World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS : செய்திகள் & ஆய்வுகள் : அவுஸ்திரேலியா

Fiji's military government wins more explicit backing from Australia and New Zealand

பிஜியின் இராணுவ ஆட்சிக்கு அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் பேராதரவு

By Tim Joy
19 December 2000

Use this version to print

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அரசாங்கங்கள் பிஜியில் இராணுவத்தால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தை பலப்படுத்த ஆதரவு வழங்கியுள்ளன. இதன் மூலம் இவை பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் மஹேந்திரா சவுத்திரியை (Mahendra Chaudhry) மீண்டும் பதவியில் அமர்த்தும்படி தாம் கோரப்போவதில்லை என்பதை அப்பட்டமாக்கியுள்ளன.

கடந்த வார இறுதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, நியூசிலாந்து வெளிநாட்டு அமைச்சர்கள் அலக்சாண்டர் டவுணரும் பில்கோவும் (Alexander Downer and Phil Goff) சவுத்திரி ஆட்சிக்கு வரவேண்டுமா இல்லையா என்பதை "பிஜியின் ஒழுங்குமுறையான அதிகாரிகளே" தீர்மானிக்க வேண்டும் என்றுள்ளனர். அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் 1997 அரசியலமைப்புச் சட்டம் புனருத்தாரணம் செய்யப்படவேண்டும் எனச் சும்மா கூறிக் கொண்டன. மே 19ல் ஜோர்ஜ் ஸ்பைட் பாராளுமன்றத்தை சூறையாடிக் கொண்டதைத் தொடர்ந்து இந்த அரசியலமைப்பை இராணுவம் இரத்துச் செய்தது.

"அரசியலமைப்புச் சட்டத்தின்படி செய்ய வேண்டும்" என தீர்மானிக்கப்படுமானால் "மற்றொரு பிரதமரை அமர்த்தும் விடயத்தை அவர்களே தீர்மானிக்க வேண்டும்" என டவுனர் கூறினார். பில் கோவ், பிஜி அரசியலமைப்புச் சட்ட ஆட்சியை புனருத்தாரணம் செய்ய வேண்டும்; ஜனநாயக ஆட்சி முறையையும் சட்ட ஆட்சியையும் புனருத்தாரணம் செய்ய வேண்டும் எனக் கூறினார். "இந்த மூன்று அடிப்படைக் கொள்கைகளும் கடைப்பிடிக்கப்படுமானால் நாம் பிஜியில் ஒழுங்குமுறையாக அமைக்கப்பட்ட ஆட்சியாளர்களின் தீர்மானத்துடன் சேர்ந்து வாழ்வோம்" என அவர் கூறினார்.

வேறு வார்த்தைகளில் சொன்னால் கன்பரா, வெலிங்டன் அரசாங்கங்கள் சில அரசியலமைப்பு, ஜனநாயக அடிப்படைக் கொள்கைகளுக்கு அழைப்பு விடுக்கும் அதே வேளையில், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை பதவி கவிழ்த்து ஆட்சிக்கு வந்த ஒரு ஆட்சியாளர்களுக்கு முழு ஆதரவு வழங்குகின்றன. இந்த அவமானம் நிறைந்த அறிவிப்பானது இந்த இரண்டு பிராந்திய சக்திகளும் தெரிவு செய்யப்படாத ஆட்சியான இடைக்கால பிரதமர் லெய்சேனியா குவார்சுடன் சேர்ந்து தொழிற்படும் விருப்பை அறிவித்துள்ளன. இதனை இந்த ஆட்சி உள்நாட்டில் அதிகாரத்தை கடைப்பிடிக்கும் வரை செய்ய தயாராக உள்ளன.

டவுணர் சில நாட்களுக்கு முன்னர்- டிசம்பர் 12ல்- பிஜியின் புடவை, ஆடைத் தயாரிப்பு கைத்தொழில்களுக்கு உதவும் வகையில் ஒரு விசேட வர்த்தக உடன்படிக்கையை புதுப்பித்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார். இதன் மூலம் குவார்ஸ் ஆட்சியாளர்கள் டவுணருக்கு உத்சாகமூட்டியது. டவுணர் தனது தீர்மானம் தேர்தலை "இரண்டு வருடங்களுக்கு அல்லது அதற்கும் கூடுதலான வருடங்களுக்கு பின்னால் கடத்துவதற்குப் பதிலாக 2002ம் ஆண்டு மார்ச்சில் நடாத்த எடுத்த முடிவை தொடர்ந்து எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்தத் திட்டம் அவுஸ்திரேலிய நிறுவனங்கள் குறைந்த ஊதியம் கொண்ட பிஜி போன்ற நாடுகளுக்கு உற்பத்திக்காக துணிகளை ஏற்றுமதி செய்வதை அனுமதிக்கிறது. முடிவு ஆடைப் பொருட்களை முழு இறக்குமதி வரி செலுத்தாமலே இறக்குமதி செய்யவும் இடமளிக்கிறது. இது குவார்ஸ் அரசாங்கத்துக்கு பொருளாதார உயிர்வாழ்க்கை காலத்தை புதுப்பிக்கவும் நீடிக்கவும் வாய்ப்பளித்தது. பிஜியில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகள் 18000 மக்களை வேலைக்கு அமர்த்துகின்றன. இது பிஜியின் மொத்த ஏற்றுமதியில் 25 சதவீதமாகும். இதன் ஏற்றுமதியில் 70 சதவீதம் அவுஸ்திரேலியாவுக்கு செல்கிறது. டவுணரின் அறிவிப்புக்கு முன்னர் மூன்று பக்டரிகள் மூடப்பட்டு 300 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். புதிய திட்டத்தை அறிவிப்பதில் ஏற்பட்ட இழுபறி நிலையே இதற்குக் காரணமாகியது.

தென் பசுபிக் பிராந்திய வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை (SPARTELA) திருத்தம் செய்யப்பட்டு, இதற்குப் பதிலாக நடைமுறைக்கிடப்பட உள்ளது. இது அவுஸ்திரேலியாவுக்கு இறக்குமதி வரி இல்லாமல் பொருட்கள் இறக்குமதி செய்ய வாய்ப்பளிக்கிறது. இதில் ஒரு சில உள்நாட்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும். இம்மாற்றங்கள் பிஜியில் இருந்து 75 சதவீத ஆடைகள், புடவைக் கைத்தொழில் இறக்குமதியை கட்டிக்காக்கும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் எதிர்வு கூறியுள்ளது.

இத்தகைய ஒரு உடன்படிக்கையை எதிர்த்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் சவுத்ரியிடம் இருந்து ஒரு கடிதம் கிடைத்த நிலையிலேயே டவுணர் இதை அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய வானொலிக்கு வழங்கிய ஒரு பேட்டியில் சவுத்ரி பின்வருமாறு கூறினார்: "ஒரு சட்டவிரோதமானதும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதுமான ஒரு ஆட்சியாளர்களுடன் அவர்கள் தொடர்ந்தும் உறவு வைத்துக் கொள்வார்களேயாயின் அது அனைத்துலக சமூகத்துக்கு தவறான சமிக்கைகளை விடுக்கும்".

இருப்பினும் சவுத்ரி தாம் இன்னமும் அவுஸ்திரேலிய ஆதரவில் நம்பிக்கை கொண்டுள்ளதாக அறிவித்தார். இந்த தீர்மானம் ஏமாற்றம் தருவதாக இருந்தாலும் "இது எமது உறவுகள் துண்டிக்கப்பட்டு போய்விட்டது என்பதற்கான அர்த்தமாகாது" எனத் தெரிவித்தார்.

ஆடைத்தொழில் திட்டம் தொழிலாக டிவுணர் வெளியிட்ட அறிக்கையில் கன்பரா "பிஜியின் மேல்நீதிமன்ற நீதியரசர் அந்தனி கேட்ஸ் நவம்பர் 15ம் திகதி வழங்கிய தீர்ப்பின் "விளைவுகளை மிகவும் நெருக்கமாக அவதானித்து வருகின்றது" எனத் தெரிவித்தார். அத்தீர்ப்பு 1997 அரசியலமைப்பு சட்டத்தை இராணுவம் சட்டவிரோதமான முறையில் இரத்துச் செய்து விட்டதாகவும் ஆதலால் இடைக்கால அரசாங்கத்துக்கு எதுவிதமான சட்ட அதிகாரமும் கிடையாது எனவும் கூறியது. இந்த தீர்ப்பை வருணிக்கையில் டவுணர் பின்வருமாறு கூறியிருந்தார்: இத்தீர்ப்பு "மே 19ம் திகதி சதி தொடர்பாகவும் அதன் பின்னைய நிகழ்வுகள் தொடர்பாகவும் அவற்றின் சட்ட விரோத தன்மையையிட்டு அவுஸ்திரேலிய அரசாங்கம் எடுத்த நிலைப்பாட்டுடன் முற்றிலும் இணக்கம் கண்டுள்ளது."

நீதியரசர் கேட்ஸ் தமது தீர்ப்பில் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இராணுவமும் குவார்சும் இத்தீர்ப்பை நிராகரித்துவிட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு செய்துள்ளன. பதவி நீக்கம் செய்யப்பட்ட சவுத்ரி அரசாங்கமும் இதற்குச் சமமான ஒரு அதிகார பகிர்வு அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுத்துள்ளது.

டவுணரின் அறிக்கை முரண்பாடு கொண்டது. இடைக்கால அரசாங்கத்தை ஆதரிப்பதோடு அதன் சட்டவிரோத தன்மையையும் அது அங்கீகரிக்கிறது. இது பிராந்திய சக்திகள் நிஜமாக அக்கறை கொண்டுள்ள விடயம் ஜனநாயகம் அல்லாது அரசியல் ரீதியில் நிலைமையை ஸ்திரப்படுத்தக் கூடிய ஒரு அரசாங்கத்தை சிருஷ்டிப்பதே. இதன் மூலம் அவை தென்மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் தமது மூலோபாய, வர்த்தக நலன்களை கணிசமான அளவு அதிகரித்துக் கொள்ள செயற்பட முடியும்.

ஏனைய மேற்கத்தைய சக்திகள் இந்த நிலைமையில் பெரிதும் கண் வைத்துக் கொண்டுள்ளன. பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் சிறப்பு பிரதிநிதியான நீதியரசர் பியஸ் லங்கா சமீபத்தில் பிஜிக்கு விஜயம் செய்திருந்தார். இந்த விஜயத்தின் போது அவர் சவுத்திரி அரசாங்கத்தின் அங்கத்தவர்கள், அரசாங்க சார்பற்ற குழுக்கள் அத்தோடு இடைக்கால அரசாங்கத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்தார். அமெரிக்க கார்ட்டர் (Carter Center) நிலையத்தில் மூன்று அங்கத்தவர் குழு கூட விடயங்களை கண்டறிய விஜயம் செய்தது.

அவுஸ்திரேலியாவினதும் நியூசிலாந்தினதும் நடவடிக்கைகள் பிஜி ஆட்சியாளர்கள் "வடக்கு நோக்கிய பார்வை (Look North) என்ற புதிய கொள்கையை அறிவித்ததன் பின்னரே வளர்ச்சி கண்டன. நாடியில் நடைபெற்ற ஏற்றுமதியாளர்களுக்கான பரிசு வழங்கும் வைபவத்தில் பேசிய குவார்ஸ், பிஜி ஜப்பானுடனும் சீனாவுடனுமான தனது தொடர்புகளை அபிவிருத்தி செய்து கொள்ள முயற்சிக்கும் என்றுள்ளார். அவர் இந்தக் புதிய கொள்கையை சதியின் பின்னர் அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் அறிமுகம் செய்த தடைகளுடன் தொடர்புபடுத்தினார். பிஜி தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க ஏனைய கூட்டுக்களை பாதுகாக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இக்கொள்கையின் ஒரு பாகமாக பிஜி ஜப்பான் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்தவராகுவதை ஆதரிக்கிறது. உலக வர்த்தக அமைப்பில் (WTO) சேர்ந்து கொள்ளும் சீனாவின் விண்ணப்பத்தையும் ஆதரிக்கின்றது.

இக்கொள்கையானது குறுகிய காலத்தில் அரசாங்கத்துக்கு அதிக அளவில் ஆதரவு வழங்கும்படி அவுஸ்திரேலியாவையும் நியூசிலாந்தையும் நெருக்கும் ஒரு முயற்சியாக தோன்றுகின்றது. அத்தோடு நீண்ட காலத்தில் பிஜி பிராந்திய சக்திகளில் தங்கி இருப்பதை குறைப்பதை நோக்கமாகவும் கொண்டுள்ளது. பிஜியின் வெளிநாட்டு வர்த்தகத்தில் அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மேலாதிக்கம் கொண்டுள்ளன. 68 சதவீதமான பிஜியன் இறக்குமதிகளை இவை விநியோகிக்கின்றன. அதே வேளையில் அதனது ஏற்றுமதிகளில் 39 சதவீதத்தை இவை பெறுகின்றன. யப்பானுடன் ஒப்பிடும் போது அது 7 சதவீதமான இறக்குமதிகளுக்கும் 5 சதவீதமான ஏற்றுமதிகளுக்கும் சமமானது.

குவார்சு அரசாங்கம் முதலாளித்துவ சக்திகளுக்கும் ஸ்பைட்டின் சதியை ஆதரித்த போக்குகளுக்கும் இடையே தொடர்ந்து புதையுண்டு வருகின்றது. ஸ்பைட்டின் உடன்பாட்டுடன் இராணுவத்தினால் ஆட்சியில் இருத்தப்பட்ட இந்த ஆட்சியாளர்கள் ஒரு பொருளாதாரத் திட்டத்தை இயற்றினர். அது பிஜியன் இனக்குழுவைச் சேர்ந்த பல வர்த்தகர்களுக்கு சலுகைகாட்டும் ஸ்பைட்டின் கோரிக்கைகளை வழங்குகின்றது. அத்தோடு இது இந்திய- பிஜியன்களுக்கு எதிராக அரசியல் பாகுபாடு காட்டும் வகையில் ஒரு புதிய அரசியலமைப்பு சட்டத்தை வரைந்து வருகின்றது. இது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் அவஸ்தைப்பட்டு அலைகிறது.

2001ம் ஆண்டுக்கான கடந்த மாத வரவு செலவுத்திட்டம் கம்பனி, உயர்மட்ட தனியாள் வரி வீதங்களையும் 34% வீதமாக்கியது. முன்னர் இது வதிபவர்களுக்கு 35 வீதமாகவும் வதிவற்றவர்களுக்கு (Non Residents) 45 வீதமாகவும் விளங்கியது. 2003ம் ஆண்டில் இது மேலும் 30 வீதமாக வெட்டப்பட உள்ளது. வரவு செலவுத் திட்ட அறிக்கையானது பிஜியை அனைத்துலக ரீதியில் பெரிதும் போட்டி நிறைந்ததாக செய்யும் எனவும் வதிவற்றவர்கள் "சமத்துவமான" முறையில் கையாளப்படுவர் எனவும் கூறியது.

இதே சமயம் வரவு செலவுத் திட்டம் சுதேச பிஜியன்களுக்கும் ரொத்துமன்சுகளுக்கும் சாதகமான 28 மில்லியன் டாலர்(F) பொதியை கொண்டிருந்தது. இது சுதேச வர்த்தகத்துக்கு 10 மில்லியன் டாலர்(F) நம்பிக்கை நிதியத்தையும் வழங்கியது.

ஸ்பைட்டுடன் சேர்த்து நாகுலுலு தீவில் வைக்கப்பட்டு இருந்த நான்கு மக்கள் கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆட்சியாளர்களுக்கு இடையேயான பதட்ட நிலை வெடித்தது. அரசாங்க வழக்குத் தொடுனர் தான் அவர்கள் மீது சதிப்புரட்சி குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடுப்பதற்கு போதிய சாட்சியங்கள் இல்லை என அறிவித்தார். டெவிட்டா புக்காறோ, மெட்டுயிசெலா முவா, இரோனி லியுவாகி, விலாமி செளசாவா என்ற நால்வரும் மே 19ம் திகதிய சதி புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட பணயக் கைதி நெருக்கடியின் போது 56 நாட்களும் பாராளுமன்றக் கட்டிடத்தினுள்ளேயே அடைக்கப்பட்டு கிடந்தனர்.

தீவில் 10 பேர்களை விட்டு விட்டு இவர்கள் விடுதலை செய்யப்பட்டமை ஸ்பைட்சுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே மேலும் சமரசம் ஏற்படுவதற்கான அறிகுறியை காட்டுகின்றது. குவார்சியின் பேச்சாளர் இதைப் பேணியதைத் தொடர்ந்து அரசியல் தன்மையான தீர்மானம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது. பிரதமர் அலுவலகத்தின் நிரந்தரச் செயலாளர் ஜியோஜி கொட்டோபலாவு அரசாங்க வழக்குத் தொடுநர் சகல சாட்சியங்களையும் கவனமாக ஆராய்ந்ததாகவும் போதிய சட்ட ஆலோசனை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலாக ஸ்பைட் இடைக்கால அரசாங்கத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார். அதனது பொருளாதார அறிக்கையை அவர் அங்கீகரித்தார். விடுதலை செய்யப்பட்ட ஒரு கைதி கூறியதாவது: ஸ்பைட் குவார்சுக்கும் ஜனாதிபதி ஜொசெப்போ இபொயிலோவுக்கும் கடிதம் எழுதியுள்ளதாயும் "தேசிய இணக்கப்பாட்டுக்கு" உதவுவதாக அவர் சிபார்சு செய்துறள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இச்சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமையை முதலாளிகள் குழுவும் பிஜி ஹோட்டல் அசோசியேசனும், செளத்ரியின் தொழிற் கட்சியும் பிஜி தொழிற்சங்க காங்கிரசும் கண்டனம் செய்தன. ஹோட்டல் அசோசியேசனின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஒலிபியா பரேட்டி, சதியின் பின்னர் பிஜியில் அறிமுகம் செய்யப்பட்ட பிரயாண ஆலோசனை தடையை மீள அறிமுகம் செய்ய இடமளிப்பதாக அமையும் என எச்சரிக்கை செய்தார். தீவு பாதுகாப்பாக உள்ளது என்பதை பயணிகளுக்கு ஊர்ஜிதம் செய்யும் பொருட்டு 11 மில்லியன் டாலர் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தில் அரசாங்கம் ஈடுபட்ட வேளையில் அவர் இதைச் செய்தார்.

குவார்ஸ் (Qarase) அரசாங்கம் அனைத்துலகக் கண்டனத்துக்கும் ஸ்பெயிட்டின் சதிப்புரட்சிக்கு ஆதரவு வழங்கிய சமூகத் தட்டுக்களில் -வலதுசாரி பிஜி தேசியவாத அரசியல்வாதிகள், வர்த்தக நிறுவன உரிமையாளர்கள், அரசாங்க அதிகாரிகள், நிலவுடமை அதிபதிகள்- பொருளாதார பகிஷ்கரிப்புக்கும் உள்ளாகும் ஆபத்து இருந்து கொண்டுள்ளது.

இத்தீர்மானம் இராணுவத்திடமிருந்து கணிசமான அளவு கண்டனத்தையும் பெற்றுள்ளது. இராணுவப் பேச்சாளர் மேஜர் ஹொவாட் பொலிட்டினி இராணுவம் அதிர்ச்சிக்குள்ளாகியதோடு ஏமாற்றமும் அடைந்துள்ளது என்றார். அரசாங்கத்தின் மீதான அவரின் செல்வாக்கை எதிர்த்த அனைத்துலக சக்திகளின் நெருக்குவாரங்களின் கீழ் ஆகஸ்டில் அது ஸ்பெயிட்டையும் அவரது ஆதரவாளர்களையும் கைது செய்தது.

இராணுவம் ஸ்பெயிட்டின் சதி காரணமாக ஆழமாகப் பிளவு கண்டு போயுள்ளது. இராணுவத் தலைமையகத்தை கைப்பற்றவும் மற்றொரு சதிப்புரட்சியை நவம்பர் 2ல் நடாத்தவும் முயற்சி செய்ததன் பேரில் 39 படையாட்களுக்கு எதிராக கலகம், கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் என சமீபத்தில் அறிவித்தது. இப்படையாட்கள் மரணதண்டனை குற்றச் சாட்டைக் கொண்ட ஒரு இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு நிற்க வேண்டும்.

அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்க குவார்ஸ் ஆட்சியாளர்களின் வல்லமை பற்றி அவுஸ்திரேலிய நியூசிலாந்து ஆட்சியாளர்கள் பெரிதுபடுத்தி அறிவித்துக் கொண்டுள்ள போதிலும் அதனால் ஒழுங்கைப் பேண முடியுமா என்பது பிஜியன் இனக்குழு பிரமுகர்களதும் அத்தோடு வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களதும் நலன்களை ஒரே தருணத்தில் கட்டிக் காக்க முடியுமா என்பதிலேயே அது தங்கியுள்ளது.