World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா:இந்தியா

Mounting criticism of the Indian government as earth quake toll rises

பூகம்ப சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும்வேளையில் இந்திய அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களும் அதிகரிக்கின்றன

Deepal Jayasekera
6்February 2001

Use this version to print

ஜனவரி 26 அன்று மேற்கு இந்தியாவில் ஏற்பட்ட அழிவுகரமான பூகம்பத்தைத் தொடர்ந்நு, சாவு எண்ணிக்கையும் அழிவும் தொடர்ந்து அதிகரித்துவரும் வேளையில், பரந்த அளவில் கட்டிடங்கள் நொறுங்கிப் போனதற்கு காரணமாக இருந்த கீழ்த்தரமான கட்டிடக் கட்டுமானம் தொடர்பாகவும் அரசாங்கத்தின் மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகள் போதுமான அளவு இல்லாமை பற்றியும் பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஞாயிறு அன்று, மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,435 ஆகவும் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை 66,758 ஆகவும் இருந்தது. குஜராத்தின் வணிகத் தலைநகரான அகமதாபாத்திலும் அதைப்போல புஜ், அஞ்சார், பச்சாவ் போன்ற பெரிய நகரத்திலும் மற்றும் தொலைவில் இருக்கிற கிராமங்களிலும் தோண்டுதல் தொடருகையில், மேலும் பல சடலங்கள் கிடைக்கலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் உறுதிப் படுத்துகின்றன. இறந்து போனவர்கள் பற்றிய மதிப்பீடுகள் 35,000 லிருந்து 1,00,000 வரை வேறுபடலாம் என்று தெரிகிறது.

பூகம்பம் ஏற்பட்டு ஒருவாரத்திற்கு மேலாகியும் உயிர் பிழைத்தோர் பலருக்கு இன்னும் தங்கும் இடவசதி இல்லாததுடன் குளிரில் வெளியில் தூங்குகின்றனர். மிகவும் பாதிக்கப்பட்ட நகரான புஜ்-ல் கடந்தவார இறுதியில் நிலைமைபற்றி செஞ்சிலுவைச்சங்க அதிகாரி டாக்டர் ரிச்சர்ட் முன்ஜ் குறிப்பிட்டார்: "நாங்கள் அழிந்து போன கிராமங்களையும் அழிந்து போன வீடுகளையும் பலர் கூடாரம் எதுவும் இல்லாமல், போர்த்திக் கொள்ள போர்வை இல்லாமல் வீதிகளில் படுத்துறங்குவதைக் கண்டோம். "கடுமையாகப் பாதிக்கப்பட்ட இரண்டாவது இடமான அஞ்சாரில், உயிர்பிழைத்தவர்கள் உதவி பற்றாக்குறைபற்றி குறைகூறினர். "எவ்வளவு காலம்தான் நாம் வெளியில் வசிப்பது? எங்களுக்கு உடனடி உதவிதேவை. இந்த நாட்டில் வீடு என்பது ஒரு மனிதனின் வாழ்நாள் சேமிப்பால் கட்டப்படுகிறது என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று முகமதுஹாசன் குறிப்பிட்டார்.

கிராமங்களில் உள்ள நிலையோ இன்னும் மோசமானது. பெப்ரவரி 5ம்தேதி வெளியான இந்துஸ்தான் டைம்ஸில் வெளியான கட்டுரை, காவ்தா நகரின் அருகே உணவு, கூடாரங்கள், போர்வைகள் அல்லது அவசரகால அளிப்புக்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் வீடற்றவர்களைப்பற்றி விவரித்தது: "காவ்தாவைச் சுற்றிலும் உள்ள 25 கிராமங்களை ஒரு அதிகாரியோ அல்லது ஒரு அரசியல்வாதியோ கூட வந்து பார்க்கவில்லை. இந்த வட்டாரத்தில் பூகம்பம் ஒவ்வொரு வீட்டையும் தரைமட்டமாக்கி 100 பேர்களைக் கொன்றும் 25,000 பேர்களுக்கும் அதிகமானோரை வீடற்றவர்களாகவும் ஆக்கியுள்ளது. அது முதற்கொண்டு ஒரு அதிகாரியோ அல்லது ஒரு அரசியல்வாதியோகூட வந்து பார்க்கவில்லை. புஜ்-ல் நிவாரண உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனை முகாமை நிறுவியுள்ள இராணுவத்தைத்தவிர, காவ்தா மற்றும் அதன் பெரும்மக்கள் துயரமும் அரசாங்கம் மற்றும் உலகின் ஏனைய பகுதியினரைப் பொறுத்தவரை இல்லை.

சர்வதேச செஞ்சிலுவைச்சங்க மற்றும் செம்பிறைச்சங்க கூட்டமைபு புஜ்க்கு நடமாடும் மருத்துவமனையையும் நிவாரணக் கருவிகளையும் வான்வழி கொண்டுவந்து இறக்கினர். ஆனால் அதற்கு அதிக அளவில் தார்பாலின்கள், பிளாஸ்டிக் விரிப்புகள், போர்வைகள் மற்றும் கதகதப்பான உடைகள், காலரா தடுப்பு பொருட்கள், உயர்புரத பிஸ்கட்டுகள் மற்றும் தூய்மையான குடிநீர் அளிப்புக்கள் தேவைப்படுகின்றன என்று கூறின. அதன் பேச்சாளர் டெனிஸ் மக்ளின் கூறினார்: "தளத்தில் தவிர்க்க முடியாதபடி நம்மால் அதற்கு ஈடுகொடுக்க முடியாதபடி தேவைகள் அதிகமாக இருக்கும்."

பூகம்ப மையத்திலுள்ள கட்ச் மாவட்டத்திலிருந்து இலட்சக்கணக்கான மக்கள், பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சிகள், மோசமான உணவு, குடிநீர் தட்டுப்பாடு, தங்கும் இடவசதியின்மை மற்றும் சூறையாடல் நடைபெறுவதன் காரணமாக வெள்ளம்போல் வெளியேறுகின்றனர். உதவி மட்டுப்படுத்தப்பட்டதாக மட்டும் அல்லாமல், முறையாக ஒருங்கிணைக்கப்படவும் இல்லை. டெல்லியிலுள்ள உயர்மட்ட பேரழிவுக்கான நிர்வாகக் குழுவிற்கு செய்தி அறிவிக்க ஏழுமணிநேரம் எடுத்ததாகவும் உதவி அளிக்கத் தொடங்குவதற்கு நீண்ட நேரம் எடுக்கக் கூடியதாகவும் இருந்தது என்று கூறப்படுகிறது. மீட்புக்குழுவினர் எங்கு போகவேண்டும் என்று கூறுவதைக்கேட்க காலத்தை வீணாக்கினர். நிவாரண அளிப்புகள்--கூடாரங்கள், போர்வைகள் உணவு மற்றும் மருந்துப்பொருள்-- போக்குவரத்து வசதி பற்றாக்குறையினால் அல்லது எங்கு உதவி அதிகம் தேவைப்படுகிறது என்ற தெளிவு இல்லாததால் ஓடுபாதையில் குவிக்கப்பட்டிருந்தன.

பார்வையிடவரும் உயர் பதவியாளர்கள் உதவி மற்றும் மீட்புக்குழுவினர் மீது முன்னுரிமை எடுத்துக் கொள்கின்றனர். நியூயார்க்டைம்ஸின்படி, "பூகம்பம் நடந்த சில தினங்களுக்குப் பிறகு "புஜ்ஜை பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் பார்வையிட்டபொழுது, மீட்புக் குழுவினரால் பயன்படுத்தப்படும் சாலைகள் மூடப்பட்டன, அவசர வானூர்திகள் பல மணி நேரங்களுக்கு ரத்துச்செய்யப்பட்டன. நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டுவரும் அதிகாரிகள் வேலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர், அதுவும் பலமணி நேரங்களுக்கு, அப்போதுதான் திரு வாஜ்பாயியின் கெளரவ வரவேற்புக்கு அவர்களால் வானூர்தி நிலையத்தில் நிற்கக்கூடியதாக இருக்கும் என்று இந்திய செய்தித்தாள்கள் அறிவித்தன."

பிரண்ட்லைன் இதழ் குழப்பத்தைப்பற்றி விவரித்தது: "இதனை அழிவை எதிர்கொள்ளும் தயார் நிலையாகக் கருதவேண்டும்: பூகம்பத்தால் பாதிக்கப்படாத, மாநிலத்தின் தலைநகரான காந்திநகரில் வேலைக்கட்டுப்பாட்டு அறையை அமைப்பதற்கும் புஜ் நகருடன் செயற்கைக்கோள் வழி தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்தவும் குஜராத் அரசாங்கத்திற்கு இரண்டு நாட்கள் எடுத்தன. தெளிவான நடவடிக்கைக் குறிப்புக்கள் வைக்கப்படவில்லை, ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூரில் இருந்து கூடுதல் மண் அகற்றும் சாதனங்கள் வரும்வரை காத்திருக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டது. பெரும் கட்டிடம் இடிக்கும் கருவிகள் பல தாழ்வான பகுதிகளை அடைய முடியவில்லை. சிறிய மாதிரிகளுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை....பூகம்ப அழிவை எதிர்கொள்ளும் எந்தத்திட்டமும், எடுத்துக்காட்டாக, மருத்துவமனைகள் அழியலாம் மற்றும் அதுபோன்ற சூழ்நிலைக்குப் பொருந்துமாறு நடவடிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டும்."

பிரதமமந்திரி வாஜ்பாய் தமது அரசாங்கம் தயாரற்ற நிலையில் இருந்ததாக மறைமுகமாக ஒத்துக்கொண்டார். அவர் அகமதாபாத்தில் நிருபர்களிடம் பேசுகையில்: "அத்தகைய பேரழிவினை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் நாடு இருக்கவில்லை." என்றார். மறுபுணரமைப்புக்கான உதவி அளிக்க 238 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்ட அடுத்த வரவு- செலவுத் திட்டத்தில் 2% சிறப்பு கூடுதல் வரிவிதிப்பு அறிமுகப் படுத்தப்படப் போவதை அறிவித்துள்ளார். இன்னுமொரு 5 பில்லியன் (108மில்லியன்$) ரூபாய்கள் சேத நிவாரண நிதியிலிருந்து வரவிருக்கிறது மற்றும்200 மில்லியன் ரூபாய்கள் (4மில்லியன்$) பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து வரவிருக்கிறது. நிவாரணம் மற்றும் மறு புணரமைப்பு பணிகளுக்காக 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகின்றன என்ற மதிப்பீட்டினால் அந்தத் தொகை சிறியதாகிப் போய்விட்டது.

குற்றச்சாட்டுக்களை திசைதிருப்பும் முகமாக, பிரதம மந்திரி வாஜ்பாய் குஜராத் சூழ்நிலையை விவாதிக்க கடந்தவார இறுதியில் புதுடெல்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். காங்கிரஸ்(ஐ) மற்றும் சிபிஐ(எம்) உட்பட -- எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன்--கூட்டமானது, எதிர்கால அழிவுகளை எதிர்கொள்ள பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களையும் அதேபோன்று வல்லுநர்களையும் உள்ளடக்கிய இன்னொரு குழுவை அமைக்க உறுதி அளித்தது.

குஜராத் மாநில அரசாங்கமும் கூட குற்றச்சாட்டுக்கு ஆளாகியது. இந்துஸ்தான்டைம்ஸ்," (குஜராத் முதலமைச்சர்) கேஷுபாய்படேல் இந்த பூகம்பத்தில் தப்பிவிட்டாரா? "என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையில் வெளிப்படையாக முன்வைத்து .கட்டுரையானது, "1998 ஜூன் புயல், 2000ல் வறட்சி மற்றும் இப்பொழுது பூகம்பம்--ஆகிய மூன்று பேரழிவுகள் மாநிலத்தைத் தாக்கியதில்அதனது நிர்வாக எந்திரத்தின் மீது முழுக்கட்டுப்பாடின்மையை" காட்டியிருப்பதற்காக அரசாங்கத்தைக் கடுமையாய்ச் சாடியது.

கட்டுரை "கட்டிடம் கட்டுவோருடன் அரசாங்கத்திற்கு உள்ள தொடர்பை" விவரித்தது: கட்டிடம் கட்டுவோர் அவை தரங்குறைந்த கட்டுமானத்தில் ஈடுபடும் போலியான ஆட்களைக் கொண்டிருந்தது. பெரும்பாலான வீடுகள் ஏன் இடிந்துபோயின என்பதற்கு இது பிரதான காரணமாகும். மாநிலத்தின் ஆறு மாநகராட்சிகளில் சட்டவிரோத கட்டுமானத்தினை முறையாக்கும் விதிமுறையை பகிரங்கமாக்குதற்கு எப்படி பிஜேபி (பட்டேல் நிர்வாகம் கட்டிடம் கட்டுவோருக்கு அனுமதி கொடுத்தது என்பதை மக்கள் இன்னும் நினைவில் வைத்திருப்பர். இருவாரங்களுக்கு முன்னர்தான் ஏற்கனவே அனுமதித்திருந்த பத்தடுக்கு வரம்பிற்கு மேலாக, கூடுதலாக இரண்டு அடுக்குகளைக் கட்டுவதற்கு அனுமதிக்க முடிவு செய்திருந்தது."

கீழ்த்தரமான கட்டுமானம் பெரும்பாலான சாவுக்கு காரணமாகும். உலகில் பூகம்பம் அதிகம் தாக்கக்கூடிய இடங்களுள் ஒன்றாக கட்ச் பகுதி இருந்தபோதிலும், அரசின் கட்டிடங்கள் பூமி அதிர்ச்சியைத் தாங்கக்கூடிய தரத்தில் இல்லை. அரசின் அணுமின் நிலையங்கள் மற்றும் அணைகள் பெரும் பூகம்பங்களைத் தாக்குப் பிடிக்கக்கூடிய அளவுக்கு கட்டப்பட்டு, சிறிதும் பாதிக்கப்படாத அதேவேளை, வசிக்கும் வீடுகளைக் கொண்ட பெரும் பகுதிகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிந்து விட்டன.

நியூயார்க் டைம்ஸ் கட்டுரையின்படி, இயற்கை அழிவு தடுப்பு பற்றி அரசாங்கம் நியமித்த நிபுணர்கள் குழுவால் ஆய்வு செய்யப்பட்ட 1998 ன் கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகளை இந்தியப் பொறுப்பாளர்கள் அசட்டை செய்துவிட்டனர். "பேரழிவுகள் மக்களைக் கொல்லமாட்டா, கட்டிடங்கள் கொல்வன" மற்றும் "ஒவ்வொரு நாளும் பாதுகாப்பற்ற கட்டிடங்கள் அதிகரித்து வருகின்றன" என்று மூன்று தொகுதிகளைக் கொண்ட ஆய்வு அப்பட்டடமாகத் தெரிவிக்கின்றது.

பிரபல பொறியாளர்கள் மற்றும் அறிவியலாளர்களைக் கொண்ட ஆய்வுக்குழுவின் தலைவரான அடி.என். குப்தா, கமிட்டியானது இருக்கின்ற கட்டிடங்களைப் பலப்படுத்த "பின் பொருத்துதலை" யும் அதேபோன்று புதிதாகக் கட்டுபவைக்கு தொழில் நுட்பங்களையும் பரந்தளவில் பரிந்துரைத்திருந்தது என்று குறிப்பிட்டார். ஒலிக்கட்டிட முறையைப் பயன்படுத்துதல் பூமி அதிர்ச்சியின்போது பெரும் வித்தியாசத்தைக்காட்டும். "லாட்டூரில் 9,700 பேர்களைக்காவு கொண்ட பூகம்பத்தைப் பெற்றோம். அதே அளவு உக்கிரம் கொண்ட பூகம்பம் கலி்ஃபோர்னியாவில் 5 பேர்களைத்தான் கொன்றது" என்று கூறினார்.

அபாயங்கள் மற்றும் வரும் இடர்வை துணிந்து ஏற்றுக்கொள்ளல் பற்றிய சர்வதேச பூகோளவியல் சங்கத்தின் குழு உறுப்பினரும் அகமதாபாத் நிகழ்வுகளை நன்கு அறிந்தவருமான பென்வைஸ்னர் கூறினார்: "ஒருபுறம் பழமையான கட்டிட இருப்புக்களும் அதைப் பராமரித்தலில் பற்றாக்குறையும் இருக்கிறது. மற்றொருபுறம் சில புதிய கட்டிடங்கள் முறையான சட்டதிட்டங்களப் பின்பற்றாமலும் சரியான முறையில் ஆய்வு செய்யப்படாமலும் கட்டப்பட்டிருக்கும். பூமி அதிர்ச்சி எதிர்ப்பு கொண்ட கட்டிடல்களின் வீதம் அகமதாபாத் அல்லது புஜ்ஜில் டெல்லியைவிட அதிகம் இல்லை. "அவர் புஜ் மருத்துவமனையில் நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு கண்டனம் செய்கிறார்:" பொறுப்பிலுள்ளவர்களுக்கு மருத்துவமனையை எப்படி பாதுகாக்கவேண்டும் என்று தெரியும்.... புஜ்ஜில் மருத்துவமனை நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் மீது நொறுங்கி விழ வேண்டிவந்ததிற்கு காரணம் எதுவும் இல்லை."

புஜ் மாநகராட்சித் தலைவர் கிரிட் சோம்புரா வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்:" நாங்கள் சுயநலவாதிகள். அது எங்களைப் பாதிக்காதவரை, நாம் கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கலைச் செய்வோம். "கடந்த இரண்டு வருடங்களாக மாநகராட்சியானது எட்டு அடுக்குகள் வரை எவ்வித சோதிப்போ அல்லது ஆய்வோ செய்யாமல் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கினோம். இந்திய கட்டிடவியல் தரப்படி புஜ் போன்ற அடிக்கடி பூமி அதிர்ச்சி நடக்கக்கூடிய மண்டலங்களில் ,கட்டிடங்களின் இரும்புக்கம்பிகள் கொண்ட வார்ப்புக்காரை வேறெங்கும் உள்ளதைக் காட்டிலும் நாலரை மடங்குகள் இருக்க வேண்டும்." ஆனல் அது அதிக செலவானது, மற்றும் பெரும்பான்மை கட்டிடம் கட்டுவோர் பொறுப்பிலுள்ளோர் கீழ்ப்படியும்படி வலியுறுத்தாததன் காரணமாக குறுக்குவழியை எடுக்கின்றனர்" என்று புஜ்ஜின் முன்னாள் மேயர் எக்ஸ்பிரஸ்க்கு கூறினார்.

அகமதாபாத்தில், 21 கட்டிடக் கம்பெனிகளுக்கு எதிராக குற்றவியல் புகார்கள் பதியப்பட்டுள்ளன. "செழிப்படைந்து வரும் ஒவ்வொரு நகரமும் கிட்டத்தட்ட அகமதாபாத்தின் கதையைப் பகிர்ந்து கொள்கின்றன. அங்கு இலட்சக்கணக்கான கட்டிடங்களின் சுவர்கள் மணல் அதிகமாகவும் சீமெந்து குறைவாகவும் வைத்துக் கட்டப்படுகின்றன "என்று அசோசியேட் செய்தி நிறுவனம்கூறியது. "சரியாக வேலை செய்யாததைக் கண்டும் காணாததுமாய் இருப்பதற்கு அல்லது விதிமுறைகளை மீறலுக்கு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தல் எங்கும் உள்ளதாக இருக்கிறது மற்றும் அதிகாரிகள் சோதனைகளை நடத்துவதற்கு பெரும்பாலும் தகுதியற்றவர்களாயுள்ளனர். பூகம்பத்திற்குப் பிறகு பொறியாளர்களின் ஆய்வு ஒன்று, பலவற்றில் தேசிய விதிமுறைகள் கோருகிறவாறு தூண்கள் எஃகு இரும்புக்கம்பிகள் வைத்து அடித்தளங்கள் பாதுகாக்கப்படாதவாறு உள்ளன என்று எடுத்துக்காட்டியது. பூமி அதிர்ச்சி தாக்கும்பொழுது, அத்தகைய பல கட்டிடங்கள் சொந்த பாரத்தைத் தாங்காமல் அல்லது சுவர்கள் கலப்பட சீமெந்து தளர்ந்து வீழ்வதால் தள்ளாடிக் குலைந்து விடுகின்றன."

தகவல் தொழிற்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன், அரசாங்கம் குஜராத் பூகம்பப் படிப்பினைகளைக் கற்றுக் கொண்டது மற்றும் அனைத்துக்கட்டிடங்களும் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன் பூகம்பத்தை தாக்குப் பிடிக்கக் கூடியதாக ஆக்கப்படலை விதிமுறைக்கு உட்படுத்தக் கூடியதாக மசோதாவை விரைவில் கொண்டு வர இருக்கின்றது என்று குறிப்பிட்டார். இந்தியாவை வெள்ளங்கள் சூறாவளிகள் மற்றும் ஏனைய பேரழிவுகள் தாக்கும் பொழுது, தேவையற்ற சாவுகளால் உண்டு பண்ணப்படும் பரந்த அளவிலான கோபத்தைத் தணிப்பதற்காக வாஜ்பாயியும் முந்தைய அரசாங்கங்களும் இதேவிதமான அறிக்கைகளை அடிக்கடி வழங்கியிருக்கின்றன. இந்தியாவில் வாழ்க்கையின் ஏனைய ஒவ்வொரு அம்சமும் போல, அது --வெகு ஜனங்களின் சமூகத் தேவைகளினது அல்லாமல் --வணிகத்தேவைகளின் இலாப நோக்கிற்கானது. அத்தகைய பேரழிவுகளின் முன்னரும், பேரழிவுகளின் பொழுதும் பேரழிவுகளுக்குப் பின்னரும் அதுதான் அரசாங்கத்தின் கொள்கையையும் முன்னுரிமையையும் தீர்மானிக்கின்றன.