான எந்த ஒரு கணிசமான அதிகரிப்பும் மில்லியன் கணக்கானவர்களை கடந்த இரண்டு தசாப்தங்களிலான கொள்கை மாற்றங்களின் விளைவுகளை எதிர்கொள்ளச் செய்யும். அது முன்னர் முதலாளித்துவ வர்த்தக சுற்றோட்டங்களின் (Capitalist Business cycle) தாக்கங்களை அணைகட்டி வைத்திருந்த சமூக வேலைத்திட்டங்கள் ஒன்றில் ஒழிக்கப்பட்டு விட்டதால் அல்லது பெருமளவுக்கு சாக்கடையில் தள்ளப்பட்டு விட்டதால் ஏற்படும் விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடும். இலட்சோப லட்சம் தொழிலாளர்கள்- சிறப்பாகக் குறைந்த சம்பளம் பெறும் பிரமாண்டமான மக்கள் தொகையினரும் பெருந்தொகையிலான தொழிலாளர்களும்- எந்தவிதமான சமூகப் பாதுகாப்புத் திட்டமோ அல்லது தனிப்பட்ட வளங்களோ இல்லாமல் பொருளாதார கழிவுக் கும்பலில் தள்ளப்படுவர்.

இந்த நிதி நெருக்கடி ஏற்படுத்திய சடரீதியான தாக்கங்களுக்கு சமமாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்புச் சாதனங்களாலும் ஆளும் வர்க்க அபிப்பிராய சிருஷ்டிகர்த்தாக்களாலும் விடாப்பிடியாக ஊக்கி வளர்க்கப்பட்ட நப்பாசைகள் தகர்ந்து போவதால் ஏற்படும் தாக்கங்களாக விளங்கும். சிறப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கடந்த ஒரு தசாப்த காலமாக இடம்பெற்றவை இதில் அடங்கும். அமெரிக்க மக்களுக்கு முதலாளித்துவமே ஒரே நம்பகத் தன்மை வாய்ந்த பொருளாதார அமைப்பு வடிவம் என இடைவிடாது கூறப்பட்டு வந்தது. இராட்சத கூட்டுத்தாபனங்களின் தடையற்ற மேலாதிக்கமும் அதன் கிறீன்ஸ்பான் போன்ற மத்திய வங்கியாளர்களால் ஆதரிக்கப்பட்ட 'சந்தை'யும் செழிப்பின் என்றுமில்லாத வளர்ச்சி மட்டத்தை உத்தரவாதம் செய்யும் எனவும் கூறப்பட்டது.

மில்லியன் கணக்கானோரது ஓய்வூதிய சேமிப்புகளைத் துடைத்துக் கட்டியும் சிறிய வர்த்தகங்களை வங்குரோத்து அடையச் செய்தும் எண்ணற்ற தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை நிராகரித்தும் வந்த அதே வேளையில் கம்பனிப் பிரமுகர்களின் கரங்களில் ரில்லியன் டாலர்களைக் குவித்தது. வளங்களின் அநீதியான ஒதுக்கீடுகள் மூலமும் அடியோடு அநியாயமான ஒரு அமைப்பின் மூலமும் முதலாளித்துவம் இப்போது அதனது அசிங்கமான முகக் கோலத்தைக் காட்டிக் கொண்டுள்ளது. இந்த நெருக்கடி ஆழமாகிக் கொண்டு வரும் ஒரு நிலையில் தொழிலாள வர்க்கம் சந்தையின் கட்டளைகளுக்கு சமூக நீதி, சமத்துவம் தொடர்பான சகல அக்கறைகளும் கீழ்ப்படிந்ததாக வேண்டும் என்ற கோரிக்கைகளை தவிர்க்க முடியாத விதத்தில் நிராகரிக்கும். அதிகரித்த அளவிலான மக்கள் இலாப அமைப்புக்கு ஒரு பதிலீட்டைத் தேடுவதோடு அதற்கு எதிராக நெறிப்படுத்தப்பட்டுள்ள ஒரு பரந்த அரசியல் இயக்கத்தின் அபிவிருத்தியின் பக்கமும் திரும்புவர்.