World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Gus Hall (1910-2000): Stalinist operative and decades-long leader of Communist Party USA

கஸ் ஹோல் (1910-2000): ஸ்ராலினிச செயற்பாட்டாளரும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு தசாப்த கால தலைவரும்.

By Fred Mazelis
6 November 2000

Use this version to print

தமது 90வது வயதில் அக்டோபர் 13ம் திகதி காலமான கஸ் ஹோல் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் (CPUSA) தலைவராக நான்கு தசாப்தங்களுக்கு மேலாகப் பதவி வகித்தவராவர். சோவியத் யூனியனின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் நலன்களை விசுவாசமான முறையில் பிரதிநிதித்துவம் செய்த அவர் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் அதன் மரணத்தையிட்டு துக்கங் கொண்டாடினார். ஆனால் தமது இறுதிநாட்கள் வரையும் ஹோல் "தேசிய சோசலிசத்தின்" எதிர்புரட்சி முன்நோக்கை தொடர்ந்து பேணி வந்தார்.

வடக்கு மினெஸ்டோவாவின் சுரங்க பிராந்தியத்தில் 1910 அக்டோபர் 8ல் பிறந்த ஹோலின் இயற்பெயர் ஆர்வோ கஸ்டா கோல்பேர்க் (Arvo Kusta Halberg). பின்லாந்தில் இருந்து குடியகன்றவர்களான அவரின் பெற்றோர்கள் புரட்சிகர சிண்டிகல்வாத அனைத்துலக உலக தொழிலாளர் அமைப்பின் (IWW) அங்கத்தவர்கள்.

படுமோசமான வறுமை நிலைமையில் இக்குடும்பத்தில் வளர்ந்த இந்த இளைஞன் பின்னர் கஸ் ஹோல் என்ற பெயரை வரித்துக் கொண்டதும் புரட்சிகர அரசியலுக்கு திரும்பியதும் ஆச்சரியத்துக்கு உரியது அல்ல. அவரது தந்தையாரான மட் ஹோல்பேர்க் 1919ம் ஆண்டில் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப அங்கத்தவராக விளங்கியதோடு 8 ஆண்டுகளின் பின்னர் தமது 17 வயது மகனையும் அதற்கு திரட்டினார்.

மிட்வெஸ்ட் (Midwest) பிராந்தியமும், முழு அமெரிக்காவும் உக்கிரமான வர்க்கப் போராட்ட காலப்பகுதியாக விளங்கிய காலகட்டம் இது. 1920 களின் வோல் ஸ்ரீட் செழிப்பு இலட்சோப லட்சம் தொழிலாளர்கள் முகம் கொடுத்த துயரங்களைப் போக்க எதுவும் செய்யவில்லை. சிறியதும் கணிசமானதுமான பகுதியினர் சோசலிச கருத்துக்கள் பக்கம் திரும்பினர்.

1927ம் ஆண்டின் கம்யூனிஸ்ட் கட்சி, ஏற்கனவே 1917ம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியால் ஆகர்ஷிக்கப்பட்டு 1919ல் தோன்றிய கட்சியில் இருந்து பெரிதும் வேறுபட்ட அமைப்பாகிப் போய்விட்டது. அனைத்துலக தொழிலாளர் வர்க்கத்துக்கும் அனைத்துலக சோசலிச முன்நோக்குக்கும் புறமுதுகு காட்டிய ஒரு கட்சியில் ஹோல் சேர்ந்தார். 1927 -ஸ்ராலின் ஒரு வசதி வாய்ப்புக்கள் நிறைந்த அதிகாரத்துவத்தின் சார்பில் தொழிற்பட்டு வந்த ஆண்டாகும். அதிகாரத்துவம் சோவியத் யூனினில் பலம் பெற்றதோடு போல்ஷிவிக் கட்சியின் மீதும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மீதும் தனது பிடியை இறுக்கிக் கொண்டது. லியொன் ட்ரொட்ஸ்கியால் தலைமை தாங்கப்பட்ட இடது எதிர்ப்பு இயக்கத்தில், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது. இடதுசாரி எதிர்க்கட்சியினரின் அரசியல் பத்திரங்களை வாசிக்கா வண்ணம் உலக கம்யூனிஸ்டுகள் தடுக்கப்பட்டனர். மாறாக அக்டோபர் புரட்சியில் லெனினுடன் இணைத் தலைவராக விளங்கிய ட்ரொட்ஸ்கிக்கு எதிராக சேறடிக்கும் இயக்கத்தில் சேருமாறு கட்டளையிடப்பட்டனர்.

அமெரிக்க கம்யூனிஸ்ட்டுக் கட்சி 1920 களில் தடுமாற்றம் நிறைந்த கன்னை கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டது. ஸ்ராலினிசக் கட்டுப்பாட்டிலான கம்யூனிஸ்ட் அகிலம் அதிகாரத்துவ ரீதியிலான தலையீடுகளை நடாத்தியதோடு அமெரிக்க கட்சியினுள் ஒரு முன்நோக்கு தொடர்பான தாக்கம் மிகுந்த கலந்துரையாடல் இடம்பெறுவதை தடைசெய்யும் பொருட்டு கொள்ளைகார சூழ்ச்சிகளில் ஈடுபட்டது. அத்தோடு மாஸ்கோவுக்கு பெரிதும் விசுவாசமான தலைவர்களை தலைமைப் பதவியிலும் அமர்த்தியது. 1920பதுகளின் முடிவில் ஸ்ராலின், அமெரிக்கன் கட்சியை சோவியத் அதிகாரத்துவத்துக்கு வளைந்து கொடுக்கக் கூடிய ஆயுதமாக ஆக்கும் வேலையை பெரிதும் பூர்த்தி செய்தார்.

அரசியல் தெளிவுக்கு பதிலாக அமைப்பு சூழ்ச்சிகளை பதிலீடு செய்த கன்னைவாத பலவீனங்களில் இருந்து தலையெடுக்க ஜேம்ஸ் பீ.கனனை (James P. Cannon) ச் சூழ இருந்த தலைமைப் பீடத்தின் பிரிவினரால் மட்டுமே முடிந்தது. கனன் 1928 ம் ஆண்டின் கம்யூனிஸ்ட் அகிலத்தின் காங்கிரசில் கலந்து கொண்டு, கம்யூனிஸ்ட் அகிலத்தின் வேலைத்திட்ட வரைவு: அடிப்படைக் கொள்கைகள் தொடர்பான விமர்சனங்கள் என்ற ட்ரொட்ஸ்கியின் பத்திரத்தை -இது இக்கூட்டத்தினுள் கடத்திச் செல்லப்பட்டது- வாசித்ததன் பின்னரே இடது எதிர்ப்பு (Left opposition) இயக்கத்திற்கு சார்பாக மாறினார். ஆனால் அதே ஆண்டு அக்டோபரில், அவர் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். கனன் 1938 ல் சோசலிச தொழிலாளர் கட்சியை ஸ்தாபிதம் செய்து அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் வரவிருந்தார். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கனன் வெளியேற்றப்பட்ட ஒரு சில மாதங்களுள் கனனை வெளியேற்ற ஆதரவு வழங்கிய ஜே லவ்ஸ்டோனும் (Jay Lovestone) அவரது சகாக்களும் அமெரிக்கன் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சோவியத் யூனியனுள் வலதுசாரி எதிர்ப்பின் தலைவராக விளங்கிய நிகொலாய் புகாரினின் கடந்த கால அரசியல் ஆதரவாளர்களாக இருந்த காரணத்தினாலேயே இது நடந்தது.

கிரம்ளினில் இருந்த ஸ்ராலினிச இயந்திரம் அமெரிக்க கட்சியை பெருமளவுக்கு பழக்கி எடுக்க முடிந்ததற்கு காரணம் ரஷ்யப் புரட்சியின் தோல்வியை கைக்குள் போட்டுக் கொண்டதேயாகும். அதே சமயம் இது பொதுவில் அமெரிக்கத் தொழிலாளர் இயக்கத்தினுள்ளும் அமெரிக்கக் கட்சியினுள்ளும் இருந்து வந்த சித்தாந்த, அரசியல் பலவீனங்களை சுரண்டிக் கொண்டது. இப்பலவீனங்கள் தேசிய, மாகாணவாத கோட்பாட்டின் பேரிலான அக்கறையீனம் போன்ற வடிவங்களை எடுத்தது.

"தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற ஸ்ராலினிச விடாப்பிடி கொள்கை புரட்சியின் தலைவிதியையிட்டு எல்லாம் நன்மைக்கே எனக் காட்டிக்கொள்ளப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் யதார்த்தத்தில் இது சோவியத் யூனியன் தனிமைப்பட்டுப் போவதை தகர்த்து எறிய தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு அனைத்துலக புரட்சிகரப் போராட்ட சாத்தியங்களையிட்டு ஆழமான ஒரு நம்பிக்கையீனத்தை குறித்து நின்றது. "தனிநாட்டில் சோசலிசம்" கம்யூனிஸ்ட் அகிலத்தினுள் அனைத்துலக சோசலிச முன்நோக்கைக் கைவிட்டு அதை ஒரு தேசியவாத வேலைத் திட்டத்தினால் பதிலீடு செய்த மூலகங்களின் பிரச்சார கூச்சலாக மாறியது. இது சோவியத், அனைத்துலக தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்காது அதிகாரத்துவத்தின் நலன்களை பிரதிபலிக்கச் செய்தது.

இந்தத் தேசியவாதக் கருத்துப்பாடு அனைத்துலக அபிவிருத்தியையிட்டும், உலக இயக்கத்தின் பிரச்சினைகளையிட்டும் எந்தவிதமான அக்கறையும் காட்டாத சக்திகளை மீட்டுவிடும் நரம்பாகியது. பெரும் பொருளாதார மந்த காலம் (Great Depression) அமெரிக்காவின் உள்ளும் வேறு இடங்களிலும் புதிய அரசியல் வாய்ப்புகளையும் சவால்களையும் கொணர்ந்தது. அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மீதான ஸ்ராலினிஸ்டுகளின் பிடி பூர்த்தி செய்யப்பட்டது. ரஷ்யப் புரட்சியின் சீரழிவு பிரமாண்டமான அளவில் அமெரிக்கத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் கோட்பாட்டுப் பலவீனங்களை மோசமடையச் செய்தது. அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அதனது ஆரம்ப சாத்தியங்களை உணர்ந்து கொள்ளவிடாது தடுத்தது.

அரசியல் வாழ்க்கையை ஒரு புரட்சியாளனாக ஆரம்பித்த ஹோல் பல அரசியல் பலவீனங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தார். இது அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியை கிரம்ளின் இயந்திரத்தின் எதிர்ப் புரட்சி ஆயுதமாக மாற்றமடைய இட்டுச் சென்றது. பலரைப் போலவே அவரும் ட்ரொட்ஸ்கியினால் புரட்சிக்கு "சவக்குழி தோண்டுபவர்கள்" ஆக பண்பாக்கம் செய்யப்பட்ட ஸ்ராலினிச கும்பலைக் காப்பதையும் ரஷ்யப் புரட்சியைப் பாதுகாப்பதையும் ஒன்றாக இனங்காணத் தள்ளப்பட்டார்.

1930பதுகளிலும் 1940பதுகளிலும் ஹோல் படிப்படியாக கட்சித் தலைமைப் பீடத்தில் ஏறிக் கொண்டார். 1931 தொடக்கம் அவர் இரண்டு ஆண்டுகளை மாஸ்கோ லெனின் இன்ஸ்ரிரியூட்டில் செலவிட்டார். இந்த "மூன்றாம் காலப்பகுதி" (Third period) காலத்திலேயே கம்யூனிஸ்ட் அகிலம், சமூக ஜனநாயகத்தையும் (Social Democracy) சோசலிச இயக்கத்தில் இருந்த ஏனைய சகல போக்குகளையும் "சமூக பாசிசம்" (Social Facism) என கண்டனம் செய்தது. இந்த அதிதீவிர இடதுசாரி தகவமைவானது பாசிச ஆபத்துக்கு எதிராக தொழிலாளர் இயக்கத்தை ஐக்கியப்படச் செய்யும் போராட்டத்தை தடுத்துவிட்டது. அத்தோடு ஹிட்லர் ஜேர்மனியில் போராட்டம் இல்லாமல் மாபெரும் வெற்றியை ஈட்டுவதை சாதகமாக்கியது. இதனால் தொழிலாளர் வர்க்கத்துக்கும் முழு மனித இனத்துக்கும் பிரமாண்டமான பேரழிவுகள் ஏற்பட்டன.

1930பதுகளின் இரண்டாவது அரையிறுதி காலப் பகுதியில் ஸ்ராலினிஸ்டுகள் மூன்றாம் காலப்பகுதி கொள்கையை அடிதலையாக்கினர். முன்னர் பாசிஸ்டுகள் சீர்திருத்தவாதிகளாக பட்டயம் தீட்டப்பட்டனர். இப்போது பழமைவாத முதலாளித்துவ அரசியல்வாதிகள் கூட பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தின் சகாக்களாக கொண்டாடப்பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலாளித்துவ அரசாங்கங்களில் சேர்ந்து கொண்டனர் அல்லது பெரும் வர்த்தக நிறுவனங்களின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி தொழிலாளர்கள் கேட்கப்பட்டனர். முதலாளித்துவ தாராண்மை வாதத்துடனான பொதுஜன முன்னணி கூட்டுக்கள் (Popular front Alliance) கம்யூனிஸ்ட் அகிலம் ஸ்ராலினால் கலைக்கப்படுவதற்கு முன்னதாக 1935ல் இடம்பெற்ற இறுதி காங்கிரசில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது அமெரிக்கன் கம்யூனிஸ்ட் கட்சியினால் விசேட அக்கறையுடன் அமுல் செய்யப்பட்டது. இக்காலப் பகுதியில் இதன் பொதுச் செயலாளர் ஏர் புரோடர் (Earl Browder) கம்யூனிசத்தை "இருபதாம் நூற்றாண்டின் அமெரிக்கன் வாதம்" ஆக ஒலிப்பதிவு செய்து கொண்டார். இக்கட்சி பிராங்கிளின் டீ. ரூஷ்வெல்ட்டின் நிர்வாகத்துக்கு உற்சாகத்துடன் ஆதரவு அளிப்பதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது. அதைக் காட்டிலும் ஆர்வத்தோடு ஸ்ராலினின் துடைத்துக்கட்டல்களுக்கும் எதிர்ப்புரட்சி பயங்கரங்களுக்கும் ஆதரவு வழங்கியது. இதில் 1917 புரட்சியின் தலைவர்களில் எஞ்சியிருந்தவர்களுக்கு எதிராக பொய் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

ஸ்ராலினிச துடைத்துக்கட்டல் நடவடிக்கைகள் பாசிச ஜேர்மனிக்கு எதிராக மேற்கத்தைய முதலாளித்துவ ஜனநாயகங்களுடன் ஒரு கூட்டினை அமைக்க சோவியத் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட இராஜதந்திர முயற்சிகளுடன் இணைந்த விதத்தில் இடம்பெற்றன. மார்க்சிச புத்திஜீவிகள், தொழிலாளர்கள், பழைய கட்சித் தலைவர்கள் அழித்து ஒழிக்கப்பட்டமை ஒரு புறத்தில் மாஸ்கோ மேற்கத்தைய நாடுகளின் கூட்டாக இருக்குமெனவும் சோவியத் யூனியனையிட்டு அவை அச்சம் கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதையும் காட்டுவதை இலக்காகக் கொண்டே இடம்பெற்றன.

அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம் உள்ளமர்வு வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியதோடு அது 5 மில்லியன் தொழிலாளர்கள் புதிய கைத்தொழில் தொழிற்சங்கமான சீ.ஐ.ஓ. வை ஒரு வருட காலத்துள் அமைக்கவும் வைத்தது. அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி இந்த வெடித்துச் சிதறும் இயக்கத்தை ஜனநாயகக் கட்சியுடனும் இலாப அமைப்பின் வரம்பினுள்ளும் கட்டிப் போடுவதன் மூலம் முதலாளித்துவத்துக்கு அதன் பயன்பாட்டை மேலும் காட்டிக் கொண்டது.

ஹோல் தனது பயிற்சியில் பெரும்பகுதியை இக்காலப்பகுதியிலேயே பெற்றார். வடகிழக்கு ஒகியோவில் உள்ள வாரன், நைல்ஸ் பகுதிகளில் உள்ள உருக்கு கைத்தொழில் நிலையங்களின் உருக்கு தொழிலாளர் ஒழுங்கமைப்பு கமிட்டிகளில் தொழிற்பட்டதன் மூலம் ஹொல் யுனைற்றட் மைன் வேர்க்கர்ஸ் யூனியன் (United mine workers union) தலைவர் ஜோன்.எல்.லூவிஸின் கீழான சீ.ஐ.ஒ. தொழிற்சங்கங்களின் கீழ் பதவி வகித்த இளம் கம்யூனிஸ்ட் கட்சி செயற்பாட்டாளர்கள் தலைமுறையை சேர்ந்தவர்களின் ஒரு பாகமாக விளங்கினார்.

இக்காலப் பகுதியில் லூவிஸ் பெரும் கைத்தொழில் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய போதும் லூவிஸ் ஒரு வெறிபிடித்த கம்யூனிஸ்ட் விரோதியாக விளங்கினார். உருக்கு கைத்தொழில் துறையில் ஒழுங்கமைப்பு பிரச்சாரங்களுக்கு தலைமை தாங்கிய இவரின் தளபதியாக விளங்கிய பிலிப் முறே ஒரு பழமைவாத கத்தோலிக்க தொழிற்சங்கவாதியாக விளங்கினார். சோசலிசத்தை இவர்கள் வெறுத்த போதிலும் லூவிசும் முறேயும் ஸ்ராலினிஸ்டுகளுக்கு தொழிற்சங்கப் பதவிகளை வழங்கினர். அவர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகவில்லை. சோவியத் யூனியனுடன் சேர்ந்து அமெரிக்கா இரண்டாம் உலக யுத்தத்தில் இறக்கிய போது தொழிற்சங்கங்களில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் "வர்க்க சமாதானத்தின்" வெறிகொண்ட அத்துவகாத்துக்களாக விளங்கினர். ஏ.எப்.எல்.- சீ.ஐ.ஒ. உயர்மட்ட (AFL- CIO) புள்ளிகளால் இணக்கம் காணப்பட்ட வேலைநிறுத்தம் செய்வதில்லை என்ற வாக்குறுதியை உறுதியாக ஊர்ஜிதம் செய்தனர். லூவிஸ் ரூஷ்வெல்டுக்கு எதிராக சுரங்கத் தொழிலாளர்களை யுத்த கால வெளிநடப்பில் இறங்கிய பது அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி லூவிசை ஒரு "பாசிஸ்ட் ஏஜன்ட்" என கண்டனம் செய்தது.

யுத்தம் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்த நிலையிலும் கூட கம்யூனிஸ்ட் கட்சி வேலைநிறுத்தம் செய்வதில்லை என்ற வாக்குறுதியை தொடர்ந்து கடைபிடிக்கும்படி பிரச்சாரம் செய்தது. இதனது யுத்த காலப் பாத்திரம் சீ.ஐ.ஓ. (CIO) போராளிகளின் பகைமையை தேடிக்கொள்ளச் செய்தது. யுத்ததிற்கு பின்னைய ஒரு மாற்றமடைந்த நிலைமைகளின் கீழ் அமெரிக்க ஆளும் வர்க்கமும் தொழிலாளர் அதிகாரத்துவமும் கம்யூனிஸ்ட் விரோத வேட்டைகளில் ஈடுபடுவதற்கான ஒரு அரசியல் சூழ்நிலையை உருவாக்க ஒத்துழைத்தது.

1935-1945க்கும் இடைப்பட்ட காலப்பகுதியின் அனுபவங்கள் ஹோலை ஒரு அரசியல் புள்ளியாக உருவாக்குவதில் தீர்க்கமான பங்கை வகித்தது. அவர் ஒரு போதுமே ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த புள்ளியாக இருந்ததில்லை. அவர் ஈட்டிக் கொண்ட அமைப்பு, அரசியல் ஆற்றல்கள் முக்கியமாக இக்காலப் பகுதியிலேயே கிடைத்தன. இக்காலப்பகுதியில் ஸ்ராலினிஸ்டுகள் வெகுஜன இயக்கத்தில் ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தினை வகித்தனர். தனது வாழ்க்கையின் எஞ்சிய காலப்பகுதியில் ஹோல் ஒரு வீட்டு வளர்ப்பு அமெரிக்கன் தொழிலாளர் தலைவர் என்பதுடன் ஸ்ராலினிச கோட்பாடுகளுக்கும் மாஸ்கோ எஜமானர்களுக்கும் விசுவாசமானவராகவும் விளங்கினார்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்க கொள்கையில் ஒரு பெரும் திருப்பம் ஏற்பட்டது. இந்த கொள்கை மாற்றம் ஹோலின் எதிர்கால பாத்திரத்தை நிர்ணயம் செய்ய இருந்தது. வாஷிங்டனுக்கும் மாஸ்கோவுக்கும் இடையேயான கூட்டு குளிர் யுத்தத்தினால் (Cold war) பதிலீடு செய்யப்பட்டது. அமெரிக்க முதலாளித்துவம் அதனது யுத்தத்துக்கு பிந்திய வெளிநாட்டு, உள்நாட்டு கொள்க்ைகளுக்கு ஏற்ப இதைப் புதுக்கி அமைத்தது.

அமெரிக்கா தொழிலாளர் வர்க்கத்தை காட்டிக் கொடுப்பதற்கு அனைத்துலக ஸ்ராலினிச இயந்திரத்தில் தொடர்ந்து தங்கியிருந்தது. யுத்தத்தின் முடிவில் ஐரோப்பா பூராவும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றில் முதலாளித்துவ அரசாங்கங்களுள் நுழைந்தன அல்லது ஆதரவளித்தன. அதன் மூலம் பொருளாதார மந்தத்தையும் பாசிசத்தையும் இராணுவ மனிதப் படுகொலைகளையும் அளப்பரிய அளவில் கொணர்ந்த ஒரு அமைப்புடன் தொழிலாளர் வர்க்கம் ஒரு புரட்சிகரத் தீர்வை அமுலுக்கு கொணர்வதை தடுத்தன.

இச்சமயத்தில் அமெரிக்க முதலாளித்துவம் புதிதாக அமைக்கப்பட்ட சீ.ஐ.ஏ. (CIA) மூலமும் மற்றும் ஏஜன்சிகள் மூலமும் தனது அபிலாசைகளை இட்டு நிரப்பும் எதிர்ப்புரட்சி சூழ்ச்சிகளில் ஈடுபட்டது. அத்தோடு அது மார்க்சிசத்துக்கு எதிரான சித்தாந்த பிரச்சாரங்களையும் புதுப்பித்தது. ஸ்ராலினின் சோவியத் யூனியனின் உதாரணம்- பயங்கரமான ஒழித்துக்கட்டல்கள், சித்திரவதை முகாம்கள் கொடுங்கோன்மை ஆட்சி- உலக ஏகாதிபத்தியத்துக்கு பெரிதும் பயனுள்ளதாக விளங்கியது. ஸ்ராலினிசத்தை தவறான முறையில் சோசலிசத்துடன் இனங்காட்டிக் கொண்டமை -ஸ்ராலினின் சொந்த கோரிக்க்ைகளுக்கு இணங்க- கம்யூனிச எதிர்ப்பையும் சோவினிசத்தையும் தூண்டிவிட கைகொடுத்தது. தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தனது சொந்த தாக்குதலில் இருந்து கவனத்தை திசை திருப்பவும் இது உதவியது.

இந்த அடிப்படையிலேயே அமெரிக்காவினுள் குளிர்யுத்த கால வேட்டைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிரான மக்கார்த்தி வாத பிரச்சாரங்கள் தொழிலாளர் வர்க்கத்தில் இருந்த அனைத்து இடது கன்னை எதிர்க் கட்சிகளுக்கும் எதிராக நெறிப்படுத்தப்பட்டது. சி.ஐ.ஓ.வில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி ஆதிக்கம் கொண்ட தொழிற்சங்கங்கள் வெளியேற்றப்பட்ட அதே வேளையில் சோசலிச தொழிற்சங்கவாதிகள் கூட -ஸ்ராலினிசத்தின் கொள்கைப்பிடிப்பான எதிரிகள்- தொழிலாளர் இயக்கத்தில் இருந்து வேட்டையாடப்பட்டனர்.

1948ல் ஹோலும் மற்றும் 11 கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் கேவலமான சிமித் சட்டத்தின் (Simith act) கீழ் விசாரணைக்கு நிறுத்தப்பட்டனர். இச்சட்டம் "வன்முறையாலும் கலகத்தாலும்" ஒரு அரசாங்கத்தை தூக்கி வீசும்படி பிரச்சாரம் செய்வதை "சதி" ஆக்கியது. இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டு 5 வருட காலம் சிறைக்குள் தள்ளப்பட்டனர். இந்த தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு விசாரணை நடைபெறுகையில் ஹோல் 1951ல் சிறையில் இருந்து தப்பியோடினார். ஒரு சில மாதங்களுக்குள் கைது செய்யப்பட்ட இவரது சிறைத் தண்டனை 8 வருடங்களாக நீடிக்கப்பட்டது. இத்தண்டனையை இவர் கன்சாசில் உள்ள பெடரல் பெனிடெனிடயறியில் கழித்தார்.

இந்த சிமித் சட்டம் 1948ல் இயற்றப்பட்டது. சோசலிசத் தொழிலாளர் கட்சியின் (SWP) ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இச்சட்டத்தின் கீழ் 1941ல் விசாரணைக்கு நிறுத்தப்பட்டபோது ஹோலும் ஏனைய ஸ்ராலினிஸ்டுகளும் இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையையும் தண்டனையையும் வரவேற்றனர். ஆனால் இச்சட்டம் ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிராகத் திருப்பப்பட்ட போது அமெரிக்கன் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஒரு கொள்கைப் பிடிப்பான நிலைப்பாட்டை வகித்தனர். ஸ்ராலினிஸ்டுகளுடனான தனது அடிப்படையானதும் ஈடு செய்யமுடியாததுமான அரசியல் வேறுபாடுகளுக்கிடையேயும் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான வேட்டையை தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குல் எனக் கண்டனம் செய்ததோடு, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை பேணியது.

1950பதுகளின் ஆரம்பத்திலும் நடுப்பகுதியிலும் ஹோல் சிறைக்குள் இருந்து வந்த சமயத்தில் ஸ்ராலினிசத்தின் நெருக்கடி உச்சக் கட்டத்தை அடைந்தது. ஸ்டாலின் 1953 மார்ச்சில் மரணமானதோடு அதை அடுத்து வந்த ஒரு சில மாதங்களுள் கிழக்கு பேர்லினின் ஆத்திரம் கண்ட தொழிலாளர்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. அக்கிளர்ச்சி கிழக்கு பேர்ளின் ஸ்ராலினிச அதிகாரிகளால் மிலேச்சத்தனமாக நசுக்கப்பட்டது. 1956ல் நிகிட்டா குருஷேவ் ஸ்ராலினின் அட்டூழியங்கள் பலவற்றை ஒப்புக் கொள்ளும் விதத்தில் இரகசிய உரை நிகழ்த்தினார். அதே ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற ஹங்கேரியன் புரட்சி சோவியத் டாங்கிகளால் உடனடியாக இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட போதிலும் அது ஸ்டாலினிச அதிகாரத்துவத்தை ஈடாட்டம் காணச் செய்தது. 1957ல் சிறையில் இருந்து வெளிவந்த ஹோல் இந்த மாபெரும் நிகழ்வுகளால் அதிர்ந்து போனார். கட்சியின் பழம் பெரும் தலைவரான வில்லியம் இசட் போஸ்டருடன் நெருக்கமாக உறவு கொண்டிருந்த உறுதியான ஸ்ராலினிஸ்டான ஹோல், டெயிலி வேர்க்கர் (Daily Worker) ஆசிரியரான ஜோன் கேட்ஸ் தலைமையிலான குழுவுக்கு எதிராக கட்சியினுள் போராட்டத்தில் ஈடுபட்டார். கேட்ஸ் கன்னை இதற்கு முன்னரும் பின்னரும் இருந்த பலரைப் போல அதிகாரத்துவத்தின் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறை விதிமுறைகளில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொண்டிருந்தனர். ஸ்ராலினிசத்தின் சாராம்சமான தேசியவாத முன்நோக்கை தொடர்ந்தும் கடைப்பிடித்துக் கொண்டே இதைச் செய்தனர். ஸ்ராலினிசத்தை மார்க்சிசத்துடன் ஒப்பிட்டு வந்த இக்குழு அதிகாரத்துவத்தின் நெருக்கடியை தொழிலாளர் வர்க்கத்தினுள் ஒரு மார்க்சிசக் கட்சியை கட்டியெழுப்ப முடியாது என்பதற்கு உதாரணமாக கண்டது.

1956-1958க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்களுள் பெரும்பான்மையினர் மனமுடைந்து போனதோடு சோவியத் அணி நாடுகளில் இடம்பெறும் கிளர்ச்சிகளுக்கான ஒரு தெளிவான ஆய்வினைக் கொண்டிராமல் இருந்தனர். இதனால் கட்சியை விட்டு வெளியேறினர். மாஸ்கோவுக்கு விசுவாசமான கன்னைகள் கட்சிக்குள் காத்திருந்து உடைந்து போன அமைப்பின் துண்டுகளை பொறுக்கி எடுத்தனர். அமெரிக்க கம்யூனிஸ்டுக் கட்சி அடியோடு சரிந்து போய் வந்த இந்தக் காலப்பகுதியிலேயே ஹோல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அன்றைய பொதுச் செயலாளரான இயகின் டெனிஸ் சோவியத் யூனியனுக்கு விசுவாசமானவர் இல்லை எனக் குற்றம் சாட்டி அவரின் இடத்தை இவர் பிடித்துக் கொண்டார்.

அடுத்து வந்த 40 ஆண்டு காலமாக அமெரிக்க ஸ்ராலினிஸ்டுகள் ஹோலின் தலைமையின் கீழ் அதிகரித்த அளவில் இறுகிப் போயினர். அவர்கள் ஜனநாயகக் கட்சிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கும் ஆட்டங்காணாது ஆதரவு வழங்கினர். 1960 பதுகளிலும் 1970 பதுகளிலும் பல மில்லியன் கணக்கான அமெரிக்க தொழிலாளர்களும் மாணவர்களும் இளைஞர்களும் கம்யூனிஸ்ட் கட்சி என்ற தவறான பெயர் கொண்ட கட்சியைக் காட்டிலும் பெரிதும் இடதுசாரிகளாக விளங்கினர். அமரிக்க கம்யூனிஸ்டுக் கட்சி அல்லது அதன் மிச்ச சொச்சங்கள் எப்போதும் சிவில் உரிமைப் போராட்டங்கள், வியட்னாமிய யுத்தத்துக்கு எதிரான இயக்கம் தொழிலாளர் வர்க்க போராளிகளின் எழுச்சிகளிலேயே தங்கியிருந்தன. ஏ.எப்.எல்.-சீ.ஐ.ஒ. வை கட்டியெழுப்பவும் வெள்ளை மாளிகையிலும் காங்கிரசிலும் மாநிலங்களிலும் உள்ளூராட்சி சபைகளிலும் ஜனநாயகக் கட்சிக் காரர்களை கைதூக்கி விடவும் செயற்பட்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சி உண்மையில் ரூஸ்வெல்ட் தொடக்கம் கோர் வரையிலான சகல ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களையும் ஆதரித்தது. 1948ம் ஆண்டின் தேர்தலில் மட்டும் இது ஒரு தடவை மூன்றாம் தரப்பு வேட்பாளரான ஹென்றி வலசை ஆதரித்தது. இவர் மாஜி உதவி ஜனாதிபதியாகவும் விவசாய அமைச்சராகவும் விளங்கியதோடு சோவியத் யூனியனுடன் தொடர்ந்து சகவாழ்வு நடாத்த வேண்டும் எனக் கோரி வந்தார்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கு காக்காய் பிடிப்பது ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என்ற முறையில் ஹோலின் அசல் அறிகுறியாக விளங்கியது. அமெரிக்க தொழிலாளர் இயக்கம் சம்பந்தமான ஹோலின் பேச்சுக்களும் கட்டுரைகளும் சந்தர்ப்பவாதத்தின் எடுத்துக்காட்டாக விளங்கியது. இவர் ஏ.எப்.எல்.- சீ.ஐ.ஓ. வின் (AFL-CIO) காலஞ்சென்ற தலைவர் ஜோர்ஜ் மீனியாலும் அவரின் வாரிசான லேன் கீர்க்லன்டினாலும் கடைப்பிடிக்கப்பட்ட கடும்போக்கு சோவியத் எதிர்ப்பு கொள்கையை மென்மையாக்கும்படி ஹோல் அடிக்கடி வேண்டி வந்தார். ஸ்ராலினிஸ்டுகள் வேறுமனே AFL-CIO வின் ஊழல்களைப் பற்றியும் வேலைநிறுத்த முறியடிப்புக்கள் பற்றியும் புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிரான சோவினிசம் பற்றியும் முறைப்பட்டுக் கொண்ட போதிலும் பெரும் வர்த்தக நிறுவனங்களின் ஜனநாயக கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கும் ஆதரவை தொடர்ந்து வழங்கி வந்தது. அவர்கள் விரும்பியது எல்லாம் குளிர் யுத்தத்துக்கு முன்னர் போன்று அமெரிக்க தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கு சேவகம் செய்யும் வாய்ப்பேயாகும். ஹோல் அடிக்கடி ஸ்ராலினிஸ்டுகளதும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களதும் "மத்திய-இடது" (Center-Left) கூட்டு, ரூஷ்வெல்டுக்கு சார்பாக தொழிற்பட்ட நாட்களை திரும்பிக் கவனித்துக் கொள்வார்.

சோவியத் அதிகாரத்துவத்தின் மரணத்தை தொடர்ந்து ஹோல் AFL- CIO தலைமைக்கு சேவகம் செய்வதற்கான புதிய வாய்ப்புக்களின் ஒரு தங்கக் கரையை கண்டார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலாளர் சம்மேளனத்தின் (Labor Federation) தலைவராக நியமனம் செய்யப்பட்ட ஜோன் சுவீனி, கம்யூனிஸ்ட் கட்சியாள் விமர்சனத்துக்குள்ளாகாமல் பாராட்டப்பட்டார்.

ஹோலின் தலைமையின் கீழ் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் அதிகாரத்துவத்துக்கு அடிபணிவதில் பேர்போனதாக விளங்கியது. ஏனைய ஸ்ராலினிச கட்சிகள் சோவியத் ஆட்சியாளர்களை விமர்சனம் செய்வதற்கான கடப்பாட்டைக் கொண்டுள்ளதாக உணர்ந்த போதிலும் ஹோல் அங்ஙனம் செய்தது கிடையாது. 44 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் டாங்கிகள் ஹங்கேரியன் புரட்சியை நசுக்கிய போதும் 12 ஆண்டுகளின் பின்னர் வார்ஷா உடன்படிக்கை நாடுகளின் படைகள் செக்கோசலவாக்கியா மீது ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட போதும் ஹோல் மாஸ்கோவின் அடக்குமுறையை பேணினார். 1980ல் போலந்தில் மீண்டும் சோலிடாரிட்டி இயக்கம் தலையெடுத்த போது ஹோல் மீண்டும் தொழிலாளர் வர்க்கத்தை தாக்கினார். இதன் மூலம் ஸ்ராலினிசத்துக்கு எதிரான ஒரு பெரும் தன்னியல்பான கிளர்ச்சியாக ஆரம்பித்த இதை கத்தோலிக்க திருச்சபை உள்ளிட்ட கம்யூனிச எதிர்ப்பு சக்திகளை அணைத்துக் கொள்ளத் தள்ளினார்.

ஏனைய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஒப்பிட்டு நோக்குமிடத்து ஒரு திட்டவட்டமான வர்க்க தகவமைவும் சமூக நோக்கும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடாத்தியது. இது அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு கேவலமான பாத்திரத்தை வகிக்கச் செய்தது. 1930பதுகளின் நடுப்பகுதியில் இது தொழிலாளர் வர்க்கத்தின் மீது மேலும் மேலும் குறைந்த விதத்திலும் சோவியத் யூனியனின் ஸ்ராலினிச ஆட்சியாளர்களால் ஈர்க்கப்பட்ட ஒரு மத்திய தர வர்க்கத் தட்டினர் மீது மேலும் மேலும் அதிகமாகவும் சாய்ந்து வந்தது. கம்யூனிஸ்ட் கட்சி CIO வினுள் பெரும் செல்வாக்கை கொண்டிருந்த போதிலும் இதனது ஆளுமை பெருமளவுக்கு அங்கத்தவர்களின்றி தொழிற்சங்கங்களின் உயர்மட்டத்தினரிலேயே தங்கியிருந்தது. இது 1940 பதுகளின் கடைப்பகுதியில் CIO அதிகாரத்துவம் ஸ்டாலினிஸ்டுகளை வெளியேற்றுவதைப் பெரிதும் இலகுவாக்கியது.

அமெரிக்க கம்யூனிஸ்டுக் கட்சி கிளண்டிப் போனதும் தேய்ந்து விட்டதுமான அங்கத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட பல தசாப்த கால வெளிப்படையான உள்வாரி ஸ்திரப்பாட்டின் பின்னர் இறுதியில் 1991ல் சோவியத் யூனியின் கலைக்கப்பட்டதன் பின்னர் சிதறிப் போயிற்று. கஸ் ஹல்லுடன் பல தசாப்தங்களாக சேர்ந்து தொழிற்பட்ட பல முக்கிய புள்ளிகள்- வரலாற்றாசிரியர் ஹேபேட் அப்தேகர், அஞ்சலா டேவிஸ், பத்திரிகையாளர் கார்ள் புளொயிஸ்- The commitees of Correspondence என அழைக்கப்பட்ட சிறியதும் பெருமளவில் குறைப் பிரசவமுமான அமைப்புகளை அமைக்கும் பொருட்டு கட்சியில் இருந்து வெளியேறினர்.

ஆனால் ஜனநாயக கட்சிக்காரர்களுக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கும் ஆதரவளிக்கும் விடயத்தில் இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையே அடிப்படை வேறுபாடுகள் இருந்தது கிடையாது. இவை இரண்டும் ஸ்ராலினிசத்தின் தேசியவாத அடிப்படையில் நின்றதோடு அதைப் பேணவும் செய்தன. எவ்வாறெனினும் மாஸ்கோ தொடர்புகள் இல்லாமல் போனதும் சிறிய அமெரிக்கன் கம்யூனிஸ்ட் கட்சியினுள் "ஈரோ கம்யூனிஸ்ட்" (Euro-Communist) போக்கு எதிரொலித்தது.

ஈரோ-கம்யூனிசம் ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் இத்தாலியன் கம்யூனிஸ்ட் கட்சியாலும் ஏனைய ஐரோப்பிய ஸ்ராலினிசக் கட்சிகளாலும் முன்னணிக்கு கொணரப்பட்டது. இது இக்கட்சிகளை சமூக ஜனநாயகத்தின் திசையில் திருப்ப முயன்றது. மார்க்சிசத்துக்கான ஆதரவை வழங்குவதையும் ரூஷ்ய புரட்சியின் மூல இலக்குகளையும் இது வெளிவெளியாக கைவிட்டது. எவ்வாறெனினும் ஹோல் இந்த சமூக ஜனநாயக அலைச்சலின் பாகமாக விளங்கவில்லை.

விமர்சகர்களுக்கான அவரின் பதில் தனிமைப்பட்டதும் பின்தங்கிய ஆட்சியுமான வடகொரியாவை பாராட்டி புகழ்வதாக விளங்கியது. இதனை அனைத்துலக தொழிலாளர் வர்க்கத்துக்கான ஒரு மாதிரி என அழைத்தார். அமெரிக்கன் கம்யூனிஸ்ட் கட்சி இந்த விதத்தில் மோதிக் கொள்கின்றதும் வங்குரோத்தும் சந்தர்ப்பவாதமும் நிறைந்த குழுக்களாக சிதறுண்டமையும் ஸ்ராலினிசத்தின் வரலாற்று முட்டுச் சுவரை தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டின. ஒரு குழு இந்தப் போக்கினை -சமூக ஜனநாயக சீர்திருத்ததை முன்னர் ஒரு போதும் இல்லாத விதத்தில் அதனது தோல்வியாகக் காட்டியது. ஹோல் தலைமையிலான ஏனைய குழு ஒரு காலத்தில் பலம் வாய்ந்த சோவியத் சாதனங்களை அடிப்படையாகக் கொண்டு நின்றிருந்த தேசிய சீர்திருத்தத்தின் ஸ்ராலினிச பாணி வீழ்ச்சி கண்டு போன பின்னரும் அதை விடாப்பிடியாக கட்டிக் காத்தது.

கடந்த தசாப்தம் ஹோலுக்கு ஆபத்தான தருணங்களை கொணர்ந்தது. மாஸ்கோ அமெரிக்கன் கட்சிக்கு மில்லியன் கணக்கான டாலர்களை நிதி உதவியாக வழங்கி வந்தது தெரிய வந்தது. இந்த அபிவிருத்தியானது வலதுசாரி விமர்சகர்களை அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி ஒரு உளவாளிகளின் கூடேயல்லாமல் வேறொன்றும் அல்ல என வாதிடச் செய்தது. கம்யூனிஸ்ட் எதிரிகளைப் பொறுத்தமட்டில் தொழிலாளர்களுக்கு இடையேயான அனைத்துலக உறவுகள் ஒரு குற்றமாகும். ஆனால் அமெரிக்கன் கம்யூனிஸ்ட் கட்சிக்கான கிரேம்ளினின் உபமானியங்கள் அமெரிக்க கட்சி வெறுமனே "ஒரு வெளிநாட்டு சக்தியின் ஏஜன்டு" என்பதை நிரூபிக்காமல் அது ஸ்ராலினிசத்தின் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆரம்ப காலத்தில் உலகம் பூராவும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் சோசலிசத்துக்கான போராட்டத்தை தமது சொந்த நாடுகளில் நடாத்துவதன் மூலம் முதலாவது தொழிலாளர் அரசை பாதுகாக்கப் போராடினர். இதன் மூலம் ரஷ்யப் புரட்சியை பாதுகாக்க திட்டவட்டமாக உதவினர். எவ்வாறெனினும் கஸ் ஹோலின் நிதி ஏற்பாடுகள் சோவியத் யூனியன் தொழிலாளர் வர்க்கத்துக்கு உதவுவதோடு எதுவிதமான தொடர்பும் இல்லாதவை மாஸ்கோவிடம் இருந்து கிடைத்த பணம் பல தசாப்தங்களாக நியாயமற்றதை பேணிக்காத்ததன் பின்னர் அமெரிக்கன் கம்யூனிஸ்ட் கட்சி அதனது தொடர்ச்சியான உயிர் வாழ்க்கைக்கு அது அரசியல் ரீதியாக ஒத்துழைத்த ஆட்சியிடம் இருந்து பெருமளவுக்கு பிச்சைக்காசு பெறுவதில் தங்கியிருந்தது.

ஹோலின் மரணத்தின் பேரிலான தொடர்புச் சாதனங்களின் செய்திகள் சில சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை மிகவும் முக்கியமான அரசியல் புள்ளிக்கு உரிய விதத்தில் ஏறக்குறைய ஒரு முழுப்பக்க அனுதாபச் செய்தியை தீட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து ஹோலின் மரணத்தைப் பற்றி ஒரு ஆசிரியத் தலையங்கம் வெளியாகியது. இதற்கு முரண்பட்ட விதத்தில் 1947ல் அமெரிக்க ட்ரொட்ஸ்கிசத்தின் ஸ்தாபகரும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தில் ஒரு பெரும் புள்ளியாக விளங்கியவருமான ஒருவர் பெரிதும் மேம்போக்கான விதத்தில் புறக்கணிக்கப்பட்டார்.

ஹோலின் அரசியல் வாழ்க்கை அப்படியொன்றும் பெரிதாகப் பேசுவதற்கு எதையும் கொண்டது அல்ல. ஆனால் நியூயோக் டைம்ஸ் அவரும் அவரது கட்சியும் ஆற்றிய பணிகளை குறித்து வைப்பது அவசியமென உணர்ந்தது. அதனது மரணச் செய்தி, அமெரிக்கன் தொழிலாளர் வர்க்கத்துக்கு ஒரு நிஜமான சோசலிச தலைமையை சீர்குலைக்கும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி இட்டுநிரப்பிய பாத்திரத்தை அங்கீகரிப்பதற்கான ஒரு வழியாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக முதலாளித்துவத்தின் பேச்சாளர்களும் சித்தாந்தவாதிகளும் ஸ்ராலினிசம் சோசலிசத்துக்கு சமமானது என ஹோல் பரப்பிய பொய்யின் பாத்திரத்தை பெரிதும் மதிக்கின்றனர். அது மறுபுறத்தில் ஸ்ராலினிசத்தின் வீழ்ச்சி சோசலிசத்தின் வீழ்ச்சியை குறித்து நிற்பதாகக் காட்டும் அவர்களின் வாதத்துக்கான அடிப்படையையும் வழங்குகின்றது. இந்தக் கணிப்புக்கள் ஹோலை "அமெரிக்கன் போல்ஷிவிக்" ஆகக் காட்டி, டைம்ஸ் வரைந்த ஆசிரியத் தலையங்கத்தில் பிரதிபலித்திருந்தன.

உண்மையில் ஹோல் அவர் சாவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே போல்ஷிவிசத்துடனும் மார்க்சிசத்துடனுமான தொடர்புகளை இழந்து விட்டார். 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேம்ஸ். பீ.கனனால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை ஹோலின் பாத்திரத்தை பெரிதும் சரியாக தொகுத்துக் காட்டுகின்றது. கனன் ஸ்ராலினிசம் "ஒரு தொழிலாளர் அதிகாரத்துவம் முழு வரலாற்றிலும் பயங்கரமான பரிமாணத்துக்கு வீக்கம் கண்டுவிட்டதற்கான பிரமாண்டமான உதாரணம்" எனக் குறிப்பிட்டார். அத்தோடு "எமது காலப்பகுதியில் பெரிதும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு தோற்றப்பாடு" எனவும் பிரகடனம் செய்தார். அவர் எழுதியதாவது: "இவை எல்லாவற்றிலும் வினோதமானது என்னவெனில் பிற்போக்கினதும் புரட்சியை சிரச்சேதம் செய்பவர்களதும் பிரதிநிதிகளான இவர்கள் ஒரு உலகளாவிய ரீதியில் புரட்சியை உண்டுபண்ண இரகசியமாக சதி செய்கின்றார்கள் என்ற பரந்த அளவிலான அபிப்பிராயம் ஏற்பட்டதேயாகும்".

இதை விளக்குகையில் கனன் "பாட்டாளி வர்க்கப் புரட்சியாளன் என்பது ஒன்று ஸ்ராலினிச செயற்பாட்டாளன் என்பது வேறொன்று" எனக் கூறினார். "அவர்கள் தமது நோக்கங்களிலும் இலக்குகளிலும் வேறுபட்டவர்கள் மட்டும் அல்ல. அவர்களின் மனோபாவங்களிலும் அதை வெளியிடும் விதிமுறைகளிலும் ஆழமான வேறுபாடுகள் இருந்து கொண்டுள்ளது. புரட்சியாளன் ஒரு ஜனநாயகவாதி. இன்றுள்ள ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பை அணிதிரட்டுபவன். இந்தச் செயற்பாட்டாளன் (Functionary) வெறுமனே ஒரு அதிகாரியே. அவன் எப்போதும் எங்கும் இருந்து கொண்டுள்ள ஒரு ஆட்சிக்கு சேவகம் செய்பவன். புரட்சியாளன் வெகுஜனங்களில் நம்பிக்கை கொண்டவன். ஏனெனில் அவர்கள் தான் புரட்சியை நிர்மாணிப்பவர்கள். ஆனால் அதிகாரி அதே காரணத்துக்காக அவர்களை கண்டு அஞ்சுகிறான். அதிகாரி ஒரு பொலிஸ்காரனைப் போல் உத்தரவு கொடுக்கிறான். புரட்சியாளன் ஒரு ஆசிரியனைப் போல் விடயங்களை விளக்க முயற்சிக்கின்றான். அதிகாரி மக்களிடம் பொய் கூறுகின்றான். புரட்சியாளனோ உண்மை அவர்களை விடுதலை செய்யும் என்ற நம்பிக்கை காரணமாக அதை அவர்களுக்கு கூறுகின்றான்". ("The Revolutionist and the Bureaucrat- James P.Cannon- Militant, August 20, 1954)

கஸ் ஹோல் தனது அரசியல் வாழ்க்கையை 1917 அக்டோபர் புரட்சி இன்னமும் இளமையாக இருந்த நிலையிலேயே ஆரம்பித்தார். பல இலட்சோப லட்சம் தொழிலாளர்கள் அதனை தமது எதிர்காலத்துக்கான கலங்கரை விளக்கமாகக் கண்டனர். 70 ஆண்டுகளின் பின்னர் தமது வாழ்க்கைப் பயணம் முற்றுப் பெற்ற போது அவர் சோசலிசத்தின் நலன்களை தரங்குறைந்த அந்த சகல ஸ்ராலினிசத்தினதும் ஒரு சின்னமாக மாறினார். புதிய தொழிலாளர், இளைஞர்கள் தலைமுறையினர் அவர் அடிபணிந்து போனதும் பிரதிநிதித்துவம் செய்ததுமான அதிகாரத்துவம், "இன்றைய ஆட்சியை" நிராகரிப்பதன் மூலம் ஹோலின் வாழ்க்கையில் இருந்து படிப்பினைகளை பெற்றாக வேண்டும்.