World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா

Recriminations follow the collapse of the India-Pakistan summit

இந்தியா-பாக்கிஸ்தான் உச்சி மாநாடு குழம்பியதை அடுத்து ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டு

By Sarath Kumara
30 July 2001

Use this version to print

ஜூலை 14-16 தேதிகளில் இந்தியா-பாக்கிஸ்தான் உச்சிமாநாடு ஆக்ராவில் நடைபெற்றதற்குப் பின்னர், இத்தகைய நிகழ்ச்சியின் வழக்கமான ஒன்றை -பொது உடன்பாட்டின் அம்சங்களை அமைக்கும் வெற்று வார்த்தைகள் நிரம்பிய கூட்டறிக்கையை- வழங்கத் தவறிய கூட்டம் தொடர்பாக, புதுடில்லி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இரு இடங்களிலும் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்திய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயி மற்றும் பாக்கிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பெர்வெஜ் முஷாரப் ஆகியோரின் இயலாமையால் இருநாடுகளுக்கும் இடையிலான தகராறுகளின் கசப்புணர்வின் மிக அடிப்படையான அம்சங்களில் ஒரு சமரசத்தையும் எட்ட முடியவில்லை. பேச்சுவார்த்தை முழுவதிலும், அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கும் வகுப்புவாத கட்சிகள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றிலிருந்நு வரும் விமர்சனங்களில் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கு, பின்புறத்தில் என்ன பேசுகிறார்கள் என்று பார்த்துக் கொண்டார்கள்.

உச்சி மாநாடு தோல்வி அடைந்ததற்காக இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டார்கள். வாஜ்பாயி வார இறுதியில் ஒரு ஆத்திரமூட்டும் அறிக்கையில், அவரது சரிநிகர் எதிர்த்தரப்பினரை "வரலாறு, அரசியல் மற்றும் சர்வதேச ராஜதந்திரம்" ஆகியவை பற்றி "முற்றிலும் தடம் தெரியாத" வர் என்று விவரித்தார். முதல்நாளிலேயே இந்த மாநாடு வெற்றியடையாது என்பதைத் தாம் அறிந்து கொண்டதாக மேலும் அவர் குறிப்பிட்டார். "முஷாரப் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்திராதவர் போல் தோன்றியது. அவர் தனது விருப்பத்தைத் தெளிவாகக் காட்டிய மற்றும் தனது அனுபவமின்மையைக் காட்டிய இராணுவச் சீருடையில் உள்ள படை ஆள் ஆக இருந்தார்."

பேச்சுவார்த்தை முறிந்து போனதற்கு இந்தியாவைக் குறை கூறுகையில், முஷாரப் அவரது பேச்சு தொடர்பாக மிக மட்டுப்பாடு கொண்டவராக இருந்தார். அவர் இந்தியப் பிரதமரை இஸ்லாமாபாத்திற்கு திரும்ப வரும்படி அழைத்தார். கடைசி நேர தடை உடைத்துச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் வலிமையான இந்த இராணுவத் தலைவர் ஆக்ராவிலிருந்து தனது புறப்பாட்டை எட்டு மணி நேரம் தாமதப்படுத்தினார். ஆனால் இருதரப்பினரும் ஐந்து வரைவு அறிக்கையை மாற்றிக் கொண்ட பிறகு, அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் கிடந்தன.

மோதலின் மையத்தில் காஷ்மீரின் சர்ச்சசைக்குரிய நிலை இருந்தது.1948ன் பின்னர் காஷ்மீரானது இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இடையில், அவை கட்டுப்படுத்தும் பகுதிகளாக பிளவு படுத்தப்பட்டது. அது இவ்விரு நாடுகளுக்கும் இடையில் மூன்று பிரதான யுத்தங்களில் இரண்டைத் தூண்டிவிட்டது. மிக அண்மையில் தான் பாக்கிஸ்தான் ஆதரவு காஷ்மீர் பிரிவினைவாத போராளிகள் இந்திய மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிக்கு சற்று உள்ளே உள்ள மலைப்பிராந்தியமான கார்கிலில் தளத்தைக் கைப்பற்றிக் கொண்டபொழுது கடும் சண்டை நடைபெற்றது.

இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் தணியப்பட வேண்டுமானால் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்று உச்சி மாநாட்டில் முஷாரப் வலியுறுத்தினார். இஸ்லாமாபாத் காஷ்மீர் பிளவுபடுத்தப்படலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை மற்றும் இப்பிராந்தியத்தின் எதிர்காலம் மீது மக்களின் கருத்தை அறிய வேண்டும் என்று திரும்பத்திரும்ப கோரி வருகிறது. இந்த கருத்தை வலியுறுத்தும் முகமாக, இந்த இராணுவ வலுவாளர் "எல்லைகளில் சுட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் கொன்று கொண்டிருந்தால் நம்பிக்கையைக் கட்டும் நடவடிக்கைகள் எங்ஙனம் சாத்தியம்?" என்று இந்திய பத்திரிகையாளர்களைத் திரும்பக்கேட்டார்.

1990கள் முழுவதும் இந்திய இராணுவத்துக்கு எதிராக போராடும் பிரிவினைவாதிகளுக்கு பாக்கிஸ்தானுக்குள் பல இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆதரவு அளித்து வந்துள்ளார்கள். காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கு தரும் எந்த விட்டுக் கொடுப்பும் தனது நிர்வாகத்திற்கு எதிரான போர்க்குணமிக்க எதிர்ப்புக்களை தூண்டி விடும் என்பதை முஷாரப் நன்றாக அறிவார். வாஷிங்டனில் இருந்து வந்த அழுத்தத்தின் கீழ், முன்னாள் பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், கார்கில் பிராந்தியத்தில் பிரிவினைவாதிகளுக்கு தந்த அனைத்து ஆதரவுகளையும் திரும்பப்பெற்றுக் கொண்ட மற்றும் அவர்களை பின்வாங்குமாறும் நிர்ப்பந்தித்த பின்னர், வெகு சீக்கிரத்திலேயே 1999ல் ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதி மூலம் முஷாரப் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

தனது பங்குக்கு வாஜ்பாயி, ஏனைய விஷயங்களை --பொருளாதார ஒத்துழைப்புக்கள், இருநாடுகளதும் அணு ஆயுதங்கள் தொடர்பான உடன்பாட்டை ஏற்படுத்துதல் மற்றும் கலாச்சாரப் பரிவர்த்தனைகள் இவற்றை-- மிக முக்கியமானவை என்று கூறினார். இறுதி அறிக்கையில் வாதாட்டங்களாக இருந்த விஷயங்களுள் "காஷ்மீர் ஒரு விஷயமாக" அல்லது "ஒரு சர்ச்சை" யாக இருக்க வேண்டுமா என்பதும் ஒன்றாக இருந்தது. இந்திய அரசாங்கத்தைப் பொருத்தவரை காஷ்மீரை தீர்க்கப்பட்டுவிட்ட ஒரு உள்நாட்டுப் பிரச்சினையாகக் கருதுகிறது. மேலும், இறுதி அறிக்கையில் காஷ்மீர் குறிப்பிடப்பட வேண்டும் என்ற முஷாரப்பின் வலியுறுத்தலுக்கு பதில் கொடுக்கும் முகமாக, வாஜ்பாயி "எல்லை கடக்கும் பயங்கரவாதம்" என்ற குறிப்பைச் சேர்க்கக் கோரினார். அதற்கு பாக்கிஸ்தானிய தலைவர் மறுத்துவிட்டார். காஷ்மீரி பிரிவினைவாதிகள் "தனித்தன்மை வாய்ந்த விடுதலைப் போராளிகள்" என்று பாக்கிஸ்தான் வலியுறுத்துகின்றது.

காஷ்மீர் தொடர்பாக எந்த விட்டுக் கொடுப்பும் செய்யாதவாறு வாஜ்பாயி அழுத்தத்தின் கீழ் இருந்தார். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதான கட்சியான அவரது பாரதிய ஜனதாக் கட்சி (பிஜேபி) உத்திரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய இரு முக்கிய மாநிலங்களில் தேர்தலை எதிர் கொண்டுள்ளது. அது தனது பல்வேறு இந்து தீவிரவாத கூட்டாளிகளை அந்நியப்படுத்த அதனால் முடியாதிருக்கிறது. மேற்கு வங்காளம், தமிழ்நாடு உட்பட ஏனைய ஐந்து மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் பிஜேபி படுதோல்வியை சந்தித்தது. உச்சிமாநாட்டிற்கு சற்று முன்னதாக ஜூலை 11ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பங்காளிகளுள் ஒன்றான சிவசேனாவைச் சேர்ந்த தொண்டர்கள், ஆக்ராவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர் மற்றும் முஷாரப்பின் கொடும்பாவியைக் கொளுத்தினர்.

சர்வதேச அழுத்தம்

இரண்டு வருடங்களில், முதலாவதான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன என்ற உண்மை வல்லரசுகளிடமிருந்து, குறிப்பாக அமெரிக்காவிடமிருந்து வந்துள்ள அழுத்தத்தின் அறிகுறி ஆகும். அது தொடர்ச்சியான இம் மோதலை, வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைக் கொண்ட பிராந்தியத்திற்கு ஆபத்தான சீர்குலைவவை ஏற்படுத்தும் பாதிப்பாக கருதுகிறது.

உச்சிமாநாட்டை அடுத்துப் பின்தொடர்ந்து, சர்வதேச பத்திரிக்கை செய்தி சாதனங்கள் முஷாரப்பும் வாஜ்பாயும் எது தொடர்பாகவும் உடன்படுதற்கு தவறியதன்மேல் மிக நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சியை செய்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் கார்டியன் பத்திரிகை பின்வருமாறு குறிப்பிட்டது: "அளவுக்கு அதிகமான யதார்த்தமில்லாத வகையில் நம்பிக்கையுடன் அது தொடங்கியது மற்றும் அழிவுகரமான தோல்வியின் மிகைப்படுத்தப்பட்ட பேச்சுக்களின் மத்தியில் முடிந்தது." கூட்டம் எதைப் பிரதிநிதித்துவப்படுத்தியது எனில், "மிதமான முன்னேற்றத்தை, சமாதானம் மற்றும் சகிப்புத்தன்மை எனும் மாளிகைக்கான அடிக்கல் நாட்டலை, அதனைக் கட்டி அமைக்க பல ஆண்டுகள் எடுக்கலாம்" என்று அது கூறியது.

பேச்சுவார்த்தை தொடர்வதை பேணுகின்ற ஆர்வத்தில், அமெரிக்க அரசாங்க செயலாளர் கொலின் பாவெல் "இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையிலான உறவுகளை முன்னேற்றுதற்கு எமது நல் ஆதரவைத் தருவதற்கு" வாஷிங்டன் எல்லாவற்றையும் செய்யும் என்று குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து ஆற்று வெள்ளம்போல், அமெரிக்க கூட்டுப் படைத்தலைவர் ஜெனரல் ஹென்றி ஷெல்ட்டான் ஜூலை 8-11ல் வருகை உட்பட மற்றும் மிக அண்மையில் தெற்காசியாவுக்கான புதிய அமெரிக்க உதவி செயலாளர் கிறிஸ்டினா ரோக்கா உட்பட பல உயர் அதிகாரிகளின் வருகைகள் நிகழ்ந்தன.

கடந்த வார இறுதியில், இந்தப் பிராந்தியத்தில் "பழக்கப்பட்டுப்போன" பயணத்திற்கு பெயர்போன ரோக்கா, புதுடில்லியில் நடைபெற்ற வர்த்தகத் தலைவர்களிடம் பேசுகையில், தோல்வி அடைந்த பேச்சுவார்த்தை பற்றி "ஒரு நல்ல முதல் அடி" என்று புகழ்ந்தார்." கரிசனம் உள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான இப்பேச்சுவார்த்தைகளின் சூழலானது, அது நீண்ட நிகழ்ச்சிப்போக்காய் திருப்பம் எடுத்தாலும் கூட, இரு பகுதியினரும் தங்களது வேறுபாடுகளை தீர்ப்பதற்கு உறுதி பூண்டுள்ளனர் என்று எனக்குக் கூறுகின்றது" என்று அவர் சொன்னார்.

ஒருவகை தீர்வினை அடைவதற்கு, குறிப்பாக பாக்கிஸ்தான் மத்தியில் திட்டவட்டமான பொருளாதார அழுத்தங்கள் உள்ளன. இரு பக்கமும் அக்கறை கொண்ட ஒரு பெரிய துணிகரமான வணிக முயற்சி, ஈரானில் இருந்து இந்தியாவுக்கு பாக்கிஸ்தான் ஊடாக, 4பில்லியன் டொலர்கள் செலவு மதிப்பிடக்கூடிய, 2,500 கிலோமீட்டர் நீளமுள்ள எண்ணெய்க் குழாய் வழி அமைப்பதாகும். இந்தியா எண்ணெய் பெறுவதற்கு வழி தேவைப்படுவதுடன் பாக்கிஸ்தான் போக்குவரத்துக் கட்டணங்களில் இலாபம் பெறும்.

ஆனால் இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட பைனான்சியல் எக்ஸ்பிரஸில் ஒரு கருத்துரையாளர் பின்வருமாறு குறிப்பிட்டார்: "காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பொருளாதார ரீதியான தவிர்க்கமுடியாத தன்மை பாக்கிஸ்தானிடம் தங்கி இருக்கிறது, இந்தியாவிடம் அல்ல... இப்பொழுது இந்தியா மிக வலுவான பொருளாதாரத்தை, குறிப்பாக பொருளாதார ரீதியில் வெளித்துறைகளில் பெற்றிருக்கிறது என்பது இங்கு மறுப்பதற்கு இல்லை. காஷ்மீரை நாம் குறிப்பிடும் கணத்தில் இந்தியாவும் பாக்கிஸ்தானும் சமமான பங்காளர்கள். இருப்பினும், பொருளாதாரத் துறையில் இரண்டும் சமமானவை அல்ல."

பாக்கிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு விதிமுறைகளை அமைப்பதற்கு வாஜ்பாயி அரசாங்கம் இந்தியாவின் பொருளாதார பலத்தை மட்டும் பயன்படுத்த விருப்பம் கொள்ளவில்லை, மாறாக கார்கில் மோதலுக்குப் பின்னர் வாஷிங்டனுடன் அபிவிருத்தி செய்திருந்த நெருக்கமான பிணைப்பையும் கூட பயன்படுத்துவதற்கு விரும்பியது. இந்தியப் பிரதமரை இஸ்லாமாபாத்துக்கு வருகை தரும்படி முஷாரப் விடுத்த அழைப்பை வாஜ்பாயி ஏற்றுள்ளார். ஆனால் இனிவரும் பேச்சுக்கள் காஷ்மீரில் "பயங்கரவாதம்" பற்றிய பாக்கிஸ்தானின் நிலைப்பாட்டில் தங்கி பொருந்தி இருக்கின்றது என்று அவரும் பிஜேபி தலைமையும் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளனர். இன்னொரு கூட்டத்திற்கான இறுதி முடிவானது, செப்டம்பரில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரின் பக்கவாட்டில் நடக்கும் முறைப்படி அல்லாத கலந்துரையாடல்களுக்குப் பின்னர் எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் இடையிலான சண்டை தொடர்கின்றது. ஹிஜ்புல் முஜாஹைதின் கொமாண்டர் சையது சலாஹூதின் உச்சி மாநாட்டிற்குப் பின் இவ்வாறு குறிப்பிட்டார்: "காஷ்மீரில் இந்தியப் படைகள் இருக்கும் வரை எமது ஆயுதப் போராட்டம் தொடரும்." உச்சிமாநாடு பற்றி ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட பொழுது ஹிஜ்புல் இம் முடிவினை மோதலைத் தீர்ப்பதற்கான "தடை உடைப்பு" என ஆதரித்தது. இன்னொரு பிரிவினைவாத குழுவான ஹர்க்கத்-உல் முஜாஹைதின், காஷ்மீர் ஜிஹாத் (புனிதப்போர்) மூலம் மட்டுமே இப்பொழுது விடுவிக்கப்பட முடியும் என்று ஒரு அறிக்கையில் கூறியது.

தீர்ப்பதற்கு சிக்கலான இந்த தகராறின் தன்மையானது, 1947ல் இந்திய உபகண்டத்தின் வகுப்புவாத பிரிவினையில் உள்ள அதன் தோற்றத்துடன் கட்டுண்டிருக்கிறது. பிரிட்டீஷாரின் கீழ் காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்ட இந்து மகாராஜா, அதன் எதிர்காலம் தொடர்பாக ஒரு முடிவும் எடுக்க முடியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் மேலதிகமாக உள்ள முஸ்லிம் மக்களிடமிருந்து அதிகரித்து வந்த எதிர்ப்பினை முகம் கொடுக்கையில் இந்தியாவுடன் அதனை இணைத்தார். சுதந்திரத்திற்குப் பிறகு சில மாதங்களில், இந்திய இராணுவமானது பாக்கிஸ்தான் ஆதரவு போராளிகளுக்கு எதிராகப் போரிட்டது, அது இந்தியாவை காஷ்மீருக்கு பொறுப்பாகவும் பாக்கிஸ்தானிய படைகள் ஆசாத் (சுதந்திர) காஷ்மீரை தமது கட்டுப்பாட்டில் வைக்கவும் வழி வகுத்தது.

அரை நூற்றாண்டின் பின்னரும், இந்தியா ஒட்டு மொத்த இராணுவ ஒடுக்குமுறையின் மூலமாக ஜம்முவிலும் காஷ்மீரிலும் தனது பிடியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அதேவேளையில் பிரிவினைவாத குழுக்கள் பாக்கிஸ்தானுடன் வகுப்புவாத அடிப்படையில் ஒன்றிணைவதற்கோ அல்லது தரையால் சுற்றி வளைக்கப்பட்ட சிறு துண்டு நிலத்திற்கான "சுதந்திரத்திற்கோ" ஆதரவளிக்கின்றனர். போரின் சுமை மற்றும் இப்பிராந்தியத்தின் தொடர்ந்து வரும் பின்தங்கிய பொருளாதார நிலை இவற்றின் விளைவைப் பெற்றுக்கொண்டிருக்கிற உழைக்கும் மக்களின் பரந்த பெரும்பகுதியினருக்கு இந்த மோதலைத் தீர்ப்பதற்கான எந்த முற்போக்கான தீர்வும் ஒரு கட்சியிடமும் கூட இல்லை.