World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா: இலங்கை

British ban on LTTE strengthens Sinhalese extremists in Sri Lanka

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய தடை இலங்கையில் சிங்கள தீவிரவாதிகளை பலப்படுத்தியுள்ளது

By K. Ratnayake
15 March 2001

Use this version to print

இலங்கை பொதுஜன முன்னணி அரசாங்கம், பெப்பிரவரி 19ம் திகதி பிரித்தானியா தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துக் கொள்ள எடுத்த தீர்மானத்தை ஒரு "இராஜதந்திர வெற்றி" ஆக கொண்டாடிக் கொண்டுள்ளது. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அவரது அமைச்சர்களும் பல மாதங்களாக தீவின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் கடந்த 18 ஆண்டுகளாக ஒரு தனிநாட்டை அமைக்கப் போரிட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப் பிரச்சாரம் செய்து வந்தனர்.

சமீப வார காலங்களாக பொதுஜன முன்னணி அரசாங்கம் சிங்கள தீவிரவாதிகளுடன் கை கோர்த்து இந்த விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியத் தடைக்காகச் செயற்பட்டு வந்தது. சிங்கள உறுமய கட்சி பிரித்தானிய உயர் ஸ்தானிகரிடம் கையளிக்கும் பொருட்டு 10 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் ஒரு பிரச்சாரத்தை நடாத்தி வந்தது. ஆளும் பொதுஜன முன்னணி, சிங்கள உறுமய கட்சியுடனும் சிங்கள ஜாதிக சங்கமவுடனும் (சிங்கள உறுமயவில் இருந்து பிரிந்து சென்றது) உயர் பெளத்த மகாநாயக்க தேரர்களுடனும் சேர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யும்படி எதிர்க் கட்சியான யூ.என்.பி. பிரித்தானிய அரசாங்கத்தை கோராமைக்காக அதைக் கண்டனம் செய்து வந்தன. பொதுஜன முன்னணியின் பல அமைச்சர்கள் இதே கோரிக்கையை கொண்ட மகஜரை கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆலயத்தில் கையளிக்கும் பொருட்டு ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடாத்தினர். இது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய தடை பற்றிய அறிவித்தல் வெளிவருவதற்கு முதல் நாள் இடம்பெற்றது.

பிரித்தானிய தீர்மானம் வெளிவந்ததைத் தொடர்ந்து சிங்கள உறுமய கட்சியும் ஜே.வி.பி.யும் இதை ஒரு வெற்றியாகக் கொண்டாடியதோடு தமது எதிர்ப்பு பிரச்சாரத்தை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை நடாத்தும் ஏற்பாட்டாளராக கடமை புரியும் நோர்வே முயற்சிகளை எதிர்த்தும் நடாத்தப் போவதாக அறிவித்தன. சிங்கள உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலக் கருணாரத்ன பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் பின்வருமாறு தெரிவித்தார்: "எமது அடுத்த இலக்கு நோர்வே. நோர்வே ஒரு பக்கச்சார்பற்ற பேச்சு ஏற்பாட்டாளர் என்பது ஒரு நப்பாசை. ஒஸ்லோ தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த சுவர்க்கம் ஆகும் சாத்தியம் உள்ளது. நாம் அரசாங்கத்தை இந்த அவமானம் கொண்ட சமாதாù வழிமுறைகளில் இருந்து விலகிக் கொள்ளும்படியும் தமிழீழ விடுலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்கும்படியும் வேண்டுகின்றோம்."

ஜே.வி.பி. மேற்கத்தைய அரசாங்கங்களை தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளது. "பிரித்தானிய அரசாங்கம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தீர்மானத்தை எடுத்திருக்குமானால் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தனிநாட்டு யுத்தத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டு இராது. அந்த விதத்தில் அது செயற்பட்டு இருக்குமேயானால் இந்தளவு பிரமாண்டமான பேரழிவுகளை தடுக்கும் சாத்தியம் ஏற்பட்டு இருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யும்படி கோரி நோர்வேக்கு அழைப்பு விடுத்து வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் அது பின்வருமாறும் கூறியது: "ஐரோப்பிய யூனியனின் பொறுப்பு, தமிழ் வகுப்புவாதத்தையும் இலங்கையில் பிரிவினைவாத சித்தாந்தத்தையும் தோற்கடிக்க உதவுவதேயாகும்."

பெளத்த பிக்குகளும் மற்றும் சிங்கள இனவாத அமைப்புகளும் தொடர்பு சாதனங்களின் சில பகுதிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளை மேற்கத்தைய நாடுகள் தடை செய்ய வேண்டும் என்ற கூப்பாட்டில் சேர்ந்து கொண்டனர்.

இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளில் பலவும் பிரித்தானிய தடையையிட்டு அதிர்ச்சி தெரிவித்தன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஆர்.சம்பந்தன் கூறியதாவது: "தீர்க்கமான ஒரு சமாதான போக்கு ஆரம்பிக்கும் சாத்தியம் இருந்து கொண்டுள்ள ஒரு நிலையில் இது இடம்பெற்றது மிகவும் துர்அதிஸ்ட வசமானது" தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட ஒரு தொகை தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணி, இந்திய, பிரித்தானிய அரசாங்கங்களுடன் இத்தடை தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்த வாய்ப்பு ஏற்படுத்தி தரும்படி கேட்டன. ஆனால் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.

சிங்கள சோவினிசத்தை தூண்டிவிட்டும் சிங்கள உறுமய கட்சிக்கும் ஜே.வி.பி.க்கும் ஏனையவற்றுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்திலும் அரசாங்கம் அடுத்து செய்வதையிட்டும் கவலை தெரிவித்துக் கொண்டுள்ளது. மார்ச் 2ம் திகதி இடம்பெற்ற ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் பேசுகையில் வெளிநாட்டு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சிங்கள சமூகம் "தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை ஆனந்தத்துக்குரியதாக அல்லது வெற்றியாக கொண்டு புகழ்பாடக் கூடாது" எனக் கேட்டுக்கொண்டார். தமிழர்கள் "இதனை தமக்கு எதிரான தாக்குதலாக கொள்ளக் கூடாது" எனவும் வேண்டிக் கொண்டார்.

ஏனைய ஐரோப்பிய நாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யும்படி கேட்டுக் கொண்டதன் பின்னர் கதிர்காமர் நொண்டித்தனமாக பேசுகையில் "சமாதானத்துக்கான நம்பிக்கை நெருங்கிவிட்டது" எனத் தெரிவித்தார். இந்த வெளிநாட்டு அமைச்சர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடைக்கு ஆதரவு திரட்டுவதில் நடுமையமாக விளங்கியவர். கடந்த இரண்டு மாத காலங்களில் அவர் பல தடைவை பிரித்தானியா தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யாது போனால் அது "இரு நாடுகளுக்கும் இடையேயான உறுவுகளை பாதிக்கச் செய்யும்" என எச்சரிக்கை செய்து வந்தார். கடந்த மாதம் அவர் பிரித்தானிய அரசாங்கத்தின் மீது நெருக்குவாரம் கொணரும் பொருட்டு இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜஸ்வந் சிங்கை சந்தித்து, உதவி கோரினார்.

கதிர்காமரின் அறிக்கையில் இருந்து கொண்டுள்ள முரண்பாடுகள் நாட்டின் நீண்ட உள்நாட்டு யுத்தம் தொடர்பாக அரசாங்கத்தினுள்ளும் ஆளும் வர்க்கத்தினுள்ளும் இருந்து கொண்டுள்ள மோதுதல்களை பிரதிபலிக்கின்றது.

இலங்கை அரசாங்கம் பிரச்சினைக்கு ஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வைக் காண வேண்டும் என்ற நெருக்குவாரத்துக்கு உள்ளாகியுள்ளது. இது இலங்கையின் பெரும் வர்த்தக நிறுவனங்களது பொருளாதார நலன்களுக்கு ஒரு தடையாகியுள்ளது. இப்பிராந்தியத்தில் பெரும் வல்லரசுகளது மூலோபாய நலன்களுக்கும் கவலை தருகிறது. எவ்வாறெனினும் இதே சமயம் பொதுஜன முன்னணியும் எதிர்க் கட்சியான யூ.என்.பி.யும் யுத்தத்தை நடாத்துவதற்கு அவர்கள் நம்பியுள்ள சிங்கள தீவிரவாத தட்டுக்களில் இருந்து அவர்கள் அன்னியப்பட்டுப் போவதையிட்டும் அச்சம் கொண்டுள்ளனர்.

முதலாவதாக, பொதுஜன முன்னணி தமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானியா தடை செய்ய வேண்டும் எனப் பிரச்சாரம் செய்ததற்கு காரணம், சிங்கள உறுமய கட்சிக்கும் ஜே.வி.பி.க்கும் மற்றும் சோவினிச குழுக்களுக்கும் குழிபறிப்பதேயாகும். இரண்டாவதாக, பொதுஜனங்களின் கவனத்தை விலைவாசி உயர்வு, வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சியில் இருந்து திசை திருப்புவதும், இறுதியாக எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் இட்டுச் செல்லும் விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நெருக்குவாரம் கொணர்வதுமேயாகும். பிரித்தானியத் தடையை கொணர்வதில் வெற்றி கண்டதன் பின்னர் நிலைமை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை கடந்து மோசமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது; எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக இருந்து கொண்டுள்ளது. இதுவே கதிர்காமரை காலங்கடந்து மோசடியான முறையில் அமைதி காக்கும்படி அழைப்பு விடுக்கச் செய்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஐரோப்பாவில் அதன் நடவடிக்க்ைககளை பெரிதும் பாதிக்கச் செய்யும் பிரித்தானிய அரசாங்கத்தின் தடையை தவிர்க்க முயற்சி செய்துள்ளது. அதனது அனைத்துலக தலைமையகம் லண்டனில் இருந்து கொண்டுள்ளதோடு, பிரித்தானியாவிலும் ஐரோப்பாவின் ஏனைய இடங்களிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தினரிடையே நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதிலும் இது பெரும் நம்பிக்கை வைத்துள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சாளர் அன்டன் பாலசிங்கம், எந்த ஒரு தடையும் நோர்வேயினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள "சமாதான போக்கினை" பாதிக்கும் என எச்சரிக்கை செய்துள்ளார். இந்த அறிவிப்பின் பின்னர் பாலசிங்கம் ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைகளுக்கான தயாரிப்புகளில் இருந்து விலகிக் கொள்ள அச்சுறுத்தியுள்ளார். பின்னர் இது "ஆங்கில-தமிழ் உறவுகளின் சோகமான நாள்" எனக் கூறிக் கொண்டு, பழைய சுவட்டில் காலடி வைத்துள்ளார். இது "இலங்கை ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுககு ஊக்கமளிக்கும் "எனவும் கூறியுள்ளார். இந்தச் சட்டம் (பிரித்தானியச் சட்டம்) எந்த விதத்தில் பிரயோகிக்கப்படுகின்றது என்பதைப் பொறுத்து "சமாதான வழிகளை தொடர" அவர் உறுதி பூண்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்க்கும் பிரித்தானியாவின் தீர்மானம், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இலங்கை அரசாங்கத்துடன் உடன்பாட்டுக்கு வர தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நெருக்குவாரம் கொணர்வதை இலக்காகக் கொண்டுள்ளது. தற்சமயம் எந்த ஒரு பெரும் வல்லரசும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கைகளுக்கு ஆதரவு தருவதாக இல்லை. அமெரிக்காவும் இந்தியாவும் முன்கூட்டியே தமிழீழ விடுதலைப் புலகளை தடை செய்தன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்க உயர்நீதிமன்றம் அமெரிக்க தடைக்கு எதிரான குர்திஷ் தொழிலாளர் கட்சி (PKK), தமிழீழ விடுதலைப் புலிகளின் மேன்முறையிட்டைத் தள்ளுபடி செய்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் விருப்பைக் காட்டிக் கொண்டுள்ளதோடு யுத்தப் பிராந்தியத்தில் தொடர்ந்து மூன்று மாதங்களாக ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தையும் பிரகடனம் செய்தது. எவ்வாறெனினும் இலங்கை அரசாங்கம் இதைக் கடைப்பிடிக்க மறுத்ததோடு கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளிடம் இழந்த பகுதிகளை திரும்பிக் கைப்பற்றும் இராணுவ எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் தனது கரங்களைப் பலப்படுத்தவும் சிங்கள சோவினிஸ்டுகளை சாந்தப்படுத்தவும் இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டு பேச்சுவார்த்தைகள் ஜனவரி அளவில் ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் இருந்து வந்தன. இதனால் இப்போக்கு தொடர்ந்து இழுபட்டுச் செல்கின்றது. கடந்த வாரம் நோர்வேயின் சிறப்பு தூதுவர் எறிக் சொல்ஹெயிம் குமாரதுங்கவுடனும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்த கொழும்பு வந்து சேர்ந்தார். ஆனால் பேச்சுவார்த்தைகள் எப்போது ஆரம்பிக்கும் என்பதற்கான அறிகுறிகளை கொடுக்காமலே மீண்டும் புறப்பட்டுச் சென்றார். பாலசிங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த லண்டன் புறப்பட தயாரான வேளையில் அவர் கூறியது "எல்லாம் இடம்பெறுகிறது" என்பது மட்டுமே.

விடுதலைப் புலிகளைப் போலவே இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி பெரும் வல்லரசுகளின் நெருக்குவாரத்துக்கு உள்ளாகியுள்ளது. அத்தோடு அது அதிகரித்த அளவிலான நிதி நெருக்கடிக்கும் முகம் கொடுக்கிறது. கடந்த ஆண்டு இராணுவ செலவிலான பெரும் அதிகரிப்பு, இதற்கு ஒரு காரணம். ஆனால் சமீப காலத்தில் பேச்சுவார்த்தைகளை நடாத்த குமாரதுங்க தயாராக உள்ளார் என்பதற்கு சில அறிகுறிகள் தென்பட்டுள்ளன. கடந்த பெப்பிரவரி இறுதியில் ஜனாதிபதி தமது மூன்றுநாள் இந்திய விஜயத்தின் போது CNN செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் இரண்டு மாதங்களுள் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் எனத் தெரிவித்துள்ளார். அவர் ஐரோப்பாவுக்கு மற்றொரு சுற்றுலாவை மேற் கொள்ள உள்ளார். பொருளாதார உதவிகளை கோருவதும் விடுதலைப் புலிகளை தடை செய்வதில் பிரித்தானியாவை பின்பற்றும்படி ஐரோப்பிய நாடுகளை மேலும் நெருக்குவதும் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.