World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

US and Britain isolated over Baghdad raid

பாக்தாத் மீதான விமானத்தாக்குதலில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் தனிமைப்பட்டன

By Chris Marsden
20 February 2001

Use this version to print

வெள்ளிக்கிழமை அன்று பாக்தாத்துக்கு எதிரான அமெரிக்க - பிரித்தானிய கூட்டு விமானத் தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்களால் விமர்சிக்கப்பட்டன. 1991 வளைகுடாப் போருக்குப் பிறகு ஈராக் மீதான பொருளாதாரத் தடையைக் கட்டாயப்படுத்தி ஏற்கும்படி செய்ய, தேவையான பலத்தைக் காட்டுவதற்கு விமானத்தாக்குதல் ஒரு அங்கீகாரம் எனபதைக் காட்டிலும், இரண்டு நாடுகளாலும் எடுக்கப்பட்ட தன்னிச்சையான நடவடிக்கை சர்வதேச அதிருப்தியைத் தூண்டிவிட்டதோடு, தோல்வி மற்றும் எதிரான விளைவாய் காணக் கூடியதாக இருக்கிறது

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய தவிர ஏனைய நிரந்தர உறுப்பு நாடுகள் இந்நடவடிக்கையைக் கண்டனம் செய்தன. ரஷ்யா இதனை "தூண்டுதலற்று எழுகின்ற நடவடிக்கை" என்றும் "அது ஐக்கிய நாடுகளது தீர்மானத்திற்கும் மற்றைய சர்வதேச விதிமுறைகளுக்கும் எதிரானது என்றும் மத்திய கிழக்கில் ஏற்கனவே வெடிக்கும் தன்மையானதாய் உள்ள சூழலை தூண்டிவிடுகிறது" என்றும் கண்டனம் செய்தது.

ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழ்சபையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் டிமிட்ரி ரோகோசின் (Dmitry Rogozin), புஷ் நிர்வாகத்தின் வம்புச்சண்டைக்கு இழுக்கும் இராணுவக் கொள்கை மற்றும் அதன் தேசிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றால் முன்நிறுத்தப்பட்டுள்ள ஆபத்து தொடர்பாக ஐரோப்பிய அரசுகளுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கை செய்தார். "சக்திமிக்க வெளிநாடு ஒன்று, தீங்கு விளைவிக்காத ஒன்று என தான் கருதும் ஒன்றைச் செய்யக் கூடியது பற்றி ஐரோப்பா கவனமாகச் சிந்திக்க வேண்டும்" என்றார். "அமெரிக்க குண்டு இனி யார்மீது மற்றும் என்ன காரணத்திற்காக?" என்றார்.

ஐக்கிய நாடுகள் அவைக்கான சீனப்பிரதிநிதி, "பாதுகாப்பு அவையின் அனுமதியின்றி, எந்தச் சூழ்நிலையிலும் எந்த ஒரு நாட்டிற்கும் எதிராக ஐக்கியநாடுகள் அவையின் உறுப்பினர் நாட்டால் செய்யப்படும் ஆயுதத் தலையீட்டை" சீனா எதிர்க்கிறது என்றார். "அமெரிக்க மற்றும் பிரித்தானிய விமானங்களால் திரும்பத் திரும்ப நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்கள் மீதான எமது மன உளைவையும் புரிந்து கொள்ள முடியாமையையும் நாங்கள் அடிக்கடி தெரியப்படுத்தி இருக்கிறோம்" என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் கூறியது.

குறிப்பாக ரஷ்யாவும் பிரான்சும் ஈராக் மீதான விஷயத்தில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் வரவர கடுமையாய் மோதி வருகின்றன. ஐக்கிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளைத் தொடர்வதற்கு இந்நாடுகளின் எதிர்ப்பானது, மேற்கத்திய தலையீடு அல்லது இராணுவ வாதத்திற்கு எந்தவிதமான கொள்கை சார்ந்த எதிர்ப்பைக் காட்டிலும், வளைகுடாவில் அவர்களின் சொந்த மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றது. பிரான்ஸ் ரஷ்யா இரண்டும் 1990 களின் ஆரம்பத்தில் வளைகுடா யுத்தத்தையும் பொருளாதாரத்தடைகள் வலிந்து ஏற்க வைக்கப்பட்டதையும் ஆதரித்தன. அவை ஈராக் எண்ணெய்த் தொழிற்துறையுடன் இணைப்புக்களை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், வாஷிங்டன் மற்றும் லண்டனது கடுமையான கொள்கைகளால் வெறுப்படைந்துள்ளன.

வளைகுடா யுத்தத்தின் பொழுது அமெரிக்காவின் பிரதான கூட்டாளிகள் உட்பட பெரும்பாலான அரபு ஆட்சிகள் இக்குண்டுவீச்சை கண்டனம் செய்தன. "ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானங்களுக்கும் சர்வதேச விதிமுறைகளுக்கும் எதிராகச் செல்லும் குண்டுவீச்சை நியாயப்படுத்த முடியாது" என்று அரபு லீக் அறிக்கை கூறியது. அமெரிக்காவின் பிரதான அரபு கூட்டாளியான எகிப்து சனிக்கிழமை அன்று விடுத்த அறிக்கையில், விமானத்தாக்குதலை "நாம் ஏற்றுக் கொள்ளமுடியாத அல்லது காரணங்களைப் புரிந்து கொள்ளமுடியாத பாரதூரமான எதிர்மறை நடவடிக்கை மற்றும் அது ஈராக்கின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் எதிராகச் செல்கிறது." என்று கூறியது. மத்திய கிழக்கில் முக்கிய பாத்திரம் வகிக்கும் மற்றொரு நாடான சிரியா, இத்தாக்குதல்கள் புதிய புஷ் நிர்வாகத்தினை மோசமாக பிரதிபலிக்கிறது எனக் கூறியது.

இன்னும் முக்கியமாக நேட்டோ உறுப்பினரான துருக்கி, இம்முறை தனது தளங்கள் பயன்படுத்தப் படவில்லை எனவும் தாக்குதல் பற்றி தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் கூறியது. ஈராக்கின் வடபகுதியான தடை செய்யப்பட்ட வான் பிராந்தியத்தைக் கண்காணிக்க அமெரிக்க மற்றும் பிரித்தானிய விமானங்கள் துருக்கியிலிருந்துதான் அடிக்கடி புறப்பட்டுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. ''ஈராக்கிற்கு எதிரான அத்தகைய நடவடிக்கைக்கு களமாக உணரத்தலைப்பட்டது வருத்தத்திற்குரியது, மற்றும் பொதுமக்களும் அதேபோல இராணுவ இலக்குகளும் பாதிக்கப்பட்டன" என்று துருக்கி பிரதமர் புளெண்ட் எசெவிட் (Bulent Ecevit) கூறினார். மத்திய கிழக்கு முழுவதும் இடம் பெற்ற ஆர்ப்பாட்டங்கள் அரபு ஆட்சியாளர்களுக்கு கடும் அரசியல் சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.

விமானத்தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்பு பாலஸ்தீனியர்கள் மத்தியில் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளது. ஆயுதச் சோதனைகள் தொடர்பான ஐ.நா தீர்மானங்களை கொடுங்கோலாட்சி அவமதிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கை என விமானத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் புஷ் மற்றும் பிளேயரின் அரசாங்கங்களின் பைத்தியக்காரத்தனத்தால் அரபுகளின் கோபம் தூண்டி விடப்பட்டது. 1982ல் ஷப்ரா-ஷட்டிலா பாலஸ்தீனியர் படுகொலைகளின் சூத்திரதாரியான ஏரியல் ஷெரோன் (Ariel Sharon), இஸ்ரேலின் பிரதமராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு இரண்டு வாரங்கள்கூட ஆகவில்லை. ஐ.நா தலையீட்டிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு குரோதம் மற்றும் மேற்குக் கரையிலும் காசா பாலைவனத்திலும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளை உக்கிரப்படுத்த உறுதி கொள்ளல் என்ற அடிப்படையில் அவர் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறார். 1967 யுத்தத்தின் பொழுது கைப்பற்றப்பட்ட எல்லைப் பகுதிகளில் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பேணும் பொருட்டு இஸ்ரேல் தொடர்ச்சியாக ஐ.நா தீர்மானங்களை மீறி வருகிறது.

கடந்த வாரம் இஸ்ரேலிய பாதுகாப்புப்படை யாசிர் அரபாத்தின் மெய்க் காவலர்களுள் ஒருவரைக் கொன்றது. கடந்த செப்டம்பரில் தொடங்கிய பாலஸ்தீனிய இண்டிபடா (intifada எழுச்சி) க்குப் பின்னர் நடைபெற்ற அத்தகைய படுகொலைகளின் 20வது அண்மைய நிகழ்ச்சி இதுவாகும். இந்தப் படுகொலையை அங்கீகாரம் செய்வதில் இஸ்ரேலிய தொழிற்கட்சியும் லிக்குட் கட்சியும் ஒன்றுபட்டு நின்றன. அமெரிக்கா மிக ஒப்புக்காக மட்டும் எதிர்ப்பைத் தெரிவித்தது. மத்திய கிழக்கில் அரச பயங்கரவாதத்தையும் படுகொலைகளையும் வெளியுறவுக் கொள்கைக்கான சாதனமாக வெளிப்படையாகப் பயன்படுத்தும் ஒரு அரசு இஸ்ரேல் என்பது உண்மை. இஸ்ரேல் ஜனநாயகத்திற்கும் அமைதிக்குமான தளமாக இருக்கும் என இன்னும் அமெரிக்கா பறைசாற்றுகிறது, அதேவேளை ஈராக் தொடர்பாக பூமி அழிப்புக் கொள்கையை மேற்கொண்டு வருகிறது. ஈராக் மீது அமெரிக்க தலைமையிலான தாக்குதலை அதிகாரப்பூர்வமாய் நியாயப்படுத்துதலில் உள்ள வெளிப்படையான முரண்பாடுகள், உண்மையான நோக்கங்கள் எண்ணெய் வளமிக்க வளைகுடாவில் அமெரிக்க பொருளாதார மற்றும் மூலோபாய இலக்குகளுடன் கட்டுண்டிருக்கிறது என்ற உண்மையைக் கோடிட்டுக் காட்டுகிறது.

இஸ்ரேல், பாக்தாத் மீதான குண்டுவீச்சை வரவேற்றமை, பாலஸ்தீனியருக்கு எதிரான அதனுடைய கடும் போக்கிற்கு அமெரிக்க ஆதரவு மற்றும் அதில் தலையிடுவது தொடர்பாக ஈராக் மற்றும் ஏனைய அரபு ஆட்சியாளர்களுக்கு எதிரான எச்சரிக்கைக்கான அறிகுறி ஆகும். திங்களன்று, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஐந்து நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டன. அதில் ஈராக்கின் ஸ்குட் (scud missiles) ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்றால் அதற்கெதிராக பேட்ரியாட் (Patriot missiles) ஏவுகணைகளை ஏவுதல் போன்ற பயிற்சிகளும் சம்பந்தப்பட்டிருந்தன.

பிரித்தானியாவில், விமானத்தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்பு ஆளும் தொழிற்கட்சிக்குள்ளே வெளிப்பட்டது மற்றும் வழக்கமாய் விமர்சிக்கும் டோனி பென், அலைஸ் மகான் மற்றும் டாம் டால்வெல் போன்ற கட்சியின் இடது விமர்சகர்களுக்குள் மட்டுப்படுத்தப்படவில்லை. இந்நடவடிக்கைக்கு பிரதமர் பிளேயரின் விமர்சனமற்ற ஆதரவு பற்றி பிரச்சினை எழுப்பியவர்களுள் தொழிற்கட்சியின் பாராளுமன்றத் தலைவர் கிளைவ் சோலி, போக்குவரத்து மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பில் மோரிஸ் மற்றும் முன்னாள் தொழிற்கட்சித் தலைவர் நெய்ல் கின்னக்கின் மணைவியும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருமான க்ளெனிஸ் கின்னக் ஆகியோர் அடங்குவர். எதிர்க் கட்சியினரான மிதவாத ஜனநாயகக் கட்சியினரும்கூட அந்நடவடிக்கை பற்றி கேள்வி எழுப்பினர்.

அமெரிக்காவுக்கு இராணுவ ஆதரவு தருவதற்கான பிளேயரின் நோக்கம் பிரித்தானிய- அமெரிக்க உறவுகளுக்கான "அடிப்படைக் கூட்டைக் கட்டுதலை" வழங்குவது என்று அரசாங்க வட்டாரங்கள் தெளிவுபடுத்தின. வாஷிங்டனில் குடியரசுக் கட்சியினர் நிர்வாகத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான "விஷேச உறவு" என்று அழைக்கப்படுவதை வலுப்படுத்துவதில் பிளேயர் ஆர்வமாக இருந்தார். செய்தித் தொடர்பு சாதனங்களின் சில பகுதிகள் பிளேயரின் அரசியல் முன்னுரிமைகள் பற்றி கண்டிக்கிற விதமாய் இருந்தன. ஆளும் வர்க்கத்தினுள்ளே உள்ள ஒரு தட்டு, அமெரிக்கா தொடர்பான பிளேயரின் நோக்குநிலை பிரித்தானிய நலன்களுக்கு எதிராகச் செல்கிறது என நம்புகின்றது மற்றும் அவர் அதிக ஐரோப்பிய சார்பு நிலையை மேற்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகின்றது.

இண்டிபெண்டண்ட் (Independent) பத்திரிகை பின்வருமாறு புகார் செய்தது, "பிரதமர் சர்வதேசக் கொள்கையில் அவரது யதார்த்தமில்லாத 'மூன்றாம் வழி' யை அவசரமாக மறு பரிசீலனை செய்யவேண்டும். அது எப்படியாவது பிரித்தானியாவை ஐரோப்பாவின் மையத்தில் வைக்கவும் அமெரிக்காவுடன் விஷேச உறவை வைத்திருக்கவும் நாடுகிறது. ஈராக் மீதான ஏவுகணைத் தாக்குதலை ஏனைய ஐரோப்பிய நாடுகள் முன்னர் இராணுவத் தலையீடுகளை எதிர்த்தது போலவே எதிர்த்தன. கார்டியன் பத்திரிகை மிகவும் கடுமையான தொனியில், தாக்குதல்கள் புஷ் "ஆபத்தானவர்" என நிரூபிக்கிறது என்றது. "ஆணவத்துடன் அதிகாரம் செலுத்தும் இந்த அமெரிக்க பாதுகாப்பு நிகழ்ச்சி நிரல், பிரித்தானியாவின் நலன்களுக்கும் உதவப் போவதில்லை, பிரித்தானியாவின் ஐரோப்பிய பங்காளிகளுக்கும் உதவப் போவதில்லை" என அவை எச்சரித்தன.

பிரித்தானியாவின் வர்த்தக நிறுவனங்களின் நிலைப்பாட்டிலிருந்தும் நிதி தொடர்பான கருத்துப்பாட்டிலிருந்தும் கூட, ஈராக் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு தொடர்ச்சியான ஆதரவிற்கு எதிராக விவாதம் எழுந்துள்ளது. அந்த ஆதரவானது, ஈராக்கின் இலாபம் மிக்க எண்ணெய் வர்த்தகத்தினை தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளும் பொருட்டு பொருளாதாரத் தடைகளை அலட்சியம் செய்யும் மற்றைய ஐரோப்பிய நாடுகளை விட பிரித்தானியாவை பின்தங்கி இருக்கும் நிலைக்கு விட்டுள்ளது என விவாதிக்கின்றது.