World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

A lesson from history on the US election crisis
Hayes-Tilden dispute of 1876 foreshadowed eruption of class conflict

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருக்கடி: ஒரு வரலாற்று படிப்பினை

1876ம் ஆண்டின் ஹேயிஸ்- ரில்டன் தகராறு வர்க்க மோதுதலின் வெடிப்பினை முன்கூட்டிக் கூறிவைத்தது

By Shannon Jones
21 December 2000

Use this version to print

அமெரிக்காவில் 124 வருடங்களுக்கு முன்னர் ஆழமான சமூகத் துருவப்படுத்தல் நிலைமைகளின் கீழ் மற்றொரு சர்ச்சைக்கிடமான ஜனாதிபதி தேர்தல் நடந்தது. 1876ம் ஆண்டின் குடியரசுக் கட்சியின் ருத்தர்போட் பீ ஹேயிசுக்கும் ஜனநாயகக் கட்சியின் சாமுவேல் ரில்டனுக்கும் இடையேயான ஜனாதிபதித் தேர்தல் வளர்ச்சி கண்டு வந்த சமூகப் பதட்டத்தின் எதிரில் ஆளும் வர்க்கத்தினுள் வலதுசாரி அரசியல் மறு அணிதிரள்வினை உண்டுபண்ணியது.

2000 ஆண்டின் தேர்தலுக்கும் 1876ம் ஆண்டின் தேர்தலுக்கும் இடையே ஒருமைப்பாடுகள் இருந்து கொண்டுள்ள அதே வேளையில் பல முக்கிய முரண்பாடுகளும் இருக்கவே செய்கின்றன. இவ்விரண்டு விடயத்திலும் உக்கிரமான கட்சிச் சார்பு அமெரிக்க -முதலாளித்துவ சமுதாயத்தின் ஆழமான குரோதத்தையும் பிரதிபலித்தது. ஜனநாயகக் கட்சிக்காரர்களும் குடியரசுக் கட்சிக்காரர்களும் வாக்குச் சீட்டு மோசடி பயமுறுத்தல்கள், மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். எவ்வாறெனினும் 1876ம் ஆண்டில் இவ்விரு கட்சிகளதும் தீர்க்கமான குழுக்கள் அரசியல் கரத்தையை குழப்பியடிப்பதை எதிர்த்தனர். இறுதியில் ஆளும் பிரமுகர்கள் செய்து கொண்ட சமரசம், ஒரு நீண்டகால அரசியல் ஸ்திரப்பாட்டுக்கான அத்திவாரத்தை இட்டது.

சமீப வாரங்களாக பெரும் வர்த்தகப் பத்திரிகைகளில் இந்த சர்ச்சைக்கிடமான 1876ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கும் 2000ம் ஆண்டின் தேர்தலுக்கும் இடையேயான ஒருமைப்பாடுகளை குறிப்பிட்டு பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. எவ்வாறெனினும் இவை முன்வைத்துள்ள முடிவுகள் அமைதியும் சுவை கெட்டதாயும் உள்ளன. இவை இரண்டையும் நிஜமாக ஒப்பிட முடியாது எனவும் கூறிக்கொண்டன. காரணம்? 1870 பதுகளைப் போலன்றி இன்றைய செழிப்பும் திருப்தியானதுமான அமெரிக்காவில் சமூகக் குரோதங்களே கிடையாது என்றன.

அத்தகைய ஒரு வாதம் ஒரு காத்திரமான ஆய்வாக விளங்க முடியாது. கடந்த 10 ஆண்டுகள் முன்னொரு போதும் இல்லாத அளவிலான வளர்ச்சியை செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே ஆதாளபாதாளத்தில் கண்டு கொண்டுள்ளது. நிறைவேற்று அதிகாரிகளின் நஷ்டஈடுகள் பெருகிக் கொண்டு போகையில் உண்மைக் கூலி (Real Wages) தேங்கிக் கிடக்கிறது. இலட்சோப இலட்சம் தொழிலாளர்களுக்கு தொழில் பாதுகாப்பு இல்லை. சிறைச்சாலைகள் சிறுபான்மை தொழிலாளர்களாலும் வெளிநாட்டவர்களாலும் ஏழைகளாலும் நிரம்பி வழிகின்றன.

1876-77 தேர்தல் நெருக்கடிக்கு இட்டுச் சென்றது என்ன? அந்த மோதுதலின் பெறுபேறுகள் அமெரிக்காவின் 2000ம் ஆண்டின் சமூக உறவுகள் பற்றி எமக்குக் கூறுவது என்ன?

1876ம் ஆண்டுத் தேர்தல் ஒரு கணிசமானளவு பரிணாமங்கள் அமெரிக்காவில் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலைமையின் மத்தியில் இடம் பெற்றது. 1861-65 சிவில் யுத்தம் வடக்கில் வெற்றி கண்டதைத் தொடர்ந்து அமெரிக்கா முன்னொரு போதும் இல்லாத அளவிலான பொருளாதார வளர்ச்சி கண்டது. வடக்கின் முதலாளி வர்க்கம் அரச இயந்திரத்தின் மீது தனது பிடியை பயன்படுத்துவதன் மூலம் கைத்தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்க்ைகளை எடுத்தது. புகையிரதப் பாதைகளையும் மற்றும் உள்நாட்டு அபிவிருத்திகளையும் ஏற்படுத்தும் மானியங்களை வழங்கியது. பாதுகாப்பு சுங்க வரிகளை ஏற்படுத்தியது. ஒரு தேசிய வங்கி முறையை ஸ்தாபிதம் செய்தது.

முன்னைய தெற்கின் அடிமைச் சொந்தக்காரர்கள் மீது கண்ட வெற்றியை ஸ்தாபிதம் செய்ய வடக்கு 13ம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை செய்து கொண்டது. அடிமை முறையை ஒழித்தது. 14ம் 15ம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் கறுப்பு இனத்தவர்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் உத்தரவாதம் செய்தன. குடியரசுக் கட்சிக்காரர்கள் மறுசீரமைப்பு அரசாங்கங்களை தெற்கில் அமைப்பதில் மேலாதிக்கம் கொண்டிருந்தனர். அரசாங்கப் பாடசாலைகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள் போன்ற அடிப்படைச் சீர்திருத்தங்களை ஏற்படுத்தினர். பெண்கள் சொத்துடமைக்கான உரிமையை வெற்றி கண்டனர். விவாகரத்துச் சட்டங்கள் தாராண்மை கொண்டவையாக்கப்பட்டன.

தெற்கில் பழைய அடிமைச் சொந்தக்கார வர்க்கம் சீர்திருத்தங்களை எதிர்த்தது. மீண்டும் தனது அரசியல் ஸ்திரப்பாட்டை ஊர்ஜிதம் செய்ய முயன்றது. ஜனநாயகக் கட்சியினுள் அணிதிரண்ட பழைய அடிமைச் சொந்தக்காரர்கள் ஒன்றன் பின் ஒன்றாக தென்மாநிலங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றினர். தென்மாநிலங்களில் பெருமளவில் வன்முறைகள் வெடித்தன. தென்மாநில பிரமுகர்களின் பயங்கரவாதக் கன்னையான கூ குளுக்ஸ் கிளான்(Ku Klux Klan) இதன் முன்னணியில் நின்றது.

நாட்கள் செல்லச் செல்ல தனது பொருளாதார நலன்களை ஸ்திரப்படுத்திக் கொண்ட வடக்கின் முதலாளி வர்க்கம் தெற்கில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதில் அக்கறை காட்டுவது குறைந்து போயிற்று. புதிதாக விடுதலை செய்யப்பட்ட அடிமைகளின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதையிட்டும் அக்கறை காட்டவில்லை. பழைய கூட்டு மாநிலங்களில் மூன்று குடியரசுக் கட்சி அரசாங்கங்களே -புளோரிடா, தென் கரோலினா, லூசியானா- இருந்தன.

தேசிய குடியரசுக் கட்சிக்கான ஆதரவு தொடர்ந்து வந்த பொருளாதார மந்தத்தினாலும் அதிகாரிகளின் ஊழல்களாலும் பெரிதும் பாதிக்கப்பட்டது. வேலையின்மை மில்லியன் கணக்கில் அதிகரித்தது. 1875ல் பென்சில்வேனியாவின் ஆந்திராகிட்டி நிலக்கரி சுரங்கங்களில் உக்கிரமான வேலைநிறுத்தங்கள் வெடித்தன. மசாசூசெட்டின் போல்றிவரில் ஆடையுற்பத்தி தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.

1876ம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கு குடியரசுக் கட்சி வேட்பாளராக ஒகியோ ஆளுனரான றுத்தர் போட் பீ.ஹெயிஸ் (Rutherford B. Hayes) நியமனம் செய்யப்பட்டார். பதவியில் இருந்து வெளியேறும் உலிசெஸ் எஸ். கிறாண்டின் நிர்வாகத்தின் ஊழல்களின் தாக்கங்களில் இருந்து தப்பித்துக் கொண்டதே இவரது முக்கிய தகுதியாக விளங்கியது. ஹெயில் ஒரு பொருளாதார பழமைவாதியாகப் பேர் போனவர். தெற்கை புனர்நிர்மாணம் செய்யும் சிவில் யுத்தத்துக்கு முன்னைய குடியரசுக் கட்சியின் தீவிரவாத, சமூக சமத்துவ நோக்கங்களின் பேரில் ஆதரவைப் பெற்றவர்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளரான நியூயோக் ஆளுனர் சாமுவேல் ரில்டன் ஊழல் ஒழிப்பு பிரச்சாரத்தின் அடிப்படையில் போட்டியிட்டார். தென்மாநிலங்களில் அவர் "வெள்ளையர் மேலாதிக்கத்துக்கும்" "உள்நாட்டு ஆட்சிக்கும்" ஆதரவு வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.

போட்டி பெரிதும் நெருக்கமானதாக இருந்தது. கறுப்பு இனத்தவர்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் பொருட்டு ஜனநாயகக் கடசிக்காரர்கள் தெற்கு பூராவும் பயமுறுத்தல்களில் ஈடுபட்டனர். தென் கரோலினாவில் குடியரசுக் கட்சிக்காரர்கள் இந்நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் பெருமளவு வாக்குகளைப் பெற்றார்கள். ஆனால் பல கவுண்டிகளில் ஒரு பிரமாண்டமானதும் சந்தேகத்துக்கு இடமானதுமான வாக்குகள் ரில்டனை மாநிலம் தளுவிய விதத்தில் முன்னணியில் நிற்கச் செய்தது.

தேர்தல் நாளன்று இரவு ரில்டன் வெற்றி அடைவார் போல் தோன்றியது. அவர் தெற்கில் முழுமையாக வெற்றி பெற்றதோடு வடக்கில் நியூயோக், நியூஜேர்சி, கொனக்டிகட், இந்தியான உட்பட்ட பெரும் வட மானிலங்களையும் வெற்றி பெற்றார். ரில்டன், ஹெயிசை விட இரண்டேகால் இலட்சம் பெரும்பான்மை வாக்குகளால் முன்னணியில் நின்றார். நியூயோர்க்கில் குடியரசுக் கட்சியின் தேசியத் தலைவர் தனது அலுவலகத்தை மூடிவிட்டு வீடு சென்றார். ரில்டன் தெரிவு செய்யப்பட்டார் என்ற நம்பிக்கையிலேயே அப்படிச் செய்தார். காலை தினசரி பத்திரிகைகள் தலைமை அலுவலகத்தில் இருந்த யாரோ கடும் போட்டி நிலவிய தென் கரோலினா, புளோரிடா, லூசியானா மாநிலங்களில் ஹெயிஸ் இன்னமும் தேர்தல் கல்லூரிகளில் (Electoral college) வெற்றி பெறுவார் என்பதை கவனித்தனர். அந்த மாநிலங்களில் குடியரசுக் கட்சி தலைவர்களுக்கு "அவற்றை" ஹெயிசினதாக கொள்ளும்படி தந்திகள் அடிக்கப்பட்டன.

குடியரசுக் கட்சிக்காரர்களின் நம்பிக்கை, சர்ச்சைக்குரிய மாநிலங்களின் "பிரச்சார" சபைகளில் தமது பிடியிலேயே தங்கியிருந்தது. இந்தச் சபைகள் குடியரசுக் கட்சி வெற்றியீட்டும் வகையில் ரில்டனின் பெரும் வாக்குகளை செல்லுபடியற்றதாக்கும் என ஹெயிசின் சக்திகள் நம்பின. ஜனநாயகக் கட்சிக்காரர்கள் சர்ச்சைக்குரிய மாநிலங்களின் தலைநகர்களுக்கு செல்வாக்கு நிரம்பிய அங்கத்தவர்களை அனுப்பிவைத்தனர். இதே சமயம் ஜனநாயகக் கட்சி தலைமை ஹெயிஸ் வெற்றி பெற்ற ஒரேகன் மாநிலத்தை சேர்ந்த பிரதிநிதியின் நற்சாட்சி பத்திரங்களை சவால் செய்தனர். குடியரசுக் கட்சிப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டவர் ஒரு அமெரிக்க தபாலதிபர். இதன் மூலம் அவர் ஒரு சமஷ்டி அரசில் பதவி வகிப்பவர். இதனால் தொழில்நுட்ப ரீதியில் செல்லுபடியற்றவர். ஒரேகன் மாநிலத்தின் ஜனநாயகக் கட்சி ஆளுனர் தனக்குப் பதிலாக ரில்டனின் பிரதிநிதியை நியமனம் செய்தார். சர்ச்சைக்குரிய மாநிலங்களில் ஜனநாயகக் கட்சிக்காரர்களின் இந்தச் சூழ்ச்சியின் மூலம் தோல்வி கண்டதாக ரில்டனின் சக்திகள் தேர்தல் கல்லூரியில் ஒரு பெரும்பான்மை வாக்கை பெறலாம் என நம்பினர். போட்டியிட்ட சகல மாநிலங்களிலும் போட்டி பிரதிநிதிகளின் பட்டியல்கள் அத்தாட்சிப்படுத்தப்பட்டன. குறித்த தினத்தில் இவர்கள் ஒவ்வொருவரும் மாநிலத் தலைநகர்களில் கூடி ஜனாதிபதிக்கு தமது வாக்குகளை அளித்தனர்.

தேர்தல் முடிவுகள் ஒரு அரசியலமைப்புச் சட்ட நெருக்கடிக்கான பதட்ட நிலைமையை உருவாக்கியது. இந்த நிலைமையை கையாள்வது எப்படி என்பது சம்பந்தமாக முன் அனுபவம் இருக்கவில்லை. ஜனநாயகக் கட்சிக்கார்கள் தாம் பெரும்பான்மையைக் கொண்டிருந்த பிரதிநிதிகள் சபை மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும் என வாதித்தனர். குடியரசுக் கட்சிக்காரர்கள் அவர்கள் மேலாதிக்கம் பெற்றிருந்த செனட் சபை எந்த தேர்தல் வாக்குகளை கணக்கிட வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய வேண்டும் என வாதித்தனர். உள்நாட்டு யுத்தம் ஏற்படுவது சம்பந்தமான பேச்சு ஏற்பட்டதோடு காங்கிரசின் (Congress) அங்கத்தவர்கள் தம்மை ஆயுதபாணிகளாக்கிக் கொண்டனர்.

காங்கிரசின் அங்கத்தவரான ஜேம்ஸ்.ஏ.கார்பீல்ட் நிலைமையை மதிப்பீடு செய்து குடியரசுக் கட்சிக்காரர்கள் எதைச் செய்ய வேண்டும் என்பதை சிபார்சு செய்தார். அவர் ஜனநாயகக் கட்சியில் உள்ள அதிருப்திகண்ட தென்மாநிலக் காரர்களுடன் ஒரு இணக்கத்துக்கு வரும்படி ஹெயிசை வேண்டினார். "இந்நாட்டின் ஜனநாயகக் கட்சியின் வர்த்தகர்கள் ரில்டனைக் காட்டிலும் சமாதானத்துக்கு பெரிதும் ஆர்வம் காட்டுகின்றார்கள். காங்கிரசில் உள்ள முன்னணி தென்மாநில ஜனநாயகக் கட்சிக்காரர்கள் -சிறப்பாக பழைய 'விக்ஸ்' கட்சிக்காரர்கள் (Whigs- இங்கிலாந்தின் பழைய அரசியல் கட்சி) தாம் யுத்தத்தை போதுமான மட்டும் கண்டுவிட்டதாயும் தமது வடமாநில சகாக்களை பின்பற்றி நடக்க அக்கறைகாட்டவில்லை எனவும் கூறினர். பெனிஹில் கூறுவது போல் அவர்கள் சமாதானத்தில் உற்சாகமூட்டுகிறார்கள் யுத்தத்தில் காணக்கிடைக்காதவர்கள்." (Reunion and Reaction -C.vann woodward)

மாதக் கணக்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஹெலிசினதும் தென்மாநில காங்கிரஸ் காரர்களின் தூதுவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை ஏற்பட்டது. ஹெயிசின் ஜனாதிபதி பதவி பெரிதும் சுவையானதாக விளங்கும் பொருட்டு குடியரசுக் கட்சிக்காரர்கள் தென்மாநிலக் காரர்களுக்கு ஒரு தொகை சலுகைகளை வழங்கத் தயாராக இருந்தார்கள். இதற்கிடையே காங்கிரஸ் ஜாக்கிரதையான முறையில் தேர்தல் நெருக்கடியை தீர்ப்பதை இலக்காகக் கொண்ட ஒரு இருதரப்பு உடன்படிக்கையை ஒரு போலியான பக்க சார்பற்றதும் ஜனநாயக அடிப்படையானதுமான முறையில் தயார் செய்தது. சர்ச்சைக்குரிய தேர்தல் வாக்குகளைப் பற்றி தீர்மானிக்கும் 15 சந்தர்ப்பங்கள் கொண்ட ஒரு ஆணைக் குழுவினை இது நிறுவியது. இந்த கமிட்டி ஏழு ஜனநாயக கட்சிக்காரர்களையும் ஏழு குடியரசுக் கட்சிக்கார்களையும் ஒரு சுயேட்சையையும் உள்ளடக்கிக் கொள்ள இருந்தது. இறுதி நிமிடத்தில் சுயேட்சை வேட்பாளரான உயர்நீதிமன்ற நீதியரசர் டேவிட் டேவிஸ் ஆணைக்குழுவில் இருந்து இராஜினாமாச் செய்தார். இலியோனிஸ் சட்டசபை செனட் சபைக்கு அவர் எதிர்பாராத விதமாக தெரிவு செய்யப்பட்டதே காரணம். இவரது இடத்தை ஒரு குடியரசுக் கட்சிக்காரரான நீதியரசரான ஜோசப் பிரட்லி நிரப்பினார்.

இந்த ஆணைக்குழுவில் ஒரு குடியரசுக் கட்சி பெரும்பான்மை இருந்து வந்த நிலையிலும் சில ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இன்னமும் ஒரு வெற்றியை எதிர்பார்த்து வந்தனர். ஹெயிஸ் வெற்றி பெறுவதற்கு சர்ச்சைக்கு இடமான சகல தேர்தல் வாக்குகளையும் வெற்றிபெற வேண்டி இருந்ததே காரணம். எவ்வாறெனினும் ஒவ்வொரு தருணத்திலும் ஆணைக்குழு ஹெயிஸ் தெரிவு செய்யப்படுவதை அங்கீகரிக்கும் விதத்தில் கட்சி சார்பான முறையில் 8-7 என வாக்களித்தது. இந்த ஆணைக்குழுவின் அப்பட்டமான பக்கச்சார்பு காங்கிரசில் இருந்த வடமாநில ஜனநாயகக் கட்சிக்கார்கள் வாக்குக் கணக்கெடுப்பு பூர்த்தி செய்யப்பட்டு ஹெயிஸ் ஜனாதிபதியாகப் பதவியில் அமர்த்தப்படுவதை தடுக்க காலங்கடத்தும் விதத்தில் தென்மாநிலக் காரர்களை தம்பக்கம் இழுக்க உதவியது. பதவி ஏற்கும் திகதி நெருங்கிவந்ததும் (1877 மார்ச் 04) பதட்டம் மேலும் உக்கிரம் கண்டது. சம்பவங்கள் வேண்டி நிற்பின் வாஷிங்டனில் மார்சல் (Martial Law) சட்டத்தை பிரகடனம் செய்யப்ப போவதாக ஜனாதிபதி கிறான்ட் அறிவித்தார்.

இக்கட்டத்தில் ஹெயிசின் ஆட்களுக்கும் தென்மாநில ஜனநாயக கட்சிக்காரர்களுக்கும் இடையே ஒரு இரகசிய உடன்படிக்கையை செய்து கொள்வதற்கான பேச்சுக்கள் சூடுபிடித்தன. குடியரசுக் கட்சிக்காரர்கள் மறுசீரமைப்பைச் சுருட்டிக் கொள்ளவும் ஹெயிசை ஆட்சியில் அமர்த்த வழங்கும் ஆதரவுக்கு கைமாறாக முன்னைய அடிமைச் சொந்தக்காரர்கள் தென் மாநிலங்களில் மனம்போன போக்கில் செயற்பட இடமளிக்கப்படுவார்கள் என வாக்குறுதி வழங்கப்பட்டது. சிறப்பாக குடியரசுக் கட்சிக்காரர்கள் லூசியானா, தென் கரோலினா மாநிலங்களில் ஆளுனர் பதவிகளை ஜனநாயாக கட்சிக் காரர்களுக்கு கையளிக்கத் தயாராக இருந்தனர். இவர்கள் தமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை தேர்தல் மோசடிகள் தடுத்துவிட்டதாக கூறிவந்தனர். அத்தோடு குடியரசுக் கட்சிக்காரர்கள் டெக்ஸ்சாஸ், பசுபிக் புகையிரதப் பாதைகளுக்கு சமஷ்டி நிதியுதவி வழங்குவது பற்றியும் அமைச்சரவைக்கு சில ஜனநாயக கட்சிக்கார்களை நியமனம் செய்வது பற்றியும் கலந்துரையாடினர்.

தென்மாநில குடியரசுக் கட்சிக்காரர்களின் விசுவாசத்தை மீண்டும் உத்தரவாதம் செய்யும் பொருட்டு ஜனாதிபதி கிரான்ட், பெப்பிரவரி 26ம் திகதி ஒரு அறிக்கையை பிரகடனம் செய்தார். "ஒரு மாநில அரசாங்கத்தை ஆட்சியில் நிலைநிறுத்த சமஷ்டி படைகளை பயன்படுத்துவதை தெளிவாக எதிர்க்கும்" பொதுஜன அபிப்பிராயத்துக்கு அமைய லூசியான ஆளுனர் பதவிக்கான தேர்தல் இடம்பெறும் எனத் தெரிவித்தது. அங்கு ஹெயிசின் பிரதிநிதிகளும் தென் மாநில முன்னணி ஜனநாயக் கட்சிக் காரர்களும் சமரசத்துக்கான இறுதி விபரங்களை தயார் செய்தனர்.

ஒரு சில நாட்களின் பின்னர் காலங்கடத்தும் போக்குகள் பிசுபிசுத்துப் போய் தேர்தல் வாக்குச் சீட்டு கணக்கீடு பூர்த்தியாகும் கட்டத்தை நோக்கிச் சென்றது. ஹெயிஸ் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதோடு நெருக்கடியும் முற்றுப் பெற்றது.

ஹெயிஸ் ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு மாத காலங்களுள் தென் கரோலினாவிலும் லூசியானாவிலும் இருந்த சமஷ்டி படைகளை படை முகாம்களுக்கு திரும்ப உத்தரவு பிறப்பித்ததோடு ஜனநாயக கட்சி நிர்வாகமும் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. முன்னர் ஒரு ஜனநாயக கட்சி நிர்வாகம் புளோரிடாவில் அதிகாரத்தை கைப்பற்றியது. தென் மாநிலத்தின் முன்னைய அடிமைகள் அவர்களின் பழைய அடிமைச் சொந்தக்காரர்களின் கருணையில் விடப்பட்டனர்.

ஒரு வரலாற்றாசிரியர் எழுதுவது போல்: "நியூயோர்க் ஹொரால்ட் சுட்டிக்காட்டியது போல் ஹெயிசின் நடவடிக்கைகள் தெற்கில் அவரது முன்னோடிகளின் காலகட்டத்தில் அல்லது தெற்கில் வேறெங்கும் காங்கிரசினால் செய்யப்பட்டதையே இரு மாநிலங்களும் ஊர்ஜிதம் செய்தன. உண்மையில் புனர்நிர்மாணம் கைவிடப்பட்டதற்கு காரணம் 1876-77 நெருக்கடியே. இதன் விளைவாக குடியரசுக் கட்சிக்காரர்கள் கறுப்பு இனத்தவர்களின் உரிமைகளின் பேரில் தலையிட விரும்பியதை போன்று ரில்டனால் முழு தென் மாநிலங்களதும் ஆதரவை திரட்டி கொள்ள நெருங்கத் தன்னும் முடிந்திராது. இருந்தாலும் படை "வாபஸ்" தேசிய கொள்கையில் ஒரு பெரும் திருப்பு முனையாக விளங்கியது. 'நீக்ரோக்கள்' பிரகடனம் செய்த நேரம் 'தேசிய அரசியல் அரங்கில் இருந்து மறைந்து போகும். மேலும் தேசம் ஒரு நேசம் என்ற முறையில் அவருடன் மேலும் எதுவும் செய்வதற்கு இல்லை." (A Short History of Reconstruction 1863-77, Eric Forner, Horperr Row -1990)

1877ம் ஆண்டின் கோடைக் காலத்தில் ஒரு பிரமாண்டமான புகையிரதப் பாதை வேலைநிறுத்தம் வெடித்தது. அதுவரை அமெரிக்காவில் இடம்பெற்ற பெரிதும் வன்முறையான வர்க்க மோதுதல்களின் வெடிப்பாக இது விளங்கியது. இந்த பொது வேலைநிறுத்தம் சிக்காகோவையும் சென்ட் லூசியசையும் ஸ்தம்பிதம் அடையச் செய்தது. இராணுவத்தினால் 20 வேலைநிறுத்தக் காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை எதிர்த்து விட்ஸ்பேர்க்கில் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் புகையிரதக் குதங்களுக்கு தீவைத்ததோடு 100 இரயில் எஞ்சின்களையும் அடித்து நொருக்கினர். வேலைநிறுத்தம் செய்துவந்த தொழிலாளர்களை நசுக்கித் தள்ளும் பொருட்டு ஹெயிஸ் முன்னர் தென்மாநிலங்களில் கறுப்பு இனத்தவர்களின் உரிமைகளை நிலைநாட்டக் கையாண்ட அதே சமஷ்டி படைகளை வடக்கின் கைத்தொழில் மையங்களில் இறக்கினார்.

சார்ள்ஸ்டன் (Charleston) என்ற தென்கரோலினா பத்திரிகை பின்வருமாறு கூறி வைத்தது: "தெற்கு பிரச்சினை சாகடிக்கப்பட்டு விட்டது." புகையிரத வேலைநிறுத்தம் "உழைப்பு, மூலதனம், தொழில், கூலி பிரச்சினைகளை" அரசியலில் முன்னணிக்கு தள்ளிவிட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தம் நசுக்கப்பட்டமை 1877ம் ஆண்டின் சமரசம் எனப்பட்டதன் உள்ளடக்கத்தை புட்டுக் காட்டியது. "வடக்கு, தெற்கு ஆளும் பிரமுகர்களின் இணக்கப்பாடு ஒரு சக்திவாய்ந்த புதிய ஆபத்துக்கு -தொழிலாளர் வர்க்கத்தை எதிர்கொண்டுள்ளது. 1876-77 சம்பவங்கள் அமெரிக்க முதலாளித்துவத்தின் அரசியல் பிரதிநிதிகள் ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகிக்க கூடிய காலப்பகுதியை ஒரு திட்டவட்டமான முடிவுக்கு கொணர்ந்துள்ளது. அந்தத் திகதியில் இருந்து வடக்கு கைத்தொழில் தலைநகரில் முக்கிய அரசியல் கட்சியான குடியரசுக் கட்சி வேகமாக வலதுசாரி திசையில் பயணம் செய்ததோடு தனது சமத்துவ நடிப்புக்களையும் கைவிட்டதோடு சமுதாயத்தின் செல்வந்த தட்டினரின் பிரதிநிதியாக வெளிவெளியாக தொழிற்படவும் தொடங்கியது.

1860ஐ போல் 1876ம் ஆண்டின் நெருக்கடி ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்கும் ஆயுத மோதுதல்களுக்கும் இட்டுச் செல்லவில்லை. ஏனெனில் சாராம்சத்தில் இது இணக்கம் காணமுடியாத பொருளாதார நலன்களுக்கு இடையேயான ஒரு மோதுதலை கொண்டிருக்கவில்லை. வரலாற்றாசிரியர் சீ.வான். வூட்வாட் விளக்கியது போல் 1877ம் ஆண்டின் சமரசம் தென்மாநில பிரமுகர்களுக்கு "புதிய பொருளதார அமைப்பின் ஆசீர்வாதங்களில் ஒரு பங்கை வழங்க" வாக்குறுதியளித்தது. இதற்குப் பதிலாக தென்மாநில ஆதிக்கம் மிக்க பிராந்தியத்தின் ஒரு செயற்கை கோளாகியது. பழமைவாத இரட்சகர்கள் (Conservative Redeemers) பிடியைக் கொண்டிருக்கும் வரை அவர்கள் புதிய பொருளாதாரத்தின் உள்வாரி எதிரிகளோடு- தொழிற்கட்சிக்காரர்கள், மேற்கத்தைய விவசாய புரட்சியாளர்கள், சீர்திருத்தக்காரர்கள்- தெற்கின் எந்த ஒரு போக்கும் இணைவதற்கு முட்டுக்கட்டையாக விளங்கினார்கள். இரட்சகர் ஆட்சியின் கீழ் தென்மாநிலம் புதிய அமைப்பு முறைக்கு ஒரு அச்சுறுத்தலாக அல்லது ஒரு கொத்தளம் ஆகியது". (Reunion & Reaction -பக்கம் 267 ) 2000ம் ஆண்டின் தேர்தல் நெருக்கடி எந்த முரண்பட்ட நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்தன? நீண்டகால ஓட்டத்தில் இந்தச் சக்திகளை இணக்கத்துக்கு கொணர முடியுமா? ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையேயான மோதுதல் ஆளும் வர்க்கத்தினுள்ளேயான ஒரு பிணக்காகும். அடியிலே பெரிதும் உக்கிரமான சமூக குரோதங்கள் வளர்ச்சி கண்டுள்ளன. முதலில் அரசியல் குற்றச்சாட்டிலும் (Impeachment) இப்போது புளோரிடா வாக்குகளை களவாடுவதிலும் இம் மோதுதல்கள் அசாதாரணமாக உக்கிரம் கண்டுள்ளன.

இவை எல்லாம் இன்றைய அபிவிருத்திகள் ஒரு நீண்டதும் உக்கிரமானதுமான வர்க்கப் போராட்டத்தின் காலப்பகுதியை ஆரம்பித்து வைப்பதைக் காட்டிக்கொண்டுள்ளது. இன்றைய நெருக்கடியின் அடியில் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான முன்னொரு போதும் இல்லாத அளவிலான துருவப்படுத்தல் விளங்குகின்றது. இச்சமுதாயத்தில் செல்வந்தர்களான தட்டினர் முன்னொருபோதும் இல்லாத அளவிலான செல்வத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளபோது அடிமட்டத்தில் உள்ள 45 சதவீதத்தினரின் வாழ்க்கைத் தரங்கள் தேக்கம் கண்டுள்ளது. அல்லது வீழ்ச்சி கண்டு செல்கின்றது. இன்று எழுப்பப்படும் கேள்வி இதுதான்: தொழிலாளர் வர்க்கம் மீண்டும் பெரும் வர்த்தக நிறுவனங்களின் ஆளும் கும்பலின் எதேச்சையான சப்பாத்துக் காலடிகளுக்குள் தள்ளப்படுமா அல்லது தொழிலாளர் வர்க்கம் சமுதாயத்தை ஒரு ஜனநாயக, சோசலிச அடிப்படையில் மறுசீரமைக்கும் அரசியல் தலைமையை ஏற்குமா?