World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

லிமீssஷீஸீs யீக்ஷீஷீனீ லீவீstஷீக்ஷீஹ்: tலீமீ 2000 மீறீமீநீtவீஷீஸீs ணீஸீபீ tலீமீ ஸீமீஷ் "வீக்ஷீக்ஷீமீஜீக்ஷீமீssவீதீறீமீ நீஷீஸீயீறீவீநீt"ஹீuமீstவீஷீஸீs ணீஸீபீ பீவீsநீussவீஷீஸீ

வரலாற்றிலிருந்து படிப்பினைகள்: 2000 தேர்தல்களும் புதிய "கட்டுப்படுத்த முடியாத முரண்பாடுகளும்" -கேள்விகளும் கலந்துரையாடல்களும்

By David North
13 December 2000

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய செயலாளரும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர்குழுத் தலைவருமான டேவிட் நோர்த் உரைக்குப்பின் நடந்த கலந்துரையாடல் பகுதியை நாம் இங்கு வெளியிடுகின்றோம். "வரலாற்றிலிருந்து படிப்பினைகள்: 2000 தேர்தல்களும் புதிய கட்டுப் படுத்த முடியாத முரண்பாடுகளும்" என்று தலைப்பிடப்பட்ட இச்சொற்பொழிவு, டிசம்பர்3 சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் பக்கம் ஏற்கனவே டேவிட் நோர்த்தின் உரையை வெளியிட்டது.

கேள்வி: ஜனாதிபதி தேர்த்தெடுக்கப்படாதநிலையில் முந்தைய ஜனாதிபதி அதிகாரத்தில் நீடிக்கும் நிலை முன்னர் இருந்திருக்கிறதா? கிளிண்டன் ஜனாதிபதியாக இருக்கலாமா?

டேவிட் நோர்த்: இல்லை கிளிண்டன் அலுவலகத்தில் நீடிக்க முடியாது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஒரு விதி முறை உள்ளது. அது எந்தத் தனி நபரும் இரண்டு முறைக்குமேல் ஜனாதிபதியாகப் பணியாற்றுவதைத் தடுக்கிறது. இரண்டு முறைக்குமேல் பதவியில் இருந்த ஜனாதிபதி உண்டு. அவர்தான் பிராங்களின் ரூஸ்வெல்ட். அவர் 4 முறை தேர்ந்தெடுக்கப் பட்டார். இதனை இருமுறை என மட்டுப்படுத்தச் செய்ய வழிவகைசெய்யும் இணைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆகையால் தற்போதைய நெருக்கடியை அந்த வழியில் தீர்க்க முடியாது.

கேள்வி: ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முறையில் சட்ட அதிகாரத்துக்கும் அரசியல் அதிகாரத்துக்கும் இடையில் எப்படி அதிகாரம் பிரிக்கப்படுகிறது என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். அங்கு அதிகாரப்பிரிவுகளை இணைப்பது அட்டர்னி ஜெனரல் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது அமெரிக்காவில் இரண்டு அதிகாரங்களும் ஒன்றோடொன்று கலந்தும் முரண்பட்டும் இருக்கின்றது. ஆஸ்திரேலிய மாதிரியுடன் ஒப்பிடுகையில் அதிகாரப் பிரிவுபடுத்தல்கள் பற்றிய முழுவிளக்கத்தைக் கொடுக்க முடியுமா?

டேவிட் நோர்த்: ஆஸ்திரேலிய மாதிரியுடன் ஒப்பிட மாட்டேன். ஏனெனில் இங்கு அது எப்படி செயல்படுகிறது என்பது பற்றி எனக்கு அதிகம் அனுபவமில்லை. அமெரிக்காவில் மூன்று அம்ச அரசாங்கம் இருக்கிறது --- சட்டமன்றம், நிறைவேற்று அங்கம் மற்றும் நீதித்துறை.

அதிகாரத்தைப் பிரிப்பதில் நீதித்துறையின் பாத்திரத்தை நிறுவுவதில் கடுமையான நிகழ்ச்சி 1803ல் நடந்தது. மார்பரி வி. மாடிசன் எனும் பிரபலமான வழக்கு ஒன்று இருந்தது. அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ஜோன் மார்ஷலின் தலைமையின் கீழ் நீதி பற்றிய ஆய்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் அர்த்தமாவது உச்சநீதிமன்றம் தான் அமெரிக்க அரசியல் சட்டத்தில் இறுதி மத்தியஸ்தர் ஆகும். அது இந்தப்பாத்திரத்தினை எடுத்துக்கூறி சட்டம் என்ன வென்று விளக்கும். காங்கிரஸ் சட்டத்தை நிறைவேற்றும் மற்றும் ஜனாதிபதி அதில் கையெழுத்திட முடியும். ஆனால் காங்கிரசால் சேர்த்துக் கொள்ளப்படும் சட்டமன்றத்தின் அரசியல் ரீதியான எந்தத் துண்டையோ அல்லது ஜனாதிபதியால் எடுக்கப்படும் எந்த நடவடிக்கையோ---அதன் மீது ஆட்சி புரியும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்குத்தான் உண்டு. அதன் அதிகாரம் பேரளவிலானது அதிகமாக சர்ச்சைக்குரியது.

உச்சநீதிமன்றத்தின் பாத்திரம் வரலாற்றில் பல்வேறு நேரங்களில் மாற்றப்பட்டிருக்கிறது. மார்ஷல் கால கட்டத்தில் நீதிமன்றம் உயரிய கெளரவத்தைப் பெற்றது. இது இவருக்குப்பின் வந்த, டிரெட் ஸ்காட் மனு தொடர்பாக தீர்ப்பளிக்கையில், நீதிமன்றத்துக்குத் தலைமை வகித்த ரோஜர் டானியால் கலைக்கப்பட்டது. அடிமைத் தனத்தை நீதிமன்றம் உறுதிப்படுத்தியமையானது தசாப்தங்களாக அதன் கெளரவத்தைச் சிதற அடித்தது.

அங்கு எப்போதும் பிரதான அரசியல் அமைப்பு ரீதியான நெருக்கடிக்கான உள்ளடக்கம் இருக்கின்றது, எடுத்துக்காட்டாக, நீதிமன்றத்தின் கருத்தும், நிறைவேற்றும் அங்கத்தின் நடவடிக்கைகளும் மோதும்போது. 1930களின் மாபெரும் பொருளாதாரத்தின் தாழ்வின்போது, ரூஸ்வெல்ட் நிர்வாகம் உச்சநீதி மன்றத்துடன் மோதியது. 1933ல் நுழைந்து கொண்டிருந்த ரூஸ்வெல்ட் முதலாளித்துவத்துக்கு பரந்த எதிர்ப்பினை தணியச் செய்யும் நோக்கத்தில் சட்ட வரைவினை அறிமுகப்படுத்தினார். காங்கிரசால் இணைத்துக் கொள்ளப் பட்ட சட்டம், ரூஸ்வெல்ட் ஆதரவு ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டில் இருந்தது. இது புதிய பொருளாதார ஒப்பந்தத்துக்குக்கான அடித்தளத்தை ஏற்படுத்தியது. பெரும் பணக்காரர்களால் வெறுக்கப்பட்ட சமூக சலுகைகளை இந்தச் சட்டங்கள் வழங்கின.

புதிய பொருளாதார ஒப்பந்தத்தின் பல்வேறு சட்டங்களுக்கும் எதிராக வழக்குகள் முன்னெடுக்கப்பட்டன, முடிவாக உச்ச நீதிமன்றத்தை அடைந்தன. நீதிபதிகளில் பலர் 70 வயதுடன் மிக மோசமான பிற்போக்காளர்களாகவும் இருந்தனர். அவர்கள் "9 கிழவர்கள்" என்று அறியப்பட்டிருந்தனர்.1935-36ல் நீதிபதிகளுக்கு முன் வழக்குகள் வந்த பொழுது, அவர்கள் புதிய ஒப்பந்தத்தின் பிரச்சினைக்குரிய பல ஷரத்துக்களை நிராகரித்ததுடன் அந்தத் திட்டங்கள் அரசியல் சட்டத்துக்குப் பறம்பானது என்று ரூஸ்வெல்ட் நிர்வாகத்துக்கு எதிராக தீர்ப்பளித்தனர்.

பின்னர் ரூஸ்வெல்ட் நீதிமன்றத்தில் வலுப்படுத்திக் கொண்ட மற்றும் பழைய பிற்போக்காளர்களின் எதிர்ப்பை சரிக்கட்ட ஒரு சூழ்ச்சித் திட்டத்தை வகுத்தார். நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகளே இருக்க வேண்டுமென்ற அரசியல் அமைப்புத் தேவை எதுவும் இல்லை என்றபடியால் ரூஸ்வெல்ட் உச்சநீதிமன்றத்துக்கு நீநிபதிகளைக் கூட்டுவதற்கு முன் மொழிந்தார். 70வயது கொண்ட ஒவ்வொரு நீநிபதிக்கும் கூடுதல் நீதிபதி ஒருவரைச் சேர்த்தார். இதற்கு ''நீதிமன்ற--நிரப்புத் திட்டம்'' என்று பெயர் வைத்தார்.

இந்த முன் மொழிவு எதிர்ப்பைக் கிளப்பியது. ரூஸ்வெல்ட் கடினமான அரசியல் சூழ்நிலையில் இருந்தார். இந்த நீதிமன்ற நிரப்புத் திட்டத்தை முழுவதுமாய் நிறைவேற்றுவதற்கு அவருக்குப் போதுமான அரசியல் ஆதரவு இருந்ததா எனத் தெளிவாகத் தெரியவில்லை. இந்த நெருக்கடியின் தீர்மானத்துக்கு வழிவகுத்தவை உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலைப்பாட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதாகும். அவர்கள் காங்கிரஸ் தீர்மானத்தை அங்கீகரித்தனர். ரூஸ்வெல்ட் தனது முன் மொழிவை திரும்பப் பெற்றார். சில நீதிபதிகள் ஓய்வுபெற்றனர் மற்றும் ரூஸ்வெல்ட், தனது கருத்துடன் ஒத்துப் போகும் பல புதிய உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார். அரசியல் அமைப்பு நெருக்கடி முறியடிக்கப்பட்டது.

1950கள் மற்றும் 60களில், குறிப்பாக. தொழிலாளர்கள் உச்சநீதிமன்றம் ஜனநாயக உரிமைகளுக்கு உத்தரவாதம் எனப் பார்த்தனர். 1954ல் Bபிரெளன் வி. கல்வி வாரியம் (Brown v. Board of Education) போன்றவற்றின் முடிவுகளுடன் சம்பந்தப் பட்டிருந்தது. அது ''தனியாக ஆனால் சமமாக'' எனும் கொள்கை மற்றும் பிரிவுபடுத்தலுக்கான சட்ட அடிப்படையைக் கீழறுத்தது. 1960களின் பொழுது, நீதிமன்றத்தின் முடிவு சிவில் மற்றும் ஜனநாயக உரிமைகளின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்திற்கு வழிவகுத்தது. அதன் விளைவாக, அங்கு உச்ச நீதிமன்றத்தின் பாத்திரம் பற்றியதில் கணிசமான பிரமைகள் இருக்கின்றன. அவை இந்நாளிலும் விடாது தொடர்கின்றன.

ஆனால் உச்சநீதி மன்றம் அதன் ஜனநாயக பருவகாலத்தைக் கடந்து நீண்ட காலமாகிறது. அதனுடைய தீர்ப்புகள் அதிகமாய் பிற்போக்கானதாக ஆகிவருகின்றன. கோரால் எழுப்பப்பட்ட பெரிய பிரச்சினைகளுள் ஒன்று குடியரசுக் கட்சி நிர்வாகம் பற்றியதாகும். அது நிர்வாகத்திற்கு வருமாயின் மூன்று அல்லது நான்கு புதிய நீதிபதிகளைப் பெயர் குறிப்பிட வாய்ப்புப் பெறும். இது நீதிமன்றத்தை மேலும் வலதுபுறத்திற்குத் திருப்ப முடியும் மற்றும் கருத்தடை உரிமையினையும் ஏனைய ஜனநாயக உரிமைகளையும் ரத்துச் செய்வதற்கு வழிவகுக்கும். இதற்கிடையில், புஷ்க்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் கட்டமைப்பினைப் பற்றி நன்றாக அறிவிக்கப்படவில்லை. தொலைக்காட்சி செய்தியாளர் மாநாட்டில், அதிகாரங்கள் பிரிவினை தொடர்பாகப் பின்வரும் விளக்கத்தை வழங்கினார். நமது அரசாங்க அமைப்பு முறையில் சட்டமன்றம் சட்டங்களை இயற்றும் பின்னர் நிறைவேற்றும் சபை அவற்றை செயல்படுத்திக்காட்டும் என்றார். அவர் நீதிமன்றத்தைப் பற்றி முழுமையாய் மறந்துவிட்டார்.

இது ஒரு சிக்கலான அமைப்பு முறை. நான் உங்களுக்கு ஒரு பொதுவான கண்ணோட்டத்தை தந்திருக்கிற அதேவேளை, அங்கு, இயல்பாக, நிறைய சம்பந்தப்பட்டுள்ளன.

கேள்வி; கோருக்கு ஆதரவாக நீதிமன்றங்களுக்கு வெளியில் ஆர்பாட்டங்கள் பற்றிய படங்கள் CNN ஒளிபரப்பில் இருந்திருக்கிறது. இது மிகப் பரந்த அளவிலானதா?

டேவிட் நோர்த்: கோருக்கு ஆதரவாக அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வதானால் குடியரசுக் கட்சியினரின் தேர்தல் திருட்டுக்கு எதிராக தனித்தனி ஆர்பாட்டங்கள் இருந்திருக்கின்றன ஆனால் இவை உண்மையில் குறிப்பிடத்தக்க எதனையும் செய்யவில்லை. அங்கு தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான தலையீடு இருக்கவில்லை.

சாதாரணமாகச் சொன்னால், கோர் பிரபலமான ஆள் அல்ல. குடியரசுக் கட்சி வேட்பாளரைப் பற்றி கறுப்பு தொழிலாளர் மத்தியில் மிகக் குறைந்த அளவிலான பிரமைகள் உள்ளன. அவர்கள் புஷ்ஷை குடியுரிமை இயக்கம் மூலம் பாதுகாத்த ஜனநாயக உரிமைகளின் எதிரியாகப் பார்க்கின்றனர். புஷ்-ன் வெற்றியின் விளைபயன்கள் பற்றி அதிக அளவு அரசியல் வெறுப்பு உள்ளது.

தொழிலாளர்களின் பரந்த பகுதிகளைப் பொருத்தவரை இன்னும் அதுமிகக் குழப்பமாய் இருக்கிறது என்று நான் சொல்வேன். அமெரிக்காவில் பல வருடங்களாக அசாதாரணமான மட்டத்தில் அரசியல் அக்கறையின்மை இருந்து வருகிறது. இது, மிகப்பெரிய மட்டத்துக்கு தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டதன் உற்பத்திப் பொருளாகும். பத்தாண்டு காலமாக வலதுசாரி தொழிற்சங்க அதிகாரத்துவம் வர்க்க நனவை நசுக்குதற்கு செய்யமுடிந்த எல்லாவற்றையும் செய்தது. அது தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான நலன்களை ஜனநாயகக் கட்சியுடனான திவாலான அரசியல் கூட்டுக்கு அடிபணியச் செய்தது. பிரதான தொழிற்சங்கப் பேரவையான AFL-CIO வின் கொள்கைகள் றேகன் நிர்வாகத்தின் தாக்குதலுக்கு எதிராக ஏறத்தாழ பாதுகாப்பற்றதாக விட்டன.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலையில் நிச்சயமாக மாற்றங்கள் உள்ளன. ஜனநாயகக் கட்சிக்கு தொழிலாளர்கள் காட்டும் பழைய விசுவாசம் கிட்டத்தட்ட மறைந்து விட்டது. ஒரு தலைமுறைக்கு முன்னால், பல தொழிலாளர்கள் பிராங்களின் ரூஸ்வெல்ட் நிர்வாகத்தினை மிக நன்றியுடன் நினைவு கூர்ந்தார்கள். அவர் புதிய ஒப்பந்தத்துடன் தொடர்புடைய சமூகச் சீர்திருத்தங்களுடன் நற்பெயர் பெற்றிருந்தார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தங்களின் துயரங்களுக்கு குறிப்பிட்ட அளவு இரக்கம் காட்டும் முதலாளித்துவ அரசியல்வாதிகள் பற்றிய தங்களது மதிப்பீட்டில் அதி தாராளமாக இருந்தனர், இது ரூஸ்வெல்ட்டுக்கு மிகவும் சக்தி வாய்ந்த முறையில் இருந்தது.

தொழிலாள வர்க்கத்தின் மிக ஒடுக்கப்பட்ட பகுதியினர் இன்னும் ஜனநாயகக் கட்சியினருக்குத்தான் வாக்களிக்கிறார்கள். ஆனாலும் இந்த ஆதரவு கூட குடியரசுக் கட்சி மாற்று அணியினர் மீதான வெறுப்பு மற்றும் அச்சத்தைவிட குறைந்த அளவே சாதகமான பற்றுதலாகும். நினைவில் கொள்ளுங்கள், முப்பது ஆண்டுளாக குறிப்பிடத்தக்க சீர்திருத்தவாத துண்டுதுக்கானி மசோதா எதுவும் சட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. லிண்டன் ஜான்சனின் (Lyndon Johnson's) "மாபெரும் சமுதாயம்" உடன் தொடர்புடைய பல சீர்திருத்தங்கள் வரவு-செலவு அறிக்கை வெட்டுக்கள் வருடங்கள் ஊடாக அழிக்கப்பட்டிருக்கின்றன.

கிளிண்டன் 1992ல் ஜனாதிபதி பதவியை வென்றபொழுது, அங்கு குறிப்பிட்ட அளவுக்கு ஆர்வம் இருந்தது. அடிப்படை மருத்துவ வசதிகளை முன்னேற்றுவதற்கு சில வாக்குறுதிகளூடாக அவர் நிறைவேற்றுவார் என்று பல தொழிலாளர்களால் நம்பப்பட்டது. ஆனால் அது செய்யப்படாத பொழுது, பல தொழிலாளர்களை முழு அரசியல் அமைப்பிலிருந்தும் அதிகமாய் தனிமைப்பட வைத்தது. அதனால்தான் கோர் வேட்பாளருக்கு பெரும் ஆதரவு என்பது ஒருபுறம் இருக்கட்டும், அது ஒருபோதும் பரபரப்பை உண்டுபண்ணவில்லை. ஆனால் தேர்தல் வெளிப்படுத்தியவாறு அவர் பெரு நகர்ப் பகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்றார். இந்த வாக்குகள் குடியரசுக்கட்சியினர் மீதான அச்சம் மற்றும் விருப்பமின்மையை வெளிப்படுத்திய வாக்குகளாக இருந்தன. இது அண்மைய வாரங்களில் ஆழமாகி உள்ளது. குடியரசுக் கட்சியினர் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள் மற்றும் தேர்தல் திருடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற புரிதல் வளர்ந்துவருவதை ஒருவர் உணரமுடியும்.

அங்கு பெரியளவில் குழப்பம் உள்ளது. அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்திற்கு இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று புரிகிறது என்ற எண்ணத்தை நான் கொடுக்க விரும்பவில்லை. அவர்கள் ஆஸ்திரேலியத் தொழிலாளர்கள் அது பற்றிக் குழப்பமாயிருப்பதைப் போல குழம்பி இருக்கலாம்.

அரசியல் நனவு என்பது தன்னிச்சையானது அல்ல. அது வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மக்கள் நனவு அடையக் கூடிய நிகழ்ச்சிப் போக்குகளை முடுக்கி விடும் நிகழ்ச்சிகள் நிகழலாம் தான். கடந்த மூன்று வாரங்களாக அமெரிக்காவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது மிக முக்கியமானதாகும். மக்கள் அரசியலை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது வர்க்க நனவின் உண்மையான ளர்ச்சிக்கான சாத்தியத்தைத் திறக்கிறது. அது உலக சோசலிச வலைத் தளத்தின் வாகர் எண்ணிக்கையில் வளர்ச்சியில் எதிரொலிக்கிறது. நாங்கள் பெருமளவு எண்ணிக்கையில் கடிதங்களைக் பெற்றோம். அதனை குறையாது வைத்திருக்கச் செய்வது கடினமாக இருக்கிறது. இது பரந்த நிகழ்ச்சிப் போக்கு பற்றிய மிக முக்கிய குறிப்பிடலாகும்.

நெருக்கடிதாமே தவிர்க்க முடியாதவாறு பொருளாதார நிலைமையில் மோசமான நிலையை எதிரெதிர் செயல்விளைவை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் மத்தியில் அங்கு குறிப்பிட்ட அளவு நம்பிக்கை இருந்தது. தொழிலாளர்கள் தங்களது குடும்பங்களுக்கு காசோலை இல்லாமல் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்துக்கு பராமரிக்க முடியாது என்ற சூழ்நிலையின் கீழ் வேலையின்மை வளர்ந்து வருவதற்கு தொழிலாளர்கள் எப்படி எதிர்வினையை வெளிப்படுத்தப் போகிறார்கள்?

அண்மையில் நான் ஒரு தேர்ச்சி பெற்ற ஒரு தொழிலாளியை ---சாதாரணமாக திருப்தியான வாழ்க்கைத்தரத்தை அனுபவிக்கும் தொழிலாளியை, நீண்ட திட்டமிட்ட கதவடைப்பினால் அவர் எப்படிப் பாதிக்கப்படுவார் என்று கேட்டேன். அவர் பதில் சொன்னார்: ''நல்லது, எனக்கு ஒரு வாரத்துக்கு பிரச்சனையில்லை. இரண்டு வாரம் கழித்து அது கஷ்டமாகும். மூன்று வாரங்கள் ஆனால் பிரச்சினையாகிவிடும். நான்கு வாரங்களுக்குப் பின் நான் இங்கே இருக்க மாட்டேன்".

இப்போது அபிவிருத்தி அடைந்துவரும் கீழ்நோக்கிய தளர்வுக்கான பல குறிஈகாட்டல்கள் உள்ளன. அது பாதுகாப்பாக இயங்குவதைவிட மோசமாக இருக்கும். தொழிலாளர்களில் பல பகுதியினர் கடன் வாங்கும் வசதியைப் பெற்றுள்ளதுடன், அது அவர்களுக்கு அவர்களது உண்மையான சம்பாத்தியத்தைவிட தரமான வாழ்க்கைத்தரத்தை வழங்குகின்றன. அமெரிக்கர்கள் கடனில் உள்ளனர். அவர்கள் நீண்ட தவணை முறையிலான வேலையின்மையை அனுபவித்தால் என்ன நிகழும்? யாருக்கும் தெரியாது, ஆனால் சீரியசான அமைதியின்மையை நாம் பார்க்கப் போகிறோம் என எதிர்பார்க்கிறேன். ஜனாதிபதியை சட்டத்திற்குப் புறம்பானவராகப் பார்க்கும் சூழ்நிலையின் கீழ் இது மொத்தமாய் சேர்ந்து கொள்ளும். சிறப்பாக புஷ்-ன் வெற்றி நிகழ்வில், தங்களது பொருளாதார நிலைப்பாட்டின் சீரழிவு அரசியல் சதித்திட்டத்துக்கு சென்றதாக தொழிலாளர்கள் கற்பித்துக் கூறுவார்கள். ஜனாதிபதியை அழைப்பதற்கு அங்கு மிகமிகச் சிறிய நற்பெயர் அல்லது செல்வாக்கு இருக்கும்.

கேள்வி: மூன்று கேள்விகள் வைத்திருக்கிறேன். மக்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை, ஆனால் மாநிலமே தேர்வாளர்களை நியமிக்க உரிமை பெற்றிருக்கிறது என்று கூறிய நீதிபதி ஸ்காலியாவின் விளக்கத்தினை அமெரிக்க உச்சநீதிமன்றம் எப்படி ஆதரிக்கமுடிந்தது? இரண்டாவது, கடந்த 150 ஆண்டுகளாக சேவைசெய்த முறையினை ஏன் அமெரிக்க முதலாளித்துவ ஆட்சி கீழறுத்தது? நிச்சயமாக, அவர்கள் சிலவற்றை மறுத்தால் அதாவது அவர்களது அமைப்புக்கு அத்தியாவசியமான அதாவது வாக்களிப்பதற்கான அடிப்படை உரிமையை மறுத்தால், பின்னர் ஒருவர் நியாயமாக கேள்வியை முன் வைக்கலாம்: அடுத்தது என்ன?

மூன்றாவதாக அமெரிக்க நிர்வாகம் அத்தகைய அடிப்படை உரிமையில் அமெரிக்க மக்களை ஏமாற்ற முடியும் என்றால், பின்னர் உலகத்தில் மற்றெங்கும் உள்ள மக்கள்மீது திணிப்பதற்கு எதனைத் தயாரித்து வைத்திருக்கின்றது?

டேவிட் நோர்த்; இந்த முக்கிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நன்றி. எல்லாவற்றுக்கும் முதலாவதாக எப்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்பது தொடர்பான உங்களது கேள்விக்குப் பதில் சொல்வது மிகவும் கடினமானது. அங்கு பல விஷயங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் அரசியல் உட்பட. அவர்கள் எவ்வளவு தூரம் போவார்கள் அல்லது போகமாட்டார்கள் என்பதைக் கணிப்பது கடினமானது.

இருப்பினும் நான் குறிப்பிட்ட விஷயம் ஸ்காலியாவின் நிலைப்பாடு நிச்சயமாய் அமெரிக்க ஆளும் தட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளோருள் நிலவும் அரசியல் சிந்தனையின் சமவெட்டு வளைகோட்டுக்கான குறிகாட்டி ஆகும். அது புளோரிடா தேர்தலைச் சுற்றிய கிரிமினல் நடவடிக்கைகள் மற்றும் அதன் பின்னர் நடந்தது, பரந்த போக்குக்கு சம்பந்தமில்லாதது என்று காட்டுகிறது. உண்மையில் இந்த நெருக்கடி வானத்திலிருந்து விழவில்லை. அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்னர் அங்கு நீண்ட அரசியல் நெருக்கடி இருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அது தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை அகற்றுவதற்கு வலதுசாரி சதித் திட்டத்தில்-- பதவி அகற்றும் வழக்கு விசாரணை ஊழலில் சம்பந்தப்பட்டிருந்தது.

இதனை பரந்த உள்ளடக்கத்தில் வைக்க அனுமதியுங்கள். உலக முதலாளித்துவத்தின் விவகாரங்களில் தெளிவான திருப்புமுனையாக இருந்த ஒன்றுக்கு நாம் மீண்டும் போவோம். நிக் பீம்ஸ் பலதடவைகள் விளக்கியவாறு, போருக்குப் பிந்தைய முதலாளித்துவ செழுமையின் வெற்றி காலப்பகுதி மற்றும் அதனுள் அமெரிக்காவின் மேலாதிக்கப் பாத்திரம் ஆகியன 1960களில் முடிவுக்கு வந்துவிட்டன. அந்தப் புள்ளியில், போருக்குப் பிந்தைய ஒழுங்கின் அடித்தளங்களில், பிரெட்டன்வுட்ஸ் வெடிப்புக்கள் முன்னுக்கு வந்தன. அமெரிக்காவில் சமூக நெருக்கடி மிகக்கூர்மையான வடிவத்தை எடுத்தது மற்றும் பல யுத்தங்கள் இடம்பெற்றன. அந்தப் புள்ளியிலிருந்து அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்துக்குள்ளே அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்ட வடிவ ஆட்சியை நோக்கி நகரும் போக்கு வளர்ந்து வருவதைப் பார்க்க முடியும். 1972 லிருந்து 1974 வரை அங்கு இழிபுகழ் பெற்ற வாட்டர்கேட் ஊழல் இருந்தது, அது இறுதியில் ஜனாதிபதி நிக்சனின் ராஜினாமாவுடன் முடிந்தது.

பின்னர் அங்கு மிகவும் சீரியசான ஈரான்-கான்ட்ரா நெருக்கடி இருந்தது. அது வெள்ளை மாளிகையின் அடித்தளத்தில் அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்ட நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டியது. இது ஒலிவர் நோர்த் மற்றும் பல்வேறு நிழல் இயக்கிகளின் பெயரால் நடத்தப்பட்டது. இது காங்கிரசின் விதிமுறைகளுக்கு மாறாக போர் நடத்துவதற்கேயாகும். இது பெரும் ஊழலில் முடிவடைந்தது. ஆனால் இது ஜனநாயகக் கட்சியினரால் ஆவேசத்துடன் முன்னெடுக்கப்படவில்லை. திருவாளர் நோர்த்தும் பிரதான வலதுசாரி மற்றும் அரசியற் பிரமுகரானார்.

பின்னர் மிகவும் அசாதாரணமான அபிவிருத்தி, 1998-99 பதவி நீக்கும் விசாரணை நெருக்கடி வந்தது. இது பாலியல் ஊழல்.... முயற்சியாக இருந்தது. ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்றுவதற்கு-- குடியரசுக்கட்சியின் வட்டாரத்தில் உள்ள அதி வலதுசாரிகளால் நீதித்துறை மற்றும் சட்டமன்றங்களின் ஒத்துழைப்புடன் கவனமாக குழுவமைக்கப்பட்டது.

உலக சோசலிச வலைதளத்தின் பெரும் சாதனைகளுள் ஒன்று இந்த நெருக்கடியைப் பற்றிய ஆய்வு என நான் நினக்கின்றேன். நாம் இந்த விஷயங்களை பல தடவை விளக்கி இருக்கிறோம். நாம் அதனை ஜனநாயகக் கட்சி அல்லது பில் கிளிண்டனின் பாதுகாவலர்களாக நின்று விவாதிக்கவில்லை மாறாக, அமெரிக்க மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போர் என்ற அடிப்படையில் அதனை விவாதித்தோம். முதலாளித்துவ ஜனநாயகத்தினை இடது புறம் இருந்து எதிர்க்கும் இயக்கத்திற்கும் வலதுபுறம் இருந்து எதிர்க்கும் இயக்கத்திற்கும் பரந்த வேறுபாடு இருக்கிறது. வேறுபாட்டினைப் புரிந்துகொள்ளமுடியாத, மேலோட்டமான, எந்திர ரீதியான மற்றும் கொச்சையான [இரண்டும் குட்டிச்சுவராகப் போகட்டும்] நிலைப்பாட்டை எடுக்கும் சோசலிச அமைப்புக்கு கடும் துன்பம் இருக்கிறது.

நமது இலக்கு பதவி நீக்க விசாரணையின்போது அதுவாகத்தானிருந்தது, அது தொழிலாளர்களை ஜனநாயகக் கட்சியிடமிருந்து சுதந்திரமாக அணிதிரட்டுவதாகும்.உண்மையில், ஜனநாயகக் கட்சிக்கு எதிரான நமது மிகப்பலமான விவாதம் துல்லியமாக, அது சதியாளர்களை அம்பலப்படுத்துதற்கு பிரச்சாரத்தை நடத்த திராணியற்றிருந்தது என்பதாகும். இது எம்மை, தொழிலாள வர்க்கம் தனது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முதலாளித்துவ வர்க்கத்தின் எந்தப் பகுதியின் மீதும் எந்த விதமான அரசியல் நம்பிக்கையையும் வைக்க வேண்டாம் என தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கை செய்ய வைத்தது.

பதவி நீக்க விசாரணை நெருக்கடி, ஜனாதிபதி கிளின்டனை ஒப்பச்செய்வதற்கு செனட்சபை தோல்வியுற்றதில் போய் முடிந்தது. இந்தத் தோல்வியானது, ஜனாதிபதியை அகற்றுவதற்கு அமெரிக்க மக்களின் பெரும்பான்மையினரின் எதிர்ப்புக்கு வழிவகுத்தது. கிளின்டனின் நடத்தையானது விக்டோரியன் தரத்துடன் முறையாக ஒத்துப்போகின்றது என்று நாங்கள் நினைக்கவில்லை. ஜனாதிபதியை பதிவியில் இருந்து அகற்ற இது சரியான காரணம் அல்ல என்று பலர் குறிப்பிட்டனர். குடியரசுக்கட்சி உண்மையில் இதனை அடைய முடியவில்லை. குடியரசுக் கட்சியினரின் சில நடவடிக்கைகளில், அவர்களின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கு போதுமான சமுக ஆதரவை ஒருபோதும் பெறமுடியவில்லை என்ற ஆற்றொணா நிலையின் சிலகோணங்களை ஒருவர் உணரமுடியும். ஆகையால் அவர்கள் எப்போதும் இல்லாத ஜனநாயகம் அல்லா வழிமுறைகளை தேட தாங்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக உணர்ந்தனர். உச்ச நீதிமன்றம் எவ்வாறு ஆளும் என்பது தெளிவற்றதாய் இருக்கிறது. ஆனால் நான் நினைக்கிறேன், பொதுவான போக்கு என்றும் இல்லா வகையில் ஜனநாயகம் இல்லாத கருத்துருவாக அபிவிருத்தியடைகிறது.

அவர்களுக்கு நன்றாக சேவை செய்த அமைப்புடன் ஏன் அவர்கள் முறித்துக்கொள்கின்றனர்? இதுவும்கூட முக்கியமான கேள்வியாகும்.

இதற்கான விடையை உலக முதலாளித்துவம் முரண்படும் வரலாற்று நெருக்கடி பற்றிய ஆய்வில் காணவேண்டும். அங்கு புறநிலைக்காரணம் இருக்க வேண்டும். அதாவது இந்த அல்லது அந்த அரசியல் இயக்கி, அந்தத் திசையில் இயக்கும் உடனடி நோக்கங்களுக்குப் பின்னால் அங்கு நோக்கங்கள் இருக்கின்றன. ஜனநாயக உரிமைகள் தொடர்பாக அக்கறையற்ற மற்றும் நடுநிலையான நோக்கை வெளிப்படுத்தும் அளவு உண்மையில் எந்த அளவு அவர்கள் தயாரிப்புச் செய்திருக்கிறார்கள் எனபதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த உரிமைகள் முதவாளித்துவ வர்க்கத்தின் ஆட்சிக்கு அடித்தளமாக இருந்தன, முதலாளித்துவ வர்க்கத்தின் சமூகச்சேர்க்கையிலேயே உள்ள மாற்றங்கள் மற்றும் உபரிமதிப்பைத் திரட்டும் சாதனங்களிலும் மாற்றங்கள் உட்பட, அங்கு சக்தி மிக்க புறநிலைச் சக்திகள் வேலையில் இருக்கின்றன. பூகோள உற்பத்தி அமைப்பின் கட்டமைப்புக்குள்ளேயான அந்த நிகழ்ச்சிப் போக்கின் மிகவும் ஆற்றொணா பண்பு- உபரி மதிப்பைத் தொழிலளர்களிடமிருந்து கறந்தெடுக்கும் அதனது திறத்தை ஏதாவது கீழறுத்தால் முதலாளித்துவ வர்க்கத்தை அதற்கு மேலும் மேலும் குரோதமானதாக ஆக்கும். தொகுத்துக் கூறினால், முதலாளித்துவ ஜனநாயகத்துக்குள்ளே தொழிலாளர்களுக்கும் நடுத்தர வர்க்கப் பகுதியினருக்கும் வழங்கப்பட்ட ஏற்பாடுகள், மூலதனத்தின் கோரல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் எதிராக அவர்களை எந்த வகையிலும் பாதுகாத்தாலும், அவை துடைத்துக்கட்டப்பட வேண்டும். உழைப்புச் சுரண்டல், இலாபத்தை அடைதல் மற்றும் தனிநபர் செல்வக்குவிப்பு அகியவற்றின் மீதான அனைத்து வகையான அரசியல், பொருளாதார, சமூக மற்றும் ஒழுக்கத்தடைகள் அனைத்தும் துடைத்ததொழிக்கப்படவேண்டும்.

இந்த விஷயம் பற்றிய இன்னொரு முக்கிய பார்வை உள்ளது. தற்கால சமுதாயத்தை ஒருவர் பிரதிபலிக்க முடியும் என்றால் -- இது அனைத்துலகக் குழுவைப் பொறுத்தவரை பல வேலைத்திட்ட விளைபயன்களைக் கொண்டிருக்கிறது-- நாம் பரந்த சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பது தெளிவு. இதன் மூலம் நான் அர்த்தப்படுத்துவது சமுதாயமானது சிக்கலான அசாதாரணமான சமூகப் பிரச்சினைகளுடன் --சுகாதாரம், கல்வி, முதியோர் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ஆகிய-- பிரச்சினைகள் தொடர்பாக மோதலைக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் உயர்ந்த அளவிலான கூட்டுத்திட்டமிடலை, பரந்த சமுதாயம் இயங்குவதற்கான அத்தியாவசிய வளங்களை வழங்குவதற்கான முயற்சிகளை மற்றும் பல லட்சக்கணக்கான உண்மையில் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட சமூகத்தேவைகளை நிறைவேற்றுவதற்கான உட்கட்டமைப்பில் நிதியிடப்படுவதை தேவையாகக் கொண்டிருக்கின்றன.

ஆகையால் நவீன பொருளாதார அபிவிருத்தியின் புறநிலைப்போக்குகள், உற்பத்தியின் புள்ளியில் இலாபத்தை உற்பத்தி செய்தல், உபரிமதிப்பைத் தனியாக கபளீகரம் செய்யும் உரிமை மற்றும் உற்பத்திச் சாதனங்களில் தனிச் சொத்துடைமை இவற்றை கொள்கையாகக் கொண்டிருக்கும் சமுதாயத்துடன் மோதுவது அதிகமாகி வருகிறது.

மூலதனமானது பெரும் லாபத்தினைக் குவிக்கவும் அந்த இலாபத்தை தனிப்பட சுவீகரித்துக்கொள்ளவும் முயற்சிக்கிறது. அந்த சமூகப்போக்குத்தான் தற்போதைய பரந்த மக்கள் சமுதாயத்தின் புறநிலை சமூகத்தேவைகளுடன் ஆழமான குரோதப் போக்கைக் கொண்டிருக்கிறது.

"அமெரிக்காவில் சோசலிசம் எவ்வளவு பலமாக இருக்கிறது?" என்று அடிக்கடி கேட்கப்படுகிறோம். அது பலமான நனவுப்பூர்வமான போக்கு அல்ல.ஆனால் பத்திரிக்கை கட்டுரைப் பகுதியின் ஜன்னிப் பிதற்றல்களை வாசியுங்கள். அவை கோரை லெனினுடன் ஒப்பிடுகின்றன. வலதுசாரியினர் அமெரிக்கா கம்யூனிசப் புரட்சியின் விளிம்பில் தள்ளாடுவதாக நம்புகின்றனர்.

இதன் மூலம் அவர்கள் எதனை அர்த்தப்படுத்துகின்றனர்? எங்கும் அவர்கள் மக்களின் சுற்றிவளைப்பைப் காண்கின்றனர், உழைக்கும் மக்களின் வளர்ந்துவரும் தனிச்சிறப்புரிமையை பார்க்கின்றனர். இது அவர்களைப் பொறுத்தவரை, தலைகீழாக்கப்படவேண்டும். அது பேரளவில் கோபத்தைத் தூண்டுகிறது, அதுதாமே சில சமயங்களில் அறிவுக்கு ஒவ்வாததாகத் தோன்றக்கூடும். ஆனால் அது புறநிலை அடிப்படையைக் கொண்டிருக்கிறது.

ட்ரொட்ஸ்கி மிக நன்றாக விளக்கினார், புரட்சி நடைபெற வெகு ஜனங்கள் பழைய வழிகளில் வாழமுடியாது என்று புரிந்துகொள்வது மட்டும் போதாது என்று. ஆளும் வர்க்கம் தாங்கள் பழைய வழிகளில் ஆளமுடியாது என்பதை கட்டாயம் உணர்ந்தாக வேண்டும். ஆகையால் ஆளும் முறையிலேயே ஏற்படும் மாற்றம் புரட்சியை அணுகுதலின் அல்லது சமுதாயத்துக்குள்ளே புரட்சிகர நிலையின் அபிவிருத்தியின் முக்கிய குறிகாட்டியாகும்.

இறுதியாக அவர்கள் உலகைச்சுற்றி என்ன செய்வதற்கு தயாரித்திருக்கிறார்கள்? இரு கட்சிகளும் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவின் பூகோள நலன்களால் தேவைப்படும் பொழுது, இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கு அவரது கடமைப்பாட்டில் கோர் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் புஷ் நிர்வாகமானது, அதனது ராணுவ சக்தியைப் பயன்படுத்துவதில் விளைவைப் பற்றி மிகவும் கவலைப்படாததாக இருக்கும் என்று ஐயப்படுகிறேன். புஷ் நிர்வாகம் இரத்தம் தோய்ந்த சர்வதேச சாகசங்கள் மற்றும் பல்வேறு ஆத்திர மூட்டல்களுள் ஒன்றாய் இருக்கும். இந்தப் பேர்வழிகள் ஒவ்வொரு மட்டத்திலும் மிக வலுச் சண்டை முனைபவர்களாக இருப்பார்கள்.

ஜனநாயக உரிமைகள் தொடர்பாக கோரின் ஆட்களுள் ஒருவர் சரியாகச்சொன்னார்: "இப்பொழுது உங்களது வாக்கை எண்ணவில்லையானால், எதிர்காலத்தில் உங்களது வாக்கை எண்ணுவார்கள் என்பது எப்படித் தெரியும்? உங்களது ஜனநாயக உரிமை பற்றிய அதன் அர்த்தம் என்ன? இன்னொரு தேர்தல் நடக்கப்போகிறதை எவ்வாறு அறிவீர்கள்?"

ஆகையால் அடிப்படை ஜனநாயக உரிமை விஷயங்கள் பணயம் வைக்கப்பட்டுள்ளன. முதலாளித்துவ வர்க்கத்துக்குள் அவை போராடப்படும் மட்டத்துக்கு, அத்தகைய விஷயங்கள் தொடர்பாக நிலைப்பாட்டை மேற்கொள்வதற்கு, தொழிலாள வர்க்கத்தினைப் பொறுத்த அளவில் நொடிப் பொழுதுதான். இதற்கு தொழிலாள வர்க்கத்துக்குள்ளே சில புள்ளிகளில் பதில் இருக்காது என்பது நினைத்துப் பார்க்கவியலாது. நான் உங்களுக்கு கால அட்டவணை கொடுக்க முடியாது. ஆனால் இறுதியாக இம்முரண்பாடுகள் அவற்றின் வழியில் மக்களிடம் வேலை செய்யும். இது ஏற்கனவே நிகழ்கின்றது என்பதற்கான தனித்தனி அறிகுறிகள் இருந்து வருகின்றன.

கேள்வி: அவையின் தலைவர் (Speaker) ஜனாதிபதி ஆக முடியுமா?

டேவிட் நோர்த்: அங்கு ஜனாதிபதியும் உதவி ஜனாதிபதியும் இல்லை என்றால் மூன்றாவதாக வரிசையில் இருப்பவர் அவையின் தலைவர்தான் என நான் நம்புகிறேன். இந்நெருக்கடிக்கு தீர்மானம் இல்லை என்றால் என்ன நடக்கும் என்று உண்மையில் எனக்கு தெரியவில்லை.

கேள்வி: இது 1950 களில் நிலைகொண்டிருந்த மெக்கார்திசம் வகையிலான ஒன்றுக்கு திரும்புவதாகத் தோன்றுகிறது. நீங்கள் சர்வதேச விளைபயன்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்டினீர்கள், ஆனால் இவை அனைத்தும் எவ்வளவு விரைவாய் செய்திச் சாதனங்கள் நெருக்கடி மேல் மூடியிடுகின்றன என்பதையும் அவை இச் சூழ்நிலையை அற்பத்தனமாகக் கருதுகின்றன என்பதையும் பொறுத்தது என்றே நான் கருத்துரைப்பேன்.

டேவிட் தோர்த்: நிலவும் சூழ்நிலையைப் பற்றிய அறிவார்ந்த ஆய்வு என்று விவரிக்கக் கூடியது செய்திசாதனத்தில் எதுவும் இருக்கவில்லை. அமெரிக்க செய்திச்சாதனம் முழு உலகிலும் உள்ளவற்றில் மிகவும் பிற்போக்கான மற்றும் எரிச்சலடையும் செய்திச் சாதனம் ஆகும். பொதுமக்கள் கருத்தை திசை திருப்பவும் நஞ்சூட்டவும் ஆன அதன் முயற்சியில் அது பேசமுடியாதபடி பாத்திரத்தை ஆற்றுகிறது. அவர்களது நிலைப்பாடு: இது அரசியல் அமைப்பு நெருக்கடி அல்ல என்றவாறிருக்கிறது. ஆனால் அந்த விவாதம் தேய்ந்து மெல்லியதாகி வருகிறது.

நிச்சயமாக அங்கு டிசம்பர் 12ல் காலக் கெடு பற்றிய பேச்சு இருக்கிறது. மற்றும் உச்சநீதிமன்றம் இதனை சிலவழியில் ஒரு முடிவுக்குக் கொண்டுவர, முடிவை வழங்கும் என்று அதன் திறமை மீது நிறைய நம்பிக்கை வைக்கப்படுகிறது. நான் நினைக்கிறேன், அவர்கள் கண்டுபிடிக்கப்போவது தீர்வு இல்லை என்பதைத்தான். புஷ் தேர்வை உறுதி செய்தல் இந்த தெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவராது. அது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மற்றும் ஆழமாகி வரும் அரசியல் நெருக்கடியின் இன்னொரு மேடையாகும்.

சில புள்ளிகளில் யாரோ ஒருவர் வாக்கினை எண்ணினால் அது புஷ் நிர்வாகம் சட்டத்துக்குப் புறம்பானதாக மாற முடியும். அப்பொழுது என்ன நிகழும்? புஷ் வெற்றி மோசடி மற்றும் ஊழலின் கறையால் சூழப்படும். மற்றொரு புறம், இது தான் ஆளும் தட்டினைப் பொறுத்த மட்டில், மாற்று எது? என்று சூழ்நிலையை மிகக் கடினமானதாக ஆக்கும். கோர் ஜனாதிபதியாவதை குடியரசுக் கட்சியோ அல்லது குறைந்த பட்சம் அதில் உள்ள சக்தியோ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று பல செய்திகள் இருக்கின்றன. கோர் ஜனாதிபதியானால் ஆளும் வர்க்கத்தின் பகுதிகள் அவர்கள் வலதுசாரி பயங்கர வாதத்திற்கு முகம் கொடுக்கக் கூடும்.

எந்த விதத்திலாவது, கோர் ஜனாதிபதி ஆனால் அவரது நிர்வாகம் அதி வலதுசாரிப் பிரிவினர் முன் ஊக்கமற்ற கோழைத்தனத்தால் பண்பிட்டுக் காட்டப்படும். அந்த வலதுசாரியினர் தொழிலாளர்களிடமிருந்து ஆழமாய் அன்னியப்படுவதை உணர்ந்துள்ளனர். ஜனாதிபதி சூழ்நிலையின் இறுதிவெளிப்பாடு நீங்கலாக, காங்கிரசானது இடையில் பிளவுற்றிருப்பதையும் ஒருவர் இதனுடன் சேர்க்க வேண்டும். செனட்டில் 50/50 வெற்றி தோல்வி இல்லா சமநிலை இருக்கிறது. இந்தமாதிரி முன்னர் எப்பொழுது நிகழ்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை, நிச்சயமாக எனது வாழ்நாள் காலத்தில் அல்ல. இதன் அர்த்தமாவது, எப்பொழுதெல்லாம் வாக்கெடுப்பு நடக்கிறதோ அப்போது, சமநிலையை உடைத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க, செனட்டின் ஒவ்வொரு கூட்டத் தொடரின்போதும் உதவி ஜனாதிபதி அங்கு இருக்க வேண்டும். பிரதிநிதிகள் சபையில் வேறுபாடு, கையளவு வாக்குகள்தான் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பிளவானது 5/4 என்றிருக்கிறது. அமெரிக்க ஜனநாயகத்தின் அனைத்துவிதமான ஜனநாயக நிறுவனங்களும் துருவமயமாக்கப் பட்டுள்ளன.

தேர்தல் முடிவைப் பாருங்கள்... --நகரங்கள் கிராமப்புறத்திற்கு எதிராக, நகரின் மையப்பகுதி புறநகர்ப்பகுதிக்கு எதிராகவும் இருக்கிறது. அங்கு ஆண், பெண் வாக்காளர் மத்தியில் வர்க்க துருவமுனைப் படுத்தல் இருக்கிறது. ஆண்கள் மட்டும் வாக்களித்திருந்தால், புஷ் அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்றிருப்பார். பெண்கள் மட்டும் வாக்களித்திருந்தால், கோர் பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருப்பார். அங்கு பல்வேறு சமூகப்பதட்டங்கள் வேலை செய்கின்றன. இந்தப் பிரிவுகளில் சில மேலோட்டமானவை, தொழிலாள வர்க்கத்துக்குள் அரசியல் நனவு அபிவிருத்தியடையும்போது மாறும். ஆனால் ஒவ்வொரு மட்டமும் சமுதாயத்தினுள் உள்ள அதி நெருக்கடியை சுட்டிக்காட்டுகிறது. தேர்தல் மழுப்பல் என்பதற்கும் அப்பால், அது ஒரு புறநிலை இயல் நிகழ்ச்சியாகும். திரைநீக்கிப் பார்த்தால் அமெரிக்காவிற்குள் உள்ள ஆழமான முரண்பாடு, அவை அவற்றுக்கான தளத்தை வர்க்கங்களுக்கு இடையிலான உறவில் கொண்டிருக்கின்றன.

கேள்வி: அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தினுள் வெடிக்கும் எழுச்சியின் அபிவிருத்தியையும் வளர்ச்சியையும் வரலாற்றில் தொழிலாள வர்க்கம் அரங்கத்துக்கு வந்துகொண்டிருப்பதையும் பற்றி நீங்கள் பேசினீர்கள். கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளாக தொழிலாள வர்க்கத்தின் சமூகச் சேர்க்கையில் ஆழமான மாற்றங்கள் இருந்து வருகின்றதன் காரணமாக, அதன் விளைபயன்களாக நீங்கள் எதனைப் பார்க்கிறீர்கள்? அங்கு தொழிலாளர்கள் பற்றி நிறைய செய்திகள் இருக்கின்றன-ஆண், தொழிற்துறைப் பாட்டாளி- என ஒரே பல்லவி இனியும் இல்லை. சமூக நெருக்கடியில் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் சமூக சேர்க்கையில் இந்த மாற்றம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

டேவிட்நோர்த்: தொழிலாள வர்க்கத்தின் பரந்தகன்ற பகுதி இருக்கிறது. தொழிலாள வர்க்கம் என்பதை ஒருவர் நிலையான விஷயமாக அல்லாமல் சமூக வகையினமாகப் புரிந்து கொள்ளவேண்டும். பாட்டாளி வர்க்கத்தால் எடுக்கப்படும் வடிவங்கள் உற்பத்தி வடிவங்கள் தன்னில் உள்ள மாற்றங்களினால் மாற்றம் பெறும். இயல்பாக, நாம் வர்க்கம் மற்றும் வர்க்கநனவு எனபதைப் பற்றி பேசும்பொழுது, இவை பல்வேறு காரணிகளால் செல்வாக்கு செலுத்தப்படுகிறது. ஆனால் இறுதியில், தொழிலாள வர்க்கம் என்பது யார் உபரிமதிப்பை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டிருக்கிறார்களோ, எவரது பிரதான வருமானம் அவர்களின் கூலியாக இருக்கின்றதோ அவர்களைக் கொண்டிருப்பதாகும். தொழிலாள வர்க்கத்தை வரையறை செய்யும் பலமான அஸ்திவாரம் இதுதான்.

புதிய தொழிற்சாலைகள் வருவது புதிய வடிவில் உழைப்பு மற்றும் ஏனைய மாற்றங்களை உண்டுபண்ணுகிறது. எடுத்துக்காட்டாக, அமேசன் டொட் கொம் (Amazon.com). இதில் தொழிலாளர்களிடமிருந்து, தொழிற்சங்க மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அண்மையில் தோன்றியுள்ளது. அங்கு அக்கறை செய்யும் அபிவிருத்தி உள்ளது. ஆரம்பத்தில், அமேசனில் வேலை செய்யச் சென்றோர். பலர் கூலிகளைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை, ஏனெனில் தங்களின் பங்கு தேர்வுகளிலிருந்து லட்சாதிபதிகளாக ஆகப் போகிறோம் என்ற கருத்தால் கவரப்பட்டிருந்தார்கள். இலாபம் ஒரு போதும் ஈட்டாத அப்படிப்பட்ட அமேசன் கம்பெனி 2 லிருந்து 1000 புள்ளிகளுக்கு மிகக் குறைந்த நேரத்தில் சென்றது மக்கள் உயர்ந்ததாக உணர்ந்தனர். இதற்கிடையில் அது நொறுங்கி, வைப்புத் தொகை மதிப்பு 25ஐச் சுற்றி வீழ்ந்தது. உடனே, தொழிலாளர்கள் இது வானத்தில் பனியாரம் போன்றது மற்றும் தங்களது இழப்பீடு நல்ல கூலிகளைப் பொறுத்திருக்கும் என்று உணர்ந்தனர். இது தொழிலாளர் வர்க்கத்தின் மிகப் பாரம்பரிய பகுதிகளுடன் தொடர்புடைய நனவின் வடிவங்களாக வெளிப்படலை உற்பத்தி செய்தது.

தகவல் துறை தொழிலாளர்கள், தொழில்நுட்பத் தொழிலாளர்கள் தொழிலாள வர்க்கத்தின் புதிய பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். உலகம் முழுவதும் நாம் பார்த்துக் கொண்டிருப்பது பாட்டாளி வர்க்கத்தின் பரந்த விரிவாக்கமாகும் சிறப்பான அர்த்தத்தில். தற்போதைய சமூகக் கட்டமைப்பின் மற்றொரு தீர்க்கமான நோக்கு இடைமட்ட அடுக்கினரின்-நடுத்தர வர்க்கத்தினரின் சீரழிவாகும். நடுத்தர வர்க்கத்தினது பொருளாதார முக்கியத்துவம் தொடர்ந்து சரிகிறது. அதனால் இனியும் ஒரு சமூக இடைத்தட்டுக்கான போதுமான அடிப்படையை வழங்க முடியாது. இதன் மேல் தான் ஜனநாயக வடிவங்கள் வசதியாக நிற்கின்றன. இதன் அனைத்து விளைபயன்களும் சமூகம் தீவிரமாக துருவமுனைப் படுத்தப் பட்டுள்ளது என்பதாகும்.

மீண்டும் நாம் மையப் பிரச்சினைக்குத் திரும்பி வருவோம். தேர்தல்களின் வியப்பூட்டும் பண்பாக்கம் எப்போதும் சமுதாயத்தின் புறநிலை பற்றி அவை வெளிப்படுத்துவதிலிருந்து பெறப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், தேர்தல் நடைபெற்றால், மக்கள் ஒன்று நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கையில் வேறொன்று நடக்கிறது. ஏன் இது நடக்கிறது என்று விளக்குவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். அமெரிக்காவில் இந்த நம்ப முடியாத விளைவை உண்டு பண்ணிய, சமுதாயத்துக்குள்ளே உள்ள புறச்சூழ்நிலைகள் யாவை?

இதனைக் கண்டுபிடிக்க அமெரிக்க சமூக அமைப்புக்கு, வர்க்கக் கட்டமைப்புக்கு திரும்புவது அவசியமானது. அது அபரிமிதமான செல்வத்தை உடைமையாகக் கொண்டதற்கும் தனது இருப்புக்காக கூலிகளை நம்பி இருக்கும் சமூகத்தின் பரந்த தட்டுக்கும் இடையிலான துருவமுனைப்படல் ஆகும். இது தொழில் நுட்பத்துறை மற்றும் சேவைத்துறை இப்படியானவற்றில் உள்ள தொழிலாளர்களையும் உள்ளடக்கும்.

கேள்வி: தொழில்நுட்பம் பற்றிப் பேசுகையில் உலக அளவில் கலந்துரையாடலைத் திறந்து வைக்க இணையம் என்ன பாத்திரத்தை ஆற்றப்போகிறது?

டேவிட்நோர்த்: இணையத்தின் பாத்திரம் பற்றிய எமது நம்பிக்கையில் நாம் குறிப்பிடத்தக்க அளவு முதலீடு செய்துள்ளோம். இது ஒரு புரட்சிகர ஊடகம். 1997ல் நாங்கள் இது பற்றிக் கலந்துரையாடல்களைத் தொடங்கியபொழுது, புதிய சர்வதேச புரட்சிகர இயக்கத்தின் அபிவிருத்தியை அனுமதிக்கும் புதிய ஊடகம் என்பதை இணையம் நிரூபிக்கும் என்பதை வலியுறுத்தினோம். நாம் இணையத்தில் போடுவது ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பேர்களால் வாசிக்கப்படுகின்றன.

அமெரிக்காவிலும் உலகின் பல பகுதிகளிலும் இணையம் வழியாகத் தொடர்பு கொண்டோரிடம் நாம் ஏற்கனவே கூட்டங்கள் நடத்தி இருக்கிறோம். எவ்வாறாயினும் நாம் தொழிலாள வர்க்கத்திடமிருந்து துண்டிக்கப்பட்டுவிடுவோம் என்னும் அச்சங்களும் அக்கறைகளும் காணப்படவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் பெற்ற அனுபவங்கள் உலக அரசியலில் உலக சோசலிச வலைத் தளம் ஒரு காரணி என்று திறமையாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்களில் உள்ள மக்கள் உலக சோசலிச வலைத் தளத்தை அறிந்துள்ளார்கள். அது அரசியல் கலந்துரையாடலில் செல்வாக்கு செலுத்தி வருகிறது. சர்வதேச விவாதம் மற்றும் புதிய சோசலிசக் காரியாளர்களை வளர்த்தெடுப்பதில் பங்களிப்புச் செய்வதிலும் அது ஒரு காரணியாக இருக்கிறது. புதிய சோசலிசக் காரியாளர்கள், மிகப் பாரம்பரிய வழிமுறை உட்பட, பல வழிகளில் தொழிலாள வர்க்கத்துக்குள் மார்க்சிச சிந்தனையைக் கொண்டுவருவதில் கருவியாக இருப்பார்கள். ஆகையால், இணையம் மிக முக்கியமாய் அதிக சாதகமாக இருக்கிறது.

கேள்வி: எப்பொழுது அமெரிக்காவில் சர்வஜன வாக்குரிமை ஆரம்பமானது மற்றும் எப்படி இது சாதிக்கப்பட்டது?

டேவிட்நோர்த்: சர்வஜன வாக்குரிமை அமெரிக்க ஐக்கியநாடுகளில் 1920 வரையிலும் நிலைகொண்டிருக்கவில்லை --அரசியல் இணைப்பு, 19வது இணப்பு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியபோது வரையில். 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் போது, சர்வஜன வாக்குரிமைமீது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன மற்றும் சொத்துடைமை தேவைகள் அகற்றப்பட்டன. உளநாட்டு யுத்தத்தின் விளவாக, அங்கு மூன்று பிரதான அரசியல் இணைப்புக்கள் செய்யப்பட்டன --13வது, 14வது மற்றும் 15வது சட்ட இணைப்புக்கள்-- இதனை லிங்கன் "சுதந்திரத்தின் புதுப்பிறப்பு" என்று அழைத்தார்.

வாக்கு அளிப்பதற்கான உரிமையின் அபிவிருத்தி --சர்வஜனவாக்குரிமை-- பரந்த புரட்சிகர போராட்டங்களின் விளைவாகும். சில மட்டங்களில் அந்த உண்மை பற்றிய நனவானது தொழிலாள வர்க்கத்தின் பரந்த பகுதிக்குள் நிலைகொண்டிருக்கிறது. அமெரிக்கத் தொழிலாளர்கள் அதிகம் எதிர் பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் வாக்களிக்கும் உரிமையை எதிர்பார்க்கிறார்கள். அந்த உரிமையைக் கட்டுப்படுத்தும் எந்த முயற்சியும் வெகுஜன எதிர்ப்பைச் சந்திக்கும்.

நிக்பீம்ஸ்: நான் ஒரு கருத்தைச் சேர்க்க விரும்புகிறேன்.19ம் நூற்றாண்டில் சர்வஜன வாக்குரிமையும் ஜனநாயகமும் என்ற புத்தகத்தை அண்மையில் நான் படித்தேன். பெரும் முதலாளித்துவ ஜனநாயக சிந்தனையாளர்கள் --அது டு டோக்கோவில் (De Tocqueville) ஐ மேற்கோள் காட்டியது-- இடித்துத் தள்ளுவதற்கு அழுத்தம் வரும்பொழுது அவை ஜனநாயகமே அல்ல என்று சுட்டிக்காட்டுகிறது. உண்மையில், அவர்கள் போனபாட்டிச வடிவிலான ஆட்சியை விரும்புகின்றனர். இந்த உரிமைதான் எல்லா நாடுகளிலும், அரசியல் போராட்டத்தினூடாக, ஒரு வடிவம் அல்லது மற்றொரு வடிவத்தில் தொழிலாளர்களால் பெறப்பட்டது.

கேள்வி: பெரும்பாலோர் தேர்தலில் வாக்களிக்கவில்லை. தேர்வாளர் கல்லூரி (Electoral College) முறை பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா?

டேவிட் நோர்த்: 51% பேர் அளவுக்கு வாக்களித்துள்ளனர், ஆனால் நீங்கள் பார்த்திருப்பது போல நிறைய எண்ணிக்கையில் அமெரிக்கர்கள் தேர்தலில் அதிகம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒட்டுமொத்த அரசியல் நிகழ்ச்சிப் போக்கிலும் இருந்து அதிக அளவு சமூக அந்நியமாதல் இருக்கிறது. இந்த நெருக்கடியானது தேர்வாளர் கல்லூரி முறையின் சட்டப்பூர்வ தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. காலத்துக்கு ஒவ்வாத ஜனநாயகமற்றதைக் கலைத்துவிடுவதற்குக் கோரி பிரச்சாரத்தை முன்னெடுத்தல் சட்டப்பூர்வமானதாக இருந்த போதிலும், அதன் நீக்கம் அசாதாரண பிரச்சினைகளை முன்வைக்கும். அமெரிக்க அரசியல் அமைப்பு சிறப்பான ஒன்று. சமுதாயத்திற்குள் ஆழமான சமூக வேறுபாடுகள் உள்ளபோது அந்த மாற்றத்தைப் பற்றிய கலந்துரையாடல் இல்லாமல் எப்படி அதை மாற்றுவது? அது இருக்கின்ற கூட்டாட்சி அமைப்பு மற்றும் கூட்டாட்சி அரசியல் சட்டத்தின் செல்தகைமையை கேள்விக்கு உள்ளாக்கும்; தேசிய அரசாங்கத்துக்கும் மாநிலங்களுக்கும் இடையே உள்ள கஷ்டமான சமநிலையை கேள்விக்குள்ளாக்கும்.

உண்மையில் அத்தகைய கலந்துரையாடல் மீண்டும் ஒருமுறை ஒன்றியத்தின் உடைவை முன்வைக்கும் சக்திகளைக் கட்டவிழ்த்துவிடும். மொத்தத்தில் தேர்வாளர் கல்லூரியின் நீக்கம் சல மாநிலங்களின் அரசியல் சட்ட ஷரத்துக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்றால், அவை ஒன்றியத்துடன் இணைந்திருக்க தொடர்ந்து ஒப்புக்கொள்ளுமா? கோர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பாராயின், பிற்போக்கு மாநில நிர்வாகங்களால் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு பணிய மறுப்பதும் அதன் விளைவுகளுள் ஒன்றாக இருக்கும்.

அந்த நிர்வாகங்கள் கூட்டாட்சி அரசியற் சட்டம் மற்றும் கூட்டாட்சி அமைப்பின் அம்சங்களைத் தாக்குவதற்கான வாய்ப்பாக இதனை எடுத்துக்கொள்ளும். அவை விருப்பப்படாத மனித உரிமைகள் போன்றவற்றைத் தாக்க இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும். வாக்களிப்பதற்கான உரிமை, பாரபட்சத்தை அகற்றல் ஆகியன கூட்டாட்சி அரசியல் சட்டத்தினைப் பயன்படுத்தலின் விளைவாகும். நீண்டகாலமாக அவை பல மாநிலங்களுக்குள் மறுக்கப்பட்டு வந்தன. தேர்வாளர் கல்லூரியை மாற்றுவதற்கான அல்லது அகற்றுவதற்கான முயற்சி ஆழமான வேற்றுமைகளை வெளிப்படுத்தும்.

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்திற்கான சட்டபூர்வமான கோரிக்கைகளை எண்ணிப் பார்ப்போமாயினும், நமது கட்சியின் குறிக்கோள் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மிகவும் சரியான வடிவத்தை ஏற்படுத்துவதல்ல என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது இறுதியில் தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான பலத்தினைக் கட்டி எழுப்புவதிலும் அதன் அரசியல் அதிகாரத்தை நிறுவப் போராடுவதிலும்தான் தங்கி நிற்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இது ஒரு சிக்கலான பிரச்சினை ஆகும். இது மிகவும் சிந்தித்து முன்வைக்கப்பட வேண்டியது. விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் மூலம், முதலாளித்துவ ஜனநாயகத்தின் மேலும் சுத்தமானதைப் பெற முடியும் என நான் நம்பவில்லை.

அதன் அர்த்தம் நாம் அதனை அப்படியே விட்டுவிடுவது அல்லது புறக்கணிப்பது என்பது அல்ல. ஆனால் அதனை ஏற்றுக் கொண்டாலும், ஒருவேளை நாம் அதற்கு ஆதரவளித்தாலும்கூட, அது மிகவும் விமர்சன ரீதியிலான நோக்காகும். அது தொழிலாள வர்க்கத்தின் பரந்த சமூகக் கோரிக்கைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளின் உள்ளடக்கத்துக்குள் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கேள்வி: இந்த நெருக்கடிக்கு AFL-CIO அதிகாரத்துவத்திடமிருந்து ஏதாவது எதிர்ச்செயல் நிகழ்ந்திருக்கிறதா?

டேவிட் நோர்த்: நான் நினைக்கிறேன் அது எங்கேயோ குறட்டை ஒலி கேட்பதாக இருந்து வருகிறது. இல்லை, எந்தவிதமான எதிர் வினையும் அங்கில்லை --அல்லது குறைந்தபட்சம் முக்கியமான கருத்து என்று தகுதியானது எதுவுமில்லை.AFL-CIO தலைவர் ஸ்வீனி, கோருடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என்று செய்திகள் உண்டு. மற்றும் அவர் உறவுகொண்டிருக்கிறார் என நான் உறுதியாகச் சொல்வேன். ஆனால் தொழிலாள வர்க்கத்தை சுதந்திரமாய் அணிதிரட்டும் பொறுப்பு பற்றி AFL-CIO க்குள் எந்தப் பேச்சும் இருக்கிறதா? தேர்தல் திருடப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தாம் வெறுமனே சும்மாயிருக்க முடியாது என்று குடியரசுக் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுக்கும் அறிக்கை ஏதாவது அதனிடமிருந்து வந்திருக்கிறதா? இல்லை. அதுபோன்ற எதுவும் இல்லை.

கேள்வி: புளோரிடா மாநில செயலாளரின் அதிகாரம் பற்றியும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து தேர்வாளர்களை நியமிக்க ஏற்பாடு செய்யும் நகர்வுகள் பற்றியும் நான் கேட்க விரும்புகிறேன்.

டேவிட் நோர்த்: புளோரிடா செயலாளர் செல்வி கேதரின் ஹாரிஸ் வலதுசாரி கோடீசுவரர் மற்றும் குடியரசுக்கட்சி அரசியலில் மிகத் தீவிரமானவர். அவர் அங்கு இன்னும் மறு வாக்கெண்ணிக்கை பற்றிய விஷயம் இருந்தது என்ற உண்மையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தேர்தலை சான்றளிக்கப் (certify) போவதாக அறிவித்தார். அச் சான்றளிப்பு (certification) தாமே, கோருக்கு பெரிதும் பாதிக்கக்கூடிய சட்டரீதியாகக் குறிப்பாகச் சூட்டப்பட்டவை ஆகும். குறிப்பிட்ட நாளில், அவரது பொருந்துமாறு அறிதலை முறையாகப் பயன்படுத்தி சான்றளிக்க அவருக்கு உரிமை இருக்கிறது என்று சட்டஷரத்து கூறுகிறது. பொருந்துமாறு அறிதலை முழு சூழ்நிலையையும் கணக்கில் எடுத்து ஆராய்ந்த தீர்ப்பு என வரையறுத்தால், அவர் தெளிவாகவே பொருந்துமாறு அறிதலைப் பயன் படுத்தவில்லை. அவர் அந்த வகையானது எதையும் செய்யவில்லை.

ஹாரிஸ், தேர்தல் என்னென்ன நாளில் சான்றளிக்கப்படவேண்டும் என்ற சட்ட விதியின்படி, தான் செயல்பட்டுக் கொண்டிருந்ததாகக் கூறினார். புளோரிடா உச்ச நீதிமன்றம், அவரது அதிகாரத்திற்கும் மேலாகச் சென்று அவர் சான்றளிப்பதைக் கட்டுப்படுத்தியது. பிறகு அவர், புளோரிடா உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட எவ்வளவு சீக்கிரம் கூடுமோ அந்தத் தேதியை சான்றளித்தார். மீண்டும் அவர் மட்டுமீறிய முயற்சியால் மூக்குடைபட்டார். இவை அனைத்தும் அரசியல் நிகழ்ச்சிப்போக்கின் பகுதியாகும்.

கேள்வி: அதைச் செய்வதற்கு அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

டேவிட் நோர்த்: அவருக்கு குறிப்பிட்ட அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினாரா எனபதுதான் பிரச்சினை. புளோரிடா உச்ச நீதிமன்றம், இல்லை, அவர் செய்யவில்லை என்றது. ஜார்ஜ் புஷ்-ன் உடனடி நலன்களுக்கு சேவை செய்யும், சட்ட விதியின் மிகவும் பிற்போக்கான விளக்கத்தை அவர் பயன்படுத்தினார்.

கேள்வி: புஷ் அதிகாரத்துக்கு வந்தால் இராணுவ ஆத்திரமூட்டல்கள் அதிகரிக்கலாம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஐரோப்பா, ஜப்பான் மற்றும் சீனா உடனான உறவுகளின் மீது இந்த ஆத்திரமூட்டல்கள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

டேவிட் நோர்த்: அவை நன்றாக அமையும் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. சிறப்பாக நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் இந்த ஆத்திரமூட்டல்களின் இலக்குகளாக இருக்கக்கூடும். பால்கன் யுத்தத்தில் அமெரிக்க இராணுவ இலக்குகள் பற்றியவை அதிகம் பதட்டம் மிக்கவையாக இருந்ததை நாம் பார்த்தோம். யூகோஸ்லாவியாவில் சீனத்தூதரகத்தில் குண்டு போடப்பட்டது தெளிவாகவே ஆத்திரமூட்டலாகத்தான் இருந்தது. சீனாவுடனான கிளிண்டன் நிர்வாகத்தின் உறவினை எதிர்க்கும் இராணுவத்தின் சில பகுதிகள் அங்கு இருந்தன. போதுமான அளவு விரிவாக ஆய்வு செய்யப்படாத அல்லது விவாதிக்கப்படாத விஷயங்களுள் இதுவும் ஒன்று. தெளிவாகவே, அமெரிக்க அரசாங்கம் பற்றி மிகப் பெருமளவு அமைதி இழக்கும் நிலை ஏற்படப்போகிறது. அதாவது அது குறுகியகால நலன்களால் உந்தித்தள்ளப்படுகிறது மற்றும் பழைய சர்வதேச அமைப்புக்களைப் பாதுகாத்து வைத்திருப்பதில் மிகக் குறைவான அக்கறையையே அது கொண்டுள்ளது.

புஷ்ஷைச் சுற்றிலும் ஐக்கிய நாடுகள் அவையைக் கலைப்பதற்கு விரும்பும் மற்றும் உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேற விரும்பும் பலர் இருக்கின்றனர். இது மிகத் தொலைநோக்கு கொண்ட அல்லது முன்னேறிய அமெரிக்க ஆளும் தட்டு அல்ல. சர்வதேச உறவுகளைப் பொருத்தவரை இது எதை அர்த்தப்படுத்தப் போகிறது என்பது பற்றிய அமைதி இழந்த தன்மை அங்கு இருக்க வேண்டும்.

ஐரோப்பியர்கள் அமெரிக்க இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து தங்களைத் துண்டித்துக்கொள்ளவும் தங்களது சொந்தப் படைகளை அபிவிருத்தி செய்யவும் விரும்புவதாக நான் சந்தேகப்படுகிறேன். சீனர்கள் உட்பட ஏனையோர், தங்களைப் பாதுகாக்கச் சிறந்த வழிகளைத் தேடுகிறார்கள். இராணுவச் செலவில் பெரும் அதிகரிப்பு இருக்கப்போகிறது மற்றும் அதுதாமே இந்தச் சூழ்நிலையில் ஒரு காரணியாக இருக்கப்போகிறது.

இறுதியாக, அமெரிக்காவில் தற்போதைய சூழ்நிலையை விளக்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியமைக்காக உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவை நீங்கள் உலக சோசலிச வலைத் தளம் ஊடாகக் கவனித்து வரும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளாகும். அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்துக்குள் இந்த ஆய்வின் அறிவைப் பரப்புதற்கு எல்லாவற்றையும் செய்தாக வேண்டும்.