World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: கலை இலக்கியம்

The Aesthetic Component of Socialism

The attitude of classical Marxism toward art

சோசலிசத்தின் அழகியற் கூறுகள்

கலை பற்றிய பண்டைய மார்க்சிச பார்வை.

பகுதி3

A lecture by David Walsh

Use this version to print

பின்வரும் விரிவுரை 1998, ஜனவரி 9ம் தேதி, சர்வதேச கோடை பள்ளியில் மார்க்சிசமும் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படைப் பிரச்சினைகளும் என்ற தலைப்பில் இடம் பெற்ற தொடர் சொற்பொழிவுகளில் வழங்கப்பட்டது. சிட்னியில் ஜனவரி 3 லிருந்து 10 வரை இடம் பெற்ற இச்சொற்பொழிவுகள், (ஆஸ்திரேலிய) சோசலிச சமத்துவக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலக சோசலிச வலைத்தளத்தின் கலைத்துறை பத்திரிகை ஆசிரியரும் மார்க்சிச நிலைபாட்டிலிருந்து தற்கால கலை மற்றும் இலக்கியம் பற்றிய பல மற்றும் விமர்சனக் கட்டுரைகளின் ஆசிரியரும் ஆவார். இந்த விரிவுரையின் மூன்றாவதும் இறுதி பகுதியையும் நாம் இங்கே பிரசுரிக்கிறோம்.

1923 பலராலும் மார்க்சியத்திற்கு இணையாக ஒரு இராணுவ முழக்கமாக ஒரு பிரதான முழக்கமாக இருந்த ``பாட்டாளிகள் கலாச்சாரம்`` என்ற முழக்கத்திற்கு மீண்டும் வருவோம். இதன் திடீர் புகழுக்கு பின்னால் என்ன சமூக இயக்கம் இருந்தது? யாருடைய விருப்பத்துடன் அவை-அதேவகையாக இன்று முன்னெடுக்கப்படும் தத்துவங்களுடன்- தொடர்புகொண்டுள்ளன? ட்ரொட்ஸ்கி பின்வரும் முறையில் இந்த பாட்டாளிகள் கலாச்சார செயல் திட்டத்திற்கு எதிராக இருந்து பெறப்பட்டதான இழிவான ஆய்வுகளிலேயே இந்த வாதங்களின் அடிப்படை அமைந்திருக்கிறது. சூத்திரம் மிக இலகுவானதாக இருந்தது. அதாவது முதலாளிகள் அதிகாரத்தை கைப்பற்றிய பொழுது அவர்கள் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கினார்கள். ஆகவே பாட்டாளிகள் புரட்சி ஒரு பாட்டாளிகள் கலாச்சாரத்திற்கு வழி அமைக்கும். இந்த வகை வாதத்தில் ஒரேயொரு பிரச்சனை மட்டுமே இருந்தது. தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதை முழுவரலாற்றுக் காலப்பகுதிக்குமான பாட்டாளிகளின் ஆட்சி கலாச்சாரம் என்ற வகையில் போல்ஷேவிக்குகள் உட்பட எந்த மார்க்சிஸ்ட்டுகளும் பார்க்கவில்லை. ஆனால் அதை ஒரு வர்க்கமற்ற சமூகத்திற்கு கலாச்சாரத்திற்கு மாறும் ஒரு நிலையாகவே அவர்கள் கண்டனர். பாட்டாளிகள் கலாச்சாரம் என்ற ஒன்று `இருக்கவே முடியாது எனெனில் பாட்டாளிகள் ஆட்சியென்பது தற்காலிகமானது ஒரு இடைமருவக்கூடியது` என ட்ரொட்ஸ்கி கூறினார்.

இரண்டு முற்றிலும் மாறுபட்ட முன்னோக்குகளுக்கு இடையிலான வேறுபாட்டின் முக்கிய புள்ளி இங்குதான் இருக்கிறது. 1917ஐ போல்ஷேவிக்குகள் முன்னறிவித்ததை ஆதரிப்பவரான ட்ரொட்ஸ்கி உலக சோசலிச புரட்சியின் செயற்திட்டத்தில் இருந்து தொடங்கினார். ஆகவே சோவியத் யூனியனின் அரசியல் கலாச்சாரம் பற்றிய அவரது பார்வையானது: ‘‘முன்புபோலவே நாங்கள் செயற்திட்ட பிரச்சாரத்தில் சாதாரண சிப்பாய்கள் தான். எங்களுடைய சட்டைகள் துவைக்கப்பட்டிருக்க வேண்டும், தலைமயிர்கள் வெட்டப்பட்டு வாரி இழுக்கப்பட்டிருக்க வேண்டும், எல்லாவற்றையும் விட முக்கியமாக எமது துப்பாக்கி எண்ணைவிடப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். எமது இன்றைய பொருளாதார கலாச்சார வேலையென்பது இரண்டுவகை சண்டைகளுக்கும் இரண்டுவகை வினை ஆள் முறைகளுக்கும் இடையில் எம்மைக் கொண்டுவருவதைவிட அதிகப்பட்சமானதாக இல்லை. எமது காலம் இன்னும் ஒரு புதிய கலாச்சாரத்தின் காலமல்ல அதன் வாயிலில் மட்டுமே நாம் இருக்கிறோம்.''

உலகப் புரட்சியின் தேவை பற்றிய அக்கறையில் சரியான இடத்தை இருத்திக் கொள்வதையே எல்லாவற்றையும் விடப் பெரியதாக நினைக்கும் சுயதிருப்தியுடைய ஒரு நெப்மேன் (N.E.P man) அல்லது அரச அதிகாரியிடம் இருந்து இவ்வகை விவாதங்கள் எப்படிப்பட்ட கோபமூட்டுதலை விளைவித்திருக்கும் என்பதை ஒருவர் கற்பனை பண்ணிப் பார்க்க முடியும்.

மோசமான குட்டி முதலாளித்துவ அதிகாரத்துவமும் அதன் பற்றாளர்களும் தலையெடுத்த பொழுதில், சோவியத் அரசு தனிமைப்பட்ட அபிவிருத்திக்காலத்தின் நீட்சியில் இருந்த காலப் பகுதியில் ‘‘பாட்டாளிகள் கலாச்சாரம்'' என்ற முழக்கம் எழுச்சியடைந்தது அத்தோடு சேர்ந்து, சோவியத் ஒன்றியத்துக்கு வெளியேயான முதலாளித்துவத்தின் இருத்தலை ஏற்றுக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டது.

``பாட்டாளிகள் கலை`` என்பதை ஏற்றுக் கொள்வதானது கலாச்சாரத்துறையில் ஏற்படுத்திய பிரதிபலிப்புகளைப் போலவே, அரசியலில் `தனிநாட்டில் சோசலிசம்` என்பதற்கூடாக சர்வதேசரீதியில் முதலாளித்துவத்தை தூக்கி வீசக் கூடிய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சக்தி மற்றும் உள்ளுறை ஆற்றல் பற்றிய ஆழமான ஐயுறவாதத்தை எதிரொலித்தது. `இடதுசாரி`க் குரலுக்கும் அப்பால் பாட்டாளிகள் கலாச்சாரம் எப்பொழுதும் அரசியலில் தேசியவாதம், சந்தர்ப்பவாதம், திரிபுவாதம் என்பவற்றுடன் இணைந்தே இருந்து வந்தது.

பாட்டாளிகள் கலாச்சாரத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அழகியல் மதிப்புகளுக்கான அக்கறையையும் பொதுவாக கலை பற்றிய அக்கறையையும் சுவை நேர்த்தியையும் கண்டனம் செய்தனர். ட்ரொட்ஸ்கி சொன்னார் `அவர்கள் சொல்கிறார்கள் தரம் அற்றதான கீழான ஒன்றாயினும் எங்களுடைய சொந்தச் சரக்கான ஒன்றை கொடுங்கள் என்று`` ஆனால் அது பிழையானதும் உண்மையற்றதும் ஆகும். தரமற்றதான கலையென்பது கலையே அல்ல, அதனால் அது தொழிலாள மக்களுக்கு தேவையற்ற ஒன்று. தரமற்றதான இக்கலையை நம்புவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மக்களை அவமதிப்புச் செய்வதில் ஊறிப்போயுள்ளார்கள்.

உடனடியாக சமூகப் புரட்சிக்குப் பின் ட்ரொட்ஸ்கியைப் பொறுத்தவரையில் அல்லது அதற்கு முன் எம்மைப் பொறுத்தவரை, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கையை, ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வை பொறுமையுடன் புகழ்ந்து தள்ளுதல் அல்லது உயர்கொள்கையாக்குதல் புரட்சியாளர்களின் வேலை அல்ல. நிதானமான முறையிலேயே இவைபற்றி நாம் தீர்மானிக்கிறோம். எப்படியிருப்பினும் தற்போது இருக்கின்றவாறு தொழிலாள வர்க்க கலாச்சாரத்தை புகழ்ந்து தள்ளுவதில் ஆர்வம் கொண்டுள்ள ஒரு சமூக குழுவும் இருக்கவே செய்கிறது. அது பொதுவான புத்திஜீவித மட்டத்தை உயர்த்துவதற்கு இடைஞ்சல் உண்டுபண்ணுவதாகவும், தொழிலாள வர்க்கத்தின் கவனத்தை மிக உடனடி சாதாரண விஷயங்களை நோக்கி திருப்புவதாகவும், தொழிலாளர்கள் எதைப் பார்க்க வேண்டும் எதை பார்க்கக் கூடாது என்பதை நிர்ணயிக்கும் உரிமையை தாங்களே சுவீகரித்துக் கொண்டதாகவும், தன்னால் புரிந்துகொள்ள முடியாத எதையும் ``சீரழிந்த`` தாகவும் ``இரகசியமான``தாகவும் மறுதலிப்பதாக இருக்கிறது. இவ்வகை மனநிலையை எவ்வகை சமூக அமைப்பு ஏராளமாய்ப் பெற்றிருக்கிறது? பாட்டாளிகளின் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து சுரண்டி வாழும் மத்தியதர வர்க்கத் தட்டுக்கள் தான் அதைச் செய்கின்றன. அது தொழிலாள அதிகாரத்துவமாகும். அது ஸ்ராலினிச வாதியாகவோ சமூக ஜனநாயக சீர்திருத்த வாதியாகவோ அல்லது ``தூய`` அமெரிக்க தொழிற்சங்க வாதியாகவோ இருக்கலாம்.

``அடிப்படையற்ற வாதம்`` என்று சுதந்திரமான பாட்டாளிகள் கலாச்சாரத்தின் சாத்தியம் பற்றி ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டது உட்பட, இவ்வகை அழகியல் மதிப்புக்கு விரோதமான, மார்க்சியத்திற்கு எதிரான கருத்துக்கள் முழுவரலாற்றுக் கட்டத்திலும் இருத்தலானது, சோசலிச இயக்கத்தின் இழப்பில் தொழிலாள வர்க்கத்தின் மேலாக அதிகாரத்துவத்தின் ஆதிக்கத்தோடு தொடர்புடையதாக இருந்தது என்பதை நான் மேலும் நிலைநாட்ட விரும்புகிறேன். கலையில் பாட்டாளிகள் கலாச்சாரமும் சமூகப் பயன்பாடும் தான் தனித்த பிரமாண அளவீடாக முன்மொழிபவர்கள் குட்டி முதலாளித்துவ, புத்தி ஜீவிகளுக்குள்ளே அதிகாரத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். நான் இவ்வறிக்கையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் மீண்டும் சொல்ல விரும்புவது இதைத்தான் - ஒரு புறநிலை அடிப்படையின் நோக்கில் இருந்து நாம் இந்த விவாதத்தை நடத்தக் கூடியதாக இருப்பது தங்களது உபயோகமற்ற அழுகிப்போன தன்மையால் இவ்வதிகாரத்துவங்கள் தாமாகவே உடைபடுகின்றன என்ற காரணத்தால் மற்றும் அதனால் நாங்கள் இவ்வகை அழகியல் கருத்தாக்கங்களில் இருந்து எம்மை நாம் விடுவித்துக்கொள்ளக் கூடிய நல்ல நிலையில் இருக்கிறோம். அதேபோல் இவ்வகை அரசியல் உபகரணங்களில் இருந்து தொழிலாளர்களை விடுதலைசெய்யக் கூடிய மிகவும் ஒரு சாதகமான நிலையில் இருக்கிறோம்.

இங்கு நான் தனிப்பட்ட கருத்து ஒன்றையும் குறிப்பிட வேண்டும். எப்பொழுதும் வர்க்க வாழ்க்கையையும், நவீன வர்க்கப் போராட்டம் பற்றியதுமான படங்கள், நாடகங்கள் பார்ப்பதையும் அல்லது அது பற்றிய புத்தகங்களை படிப்பதையும் மட்டுமே விரும்பும் சோசலிச எண்ணமுள்ள தொழிலாளியை, சிந்திக்கும் தொழிலாளியை நான் இன்னும் எதிர்கொள்ளவில்லை. உண்மையான புரட்சிகரத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒவ்வொரு கோணத்தையும், வரலாற்றையும், கலாச்சாரத்தையும் கற்றுக் கொள்ளவே விரும்புவர். கலைப் பரிசோதனைகளாலும் கஷ்டங்களாலும் அச்சுறுத்தப்பட்ட எந்தத் தொழிலாளியையும் இதுவரை நான் சந்தித்தது இல்லை. அப்படி அவர் தன் தலைக்குள் உணர்ந்தாலும் அது நேர்மையாக இருக்கும் பட்சத்தில் அது சிறுவிளைவுகளால் ஆனது மட்டும் தான். எமக்கு தொழிலாள வர்க்கத்தின் மேல் நம்பிக்கையிருப்பதால் என்ன விவாதிக்கப்பட வேண்டும், எது கூடாது என்று முன்னறிக்கைகளை வழங்க வேண்டிய தேவையிருப்பதாக நாம் நினைப்பதில்லை. `என்ன செய்ய வேண்டும்?` என்பதனதும் `இலக்கியமும் புரட்சியும் `` என்பதனதும் உயிர்நாடியாக இதுதான் இருக்கின்றது.

நாம் தொடக்கூடாத புனிதப்பொருட்கள் பற்றிய விஷயத்தில் இருக்கையில், சிலநேரங்களில் இன்றும் நாம் பாதிக்கப்படும் போலி நாணத்தின் மிச்ச சொச்சங்களைப் பற்றிக் குறிப்பதற்கு என்னை அனுமதிக்கவும். 1883ல் சோசியல் டெமாக்ரட்டுக்காக ஏங்கல்ஸ் எழுதிய கட்டுரையிலிருந்து மேற்கோள்காட்டுதலை நான் தடுக்க முடியாது. அந்தக் கருத்தைச் சொல்ல ஏங்கல்சை மேற்கோள் காட்டுதல் தேவையில்லை. ஆனால் கட்டுரை பெருமகிழ்வூட்டுகிறது.

அந்தப் பகுதியானது ஜேர்மன் கவிஞரும் புரட்சியாளருமான ஜோர்ஜ் வீர்த்துக்கு (Georg Weerth) படையல் ஆகும். அவர் நொயூ றைன்னீச பத்திரிகையின் (Neue Rheinische Zeitung) கலாச்சார ஆசிரியர் ஆவார். இப்பத்திரிகை மார்க்ஸ் எங்கெல்சால் 1848-49ல் நடாத்தப்பட்டது.

எங்கெல்ஸ் எழுதுகிறார். ``வீர்த் மிதமிஞ்சி நிற்கக் கூடிய ஒரு விஷயம் இருந்தது, இங்கு அவர் ஹெய்னை விட வீறார்ந்த நடைகொண்டவர் (ஏனெனில் அவர் ஆரோக்கியமான மற்றும் குறைந்த அளவு செயற்கைத் தன்மை கொண்டிருந்தார்). ஜேர்மன் மொழியில் கோதே மட்டுமே அவரை விஞ்சுவார்: அது இயற்கையான சூதுவாதுகளற்ற உணர்வாகவும் மெய்சிலிர்க்க வைக்கக் கூடியதாகவும் வெளிப்படும். நொயூ றைன்னீச பத்திரிகையின் தனிப்பட்ட கதை-கட்டுரைப்பகுதியில் நான் திரும்ப பிரசுரிக்க இருப்பது, சோசியல் டெமாக்கிரட்டின் பெரும்பாலான வாசகர்களைத் திருக்கிடச் செய்யலாம். ஆனால் அப்படிச் செய்வதற்கு எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. இருப்பினும், ஜெர்மன் சோசலிஸ்டுகளும் கூட, ஜெர்மன் பிளின்ஸ்டைன் தப்பெண்ணங்களின் பைத்தியக்கார ஒழுக்க போலி நாணங்களின் கடைசித் தடங்களை வெற்றிகரமாக கைவிடும் நேரம் வரும் என்று சுட்டிக்காட்டுவதை என்னால் தவிர்க்க முடியாது. -எப்படியோ அவை கள்ளத்தனமான நாற்றத்திற்கு மூடுதிரையாக மட்டுமே சேவைசெய்யும்.

``இதுதான் உச்ச நேரம், ஜேர்மன் தொழிலாளர்கள், ரோமானிய தேசத்தின் மக்கள், ஹோமரின், பிளேட்டோவின், ஹொராசின் மற்றும் ஜூவெனலின், பழைய ஏற்பாட்டின் மக்கள் மற்றும் நொயூ றைன்னீச பத்திரிகையின் மக்கள் செய்வதுபோல், குறைந்தப் பட்சம் இயல்பாய் மற்றும் எளிதான வகையில் பேசுவதற்கு பழக்கப்படுத்திக் கொள்வார்கள், தினந்தோறும் இரவில் அல்லது பகலில் அவர்கள் தாமே செய்யும் இந்த இயற்கையான, இன்றியமையாத மற்றும் மிக இன்பகரமான விஷயங்களை செய்யப் பழக்கப்படுத்திக் கொள்வார்கள்.

5. கலையும் சமூகப் புரட்சியும்

ட்ரொட்ஸ்கி தனது `வர்க்கமும் கலையும்` என்பதில், ஏன் மார்க்சியர்கள் புஷ்கினை- அடிமைகளை உடைமையாகக் கொண்ட வர்க்கக் கவிஞனை தொழிலாளர்களுக்கு முன்மொழிய வேண்டும்? என்று கேட்டிருந்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன். இது கலைக்கும் சமூகப் புரட்சிக்கும் இடையிலான உறவுகள் பற்றி அழுத்தமாக குறிப்பதால் நான் இப்புள்ளிக்கு மீண்டும் வர நினைக்கிறேன்.

`ஆன்ம அனுபவம்` என்ற சொற்றொடருக்கு திரு எவான்ஸ் ஆட்சேபனை எழுப்புகிறார். அவரது கருத்து வேறுபாடுடன் ஒத்துப் போகும்வகையில் பெரும் மக்கள் தட்டுக்கள் ஆன்ம வளம் குன்றலானது, இன்று சோசலிச இயக்கத்தின் வளர்ச்சிக்கு எதிரான யதார்த்தமான பொருளாக, ஒரு தடைக்கல்லாக தொடர்ந்து இருந்து வருகிறது. தங்கள் அரசியல் திட்டங்களுக்கும் முன்னோக்குகளுக்கும் கவனமளிக்கக் கூடிய ஆதரவாளர்களை திரட்டுவதென்பது மார்க்சியர்களுக்கு குறிப்பிட்ட அளவு சவாலாக இருந்து வருகிறது. தற்போதிருக்கும் நிலையில் பொது நனவை வளப்படுத்தலின் தேவையை குறைத்து மதிப்பிடல் மிகவும் பொறுப்பற்ற தன்மையே.

எப்படி ஒரு புரட்சி நடந்தேறுகிறது? புறச் சூழ்நிலைக்குச் சாத்தியமான சோசலிச பிரச்சாரத்தாலும் கிளர்ச்சியாலும் மட்டுமா? அப்படித்தான் அக்டோபர் புரட்சி நடந்தேறியதா? கடந்த சில வருடங்களாக ஒரு கட்சியாக இது பற்றிய சிந்தனையில் கணிசமான நேரத்தை செலவிட்டிருக்கிறோம். நாமெடுத்த முக்கியமான முடிவுகளில் ஒன்றாக 1917 புரட்சி ஒரு தேசிய அல்லது சர்வதேசிய அரசியல் சமூக நிகழ்ச்சிப் போக்குகளால் மட்டும் விளைந்ததல்ல, மாறாக இது சர்வதேச சோசலிச முதலாளித்துவ - கலாச்சாரத்தை அரசியல் சமூகச் சிந்தனைகளை, அதன் சாதனைகளான கலையையும் விஞ்ஞானத்தையும் தன்மயமாக்கி விட்ட மற்றும் தனது இயங்கு பாதைக்கு கொண்டுவந்த சோசலிச கலாச்சாரத்தை-கட்டி எழுப்புவதற்கான பல ஆண்டுகால முயற்சிகளின் விளைவாகவும் இது இருக்கிறது. தமது முக்கிய குறிக்கோளான முதலாளித்துவத்துக்கு நனவு பூர்வமாக ஒரு முடிவுகட்டிய புரட்சியாளர்களாலும் அவர்களது அரசியற் கொள்கைகளாலும் 1917 புரட்சிக்கான புத்தி ஜீவித அடிப்படை அமைந்திருந்தது என்பது உண்மைதான். ஆனால் ஒரு புரட்சிகர பிரவாகத்தை சாத்தியப் படுத்துவதற்கான தேவையை உண்டுபண்ணும் ஓடைகள் மற்றும் கிளைநதிகள் என்பன அளவு கணக்கில்லாதவை, ஒன்றுக்கொன்று முரண்பட்டும் இணைந்தும் தொடர்புபட்டிருக்கும் மிக சிக்கலான அமைப்புக்களால் பாதிப்புக்குள்ளாகுபவை.

பழைய சமூகத்தின் தப்பெண்ணங்கள் பழக்க வழக்கங்கள் மற்றும் கற்றுக்கொண்ட நடைமுறைகள் இவற்றில் இருந்து பாகுபட்டு ஒரு பெருந்தொகை மக்களின் திடீர் எழுச்சிக்கான சூழ்நிலையின் உருவாக்கம் என்பது பல ஆண்டுகளாக, ஏன் நூற்றாண்டுகளாக கட்டியெழுப்பட்டு வந்திருக்கிறது. தப்பெண்ணங்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் என்பன வெளிப்படையான சுதந்திரமான தமது சொந்த எதிர்ப்பு சக்தியாலேயே தமது வாழ்க்கைக் காலத்தை முடித்துக் கொள்ளவல்ல-இந்த வரலாற்று அழுத்தத்தை ஏற்படுத்தல் மற்றும் ஒரு புரட்சிகரச் சூழ்நிலையை உருவாக்குதல் என்பது ஒரு அரசியல் செய்கை மூலமாக மட்டும் திட்டமிடக்கூடியதல்ல.

எல்லாம்வல்ல சோசலிச மனித குலம் என்பதை ஒரு எதிர்காலப் படைப்பாக -அது அதிதூரமான எதிர்காலமல்ல, நாம் நம்புகிறோம். சமூகப் புரட்சி ஒரு யதார்த்தமாகும் ஆனால் மனிதரின் இதயத்திலும் மனத்திலும் எவ்வித மாற்றமும் தேவையில்லை என்று சொல்வதோடு அது ஒத்ததாகாது. மக்கள் குழுக்களை அழகியலற்று மரக்கச் செய்து, அவர்களை மிகவும் பிற்பட்ட கருத்துக்களாலும் மனநிலையாலும் பாதிக்கச் செய்யும் முயற்சியில் முன்னிற்கும் தொழில் நுட்ப பிரமிப்புக்கள் கொண்ட கலாச்சார பின்தங்கலும் தேக்கமும் நிறைந்த ஒரு காலப் பகுதியில் நாம் வாழ்கிறோம்.

மக்கள் திரளின் முக்கிய பகுதியினரை கூர்மையடையச் செய்வது -அதாவது பொய்யில் இருந்து உண்மையை வேறுபடுத்தியறியவும் முக்கியமில்லாததையும் முக்கியமானதையும் மற்றும் தனது சொந்த அடிப்படை நலன்களில் இருந்து தனது மிகமோசமான எதிரிகளின் நலன்களை வேறுபடுத்தி அறியவும் உதவும் கூட்டுத்திறமை, பெரும்பான்மை மக்களை உதாரண குணமுள்ளவர்களாகவும் தங்களது சக மனிதர்களை மட்டும் நினைக்கக்கூடிய பெரும் தியாகங்களைச் செய்பவர்களாகவும் உள்ள அளவுக்கு அவர்களது ஆன்ம இயல் மட்டத்தை உயர்த்தல் என்பன போன்ற புத்திஜீவிதத்தை, ஒழுக்கத்தை உயர்த்துதல் என்பது மனிதக் கலாச்சாரத்தின் முன்னேற்றத்தின் உற்பத்தியாக மட்டுமே முடியும்.

அரசியல் மற்றும் விஞ்ஞான சிந்தனைகளில் வெளிப்படாத வாழ்க்கை பற்றிய மக்களைப் பற்றிய, மற்றும் ஒருவரைப் பற்றிய விஷயங்களை கலை வெளிப்படுத்துகிறது. ஒரு ஆழமான மட்டத்தில் மனிதகுலம் முழுவதையும் ஒரு கண்ணுக்கு தெரியாத இழையால் இணைக்கும் வல்லமை கலையின் பெரும் சக்திக்கு மட்டுமே உண்டு. மனித குலம் ஒரு முழுமையை அடைய தம்மைப் பற்றியதும் உலகைப் பற்றியதுமான உண்மை அதற்குத் தேவைப்படுகிறது. கலை அதைக் கொடுக்கிறது.

கடந்த நூற்றாண்டுகளின் கலை மனிதனை மிக சிக்கலாயும் நெகிழ்ச்சியுடையவனாகவும் ஆக்கியது, ``கலாச்சாரமும் சோசலிசமும்`` இல் ட்ரொட்ஸ்கி குறிப்பிடுவது போல், துல்லியமாக சாதாரண ஒரு தொழிலாளிக்கு உண்மையான தனித்துவம் இல்லாமல் இருக்கிறது என்பதை `இலக்கியமும் புரட்சியும்` ல் அவதானித்திருந்த ட்ரொட்ஸ்கி, தனித்துவத்தின் புறவயத் தரத்தையும் அகநிலை நனவையும் உயர்வடையச் செய்வதில் கலை பங்களிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர் சொல்கிறார்: சேக்ஸ்பியர், புஷ்கின், டோவ்ஸ்கி முதலியோரிடமிருந்து தொழிலாளி எடுத்துக்கொள்ளக் கூடியது மனிதரின் தனிப்பட்ட சிறப்புப் பண்பின் சிக்கலான கருத்தியல் அதன் பேரார்வம் மற்றும் உணர்வுகள் மற்றும் ஆழமான மிக நுணுக்கமான மனோவியற் சக்திகள் பற்றிய புரிதல்கள் மற்றும் அவற்றின் நனவிலியின் பங்கு ஆகியனவே இருக்கும். இறுதி ஆய்வில் தொழிலாளி வளம் பெற்றவராக இருப்பார்.``

கலை கொண்டிருக்கும் பாதிக்கின்ற அல்லது நிலைகுலைவிக்கின்ற பண்புதான் என்ன? அந்தப் பண்பு முழுமையாக தானே வெளிக்காட்டிக் கொள்கிறதா அல்லது கலையில் வெளிப்படையான சமூக அரசியல் உள்ளடக்கத்தை வழங்குவதன் மூலமாக வெளிக்காட்டிக் கொள்கிறதா? வேறுவிதத்தில் பார்த்தால், இசைக்கருவியாளர்களின் இசை, அருவமான பூச்சு ஓவியங்கள், காதல்கவிதை, புகழ்பெற்ற திரைப்படம் முதலியவற்றில் இதேபோன்று நிலைகுலைவிக்கும் பண்பு பற்றி ஒருவர் பேசமுடியுமா? நிச்சயமாக முடியும், ஒவ்வொருவராலும் முடியவேண்டும் என்றே நான் நம்புகிறேன்.

பொறுத்துக்கொள்ள முடியாத யதார்த்தத்துக்கு எதிராக, மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் முழுமையான நிறைவான இருத்தலின் முயற்சி, சுதந்திரத்துக்கான தூண்டல் விசை என்பது முற்று முழுதானது. எழுத்தியக்கம் எதிர்ப்பின் தொடக்கம் என்று பிரெட்டன் சொல்கிறார். நனவுபூர் வமானதோ நனவுபூர்வமற்றதோ இந்த எதிர்ப்பே ஒவ்வொரு கலை ஆக்கத்திலும் உள்ளது.

உண்மையான ஒரு கலைப்படைப்பு அதை வைத்திருப்பவரிடம் (வாசகசனிடம்) தாக்கமுண்டு பண்ணுவதோடன்றி, அவருள்ளே சக்திமிக்க ஆற்றல்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது மற்றும் அவற்றைக் கட்டவிழ்த்து விடுகின்றது. அது அவரிடம் இதுவரை கனவில் மட்டுமே இருந்த வாழ்க்கைக்கும் அப்படியாகவே இருக்கின்ற வாழ்க்கைக்கும் இடையிலான முரண்களை, பிராய்ட் சொன்னதைப் போன்ற `மனோவிய இயங்கு முறையின், ஆழமான தட்டுக்களில் இருந்தால் மட்டும் ``புள்ளிக்கு உயர்ந்த விசை நிலையின் புள்ளிக்கு கலை கொண்டு வருகிறது. கலைப்படைப்பானது சிற்றின்ப மற்றும் அழிவுகரமான சக்திகளைக் கட்டவிழ்த்துவிடுகின்றது, ஒரு தனிமனிதனின் உடனடிச் சூழ்நிலையிலும் -தற்போதைய ஒடுக்கு முறைச் சமூக அமைப்பிலும் நிறைவு செய்ய முடியாத ஆசைகளையும் தேவைகளையும் தூண்டுவிக்கின்றது. ஆசைகளால் உருவான தேவைகள் ஒரு பதிலை எதிர்பார்க்கின்றது. அது இறுதியில் சமூகப் புரட்சியில் மட்டுமே அதற்கான பதில் கிடைக்கக் கூடியதாய் கண்டுகொள்கின்றது. அழகியல் உணர்வுக் காட்சிகள் பற்றி பிரெட்டன் குறிப்பிடுகையில் ``அவற்றின் தன்மை திகைப்பை உண்டாக்குவதாயும் புரட்சிகரமானதாயும் இருக்கிறது. ஏனெனில் அவை வெளி யதார்த்தத்தில் தமக்கென பதிலை உடனடியாக எதிர்பார்க்கின்றன``

இவ்வகை விஷயத்தில் அர்த்தம் தரக்கூடிய அரசியல் தன்மை இன்றும் அவிழ்க்கப்படாத நிலையிலும் மார்க்சின் ஆரம்பகால எழுத்துக்கள் சிலவற்றை நான் நம்புகிறேன். அவர் மிகத்திறமையாக பழமையான சளைக்காத விடுதலைக்கான முயற்சியை, மனிதனின் கலைத்துவ முயற்சிகளில் இருந்து எப்பேர்ப்பட்ட சமூக நிலையிலும் அது விடுபட்டுப் போய்விடுவதில்லை என்பதை அவர் கவனித்திருந்தார்.

1843 ல் அவர் எழுதினார்: ``ஆகவே எமது குறிக்கோள்களாக இருக்க வேண்டியது, கொள்கைகளுக் கூடாக நனவைப் புதுப்பித்தலன்றி, `மதம் மூலமாகவோ அரசியல் வடிவம் மூலமாகவோ வெளிப்படும் மறைவான (மாயமான) நனவை ஆய்வுசெய்தல் மூலமாகவோ நனவை புதுப்பிக்க முடியும். உலகம் அடைவதற்காக கனவுகண்டு கொண்டிருந்த சில விஷயங்களை, யதார்த்தத்தில் பெற்றுக் கொள்ள அதுபற்றி அது நனவுபூர்வமாக மட்டும் இருக்க வேண்டும் என்பதற்கு இனி அது ஆதாரமாக அமையும். இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் ஒரு மனக்கோட்டை போட்டு பிரித்தல் என்ற கோள்விக்கிடமின்றி, கடந்த காலத்தைய சிந்தனைகளை உணர்தல் என்பதற்கு ஆதாரமாக இது அமையும். இறுதியாக மனித குலம் புதிய வேலையை தொடங்கவில்லை, மாறாக நனவு பூர்வமாக பழைய வேலையை சக்தி மிக்கதாக்குகிறது என்பது தெளிவாகும்.`` (அழுத்தம் எனது)

மனிதகுலத்தின் நனவுபூர்வமான மற்றும் நனவுபூர்வமற்ற வாழ்க்கையில் ` சில விஷயங்களை பற்றிய கனவை `` கொண்டு வருதல் கலையின் என்றென்றைக்குமான பணியாகும்.

6. முடிவுரை

இவ்வறிக்கையை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக எமது சொந்தக் குறிக்கோள் பற்றி இங்கு சுருக்கமாக குறிப்பிட விரும்புகிறேன். கலைவட்டத்திற்கு பொதுவாக கலாச்சாரத்தைப் பற்றி மிகுந்த பொறுப்புடையதாக இன்று ஒரு புரட்சிகரக் கட்சி இருக்க வேண்டியிருக்கிறது. அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னால் சோலிஸ்ட்டுக்கள் தாமாகவே கிடைக்கப் பெற்றதாக எடுத்துக்கொண்ட நிறைய விஷயங்கள் உதாரணத்திற்கு முதலாளித்துவ ஒழுக்கவியல், தேசப்பற்று, சட்டம் ஒழுங்குக்கான சக்திகள், மத மூடநம்பிக்கைகள் முதலியவற்றின் மீதான அடிப்படை எதிர்ப்பு-இன்றைய புத்திஜீவித வட்டங்களில் காணக்கிடைக்காத ஒன்றாகவே இருக்கிறது என்பதை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். கலாச்சாரத்தை மீள்கட்டமைப்புச் செய்தல் அல்லது ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குதல் என்பது ஒரு சாதாரண விஷயமோ அல்லது ஒரு இரவில் சாதித்துவிடக்கூடிய விஷயமோ அல்ல.

மனித குலத்தின் மேதமை அழிந்து விடவில்லை, மாறாக ஸ்ராலினிசத்தின் மோசமான தாக்குதலால் அது தடைப்பட்டுள்ளதுடன், கடந்த அரைநூற்றாண்டாக கலாச்சார வாழ்க்கையின் விஞ்ஞான தொழில்நுட்ப பக்கமாக மேதமை ஒருபக்கமாய் ஒதுக்கப்பட்டு வந்துள்ளது என்பதையும் முன்பே சுட்டிக்காட்டியுள்ளோம். கலைத்துவ சமூக புத்துயிர்ப்பு என்பது தவிர்க்கப்பட முடியாதது. அனேகமாக இந்தக் கூட்டம் அது ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பதை நிரூபிக்கின்றது எனலாம்.

நான் எதிர்பார்த்ததுக்கும் அதிகமாக இன்று இந்த `ஒரு பக்கம் ஒதுக்குதல் `` என்ற சொல்லை பல தடவை உபயோகித்துள்ளேன். நான் இது பற்றிய அவதானத்துடன் இந்த ஒருபக்கமாக்குதலுக்கு எதிரான போரை நாம் அறிவிக்கலாம் என்பேன். வரவிருக்கும் சமூக கொந்தளிப்புக்கள் மார்க்சியர்களிடம் முன் என்றும் இல்லாதபடி எல்லாப்பக்க அவதானங்களையும் கேட்கும்.

`புரட்சிகரமும் அரசியலும்`` என்ற ஒரு பக்கச் சார்பில் புறவய சாயங்கள் இருக்கும் - இலக்கியமும் புரட்சியும் என்ற புத்தகத்தில் ஒருவித வருத்தத்துடனும் கவலையுடனுமே இதுபற்றி கூறியதை - இன்று நாம் கூறுவது இங்கிருக்கும் யாரையும் அவமானப்படுத்தாது என நான் நம்புகிறேன். 1930 களின் தொடக்கத்தில் ஸ்ராலினிச மயமாகிக் கொண்டேயிருந்த பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பாக வெளிப்பட்டதாக இருந்தாலும் அன்திரே பிரட்டனின் எச்சரிக்கை இன்னும் மனத்தில் இருத்தப்பட வேண்டியது பயனுள்ளது. `` ஒருவர் தன் குறிக்கோளை அடைவதற்கு தொடங்கிய தருணத்தில் இருந்து முற்றிலும் தடைசெய்யப்பட்ட கயிற்றின் மீது நடந்து கொண்டு மேலேயோ கீழேயோ மட்டுமே பார்க்க கவனம் கொள்ளக்கூடியதாயிருப்பதானது ஒரு புரட்சியாளன் எடுத்துக் கொள்ளும்- சிரத்தையாக இருக்கிறது.!"

பிரிட்டிஷ் சோசலிஸ்ட் லேபர் லீக்கினதும் பின்னால் தொழிலாளர் புரட்சி கட்சியினதும் தலைவரான ஜெர்ரி ஹீலி, கலாச்சாரப் பிரச்சனைகள் பற்றிய தனது அறிவு போதாமையை ஒத்துக் கொண்டதோடு, `எமக்கு நேரமில்லை, அது பற்றி எல்லாம் படிப்பதற்கு எனக்கு நேரமில்லை ` என்று 60 களின் இறுதியிலும் 70 பதுகளின் தொடக்கத்திலும் சொல்லி வந்தார். போருக்குப் பிந்திய காலப்பகுதியில் ட்ரொட்ஸ்கிய இயக்கம் சந்தித்த பாரிய கஷ்டங்களுக்கு இடையில் இதுபற்றிய ஒரு ஆழமான ஆய்வு புறநிலைச் சாத்தியமான ஒன்று என்று விவாதிக்கவோ அல்லது கருத்துத் தெரிவிக்கவோ கூடிய நிலையில் நான் இல்லை. சில புறநிலை உண்மைகள் பற்றி மட்டுமே நான் பேசுகிறேன். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் எமது கட்சியின் `ஒரு பக்கத்` தன்மையானது, ஒரு பக்கம் கலாச்சாரம் பற்றிய, பண்பாடற்ற, பிற்போக்கு மற்றும் கம்யூனிச எதிர்ப்பு தொழிலாளர் அதிகாரத்துவ மேலான்மையினது தொழிற்பாட்டின் பகுதியாகவும் மார்க்சிய போக்கின் தனிமைப் படலாலும் என்று நான் நினைக்கிறேன்.

ஹீலியின் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமை சீரழிவுக்கும் அதன் தோல்விக்கும் காரணம் கலாச்சார விஷயங்களின் முக்கியத்துவத்தை கவனமெடுக்காததே என்று நான் கூறவில்லை. குறிப்பிட்ட அளவு மத்தியதர வர்க்க புத்தி ஜீவிகளால் வைக்கப்பட்ட சவால் உட்படி 1970 களில் புது அரசியல் பிரச்சனைகள் உருவாக்கியபோது பல கேள்விகளுக்கு இத்தலைமை தன்னை தயார்படுத்திக் கொள்ளாதது, அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் பாதிக்கப்பட்டது என்று என்னால் வாதிட முடியும். இந்த தயார்படுத்திக் கொள்ளாத நிலை அதன் சீர் குலைவுக்கான காரணியாகவிருந்தது.

முதலாளித்துவம் சம்மந்தமான எல்லாவகை சிந்தனைகளும் மார்க்சியத்தை நோக்கியே உந்தப்படுகின்றன என்பதை நவீன வரலாறு நிரூபித்திருக்கிறது. தலைக்குள் நல்ல பார்வை இருப்பவர்களும் ஏதாவது விஷயத்தைச் சொல்ல விரும்புவர்களுமான கலைஞர்களும் புத்திஜீவிகளும் தவிர்க்க முடியாமல் இக்கட்சியை நோக்கி கவர்ந்திழுக்கப்படுவர். நாம் இணைந்து செல்கிறோமென்ற பதிலை வழங்குவதற்கும் முயற்சியின்றி திடீரென்று ஏற்பாடு செய்வதற்கான சலுகைக்கும் நாம் அனுமதியளிக்கப்படக் கூடாது.

இக் கல்விகூடலும் கடந்த கால எம்கட்சியின் அபிவிருத்திகளும் பெரும் நம்பிக்கைக்கு காரணமாக இருக்கின்றன என நான் நினைக்கிறேன். எமது கட்சி தெளிவான பதாகையை உடையது. நாங்கள் தான் முதலாளித்துவத்தினதும் அதிகாரத்துவத்தினதும் பிரகடனம் செய்து கொண்ட எதிரிகள். இந்த அடிப்படையில் வேறு எந்த இயக்கமும் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்க முடியாது. வேறு எந்த இயக்கமும் கலைஞர்களுக்கு நமது வேண்டுகோளை விடுக்க முடியாது. 1838ம் ஆண்டு அறிக்கையை ட்ரொட்ஸ்கியும் பிரேட்டனும் முடித்திருந்ததில் எந்த சொற்களையும் மாற்றிவிட எனக்கு எக்காரணமும் இல்லை.

"எங்கள் குறிக்கோள்:

"கலையின் விடுதலை-புரட்சிக்காக.

"புரட்சி-கலையின் முழு விடுதலைக்கும்!"