World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

US has highest childhood poverty rate of industrialized countries

தொழில்துறை நாடுகளின் குழந்தைப்பருவ வறுமை வீதம் ஐக்கிய அமெரிக்காவில் மிக அதிகம்

By Paul Scherrer
14 March 2001

Use this version to print

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான (OECD) அமைப்பினைக் கொண்ட நாடுகளுள்ளே அமெரிக்கா குழந்தை வறுமை வீதத்தில் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் ஐந்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை வறுமையில் வாழ்கிறது. ஒரு கோடியே இருபது லட்சம் (12 மில்லியன்) அமெரிக்க குழந்தைகள் வறுமையில் வாழ்கிறார்கள்.

இந்தக் கண்டுபிடிப்புக்கள் நவீன தேசங்களில் குழந்தை நலம், குழந்தை வறுமை மற்றும் குழந்தை கொள்கை (Child Well-Being, Child Poverty and Child Policy in Modern Nations) என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப் புத்தகம் மூன்று கண்டங்களில் இருந்து 45 ஆசிரியர்களைக் கொண்டதும் லுக்சம்பேர்க் வருமான ஆய்வு கழகத்தின் வெளியீடும் ஆகும். அமெரிக்க மாநிலங்களில் தனிநபருக்கான கணக்கு வரிகள் மற்றும் சலுகைகளைக் கணக்கிட குழந்தை வறுமை மட்டத்தைக் கணக்கில் எடுப்பது இதுதான் முதல் தடவை ஆகும். இது அமெரிக்க மாநிலங்களுக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான நேரடி ஒப்பீடுகளுக்கு வாய்ப்பளிக்கிறது.

நியூயோர்க் மாநிலம் அதிக அளவில் குழந்தை வறுமை வீதத்தைக் கொண்டுள்ளது. அதன் 26.3% குழந்தைகள் வறுமையில் வாழ்கின்றனர். கலிபோர்னியா 25.7% உடன் இரண்டாவது தரத்தில் உள்ளது. டெக்சாஸ், புளோரிடா, மசாசூசெட்ஸ் மற்றும் இல்லினாய்ஸ் உட்பட 14 மாநிலங்களில் 20 சதவீதம் குழந்தைப்பருவ வறுமை உள்ளது.

சிராக்குஸ் (Syracuse) பல்கலைக்கழகத்தில் பொதுஆய்வின் பேராசிரியர் மற்றும் இப் புத்தகத்தின் இணை ஆசிரியருமான டிமோதி ஸ்மீடிங் "இந்த எண்கள் திடுக்கிட வைப்பதாய் மற்றும் கவலை தரத்தக்கதாய் இருக்கின்றன" என்றார். "இருபதாம் நூற்றாண்டு முழுவதும் தொழில்துறை தாடுகளின் வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றங்களும் உயர்வீத பொருளாதார வளர்ச்சிகளும் இருந்தபோதும், நமது குழந்தைகளில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் சாதாரண உடல் நலம் மற்றும் வளர்ச்சி ஆபத்தில் இருக்கும் அளவுக்கு மிகவும் ஏழ்மையான குடும்பங்களில் வாழ்கின்றனர்.

பெரும்பாலான ஏழைக் குழந்தைகள் குறைந்த பட்சம் முழுநேர அல்லது பகுதிநேர வேலை செய்யும் ஒரு பெற்றோரைக் கொண்டுள்ளனர். "அதனை எதிர் நோக்கட்டும். குறைந்தபட்சக்கூலி அல்லது குறைந்த கூலி வேலை எவரையும் வறுமையிலிருந்து விடுவிக்கப் போவதில்லை", என்று ஜூலியன் பால்மர் கூறுகிறார். இவர் நியூயோர்க் மாநகரில் அமைந்துள்ள (NCCP) வறுமையில் உள்ள குழந்தைகளுக்கான தேசிய மையத்தில் செய்தித் தொடர்பு மற்றும் வெளியீட்டுக்கான இயக்குநராக உள்ளார். குறைந்தபட்சக் கூலியில் பகுதிநேர வேலையில் வாழ்வது இருக்கட்டும், மணிக்கு 8 அல்லது 9 டாலர்கள் சம்பாதித்தால்கூட, குழந்தைகளுடன் வாழும் ஒற்றைப் பெண்மணியால் வீட்டு வாடகை, குழந்தை பராமரிப்பு, எரிவாயு, தொலைபேசி, மின் கட்டணங்கள் மற்றும் உணவுக்கு செலவழிக்க முடியாது" என அவர் கூறினார்.

பால்மர் தொடர்ந்து கூறுகையில், "பங்கு முதல் சந்தை ஏறிப் போய்விட்டது, வேலையின்மை குளைந்துள்ளது, ஆனால் குழந்தைப்பருவ வறுமை ஒரு தலைமுறைக்கு முன்னர் இருந்ததுபோல் இன்னும் கடுமையாக இருக்கிறது. உலகிலேயே எங்கும் இல்லாத அளவு பெரும் சமத்துவமின்மையை அமெரிக்கா முழுமையும் குறிப்பாக நியூயோர்க் கொண்டிருக்கிறது. நியூயோர்க், உலகிலே செல்வம் மிக்க சிலரைக் கொண்டுள்ளது, இருப்பினும் அங்கு பரந்த ஏழ்மை உள்ளது. ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஐந்தாவது அவனியூ 125வது தெருவிலிருந்து 90வது தெருவரை நடந்தால் முழு அளவையும் காணலாம் ."

லிசா எல்லிபி என்பவர் குழந்தைப்பருவ வறுமை 18.4 சதவீதம் உள்ள பென்சில்வேனியாவில் வாழ்கிறார். அவர் தனது 15 மாதமே நிரம்பிய குழந்தையுடன் கூடாரத்தில் வாழ்கிறார். ஆனால் அங்கு உணவு வழங்கப்படுவதில்லை. அவர் தனக்காகவும் குழந்தைக்காகவும் உணவு எடுக்க பென்சில்வேனியா, மக்கீஸ்போர்ட் சூப் கிச்சனுக்கு வந்தபோது, உலக சோசலிச வலைத்தளம் லிசாவடன் பேசியது. ஆண்டுக்கு 7000 டாலர்களுக்கும் குறைவாக வருமானத்தில் வாழ்கின்ற, பெரும்பாலும் ஒற்றைப் பெண்ணால் தலைமை தாங்கப்படும் குடும்பங்களில் உள்ள 40 லட்சம் அமெரிக்கக் குழந்தைகளுள் லிசாவின் மகளும் ஒருவர்.

லிசா, உலக சோசலிச வலைத்தளத்திடம் கூறினார், "எனக்கு வேலை இல்லை அல்லது நிலையான வருமானம் இல்லை. அவர்கள் கூப்பிடும்போது நாள் கூலிக்கு வேலை செய்கிறேன். எமது உணவு முத்திரைகள் இரண்டு வாரங்களுக்கே போதுமானது. மீதி நேரங்களை சூப் கிச்சனுக்கு, உணவு வங்கிக்கு அல்லது எங்கெங்கு உணவு கிடைக்குமோ அங்கு போவதற்கு நாங்கள் செலவழிக்கிறோம்."

"எனக்கிருக்கும் ஒரே வேலை அனுபவம் பன்ரொட்டியைப் (Hamurger) புரட்டிப்போடுவதுதான், ஆகையால் ஒரு நல்லவேலையை நான் எப்படிப் பெறுவது? நல்ல சம்பளம் உள்ள வேலை கிடைக்க பலருக்குவேலைத் தேர்ச்சிகள் இல்லை. நான் குறைந்தபட்சக் கூலியைப் பெற முடியாது. நான் வீட்டிற்கு மாதம் 400 டலர்கள் கொண்டுவருவேன். நீங்கள் குறைந்தபட்ச கூலியில் செலவுகளைச் சமாளிக்க முடியாது. வீட்டுவாடகை மாதம் 350டாலர் ஆகிறது. சாப்பாட்டுக்கே இன்னும் பணம் தேவைப்படும்போது வாடகையையும் மற்ற கட்டணங்களையும் எப்படி நீங்கள் செலுத்த முடியும்? உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால், முழுநேர குழந்தை பராமரிப்புக்கு நீங்கள் சம்பாதிப்பதைவிட அதிகமாக செலவாகும்."

லிசாவுக்கு, நலபுரிசேவை உதவி வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டுள்ளது ஏனெனில் அவர் வாரம் 40 மணி நேர பயிற்சியை எடுக்கத்தவறிவிட்டார். "கடைசியாக பள்ளிக்கூடமும் மூடப்பட்டது. 40 மணி நேரங்களை முடிப்பதற்காக எங்களை சனிக்கிழமை வகுப்பிற்கு வருமாறு அவர்கள் கூறினர். குழந்தையைக் கவனித்துக் கொள்ள எனக்கு எவரும் கிடைக்கவில்லை அதனால் அவர்கள் எனக்கு நலபுரி சேவையைத் துண்டித்து விட்டனர்".

லிசா கடைக்கோடி வறுமையில் வாழும் ஒருவராக வகைப்படுத்தப்படுகிறார், அதன் அர்த்தம் அவர் அதிகாரப்பூர்வ வறுமையான வருமான மட்டத்தின் அரைப்பகுதிக்கும் குறைவான வருமானத்தில் வாழ்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நலன்புரி அலுவலர்கள் கடுமையான நேர வரையறையை அமல்படுத்தியதால் நலன்புரி பட்டியல் சற்றே பாதியாகக் குறைக்கப்பட்டது. அதைப் பெறுபவர்கள் குறைந்த சம்பளம் தரும் வேலையை எடுக்குமாறு அல்லது நீக்கப்படுவதை எதிர் கொள்ளுமாறு நிர்பந்திக்கப் பட்டனர்.

லிசா தொடர்ந்தார், "நான் வசிக்கும் மூலையில் போதைப் பொருள் விற்போர், சூதாட்டம் நடத்துவோர் மற்றும் கடன் கொடுக்கும் சுறாக்கள் வசிக்கின்றன. நான் வெளியேவரும் போதெல்லாம் கவலையாக இருக்கிறது. பகல் நேரக் குழந்தை பராமரிப்புக்கு என்னால் செலவழிக்கமுடியாது, ஆகையால் நான் பகல் வேலை அலுவலகத்துக்கு செல்லும்போது, நான் எனது குழந்தையைவேறு ஆட்களிடம் விட்டுச் செல்ல வேண்டிஇருக்கிறது. வேறு என்ன செய்வது? அந்த இடம் மட்டும்தான் என்னை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறது.

"நான் தற்காலிக வேலை அலுவலகத்துக்கு காலை 5:30 அல்லது 6:00 மணிக்கு செல்வேன். நான் குறிப்பிட்ட வேலைக்குச் செல்ல விரும்புகிறேனா இல்லையா என அவர்கள் கேட்பதற்கு 9:30 அல்லது 10:00 மணி வரை காத்திருக்கவேண்டும்" என லிசா கூறினார். "பின்னர் அது மணிக்கு 5 டாலர்கள் மட்டுமே கொடுக்கும் என அவர்கள் கூறுவர். ஒருவேளை வேலைகிடைத்தாலும், நீங்கள ஏற்கனவே முழுநாளையும் வீணாக்கி விட்டிருப்பீர்கள். நீங்கள் முழுநாளும் வேலை செய்தாலும் அது வெறும் 30 டாலர்களில்தான் முடியும்."

குழந்தைப்பருவ வறுமையின் விளைவு சரியாக எழுதப்பட்டிருக்கிறது. வறுமையில் வளரும் குழந்தைகள் நிறைய உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாகின்றன, வன்முறைக்கு ஆளாகும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றன, மோசமான பள்ளிகளுக்கு செல்கின்றன, பெரும்பாலும் சிறைக்குச் செல்வதில்போய் முடிகின்றன. அவர்களில் குறைவானவர்களுக்கே வேலை கிடைக்கிறது, நல்ல தரமான வாழ்க்கைத் தரத்தில் வாழும் குழந்தைகளைவிட குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.

ஏழ்மையில் உள்ள குழந்தைகளுக்கான தேசிய மையத்தின்படி, கடந்த சில வருடங்களாக அமெரிக்க வறுமை வீதங்கள் 1993ல் இருந்த அதிக நிலையைக் காட்டிலும் சிறிதே வீழ்ச்சி அடைந்துள்ளன. இருப்பினும் அவை 1979ன் மட்டங்களை விடவும் கணிசமான அளவு அதிகமாய் இருக்கின்றன. நியூயோர்க்கில் குழந்தை வறுமை 1979ல் இருந்ததை விட 6 சதவீதம் அதிகம்; கலிபோர்னியாவில் 10 சதவீதம் அதிகம். இன்னும் கூட நலபுரி சேவை மற்றும் உணவு முத்திரைகளில் வெட்டு விழுந்ததால் இன்று வறுமையில்வாழும் எல்லோரும் 1990ன் தொடக்கத்தில் இருந்தவர்களை வீட அதிகம் ஏழையாக இருக்ப்பர்.

லுக்சம்பேர்க் ஆய்வு, பல ஐரோப்பிய நாடுகள் குழந்தை வறுமையில் அமெரிக்க மட்டத்துடன் போட்டியிடக் கூடியதாக உள்ளன. இத்தாலி OECD ல் உள்ளதிலேயே இரண்டாவது அதிக வீதத்தைப் பெற்றிருக்கிறது அதாவது 19.5 சதவீதம், பிரிட்டன் 16.2 சதவீதம் மற்றும் போலந்து12.7 சதவீதம் ஆகும். ஆய்வின்படி, சுவீடன், பின்லாந்து மற்றும் நோர்வேயில் 4 சதவீதக் குழந்தைகள் வறுமையில் வாழ்கின்றனர். இந்த நாடுகள் பெற்றோர்களுக்கு சுகாதார காப்பீடு, குழந்தை பராமரிப்பு ஆதரவு, பெற்றோருக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு மற்றும் வரிச் சலுகை அல்லது குழந்தை உதவித்தொகை ஆகியவற்றைத் தருகின்றன. இருப்பினும் ஐரோப்பிய அரசாங்கங்கள் அமெரிக்க வழியில் இந்த சமூக நலத்திட்டங்களில் வெட்டுக்களைச் செய்வதற்கான அழுத்தத்தில் இருக்கின்றன.