World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS : தொழிலாளர் போராட்டங்கள்

Workers Struggles Around the World: 2001

US Air Line Pilots Association strikes Comair

உலகம் பூராவும் தொழிலாளர் போராட்டங்கள்: 2001

Use this version to print

அமெரிக்க கொமயர் (Comair) விமான சாரதிகள் சங்கம் வேலை நிறுத்தம்

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய விமான போக்குவரத்து சேவையான கொம் எயரின் விமான சாரதிகள் சங்கத்தின் அங்கத்தவர்கள் 26.03.01 திகதி காலை 12.00 மணிக்கு ஒப்பந்த பேச்சுவார்த்தை முறிவடைந்ததை தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளார்கள். 1,350 விமான சாரதிகள் வெளிநடப்பு செய்ததினால் விமான சேவையின் முழு நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளது.

கொம் எயரின் விமான சாரதிகள், கொம் எயரின் தாய் கம்பனியான டெல்டா எயரில் உள்ள விமான ஓட்டிகளின் சம்பள மட்டத்துக்கு தமது சம்பளத்தை உயர்த்த வேண்டும் எனவும் கோரியுள்ளனர். வருடாந்த அடிப்படை சம்பளம் 15,000 டாலருக்கும் குறைவாக உள்ளது. கிட்டத்தட்ட 420 விமான சாரதிகள் வருடத்துக்கு 30,000 டாலருக்கு குறைவாகவே பெறுகின்றார்கள். விமான சாரதிகள் சேவைகளுக்கிடையில் அதிக ஓய்வு அவசியம் என்கின்றனர். விமானம் பறந்த நேரத்திற்கு மாத்திரமல்ல, வேலை செய்த நேரத்திற்குரிய சம்பளம் வழங்கப்பட வேண்டும். அத்துடன் கம்பனியிடம் ஓய்வு திட்டத்தை ஏற்படுத்துமாறு வேண்டுகின்றார்கள்.

கொம் எயர் ஆரம்பித்து 24 வருடத்துக்குள் இதுவே முதலாவது வேலை நிறுத்தமாகும். மேலும் டெல்டா கனெக்சன் விமான சேவை என்ற பெயரிலும் இயங்குகின்றது. வட அமெரிக்காவிலும் பாஹாமாசிலும் 95 நகரங்களில் இது சேவையில் ஈடுபட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தின் சிறிது நேரத்தின் பின்னர், ஜனாதிபதி புஷ் வெளியிட்ட அறிக்கையில், இதில் அவர் தலையிட மாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் வட மேற்கு, பொறியிலாளரின் வேலை நிறுத்தத்தை வெள்ளை மாளிகை நிறுத்தியது. இந்த வருடத்தில் எந்தவிதமான விமான சேவை வேலை நிறுத்தத்தையும் நிறுத்துவேன் என புஷ் குறிப்பிட்டிருந்தார்.

புகையிரத தொழில் சட்டத்தின் கீழ், சமஷ்டி நடுவர்கள் வேலை நிறுத்தம் பொருளாதாரத்தை பாதிக்கும் என தீர்மானிப்பார்களாயின், ஜனாதிபதி வேலை நிறுத்தத்தை நிறுத்த உரிமை இருக்கின்றது. கொம் எயரின் வெளிநடப்பு சம்பந்தமாக சமஷ்டி நடுவர் சபை இதுவரையும், எதுவிதமான தீர்மானமும் எடுக்க வில்லை.

டெல்டா அதிகாரிகள், தங்களுடைய விமான சேவையின் பாதைகளில் சேவையை நிறுத்துவதற்கு எதுவித முயற்சியும் எடுக்கமாட்டார்கள் என கூறியுள்ளார்கள். கடந்த மாதத்தில் டெல்டா விமான சேவை விமான சாரதிகள் தமது விமான சேவையுடனான பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டார்கள். விமான சாரதிகளின் சங்கத்தின் தலைவர்கள், சமஷ்டி நடுவர்கள் சபையின் தீர்ப்புக்கு வேண்டுகோள் விடுப்பது பற்றி தீர்மானிக்கும் பொருட்டு இந்த வாரத்தில் கூடுகின்றார்கள். தீர்ப்பை விமானமோட்டிகள் நிராகரிப்பார்களாயின், ஏப்பிரல் அல்லது மேயில், டெல்டா வேலை நிறுத்தம் செய்ய அனுமதிக்கப்படும்.

மிகவும் பெரிய அமெரிக்க விமான சேவையான ஐக்கிய விமான சேவையும் அமெரிக்கன் எயர் லைன்சும், எதிர் வரும் குளிர்காலத்தின் பிற்பகுதியில் வேலை நிறுத்தத்தில் குதிக்க கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளது. அமெரிக்காவின் பயிற்சி பெற்ற 23,000 விமான சிற்றூழியர்கள் சங்க அங்கத்தவர்கள் இரண்டு வருடமாக எந்த விதமான ஒப்பந்தமும் இல்லாமல் உள்ளார்கள். 15,000 ஐக்கிய இயந்திரவியலாளர்கள், கடந்த ஜூலையில் இருந்து ஒப்பந்தமுமில்லாமல் இருக்கிறன்றார்கள், இரண்டு தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தின் முதற்கட்டமாக, இந்த முட்டுக்கட்டையை நீக்குமாறு சமஷ்டி நடுவர்களை கேட்டுள்ளது.

ஆசியா:

இந்தோனேசிய ஹோட்டல் தொழிலாளர்கள் பொலிஸ் தாக்குதலில் காயமடைந்தனர்

மார்ச் 17ம் திகதி இந்தோனேசியாவின் மத்திய ஜகார்த்தாவில் உள்ள ஐந்து நட்சத்திர சங்காரி-லா ஹோட்டலின் 300 தொழிலாளர்களின் மறியல் போராட்டத்தின் போது கலகத் தடுப்பு பொலிசார் தாக்குதல் நடாத்தினர். தாக்குதலின்போது பல தொழிலாளர்கள் காயமடைந்தனர். டிசம்பர் 22ம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த 900 அங்கத்தவர்களைக் கொண்ட சக்தி வாய்ந்த தொழிலாளர் படையினர், நிர்வாகம் கொந்தராத்துத் தொழிலாளர்களைக் கொண்டு ஹோட்டலை மீண்டும் திறப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பி.ப. 3 மணியளவில் பதாகைகளையும் போஸ்டர்களையும் தாங்கிய வண்ணம் வெள்ளை கைப்பட்டிகளையும் அணிந்தவாறு ஹோட்டலை நோக்கி நகர்ந்தனர். சிலர், ஹோட்டல் உரிமையாளர்களான ரொபட் செளக், ரொபட் லீமன் ஆகியோரின் பெயர்களைக் கோஷித்த வண்ணம் ஒரு சவப்பெட்டியை சுமந்து சென்றனர். அவர்களது இதயம் ஏற்கனவே செத்துவிட்டது. அவர்கள் நரகத்தில் கிடக்கிறார்கள்" என ஒரு தொழிலாளி கோஷமிட்டார்.

ஜகார்த்தாவின் பொலிஸ் அதிபர் அது போக்குவரத்தை தடைசெய்வதாகக் கூறி அமைதியான ஊர்வலத்தை தாக்குவற்கு ஆணையிட்டார். சங்காரி-லா தொழிற்சங்கத்தின் தலைவர், ஹலின்டர் நூர்டின், தாக்குதலை கண்டித்ததோடு தண்டிக்கப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் வேலையில் இருத்தப்படும் வரையும் -வேலைநிறுத்தக்காரர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் வரையும் போராட்டம் தொடரும் என அறிவித்தார்.

அனைத்துத் தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் இருத்தும்படியும், அதேபோல் அதிகரித்த சம்பளமும் வேலை நிலைமைகளும் ஹோட்டல் சேவை கட்டணங்களில் இருந்து ஊழியர்களுக்கு பணம் விநியோகிக்கும் சந்தை முறை உட்பட்ட கோரிக்கைகளையும் தொழிலாளர்கள் முன்வைத்துள்ளார்கள்.

பிலிப்பைன்ஸ் வங்கி ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு கோரி போராட்டம்

பிலிப்பைன்ஸ் பிஸ்னஸ் கொமர்ஸ் வங்கி ஊழியர்கள் நிர்வாகம் 7 வீத சம்பள அதிகரிப்பை நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த வாரம் ஒரு தேசிய ரீதியிலான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். தற்போது கலந்துரையாடப்பட்டு வரும் புதிய தொழில் ஒப்பந்தத்தின் பகுதியாக தொழிலாளர்கள் 50 வீதமான சம்பள அதிகரிப்பை இரண்டு வருடகாலமாக எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.

ஊழியர்கள் வங்கியின் 47 கிளைகளிலும் வேலைக்கு முன்னரும், போசன இடைவேளையிலும் மறியல் நடாத்த திட்டமிட்டுள்ளார்கள். டியானோ-ஹேயஸ் மற்றும் காகயன் நகரத்திலும் உள்ள கிளைகளின் ஊழியர்கள் அன்றாட மறியல் போராட்டத்தை மார்ச் 19ம் திகதி முதல் ஆரம்பித்துள்ளனர்.

மார்ச் 15ம் திகதி தொழில் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முழுமையாக முறிந்ததைத் தொடர்ந்து பீ.பி.சி. ஊழியர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தொழிற்சங்கத்தின் பேச்சாளர் ஜேடன், நாட்டின் ஏனைய வங்கிகளில் கூடுதலானவற்றுக்கு ஏற்கனவே 15-20 வரையிலான சம்பள உயர்வு வழங்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டார்.

வரவு செலவுத் திட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

மார்ச் 21ம் திகதி இந்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு எதிராக 100,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் பம்பாயில் கூடினர். ஊழியர்களைக் குறைப்பதற்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 வீதமான தொழிலாளர் படைகளை வெட்டித்தள்ளவும் தனியார் கம்பனிகளுக்கு இந்த வரவு செலவுத் திட்டம் வசதி ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

தற்போதைய சட்ட திட்டங்களின் கீழ் 100க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட கம்பனிகள் ஊழியர்களைக் குறைப்பதற்கோ அல்லது மூடுவிழா நடாத்தவோ அரசாங்கத்தின் அனுமதியை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. இதை அரசாங்கம் 1000 ஆக உயர்த்த தீர்மானித்துள்ளது. வரவு செலவுத் திட்டம், ஊழியர்கள் வெளியே செல்வதற்கான பாதையைத் திறந்துவிட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவில் 80 வீதமான கம்பனிகள் இந்த திட்டத்துக்குள் அடங்கியுள்ளன.

தொழிலாளர்கள் தங்கள் தொழில்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆர்ப்பாட்டத்தில் குதித்தபோது அமைப்பாளர்கள் அவர்களின் கவனத்தை தேசிய சிந்தனைகளுக்குள் மூழ்கடித்தனர். இந்து தீவிரவாத அமைப்பான சிவசேனையின் பேச்சாளர் சுபாஷ் தேசாய் கூட்டத்தில் குறிப்பிட்டதாவது: "நாங்கள் வெளிநாட்டுக் கம்பனிகளை இந்தியாவில் இருந்து வெளியில் தள்ள முயற்சிக்க வேண்டும். எங்களுடைய தனித்துவத்தைக் காக்க ஒரே வழி அதுவேயாகும். இல்லாவிடில் பொருளாதார அடிமைத்துவத்தில் இருக்கவேண்டிய நிலை ஏற்படும்.

நேபாள அரசாங்கம் ஹோட்டல் வேலை நிறுத்த சட்ட விரோதமானதாக அறிவித்துள்ளது

மார்ச் 15ம் திகதி நேபாளத்தில் 200,000 க்கும் அதிகமான ஹோட்டல் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பும் 10 வீத சேவை கட்டணமும் வேலை நிலைமைகளை அதிகரிக்கவும் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். எவ்வாறெனினும் அன்றையத் தினம், தேசிய காங்கிரஸ் அரசாங்கம் ஹோட்டல் கைத்தொழில் ஒரு அத்தியாவசிய சேவை என அறிவித்ததைத் தொடர்ந்து தொழிற்சங்கத் தலைவர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்கள். அத்தியாவசிய சேவை சட்டத்தின் கீழ், தபால் சேவை, போக்குவரத்து, தொலைத் தொடர்பு, மின்சாரம், நீர் விநியோகம் மற்றும் அரசாங்க அச்சக சேவைகளில் ஏற்கனவே வேலை நிறுத்தங்கள் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கையை தடுப்பதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிமன்றம் தொழிற்சங்க நடவடிக்கை சட்டரீதியானது என தீர்ப்பளித்த பின்னர் இரண்டு பெரிய ஹோட்டல் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன. கத்மண்டுவில் பல பெரிய ஹோட்டல்களுக்கு வெளியே எதிர்ப்புத் தெரிவித்தனர். 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்கள்.

கடந்த வருடம் ஹோட்டல் ஊழியர்கள் இந்த கோரிக்கைகளின் பேரில் பல எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். "நியாயமான முறையில் இந்த கோரிக்கைக்கு தீர்வு காண்பதாக" அரசாங்கம் உறுதியளித்த பின்னர் கடந்த வருடம் திட்டமிடப்பட்ட தேசிய வேலை நிறுத்தத்தை கடந்த நவம்பரில், தொழிற்சங்க தலைவர்கள் ரத்து செய்தார்கள்.

இலங்கை ஆஸ்பத்திரி ஊழியர்கள் கடன் கொடுப்பனவுக் கோருகிறார்கள்

மார்ச் 19ம் திகதி கண்டி ஆஸ்பத்திரியில் 4,300க்கும் அதிகமான ஊழியர்களும் வைத்தியர்களும் வாகன, வீட்டு மற்றும் பொருட்களுக்கான அரசாங்க கடன் வழங்கப்படாமையை ஒட்டி அரைநாள் வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டனர். ஏற்கனவே சில காலத்துக்கு முன்னர் கடன்கள் உறுதிப்படுத்தப்பட்டாலும் அரசாங்கத்தால் இன்னும் இப்பணம் வழங்கப்படவில்லை.

இந்த வேலை நிறுத்தம், அவசர மற்றும் அத்தியாவசிய சேவையை தவிர்த்ததோடு வைத்தியசாலையின் பெரும்பாலான பகுதிகளை இழுத்து மூடியது. ஒரு தொழிற்சங்கப் பேச்சாளர் குறிப்பிட்டதாவது: "அரசாங்கமோ வைத்தியசாலை நிர்வாகமோ உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறுமானால் அடுத்து வரும் நாட்களில் ஒன்றுபட்ட கைத்தொழில் நடவடிக்கையை நாங்கள் முன்னெடுப்போம்." என்றார்.