World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா:துருக்கி

Blutige Kämpfe im Nordirak

KURDISCHE NATIONALISTEN STREITEN UM DIE GUNST ANKARAS UND WASHINGTONS

வடக்கு ஈராக்கில் இரத்தம் தோய்ந்த யுத்தம்

குர்டிஸ்தான் தேசியவாதிகள் அங்காராவுடனும், வாசிங்டனுடனுமான கூடிக்குலாவில் இளுபறிப்படுகின்றனர்.

Von Justus Leicht
11 October 2000

Use this version to print

பெரும்பான்மையான குர்திஸ் மக்கள் வாழும் பிரதேசமான வடக்கு ஈராக்கில் கடந்த இரண்டு வாரங்களாக தலபானி (Jalal Talabani) யின் (PUK) ''குர்திஸ்தானின் தேசப்பற்று யூனியனுக்கும்'', துருக்கியின் குர்திஸ்தானைச் சேர்ந்த (PKK) ''குர்திஸ்தான் தொழிலாளர் இயக்கத்துக்கும்" இடையே பலமான சண்டை நடைபெற்றது. நம்பத் தகுந்த செய்திகளிலிருந்து இதில் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னமும் தெரியவில்லையாயினும், துருக்கியின் செய்திகளின்படி இதில் இருபதுபேர் கொல்லப்பட்பதாக தெரியவருகிறது.

PUK அல்லது அதனுடன் இணைந்து வேலைசெய்யும் இயக்கங்கள் கடந்த ஒரு சில மாதங்களாக ஈராக்கின் மத்திய அரசாங்கதிற்கு எதிராக பலமானதொரு பிரச்சார யுத்தத்தை தொடுத்தனர். மேலும் PUK ஈராக்கின் தாக்குதலுக்கான தயாரிப்புகள் நடக்கலாம் என்பதற்கு எதிராக பலமுறை எச்சரிக்கை செய்துள்ளதுடன், மேலும் இது நடைபெறாமல் இருக்க அமெரிக்க இராணுவத்தின் தலையீட்டையும் கோரியிருந்தது. இது சாத்தியமானதும் கூட. இந் நடவடிக்கை அமெரிக்க - துருக்கியுடனான நல்லுறவுகளில் ஒரு விரிசலை ஏற்படுத்திவிடுமென இதுவரை வட ஈராக்கில் ஆதிக்கம்செலுத்தும் Masud Barzani யின் தலைமையிலான(KDP) ''குருடிஸ்தான் ஜனநாயக கட்சி'' அஞ்சியது. எனவே PUK க்கும் KDP இடையே இராணுவ கைகலப்புதொடரலாம் என கருதப்படுகிறது.

PKK வுக்கும் PUK க்கும் இடையேயான உறவுகள் சென்ற வருடம் வரைக்கும் நன்றாகவே இருந்தன, பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பெரிய சண்டைக்கான ஆயத்தங்கள் ஆரம்பிக்கப்பட்டன. PKK வைச் சேர்ந்த இருபது ஆதரவாளர்களை PUK சிறைப்பிடித்ததைத் தொடர்ந்து அவர்களுடைய அனைத்து நடவடிக்கைகளும் அங்கே தடை செய்யப்பட்டன, அவர்களுடைய போக்குவரத்து பாதைகள் மறிக்கப்பட்டன. மேலும் துருக்கியிடமிருந்து ஆயுதங்களை பெற்றுக்கொண்டு, துருக்கியின் உளவுப்படை (MIT) யின் அனுமதியுடன் தலைநகரான சுலைமானியாவில் அவர்களுடைய அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. செப்டம்பர் 14 ல் இராணுவக் கைகலப்பு ஆரம்பமாகியது, PUK "PKK மீண்டும் மீண்டும் தமது பிரதேசத்தினுள் தலையீடு செய்ததாக குற்றம் சாட்டி'' இத் தாக்குதலை நியாயப்படுத்தியது.

துருக்கி நாட்டு பத்திரிகை செய்திகளின் படி, இச் சண்டை நடைபெறுவதற்கு சற்று முன்னால் துருக்கியைச் சேர்ந்த இராணுவக்குழு ஒன்று PUK ன் தலைவர் தலபானியை வடக்கு ஈராக்கில் சந்தித்துள்ளதாக தெரியவருகிறது. அங்காராவிலுள்ள PUK பிரதிநிதி குருடிஸ்தான் பத்திரிகைகளின் குற்றச்சாட்டான துருக்கியின் இராணுவத்தோடு இணைந்துவேலை செய்வதை நிராகரித்த வேளையில், துருக்கி அரசாங்கம் PKK வுக்கு எதிராக வேலை செய்வதற்கு தம்மை நிர்ப்பந்தித்ததாக ஏற்றுக்கொண்டனர். மற்றும் PUK இன் முன்னணி அங்கத்தவர்கள் வடக்கு ஈராக்கில் உள் PKK வினர் ''துடைத்துக்கட்டப்படல்'' வேண்டும் என கூறினர்.

இடம்பெறும் இச் சண்டைகளுடன் இணைந்து பாரிய பிரச்சாரச் சண்டையும் இடம்பெறுகின்றது. PKK துருக்கி அரசாங்கத்தின் மீது ஊசலாட்டமான நம்பிக்கை வைத்துக்கொண்டு PUK உம் USA யும் தான் துருக்கியின் எதிரிகள் என்றது. பின்னர் PUK ன் தலைவர் தலபானி துருக்கி அரசாங்கத்துடன் இணைந்து PKK வுக்கு எதிராக போராடிக்கொண்டு தாம் துருக்கியுடனான ஒரு சமாதானத்தை தேடுவதாக இப்போது கூறிக்கொள்கிறது.

எதற்காக இந்த சண்டைகள்?

1990-1991 களில் மத்திய கிழக்கு யுத்தத்தில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் வடக்கு ஈராக்கில் வாழும் குருடிஸ்தான் மக்களை பக்தாத் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு எழுச்சியில் தூண்டிவிட்டு, பின்னர் அம் மக்களின் போராட்டம் ஒரு இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுவதை பார்த்ததுக் கொண்டிருந்தனர். இறுதியில் ஈராக்குக்கு எதிரான பொருளாதாரத் தடையை விதித்தும், வடக்கு குருடிஸ்தான் பிராந்தியத்தில் ஈராக்கின் ஆகாயப் போக்குவரத்தை நிறுத்துவதற்காக அதை ஒரு ''தடைசெய்யப்பட்ட வான்வெளிப் பிரதேசமாக'' வும் பிரகடனப்படுத்தினர்.

ஈராக்கின் மத்திய அரசாங்கம் தனது பொருளாதாரத்தடையை வடக்கிற்கு விதித்தபோது, குர்திஸ்தான் பிரதேசம் மேற்கு நாடுகளின் உதவிகளிலும், கள்ளக் கடத்தல்களிலும் முழு அளவில் தங்கியிருந்து. இப் பொருட்களின் போக்குவரத்துகள் துருக்கியினூடாகவும், துருக்கி - ஈராக்கின் எல்லைப் பிராந்தியங்களினூடாகவும் நடைபெற்றன. மேலும் இவற்றை KDP கட்டுப்படுத்தியது. இந்நடவடிக்கை அதி விரைவில் துருக்கியின் இராணுவத்திற்கும், KDP யின் போராளிகளுக்கும் இடையே மிகவும் ஒரு இறுக்கமான கூட்டுழைப்பை உருவாக்கியது. இதற்கு பதிலாக துருக்கி அதிகரித்துவரும் அரச பயங்கரவாதத்தினால் வடக்கு ஈராக்கை நோக்கித் தள்ளப்பட்ட PKK கெரில்லா போராளிகளுக்கு எதிராக போராடும்படியும் கோரிக்கை விடுத்தது.

தலபானியின் PUK தெற்கே இருக்கும் ஈரானின் எல்லைப் பிராந்தியம் வரையிலும் கட்டுப்படுத்தியதுடன் PKK வுடனும் இணைந்து வேலை செய்தது. அதே சமயம் அது அங்காராவுடனும் ஒரு ''நட்பை'' எதிர்பார்த்தது. 1990 க்கும் 1993 க்கும் இடையே தலபானி பல தடவைகள் முன்னைய துருக்கியின் பிரதமர் றூகுற் ஓசாலை (Turgut Özal) சந்தித்தார், அவர் இன்று வரைக்கும் ''குருடிஸ்தான் மக்களுக்காக மாபெரும் சாதனைகளை செய்தவர்'' என மதிப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறார்.

1993 மார்ச்சில் PKK ன் தலைவர் ஓச்சலான் (Öcalan) தலபானியுடன் இணைந்த ஒரு பத்திரிகை மாநாட்டில் துருக்கியுடனான ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை அறிவித்து சுயாதீனமான ஒரு குருடிஸ்தானை நிறுவுவதை தெளிவாக கைவிட்டார். பின்னர் ஓசால் இறந்ததையடுத்து துருக்கியில் தீவிரவாதிகளின் கையோங்கியது. அவர்கள் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை குருடிஸ்தான் மக்கள் வாழும் துருக்கியின் பிரதேசங்களில் மேற்கொண்டனர். கடந்த ஈராக்-குருடிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் மிகவும் மட்டுமட்டாக வெற்றியடைந்த KDP இன் தலைவர் பாசானியுடன் இவர்கள் இணைந்து வேலைசெய்வதை மேலும் இறுக்கமாக்கிக் கொண்டனர்.

1994 TM PUK க்கும், KDP க்கும் இடையே பலமான மோதல்கள்ஆரம்பமாகின. PUK இற்கான ஆதரவை PKK வும், ஈரானும் KDP இற்கான ஆதரவை துருக்கியும், ஈராக் அரசாங்கமும் கொடுத்திருந்தன. 1995 ல் துருக்கியும், 1996 ல் ஈராக்கும்,1997 ல் மீண்டு மொருமுறை துருக்கியின் இராணுவமும் வடக்கு ஈராக்கை முற்றுகையிட்டன. 1998 செப்டம்பரில் PUK யும் KDP யும் வாசிங்டனில் கூட்டு வேலைக்கான ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். ஆனால் அது அவர்களுடைய இடைவிடாத மற்றும் அதிகரித்து வந்த போட்டி இழுபறிகளினால் நடைமுறைப் படுத்துவதை சாத்தியமில்லாததாகியது.

1996 ல் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது, அதாவது இவ் வருடத்தில் ஐக்கிய நாடுகள்சபையின் யாப்பு சட்டத்தின் 986 ("Oil forfood") பிரகாரம் ஈராக் ஒரு வரையறைக்குட்பட்ட அளவு எண்ணையை ஏற்றுமதி செய்வதினூடு பெருமளவிலான உணவுப் பொருட்களையும், மருந்து வகைகளையும் பெற்றுக்கொள்ள வழியேற்பட்டது. இந்நிலமைகள் பாசானிக்கு இப்பிராந்தியத்தின் தலைநகரம் இர்பில் (Irbil) மிகமுக்கியமான பெரிய போக்குவரத்து மையப்பகுதியினதும், கீர்கூக்கில் (Kirkuk) இருந்து துருக்கியின் மத்திய கடல் துறைமுகமான சைகான் (Ceyhan) வரைக்கும் எண்ணைக் குழாய்கான பாதை போன்றவற்றை கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் சீக்கிரமே விளங்கிக் கொண்டார். இதற்காக துருக்கி, ஈராக் அரசாங்கங்களுடன் அவருடைய கூட்டு வேலைக்கான உறவுகளை மேலும் இறுக்கமாக்கினார்.

பாசானி முன்னர் கைப்பற்றப்பட்ட நகரங்களில் உள்ள ஈராக்கின் எதிர் கட்சியினரை சிறைப்பிடிக்கவும், அவர்களை கொலை செய்யவும் சதாம் குசைனின் பாதுகாப்பு படைகளுக்கு அனுமதியை வழங்கினார். 150 பேருக்கு மேலானோர் அங்கிருந்து சிறைப் பிடிக்கப்பட்டனர், மற்றும் ஏனைய இடங்களிலிருந்து மேலும் அதிகமானோர் பிடிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இவ்வாறு பிடிபட்டோர் PUK க்கு வேண்டியவர்களான கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும், அமெரிக்க சார்பான ஈராக்கின் தேசிய காங்கிரசை (INC) சேர்ந்தவர்களுமாவர். ஈராக்கின் தேசிய காங்கிரசிற்கு மக்கள் மத்தியில் மிகக் குறைந்த ஆதரவை பெற்றிருந்ததுடன், அனேகமாக அமெரிக்காவின் பணத்திலும் உயிர் வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய கட்டுமானங்கள் அநேகமாக ஈராக்கினால் அந்நேரத்தில் அழித்தொழிக்கப்பட்டும், பல சீ.ஜ.ஏ. உளவாளிகளும் இவ் இடங்களிலிருந்து துரத்தப்பட்டனர். அதன் பின்னர் அமெரிக்கா ஈராக்கின் மத்திய, வடக்கு பகுதிகளை ஒரு திட்டமிட்ட வகையில் குண்டுகளை போட்டு அழித்த பின்னர் குறிப்பாக வடக்கு ஈராக்கை ஒரு ''தடை செய்யப்பட்ட விமான போக்குவரத்து வலயம்'' எனப் பிரகடனப்படுத்தியது. மேலும் இப்பகுதிகளில் வடக்கு ஈராக்கைச் சேர்ந்த குருடிஸ்தான் மக்களின் வாழ்க்கை தொடர்பாக எவ்வித அக்கறையும் காட்டவில்லை.

2 வருடங்களுக்கு முன்னர் KDP க்கும், PUK க்கும் இடையேயான சண்டை முடிவுற்றதைத் தொடர்ந்து KDP யின் பகுதிகளில் சுமாரான பொருளாதார செழுமையை தோற்றுவித்தது. இதற்கு துருக்கிக்கும், ஈராக்கும் இடையே டீசல் கடத்தல் வியாபாரத்திலிருந்து பாசானி பெற்ற வருமானம் முக்கிய காரணமாகவிருந்தது. துருக்கியின் கணிப்பின்படி இதில் ஒட்டு மொத்தமாக ஒரு அரை மில்லியாடன் அமெரிக்க டாலருக்கு இக்கடத்தல் நடைபெற்றதாக தெரியவருகிறது. KDP களும் ''குருடிஸ்தானின் மாநில சுயாட்சி'' இனுடைய இந்த பொருளாதாரச் செழுமையின் அடித்தளமாக ஈராக்குக்கு எதிரான பொருளாதாரத் தடையும், மில்லியன் கணக்கான ஈராக் மக்களின் மரணமும் தொடர்புபட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடுமிடத்து PUK ஈரானுடன் செய்து கொண்ட கள்ளக் கடத்தலும், அதனால் பெறப்பட்ட வருமானமும் மிகக் குறைவானதே. அதோடு மேலும் ஐரோப்பாவில் இருந்து கிடைக்கப்பெற்ற நிதியுதவிகளில் பெரும் பகுதி KDP க்கே போய் சேர்ந்தது.

இப்பிராந்தியத்தில் அரசுகளுக்கு இடையேயான உறவுகளில்ஏற்பட்ட மாற்றமானது பாசானின் அரசியல் கையாளுமையின் மதிப்பையும் மறுபடியும் இறங்கச் செய்தது. ஈராக் தனது உறவுகளை ஏறத்தாள துருக்கியுடன் மட்டும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை, மாறாக அது தனது முன்னைய எதிரிப் போட்டியாளர்களான சிரியாவுடனும், ஏனைய அராபிய நாடான ஜோர்டானுடனும் மற்றும் மத்திய கிழக்கின் சேக் அதிபதிகள் போன்றோருடனும் மறுபடியும் அரசியல், பொருளாதார உறவுகளை வளர்த்துக் கொண்டது. 1998 செப்டம்பர் முதல் துருக்கியின் யுத்த பயமுறுத்தலுக்கு அமைய சிரியா PKK ஐ அங்கிருந்து விரட்டியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளும் வலுவடைகின்றது.

இது பாசானியின் வருமானத்தை வீழ்சியடைய செய்ததால் அவர் தலபானியுடன் இலாபத்தை பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. மேலும் அவர் அரசின் அனைத்து பிரிவுகளுக்கும், அதாவது அரசாங்கம், பாராளுமன்றம், நீதிமன்றங்கள், இராணுவம், தொலைக்காட்சி, பல்கலைக் கழகங்கள், மற்றும் பாடசாலைகள் இவற்றில் எங்கெல்லாம் தினமும் அதிகாலையில் குர்திஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் பணத்தை செலவிட்டார். சிகரெட்டுகளில் கூட குர்திஸ்தானின் தேசிய சின்னம் பதிக்கப்பட்டிருப்பதாக துருக்கிப் பத்திரிகைகள் மிகவும் கோபத்துடன் செய்திகளை வெளியிட்டன. கடந்த வருடம் முதல் பாசானியின் அரசாங்கம் வடக்கு ஈராக்கில் துருக்கி- சார்பான இயக்கங்களுடனும் ருக்மேனிய (Turkmenia) சிறுபான்மையின் போராளிகளுடனும் காரசாரமான மோதல்களில் ஈடுபட்டது.

தலபானி துருக்கியுடனான நட்புறவை வளர்க்கவும், மறுபக்கத்தில் இவ் வருடத்தின் ஆரம்பத்தில் அமெரிக்காவிற்கு எதிரான அச்சுறுத்தலை விடுத்ததுடன், ஈராக் அரசாங்கத்துடன் நல்லெண்ணத்தை உருவாக்கி அதை கட்டியமைக்கவுமாக தன்னை மீண்டும் ஒரு தயார் நிலையில் நிறுத்தினார். பெப்ரவரி மாதத்தில் அமெரிக்காவின் பிரதிநிதிகள் PUK ஐயும், KDP ஐயும் சந்தித்தனர். மார்ச்மாதத்தின் ஆரம்பத்தில் துருக்கி PUK ஐ அங்காராவிற்கு அழைத்து ஒரு வரிசைக்கிரமமான கலந்துரையாடல்களை நிகழ்த்தியதைத் தொடர்ந்து தலபானி ஈராக்குடன் வைத்துக்கொண்ட உறவைமுறித்துக் கொண்டார்.

ஏப்ரல் கடைசியில் துருக்கி மிக முக்கியமான ஈராக்கின் எல்லை வாயில்களை மூடியதினூடு டீசல் கள்ளக்கடத்தலை பெருமளவில் கட்டுப்படுத்தியது. இது தென்- கிழக்கு அனற்ரோலியாவில் உள்ள குர்திஸ்தான் நிறுவன உரிமையாளர்களுக்கும், அனைத்துக்கும் மேலாக KDP க்கும் பெரிய பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியதாக துருக்கியின் பத்திரிகைகள் தெரிவித்தன. எனவே சரியான இச் சமயத்தில் PUK துருக்கி அரசாங்கதிற்கு தான் PKK வுக்கு எதிராக போராடுவதாக வாக்குறுதி அளித்தது.

மே மாதக் கடைசியில், துருக்கியின்இராணுவம் வடக்கு ஈராக்கில் KDPயுடன் இணைந்து PKK வுக்கு எதிராக ''இவ் வருடத்தின் ஆரம்பத் தாக்குதல்'' எனும் ஒரு யுத்தத்தை தொடுக்கையில் PUK தனது இராணுவத்தை மிகவும் கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுத்தி PKK ஐ சுற்றி வழைத்து பிடிப்பதற்கான வேலையில் இறங்கியது. இதனது இவ்வாறான நடவடிக்கை, துருக்கி அரசு வடக்கு ஈராக்கில் அமைய இருக்கும் குர்திஸ்தான் அரசை எச்சரிக்கை செய்வதற்கு ஒன்றும் குறைந்தல்ல. PKK யின் தலைவர் ஓச்சலான் தனது சட்டத்தரணிகள் முலம் தெரிவித்ததாவது, ''அரசியல் போக்கும், இவ் இரு சக்திகளின் (KDP யினதும், PUK யினதும்) கையாளும் போக்குகளும் பெரிய அபாயங்களை உள்ளடக்கியுள்ளன எனவும், இவர்கள் இன்று PKK ஐ தாக்குவதற்கு விரும்புகின்றன. ஒரு நீண்டகாலப் போக்கில் இவர்கள் துருக்கிக்கு மிகப் பெரிய அபாயத்தை உருவாக்க இருக்கின்றனர். நாளை இவர்கள் துருக்கிக்கு எதிராக இணைந்து வேலைசெய்யக் கூடியவர்கள், இதையிட்டு துருக்கி மிகவும் தெளிவாக இருத்தல் வேண்டும். பின்நோக்கிச் செல்லும் குருடிஸ்தானியர்கள் மிகவும் மோசமானவர்கள்.'' (Özgür Politika 19 Mai 2000 ல் வெளிவந்ததை Kurdistan Observer எனும் பத்திரிகை குறிப்பிட்டது.)

தலபானி ஈராக் அரசாங்கத்தை கடுமையாக சாடினார். இதற்காக துருக்கியின் ஜனாதிபதி எஸ்விற் (Ecevit) தன்னை புகழ்ந்ததாகவும், அவருடைய போட்டியாளனான பாசானியை அமெரிக்கா எச்சரிக்கை செய்ததாகவும் குறிப்பிட்டார். ஜுலை மாத ஆரம்பத்தில் PUK, அமெரிக்கா தனது பேச்சுவார்த்தைகளின் பின்னர் மறுபடியும் ஒரு குர்திஸ்தான் கட்சி ஈராக்குடன் இணைந்து இயங்குவது தொடர்பாக இரு இயக்கங்களையும் எச்சரிக்கை செய்ததாக தெரிவித்தது. மாதக் கடைசியில் அங்காராவுக்கு விஜயம் செய்த தலபானி, அங்கே அவர் எஸ்விற்றை சந்திப்பார் எனவும், மேலும் இராணுவத் தலைமைகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுவார் எனவும் துருக்கியின் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன. பெயர் குறிப்பிடாத ''இராஜதந்திர வட்டாரங்களின்'' கருத்துப்படி, துருக்கி தலபானியுடன் தனது ''திருப்தியை'' தெரிவித்துக் கொண்டாலும் இவ் விடயத்தில் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். PUK யையும் மிகவும் கவனமாக அவதானிக்க வேண்டும். தலபானி மறுபடியும் KDP ஐ நோக்கி தாக்குதல் செய்ததுடன், அவர்களுடைய பிரதேசத்தில் இருந்து ஈராக் - துருக்கியின் எல்லை வாயிலான காபூர் (Habur) வரைக்கும் ஓர் பாதையை அமைக்குமாறும், மற்றும் வடக்கு ஈராக்கின் ஆட்சியிலும், செல்வாக்கிலும் சரிசமமான பங்கீட்டை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

பாசானியின் KDP தனது எண்ணைக் கடத்தலில் பெற்றுக் கொண்ட வருமானத்தை PUK உடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற அதனது இதுவரையிலான கோரிக்கையை முற்றாக நிராகரித்தது. துருக்கி தனது எல்லை வாயில்களை இன்னமும் மூடியிருக்கும் வரையிலும் KDP யானது ஈரானுடன் தனது பேரம் பேசல்களிலும், வியாபாரத்திலும் குதிக்க இடமுண்டு என துருக்கி பத்திரிகை அறிவித்தது. PKK இவ்வாறான விடயங்களுக்கான விளக்கங்களை மிகவும் அவதானமாக நிராகரித்திருப்பினும், இது அங்காராவிடமிருந்து ஒரு உடைவுக்கான சிக்கலை ஏற்படுத்திவிடுமெனவும் தெரிந்திருந்தது.

1996ல் ஈராக் அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டைப் போன்றதொரு நடவடிக்கையை KDP இற்க்கு இந்நேரத்தில் சாத்தியமற்றதாகவுள்ளது. அந் நேரத்தில் அமெரிக்கா இம்மூடு திரையின் கீழ் குண்டுகளை பொழிந்துவிட்டு பொருளாதார தடையை நீடித்து செல்வதற்காக ஒரு விளக்கத்தைக்கொடுப்பதை தவிர சதாம் குசேன்வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் வேறுஎதுவுமில்லை. அநேகமாக தலபானி ஈராக்கின் தாக்குதல் நடைபெறலாம் என்பது தொடர்பான அவரது தொடர்ச்சியான எச்சரிக்கையூடாக அமெரிக்காவின் பின் ஆதரவை பெற்றுக்கொள்ள முயல்கின்றார். துருக்கியின் எல்லை வாயிலினூடாக ஊடறுத்து செல்லும், அவருக்கு விருப்பமான அந்த இலாபம் தரும் பாதையை அடைவதென்பது பாசானிக்கு எதிரான ஒரு இராணுவ மோதலினூடுதான் சாத்தியமாக முடியும் எனும் நிலைதான் இப்போது உள்ளது. இது மேலும் அவருக்கு சாத்தியப்படுமா என்பது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.