World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

On the death of Ernst Schwarz (1957-2001)

A fighter for socialist perspectives in the workplace

மரண அஞ்சலி: ஏர்ன்ட்ஸ் சுவார்ட்ஸ் [1957-2001]

தொழிற்சாலைகளில் சோசலிச முன்னோக்கிற்காக போராடிய போராளி

19 January 2001

Use this version to print

தோழர் ஏர்ன்ட்ஸ் சுவார்ட்ஸ் கடந்த கிழமை எதிர்பாராத விதமாகவும், அதிர்ச்சிகரமான முறையிலும் மாரடைப்பால் காலமானார். இவர் தனது மனைவியையும் ஒர் மகளையும் விட்டுச்சென்றுள்ளார். இவர் ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சியின் நீண்டகால உறுப்பினரும், 1995 இல் சோசலிச முன்னோக்கின் கீழ் உருக்கு தொழிற்சாலையான Krupp Hoesch AG இல் தொழிற்சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவருமாவர்

சக தொழிலாளிகள் மத்தியில் தனது பயமற்ற, துணிவான நடைமுறையான தன்மைக்கு பெயர் பெற்றவருடன் தொழிற்சாலையில் உள்ள சீர்கேடுகளை கண்டுபிடித்து அவற்றுக்கு எதிராக போராடியவராவார். எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாளர்களின் முதுகின் பின்னால் தொழிற்சங்கங்களும் தொழிற்சாலை தொழிலாளர் சங்கமும் முதலாளிகளுடன் செய்த ஊழல் மிக்க உடன்பாடுகளுக்கு எதிரான விட்டுக்கொடுக்காத போராளியாவார். அத்துடன் தனது தொழிற்சாலையின் பிரச்சனைகள் தொழிலாள வர்க்கம் சோசலிச முன்னோக்கின் அடித்தளத்தில் போராடுவதன் மூலம் தான் உண்மையாக தீர்க்கப்படலாம் என்பதை ஒளிவு மறைவின்றி நம்பியவராவார்.

70ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தனது 17 ஆவது வயதிலே Ruhr பிரதேசத்தில் உள்ள Hattingen நகரிலுள்ள Henrichshütte என்ற தொழிற்சாலையில் பொருத்துனராக தனது படிப்பை ஆரம்பிக்கையிலேயே சோசலிச சமத்துவ கட்சியின் முன்னோடிக்கட்சியான சோசலிச தொழிலாளர் கழகத்தில் இணைந்து கொண்டார். அவர் கட்சியின் பல கூட்டங்களிலும் வகுப்புகளிலும் கலந்து சோசலிச முன்னோக்கு தொடர்பான கலந்துரையாடல்களில் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.

அந்நேரத்தில் அவர் இறுதிவரை உறுதியாக இருந்த இரண்டு விடயங்கள் தனது உணர்மையை ஆதிக்கம் செலுத்தியதாக பின்னர் அவர் குறிப்பிடுவதுண்டு. அவை பாசிசத்திற்கும் யுத்தத்திற்கும் பாரிய கொலைக்கும் காரணமான சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் அடித்தளமாகக் கொண்ட ஒரு சமுதாயத்தை தான் நிராகரித்ததாகும். அந்நேரத்திலேயே அவரது இளம் வயதிலேயே சமுதாயத்தை ஒரு முற்போக்கான வழியில் மறுசீரமைப்பதற்க்கு எதிராக இருந்த முக்கிய தடைகள் தொழிலாளர் இயக்கத்தினுள் இருந்த சந்தர்ப்பவாத தலைமையான சமூக ஜனநாயகமும் ஸ்ராலினிஸ்டுகளாகும் என்பதை விளங்கிக்கொண்டார்.

1975 மே 1 இல், அன்று பதவியில் இருந்த சிமித் அரசாங்கத்தின் சமூக வெட்டுகளுக்கு எதிரான சோசலிச தொழிலாளர் கழகத்தின் பதாகைகளை பாதுகாக்க 3 ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்குனர்களால் சுற்றிவளைக்கப்பட்டதற்கு எதிராக போராடும் புகைப்படங்கள் உள்ளன. அவரின் மூர்க்கமான எதிர்ப்புக்கு மத்தியிலும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பதாகைகள் கிழித்தெறியப்பட்டன.

பேர்லின் சுவர் உடைவதற்கும் கிழக்கு ஜேர்மனியின் உடைவிற்கும் முன்னரே ஏர்ன்ட்ஸ் சுவார்ட்ஸ் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தீர்க்கமான எதிரியாவார். பின்னர் தேசியவாத நிலைப்பாட்டை எடுத்த ஏனைய பல வலதுசாரி எதிர்ப்பாளர்களை போலல்லாது இவரின் எதிர்ப்பு இடதுசாரி எதிர்ப்பாகும்.ஒரு சோசலிஸ்ட் என்ற வகையில் இவர் ஒரு உறுதியான சர்வதேசவாதியாவார். வேறுநாட்டு தொழிலாளர்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கிடைத்த போதல்லாம் அவர் அச்சந்தர்ப்பங்களை பயன்படுத்த தவறியதில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னர் அனைத்துலக குழுவால் சிட்னியில் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்திருந்தபோது அதில் கலந்து கொண்டு அவுஸ்திரேலிய உருக்கு தொழிலாளர்களின் நிலைமையை அறிந்து கொள்ளபயன்படுத்தியதுடன் சர்வதேசரீதியான தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொண்டார்.

அரசியல் கலந்துயாடல்களில் தனது நிலைப்பாட்டை உணர்ச்சிகரமாக பாதுகாப்பதில் ஏர்ன்ட்ஸ் சுவார்ட்ஸ் முன்னிற்பார். அவரது அரசியல் நண்பர்கள் சில தீவிரமான வார்த்தைப் பிரயோகங்களையும் கருத்துமுரண்பாடுகளையும் நினைவில் வைத்திருப்பார். ஆனால் இக்கேள்விகள் அவரைப் பொறுத்தவரையில் இவை அனைத்தும் சோசலிச கருத்துக்களின் ஆளுமையையும் அதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அபிவிருத்தியை வளர்த்தெடுப்பது சம்பந்தமானதாகும்.

அவரின் அரசியல் உறுதி மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கு முன்நிற்பதுடன் தொடர்புடையது என்பது அவரை தெரிந்த அனைவருக்கும் தெரியும். ஐக்கியம் என்பது அவரைப் பொறுத்தவரையில் மிகவும் உறுதியானதும் நடைமுறையான உள்ளடக்கம் உள்ளதாகும். தனது உணர்ச்சிகரமான சுறுசுறுப்பான தன்மையின் பின்னே தனது குடும்பத்தவரையும் நண்பர்களையும் அன்புடன் பராமரிக்கும் உணர்வுகரமான மனிதனாவார்.

ஏர்ன்ட்ஸ் சுவார்ட்ஸ் துன்பகரமான முறையில் முதுமையை அடைவதற்கு முதலே இறந்திருந்தாலும், அவரின் வாழ்க்கை ஒரு முன் உதாரணமாகும். இவர் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காத, அடிபணிந்து போகாத சிலரில் ஒருவராவார். அதற்கு மாறாக ஒரு நீதியான உலகத்திற்காகவும் மேன்மைக்காகவும் விட்டுக்கொடுக்காது போராடினார். இதன் மூலம் அவர் சோசலிச தொழிலாளர் இயக்கத்தின் பாரம்பரியத்தில் நிற்கின்றார்.

எயன்ட்ஸ் சுவாட்ஸ் இறக்கும் போது அவருக்கு 43 வயது. நாங்கள் அவரது அகால மரணத்தால் மிகவும் கவலையடைகின்றோம்.