World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா:இந்தோனேசியா

Bomb blasts in Indonesia: a sign of escalating political instability

இந்தோனேசியாவில் குண்டு வெடிப்புகள்: அரசியல் உறுதியின்மை அதிகரிப்பதற்கான அறிகுறிகள்

By Peter Symonds
3 January 2001

Use this version to print

ஜக்காட்டா (Jakarta) விலும் இந்தோனேசியா முழுவதும் கிறிஸ்மஸ் கொண்டாட்டமன்று தேவாலயங்களில் பல தொடர் வெடிகுண்டுகள் வெடித்தது. இது நாட்டின் அரசியல் உறுதியற்ற தன்மையையும் ஜனாதிபதி அப்துர்ராமன் வாகிட் (Abdurraman Wahid) இன் ஆட்சியின் பலவீனமான குணாம்சத்தையும் கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தோனேசிய- கிறிஸ்தவ சிறு பான்மையினர் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலில் குறைந்தது 15 பேர் இறந்ததுடன் டசினுக்கு மேட்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பொலிசாரின் தகவலின் படி, நகரங்களில் 18 குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில கண்டெடுக்கப்பட்டதுடன் இனைப்புகள் துண்டிக்கப்பட்டன. மற்றய குண்டுகள் ஒரேநேரத்தில் வெடித்தமை ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரத்தின் பிரச்சாரத்தினை குறிப்பிட்டுக் காட்டுகிறது.

கிழக்கு ஜக்காட்டாவில் உள்ள சான்தோ யோசேப்பு(Santo Yosef) தேவாலயத்தில் வெடித்த குண்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேற்கு ஜாவா, சுக்காபூமில் (Sukabumi) ஓர் பெண், ஓர் ஆண் உட்பட ஓர் குழந்தையும், கோவில் பூசையை முடித்து வரும்போது அவர்களுடைய காரில் குண்டு வெடித்ததால் இறந்தனர். Riau மாகாணத்தில் உள்ள போக்கான்பாறுவில் (Pekanbaru) தேவாலயத்தில் காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட மூன்று கோவில் அலுவலகர்கள் கொல்லப்பட்டனர்.

கிழக்கு ஜாவாவில், மொக்கோதோவில் (Mokokerto) இஸ்லாமிய இளைஞர் இயக்கமான Nahdlatul Ulama (NU) Banaer வின் அங்கத்தவர் ஒருவர் குண்டை கோவிலில் இருந்து அகற்ற முயலும் போது கொல்லப்பட்டார். Banser வின் அங்கத்தவர்களும், உதவி-ஜனாதிபதி Megawati Sukarnoputri இன் இந்தோனேசியா ஜனநாயகக் கட்சி (PDI-P) அங்கத்தவர்களும் கிறிஸ்மஸ் நாள் அன்று தாமாகவே முன்வந்து தேவாலயங்களை கண்காணித்தனர்.

பாண்டுங்கில் (Bandung) ஓர் சிறிய உருக்கு தொழிற்சாலையில் குண்டு வெடித்தபோது மூன்று பேர்கள் கொல்லப்பட்டனர். இந்த உருக்கு தொழிற்சாலை குண்டுகள் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக பொலிசார் கூறியதுடன் தப்பிய மற்ற இருவரையும் பாதுகாவலில் வைத்துள்ளனர். இக் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த குழுவும் உரிமை கோரவில்லை. கிறிஸ்தவ குழுக்களுடன் சண்டை பிடிப்பதற்கு Malukus இற்கு ஆயுதக்குழுக்களை அனுப்புவதில் பெயர்பெற்ற இஸ்லாமிய தீவீரவாத இயக்கமான Laskar Jihad உம், பிரிவினைவாத Free Aceh இயக்கமும் (GAM) வெளிப்படையாவே தமக்கு எதுவித சம்பந்தமுமில்லையென மறுத்துவிட்டனர்.

குண்டு வெடிப்புடன் ஈடுபட்டவர்களின் நோக்கம் தனது அரசாங்கத்தை சீர் குலைப்பதே என ஜனாதிபதி வாகிட் (Wahid) கூறினார். "மக்களுக்கு மத்தியில் பீதியையும் பயத்தையும் ஏற்படுத்துவதனால் அரசாங்கம் நடத்த முடியாதென்பதுடன் அவர்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயல்கிறார்கள். பல குழுக்கள் குழப்பமான நிலைமையை உருவாக்க வெளியே வந்துள்ளனர்" என மேலும் அவர் குறிப்பிட்டார். கடைசியாக வெடித்த குண்டுகளுக்கு யார் பொறுப்பாகவிருக்கலாம் என வாகிட் குறிப்பிடவில்லை. அதேவேளை கடந்த செப்டெம்பரில் ஜக்காட்டா பங்குச் சந்தை குண்டு வெடிப்பதற்கு பின்னால் முன்னய ஜானாதிபதி சுகாட்டோவின் மகன் Tommy இருந்ததாக அவர் வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

மற்றய குழுக்கள் இன்னமும் மேலே சென்றனர். இந்தோனேசியா சட்ட உதவி, மனித உரிமைகள் நிறுவனத்தின் (PBHI) தலைவரான கென்னார்டி(Kenardi) இராணுவத்தையும், சுக்காட்டோ குடும்பத்தையும் மற்றும் அவர்களுடைய உதவியாளர்களையும் குற்றம் சாட்டினார். "ஜனநாயகத்தை நோக்கிய அரசியல் நிலைமையை பலவீனப்படுத்துவதில் கூடிய பங்கெடுப்பவர்கள் யாரெனின் பழைய அரசியல் சக்திகள் மட்டுமே. அத்துடன் இப்படியான இழிவான காரியங்களை அவர்கள் தான் செய்து முடிப்பார்கள்" எனக் கூறினார்.

சுக்காட்டோ குடும்பத்தினர் இக் குண்டு வெடிப்பில் ஈடுபட்டுள்ளதாக இங்கு எதுவித நேரடி சாட்சிகளும் இல்லை. ஆனால் முன்னர் குண்டுகள் வெடித்த சந்தர்ப்பங்கள் சுகாட்டோவின் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக்கு வந்த திகதிகளுடன் ஒன்றாக வந்தன. உதாரணத்திற்கு பங்கு சந்தைமேல் நடந்த குண்டு வெடிப்பு முன்னய இராணுவத் தலைவரை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு முதல் நாள் நடந்ததாகும். சுகாட்டோவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் இறுதியாக அவர் விசாரணைக்கு நிற்க முடியாதபடி மிகவும் சுகவீனமாகவுள்ளார் என்ற அடிப்படையில் நடைபெறவில்லை.

ஒரு பகுதி பாதுகாப்புப் படையினர் அரசாங்கத்தை சீர்குலைப்பதற்காக நேரடியாக குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டுள்ளதாக பரந்தமட்டத்தில் கருத்து கொழுந்துவிட்டு எரிந்தபடியால் பொலிசாரால் குண்டுவெடிப்புகளை நிறுத்தமுயலவில்லை. கூடியளவு மக்கள் வாகிடுக்கு ஓர் முடிவு கட்ட ஆரம்பிக்க வந்துவிட்டனர்.

பழைய சுகாட்டோவின் அரசியல் கட்சியினருக்கும் ஜனாதிபதிக்குமிடையே மட்டும் சாதாரணமாக அரசியல் முரண்பாடு எழவில்லை, மாறாக அரசாங்கத்திற்குள்ளேயும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் இடையே மட்டுமல்லாது ஒரு பகுதி ஆயுதபடையின் பிரிவுகளுக்கும் சுகாட்டோவினுடைய ஆட்சிக்காலத்தில் பதவியிலிருந்த கோல்கார் (Golkar) கட்சிக்கும் இடையே கூட நிரந்தரமற்ற கூட்டுக்கள் இருக்கின்றன. வாகிட்னுடைய ஒழுங்கற்ற பகிரங்க அறிக்கைகளுக்கும், அவரது வெளிநாட்டு சுற்றுலாக்களுக்குமாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். வாகிட்னுடைய முன்னைய உடல்பிடித்து விடுபவரின்[Masseur] நிதி ஊழல் சம்பந்தமாக பாராளுமன்றத்தின் குற்றச்சாட்டுக்களை வாகிட் எதிர்நோக்கியுள்ளார்.

டிசெம்பர் 21 ந் திகதி, கோல்கார் தலைவரான அக்பர் ராட்யூங் (Akbar Tardjung) வாகிட்டிற்கு எதிராக அவருடைய ஆளும்முறை திறமையற்றது என விபரித்ததுடன் "சட்டபூர்வதன்மையை இழக்கத் தொடங்கியுள்ளது" எனவும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். கோல்கார் கட்சி அரசாங்கத்திற்கு ஓர் முடிவு கட்டுமா என கேட்கப்பட்டபோது வருடாந்த பாராளுமன்ற காலமான ஓகஸ்ட் வரை காத்திருப்பதாகவும், அதற்கு முன்னர் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனவும் கூறினார்.

மேற்கு பப்புவாவிலும்(West Papua), ஏசே (Aceh) விலும் உள்ள பிரிவினைவாத இயக்கங்கள் தொடர்பான அரசாங்கங்கத்தினுடைய அணுகுமுறையிலும் மிகவும் ஆழமான முரண்பாடுகள் உள்ளன. மெகாவதியினதும் அவரினுடைய கட்சிகளினதும் அழுத்தத்தின் கீழ் தேசிய ஒற்றுமை பாதுகாக்க வாகீட் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் இரண்டு தடவைகள் பப்புவா பிரிவினைவாதத் தலைவரை விடுதலை செய்ய உத்தரவிட்டபோதும் அது பொஸிசாரால் கவனமெடுக்கப் படாததால் கடந்த மாதம் அவர் ஆச்சரியப்படத்தக்க வகையில் தனது கோரிக்கையை பின்வாங்கத் தள்ளப்பட்டார்.

இவரினுடைய எதிரிகளுக்கு கீழ்படியும் விதத்தில் வாகிட், கிறிஸ்மஸ் காலத்தில் மேற்கு பப்புவாவிற்கு விஜயம் செய்தபோது பப்புவா ஆட்சி சபையின் தலைவரான Theys Eluay "அவரின் சட்டத்திற்கெதிரான நடவடிக்கைக்காக " பாதுகாவலில் தொடர்ந்து வைக்கப்படுவார் என உறுதி செய்தார். வாகிட் மேலும் குறிப்பிடுகையில் "நான் சுதந்திரமாக மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க அனுமதிப்பேன் ஆனால் யாராவது சுதந்திரமென கோரினால் நான் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் எனவும், Irian Jaya தொடர்ந்தும் இந்தோனேசியா குடியரசின் பகுதியாகவே இருக்கும்'' எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தினுடைய மத்திய அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்கும் கொள்கைகளுக்கான மூலகர்த்தாவும், நிர்வாக சீர்திருத்த மந்திரியுமான Ryass Rasyid, ஜனாதிபதியுடன் "ஒத்துபோக முடியாத வித்தியாசங்கள்" இருப்பதாகக்கூறி பதவியில் இருந்து விலகியபோது, முரண்பாடுகள் மேல் கிளம்பத் தொடங்கியது. ஜனவரி 1ம் திகதி வெளிவந்த பிராந்திய சுயாட்சித் (Autonomy) திட்டத்தின் மூலம் பிரிவினையைக் கோரும் இயக்கங்களை இல்லாமல் செய்வதன் நோக்கில் மாகாணங்களுக்கு பாரிய நிதி உதவியும் நிர்வாக உரிமையும் கொடுப்பதற்கு வழிசெய்யப்படவுள்ளது.

Rasyid பல மாதங்களுக்கு முன்னர் திட்டங்களை அமுல் செய்வதற்கான பொறுப்புகளில் இருந்து இறக்கப்பட்டதுடன் ஊழல்களுக்கும், திறமையின்மை வளர்வதற்கான சக்திகள் உள்ளிருப்பதாகவும் விமர்சனம் செய்யப்பட்டார். அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தினாலும், உலகவங்கியாலும், மேகாவதியாலும் (Megawati) ஒரே மாதிரியான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

இவ் அரசியல் பதட்டநிலையின் கீழ் இந்தோனேசிய பொருளாதார நிலை பற்றி மேலும் கருத்துக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஆசிய நிதி நெருக்கடியில் இருந்து அதனது மட்டுப்பட்ட மீள்வானது பெருமளவு அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்வதில் தங்கியுள்ளது. அது தற்பொழுது அங்கு ஏற்படும் பொருளாதார மந்தத்தால் எந்த நேரமும் பாதிக்கப்படலாம். கூட்டுத்தாபனங்கள் கிட்டத்தட்ட $US 65 பில்லியன் கடன்பட்டுள்ளதுடன் நவம்பர் இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபா (Rupiah) 25% ஆல் பெறுமதி குறைந்துள்ளது. அத்துடன் பங்குகளின் விலை குறையத் தொடங்கியுள்ளது. வெளிநாட்டு முதலீடு மந்த நிலையை அடைந்துள்ளது.

அரசுக்கு சொந்தமான சொத்துக்களை தனியார் மயமாக்கி, வங்கிகள் உட்பட பல வகைப்பட்ட பகுதிகளில் சீர் திருத்தத்தை ஏற்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம், வாகிட் அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. வாஷிங்டனில் ஜனவரி நடுப்பகுதியில் நடக்கவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில், சந்தேகத்திற்கு இடமில்லாத முறையில் இன்னுமோர் புதிய தொடர் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான திட்டத்தில் கையெழுத்திடவுள்ளார்.

பல மாதங்களுக்கு முன்னர் New York Times ஓர் கசப்பான விமர்சனத்தை "என்ன ஓர் குழப்பம்" என்ற தலைப்பில், வாகிட்னுடைய அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டுக்கு தேவையான அரசியல் பொருளாதார சூழ்நிலைமையை உருவாக்கத் தவறிவிட்டதாக சர்வதேச ஆழும் தட்டினரின் அதிருப்தியை வெளிப்படுத்தியது. இந்தோனேசியாவை ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தரப்படுத்தி ஓர் "சீரழிந்த அரசு" எனக் குறிப்பிட்டதுடன் மேலும் குறிப்பிட்டதாவது;

''இந்த குழப்பமான அரசுகளில் ஆயுதங்கள் எப்போது விற்கப்படும், மக்கள் எப்போது கொல்லப்படுவார்கள், பணம் தேவையென கோரப்படுதல் போன்றன ஒருபொழுதுமே அறிய முடியாது. இது, இதற்கு பொறுப்பானவர்களின் வெளிப்படையான தோற்றமோ இல்லையேல் எவருமே பொறுப்பில்லாமல் இருப்பதனாலோ தெரியவில்லை. உண்மையில் நாங்கள் தொடர்ந்தும் அமெரிக்க ராஜதந்திரிகளை இந்த குழம்பிய அரசுகளுடன் பேச வைக்கப்போகிறோம். முதல் பாடமாக அமெரிக்க ராஜதந்திரிகள் இந்த குழம்பிய அரசின் அதிகாரிகளுக்கு ஓர் படத்தைக் (Film) காட்டுவதுடன் அவர்களை சில அலுவல்கள் செய்யுமாறு கேட்போம். அமெரிக்க ராஜதந்திரிகள் கோருவதை இந்த அதிகாரிகள் ஒத்துக்கொண்டு எழுந்து அதற்கான நெம்புகோலைத் தள்ளினால், நெம்புகோல் சுவருக்கு வெளியால் விழும். சீரழிந்த அரசுகளில் நெம்புகோல் தள்ளப்படுகிறது ஆனால் அது உங்கள் கையில் தான் வந்துவிழும்".

சுகாட்டோவினுடைய (Suharto) ஆட்சியின் முடிவைத் தொடர்ந்து இந்தோனேசியாவை வாகிட் உறுதியாக்கத் தவறியதையிட்டு வாஷங்டனின் வளரும் அதிருப்தியை கட்டுரை வெளிக்காட்டுவதுடன் அரச அதிகாரத்தின் மேல், பாதுகாப்பு மற்றும் சொந்த மந்திரிசபையினை தனது கட்டுப்பாட்டில் வைக்க முடியாமையை சுட்டிக்காட்டுகிறது. கடைசிக் குண்டுவெடிப்புகள் குறிப்பிடுவதுபோல ஆளும் பிரமுகர்களுடையே பிரச்சனைகள் குறைவதைவிட, அதனை ஆழமாக்கியுள்ளது.