World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா

Billionaire tycoon the likely winner in Thailand's election

கோடீஸ்வரர் தாய்லாந்து தேர்தலின் சாத்தியமான வெற்றியாளராக உள்ளார்.

By Peter Symonds
6 January 2001

Use this version to print

தாய்லாந்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் கோடீஸ்வர வியாபாரியான Thaksin Shinawatra வும் அவருடைய Thais Love Thais கட்சியும் அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், அநேகமாக கூடிய அளவு ஆசனங்களையும் பெறுவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன.

Nation பத்திரிகையும் Thammasat பல்கலைக்கழகத்தினதும் இறுதி வாக்கெடுப்பின்படி Thais love thais கட்சி, பிரதம மந்திரியான Chuan Leekpai இன் ஜனநாயகக் கட்சியின் 20,7 % இலும் பார்க்க 37.2 வீதத்தினை பெற்று முன்னனியில் உள்ளது. 500 பாராளுமன்ற ஆசனங்களில் கிட்டத்தட்ட 200 ஆசனங்களை Thaksin பெறக்கூடுமெனவும் அவரை மற்றய சிறிய கட்சிகளுடன் ஓர் கூட்டு அரசாங்கத்தை பேரம்பேசும் ஓர் முக்கிய ஸ்தானத்திற்கு கொண்டுவரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான இறுதி விடை எப்படியோ நிச்சயமில்லாதது. அதே வாக்கெடுப்பு குறிப்பிட்டதாவது, கிட்டத்தட்ட 40 வீதமான வாக்களிப்பவர்கள் Chuan உடைய அரசாங்கத்தினால் பரந்தளவு அதிருப்தியடைந்தபடியால் இன்னமும் முடிவெடுக்காமல் இருப்பதுடன் அதேவேளை மாற்றுவழியிலும் கூட நம்பிக்கையிழந்துள்ளனர்.

Thaksin பிரதம மந்திரியாக வர தகுதியுடையவரா என்பது இன்னமும் வெளிப்படையாகவில்லை. டிசம்பர் 26ந் திகதி தேசிய இலஞ்ச எதிர்ப்பு ஆனையாளர் உத்தரவிட்டதின்படி, அவர் 1997 இல் உதவி பிரதம மந்திரியாக இருந்தபோது தனது சகல சொத்துக்களை வெளிக்காட்டத் தவறியுள்ளார் எனவும் $.232 மில்லியன் டாலர்கள் பெறுமதியான சொத்துக்கள் அவருடைய வேலை செய்பவர்களின் பெயர்களில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சட்ட நீதி மன்றம் அவருடைய இருப்புகளை உறுதிப்படுத்துமாயின், அவர் 5 வருடங்களுக்கு பொது பதவிகள் எதிலும் இருக்க முடியாதபடி தடை செய்யப்படுவார்.

தேர்தலில் இருந்து விலகும்படி தொலைத்தொடர்பு சாதனங்கள் கேட்ட போதிலும் Thaksin ஆணைக்குழுவின் உத்தரவை நிராகரிப்பதுடன் கட்சி தலைவர் என்றவகையில் தான் விலகமாட்டேன் எனவும் அடுத்த பிரதம மந்திரியாக வரநோக்கம் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அவர் புதன் அன்று பத்திரிகைக்கு "என்னுடைய பார்வை மங்கலானதல்ல, நான் இப்பொழுதும் ஓர் துவக்கை வைத்திருப்பதுடன் சுடவும் முடியும். நான் சாவதற்கு முன்னர் எனது முதல் எதிரியான பஞ்சம், போதை வஸ்துகள் உட்பட லஞ்சத்தையும் கொலை செய்வேன்" என கூறினார்.

தற்பொழுதைய அரசாங்கதின் மீதான அதிருப்தியை சுரண்டுவதற்கு முயற்சிக்கும் அதேவேளை Thaksin னுடைய இந்த நாடகபாணியான கருத்துகள் அவருடைய தேர்தல் பிரச்சாரத்தின் பிரதிபலிக்கின்றது. Chuan 1996 ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார் ஆனால் 1997ம் ஆண்டு இறுதியில் Chavalit Yongchaiyudh இன் கூட்டரசாங்கம் ஆசிய நிதிநெருக்கடியை கையாண்டவிதம் தொடர்பான விமர்சனத்தால் ஏற்பட்ட உடைவிற்கு பிறகு இவர் பிரதம மந்திரியாக வந்தார். $17.2 கோடி பிணையெடுப்புக்கு பதிலாக சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) கோரப்பட்ட வெட்டுக்களை தற்போதய அரசாங்கம் மிகவும் கடமை உணர்வுடன் நடைமுறைப்படுத்தியது.

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தாய்லாந்தில் சமூக துருவப்படுத்துதல் ஆழமாகியுள்ளது. உத்தியோக பூர்வமான வறுமையின் வீதம் 11.4 இல் இருந்து 16% ற்கு கூடிய வேளை, வியாபார சாம்ராட்யத்தின் அழிவுகள் செல்வத்தை இன்னமும் குறைந்தவர்களின் கைகளில் குவியப்பண்ணி உள்ளது. தாய்லாந்தில் முன்னணி வகிக்கும் பொருளாதார நிபுணரான Ammar Siamwalla வின் பொருளாதார அபிவிருத்தி ஆராட்சி நிறுவனத்தின் கருத்தின்படி "40-50 வரையிலான பொருளாதாரத்தை கட்டுப்படுத்திய வியாபாரக் குடும்பங்களின் எண்ணிக்கை தற்பொழுது தனியே நான்கோ அல்லது ஐந்தாகவே உள்ளது".

கிராமப்புறத்தில் வசிக்கும் 60 வீதமான தாய்லாந்தினுடைய சனத்தொகைக்கு Thaksin பல தொடரான வாக்குறுதிகளை அளித்துள்ளார். கடன்பட்டுள்ள விவசாயிகளுக்கு மூன்று வருடத்திற்கு கடனை திருப்பி செலுத்தாதவாறு ஓய்வு கொடுப்பதுடன் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு லட்சம் பாத் (baht-தாய்லாந்து நாணயம்) கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். இவருடைய எதிர்ப்பாளர்கள் தாய்லாந்தின் பாரம்பரியமான வாக்குகளை பணத்திற்கும், சாப்பாட்டிற்கும், மற்றய பொருட்களுக்கும் பகிரங்கமாக வாங்கும் "பண அரசியல்" இல் ஈடுபட்டுள்ளதாக இவரை குற்றம் சாட்டியுள்ளனர். அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஆனால் இவ் வருட தொடக்கத்தில் பரிசுகள் கொடுத்தது சம்பந்தமாக கூறுகையில் அது தேர்தல் பிரச்சாரதிற்கு முந்திய காலத்தில் நடந்தது என்றார்.

தாய்லாந்து நிறுவனங்களையும் சொத்துக்களையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பதை எதிர்த்து Thais Love Thais கட்சி தேசியவாத கோரிக்கைகளை முன் வைக்கிறது. இக் கட்சி இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் Chuan அரசாங்கத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தால் அமுல் செய்யப்பட்ட திட்டங்களுக்கு பகைமையான பாரிய வியாபார தட்டுக்களின் அனுசரனையுடன் உருவாக்கப்பட்டது. பல கூட்டுத்தாபன அதிகாரிகள் Thaksin னுடைய தேர்தல் பங்கெடுப்பினை ஆமோதித்ததுடன் பாங்கொக் வங்கி தலைவர் Chatri Sophonpanich உட்பட நவம்பர் 27 ந் திகதி Thaksin ஐ சந்தித்தார்.

1998 இல் வங்குரோத்து சட்டம் அமுலிற்கு கொண்டு வரும்போது ஒரு பகுதி வியாபாரிகள் கடுமையாக எதிர்த்த இச்சட்டத்தை மீளாய்வு செய்வதாகவும், கடனில் மூழ்கிய வங்கிகளுக்கும் கம்பனிகளுக்கும் அரசாங்க பணத்தை வாரியிறைப்பதாக சத்தியம் செய்துள்ளது. தாய்லாந்து நிறுவனங்களிடம் சர்வதேச வங்கிகளும் முதலீட்டாளர்களும் இழந்த தங்களுடைய சொத்துக்களை மீளப்பெறுவதற்காக சர்வதேச நாணயநிதியம் இந்த சட்ட மாற்றத்தை வற்புறுத்தியது.

SG முதலீட்டு பாதுகாப்பு உதவித் தலைவரான Andrew Stotz கடைசியாக வெளிவந்த Far Eastern Economic Review என்ற புத்தகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் "பணத்தை வைத்திருக்கும் நபர்கள் அரசியல் ரீதியில் தொடர்புபட்டுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டதால் களைப்படைந்துள்ளனர். அவர்கள் இறுதியில் தங்களுக்கு பின்னால் நிற்ககூடிய ஓர் அரசியல் வாதியை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் ரகசியமாக தங்களுடைய கடன்களை அரசாங்கத்தின் மேல்தள்ளிவிட முனைகின்றனர்.

Thaksin நாட்டின் செல்வந்தர்களில் ஒருவரானவர். தாய்லாந்திலும் சர்வதேச ரீதியிலும் பரந்த அளவில் தொலைத் தொடர்பு சாதன இராட்சியத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரின் குறைந்த மட்ட சொத்தின் மதிப்பீடு $2 கோடி ஆகும். அவர் தனது செல்வத்தை தனியுடைமை உரிமைகளால் கிடைத்த அதிஷ்டத்தாலும் முன்னய ராணுவ ஆட்சியால் வழங்கப்பட்ட தேசிய ஒப்பத்தங்களாலும் திரட்டினார்.

தனது சொந்த கட்சியை உருவாக்க முன்னர் இவர் இளைப்பாறிய ஜெனரல் Chavalit Yongchaiyugh கீழ் உதவி பிரதம மந்திரியாக சேவையாற்றினார். இவருடைய எதிர்ப்பாளர்கள் இவர் தன்னுடைய Thais Love Thais கட்சியில் சேருவதற்கு பாராளுமற்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டுகின்றனர். இக் குற்றச் சாட்டை இவர் மறுக்கின்றார். கடந்த வருடம் Chavalit னுடைய புதிய அபிலாசைகள் கட்சியின் (New Aspiration) 46 உறுப்பினர்கள் Thaksin னுடன் சேர்ந்து கொண்டார்கள்.

பொருளாதார உறுதியின்மை

Thaksin னுடைய வாக்குறுதிகளை போட்டிபோடும் முறையில் ஒரு தொடர் கூட்டுத்தாபன வரிகளை வெட்டுவதும் வரி தள்ளுபடிகளையும் வித்தியாசமான வாக்காளர்களை பெறும் நோக்கில் Chaun முயற்சித்துள்ளார். அவர் திரும்பவும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது அரசாங்கம் பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுத்து செல்வதாக கூறியுள்ளார். "எனது கடமை பிரயோசனமற்ற வாக்குறுதிகளை செய்வதல்ல. எனது கடமை இந் நாட்டின் எதிர்காலத்தின் நலனுக்காக உண்மையை சொல்வதே'' என அண்மையில் அறிக்கை விட்டார்.

தலைநகரமான பாங்கொக்கில் ஜனநாயக கட்சிக்குரிய வாக்குகள் கூடுமென எதிர்பார்க்கப்படும் அதேவேளை நாட்டின் வடகிழக்கு கிராமிய பகுதிகளில் அநேகமாக தோல்வியடையகூடும். இந்த கட்சி ஊழல்களிலும் கூட ஈடுபட்டுள்ளது. இவ்வருட தொடக்கத்தில் லஞ்ச ஊழல் நடவடிக்கையால் குற்றம் சாட்டப்பட்ட உள்நாட்டு மந்திரியான Sanan Kachornprasart கட்டாயமாக இராஜிநாமா செய்யத்தள்ளப்பட்டார். நிதி மந்திரியான Tarrin Nimmanhaeminda பிரச்சார காலத்தில் சமூகமளிகவே இல்லை. இவர் தனது சகோதரரால் நடத்தப்படும் அரசிற்கு சொந்தமான Krung Thai வங்கியில் திருப்பி கட்டாத கடனை மூடி மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பதட்ட நிலையில் உள்ள தாய்லாந்தின் பொருளாதார நிலையின் அரசியல் உறுதியின்மையின் தாக்கம் இத்தேர்தல் மேல் எழுந்து நிற்பது கூடிய கவனத்தை ஈர்ந்துள்ளது. 1991 இல் இருத்து வளர்ச்சியின் வீதம் முன்னேற்றம் கண்ட போதிலும் பொருளாதாரம் 1.7 வீதத்தில் குறைந்துள்ளது. பல பொருளாதார வல்லுனர்கள் உயர்மட்ட திரும்பி செலுத்தாத கடனை $37 கோடி அல்லது 31 வீதமென சுட்டிக்காட்டினர். இது இப்பவும் நாட்டின் நிதி மற்றும் வங்கிப் பகுதிகளுக்கு சுமையாகவுள்ளது.

கடந்த வருடம் 40 வீதத்திற்கு மேல் பங்கு சந்தை பொறிந்து கொட்டுண்டுள்ளதுடன் அமெரிக்க டொலருக்கு எதிராக எப்பொழுதும் இல்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளது. கடைசி அறிகுறிகளின் படி பொருளாதாரம் நான்கு வீதமாக கடந்த வருடம் வீழ்ச்சியடைந்திருந்தது, இவ்வருடம் 2-3 வீதத்திற்கு மந்தமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது மற்றைய பொருளாதார பிராந்தியங்களில் வளர்ச்சி வீதம் 6-10 வீதத்திற்கிடையே இருக்கையில் மிகவும் குறைவானதாகும்.

தாய்லாந்திற்கு சர்வதேச ரீதியாக ஏற்கனவே அழுத்தத்தை கொடுக்க தொடங்கியுள்ளன. அமெரிக்க கடன் நிர்ணய ஸ்தாபனமான ஷிtணீஸீபீணீக்ஷீபீ & றிஷீஷீக்ஷீடுs கடந்த கிழமை எச்சரிக்கையில் பொருளாதார சீர் திருத்தம் துரிதப்படுத்தாவிடின் தாய்லாந்தினுடைய நாணய வீதம் கீழ் இறக்கப்படும் எனக் கூறியுள்ளது..

Australian Fiancial Review கருத்து தெரிவிக்கையில் "தாய்லாந்தினுடைய பொருளாதார சீர்திருத்தம் மிகவும் மந்தமாக இருப்பதுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் கீழே விழுந்துள்ளதுடன் குறைந்தது 6 மாதத்திற்கு முக்கிய கட்சிகள் அரசாங்கத்தை அமைக்கும் மட்டும் தொடர்ந்து பிரச்சனையாகவிருக்கும்". அந்தக் கட்டுரை Thaksin ஐ தனியாக சுட்டி காட்டியதுடன் "Thais Love Thais" னுடைய பன்றி பீப்பா (pork-Barrel) அரசியல் வெளிநாட்டு முதலீட்டாளர்களை எச்சரிக்கை அடையச்செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

Thaksin னுடைய அரசியல் திட்டங்கள் மேலான அமைதியின்மையானது முழுத் தேர்தல் பற்றியும் அவருடைய எதிர்கால அரசியல் பற்றியுமான நிச்சயமின்மையுடன் இணைந்துள்ளது. அரசியல் அமைப்பு நீதிமன்றம் அவர் சொத்தை ஒளித்துவைத்ததில் குற்றவாளியா என்ற முடிவை வெளிவிட நாட்கள் எடுக்கலாம்.

மேலும் புதிய தேர்தல் சட்ட அமைப்புகள் தாய்லாந்தினுடைய அபிவிருத்தியடைந்த "பண அரசியல்" தை சுத்தப்படுத்தும் நோக்குடன் இருப்பதால் தேர்தல் முடிவுகள் இன்னமும் தள்ளிப் போடப்படலாம். ஏதாவது ஒரு மாகாணத்தில் வேட்பாளர்கள் வாக்குகளை பணத்திற்கு வாங்கியோ அல்லது தேர்தல் சட்ட நடவடிக்கைகளை நாசப்படுத்தும் வீதத்தில் நடந்து கொண்டதாக சந்தேகித்தால் அம்மாநிலத்தில் புதிய தேர்தல் நடாத்துவதற்கு தேர்தல் ஆனையாளர்களுக்கு பரந்தளவில் சட்டவுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த வருட மந்திரிசபை தேர்தலின் பின் 35 மாகாணங்களில் திரும்பவும் புதிய வாக்கெடுப்பு நடாத்த கோரப்பட்டது. பாராளுமன்றம் கூடுவதற்கான முதல் திகதி மார்ச் மாதமாகவும் சிலவேளை முதலாவது மந்திரிசபைக் கூட்டம் ஏப்ரல் கடைசியிலும் நடக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தலினுடைய அநேகமான சாத்தியமான முடிவுகள் அரசியல், பொருளாதார உறுதியின்மையே.