World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : சீனா

China-Russia treaty: a reaction against aggressive unilateralism in Washington

சீன -- ரஷ்ய ஒப்பந்தம்: வாஷிங்டனின் ஒருதலைப்பட்சமான ஆத்திரமூட்டலுக்கு எதிரான பதில் நடவடிக்கை

By Peter Symonds
23 July 2001

Use this version to print

மேலோட்டமாகப் பார்க்கையில், கடந்தவாரம் மொஸ்கோவில் கையெழுத்திடப்பட்ட ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பரந்த நட்புறவு ஒப்பந்தம், சர்வதேச பதட்டங்களைக் குறைக்கும் சாதகமான அடையாளமாக இருக்க வேண்டும். 1960களின் ஆரம்பத்தில் இவ்விரு அரசாங்கங்களும் அவற்றின் அரசியல் பிளவுக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் இராணுவ அச்சுறுத்தலாகக் கருதிக் கொண்டவை ஆகும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சந்தேகப்படல் மற்றும் பகை பாராட்டல் சூழ்நிலைகளில் 1969லும் 1980 லும் எல்லைச் சண்டைகளில் ஈடுபட்டன, 1950 களில் கையெழுத்திடப்பட்ட முந்தைய ஒப்பந்தத்தை கைகழுவ அனுமதித்தன.

உண்மையில், எவ்வாறாயினும், அதன் அனைத்துவிதமான எச்சரிக்கையுடன் கூடிய ராஜதந்திர சொற்றொடர்கள், நல்ல பக்கத்து நாட்டினருடைய நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியன, ஆத்திரமூட்டுவதை வளர்த்துவரும் அமெரிக்க நிர்வாகத்தின் ஒருசார்பான வெளிநாட்டுக் கொள்கையினால் உண்டு பண்ணப்பட்ட பூகோள அரசியல் ஸ்திரத்தன்மையின்மையின் மேலும் கூடிய அறிகுறி ஆகும். சீனா ரஷ்யா இவற்றின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுக்கு எதிரான திட்டவட்டமான அமெரிக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அவை ஒருவேளை தந்திரோபாயமானதாக இருந்தாலும் மற்றும் தற்காலிகமானதாக இருந்தாலும் கூட, ஒரு புரிதலைப் பெறுவதற்கு அவை நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. இது சர்வதேச முறுகல்களுக்கு பற்சக்கர தடை அமைவதற்கு உள்ளுறை கொண்டிருக்கும் நகர்வு ஆகும்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஜியாங் ஜெமின் ஆகிய இருவரும் ஜூலை 16 அன்று இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது தேசிய ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தின் (NMD) அபிவிருத்தியை விரைவு படுத்துதற்கான அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் திட்டத்தின் ஒரு பகுதியாக, பசிபிக்கில் அண்மைய தேடிப்பிடித்து அழிக்கும் ஏவுகணை சோதனை நடந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர்தான் கையெழுத்திடப்பட்டது. மாஸ்கோ பெய்ஜிங் இரண்டுமே NMD திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இருக்கின்றன. "போக்கிரி அரசுகளில்" இருந்து வரும் ஏவுகணைகளுக்கு எதிராக அமெரிக்காவைப் பாதுகாக்க மட்டுமே இத்திட்டம் என புஷ் கூறினார். ஆனால் அது தவிர்க்க இயலாமல், ரஷ்யா மற்றும் சீனா உட்பட மற்ற நாடுகளது அணு ஆயுதங்களைத் தரங்குறையச் செய்துள்ளது.

ரஷ்யா மற்றும் சீன அதிகாரிகளின்படி, இந்த ஒப்பந்தம் இராணுவக்கூட்டைப் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை மற்றும் "எந்த மூன்றாவது நாட்டையும்" இலக்காகக் கொண்டதல்ல என்பதாகும். இருப்பினும், அமெரிக்கா பற்றி வெளிப்படையாகப் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், ஒப்பந்தத்தின் காரணம் தவறானதல்ல. அது "பல்-துருவ உலகைக் கட்டி அமைக்கும் மற்றும் நியாயமான, அறிவுபூர்வமான சர்வதேச ஒழுங்கைக் கட்டி அமைப்பதற்கான எமது முயற்சிகளை" மேம்படுத்தும் என ஜியாங் கூறினார். "பல்-துருவ உலகம்" என்பது ஒரு வல்லரசால், பெயர் குறிப்பிடுவதெனில், அமெரிக்காவால் மேலாதிக்கம் செய்யப்படாத உலகுக்கான குறியீட்டு வார்த்தைகளாக இருக்கின்றன.

அமெரிக்கக் கொள்கையின் திசைவழி பற்றிய பெய்ஜிங்கின் அக்கறைகளைக் கூறுமுகமாக, சீன வெளிவிவகாரப் பேச்சாளர் ழு பாங்ஜாவோ பின்வருமாறு குறிப்பிட்டார்: "மற்ற நாடுகளின் பாதுகாப்பைப் பாதிக்கும் வகையில் உங்கள் சொந்த நாட்டின் பாதுகாப்பை நீங்கள் கட்டாயம் கட்டி எழுப்பக்கூடாது. பெரிய அரசுகள் அக்கறைப்பட்டால், இவை சேர்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டும் மற்றும் கூட்டுத் தீர்வுகள் காணப்படவேண்டும்."

தனியான ஒரு அறிக்கையில், "ABM (1972 ஏவுகணை எதிர்ப்பு) உடன்படிக்கையின் அடிப்படை முக்கியத்துவம், அதுதான் மூலோபாய ஸ்திரத்தன்மைக்கான ஆதாரக்கல் மற்றும் தாக்குதற்கான ஆயுதங்களைக் குறைப்பதற்கான அடிப்படை ஆகும் மற்றும் "உடன்படிக்கையை அதன் தற்போதைய வடிவத்தில் பராமரிப்பதற்கு" ஆதரவளிப்பதாகும் என ரஷ்யாவும் சீனாவும் வலியுறுத்தின. ரஷ்யா ஏவுகணைகளை இடையீடு செய்யும் அத்தகைய ஏவுகணைகளை கட்டி எழுப்பத் தடை செய்யும் ABM உடன்படிக்கையை திருத்தம் செய்ய மறுப்பினும் கூட, தாம் தமது ஏவுகணை எதிர்ப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லப்போவதாக புஷ் நிர்வாகம் கர்வத்துடன் கூறியது.

நட்புறவு ஒப்பந்தத்தின் மற்றைய அம்சங்களும் அமெரிக்காவுக்கு எதிராக இலக்கு கொண்டவை ஆகும். முன்னாள் யூகோஸ்லாவியாவில் அமெரிக்கக் குண்டு வீச்சுக்கு எதிராக சீனா மற்றும் ரஷ்யாவின் முந்தைய எதிர்ப்புக்களை கோடிட்டுக்காட்டும் வண்ணம், "எந்த விதமான சாக்குப்போக்கின் கீழும், இறையாண்மை அரசுகளின் சர்வதேச விவகாரங்களில் தலையீடு செய்தலை அல்லது அழுத்தம் கொடுத்தலை இலக்காகக் கொண்ட எந்தவிதமான நடவடிக்கைகளுக்கும் எதிராக" இரு நாடுகளும் சர்வதேச விதியின் வழிமுறைகளை உயர்த்திப்பிடிப்பதாக உறுதி பூண்டன.

மனிதாபிமான அடிப்படை எனும் பதாகையின் கீழ், பால்கனில் தேசிய இறையாண்மையை நேட்டோ அவமதிப்பு செய்ததை பெய்ஜிங் மொஸ்கோ இரண்டும், அதே போன்ற சாக்குப்போக்குகளில் திபெத் மற்றும் செச்சென்யா போன்ற பகுதிகளில் எதிர்காலத் தலையீட்டிற்கான உள்ளுறை இருப்பதாக அஞ்சி, அதனை எதிர்த்தன. இந்த ஒப்பந்தத்தில், பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையில் பதட்டங்களை வளர்த்துவரும் பகுதிகளுள் ஒன்றான தாய்வான் மீதான சீனாவின் இறையாண்மையை ரஷ்யா வெளிப்படையாகவே அங்கீகரித்தது.

ரஷ்யா முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் விரிவாக்கத்தைப்பற்றி குறிப்பாக கவலை கொண்டிருக்கிறது. Corriere della Sera என்ற இத்தாலிய பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் புட்டின், அவ்விரிவாக்கம் குளிர் யுத்தப் பதட்டங்களை நீட்டிக்கும் என்று எச்சரித்தார்." 'ஐரோப்பாவில் புதிய பிளவுகளை நாங்கள் விரும்பவில்லை, நாங்கள் புதிய பேர்லின் சுவர்களை விரும்பவில்லை' என்று மேற்கில், ஒவ்வொருவரும் கூறுகிறார்கள், அது நல்லது. நாம் அதனுடன் முழுமையாய் உடன்படுகிறோம். ஆனால் நேட்டோ பெரிதாகுகையில், பிளவுகள் மறையவில்லை, அது எமது எல்லையை நோக்கி நகருகின்றன."

குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, ரஷ்யாவும் சீனாவும் மத்திய ஆசியாவிலும்கூட நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்துள்ளன. ஷாங்கை ஐந்து என்று அழைக்கப்படும் --ரஷ்யா, சீனா, கஜக்ஸ்தான், தாஜிக்கிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான்-- அமைப்பு அதன் ஜூன் நடுப்பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் மிக மேலோட்டமான அமைப்பாக ஷாங்கை கூட்டமைப்பு ( Shangai Cooperation Organisation -SCO) உஸ்பெக்கிஸ்தானுடனும் சேர்ந்து கூட்டாக அமைக்கப்பட்டது. கூட்டத்தில் அமெரிக்க ஏவுகணை எதிர்ப்புத் திட்டங்களை எதிர்த்தும் ABM உடன்படிக்கையை ஆதரித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவுவதை எதிர்த்துப் போராடுவதுபோல, SCO இந்தப்பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அதேபோல கனிவளங்களின் பெரும் சேர்மத்தினைச் சுரண்ட தமக்குள் போட்டியிட்டு வரும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகளின் மேலும் கூடிய சுற்றிவளைப்பைத் தடுக்கவும் இலக்கு கொண்டிருக்கிறது. அண்மைய கூட்டத்தில் உஸ்பெக்கிஸ்தானின் பங்கேற்பானது, அமெரிக்காவும் நேட்டோவும் GUUAM (ஜோர்ஜியா, உக்ரெய்ன், உஸ்பெக்கிஸ்தான், அஜர்பைஜான் மற்றும் மோல்டோவா) என்று அழைக்கப்படும் குழு வழியாக மிகப்பிரபலமான மத்திய ஆசியக் குடியரசுடனும் அதன் கூட்டாளிகளுடனும் சேர்வதைக் கீழறுத்துள்ளது.

பொருளாதார மற்றும் இராணுவ பிணைப்புக்கள்

இச்சந்திப்பின்போது, சைபீரியாவிலிருந்து வடகிழக்கு சீனாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்வழியை அமைப்பதற்கான 1.7 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் புட்டினும் ஜியாங்கும் கையெழுத்திட்டனர். 1500 கிலோ மீட்டர்கள் நீளமுள்ள இக்குழாய்ப்பாதை 2005 க்குள் முடிவடையக்கூடியதாக உள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு பிணைப்புக்களின் அபிவிருத்தியின் ஒரு பகுதி ஆகும். இந்த நட்புறவு ஒப்பந்தம் கடந்த ஆண்டு 8 பில்லியன் டொலர்களில் இருந்து இந்த ஆண்டு 10 பில்லியன் டொலர்களாக வர்த்தகத்தைப் பெருக்குதற்கு உறுதி பூண்டுள்ளது.

கடந்த தசாப்தம் இருநாடுகளின் ஒப்பீட்டளவு பொருளாதார நிலைகளின் திடீர் வீழ்ச்சியைக் கண்டது. ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சீனாவின் மூன்றில் ஒரு பகுதி ஆகும். 1990 களில் சீனா மூன்று மடங்கு வளர்ந்திருந்தது அதேவைளையில் ரஷ்யா சோவியத் ஒன்றியத்தின் பொறிவினைத் தொடர்ந்து ரஷ்யப் பொருளாதாரம் பளுக்கூடியதாகியது. சீனாவானது எண்ணெய், எரிவாயு மற்றும் கச்சாப் பொருட்களுக்கான விரைந்து பெருகிவரும் அதன் தேவைகளுக்கு ரஷ்யாவையும் மத்திய ஆசிய குடியரசுகளையும் எதிர்பார்த்திருக்கிறது, குறிப்பாக நவீன இராணுவ சாதனங்களுக்கு ரஷ்யாவை எதிர்பாத்திருக்கின்றது.

ஒரு மதிப்பீட்டின்படி, சீனா ரஷ்யாவுடன் 1.5 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. இது கிட்டத்தட்ட ரஷ்யாவின் மொத்த ஆயுத ஏற்றுமதியில் 40 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. சீனா போர்விமானங்கள், கடற்படையின் சிறிய போர்கப்பல்கள் மற்றும் வான் பாதுகாப்பு முறைக்கும் ரஷ்யாவை ஏற்கனவே நம்பி உள்ளது. ஏற்கனவே ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட கடற்படையின் சிறிய போர்கப்பல்கள் நிறுவுவதற்காக கடந்த டிசம்பரில் புதிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளைப் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.

புஷ் நிர்வாகமானது புதிய நட்புறவு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் பற்றி குறைத்து மதிப்பிடுகின்றது. அமெரிக்க அரசாங்க துணைச் செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் குறிப்பிட்டதாவது: "இது உண்மையான அம்சத்தை அதிகம் சேர்க்காமல் அவர்கள் இருவரதும் சர்வதேச நிலையை ஊக்கப்படுத்துதற்கு தெளிவாகவே வடிவமைக்கப்பட்டது." நிர்வாக அதிகாரி ஒருவர் நியூயார்க் ரைம்ஸிடம், சீனர்களும் ரஷ்யர்களும் 1300லிருந்து ஒருவரை ஒருவர் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தவர்கள்தான், ஆனால் நூற்றாண்டுகளூடாக 40 ஆண்டுகளான நட்புறவைத்தான் அனுபவித்திருக்கிறார்கள் என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

வாஷிங்டனில் இந்த புறந்தள்ளும் பதிலானது, புஷ் நிர்வாக வெளியுறவுக் கொள்கைகளின் எஞ்சிய பகுதியின் கீழ் உள்ள அதே மெய்க்கோளை அடிப்படையாகக் கொண்டுள்ளது --அதாவது அமெரிக்காவின் பொருளாதார மற்றும் சிறப்பாக இராணுவ மேலாதிக்க வல்லமை அதனை ஒரு சார்பாகவும் விளைவுகளில் இருந்து விடுபாட்டு உறுதி கொண்டதாகவும் செயல்பட அனுமதிக்கிறது. முன்னாள் கிண்டனின் ஆலோசகர் றொபர்ட் சுயெட்டிஞ்சர் குறிப்பிட்டார்: "வழக்காற்றுத் தொடர்புடைய அறிவுடைமையானது அவர்கள் ஒருவருக்கு ஒருவரை விட, அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம்தான் மிக முக்கியமானவர் என்பதாகும், ஆகையால் இது கவலைப்படுதற்கு உரியது அல்ல." மற்றைய ஆய்வாளர்கள் ரஷ்யாவுடனான சீன வர்த்தகம் ஆண்டுக்கு 10 பில்லியன் டொலர்கள் என பெருகினாலும் கூட, கடந்த ஆண்டு அமெரிக்காவுடனான அதன் 115 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் அது மிகச்சிறிய துணுக்குத்தான்

இருப்பினும், அமெரிக்க ஆளும் தட்டினரில் பிளவுகள் இருக்கின்றன. சில பகுதியினர் அத்தகைய வீறாப்புத்தனமான அணுகுமுறையின் ஆபத்துக்கள் பற்றி எச்சரிக்கின்றனர். பால்டிமோர் சன் எனப்படும் ஒரு பத்திரிக்கை, அமெரிக்காவுக்கு குரோதமான கூட்டு தோன்றியது பற்றி கவலையை வெளியிட்டுள்ளது." அமெரிக்க ராஜதந்திரத்தின் தோல்வி மட்டுமே இராணுவ அர்த்தத்தில் உண்மையான மொஸ்கோ- பெய்ஜிங் கூட்டை மறுபடி தோன்றச் செய்துள்ளது. இது நிகழ்வதற்கு அனுமதித்தது அமெரிக்க நலன்களுக்கு எதிரானது" என்றது.

அதே தொனியில், நியூயார்க ரைம்ஸ் குறிப்பிட்டது: "ரஷ்யாவோ சீனாவோ இரண்டுமே வல்லரசாக இல்லாவிட்டாலும், இரண்டுமே முக்கியமானவை. அமெரிக்க கொள்கைகள் அவர்களின் நலனைப் பாதிக்கும் பொழுது, ஏவுகணைப் பாதுகாப்பு விஷயம்போல, ரஷ்யாவைப் பொருத்தவரை, நேட்டோ விரிவாக்கமும் எனில், வாஷிங்டன் அவர்களிடம் கவனமாக கலந்து ஆலோசனை செய்திருக்க வேண்டும், அதன் சொந்த முன்னுரிமைகள் மற்றும் கால அட்டவணைப்படி வெறுமனே மேற்சென்றிருக்கக்கூடாது. ரஷ்யாவையும் சீனாவையும் கணக்கில் எடுக்கத்தவறியமை ஆபத்தான மனக்கசப்புக்களை விசிறிவிடும் மற்றும் அவர்களை வாஷிங்டனிடமிருந்து விலக்கி ஒருவரை நோக்கி ஒருவரை நெருக்கமாக்க இயக்கும்."

அத்தகைய அக்கறைக்குரிய ஊமை வெளிப்பாடுகள், புஷ் நிர்வாகத்தை தொடர்ந்து முன் செல்லவும் மேலும் உக்கிரமான நிலையை எடுக்கவும் கோருகின்ற அதி வலதுசாரிகளால் நிராகரிக்கப்பட்டு விட்டன.

சான்பிரான்சிஸ்கோ குரோனிக்கள் தலையங்கம், சீன-ரஷ்ய உடன்படிக்கை NMD திட்டத்தை விரைவுபடுத்துதற்கான சரியான முன்நிபந்தனைகளை தந்துள்ளது என வாதிட்டது. குளிர் யுத்த முடிவானது "சதாம் ஹூசேன், வடகொரியா அல்லது கொலம்பியாவின் போதைவஸ்து கடத்துபவர்களுடன் கூட நிரப்பப்பட முடியாத ஒரு பகை இடைவெளியுடன்" அமெரிக்காவை விட்டுள்ளது என்ற உண்மையை நினைந்து புலம்புகின்றது. அது பின்வருமாறு முடித்தது: "அமெரிக்க ஐக்கிய நாடுகள் இறுதியாக ஒரு மதிப்புமிக்க எதிரியைக் காண வைத்துள்ளது. ரஷ்யா - சீன கூட்டானது, ஏவுகணைப் பாதுகாப்பு செலவை, புதிய மற்றும் முன்னேறிய தொழில்நுட்பத் திறனை, மற்றும் ஒருவேளை, அண்டவெளியையும் கூட இராணுவமயமாக்கலை நியாயப்படுத்த பயன்படுத்த முடியும்."

சான்பிரான்சிஸ்கோ குரோனிக்கள் NMD திட்டத்தின் விளக்காத உள்நோக்கத்தை மிக வெளிப்படையாக சாதாரணமாய் உளறிக்கொட்டியிருக்கிறது.அத்திட்டம் போக்கிரி நாடுகள் என்று அழைக்கப்படுவனவற்றை பிரதானமாய் இலக்காகக் கொண்டதல்ல மாறாக அமெரிக்க ஐக்கியநாடுகளின் போட்டியாளர்களை --ரஷ்யா மற்றும் சீனா, மற்றும் மிகவும் மறைமுகமாக ஜப்பானையும் ஐரோப்பிய நாடுகளையும் இலக்காகக் கொண்டதாகும். ரஷ்யா - சீன ஒப்பந்தம் வாஷிங்டனில் வளர்ந்துவரும் கவனமற்ற போக்கின் முதல் விளைபயன்களில் ஒன்றாகும், அதாவது பிரதான அரசுகளுக்கு இடையில் கூர்மை அடைந்து வரும் அரசியல் பதட்டங்களாகும்.