World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Lessons from history: the 2000 elections and the new "irrepressible conflict"

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருக்கடியின் அரசியல் சிறப்பு முக்கியத்துவமும் வரலாற்று தாக்கங்களும்

By David North
11 December 2000

Use this version to print

இந்த விரிவுரை, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான டேவிட் நோர்த்தினால் டிசம்பர் 3ல் அவுஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் பகிரங்க கூட்டத்தில் நிகழ்த்தப்பட்டதாகும். இந்த விரிவுரை தமிழில் மூன்று பகுதிகளாக பிரசுரிக்கப்படும். முதலாம் பகுதி ஜனவரி 3ல் பிரசுரிக்கப்பட்டது. 2ம் பகுதியை கீழே காணலாம்.

பகுதி-2

வரலாற்று படிப்பினைகள்

ஒரு வழக்காறான நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும் போது இன்றைய நிலைமையுடன் ஏதேனும் ஒருமைப்பாடு கொண்டுள்ள ஒரே தேர்தல் 1876ம் ஆண்டினதேயாகும். அன்று பொதுஜன வாக்குகளின் எண்ணிக்கைக்கும் Electoral college வாக்குகளுக்கும் இடையே ஒரு பிளவு காணப்பட்டது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சமுவேல் ரில்டன் அதிகளவிலான பெரும்பான்மை வாக்குகளை பெற்றிருந்தார். அவர் உண்மையில் அதிகளவிலான மாநிலங்களையும் Electoral college வாக்குகளையும் கொண்டிருந்தார். ஆனால் ஒரு நீண்ட அரசியல் போராட்டத்தின் மூலம் குடியரசுக் கட்சியினர் தெற்கிலிருந்த பழைய அடிமைமுறைக்கு பிரமாண்டமான அரசியல் சலுகைகள் வழங்குவதற்கு கைமாறாக வெள்ளை மாளிகையை வேண்டி நின்றனர். இந்த சாதனங்கள் மூலமே மீளமைப்பு ஒரு முடிவுக்குக் கொணரப்பட்டது.

ஆனால் இன்றைய நெருக்கடியின் சிறப்பு முக்கியத்துவத்தை விளக்க இந்த ஒப்புவமை போதியது அல்ல. அமெரிக்காவில் எந்த ஒரு சிறப்பு முக்கியத்துவமான சம்பவமும் இடம்பெற்று விடவில்லை என உறுதி கூறும் லிபரல்களதும் மத்தியதர வர்க்க இடதுசாரிகளதும் வாதத்தை நான் இங்கு மீண்டும் குறிப்பிட என்னை அனுமதியுங்கள். இவை எல்லாம் முக்கியமானவை அல்ல என அவர்கள் கூறிக் கொள்கிறார்கள். ஏனெனில் அமெரிக்காவில் அடிப்படையான சமூக, பொருளாதார நெருக்கடி கிடையாது என்கின்றனர். மக்கள் கொதிப்படைந்துள்ளார்கள். அவர்கள் ஆட்சியில் ஏற சண்டையிட்டுக் கொண்டுள்ளார்கள். எல்லோரும் வெற்றியை வேண்டி நிற்கிறார்கள். ஆனால் முக்கியமானவை இவை எல்லாம் அல்ல.

அவர்கள் உலக சோலிச வலைத் தளத்துக்கு (WSWS) பதிலிறுக்க வேண்டும் எனத் தள்ளப்படின் அவர்கள் அமெரிக்காவினுள் ஒரு உள்நாட்டுப் போரை உருவாக்கக் கூடிய பாரிய அரசியல் போராட்டத்தை உண்டுபண்ணும் சமூக, பொருளாதார முரண்பாடுகள் இருந்து கொண்டுள்ளது என்ற வாதம் அர்த்தமற்றது எனத் தள்ளுபடி செய்வர் என நான் சந்தேகிக்கின்றேன். எல்லாவற்றுக்கும் மேலாக 1860பதுகளுக்கு முன்னர் அடிமைமுறைக்கும் சுதந்திர உழைப்புக்கும் இடையே கட்டுப்படுத்த முடியாத மோதல்கள் இருந்து வந்தன. அன்றைய நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது இன்று அமெரிக்காவினுள் என்ன சாத்தியமான சமூக மோதுதல்கள் இருந்து கொண்டுள்ளன என அவர்கள் வாதிக்கலாம்.

அந்தக் கேள்விக்கு ஒரு பதில் வழங்க நான் முயற்சிப்பேன். ஆனால் நான் 1850பதுகளின் அரசியல் மோதுதல்கள் இறுதியாக உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்றது எப்படி என்பதை இச்சமயத்தில் சுருக்கமாக மீளாய்வு செய்கின்றேன்.

கடந்த தசாப்த காலத்தில் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் நலன்கள் மறுமலர்ச்சி செய்யப்படாமை அக்கறைக்குரியதாகும். திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. நூல்கள் எழுதப்பட்டன. அமெரிக்கன், உலக வரலாற்றில் அபூர்வமான இந்த அத்தியாயம் பற்றிய இவற்றில் சில தலைசிறந்தன.

அமெரிக்க உள்நாட்டுப் போர் 19ம் நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இது தொழிலாளர் வர்க்கத்தின் அபிவிருத்தியில் ஆழமான தாக்கத்தை உண்டுபண்ணியது. இது மனித இனத்தின் வரலாற்றின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு மாபெரும் வீரம் செறிந்த அத்தியாயம்.

அந்தக்காலப் பகுதியை ஆய்வு செய்வதானது தென் அமெரிக்காவில் அடிமை உழைப்பை அடிப்படையாகக் கொண்டு நிலவிய விசித்திரமானதும் புராதானமானதுமான முதலாளித்துவ வடிவத்துக்கும் கூலி உழைப்பை அடிப்படையாகக் கொண்டு வட அமெரிக்க அரசுகளில் நிலவிய நவீனமயமானதும் சக்திவாய்ந்த வடிவிலானதுமான முதலாளித்துவத்துக்கும் இடையே உருவாக்கப்பட்ட உக்கிரமான மோதுதல் சமூக முரண்பாடுகளை உக்கிரமடைய செய்ததையும், இது அரசியல் அமைப்பை அடியோடு தகர்ந்துபோகச் செய்ததையும் எடுத்துக்காட்டுகின்றது.

அமெரிக்கன் குடியரசின் முதல் 70 வருடகால வரலாற்றில் இந்த இரண்டு உழைப்பு அமைப்புக்களுக்கும் -ஒன்று அடிமை மற்றயது சுதந்திரம்- இடையேயான முரண்பாடுகள், அமெரிக்க அரசுகளின் முழுஅரசியல், சமூக, பொருளாதார, சட்ட அமைப்பின் தவறான தீய போக்கின் அடியில் இருக்கின்றது. சமூக மோதுதல்களால் உருவாக்கப்பட்ட அரசியல் முரண்பாடுகளை அப்போதுள்ள அரசியலமைப்புச் சட்ட அமைப்பினுள் தீர்த்து வைக்க பல்வேறு முயற்சிகள் ஸ்தாபக தந்தையர்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆழமான சமூக முரண்பாடுகளை மனங்கொள்ளாது ஐக்கியத்தை தொடர்ந்தும் காப்பாற்ற ஒரு ஆழமான அவா இருந்து வந்தது. ஆனால் சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகள் இந்த சமூக முரண்பாடுகளாக உக்கிரம் அடையச் செய்ய தொடர்ந்து சதி செய்தன. இது வன்முறையில் ஈடுபடாமல் எந்த ஒரு அரசியல் தீர்வையும் எட்டுவதையும் சாத்தியம் இல்லாமல் செய்துவிட்டது.

உதாரணமாக அடிமை மாநிலங்களுக்கும் சுதந்திர மாநிலங்களுக்கும் இடையேயான சமபலம், 1803ம் ஆண்டின் லூசியானா (தென்மேற்கு அமெரிக்க மாநிலம்) சம்பவங்களைத் தொடர்ந்து பரந்த அளவிலான புதிய நிலங்களை சேர்த்தது. அமெரிக்காவின் ஆரம்பகாலத் தலைவர்கள் இதை 1820ம் ஆண்டின் மிசூரி சமரசத்தின் மூலம் (Missouri Compromise) தீர்க்க முயன்றனர். அது மேசன் -டிக்சன் எல்லைக் கோட்டை அடிமை மாநிலங்களையும் சுதந்திர மாநிலங்களையும் பிரிக்கும் எல்லையாக குறித்தது. இது சுமார் 30 வருடங்கள் தொடர்ந்து நீடித்தது. சிறப்பாக தெற்கினால் தூண்டப்பட்ட மெக்சிக்கன் போரின் பெறுபேறாக அமெரிக்க ஐக்கிய அரசுகளின் விரிவாக்கம் சுதந்திர மாநிலங்களுக்கும் அடிமை மாநிலங்களுக்கும் இடையேயான சமபலத்தை சீர்குலைக்க அச்சுறுத்தியது.

1846ல் டேவிட் வில்மட் என்ற பென்சில்வேனியா காங்கிரஸ் உறுப்பினர் (அமெரிக்க) காங்கிரசில் ஓர் ஷரத்தை அறிமுகம் செய்தார். அது மெக்சிக்கன் போரின் மூலம் அமெரிக்கா ஈட்டிக் கொண்ட எந்த ஒரு பிராந்தியத்தையும் அடிமைத் தொழிலுக்கு திறந்து விடக் கூடாது எனக் கோரியது. தென் மாநிலங்கள் இதை வன்மையாக எதிர்த்தன. வில்மட் ஷரத்தின் ஆதரவாளர்களில் ஒருவர் எவரும் அறியாத ஆப்பிரகாம் லிங்கன் என்ற பெயரிலான காங்கிரஸ்காரர். அவரது சுருக்கமான காங்கிரஸ் வாழ்க்கையில் அவர் இதற்கு ஆதரவாக ஐந்து வாக்குகளை வழங்கினார் என நான் நம்புகின்றேன். ஆனால் அடிமை மாநிலங்களின் மேலாதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த காங்கிரஸ் இந்த ஷரத்தை ஒரு போதும் ஏற்றது கிடையாது.

இதனால் யூனியனில் (Union) கலிபோர்ணியா ஒரு அடிமை மாநிலமாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமா அல்லது சுதந்திர மாநிலமாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமா என்பது தொடர்பாக ஒரு பெரும் போராட்டம் வெடித்தது. இறுதியாக ஒரு சமரசம் ஏற்பட்டு கலிபோர்ணியா ஒரு சுதந்திர மாநிலம் ஆகியது. எவ்வாறெனினும் அடிமைச் சொந்தக்காரர்களுடன் பெரும் அரசியல் சமரசங்கள் செய்து கொள்ளப்பட்டன. இதில் Fugitive அடிமைச் சட்டம் என்பதும் ஒன்று. அது வட அமெரிக்காவுக்கு தப்பியோடிய சகல அகதிகளும் அவர்களின் எஜமானர்களிடம் திரும்ப வேண்டும் எனக் கோரியது. வரலாற்றாசிரியரான ஜேம்ஸ் மக்பேர்ஷன், சமஷ்டி அரசின் தளபதிகள் பொஸ்டன் போன்ற நகரங்களுக்குள் சென்றதைக் கண்டதால் வடக்கில் உருவான ஆத்திரத்தை குறிப்பிட்டுள்ளார். அது ஒரு அடிமையொழிப்பு (Abolitionist) உணர்வைக் கொண்டிருந்தது. பழைய அடிமைகளை பிடித்து அவர்களை தெற்கில் உள்ள அடிமை சொந்தக்காரர்களிடம் திருப்பி அனுப்பியது.

1850பதுகளில் நிலவிய உணர்வினால் இந்த மோதுதல்கள் முழு அரசியல் அமைப்பையும் ஆட்டங்காணச் செய்தது. இருப்பினும் அடிமைத்தளையை எதிர்த்தவர்களும் தெற்கின் ஆதிக்கம் வளர்ச்சி காண்பதையும் எதிர்த்தார்கள். இது ஒரு மிகவும் பயங்கரமான காலப்பகுதியாக விளங்கியது. காங்கிரசில் ஒரு காலப்பகுதி மட்டும் இருந்த ஆப்பிரகாம் லிங்கன் முழு நேர வழக்கறிஞராக விளங்கும் பொருட்டு அரசியலில் இருந்து விலகினார். அவர் வழக்கறிஞர் தொழிலில் பெரிதும் வெற்றியீட்டியதோடு, அரசியலைவிட தனது நோக்கங்களிலும், தேவைகளிலும் வெற்றியடைந்தார்.

பின்னர் அமெரிக்க அரசியல் வாழ்க்கையை தீவிரமயமாக்கலுக்கு இட்டுச் செல்லும் ஒரு சம்பவம் இடம்பெற்றது. அது 1854ம் ஆண்டின் கன்சாஸ்- நிப்ரஸ்கா (Kansas-Nebraska) சட்டமாகும். இந்த கன்சாஸ்-நிப்ரஸ்கா சட்டம் மேசன்-டிக்சன் எல்லைக் கோட்டுக்கு வடக்கேயுள்ள புதிய பிராந்தியங்களுக்குள் அடிமைத் தொழிலை விஸ்தரிப்பதற்கான ஒரு சாத்தியத்தை திறந்துவிட்டது. இது அமெரிக்க குடியரசின் பண்பை ஆழமாக மறுசீரமைத்தது. இது ஒரு பொருளாதார நிலைப்பாட்டில் சுதந்திர உழைப்பின் நிலையை பாதிக்கச் செய்ததோடு மட்டுமல்லாது, 1776ம் ஆண்டின் புரட்சியின்போது முன்வைக்கப்பட்ட ஜனநாயக சிந்தனைகளுக்கு பங்களிப்புச் செய்த அமெரிக்காவின் நிலையையும் கேள்விக்கு உரியதாக்கியது. கன்சாஸ்-நிபரஸ்கா சட்டம், யூனியனுள் புதிதாக அனுமதிக்கப்பட்ட புதிய பிராந்தியங்களின் தன்மை குடியிருப்பாளர்களின் ஒரு பொதுஜன வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்படும் எனப் பிரகடனம் செய்தது. அதாவது கன்சாஸ் குடியேற்றக்காரர்கள் புதிய அரசியலமைப்புச் சட்டம் சுதந்திரமானதாக இருக்க வேண்டுமா அல்லது அடிமை அரசியலமைப்பாக இருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பர். அத்தோடு மாநிலங்கள் யூனியனுள் எப்படிச் சேர்த்துக் கொள்ளப்பட்டவேண்டும் என்பதையும் நிர்ணயம் செய்வர்.

பொதுஜன இறைமை கருத்துப்பாட்டின் பிதாவாக ஜனநாயகக் கட்சித் தலைவரான ஸ்ரீபன் டக்ளஸ் விளங்கினார். வடக்கின் காலநிலை, புவியியல் தன்மைக்கிடையேயும் இந்தச் சட்டத்தின் மூலம் கூட பருத்தி கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்டு, அடிமை முறையை வடக்கு நோக்கி விஸ்தரிப்பதற்கு எதுவித வாய்ப்பும் கிட்டாது என்ற வாக்குறுதியை வடக்கிற்கு மீளவும் வழங்க டக்ளஸ் முயன்றார். அத்தோடு இச்சட்டம், மேசன் -டிக்சன் எல்லைக் கோட்டுக்கும் அப்பால் அடிமைத் தொழிலை விஸ்தரிப்பதற்கான பாய்ந்து செல்லும் கதவுகளை திறந்து விட்டுள்ளதாக உணரப்பட்டது. உண்மையில் கன்சாசுக்குள் பெருக்கெடுத்த தென்மாநில அனுதாபிகளின் நடவடிக்கைகள் அடிமைத் தொழிலின் விஸ்தரிப்பையிட்டு அச்சம் கொண்டிருந்தவர்களின் கிலியை ஊர்ஜிதம் செய்யத் தொடங்கியது.

போர்டர் ரூபியன்ஸ் (Border Ruffians) என அழைக்கப்பட்ட மக்கள் மாநிலத்தில் வந்து நிறையத் தொடங்கினார்கள். அவர்கள் சுதந்திரமாக குடியேறியவர்களை தாக்கியதோடு அடிமைத் தொழிலை எதிர்த்தவர்களுக்கு எதிராக வன்முறையிலும் இறங்கினர். வடக்கிலான அரசியல் சூழ்நிலை பெருமளவில் மோசமடையத் தொடங்கியது. பாராளுமன்ற கெளரவ வடிவத்தினுள் அரசியல் கொடுக்கல்வாங்கல்களை செய்து கொள்ளக் கட்டாயப்படுத்தும் சகல முயற்சிகளும் வீழ்ச்சி காணத் தொடங்கியது. வடக்கை அதிரச் செய்யும் ஒரு சம்பவம் 1856 மேயில் இடம்பெற்றது. அன்று மதிப்புக்குரிய மரணதண்டனை ஒழிப்பு பிரச்சாரகரான செனட்சபை உறுப்பினர் செனட்டர் சார்ள்ஸ் சம்னரை ஒரு தென்மாநில காங்கிரஸ் அங்கத்தவன் ஒருவன் ஒரு மூங்கிலும் கையுமாக நெருங்கித் தாக்கியதோடு சம்னட் செனட் சபையிலேயே மரண அவஸ்தைக்கு உள்ளானார். தென்மாநிலங்கள் இந்நடவடிக்கையை பெரிதும் வரவேற்றன. இத்தாக்குதலில் ஈடுபட்ட காங்கிரஸ் சபை பிரதிநிதிக்கு தென்மாநில ஆதரவாளர்களிடமிருந்து பரிசாக மூங்கில்கள் கிடைத்தன. வட மாநிலங்கள் இதனை அடிமை மாநிலங்களின் காட்டுமிராண்டித்தனத்தின் மற்றொரு வெளிப்பாடாகக் கண்டன.

இதைத் தொடர்ந்து 1857ல் மற்றொரு சம்பவம் நடைபெற்றதோடு அது மாபெரும் தாக்கங்களை ஏற்படுத்த இருந்தது. 1820ன் மிசூரி சமரச ஷரத்தின் உள்ளடக்கம், காங்கிரஸ் அடிமைத் தொழிலை விஸ்தரிப்பதை தடுக்கும் உரிமையை கொண்டிருந்தது. 10 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றங்களில் அலைந்தத்தன் பின்னர் 1857ல் டிரெட் ஸ்கொட் என்ற அடிமையினால் அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் ஒரு சட்ட மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

டிரெட் ஸ்கொட் ஒரு அடிமையாக இருந்தவர். அவரின் எஜமானனால் வடக்குக்கு கொண்டு செல்லப்பட்டு இலிநோயிசிலும் (Illinois) விஸ்கொன்சிலும் (Wisconsin) வாழ்ந்தவர். இவை இரண்டும் சுதந்திர மாநிலங்கள். அவர் திரும்பவும் தனது எஜமானனுடன் மிசூரிக்கு பயணம் செய்தார். அது ஒரு அடிமை மாநிலமாக இருந்தது. அக்கட்டத்தில் டிரெட் ஸ்கொட் ஒரு அடிமை என்ற விதத்தில் இவ்வழக்கை தாக்கல் செய்தார். தான் ஒரு அடிமையல்லாத மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் இனியும் அடிமையாகக் கணிக்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தி இருந்தார். 1840பதுகளில் இந்த வழக்கு ஆரம்பமான போதிலும் 1857 வரை அமெரிக்க உயர் நீதிமன்றத்துக்கு வரவில்லை.

உயர் நீதிமன்றம் செய்தது, அமெரிக்க அரசியல் வாழ்க்கையில் ஒரு அடிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியதோடு உள்நாட்டுப் போரை கூடவோ அல்லது குறையவோ தவிர்க்க முடியாததாக்கியது. உயர் நீதிமன்றத்துக்கு பல மாற்று வழிகள் இருந்திருந்தன. அது டிரெட் ஒரு அடிமை; அவர் ஒரு பிரஜை அல்ல, ஆதலால் தனது எஜமானுக்கு எதிராக ஒரு சட்ட நடவடிக்கையை தாக்கல் செய்ய அருகதை கிடையாது எனக் கூறியிருக்க முடியும். உயர்நீதிமன்றம் அதைச் செய்தது. இது போதுமான அளவு கெடுதி மிக்கதாக இருந்தது. ஆனால் அத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. அது வட மாநிலத்தில் இருந்தார் என்பதற்காக அது அவரது அடிமை அந்தஸ்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடாது- ஒரு தடவை அடிமையாக இருந்தவன் எப்போதுமே ஒரு அடிமைதான் என தொடர்ந்தும் குறிப்பிட்டது.

உயர்நீதிமன்றம் அந்த அளவுடன்கூட நிறுத்திக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அது அப்படி செய்யவில்லை. இது அமெரிக்காவை புரட்சிகரமாக்கியது. ஒரு அடிமையானவன் ஒரு துண்டு சொத்து (Property) போன்றவராவார். அதனை அதன் சொந்தக்காரர் அமெரிக்காவின் எந்த ஒரு பகுதிக்கும் எடுத்துச் செல்லமுடிவதோடு அது தொடர்ந்தும் ஒரு துண்டு சொத்தாகவே இருந்துவரும் என குறிப்பிட்டது.

இதன் அர்த்தம் என்ன? திகிலூட்டும் நீதி சம்பந்தமான தாக்கங்களுக்கு அப்பால்- அடிமைகள் உண்மையில் மனிதப் பிறவிகளல்ல; ஆனால் சொத்து- உயர் நீதிமன்றம் மிசூறி சமரசங்களை செல்லுபடியற்றதாக்கியது. இது ஒர் இயங்கும் அரசியல் அமைப்பு வரையறைக்குள் விளங்கிய ஒன்றை- அடிமை முறையை விஸ்தரிப்பதை கட்டுப்படுத்தும் காங்கிரஸ் உரிமையை- தூக்கி வீசியது. இது தற்சமயம் அமெரிக்காவிலும் எங்குமே அடிமை முறையை கட்டுப்படுத்தும் அரசியலமைப்பு கட்டுப்பாடுகள் கிடையாது எனப் பிரகடனம் செய்துள்ளது. சொத்துக்கள் மீது கட்டுப்பாடுகள் நிலவ முடியாது. இந்த அடிப்படையில் உயர் நீதிமன்றம் தென் மாநிலங்களில் அடிமைத்தனத்துக்காக பெரிதும் உக்கிரமாக வக்காலத்து வாங்கும் பிற்போக்கு பகுதியினரின் அபிலாசைகளையும் நோக்கங்களையும் திருப்திப் படுத்தியுள்ளது.

இத்தீர்மானம் வடமாநிலங்களின் பொதுஜன அபிப்பிராயத்துக்கு ஒரு பேரதிர்சியைத் தந்தது. ஆப்பிரகாம் லிங்கன் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை வழக்காறன முறையில் புறக்கணித்த போது உயர் நீதிமன்றம் பல தசாப்த காலங்களுக்கு அவமானம் செய்யப்பட்டது. அடுத்து வந்த உள்நாட்டுப் போரில் இது மிக முக்கியமான உண்மையாக விளங்கியது. இது அமெரிக்கன் அரசியலில் முழுத் தோற்றத்தையும் மாற்றியமைத்தது. இச்சமயத்தில் லிங்கன் கன்சாஸ்- நெப்ரஸ்கா சட்டத்தினால் திரும்பவும் அரசியலினுள் தருவிக்கப்பட்டார். அவர் பொதுஜன இறைமை பற்றிய டக்ளசின் கோட்பாட்டின் உக்கிரமான விமர்சகராக மாறினார். லிங்கனை பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்தது போலவே கன்சாஸ்- நெப்ரஸ்காவிற்கும் டிரெட் ஸ்கொட் தீர்மானத்திற்கும் எதிரான பிரதிபலிப்பின் விளைவாக புதிய குடியரசுக் கட்சியின் ஆதரவும் வளர்ந்தது.

இந்த நிகழ்வை ஆய்வு செய்கையில் வரலாற்று இடர்ப்பாடுகள் தமக்கு எதிராக நகர்ந்து கொண்டுள்ளதை உணர்ந்து கொண்டுள்ள ஆளும் வர்க்கங்களின் தன்மையை ஒருவர் காணக்கூடியதாக உள்ளது. வட மாநிலங்களின் வளர்ச்சி காணும் கைத்தொழில், பொருளாதாரப் பலம் தென் மாநிலங்களின் நிலைப்பாட்டில் ஒரு நிஜமான பயமுறுத்தலாக நோக்கப்பட்டது. வரலாறு அடிமைச் சொந்தக்காரர்களுக்கு எதிராக நகர்ந்தபோது இதை எந்தளவுக்கு அதிகமாக அவர்கள் புரிந்து கொள்கின்றார்களோ அந்தளவுக்கு அதிகமாக அவர்கள் அடிமைமுறை இருந்துவந்த இடங்களில் அதைக் கட்டிக் காக்க மட்டுமல்லாது அடிமை முறையை ஓர் சாதகமான அற நீதிமுறையான நன்மையானதாக பிரகடனம் செய்யவும் அதனை விஸ்தரிப்பதற்கு தடையாக உள்ள சகலதையும் அகற்றவும் திடசங்கற்பம் பூண்டனர். தென் மாநிலங்களில் வளர்ச்சி கண்டு வரும் சமூக, பொருளாதார பலவீனங்களின் பேரிலான நேரடி விளைவாக அந்த ஆளும் வர்க்கத்தின் அரசியல் மூர்க்கத்தன்மை அதிகரித்துள்ளது.

டிரெட் ஸ்கொட் தீர்ப்பின் பின்னர் மற்றொரு மாபெரும் சம்பவம் இடம்பெற்றது. லிகொம்ப்டன் அரசியலமைப்பு மீதான கருத்து வேறுபாடு தலைதூக்கியது. இது கன்சாசில் சிறுபான்மையினராக விளங்கும் அடிமை குடியேற்றக்காரர்களை பிரதிநிதித்துவம் செய்யாத பகுதியினரால் வரையப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டமாகும். ஒரு தரப்புக்குச் சாதகமான தேர்தல் வட்டாரப் பிரிமுறை லீகொம்டன் அரசியலமைப்பு என அழைக்கப்பட்டது. இது ஒரு அடிமை அரசியலமைப்பு முறையாக விளங்கியதோடு கன்சாஸ் மக்கள் மீது இதைத் திணிக்கவும் முயன்றது. இது சம்பந்தமாக ஒரு கசப்பான கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஏனெனில் இதை எழுதியதன் பின்னர் அவர்கள் லீகொம்ப்டன் அரசியலமைப்பு சட்டத்தை கன்சாஸின் பெரும்பான்மை வாக்குகள் மூலம் ஒரு போதும் நடைமுறைப்படுத்த முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தனர். ஆதலால் அவர்கள் கன்சாஸ் மக்களால் இது திருத்தி அமைக்கப்படுவதற்காக திருப்பி அனுப்பப்படுவதை தடை செய்யும் ஒரு வழியை கண்டுபிடிக்க சதி செய்தனர்.

இதைத் தொடர்ந்து ஒரு பிரமாண்டமான போராட்டம் வெடித்தது. கன்சாஸ் மக்கள் இந்த அரசியலமைப்புச் சட்டம் மீது வாக்களிக்கும் உரிமையை கொண்டிருந்தனர். அவர்கள் வாக்குகள் மூலம் இதைத் தோற்கடிக்க முடியும். கன்சாஸின் சுதந்திர குடியேற்றவாசிகளின் தலையில் பலவந்தமாக கட்டியடிக்கும் வழியை கண்டுபிடிக்கும் பொருட்டு பல்வேறு சூழ்ச்சிகளும் தந்திரங்களும் கையாளப்பட்டன. நிலைமையை மேலும் மோசமாக்கும் விதத்தில் ஒரு ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியான புச்சானன் இந்தப் பிற்போக்கு முயற்சிகளுக்கு தனது அரசியல் ஆதரவை வழங்கினார். பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாகவே இந்த லீகொம்ப்டன் அரசியலமைப்புச் சட்டம் இறுதியில் தோல்வி கண்டது. பல வருடங்களின் பின்னர் கன்சாஸ் ஒரு சுதந்திர மாநிலமாக யூனியனுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.

இச்சகல சம்பவங்களும் வடக்குக்கும் தெற்குக்கும் இடையேயான வேறுபாடுகளை சமாதான வழியில் தீர்த்துக் கொள்வதற்கான எந்த ஒரு அரசியலமைப்புச் சட்டத் திட்டமும் இருக்கவில்லை என்பதை அதிகரித்த அளவில் தெளிவுபடுத்தின. 1860ம் ஆண்டளவில் தென் மாநிலங்கள் அடிமை முறை மீதான எந்த ஒரு கட்டுப்பாடுகளையும் தெற்கு ஏற்றுக் கொள்ளமாட்டாது என்பது வட மாநிலங்களுக்கு பெரிதும் தெளிவாகியது. இது காங்கிரசையும் நீதித் துறையையும் கட்டுப்படுத்தியதோடு, ஜனாதிபதி பதவி பறி போவதையும் ஏற்றுக் கொள்ள மாட்டாது.

1860 தேர்தல் முற்றிலும் துருவப்படுத்தப்பட்ட அமெரிக்க அரசுகளை வெளிப்படுத்தியது. குடியரசுக் கட்சி வேட்பாளரான லிங்கனுக்கு 10 தென் மாநிலங்களில் இருந்து ஒரு வாக்குத் தன்னும் கிடைக்கவில்லை. அவரின் வெற்றி சுதந்திர மாநிலங்களின் அமோக ஆதரவிலேயே தங்கி இருந்தது. 1860 நவம்பரில் அவர் தெரிவு செய்யப்பட்டமை உடனடியாக ஒரு பிரிவினைப் பிரகடனத்தின் மூலம் பதிலிறுக்கப்பட்டது. முதலில் தென் கரோலினாவினதும் (South Carolina) பின்னர் ஏனைய சகல தென்மாநிலங்களாலும் இப்பிரகடனம் வெளியிடப்பட்டது. லிங்கன் பதவியை பொறுப்பேற்ற சமயம் தென் மாநிலங்களில் பலவும் ஏற்கனவே கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தன. 1861 அளவில் ஜேம்ஸ் மக்பேர்சனின் வார்த்தைகளில் சொல்வதானால 1860 தேர்தலில் வாக்களித்ததும் அமெரிக்கர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தார்கள். இருந்து கொண்டிருந்த அரசியலமைப்பு வடிவத்தினுள் தீர்த்து வைக்க முடியாது போனது, போர்க் களத்தில் தீர்த்து வைக்கப்பட்டது. 600000 உயிர்களைப் பலிகொடுத்து அடிமை முறை ஒழித்துக் கட்டப்பட்டதோடு, அமெரிக்கா முதலாளித்துவ ஜனநாயத்தின் அடிப்படையில் மீள நிர்மாணிக்கப்பட்டது. அடிமை முறை ஒழிக்கப்பட்டு, முழுச் சனத்தொகைக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.

2000ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய அரசுகள்

அமெரிக்க உள்நாட்டு யுத்தத்துக்கு முன்னைய நெருக்கடிக்கும் இன்றுள்ள நெருக்கடிக்கும் இடையே ஒரு ஒருமைப்பாட்டைக் காண முடியுமா? உள்நாட்டு யுத்தத்துக்கு இட்டுச் சென்ற "நசுக்கிவிட முடியாத மோதுதல்" களுக்கு அடிப்படையாக விளங்கிய சமூக முரண்பாடுகளுடன் ஒப்பிடக் கூடிய ஏதும் இன்று இருக்கின்றதா?

உறுதியானது என்னவெனில், அத்தகைய ஒரு சமூகமுரண்பாடு இருந்து வருவது தேடிக் கண்டுபிடிக்கப்படாமைக்கு மார்க்சிஸ்டுகள் என தம்மைக் கூறிக் கொள்பவர்களினது உட்பட அரசியல் சிந்தனை மட்டத்தில் இருக்கும் அசாதாரணமான வீழ்ச்சி இதற்கு சாட்சிபகர்கின்றது. ஆனால் அமெரிக்கா இன்று முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் சமூக ரீதியில் பெரிதும் துருவப்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை. சமூகப் போராட்டம் அரசியல் ரீதியில் தெளிவாக வெளிப்படுத்தப்படாது போயுள்ளமை வர்க்கப் போராட்டம் நடைபெறவில்லை என்று அர்த்தப்படாது. மார்க்ஸ் இதனை "வர்க்கப் போராட்டம் இப்போது ஆரம்பமாகியுள்ளது, இப்போது மூடிமறைக்கப்பட்டது" எனக் குறிப்பிடுகின்றார். இது அமெரிக்காவில் மூடி மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மேல்மட்டத்தின் கீழ் தீவிரம் கண்டுள்ளது.

உண்மையில் அமெரிக்காவில் இருந்து கொண்டுள்ள பாரதூரமான சமூக அசமத்துவ நிலைமையினுள் அரசியல் ரீதியில் நனவான வர்க்கப் போராட்டம் இல்லாமை எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாள வர்க்கம் மோசமான சமூக அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ளதற்கு சாட்சி பகர்கின்றது. அமெரிக்க கம்பனித் துறையின் சகல பிரமாண்டமான வளங்களும், வெகுஜனங்களை அரசியல், சித்தாந்த ரீதியில் முட்டாள்களாக்க திருப்பப் பட்டுள்ளன. தற்சமயம் வாக்குரிமை மீது இடம்பெறும் தாக்குதல் தொழிலாளர் வர்க்கம் அரசியல் வாழ்க்கையில் சுயாதீனமான முறையில் எந்த ஒரு பங்கும் வகிப்பதினின்றும் அதனை முறைமுறையாகத் தள்ளி வைக்கும் போக்கினது தவிர்க்க முடியாத அரசியல் வெளிப்பாடு மட்டுமேயாகும்.

உயர் நீதிமன்றத்தில் நேற்று இடம் பெற்ற கலந்துரையாடலின் கையெழுத்துப் பிரதியை ஆய்வு செய்வது முக்கியம். குறிப்பாக கடைகெட்டவரும் காடைத்தனமான பேர்வழியுமான அன்டனின் ஸ்காலியாவின் நிலைப்பாட்டை ஆய்வு செய்ய வேண்டும். அவர் ஒரு குண்டர் கோஷ்டி வழக்கறிஞரின் நேர்மையுடன் வாதிடுகின்றார். கோரின் வழக்கறிஞரான லோரன்ஸ் ட்ரைப்பை விசாரணை செய்கையில் ஸ்காலியா புளோரிடா உயர் நீதிமன்றத்தை நிராகரிப்பதை நியாயப்படுத்தும் சிடுமூஞ்சித்தனமான வாதங்களை முன்வைக்கின்கிறார்.

சில வாதங்கள் சிக்கலானவை. ஆனால் நான் அங்கு தலையெடுத்த விடயங்களை விளக்க முயற்சிக்கின்றேன். ஸ்காலியாவின் சிந்தனை முறையை பற்றி ஒரு கருத்தை வழங்க என்னை அனுமதியுங்கள். இது பிரதம நீதியரசர் வில்லியம் ரெக்குள்குவிஸ்டானும் இணை நீதியரசர் கிளரன்ஸ் தோமசினாலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதாவது 9 நீதியரசர்களில் மூன்று நீதியரசர்கள்.

அந்த விடயம் இதுதான்: புளோரிடா உயர் நீதிமன்றம் மாநிலத்தின் செயலாளரின் நடவடிக்கையை நிராகரிக்கும் உரிமையைக் கொண்டுள்ளதா? குடியரசுக் கட்சிக்காரர்கள் காலக்கெடுவை மீற முடியாது என வாதிக்கிறார்கள். அதாவது, புளோரிடா உயர் நீதிமன்றம் இந்த விதிகளை மாற்றிவைக்க உரிமை கிடையாது என்கிறார்கள். புளோரிடா உயர் நிதிமன்றத்தின் வாதம் என்னவெனில் வாக்குரிமை ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை. அதை காலக்கெடு விதிப்பது போன்ற நிர்வாக பிரத்தியேகங்களுக்கு கீழ்ப்படுத்தி விட முடியாது.

ஸ்காலியா கீழ்வரும் வாதத்தை முன்வைத்தார். அவர் கூறியதாவது: புளோரிடாவில் சம்பந்தப்பட்ட விவகாரம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தெரிவு செய்வதாகும். அதாவது வாக்காளர்கள் தேர்தல் கல்லூரி (Electoral Collage) விதிமுறைகளுக்கு இணங்க ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பர்.

உங்களில் பலர் இந்த தேர்தல் கல்லூரி பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இதனை விளக்க இடமளியுங்கள். அமெரிக்கர்கள் அமெரிக்க அரசுகளின் ஜனாதிபதிக்கு நேரடியாக வாக்களிப்பது இல்லை. ஜனாதிபதி தேர்தல் உண்மையில் 51 உள்ளூர் தேர்தல்களின் -50 மாநிலத் தேர்தல்களும் கொலம்பியா மாவட்டத்தில் ஒரு தேர்தலும்- கூட்டு மொத்தமாகும் இந்த ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும்பான்மையைப் பெறும் வேட்பாளர் அந்த மாநிலத்தின் தேர்தல் கல்லூரி வாக்குகளை பெறுகின்றார். அத்தோடு இந்த Electoral Votes கண்டிப்பாக, சனத்தொகையை அடிப்படையாகக் கொள்ளாவிடிலும் வீதாசாரமானது. பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்களைக் காட்டிலும் அதிக தேர்தல் கல்லூரி வாக்குகளை கொண்டுள்ளன. சிறிய மாநிலங்கள் முறைகேடான விதத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன. ஏனெனில் அவை தமது இரண்டு அமெரிக்க செனட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தன்பாட்டில் ஒரு தேர்தல் கல்லூரி வாக்கை பெறுகின்றார்கள். வியோமிங்கில் 250,000 வாக்காளர்கள் ஒரு தேர்தல் கல்லூரி வாக்கை பெரும்போது நியூயோக்கில் 500,000 வாக்காளர்களுக்கு ஒரு தேர்தல் கல்லூரி வாக்கு கிடைக்கிறது.

இந்த தேர்தல் கல்லூரி வாக்கு பாகுபாடு நின்று பிடிப்பது ஏன்? இது அமெரிக்க ஐக்கிய அரசுகளை ஒன்றாகக் கொணரும் பொருட்டு அமைப்பு முறையில் செய்யப்பட்ட சமஷ்டி ஒருங்கின் ஒரு பாகமாகும். சிறிய அரசுகளின் குரல்கள் செவிமடுக்கப்படும் என்பதை உத்தரவாதம் செய்யும் பொருட்டு இது செய்யப்பட்டது. ஜனாதிபதி தெரிவில் ஒரு சில தனித்தன்மையான குரலை மாநிலங்களுக்கு தேர்தல் கல்லூரி உத்தரவாதம் செய்கின்றது. இது சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு முக்கியமான பாகமாக சமஷ்டி அரசாங்கத்துக்கும் மாநிலங்களுக்கும் இடையேயான ஒரு சிக்கலான அதிகாரப் பகிர்வாக விளங்கியது.

இந்த தேர்தல் கல்லூரியின் பின்னால் மற்றொரு வாதமும் இருக்கின்றது. அது அந்தளவுக்கு மகத்தானது அல்ல. இதனது ஸ்தாபக பிதாக்கள் மக்கள் பிழையான விதத்தில் வாக்களிப்பதற்கான சாத்தியம் இருந்து கொண்டுள்ளதைக் கண்டனர். ஆளும் பிரமுகர்களின் அங்கீகாரத்துக்கு உள்ளாகாத வேட்பாளர்களை அவர்கள் தெரிவு செய்யலாம் என எண்ணினர். இந்த அரசியலமைப்புச் சட்டத்தை வரையும் போது ஒரு நீரோட்டம் இருந்து கொண்டிருந்தது. அது ஆழமான ஜனநாயக எதிர்ப்பைக் கொண்டிருந்தது. அத்தோடு சமுதாயத்தில் உள்ள பெரிதும் வசதி வாய்ப்புகள் நிறைந்த தட்டினரின் பிரதிநிதிகளது நோக்கினைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. இந்த தேர்தல் கல்லூரியானது மக்கள் தவறான வழியில் வாக்களிப்பதை ஆளுமை செய்யும், இறுதியாக பாதுகாத்துக் கொள்ளும் சாதனமாக விளங்கியது.

உண்மையில் அது ஒரு போதுமே இடம்பெறவில்லை. தேர்தல் கல்லூரி ஒரு புதுமையான அராஜகமானதாகத் தொடர்ந்து நிலைத்து வந்தது. இது ஒரு போதுமே சவால் செய்யப்பட்டது கிடையாது. ஏனெனில் மாநிலத் தேர்தலில் வெற்றி கண்ட வேட்பாளர், தனது வேட்பாளர் பட்டியலை தேர்தல் கல்லூரிக்கு அனுப்பும் உரிமையைக் கொண்டிருந்தார்.

நான் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட விடயத்துக்கு திரும்ப எனக்கு இடமளியுங்கள். ஸ்காலியா ஒரு ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தப்பட்ட விடயம் வாக்காளரை தெரிவு செய்வது என்ற பகிடியுடன் தொடங்குகின்றார். அடுத்து அவர் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் வாக்குரிமை கிடையாது எனக் கூறுகின்றார். அவர்கள் மாநில சட்டசபையினால் தெரிவு செய்யப்படுகின்றனர். ஆதலால் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புபட்ட விடயங்கள் எதுவும் மக்களுடன் சம்பந்தப்பட்டது அல்ல. ஆதலால் உயர் நீதிமன்றம் சட்ட சபையினால் இயற்றப்பட்ட ஒரு சட்டப் புத்தகத்தை நிராகரிக்கும் உரிமைப் பிரகடனத்தை உதவிக்கு அழைத்துக் கொண்டு ஆரம்பிப்பது முற்றிலும் பொருத்தமற்றது. இறுதி ஆய்வில் ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்வதில் வாக்குரிமைக்கு உரிமை கிடையாது என அவர் வாதிட்டார்.

இது ஏன் டிரெட் ஸ்கொட்டின் ஆவியைத் தட்டி எழுப்புகின்றது. 1857ஐ போன்று ஸ்காலியா அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் மிகவும் பிற்போக்கான பகுதியை நியாயப்படுத்துவதற்கு புளோரிடா உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான புஷ்சின் மேன்முறையீட்டினால் வழங்கப்பட்ட வாய்ப்பைச் சுருட்டிக் கொள்கின்றார். டிரெட் ஸ்கொட் வழக்கில் உயர் நீதிமன்ற நீதியரசர் றொஜர் டானி அடிமை முறையை அமெரிக்க பூராவும் சட்டபூர்வமானதாக்குவதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொண்டது போல் ஸ்காலியா இந்த வழக்கினை மிகவும் அடிப்படையான ஜனநாயக உரிமையான வாக்குரிமைக்கு எதிரான ஒரு தலையடியை தொடுப்பதற்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். அவர் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஒரு ஜனநாயக விரோதமான அர்த்தத்தை அறிமுகம் செய்யவும் சட்டரீதியாக்கவும் பார்க்கிறார்.

நிச்சயமாக மக்கள் ஜனாதிபதிக்கு நேரடியாக வாக்களிப்பது இல்லை. ஆனால் தேர்தல் கல்லூரி தொடர்ந்து நீடித்து வந்தது. ஏனெனில் அதன் பேராளர்களின் (Delegates) சேர்க்கையானது மாநிலங்களிலுள்ள மக்களின் வாக்குகளுடன் தொடர்புபட்டுள்ளது. தேர்தல் கல்லூரி மக்களின் நம்பிக்கையை தலைகீழாக்குவதாக அதன் நடவடிக்கைகள் அமைந்திருப்பின் அமெரிக்க அரசியல் அமைப்பின் ஒரு வினோதமான அராஜகவாதமாக அது நின்று பிடித்திருக்காது.

இது வெறும் ஊக்கத்துக்கு உரிய ஒரு விடயம் அல்ல. அரசியல் ஆத்திரமூட்டல் பேர்வழியாக மாறியுள்ள ஸ்காலியா, உண்மையில் புளோரிடா வாக்குகளின் பெறுபேறுகளை கணக்கெடுக்காது புஷ் ஆதரவாளர்களை தெரிவு செய்யும்படி புளோரிடா சட்டசபையை தூண்டுகின்றார். அதே சமயம் அவர் அமெரிக்கன் ஜனநாயகத்தின் அல்லது ஜனநாயக எதிர்ப்பின் அதிகார வர்க்கத் தட்டினரின் கருத்துப்பாட்டின் அதிகாரத் தன்மையை விபரிக்கின்றார். அது அமெரிக்க ஆளும் வர்க்கப் பிரமுகர்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதையே கொண்டுள்ளது.

இந்த அசாதாரணமான அபிவிருத்திகள் எதைக் குறிக்கின்றது? என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும். ஸ்காலியா சும்மா கோட்பாடுகளை நெய்து கொண்டுள்ளாரா? அல்லது அமெரிக்காவின் அரசியல் வாழ்க்கையில் இப்போது வெளிப்பாடாகியுள்ள முரண்பாடுகளுக்கு ஒரு சமூக அடிப்படை உள்ளதா?

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க நான் உ.சோ.வ.த. கடைசிச் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட எமது கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருந்து ஒரு பந்தியை இங்கு மேற்கோளாகக் காட்ட விரும்புகின்றேன்.

"அமெரிக்க சமுதாயத்தின் உச்சியில் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் செல்வத்திலும் வருமானத்திலும் செல்வந்தரான சொத்துடமை வர்க்கம் இருக்கின்றது. அமெரிக்கன் குடும்பத்தில் ஒரு சதவீதமான பணக்காரர் செல்வத்தில் 10 ட்ரில்லியன் டாலர்களை- மொத்த தேசிய செல்வத்தில் 40 சதவீதத்தை திரட்டிக் கொண்டுள்ளனர். இந்தக் கோடீஸ்வரர்களின் தேறிய கூட்டுப் பெறுமானம் சனத்தொகையில் 95 சதவீதத்தினரான மக்களின் மொத்த செல்வத்தைக் காட்டிலும் பெரிதாகும்.

"1970 பதுகளின் நடுப்பகுதியில் இருந்து உயர்மட்ட 1 சதவீதத்தினர் தேசிய செல்வத்திலான தமது பங்கை இரட்டித்துக் கொண்டுள்ளனர். 20 சதவீதத்தில் இருந்து 38.9 வீதமாக உயர்ந்துள்ளது. இது அமெரிக்க பங்குமுதல் சந்தை வீழ்ச்சி கண்டு மாபெரும் பொருளாதார மந்தம் ஏற்பட்ட 1929ம் ஆண்டின் பின்னரான அதி உயர்ந்த புள்ளியாகும். மற்றுமோர் ஆய்வின்படி குடியிருப்பாளர்களில் 1 சதவீதத்தினரான செல்வந்தர்கள் அனைத்து பிரமாண்டமான பங்குமுதல் சந்தையின் பங்குகளையும் அனைத்து நிதி கடன் பத்திரங்களில் மூன்றில் இரண்டு பங்கையும் சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர்.

"வருமான அசமத்துவம் சொத்துடமை அசமத்துவம் போல் கடுமையானதாகும். 1999ல் சனத்தொகையில் ஒரு சதவீதத்தினரான செல்வந்தர்கள் வரி செலுத்திய பின்னர் அடிமட்டத்தில் இருந்த 38 சதவீதத்தினர் பெற்ற வருமானத்தைப் பெற்றனர். அதாவது பெரும் வருமானம் கொண்ட 2.7 மில்லியன் அமெரிக்கர்கள் குறைந்த வருமானம் பெற்ற 100 மில்லியன் அமெரிக்கர்களை விட பெருமளவான வருமானம் பெற்றனர். வரிவிதிப்பின் பின்னரான உயர் மட்ட ஒரு சத வீதத்தினரின் சராசரி வருடாந்த வருமானம் 1977ம் ஆண்டில் இருந்து 370 சத வீதத்தினால் -234,700- 868,000 டாலர்கள்- அதிகரித்தது.

"1983-1995 வரையிலான காலப்பகுதி பூராவும் இந்த இரண்டு பிரமுகர்கள் தட்டினரும்- பணக்காரர், உயர் பணக்காரர்- சனத்தொகையின் உயர் மட்ட 5 சதவீதத்தினராக உள்ளனர். நிதி சார்ந்த தேறிய பெறுமானத்தில் அதிகரிப்புக் கொண்ட ஒரே குடும்பம் இதுவே. இந்தப் புள்ளிவிபரத்தை மீண்டும் வலியுறுத்துவது முக்கியம்: நேரடியாக 15 வருட காலமாக - றீகன், புஷ், கிளின்டன் என்ற சகல ஜனாதிபதிகளின் காலப்பகுதியில் "சந்தைகளின் மாயாஜாலங்கள்" அமெரிக்க சனத்தொகையில் 95 சத வீதத்தினருக்கு தேறிய நஷ்டத்தைக் கொணர்ந்து. இதேவேளை உச்சத்தில் இருந்த 5 சத வீதத்தினர் மட்டுமே இலாபம் ஈட்டினர்.

"1990கள் பூராவும் ஆளும் வர்க்கத்தினை உழைக்காத வருமானத்துக்கான பைத்தியம் பிடித்துக் கொண்டு இருந்தது. இது தன்னை இலாலாப திரட்சியின் மீதான எந்த ஒரு பிடியில் இருந்தும் விடுவித்துக் கொண்டதாக உணர்ந்தது. தனிப்பட்ட செல்வத்துக்கான அப்பட்டமான முயற்சியானது முன்னைய எந்த ஒரு "தங்க முலாம் சகாப்தத்தையும்" தாண்டிச் செல்கின்றது. கிளின்டன்- கோர் நிர்வாகத்தின் போது CEO (உயர்மட்ட அதிகாரிகள்) வினரின் நஷ்டஈடு 535 சதவீதம் அதிகரித்தது. ஒரு கம்பனி தலைவர் ஒரு சாதாரண தொழிலாளியின் வருமானத்தைக் காட்டிலும் 475 மடங்கு அதிகமாக வருமானம் உழைக்கின்றார். ஒரு தொழிலாளியின் குறைந்த பட்ச சம்பளத்தைக் காட்டிலும் 728 மடங்குகள் வருமானம் பெறுகின்றார். 1990களில் சம்பளங்கள் CEO கள் அனுபவித்த சம்பளங்கள் போனசுகள், பங்குமுதல்கள் போன்று அதிகரித்து இருக்குமேயானால் சராசரித் தொழிலாளியின் உழைப்பு ஆண்டொன்றுக்கு 114,000 டாலர்களாக விளங்கியிருக்கும். ஒரு மணித்தியாலத்துக்கு குறைந்த பட்ச சம்பளம் 24 டாலர்களாக விளங்கியிருக்கும்.

இது சமூக சமத்துவமின்மையைக் காட்டும் ஒரு அதிர்ச்சி தரும் சித்திரமாகும். இத்தகைய ஒரு அசாதாரணமான சமூக துருவப்படுத்தல்களின் மட்டங்களுக்கு மத்தியில் ஜனநாயக வடிவங்கள் கட்டிக்காக்கப்படும் என நம்புவதானது வரலாற்றின் சகல படிப்பினைகளையும் அடியோடு புறக்கணிப்பதாக முடியும். அரசியல் வடிவங்களுக்கும் சமுதாயத்தின் வர்க்க அமைப்புக்கும் இடையேயான உறவு ஒரு சிக்கல் நிறைந்த இயக்கவியல் பண்பு கொண்டதாகும். ஆனால் நீண்டகாலப் போக்கில் இந்த சமூக அசமத்துவத்தினால் உருவாக்கப்பட்ட சமூக பதட்டங்களை பாரம்பரியமான ஜனநாயக வடிவங்களுள் உள்ளடக்கி வைக்கமுடியாத ஒரு நிலை வருகின்றது. அமெரிக்க சமுதாயம் அந்த நிலையை அடைந்துவிட்டது.

தொடரும்...