World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்:மார்க்கிச அரசியல் பொருளாதாரம்

A question on Marx and Keynes

மார்க்ஸ் மற்றும் கெய்ன்ஸ் பற்றிய கேள்விகள்

By Nick Beams
8 August 2001

Use this version to print

ஹலோ wsws,

கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களுடைய தளத்தின் ஆர்வம் மிகுந்த வாசகனாக இருந்து வருகிறேன், மற்றும் உங்களது ஆய்வுகள் எனது பல்கலைக் கழக படிப்புக்களுக்கு மிகத் தேவையான மாற்று மருந்தாக இருக்கிறது. இருப்பினும், மார்க்சின் பொருளாதார தத்துவத்தின் மீதான கெய்ன்சினுடைய ஆய்வின் விளைபயன்கள் பற்றி அறிய மிக ஆவலாக உள்ளேன். பிரபு கெய்ன்ஸ் ட்ரொட்ஸ்கிசத்தின் நண்பர் அல்லர் என்ற உண்மையை, நிச்சயமாகநான் நன்கு அறிவேன், ஆனால் அவர் வழிவந்த சிலர் (கலெக்கி, ரொபின்சன், ஸ்ரபா) மார்க்சிய பொருளாதாரத்துடன் சச்சரவில் ஈடுபடுவதற்கு முயன்றார்கள். இன்றைய கல்விப்புலம் சார்ந்த பொருளாதாரம் பற்றியும் விஞ்ஞானத்தின் வரலாற்று அபிவிருத்தி பற்றியும் wsws என்ன கூறுகிறது என்பது பற்றி அறிய ஆவலாக உள்ளேன். உங்கள் நற்பணி தொடரட்டும்!

AB A-A

Philadelphia PA


அன்புள்ள AB A-A

உங்களது அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரேபதிலில் இப்பகுதியில் விடை சொல்வதென்பது முடியாதது. நீங்கள் மேற்கோள் காட்டிய பெரும் விவரங்களுக்குப் போகச் சொல்லும் தனிநபர்களின் படைப்புக்கள் பற்றியும் எனக்குப் போதுமான பரிச்சயம் இல்லைத்தான். முக்கியமான விஷயங்களில் சிலவற்றை சுட்டிக்காட்ட என்னை அனுமதிக்கவும்.

நீங்கள் குறிப்பிட்டவாறே, கெய்ன்ஸ் ட்ரொட்ஸ்கிசத்துக்கு நனவு பூர்வமான எதிரி ஆகையால் மார்க்சிசத்துக்கும் எதிரிதான். 1920கள் மற்றும் 1930 களில் பொருளாதார சீரழிவுகளை பின்தொடர்ந்த "சுதந்திர சந்தை" க்கு பாதுகாப்பாக மாற்று பொருளாதாரக் கொள்கைகளை அபிவிருத்தி செய்வதை அவரது பணியாகக் கண்டார். பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுக்கு அவர் எழுதிய புகழ்பெற்ற பகிரங்க கடிதத்தில், அவர் வரவிருக்கும் ஜனாதிபதியை "ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்ற சமூக அமைப்பின் கட்டமைப்புடன் பகுத்தறிவுபூர்வமான சோதனையால் தமது சூழ்நிலையின் துன்பங்களை சீர் செய்யவிரும்புவர்களின் காப்பாளர்" என்று குறிப்பிட்டார். "நீங்கள் செய்யத் தவறினால், பழமைவாதமும் புரட்சியும் மோதி முடிவுக்கு வரட்டும் என்று விட்டுவைக்கும் அறிவுக்குப் பொருத்தமான மாற்றம் உலகம் முழுவதையும் கடுமையாகப் பாதிக்கும்" என்றார்.

முதலாளித்துவ அமைப்பை ஆட்டங்காணச்செய்த பொருளாதார நெருக்கடிகள், தனிச் சொத்துடைமைக்கும் இலாபத்திற்கான உற்பத்திக்கும் இடையில் எழுகின்ற கட்டமைப்பு முரண்பாடுகளின் விளைபொருள் என்ற அடிப்படை மார்க்சிச கருத்துருவை கெய்ன்ஸ் எதிர்த்தார். இன்னும்சொல்லப்போனால், இந்த நெருக்கடிகள் தம்மைப்போன்ற சிந்தனையாளர்களால் அறிவூட்டப்பட்ட அரசாங்கங்களால் சரியான யோசனைகள் மூலமாக தீர்க்கப்படும் என்றார்.

பூகோள முதலாளித்துவப் பொருளாதாரம் மாபெரும் தாழ்வில் மூழ்கிக் கொண்டிருந்த பொழுது, நவம்பர் 1931ல் வெளியிடப்பட்ட, அவரது இணங்கவைப்பது பற்றிய கட்டுரைகள் என்பதற்கான முன்னுரையில், பொருளாதார பிரச்சினையை ஒருவர் சுருக்கமாக, தேவைக்கும் வறுமைக்கும் மற்றும் வர்க்கங்களுக்கும் தேசங்களுக்கும் இடையிலான பொருளாதாரப் போராட்டமாக குறிப்பிடலாம், அது அச்சமூட்டும் குழப்பத்தைவிட வேறொன்றும் இல்லை. அதனை இடைக்கால மற்றும் தேவை இல்லாத (மூலத்தில் வலியுறுத்தல்) குழப்பம் என்று ஏற்றுக்கொள்ள வைத்தல்" தனது "பிரதான ஆய்வுக்கட்டுரை" யாக இருந்தது என்று கெய்ன்ஸ் விளக்கினார். மேற்கு உலகைப் பொறுத்தவரை வளங்களும் தொழில் நுட்பங்களும் ஏற்கனவே இருக்கின்றன, அவற்றைப் பயன்படுத்துதற்கு அமைப்பினை உருவாக்க முடியுமானால், இப்பொழுது நமது ஒழுக்க நெறிகளையும் சடரீதியான சக்திகளையும் உள்வாங்கும் பொருளாதாரப் பிரச்சினையை இரண்டாம் பட்ச முக்கியத்துவம் உடையதாக குறைக்கும் ஆற்றலைப் பெறலாம்" என குறிப்பிட்டார்.

70 ஆண்டுகளுக்கு முன்னால் அந்தநேரத்தில் கெய்ன்ஸ் சுட்டிக்காட்டியது முற்றுமுழுதாக சரி. தேவைக்கும் வறுமைக்குமான பிரச்சினைகளை சமாளிப்பதற்கு சடரீதியான வளங்கள் இருத்தன. கடந்த அரை நூற்றாண்டில் தொழில்நுட்பத்திறனிலும் உழைப்பின் உற்பத்தித்திறனிலும் பரந்த அளவிலான அதிகரிப்பின் முன்னர் இந்த கொள்ளை நோய்களின் தொடர்ச்சியான இருப்பை பின்னர் எப்படி விளக்குவது? அது அதிகார அந்தஸ்தில் இருப்பவர்களின், ஒளிமயமான கொள்கைகளால் திருத்தப்படக்கூடிய, தவறான சிந்தனை அல்லது "குழப்பங்களின் விளைவு அல்ல, மாறாக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் செயல்பாடுகளின் தவிர்க்க முடியாத விளைபொருள் ஆகும்.

இன்றைய கல்விப்புலம் சார்ந்த பொருளாதாரத்தின் நிலையானது, கெய்ன்ஸ் காலத்தியதுடன் சில ஒப்புமையைக் கொண்டிருக்கிறது. அப்பொழுது வழக்கில் இருந்த அறிவு, பொதுவான திடீர் மந்தம் சாத்தியமில்லை சேயின் விதி [Say's Law]என அழைக்கப்பட்ட அளிப்பானது [supply] அதனது சொந்த தேவையை [demand] உருவாக்குகிறது என்பதன்படி குறிப்பிட்ட சந்தைகளில் மட்டுமே பிரச்சினைகள் இருக்க முடியும் எனவும், மாறாக அளவுக்கு அதிகமான அளிப்பு [Oversupply] மற்றும் அளவுக்கு அதிகமான தகமை [Overcapacity] ஒட்டு மொத்தமாகவும் பொருளாதாரத்திற்கு உரியதல்ல எனும் கருத்துரு ஆகும்.

அதன்பின்னர் இருந்து இன்றுவரை, தொழில் முறைசார்ந்த பொருளியலாளர்கள் மதகுருமார்களைப் போல தொழிற்பட்டு, உண்மையான பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையிலிருந்து ஒருபோதும் இல்லாதளவில் தெள்ளத் தெளிவாக வேறுபடும், சுதந்திர சந்தைப் பொருளாதாரங்களின் மேன்மையை விளக்கும் தேற்றங்களையும் சான்றுகளையும் அபிவிருத்தி செய்து வருகிறார்கள்.

நடப்பிலிருக்கும் கல்விப்புலம் சார்ந்த ஒழுங்கிலிருந்து இன்று மாறுபடும் மற்றும் சுதந்திர சந்தை நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கிவரும் பொருளியலாளர்கள் அவ்வாறு நடந்துகொள்வது கெய்ன்சிய முன்னோக்குக்குள்ளேதான். அவர்கள் ஆழமாகிவரும் சமூகப் பொருளாதார நெருக்கடியை பெரும்பாலும் கெய்ன்சிய கொள்கைகளை கைவிட்டுவிட்டதன் விளைபொருள் என முன்வைக்க விரும்புகிறார்கள். இக்கொள்கைகள் இரண்டாம் உலகப்போரின் முடிவைத் தொடர்ந்து கால்நூற்றாண்டாக வழக்கில் நீடித்திருந்த தேசியப் பொருளாதார ஒழுங்கமைப்பினை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

இதற்குப் பொருத்தமான உதாரணத்தைக் குறிப்பிட என்னை அனுமதிக்கவும். தனது அண்மைய புத்தகமான உருவாக்கப்பட்ட சமமின்மை [Created Unequal] என்ற புத்தகத்தில் அமெரிக்க பொருளியலாளர் ஜேம்ஸ் கால்பிரெய்த் [James Galbraith] கடந்த 30 ஆண்டுகளிலான பொருளாதார ஏற்றத்தாழ்வின் வளர்ச்சி பற்றி விவரிக்கிறார். அவர் விவரிக்கும் முக்கியகாரணம், "பிழையான பொருளாதார செயற்பாடு பொருளாதாரமந்தத்தின் கடும் தாக்கத்தினையும், வேலையின்மை, மற்றும் மெதுவான பொருளாதார வளர்ச்சி போன்றவற்றால் எடுத்துக்காட்டுகின்றது என்பதாகும்''.

"எது மோசமான பொருளாதார செயற்பாட்டை விளைவித்தது? சான்றுகளை திறந்த மனதுடனும் அறிவுபூர்வமாகவும் கிரகிக்கும் எவருக்கும் விடை தெளிவாகத் தெரியும். பொருளாதாரக் கொள்கை மற்றும் சிறப்பாக பணக்கொள்கை மாறிவிட்டது. 1970ல் தொடங்கி அரசாங்கமானது முழு வேலைவாய்ப்பு இலக்கை கைவிட்டுவிட்டது மற்றும் அதற்குப் பதிலாக அதன் கவனத்தை பணவீக்கத்துக்கு எதிராகப் போராடுவதற்கு திருப்பிவிட்டது. இதன்காரணமாக, ஒரேஒரு கருவிதான் பொருந்தக்கூடியதாக கருதப்பட்டது: மத்திய வங்கிவாரியத்தால் உயர் வட்டிவீதங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. அதனைத் தொடர்ந்து பொருளாதாரப் பின்னடைவின் தொடர்நிகழ்வுநிலை திரும்பத் திரும்ப வந்தது. அது அந்தவேளையில் தேசிய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வெளிப்புற அதிர்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளின் தவிர்க்கவியலாத துரதிர்ஷ்டவசமான விளைவு என்று நியாயப்படுத்தப்பட்டது. பொருளாதாரப் பின்னடைவுகள் ஏற்படுத்திய வேலை இன்மை.. சமத்துவமின்மையில் உயர்வை உற்பத்தி செய்துள்ளது.. அது நடுத்தர வர்க்கத்தை அழித்துள்ளது. இதற்காக, மத்திய வங்கி அதன் பிரசித்தி பெற்ற தலைவர்கள் ஆர்தர் எப்.பேர்ன்ஸ், போல் எ. வோல்க்கர் மற்றும் அலன் கிரீன்ஸ்பான் [Arthur F. Burns, Paul A. Volcker and Alan Greenspan] ஆகியோர் தலைமையின்கீழ் பிரதானமாக இதற்குப் பொறுப்பாளி ஆகும். (உருவாக்கப்பட்ட சமமின்மை, ஜேம்ஸ் கே. கால்பிரெய்த், பக்கம் 8 -9 )

வேறு வார்த்தைகளில் சொன்னால், வரலாற்றில் "மோசமான ஹிட்லர்" என்ற தத்துவத்தினை ஒத்த நிலை அரசியல் பொருளாதார அரங்கிலும் இருக்கின்றது. பொருளாதார வரலாற்றை அணுகும் மார்க்கசிஸ்டுகள் றேகன், தாட்சர், வொல்க்கர் மற்றும் அலன் கிரீன்ஸ்பான் போன்ற தனிநபர்களின் பாத்திரத்தை மறுப்பதில்லை. ஆனால் அது அவர்கள் நடைமுறைப்படுத்திய நடவடிக்கைகள் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்குள் புறநிலை அபிவிருத்திகளுக்கு எப்படி எதிர்விளைவாக இருந்தன என்பதைக்காட்ட முயற்சிக்கின்றது. உதாரணமாக, இந்த அடிப்படையிலான அணுகுமுறையால் மட்டுமே ஒருவர், 1950 களிலும் 1960களிலும் விசித்திரமான அறிவு ஜீவிகளாகக் கருதப்பட்ட மில்டன் பிரைட்மேன்[Milton Friedman] மற்றும் பிரைட்ரிச் ஹெய்க் [Friedrich Hayek] போன்ற கல்விமான்கள் 1980 களில் பொருளாதார அறிவுடைமையின் ஊற்று என்று ஏன் பார்க்கப்பட்டார்கள் என்பதை விளக்கமுடியும்.

நீங்கள் குறிப்பிட்ட ஏனைய பிரமுகர்கள் தொடர்பாக: கலெஸ்கி [Kalecki] கெய்ன்சின் வழித்தோன்றல் அல்லர். உண்மையில் பருவினப் பொருளாதாரம் (Macro economics) என்று அறியப்பட்டிருகின்ற பற்றிய அவரது எழுத்துக்கள் (போலிஷ் மொழியில் எழுதப்பட்டது) கெய்ன்சின் வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம்பற்றிய பொதுத் தத்துவம் [General Theory of Employment, Interest and Money] என்பதற்கு முந்தையது ஆகும்.

ஜோன் ரொபின்சன் [Joan Robinson] 1930களின் பொழுது கேம்பிரிட்ஜில் கெய்ன்சைப் பின்பற்றுபவராக இருந்தார். போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அவர் வழக்கில் இருந்த சுதந்திர சந்தைப் பொருளாதார தத்துவம் பற்றி தெளிவான விமர்சனத்தை அபிவிருத்தி செய்திருந்தார். மூலதனம் தொடர்பான விஞ்ஞான ரீதியான அளவீட்டை வழங்க முடியவில்லை என்று சுட்டிக் காட்டி இருந்தார். மூலதனத்தின் மதிப்பானது அது உற்பத்தி செய்யும் வருமானத்திலிருந்து சுதந்திரமானதாக கருதப்படமுடியாது. இருப்பினும் அதேநேரத்தில் மூலதனத்தின் மதிப்பு இந்த வருமான வருகையைப் பற்றிய விளக்கத்தைத் தருகிறது என்று கூறப்படுகிறது. வேறுவார்த்தைகளில் சொன்னால், மூலதனத்தின் மதிப்பை விளக்குவதற்கு மரபுரீதியான இறுதிநிலை பயன்பாட்டுத் தத்துவத்தை பயன்படுத்தும் முயற்சியில் முழுமையான சுழற்சி இருக்கிறது. மரபுரீதியானதைப் பற்றி சில விமர்சனங்களைச் செய்கின்ற அதேவேளை, பேராசிரியர் ரொபின்சன் மார்க்சிசத்திற்கு எதிரானவர், மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக மார்க்சின் மதிப்புத் தத்துவத்திற்கு [Theory of value] எதிரானவர். பிரிட்டிஷ் அனுபவவாத பாணியின் எடுத்துக்காட்டாக, அவர் மார்க்சின் இயங்கியல் முறையை "ஹெகலிய சரக்கு மற்றும் முட்டாள்தனமானது" என நிராகரித்தார். (ரோமன் ரோஸ்டோஸ்கியின் புத்தகமான "மார்க்சின் மூலதன உருவாக்கம்" எனும் நூலில் பேராசிரியர் ரொபின்சனைப் பற்றிய அறிவுக்கூர்மையான மார்க்சிச விமர்சனத்தைக் காணமுடியும்.)

அதேபோல, பியரோஸ்ரபா [Piero Sraffa] மூலதனம் பற்றிய மரபு ரீதியான தத்துவத்தின் முரண்பாடுகளைப் பற்றி அறிந்திருந்தார். ஆனால் அவர் மதிப்பின் தத்துவத்தை மார்க்சைக் காட்டிலும் ரிக்கார்டோவின்[Ricardo] அடிப்படையில் இருந்து அபிவிருத்திசெய்ய முயற்சி செய்தார்.

தங்கள்அன்புள்ள,

நிக் பீம்ஸ்