World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

A distinction to be noted
George W. Bush: president-elect or president-select?

ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ்: ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவரா அல்லது பொறுக்கி எடுக்கப்பட்டவரா?

By Barry Grey
29 December 2000

Use this version to print

டிசம்பர் 13ல் அல் கோர் சலுகை வழங்கும் வகையில் உரை நிகழ்த்தியதில் இருந்து டெக்சாஸ் ஆளுனர் ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ்சுக்கு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதம் பாரம்பரியமாக வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே வழங்கப்பட்டு வந்தது.

எவ்வாறெனினும் இந்த விடயத்தில் இந்தப் பட்டம் அடியோடு பொருத்தமற்றது. குடியரசுக் கட்சி வேட்பாளர் ஒரு பொதுஜன வாக்குக்களின் பெறுபேறாக ஜனாதிபதி பதவியைத் தட்டிக் கொண்டவர் அல்ல. புஷ் தேசிய ரீதியில் வெகுஜன வாக்குகளை இழந்து போனது மட்டுமன்றி அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் 5 நீதியரசர்கள் புளோரிடா மாநில மேல் நீதிமன்றத்தின் (High Court) தீர்ப்பை தள்ளுபடி செய்யத் தலையிடாது போயிருந்தால் புஷ் புளோரிடாவில் பொதுஜன வாக்குகளையும் இழந்து போயிருப்பார். ஆதலால் புஷ் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் அல்ல; நீதிமன்றக் கட்டளைப்படி பொறுக்கி எடுக்கப்பட்டவர். அவர் உரிமைகளின்படி ஜனாதிபதியாக பொறுக்கி எடுக்கப்பட்டவர் என அழைக்கப்பட வேண்டும்.

இந்த வேறுபாடு, உலகளாவிய ரீதியில் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களாலும் அரசியல் ஸ்தாபனங்களாலும் ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளன என்பதே உண்மை. இது சமீப வார காலமாக இடம்பெற்ற நிகழ்வுகளை குழிதோண்டிப் புதைக்க முயல்வதை எடுத்துக் காட்டுகின்றது. உயர் நீதிமன்றம் புஷ்சுக்கு ஜனாதிபதி பதவியை வழங்கி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாகிறது. புதினப் பத்திரிகைகளும் இரு அரசியல் கட்சிகளதும் தலைவர்களும் முக்கியமான எதுவும் இடம்பெற்று விடவில்லை என நம்பலாம்.

அல் கோர் தனது சலுகைப் பேச்சில் இந்த முன்னொரு போதும் இல்லாத விதத்திலான அரசியல் அபகரிப்புத் தொடர்பாக ஆளும் கும்பலின் பொது அக்கறையை எதிர்பார்த்து இருந்தார். அவர் பொதுஜன இறைமை மீதான நீதிமன்றத் தாக்குதலை துடைத்து தள்ளுபடி செய்தார். ஒரு புதிய 'சட்ட ஆட்சி' என்ற கண்டுபிடிப்புக்களை முன்வைத்தார்.

வாஷிங்டன் போஸ்டும் நியூயோக் டைம்சும் தாராண்மைக் கொள்கை கொண்ட ஏனைய சகல சாதனங்களும் ஜனநாயக விரோத விதிமுறைகள் மூலம் ஒரு ஜனாதிபதியை ஆட்சியில் அமர்த்துவதை எவ்வளவு வேகமாக அங்கீகரித்துக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் போஸ்ட் டிசம்பர் 17ல் ஆசிரியத் தலையங்கம் தீட்டியது: "ஜனநாயகம் என்பது வாக்காளர்களின் உள்நோக்கத்தை பரிசுத்தமாக கொள்ளும் விடயம் அல்ல என்பதே எமது பொதுக் கருத்து; ஆனால் அந்த உள்நோக்கத்தை அளவிடுவதற்கான ஒரு தொகை விதிகளை அபிவிருத்தி செய்து ஒட்டிக் கொள்வதாகும். உப-ஜனாதிபதி அல் கோர் அந்த விதிகளினுள் தான் வெற்றி கொண்டதாக நிரூபிக்க ஒரு நியாயமான வாய்ப்பை பெற்றிருந்தார். ஆனால் அவ்வாறு செய்ய முடியாது போய்விட்டது."

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை ஜனநாயக அடிப்படைக் கொள்கைகளின் பேரிலான வெறுப்பை தொகுத்துக் கூறுவது வாக்காளரின் உள்நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு வெறும் விடயம் அல்ல. வாஷிங்டன் ஆட்சியாளர்களின் ஊதுகுழலான இது அந்த உள்நோக்கத்தை தீர்மானம் செய்ய ஒரு "தொகை விதிகள்" ஏற்படுத்தப்பட்டுள்ளதே இங்கு முக்கியமானது. இங்கு வாஷிங்டன் போஸ்ட் சகல வகையறாக்களையும் சேர்ந்த அதிகார தோரணை மிகுந்த ஆட்சிகளாலும் பெரிதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சூத்திரத்தை முன்வைக்கிறது. சர்வாதிகார ஆட்சிகள் கடந்த காலத்திலும் இன்றும் தமது அடக்கு முறை ஆட்சிக்கு ஒரு ஜனநாயக சாயம் பூசும் பொருட்டு பல்வேறு "விதிகளையும்" வழக்காறுகளையும் -இது சர்வஜன வாக்கெடுப்பில் இருந்து வாக்கு மோசடி தேர்தல்கள் வரையும்- முடிவில் பாராளுமன்றம் வரையும் நீண்டுள்ளது- உண்டு பண்ணியுள்ளன.

ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பை ஒரு அதிகாரம்மிக்க ஒன்றில் இருந்து வேறுபடுத்துவது என்னவெனில் -ஒரு வர்க்க சமுதாயத்தில் ஜனநாயகம் எப்போதும் ஒரு பொருளாதார வசதிவாய்ப்புகள் கொண்ட கும்பலால் மேலாதிக்கம் செய்யப்பட்டு, குள்ளமான வளர்ச்சி காண்பதோடு, வெளிவிளிம்புக் கோடுமிடப்படுகிறது என்பதை மனதில் கொண்டு- வாக்காளர்களின் உள்ளக்கிடக்கையை சரியாகப் பிரதிபலிக்கச் செய்யும் வகையில் தேர்தல் சட்டங்களையும் விதிமுறைகளையும் வரைவதற்கு ஆவலுடன் முயற்சிக்கப்படுகின்றது. வாஷிங்டன் போஸ்ட் கையாளும் மொழியானது அது அத்தகைய கணிப்புக்களுக்கு எதிரானது என்பதைக் காட்டிக் கொண்டுள்ளது. இது ஜனநாயக அடிப்படைக் கொள்கைகளுக்கு கண்டிப்பான முறையில் அர்ப்பணிப்பதில் இருந்து அமெரிக்க ஆட்சிமுறை எந்தளவுக்கு விடுபட்டு விட்டது என்பதை அளவீடு செய்யும் ஒரு அளவு கோலாகும்.

இதனது தாக்கங்கள் தெளிவானது: பொதுஜன ஆட்சி சிறப்பு முக்கியத்துவம் இல்லாதது. கணக்கிடப்படுவது அரசியல் முறையின் ஸ்திரப்பாடும் ஜனநாயகப் போக்கின் பாசாங்குமாகும். (இந்த மதிப்பீடுகளின் அடிப்படையிலும் கூட உயர்நீதிமன்றத்தின் தலையீடு -தெரிவு செய்யப்படாத நீதியரசர்களால்- சட்டக் குதர்க்கத்தின் அடிப்படையில்- ஜனநாயகத்தை பரிகசிக்கும் நடவடிக்கையாகும்.)

அதே மனோநிலையில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை டிசம்பர் 27ம் திகதி ஒரு ஆசிரியத் தலையங்க மரணவிசாரணையை நடாத்தி இருந்தது. தேர்தலில் களவு இடம்பெற்று விட்டது என்ற குற்றச்சாட்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு வாக்களிப்பிலும் வாக்கு கணக்கெடுப்பு போக்கிலும் இருந்து கொண்டுள்ள குறைகளைக் கண்டுபிடிக்க வேண்டிய தருணம் இது என்ற விதத்தில் அது சென்றது. ஜனாதிபதியாக ஒருவர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னரும் அவர்கள் தமது முயற்சிகளையும் சட்ட நடவடிக்கைகளையும் தாமதம் செய்வதன் மூலம் NAACP யும் சிவில் உரிமை இயக்கத் தலைவரும் தமது போராட்டம் ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ்சை அல்லது அல்கோரை தெரிவு செய்வதைப் பற்றியது அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். இது நீதியான தேர்தலைப் பற்றியதாகும்" என டைம்ஸ் பத்திரிகை எழுதியது.

இங்கு குருட்டுத்தனம் மோசடியுடன் இணைந்து கொள்கின்றது. ஜனநாயக வடிவங்களை வரலாற்று ரீதியில் மீறுவதை ஒரு தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினையாக கொள்ள வேண்டும் என்ற கருத்தானது இன்றைய சமூக, அரசியல் போக்கினை ஆழ்ந்த ரீதியில் ஆய்வு செய்வதை புறக்கணிக்கின்றது. ஒரு திடநம்பிக்கையோ அல்லது அடிப்படைக் கொள்கையோ கிடையாத ஒரு லிபரல் அமைப்பாக சாட்சி சொல்கின்றது. அமெரிக்க ஜனநாயக நிறுவனங்களின் நிலைமையை நேர்மையான முறையில் மதிப்பீடு செய்வதையிட்டு என்றுமில்லாத விதத்தில் கிடுநடுங்குகின்றது.

டைம்ஸ் சஞ்சிகை (Time magazine) இதற்கு இன்னும் ஒரு படி அப்பால் சென்றுள்ளது. அது இந்த ஆண்டுக்கான தனது மனிதனாக புஷ்சை தெரிவு செய்துள்ளது. இந்த அரசியல், புத்திஜீவி சூன்யத்தை ஒரு பல பக்க பத்திரிகை எழுத்தாளர் இழிவு இச்சைகளைக் காட்டுவதன் மூலம் கொண்டாடிக் கொண்டுள்ளது.

அமெரிக்க ஆளும் பிரமுகர்கள் சமீபத்திய வாரங்களில் இடம்பெற்ற சம்பவங்களை தள்ளுபடி செய்து விடுவதில் ஆர்வம் கொண்டிருக்கலாம். ஆனால் அவற்றை அவ்வளவு இலகுவாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. 2000ம் ஆண்டின் தேர்தலை நீதிமன்ற கட்டளைகள் மூலம் தீர்த்துக் கொள்வது என்பது அமெரிக்க வரலாற்றில் ஒரு மேட்டு நீர்ப் பரப்பையும் அனைத்துலக அரசியலில் ஒரு திருப்பு முனையையும் குறித்து நிற்கின்றது. இவை எதுவும் ஒன்றாக விளங்க முடியாது. சமூக துருவப்படுத்தலினதும் அரசியல் தேக்க நிலையினதும் இந்த நீண்ட போக்கானது ஜனநாயகப் போக்குகளுடன் கூடிய ஒரு திட்டவட்டமான வெடிப்பை உண்டு பண்ணியுள்ளது. அது ஒரு பிரமாண்டமான சமூக, அரசியல் குமுறல்களின் தோற்றத்தை மட்டுமே குறித்து நிற்க முடியும்.

தேர்தல் நெருக்கடியை புறந்தள்ளிவிட முழு அரசியல் அமைப்பு முறையும் காட்டிக் கொள்ளும் முன்னொரு போதும் இல்லாத அவசரம், அரசியல் அமைப்பின் வெடிப்பையும் அமெரிக்க சமுதாயத்தின் நெருக்கடியின் ஆழத்தையும் காட்டிக் கொண்டுள்ளது. இறுதியில் ஜனாதிபதித் தேர்தலை ஜனநாயக ரீதியில் நியாய விசாரணை செய்ய எந்த ஒரு கணிசமான பகுதியினரும் ஆளும் பிரமுகர்களிடையே இல்லாமல் போனமை இந்த சூன்யத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. ஜனநாயக உரிமைகளைக் காப்பது அமெரிக்காவில் ஒரு பிரமாண்டமான பிரச்சினையாக வளர்ச்சி பெறும். இது இதுவரை காலமும் அரசியல் போக்கில் இருந்து பலம்வாய்ந்த முறையில் ஒதுக்கி தள்ளி வைக்கப்பட்டு இருந்த இலட்சோப லட்சம் தொழிலாளர்களின் நேரடிப் பொறுப்பாகின்றது. இதுவரை காலமும் இது கம்பனிகளதும், நிதி ஏக போகங்களதும் இரண்டு கட்சிகளதும் தனியுரிமையாக விளங்கியது.

இந்த லட்சோப இலட்சம் மக்களில் 2000ம் ஆண்டு தேர்தலின் அனுபவங்களை அவ்வளவு இலகுவில் மறந்து போய்விட முடியாத பலர் இருந்து கொண்டுள்ளனர். அவர்கள் தாம் ஆழமான முறையிலும் சரியான விதத்திலும் சட்டவிரோதமான ஒரு அரசாங்கமாகக் கணிக்கும் ஒரு அரசாங்கத்துக்கு எதிராக தமது தொழில், வாழ்க்கைக்தரம் அடிப்படை உரிமைகளைக் காக்க வெகுவிரைவில் போராட்டங்களினுள் ஈர்க்கப்படுவர். சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) இந்த உழைக்கும் மக்களின் அபிலாசைகளையும் தேவைகளையும் ஒரு ஜனநாயக, சோசலிச அரசியல் வேலைத்திட்ட மட்டத்துக்கு உயர்த்தவும் உச்சரிக்கவும் உழைக்கும்.